
விருதுநகர் சந்தையில் இன்று உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட உணவுக்குத் தேவையான பருப்பு வகைகளை வாங்குவதற்கு பெரும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் மார்க்கெட்டில் வாரம்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், கடந்த வாரம், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு புதுஸ்நாடு வகை, இந்த வாரம் ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.10500க்கு விற்பனையாகிறது.
துவரை ரூ.1200 உயர்வு : மேலும், துவரம்பருப்பு புதுஸ்லையன் வகை கடந்த வாரம் ரூ.10,100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரே வாரத்தில் விலையானது கிடு, கிடுவென ரூ.1200 உயர்ந்து தற்போது ரூ.11,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உளுந்து ரூ.2200 உயர்வு : இதேபோல் உளுந்தம் பருப்பின் விலையும் கடந்த வாரத்தை விட வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதில், உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு ) 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,200க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ஒரே வாரத்தில் ரூ.2200 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் உ
பாசிப் பருப்பு : பாசிப் பருப்பின் விலை கந்த வாரம் 100 கிலோ ரூ.8900க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.100 உயர்ந்து ரூ.9ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. பாசிப் பயறு விலையானது கடந்த வாரம் 100 கிலோ ரூ.7200க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் ரூ.300 உயர்ந்து தற்போது 7500க்கு விற்கப்படுகிறது.
அதேவேளை பாமாயில் விலையானது தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட 15 கிலோவிற்கு ரூ.20 குறைந்து தற்போது ரூ.2020க்கு விற்பனை செய்யப்படுகிறது.