குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்..

Published:

1803576 bhupendra patel2 - 2026

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை குஜராத் பாஜக சமன் செய்துள்ளது இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது

குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 150-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று முன்னிலை நிலவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் குஜராத் அரசியலில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அதிரடியை நிகழ்த்தி உள்ளதோடு குஜராத் அரசியல் களத்தில் புதிய சாதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை சமன் செய்தது குஜராத் பாஜக. குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்க உள்ளார்.

அதேசமயம் இமாச்சல பிரதேசத்தில் பிற்பகல் நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.பாஜக 26 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலை உள்ளதால், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

குஜராத் தேர்தல் நிலவரம்: மொத்த தொகுதிகள் -182 முடிவுகள் அறிவிக்கப்பட்டவை -180 பாஜக- 154 காங்கிரஸ் -17 ஆம் ஆத்மி கட்சி- 5 சுயேட்சைகள்- 3 மற்றவை -1 பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை
யில் இருந்தது .

1798105 pm1 1 - 2026

குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- நன்றி குஜராத். இந்த அற்புதமான தேர்தல் முடிவுகளைப் பார்த்து நான் மிகுந்த உணர்ச்சிகளில் மூழ்கிவிட்டேன். மக்கள் வளர்ச்சிக்கான அரசியலை ஆசீர்வதித்தனர்.

அதே நேரத்தில் இந்த வேகம் இன்னும் அதிக வேகத்தில் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். குஜராத்தின் மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் கடினமாக உழைத்த குஜராத் பாஜக தொண்டர்களுக்கு நான் சொல்ல விரும்புவது நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சாம்பியன்! நமது கட்சியின் உண்மையான பலமாக விளங்கும் நமது தொண்டர்களின் அதீத உழைப்பின்றி இந்த வரலாற்று வெற்றி சாத்தியமாகாது. இமாச்சல பிரதேச மக்களுக்கும் எனது நன்றிகள், உ.பி. ராம்பூர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் வெற்றி பாஜகவின் வளர்ச்சியை காட்டுகிறது, இமாச்சல் மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

குஜராத் மக்களின் ஆணையை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டின் லட்சியங்களுக்காகவும், மாநில மக்களின் உரிமைகளுக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img