தமிழக பட்ஜெட் ஒரு கானல் நீர் தாகம் தீர்க்காது-இபிஎஸ்..

images 48 2 - 2026

தமிழ்நாடு பட்ஜெட் மின்மினிப்பூச்சி, மக்களுக்கும் வெளிச்சம் தராது, கானல் நீர் தாகம் தீர்க்காது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார் .

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்எல்சி விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை பறிக்கும் செயலைக் கண்டித்தும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல் படுத்தாதைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம். மாநிலத்தில் வரி வருவாய் அதிகரித்துள்ளது. பற்றாக்குறையே இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், பற்றாக்குறை 30,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் குறைந்துள்ளது எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. திமுக அரசு மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மின் கட்டணம், சொத்து வரி, பால் விலையை உயர்த்தியுள்ளனர்; இது தான் அவர்கள் மக்களுக்கு அளிக்கும் பரிசு” மகளிருக்கான உரிமைத் தொகை எல்லோருக்கும் வழங்கப்படும் என்றார்கள்.

ஆனால், இப்போது தகுதியானவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்கிறார்கள். என்ன தகுதி என்பதை வெளியிடவில்லை”. “மின்மினிப்பூச்சி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது, கானல் நீர் தாகம் தீர்க்காது” நீட் விலக்கு ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கூறினார்.

“கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டதாக சொன்னீர்கள், அதை ஓ.பி.எஸ்சின் திறமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ளலாமா?” என செய்தியாளர் கேட்டதற்கு, “அது எப்படி, அப்போது நான்தானே முதலமைச்சர்? நிதி ஒதுக்குவதுதான் அவர். மீதியெல்லாம் கூட்டுப்பொறுப்புதான்” என எடப்பாடி கே. பழனிச்சாமி பதில் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories