‘ஊடக ஜிகாத்’: தப்ளிக் ஜமாத் செய்தி போட்ட சக நிருபரை சரமாரியாக தாக்கிய ‘நிருபர்!

என்ன செய்தி போட வேண்டும், எப்படி செய்தி போடவேண்டும், செய்தியை போடலாமா கூடாதா என்றெல்லாம் இத்தகைய ஜிகாதிகளிடம் கேட்டுத்தான் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர் சக பத்திரிகையாளர்கள்.

mathicartoon hands

மீடியோ ஜிகாத் என்ற சொல்லுக்குள் அடங்கும் விதத்தில் வெளியாகியுள்ளது இந்தச் செய்தி. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஊடகங்களில் பணிபுரிந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம் என்கிறார்கள் சக பத்திரிகையாளர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து புது தில்லி சென்று திரும்பிய ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது குறித்து நேற்று செய்தி வெளியானது. இதற்காக தினமணி இதழின் செய்தியாளர் மீது செவ்வாய்க்கிழமை நேற்று தாக்குதல் நடத்தியதாக, மற்றொரு நாளிதழின் (இஸ்லாமிய) செய்தியாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுதில்லியில் நடைபெற்ற இஸ்லாமிய தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்பது பேர் சென்றுள்ளனர். அந்த மாநாட்டிற்குச் சென்றவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து கொரோனா வைரஸ் தொற்று குறித்து சுகாதாரத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் 5 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை குறித்து தினமணி நாளிதழின் திண்டுக்கல் பதிப்பு செவ்வாய்க்கிழமை நேற்று செய்தி வெளியானது. இதனை அறிந்த மற்றொரு நாளிதழின் செய்தியாளர் ஷேக் பரீத் தினமணி நாளிதழின் ஒட்டன்சத்திரம் செய்தியாளர் திருமலைசாமியிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஷேக் பரீத்தின் தூண்டுதலின் பேரில் தனியார் மருந்தக உரிமையாளர் அன்வர் தீன் மற்றும் டேனியல் ஆகியோர் இணைந்து திருமலைசாமியை தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த திருமலைசாமி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தாக்குதல் நடத்திய மருந்தக உரிமையாளர் அன்வர்தீன் செய்தியாளர் ஷேக் பரீத் உள்ளிட்ட மூவர் மீதும் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் திருமலைசாமி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஊடகங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவினர் ஊடுருவி இருக்கும் சூழ்நிலையில் இதுபோன்று சக பத்திரிகையாளர் மீது, ஏன் செய்தி போட்டாய் என்று தாக்குதல் நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றிருப்பது மீடியா ஜிகாத்தின் பயங்கரத்தை உணர்த்துகிறது. என்ன செய்தி போட வேண்டும், எப்படி செய்தி போடவேண்டும், செய்தியை போடலாமா கூடாதா என்றெல்லாம் இத்தகைய ஜிகாதிகளிடம் கேட்டுத்தான் அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர் சக பத்திரிகையாளர்கள்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :