பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்குகிறது!

Published:

pamban Rail and Road bridges Rameswaram - 2026

பாம்பன் ரயில் பாலத்தில் அடுத்த இரு நாட்களில் ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்குகிறது.

புராதனச் சிறப்பு மிக்க பாரம்பரிய பாம்பன் ரயில் பாலத்தில் அண்மையில் தூக்குத் தூக்கும் பகுதி சேதமடைந்தது. இதனால் அந்தப் பாலத்தில் ரயில்கள் இயக்கப் படுவது நிறுத்தப் பட்டது. ரயில்கள் மண்டபம் பகுதியுடன் நிறுத்தப் பட்டன.

இந்நிலையில், பாலத்தின் பராமரிப்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடைபெற்றன. ரயில்வெ நிர்வாகத்தின் சுறுசுறுப்பான பணியால் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இதனிடையே பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதால், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் அனைத்து பயணிகள் ரயில்களும் மற்றும் ராமேஸ்வரம் சென்று சேரும் அனைத்து பயணிகள் ரயில்களும் 27.02.2019 புதன்கிழமை முதல் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

On and from 27.02.2019 (Wednesday) all passenger carrying trains will run through to and from Rameswaram .

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img