

சென்னை கொல்லம் விரைவு ரயிலானது சிவகாசி , ரயில் நிலையத்தில்ல் இரவில் 1.30 மணியளவில் வரும் நிலையில் இங்கு நிற்காமல் செல்வதால் சிவகாசி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ரயில்மறியல் போராட்டம் நடத்திய நிலையில் இந்த ரயில் நிற்குமா சிவகாசியில் என மக்கள் கேள்வி கனைகளை கொடுக்கின்றனர்.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில் இது தொழில் நகரம் நிறைந்த பகுதியாக உள்ளது.இந்த பகுதியில் இருந்து செல்லக்கூடிய
சென்னை -கொல்லம் விரைவு இரயில் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் சென்னை கொல்லம் விரைவு ரயிலானது சிவகாசி ,திருத்தங்கள் ரயில் நிலையங்களில் இரவில் 1.30 மணியளவில் நிற்காமல் செல்வதால் சிவகாசி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை- கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கள், சிவகாசி பகுதியில் நிற்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர்.இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி சென்னை- கொல்லம் விரைவு ரயில்
(வண்டி எண்:16101) சிவகாசி ,திருத்தங்கல் இரயில் நிலையங்களில் இரவு 1.30 மணி அளவில் நின்று செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்,சிவகாசி சட்டமன்ற அசோகன் மற்றும்
சிவகாசி மாநகர அனைத்து அரசியல் கட்சிகள் வர்த்தக சங்கங்கள் பட்டாசு, தீப்பெட்டி அச்சு உற்பத்தியாளர் சங்கங்கள் என ஏராளமானோர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ரயில் நிலையில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நபர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயிலை மறிக்க முயன்ற போது காவல்துறையின் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
பின்ன செய்தியாளர்களிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் வழியில் அதிகளவில் வணிகமும், வியாபாரம் அந்நியச் செலாவணியை ஈட்டி கொடுக் கூடிய ஊர் சிவகாசி இங்கு ரயில் நிறுத்தம் வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை.
இதுகுறித்து பல முறை நாடளுமன்ற உறுப்பினர், ரயில்வே துறை அமைச்சர் இடமும் கோரிக்கை வைத்துள்ளார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பேசி உள்ளார் எந்த ஒரு பயனும் இல்லை
ஆனால் மோடி அரசு ரயில் நிலையத்தை எழுதி கேட்டால் கொடுத்து விடுவார் ரயில் நிலையத்தை விற்பனைக்கு கேட்டாலும் கொடுத்துவிடுவார் ஆனால் ரயில்வே நிறுத்தம் கேட்டால் கொடுக்க மாட்டார்
என்றும் குற்றம் சாட்டினார்.
