ஜெயலலிதா 71 ஆவது பிறந்த நாள்… சிறப்பாகக் கொண்டாடிய அதிமுக,.!

Reporters Diary அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்

jayalalitha malar released - 2026

இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த தினம் அதிமுக.,வினரால் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.  அதிமுக., தலைமை அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன.

இது குறித்து ஓபிஎஸ்., இபிஎஸ் ஆகியோரின் டிவிட்டர் பதிவுகளில்….

இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மாண்புமிகு “புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்தநாள் விழா சிறப்பு மலரை” வெளியிட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக கொள்கை பிரச்சார பாடல்கள் அடங்கிய “அம்மாவின் அரசு” என்ற குறுந்தகட்டினை வெளியிட்டு, கழக மகளிருக்கு புடவைகள் மற்றும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கிய போது.

jayaalitha - 2026

கழக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாண்புமிகு முதல்வர் அவர்கள், “அம்மாவின் அரசு” என்ற கழக கொள்கை பிரச்சார பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டு, கழக மகளிருக்கு புடவைகள் மற்றும் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழகம் சார்பில் “கழகம் மற்றும் கழக அரசின் சாதனைகள் விளக்க பிரச்சார வாகனம் மற்றும் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த போது

இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது…

மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் தன்னை அர்பணித்த, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.