பாதிரியார்கள் செய்யும் அரசியல்… தேசத் துரோகமே! குமுறும் கிறிஸ்துவர்!

Reporters Diary உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி

stalin christian sabha - 2026

பாதிரியர்களும், போதகர்களும், ஊழிய கார்களும் எதற்காக காங்கிரசுக்கு வாக்கு கேட்கிறீர்கள்

உங்கள் புனிதமான பணியை துறந்து விட்டு கேளுங்கள் . நாங்களும் கிறிஸ்தவர்கள் தான். எங்கள் தலைமுறையை நாசம் செய்யாதீர்கள்.

எத்தனை காலம் தான் இப்படி சொல்லி சொல்லி ஏமாற்றுவீர்கள். மக்களை காக்க வாக்களிக்க சொல்லி கொடுங்கள்.

கிறிஸ்தவத்தை கிறிஸ்து காப்பார். உலகின் பெரிய மதமான கிறிஸ்தவ மதத்தை காங்கிரஸ் தான் பாதுகாக்கிறது என யார் உங்களிடம் சொன்னது.

பணம் வாங்காமல் வாக்களியுங்கள் என்று கற்பித்து கொடுங்கள். காங்கிரசுக்கும் பாஜக க்கு‌ம் என்ன வித்தியாசம் கண்டீர்கள். நீங்கள் வாக்கு செலுத்த சொல்லும் காங்கிரஸ் கட்சி பணம் கொடுக்கிறது கொள்ளை அடிக்கிறார்கள். இது எப்படி கிறிஸ்துவின் பார்வையில் நியாயம் தானோ?.

பாஜக காரன் இந்து என்பதால் எங்களுக்கு ஓட்டு போடு என்கிறான். நீங்கள் கிறிஸ்தவர்கள் காங்கிரசுக்கு ஓட்டு போட சொல்கிறீர்கள். இரண்டுமே மத வாதம் தானே.

அவர்கள் செய்வது மத அரசியல் என்றால் நீங்கள் செய்வது என்ன???.

எத்தனை ஆலயங்களில் மூப்பன் மார் தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் எத்தனை பேராய நிறுவனங்கள் அழிந்து போய் கொண்டிருக்கிறது? இதை எல்லாம் தடுத்து முதலில் கிறிஸ்தவத்தை வளருங்கள். பிறகு அரசியலில் குதியுங்கள்.

ஒரு நாள் இளைஞர்கள் எதற்காக ஆலயங்களில் ஒரு கட்சி சார்ந்த அரசியல் பேசுகிறீர்கள் என கேட்க தான் போகிறார்கள். சொல்லும் போது காங்கிரஸ் ஈழத்தில் ஒன்றரை லட்சம் பேரை கொன்றது,

டெல்லியில் இந்திரா மரணத்திற்கு பிறகு 3000 பேரை கொன்றது,

கூடங்குளத்தில் போராடிய மீனவர்கள் ஆறு பேரை கொன்றது,

அனிதாவை கொன்ற நீட் தேர்வை காங்கிரஸ் தான் கொண்டு வந்தது,

மீத்தேன் கெயில் திட்டங்களை காங்கிரஸ் தான் கொண்டு வந்தது,

ஜல்லிக்கட்டு தடை காங்கிரஸ் தான் போட்டது,

காவிரி மற்றும் முல்லைப் பெரியாறில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் தர மாட்டேன் என்று காங்கிரஸ் முதலமைச்சர்கள் சித்த ராமையா மற்றும் உம்மன்சாண்டி கூறினார்கள்,

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்று காங்கிரஸ் தான் சொன்னது … என சேர்த்து கூறி வாக்கு கேளுங்கள்.

எங்கள் சொந்த பணத்தையும் நேரத்தையும் உடல் உழைப்பையும் எதிர்காலத்தில் ஒரு தூய அரசியல் படைக்க செலவு செய்கிறோம்.

நீங்கள் எளிமையாக எங்களை உதிரி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகிறீர்கள்.

எங்களிலும் சிஎஸ்ஐ ஆர்சி பெந்தேகோஸ்த் பிரிவுகளில் ஊறி போனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எங்களுக்கும் கிறிஸ்தவமும் தெரியும் அரசியலும் தெரியும்.

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க சொல்லும் நீங்கள் அவர்கள் கொண்டு வருவதாக சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிற வர்த்தக துறைமுகம், ரப்பர் பூங்கா, விளையாட்டு பூங்கா, தென்னை நார் தொழிற்சாலை, ஹெலிகாப்டர் தளம் இது எல்லாம் எங்கே என்று கேட்டீர்களா.

புனிதமான பீடத்தில் நின்று நீங்கள் ஓட்டு கேட்கும் அளவுக்கு காங்கிரஸ் ஒன்றும் தூய்மையான கட்சியும் இல்லை அதில் இருப்பவர்கள் எல்லாரும் நேர்மையான அரசியல் செய்பவர்களும் இல்லை. உங்கள் புனிதத்தை இழக்காதீர்கள்.

வசந்த குமாரின் பணம் இங்கு விளையாடும் தடுப்பீர்களா?. இந்தியா என்பது பல இனங்களின் தேசம் … இங்கு மாநில கட்சிகள் சேர்ந்து கூட்டாட்சி அமைத்தால் தான் அனைத்து இன, மத மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும் … அதை நோக்கி நகர தான் நாம் பார்க்க வேண்டும்

இதை தான் நாங்கள் முன் எடுக்கிறோம்.

குமரி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் சமயத்தில் மூன்றாம் தர அரசியல் செய்கிறார்கள்

2006 ல் சீமான் பேசிய வீடியோவை பரப்பி ஓட்டு கேட்கிறார்கள்.

சிலுவையில் கிறிஸ்து மொழிந்த முதல் மொழி மன்னிப்பு. சீமான் எத்தனை முறை அதற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்.?

கிறிஸ்து மன்னித்தாலும் இவர்கள் மன்னிக்க மாட்டார்கள் இவர்கள் கிறிஸ்துவை விட உயர்ந்தவர்கள். கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக என்று பத்து கட்டளையில் உள்ளது

அப்படி என்றால் வழங்குபவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று தான் அர்த்தம் ஆனால் இவர்கள் அற்ப ஓட்டுக்காக வீணிலே வழங்குகிறார்கள்

நீங்களும் இவர்களுக்கு ஆதரவாக பீடத்தில் நின்று பேசுகிறீர்கள்.

உங்கள் ஆன்மீக பணியோடு நல்ல பழக்க வழக்கங்களை படித்து கொடுங்கள்… அரசியல் அறிவை புகட்டுங்கள்

ஒரு கட்சிக்கு மதத்தை காரணம் காட்டி வாக்கு கேட்டு மத வெறியை தூண்டாதீர்கள்.

இப்படிக்கு…

கிறிஸ்டோபர் தேவ ஆசிர்வாதம்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.