இதுவரை இம்மியும் உதவியிராத அரசியல் சதி வலையில்… எதிர்காலத்தை இழக்கும் கோமதி!

Reporters Diary அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி

gomathi 1 - 2026

இந்தப் புகைப்படத்தில் இவரைச் சூழ்ந்திருக்கும் அனைவரும் இந்திய எதிர்பாளர்கள், ஆகவே மோடி எதிர்ப்பாளர்கள். பிரிவினை இவர்களின் நோக்கம்.

இவர்கள் கோமதி மாரிமுத்துவை பாராட்டவில்லை. அரசியல்வலைக்குள் இழுக்கிறார்கள்.

ஸ்போட்ஸ் கோட்டாவில் கோமதிக்கு மத்திய அரசுப் பணி வழங்கப்பட்டதையோ, உலகநாடுகளுக்கு சென்று வர செய்த செலவுகளையோ, அலுவலகப் பணியில் பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கி அனுமதிக்கப்பட்டதையோ சொல்லாமல் தமிழச்சி வஞ்சிக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

வேறுபட்ட கலர் ஷூக்கள் இன்றைய உபயோகத்தில் உள்ளவை என அறிந்தும் மோடியையும் இந்தியாவையும் வசைபாடி அப்பாவிகளை வெறியேற்றுகிறார்கள்.
இந்த விளையாட்டை இவர்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தொடங்கினார்கள்.

இன்று அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்று பார்த்தால் #தமிழண்டா க்ரூப்ஸ், #நக்ஸல் க்ரூப்ஸ், #க்ருசேடர்ஸ் க்ரூப் மற்றும் #ஜிகாதி க்ரூப்ஸ். இதில் ஜிகாதி க்ரூப்ஸ்ன் மோடி வசை அளவுகடந்தது. வசைபாட அவர்களின் போர்வை #தமிழண்டா.

ஜல்லிக்கட்டில் இருந்து இவர்களிடம் மோடி எதிர்ப்பு என்ற ஒரே காரணத்தால் ஏமாந்து வருபவர்கள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். ஆபத்தை உணர்ந்து இவர்களைத் தவிர்க்க வேண்டும்.

இவர்களிடம் சிக்கிய அனிதா மரணித்துவிட்டார். கோமதிமாரிமுத்துவுக்கு என் பிரார்த்தனைகள்.

அவர் தைரியமாக வெளியில் வந்து தான் அணிந்த ஷூக்களுக்கான விளக்கத்தையும் இந்திய அரசு கொடுத்த ஊக்கத்தையும் சொல்லி தான் இந்த பிரிவினை பிரசாரத்தில் வீழவில்லை என நிரூபிக்க வேண்டும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.