கோமதி மாரிமுத்து… உங்க வெற்றியை குப்புறத் தள்ளி ஒருவழியாக்கிட்டுது தமிழக அரசியல் ஊடகங்கள்!

Published:

gomathi 1 - 2026

செல்வி கோமதி அவர்கள், கிழிந்த ஷூ உடன் ஓடினேன் என்றது இந்தப்போட்டியில் இல்லை ஐயன்மீர். அவருடைய கடந்த காலங்களைச் சொல்கிறார். சொந்தக்காசில் தான் போட்டிகளுக்காக விமானத்தில் செல்வதாகச்சொன்னதும் கடந்த காலங்களே. அவர் தற்போது sports quotaல் மத்திய அரசுப்பணியான வருமான வரித்துறையில் பணி கிடைத்து, பெங்களூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரிகிறார்.

இவர் தங்கம் வென்றிருப்பது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில். அதற்கு இவரை அனுப்பியது இந்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் கிடையாது. தடகளப்போட்டிகளை நடத்துவதற்கென்றே இருக்கும் Athletic Federation of India – AFI என்கின்ற அமைப்பு. இந்த AFI என்பது, அரசு உதவி பெற்று, அரசு அனுமதியோடு, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, பயிற்சி கொடுக்க, போட்டிகள் நடத்த அமைக்கப்பட்டது. அதேபோல இதே சகோதரி கோமதி அவர்கள், இதே ஆசிய போட்டிகளில், 2013ல் 7வது இடத்திலும், 2015ல் 4 வது இடத்திலும் வந்தவர். அப்போதும் இவர் AFI சார்பில் அனுப்பிவைக்கப்பட்டார்.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

ஷூ பஞ்சாயத்துக்கு வருவோம். எந்தவொரு international போட்டிகளிலும், கிழிந்த ஷூ உடனெல்லாம் ஓட முடியாது. அதேபோல வேறு வேறு ஷூவும். எல்லாமே தரம் பரிசோதிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டே அனுமதிக்கப்படும். அதேபோல வீரர்களுடைய உடை, காலணிகள் என அனைத்திற்கும் ஏகப்பட்ட விதிகள் & கட்டுப்பாடுகள் இருக்கிறது.

செல்வி கோமதி உண்மையில் வாய்ப்புக்காக சிரமப்பட்டது, கடந்த காலங்களில். தன்னுடைய தந்தை, தாய் மற்றும் ஏழ்மை நிலையோடு போராடி வென்றிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல், தன்னுடைய கடந்த கால சிரமங்களைப் பற்றி சொல்லியிருப்பதையும், இரண்டு நிறங்களில் இருக்கும் ஷூக்களையும் தவறாக எடுத்துக்கொண்டு ஏகப்பட்ட நண்பர்கள் அறச்சீற்றம் கொள்கிறீர்கள்.

– ரா புவன்

gomathimarimuthu - 2026


#கோமாளி_போராளிகளுக்கு

கோமதி இப்போ 4 வருசமா மத்திய அரசு வருமான வரி துறைல வேலை செய்யுது.

பெங்களூரு ஆஃபிஸ்ல, மாதம் 40,000 சம்பளம். கோட்ரஸ் வீடு குடுத்துருக்காங்க.

வாரம் 1 நாள்தான் வேலைக்கு ஆஃபிஸ் வந்தா போதும் மீதி 5 நாள் பெங்களூரு தடகள அகாடமில பயிற்சி.

மேலும் இப்படி வெவ்வேறுஷூ என்பது அவர்களின் கால் வடிவமைப்பிற்காக பிரத்யேகமாக அவர்கள் பயன்படுத்தி கொள்வது.
இதுல ஈசிய கண்டு பிடிக்கிற மாதிரி போட்டா எடிட் வேர…..????????????????

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இரண்டாவது படத்தில் #உசைன்போல்ட் கூட வெவ்வேறு ஷூதான் அணித்திருக்கிறார்.

எனவே போராலீஸ் அனைவரும் #உசைன்போல்ட்கு ஒரு ஜோடி ஷூ வங்கி தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

– நவீன்குமார் மணிவண்ணன்

Related articles

Recent articles

spot_img