கேரளா-மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலி-43 உணவகங்கள் மூடல்..

1073872 kuzhimanthi biriyani - 2026

கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் இங்குள்ள 429 உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு 43 உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி(33). இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கன் மற்றும் மந்தி பிரியாணி சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சில மணி நேரத்திலேயே வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இருந்தும் அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்தே வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரேஷ்மி உயிரிழந்தார். அதோடு இதே உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு மேல் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவிலியர் இறந்ததை அடுத்து அவர் பிரியாணி சாப்பிட்ட உணவகத்திற்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். அதோடு உணவு விஷமானதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து கோட்டயத்தில் உள்ள அனைத்து உணவகத்திலும் சோதனை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார்.மாநிலத்தில் உள்ள 429 உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

மேலும் அவற்றில், 43 நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டது. 138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 44 உணவகங்களில் இருந்து உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. வரும் நாட்களிலும் ஆய்வுகள் தொடரும் என்று அமைச்சர் கூறினார் மந்தி பிரியாணி சாப்பிட்டு செவிலியர் உயிரிழந்த சம்பவம் உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஷ்மி மரணம் குறித்த செய்தி வெளியான உடனேயே போராட்டங்கள் வெடித்தன.

இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உணவகத்தை தாக்கி அதன் பெயர் பலகையை உடைத்தனர். கடந்த ஆண்டு சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories