ஜடேரி – என்ற “திருமண் “கிராமம் “திருச்சபை “கிராமமாக மாற்றிட அனுமதியோம் அனைவரும் வேலை செய்வோம் என்று கூறி களத்தில் இறங்கியுள்ளது இந்து மக்கள் கட்சி!
இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் இது குறித்து நம்மிடம் கூறியபோது…
ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது ‘பஞ்ச சம்ஸ்காரம்’ (5 சம்ஸ்காரங்கள்). அதில் முதலாவதாக வருவது திருமண் காப்பு (புண்ட்ரம்). ஊர்த்துவ புண்ட்ரம் என்று உடலில் 12 இடங்களில் இட்டுக் கொள்ளப்படும். ஒவ்வொரு திருமண் காப்பிற்கும் ஒரு நாராயண நாமம். ஆக, பன்னிரண்டு பெயர்கள்! இந்த திருமண் தயாரிப்பில் தானே நேரடியாக ஈடுபட்டார் ஶ்ரீமத்இராமானுஜர் என்று குருபரம்பரை அறிவிக்கிறது.
செய்யாறு அருகில் ஜடேரி என்னும் கிராமத்தில் திருமண் தயாரிப்பையே தங்களது ஒரே தொழிலாகக் கொண்டு செய்துவருகின்றனர் ஊர் மக்கள். காரணம் அந்த ஊரில் உள்ள வெள்ளை மண். திருமண் தயாரிக்க அடிப்படையான மண் அது. அவர்கள் 80-100 கட்டிகள் கொண்ட பாக்கெட்டை ரூ 20ற்கு விற்கிறார்கள். வெளியூர்களில் அது ரூ 120 என்று விற்பனையாகிறது. மக்களுக்குப் பெரிய வருமானமெல்லாம் இல்லை.
ஊரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பூஜை வேண்டாம் ஐயா, ஒரு விளக்கேற்றக் கூட ஆஸ்திகர்கள் இல்லை. ஊர் மக்களே அவ்வப்போது சுத்தம் செய்து, விளக்கேற்றி வருகின்றனர். மனோரம் தாஸ் என்னும் ஆர்வலர் ஜடேரிக்குச் சென்று பார்த்து வந்தார். அன்று புரட்டாசி சனிக்கிழமை. சிறுவர்கள் கோவிலைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி வைத்திருந்தனர்.
மக்கள் செய்யும் தொண்டைக் கண்டு மனம் உருகிய மனோரம் தாஸ் பண உதவி செய்ய முன்வந்தார். ஊர் மக்கள் வாங்க மறுத்துவிட்டனர். ‘எங்களுக்குப் பெருமாள் ஏதோ படியளக்கறான். ஆனா, பெருமாளுக்குப் படியளக்க எங்களால முடியல்ல. முன்னெல்லாம் பக்கத்து ஊர்லேர்ந்து ஐயர் வந்து பூஜை பண்ணுவார். இப்ப வயசாயிட்டு. அதால வர்றதில்லை. நாங்களே ஏதோ முடிஞ்ச போது சுத்தம் பண்ணி விளக்கேத்தறோம்,’ என்று சொன்ன ஊர் மக்களைக் கண்டு மனமுருகி நிற்கிறார் தாஸ்.
ஊரில் உயர் நிலைப் பள்ளி இல்லை என்பதால் பிள்ளைகள் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று செய்யாறில் படித்து வருகின்றனர்.
ஊரில் ஒரு வயதானவரிடம் பேச்சுக் கொடுத்த போது அவர் சொன்னது: ‘நீங்க எல்லாம் சுத்த வேஸ்டங்க. எங்கியோ கோவில் கட்றேன்னு போறீங்க. பெரிய கோவிலா இருந்தா அங்க போறீங்க. எங்கள மாதிரி சின்ன ஊர்ல இருக்கற சாமியும் பட்னி நாங்களும் பட்னி. நாங்க ஒண்ணும் கேக்கலை. எங்க பசங்களுக்கு நம்ம மதத்தோட கதைகளச் சொல்றதுக்கு ஆளில்ல. எங்களுக்கும் ரொம்ப தெரியாது. ஏதோ கூலி வேலைக்குப் போறோம், நாமக்கட்டி செய்யறோம், வயித்தக் கழுவிக்கறோம். ஆனா, எங்களுக்குப் பின்னால இந்த வேலை செய்யவும் ஆள் இருக்காது,’ என்று சொல்லி நிறுத்தினார். லேசாக விசும்பல் சப்தம்.
‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ என்றார் நண்பர்.
‘இப்ப க்ரிஸ்டியன்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க. பைபிள் கதையெல்லாம் எங்க பசங்களுக்குச் சொல்றாங்க. எங்க காலத்துக்குப் பிறகு சிரமம் தான்’ என்றவரின் கண்களில் நீர்.
அதனால் என்ன? பரவாயில்லை. தேசிகப் பிரபந்தம் பாடலாமா கூடாதா, வடகலைப் புளியோதரையில் உப்பு எவ்வளவு போட வேண்டும் என்று சாஸ்த்ரோக்தமான கேள்விகளை நாம் கோர்ட்களில் எழுப்பிக் கொண்டு நமது மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டு ஶ்ரீவைஷ்ணவத் தொண்டு புரிவோம்.
இந்து முன்னணி, விச்வ ஹிந்து பரிஷத், சாயி மண்டலிகள், சேவா பாரதி முதலியவையாவது அவ்வப்போது இந்த கிரமத்திற்குச் சென்று பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டால் அடுத்த தலைமுறைக்குத் திருமண் கிடைக்கிறதோ இல்லையோ கிருஷ்ணர் கோவிலில் விளக்கு எரியும்.
காஞ்சிபுரத்தில் இருந்து 40 கி,மீ. தூரத்தில் உள்ளது ஜடேரி கிராமம். செய்யாறு சென்று அங்கிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்தால் தீபாவளி அன்று சென்று கோவிலில் விளக்கேற்றி வாருங்கள். ஊர் மக்களும் அங்குள்ள கிருஷ்ணர்களும் சந்தோஷப்படுவர்.
மனோரம் தாஸ் என்பவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இதனை ராஜேஷ் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.
கிறிஸ்தவ மதமாற்றம் என்பது நமக்கு ஆபத்து என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட வைணவர்கள் தங்களுடைய நெற்றியில் இட்டுக் கொள்ளக் கூடிய அந்த தொழிலை அளிக்க வேண்டும், இந்த திருமண் உற்பத்தியாளர்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்ட கால கனவு திட்டத்தோடு இந்த ஊரிலே இரண்டு அனுமதியில்லாத சபைகள் செயல்படுகிறது.
இந்தப் பகுதி மக்களுடைய ஏழ்மையை பயன்படுத்தி ,அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய குடும்ப சூழலை பயன்படுத்தி, கிறிஸ்தவர்களாக மதமாற்றம் தொடங்கியிருக்கிறார்கள் .
நாங்கள் அறிந்த வரை ஒரு பத்து குடும்பங்கள் கிறிஸ்தவம் சென்றுஇருப்பதாக நேற்று எங்களுக்கு கிடைத்த செய்தி , இது மிகப்பெரிய ஆபத்து.
கிறிஸ்தவர்கள் தங்களுடைய மதத்தைப் பரவச் செய்து பாரத திரு நாட்டை அழிக்கக்கூடிய கூடியவர்களாக ஒவ்வொரு கிராமமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் . இந்த கிராமத்திற்கு சென்ற போது மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்று சொன்னால் நமக்கு ஆதரவு சூழல் பெருகியிருக்கிறது.
ஒரு அம்மையார் சொல்லுகிறார் கிறிஸ்தவ மதத்திற்கு வந்தால் உடம்பு வலி எல்லாம் சரியாகிவிடும், கடன் பிரச்சினை தீரும் உங்க கஷ்டம் எல்லாம் சரியாயிடும் வீட்டுக்காரர் குடியிலிருந்து விடுபட்டு விடுவார்! ஜெபம் செய்கிறேன் என்றெல்லாம் சொல்லி தினசரி நோட்டீஸ் கொடுத்து கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தை அங்கே இருக்கக்கூடிய பாதிரியார் ஈடுபடுகிறார் என்று சொல்லுகிறார்.
இது மிகப்பெரிய ஆபத்து! ஏனென்று சொன்னால் இந்த கிராம மக்கள் தயாரிக்கக்கூடிய இந்த திருமண்தான் தமிழ்நாடு ,ஆந்திரா ,மட்டுமல்ல உலக மக்களுக்கு செல்கிறது.
இந்த தொழிலை அழிப்பதற்கு, இந்த தொழிலை செய்யக்கூடியவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றிவிட வேண்டும் என்ற நீண்ட கால கனவு திட்டத்தை இந்த ஊரிலே கிறிஸ்தவர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.
திருமண் தயாரிக்கக்கூடிய குடும்பத்தார் களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றி விட்டால் நான் ஏன் சாத்தானுக்கு தயாரிக்க வேண்டும்? என்கின்ற மனப்பான்மை வந்துவிடும். வேர்களை அரித்து , அழித்து உண்ணும் கரையான் களாக கிறிஸ்தவம் ஜடேரி கிராமத்திற்குள் நுழைந்திருக்கிறது.
இந்த கிராம மக்களை நாங்கள் சந்தித்து பேசிய பொழுது நிறைய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தது அதை அடுத்த பதிவில் நான் பதிவிடுகிறேன் இந்த பதிவை படிக்க கூடிய ஒவ்வொரு இந்துவும் இந்த கிராமத்தை காக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக சென்று உதவி செய்யுங்கள்.
இல்லையெனில் ஆன்மீக வகுப்புகள், நமது மதத்தின் பெருமைகள் எடுத்துக்கூறி கூட்டு வழிபாடுகள் நடத்திட வேண்டுகிறோம்.
மேலும் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவுகள் பேசுகிறோம் என்று பேசக் கூடிய அத்தனை ஆன்மீக பெரியோர்களுக்கும் பாதம் பணிந்து எங்களுடைய வேண்டுகோளை சமர்ப்பிக்கிறோம் .
தயவுகூர்ந்து இந்த ஜடேரியில் கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, அவருடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் உதவி செய்திட வேண்டுகிறோம்.
இந்த கிராமத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும் கட்டுமான பணிகளுக்கு உதவிட வேண்டும் என்று பல தேவைகள் இருக்கிறது. நல்லெண்ணம் கொண்ட அனைவரும் இந்த கிராமத்திற்கு ஒரு முறை நேரடியாக சென்று வாருங்கள் .
ராமாயண மகாபாரத புத்தகங்கள் இந்து மதம் சார்ந்த புத்தகங்களை தந்து உதவினால் ஒவ்வொரு வீடாகச் சென்று கொடுப்பதற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் நாங்கள் தயாராக இருக்கிறோம். பிற சென்றவர்களை தாய் சமயம் திருப்பக்கூடிய வேலையை தொடங்கியிருக்கிறோம்.
நிச்சயமாக ராமானுஜர் வழியிலே திருக்குலத்து மக்களுக்கு பாதபூஜை செய்து தங்கமயமான இந்து சமயத்தோடு மீண்டும் இணைய செய்திட வேலையை தொடங்கி இருக்கிறோம்.
கிறிஸ்தவ மதமாற்றம் தடுப்பது, இந்து சமயம் காப்பது என்கின்ற தர்மப்படி இறைவன் அருளோடு செய்யக்கூடிய அருளாளர்கள் அனைவரும் இந்த பணியில் இணைந்து வாருங்கள் . மேலும் கிறிஸ்தவ மதமாற்றத்தால் பாரத நாட்டிற்கு ஆபத்து அதோடு கூட இந்த திருமண் கிராமத்திற்கும் ஆபத்து
ஜடேரி என்கிற திருமண் கிராமம் திருச்சபை கிராமமாக, சர்ச் கிராமமாக , கிறிஸ்தவ கிராமமாக மாறாதிருக்க பணி செய்வோம்… என்றார் ரவிக்குமார்.
This is insulting Vadakalaiyaars rather than promoting Hindu unity .,It is thevtgenjalaiyaars who approached the court that Dhesika Prabhandam should not be recited in Kanchipuram temple
இநà¯à®¤ பதிவின௠நோகà¯à®•ம௠பà¯à®°à®¿à®¯à®¾à®¤à¯ யார௠கோரà¯à®Ÿà¯à®Ÿà¯à®•à¯à®•௠மà¯à®¤à®²à®¿à®²à¯ செனà¯à®±à®¾à®°à¯ எனà¯à®ªà®¤à¯ˆ பிடிதà¯à®¤à¯ கொணà¯à®Ÿà¯€à®°à¯à®•ளே . .. நீஙà¯à®•ள௠இடà¯à®®à¯ திரà¯à®®à®£à¯ கிராமம௠ஆபதà¯à®¤à®¿à®²à¯ உளà¯à®³à®¤à¯. .. அத௠பறà¯à®±à®¿ அகà¯à®•றை இனà¯à®±à®¿ à®®à¯à®Ÿà¯à®Ÿà®¾à®³à¯à®¤à®©à®®à®¾à®© பதிவ௠போடà¯à®•ிறீரà¯. … சோறà¯à®±à®¾à®²à®Ÿà®¿à®¤à¯à®¤ பிணà¯à®Ÿà®®à¯ எனà¯à®±à¯ கரà¯à®£à®¾à®¨à®¿à®¤à®¿ சொனà¯à®©à®¤à¯ சரிதான௠போல
it is very unfortunate that we have in our midst extremists who are highlu sentimental and do not care the basix existence of Hindu Religion. Any way please advise me the requirements of people , number of houses in detail to enable me to contribute some money to my might which will be helpful to remove the pessimism inthe minds of people. No one should be left starved in the village. This is what I have learned from Bharathi. Unfortunately, I am away from this place, but I have great interest in preaching Hindu stories myself.
NOTE – To Shenkotai Sriram
உணà¯à®®à¯ˆ தான௠படிகà¯à®•à¯à®®à¯ போதே மனதை எனà¯à®©à®µà¯‹ செயà¯à®•ிறதà¯.தயவ௠செயà¯à®¤à¯ வைணவ தà¯à®¤à®²à¯ˆà®µà®°à¯à®•ள௠இதறà¯à®•௠à®à®¤à®¾à®µà®¤à¯ வழி செயà¯à®µà®¾à®°à¯à®•ள௠எனà¯à®±à¯ நமà¯à®ªà¯à®µà¯‹à®®à¯