ஜனநாயகத்திற்கான எனது போராட்டம் தொடரும் -ராகுல்..

965660 - 2026

கேள்வி கேட்பதை நான் நிறுத்தமாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன் என ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் எம்.பி.பதவியை இழந்துவிட்டதாக மக்களவை செயலர் நேற்று (மார்ச் 24) அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், பதவி இழப்புக்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக நான் ஏற்கனவே பலமுறை கூறி இருக்கிறேன். இதற்கான உதாரணங்களை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பிரதமர் நரேந்திர மோடிக்கும் தொழில் அதிபர் கவுதம் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அதன்பிறகு நான் நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை.

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்ற வெளிநாட்டு சக்திகளின் உதவியை நான் கோருவதாக என் மீது சில அமைச்சர்களே குற்றம் சாட்டினார்கள். உண்மையில் அதுபோன்ற எந்த செயலிலும் நான் ஈடுபடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்குமாறு மக்களவை சபாநாயகருக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால், எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதுபோன்ற நடவடிக்கைகள் என்னை தடுத்து நிறுத்தாது. கேள்வி கேட்பதை நான் நிறுத்தமாட்டேன். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். நாட்டின் ஜனநாயகத்திற்கான எனது போராட்டமும் தொடரும்.

அதானியின் மறைமுக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட ரூ. 20 ஆயிரம் கோடி யாருடைய பணம் என்ற எளிய கேள்வியைத் தான் நான் கேட்டேன். இந்த விவகாரத்தில் பிரதமரை பாதுகாப்பதற்காக எனக்கு எதிராக திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்ட நாடகம்தான் இது.

அச்சுறுத்தல், பதவிநீக்கம், கைது நடவடிக்கை போன்றவற்றுக்கு நான் அஞ்சமாட்டேன். உண்மையைத் தவிர வேறு எதன் மீதும் எனக்கு விருப்பம் இல்லை. நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன்.

இது எனது கடமை. எனது பதவி பறிக்கப்பட்டாலும், நான் கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து உண்மையை பேசுவேன். இந்த நாடு எனக்கு எல்லாம் கொடுத்தது. அதனால்தான் நான் இதை செய்கிறேன்.

அதானி குறித்த எனது உரை பிரதமருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனை நான் அவரது கண்களில் பார்த்தேன். அதன் காரணமாகவே முதலில் திசை திருப்பல்களை செய்தார்கள். அடுத்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன்.

நான் நிரந்தரமாகவே தகுதிநீக்கப்பட்டாலும் நான் எனது வேலையை தொடர்ந்து செய்வேன். நான் நாடாளுமன்றத்திற்குள் பேசுகிறேனா அல்லது வெளியே பேசுகிறேனா என்பது அல்ல முக்கியம். நாட்டுக்காக தொடர்ந்து போராடுவேன்.

நாட்டின் ஜனநாயக அமைப்பை பாதுகாப்பதே என பணி. அதாவது, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக உள்ள அமைப்புகளை பாதுகாப்பது, ஏழைகளுக்காக குரல் கொடுப்பது, பிரதமர் மோடி உடனான உறவை தவறாகப் பயன்படுத்தும் அதானி போன்றவர்கள் குறித்த உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது ஆகியவையே எனது பணி.” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories