கோவில்பட்டி – கடம்பூர் ரயில் பாதை பணிகள்- போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம்..

images 43 - 2026

கோவில்பட்டி – கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி – கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதற்காக இந்த பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முழுமையாக ரத்தாகும் ரயில்கள்

  1. ஜனவரி 9 அன்று
    ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி விரைவு ரயில் (22622) மற்றும் ஜனவரி 10 அன்று கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில் (22621)
  2. திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி ரயில்கள் (22627/22628) ஜனவரி 11 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்தாகும் ரயில்கள்

  1. பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில்கள் (16731/16732) ஜனவரி 8, 9, 11 ஆகிய நாட்களில் விருதுநகர் – திருச்செந்தூர் இடையேயும் ஜனவரி 10 அன்று மதுரை – திருச்செந்தூர் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
  2. ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் ஈரோட்டில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரயில் (16845) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய ஈரோடு விரைவு ரயில் (16846) ஆகியவை திண்டுக்கல் – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  3. ஜனவரி 8, 9, 10 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) மற்றும் ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் நாகர்கோவில் இருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஆகியவை திருச்சி – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  4. கோயம்புத்தூர் நாகர்கோவில் கோயம்புத்தூர் பகல் நேர விரைவு ரயில்கள் (16322/16321) ஜனவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் ஈரோடு – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  5. ஜனவரி 9, 10 அன்று புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (16730) மற்றும் ஜனவரி 10, 11 அன்று மதுரையிலிருந்து புறப்பட வேண்டிய புனலூர் விரைவு ரயில் (16731) ஆகியவை திருநெல்வேலி – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  6. ஜனவரி 9, 10 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய திருச்செந்தூர் செந்தூர் விரைவு ரயில் (16105) மற்றும் ஜனவரி 10, 11 அன்று திருச்செந்தூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் செந்தூர் விரைவு ரயில் (16106) ஆகியவை திருச்சி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
  7. ஜனவரி 10 அன்று மைசூரில் இருந்து புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (16236) மற்றும் ஜனவரி 11 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய மைசூர் விரைவு ரயில் (16235) ஆகியவை விருதுநகர் – தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மாற்று பாதையில் இயக்கப்படும் ரயில்கள்

  1. ஜனவரி 10 அன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் (16127) மற்றும் ஜனவரி 10 அன்று குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128) ஆகியவை திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு முறையே 160 மற்றும் 125 நிமிடங்கள் காலதாமதமாக திருநெல்வேலி மற்றும் திருச்சி சென்று சேரும்.
  2. ஜனவரி 10 அன்று பெங்களூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில் (17235) விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட்டு 140 நிமிடங்கள் கால தாமதமாக திருநெல்வேலி சென்று சேரும்.

கால தாமதமாகும் ரயில்கள்

  1. ஜனவரி 10 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட வேண்டிய திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22628) 90 நிமிடங்கள் கால தாமதமாக திருச்சி சென்று சேரும்.
  2. ஜனவரி 10 அன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை விரைவு ரயில் (12631) மற்றும் முத்து நகர் விரைவு ரயில் (12693) ஆகியவை முறையே 40 மற்றும் 30 நிமிடங்கள் கால தாமதமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சென்று சேரும்.
  3. ஜனவரி 12 அன்று திருச்செந்தூர் – வாஞ்சி மணியாச்சி சிறப்பு ரயில் (06680) திருச்செந்தூரில் இருந்து 110 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1012308 chennai 16 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories