டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
அயோத்தியில் நடைபெறுகின்ற. பால ராமர் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்கு முன்னதாக நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீரங்கத்துக்கும் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கும் வந்து வழிபாடுகளை மேற்கொண்டார். இது மிகவும் முக்கியமான மற்றும் நுணுக்கமான அம்சம் பொதிந்தது.
காரணம் ராமபிரான் குலதெய்வமான ரங்கநாதரை தரிசித்து அவரிடம் அனுமதி பெற்று அதன் பிறகு கோயில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வினை மேற்கொள்கிறார் என்பது கவனிக்க வேண்டிய அம்சம். பொதுவாக இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு முன்னதாக அணுக்ஞை எனப்படும் அனுமதி பெறுதல் மிகவும் முக்கியமானது. அதில் ராமபிரானின் இக்ஷ்வாகு குலதனம் என்று போற்றப்படக்கூடிய அரங்கநாதரிடம் இந்த நிகழ்வுக்கான அனுக்ஞையை பெற்று சென்று இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
வால்மீகி ராமாயணத்தின் படி அயோத்தி தலத்தின் மகிமையை சொல்லும் போது, அது ஸ்ரீவைகுண்டத்தின் ஒரு பகுதியாக பிரம்மாவினால் பெறப்பட்டு பின்னர் ஸ்வாயம்புவ மனுவால் ராமபிரானின் முன்னோர்களுக்கு அளிக்கப்பட்டது.
ராமர் பட்டாபிஷேகம் நடந்த போது விபீஷணருக்கு பரிசாக தன் குலதெய்வமான ஸ்ரீரங்க விமானத்தை ராமபிரான் அளித்தார். அதை எடுத்துக்கொண்டு இலங்கை நோக்கிச் சென்றபோது காவிரி கொள்ளிடம் இரண்டுக்கும் மத்தியில் ஸ்ரீரங்க விமானத்தை வைத்துவிட்டு விபீஷணர் மாலைக் கடன்களை செய்த போது அந்த விமானம் அப்படியே தரையில் நிலை நின்று விட்டது அவ்வாறே ஸ்ரீரங்கம் திருக்கோயில் அமைந்தது என்பது தல வரலாறு.
அத்தகைய ரங்கநாதரை வழிபட்டு அனுமதி பெற்று அதன் பின்னர் ராமபிரானால் பூஜிக்கப்பட்ட லிங்கம் என்று கொண்டாடப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை வழிபட்டுச் செல்கிறார் பிரதமர் மோடி.
ராமேஸ்வரத்தை தீர்த்த க்ஷேத்திரம் என்பார்கள். எனவே ராமேஸ்வரத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடி அந்த தீர்த்தங்களையும் எடுத்துக் கொண்டு ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்காகச் சென்றிருக்கிறார் பிரதமர்.
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவிலில் கம்ப ராமாயண பாராயணத்தை கேட்டது என் வாழ்நாள் முழுவதும் நான் மறக்க இயலாத அனுபவம். ஒப்பற்ற கம்பன் தாம் இயற்றிய ராமாயணத்தை முதன்முதலில் பொதுவெளியில் அரங்கேற்றியது இந்த கோவிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. pic.twitter.com/cEja73CQ9g
ராமேஸ்வரம் தீவில் உள்ள தனுஷ்கோடி, ராமபிரானின் சரிதத்தில் மிக முக்கியமான இடம். இங்கேதான் ராவணனுடன் நிகழ்த்தப்பட வேண்டிய போர் குறித்து ராமன் ஆலோசனை செய்ததாக அகநானூற்று பாடல் குறிப்பும் உண்டு.
இங்குள்ள கோதண்டராமர் கோவில் மிகப் பழமையானதும் ராமபிரானின் பாதச் சுவடுகள் பதிந்ததுமான தலம் என்பதால் இந்த இடங்களுக்கெல்லாம் பிரதமர் வந்து வழிபட்டு சென்றிருப்பது மிகவும் உன்னதமானது. இது அவர் எடுத்துக்கொண்ட செயலை முழுமையாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும் என்கின்ற மன உறுதியை வெளிப்படுத்துகிறது.
இன்னும் சொல்லப்போனால் தமிழகம் இதுவரை இப்படிப்பட்ட பிரதமர் எவரும் வந்து தங்கள் பகுதியைக் கொண்டாடியதை, வழிபட்டதை, தங்களுடன் ஒன்றாகக் கலந்து நின்றதைப் பார்த்ததில்லை. அந்த வகையில் பிரதமரின் இந்த நடவடிக்கை, பிற்காலத்திலும் கூட பெருமளவில் நினைவுக்கூரப்படும் ஒரு சரித்திரப் பதிவாகவே அமைந்திருக்கும்!
அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று நான் சென்ற நிகழ்வை எப்போதும் மறக்க இயலாது. கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் காலம் கடந்த பக்தி நிரவியுள்ளது. pic.twitter.com/aPiPdHx4iv
Had the opportunity to be at Arichal Munai, which holds a special significance in Prabhu Shri Ram’s life. It is the starting point of the Ram Setu. pic.twitter.com/d2HvbMnmV5
கவிதை ஆக்கம்: கண்ணன் திருமலை ஐயங்கார், அஜனி.நாக்பூர். மஹாராஷ்டிரம்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் 3 அடுக்குகளுடன் இந்த ஆலயம் அமைகிறது. 392 பிரமாண்டமான தூண்கள், 44 நுழைவாயில்களுடன் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் கீழ் தளத்தில் கருவறை அமைந்துள்ளது. அங்கு சுமார் 5 அடி உயரத்தில் ராமரின் சிலை அமைக்கப்படுகிறது. அயோத்தி ராமர் பிறந்து, வளர்ந்த இடம் என்பதால் அங்கு 5 வயதுடைய பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மைசூரை சேர்ந்த சிற்பி இந்த பால ராமர் சிலையை செதுக்கி உள்ளார். இந்த சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி 7 நாட்கள் பூர்வாங்க பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கின.
நேற்று பால ராமர் சிலையை அயோத்தி கோவிலுக்குள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நேற்று காலை சரயு நதியில் இருந்து புனித நீர் சேகரித்து ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதையடுத்து பால ராமர் போன்ற உருவம் கொண்ட வெள்ளியிலான ராமர் சிலை நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு மைசூர் சிற்பி செதுக்கி இருக்கும் பால ராமர் சிலை ஆலயத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சுமார் 200 கிலோ எடையுள்ள அந்த சிலை கிருஷ்ணா எனும் வகை கருங்கல்லால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கிரேன் மூலம் அந்த சிலையை ஆலயத்துக்குள் எடுத்து சென்றனர்.
இன்று (வியாழக்கிழமை) பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தும் பணிகள் நடந்தன. அதற்கு முன்னதாக கருவறையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புனித நீர் மூலம் கருவறை சுத்தப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பால ராமர் சிலைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று மதியம் அந்த சிலை கருவறை பீடத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து பால ராமர் சிலைக்கு அடுத்தடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து புண்ணிய நதிகளில் தீர்த்தங்கள் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த புனித நீர்கள் மூலம் பால ராமர் சிலை சுத்தப்படுத்தப்பட உள்ளது. இன்றும், நாளையும் இந்த பணிகள் நடைபெறும்.
இதற்கிடையே அயோத்தி ஆலயம் அருகே பிரமாண்டமான பந்தலில் யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன. 1008 லிங்கங்கள் அமைத்து நடந்து வரும் பூஜைகளும் அயோத்தி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.
மத்திய அமைச்சரவையின் உறுப்பினர் அனுராக் சிங் தாகுர் அவர்களே,
எல். முருகன் அவர்களே, நிஷித் பிரமாணிக் அவர்களே,
தமிழ்நாடு அரசின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே,
மேலும் பாரதத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் இங்கே வந்திருக்கும் என்னுடைய இளைய நண்பர்களே,
நான் அனைவரையும் 13ஆவது கேலோ இண்டியா விளையாட்டுக்களுக்கு வரவேற்கிறேன். இந்திய விளையாட்டுக்களைப் பொறுத்த மட்டிலே, 2024ஆம் ஆண்டினைத் துவக்க இது அருமையான வழியாகும். இங்கே குழுமியிருக்கும் என்னுடைய இளைய நண்பர்கள் தாம் ஒரு புதிய இந்தியா, ஒரு இளம் இந்தியாவின் பிரதிநிதிகள். உங்களுடைய ஆற்றலும், உற்சாகமும் விளையாட்டு உலகிலே தேசத்தைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கிறது.
நாடெங்கிலுமிருந்தும் சென்னைக்கு வந்திருக்கும் அனைத்து தடகள வீரர்களுக்கும், விளையாட்டு அபிமானிகளுக்கும் நான் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவரும் இணைந்து, நீங்கள் ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் மெய்யான உணர்வினைக் காட்சிப்படுத்துகிறீர்கள்.
தமிழர்களின் இதமான வரவேற்பு, அழகிய தமிழ் மொழி, கலாச்சாரம், உணவு ஆகியன உங்கள் வீட்டில் நீங்கள் இருப்பது போன்ற உணர்வை உங்களுக்கு அளித்திருக்கும்.
தமிழர்களின் விருந்தோம்பல் உங்கள் இதங்களைக் கொள்ளை கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.
கேலோ இண்டியா இளைஞர் விளையாட்டுக்கள் உங்கள் திறன்கள்-திறமைகளைக் காட்சிப்படுத்த உங்களுக்குக் கண்டிப்பாக ஒரு வாய்ப்பை அளிக்கும்.
அதே நேரத்தில், வாழ்நாள் முழுக்க நீடிக்க கூடிய புதிய நட்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
நண்பர்களே, இன்று இங்கே தூர்தர்ஷன் மற்றும் ஆகாசவாணியின் பல நிகழ்ச்சிகளின் தொடக்கமும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற இருக்கின்றன.
1975ஆம் ஆண்டும் முதல் ஒளிபரப்பைத் தொடக்கிய சென்னை தூர்தர்ஷன், இன்று ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.
இன்று இங்கே டிடி தமிழ் சேனலும் கூட புதிய வடிவம் பெற்று தொடங்கப்பட இருக்கிறது.
8 மாநிலங்களில், 12 புதிய பண்பலை ஒலிபரப்பிகள் தொடங்கப்படுவதால், கிட்டத்தட்ட ஒண்ணரை கோடி மக்களுக்கு ஆதாயமாக இருக்கும்.
இன்று 26 புதிய பண்பலை ஒலிபரப்பிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நான் தமிழ்நாட்டு மக்களுக்கும், நாட்டுமக்களுக்கும் இதன் பொருட்டு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, பாரதத்தில் விளையாட்டுக்களின் மேம்பாட்டில் தமிழ்நாட்டிற்கென ஒரு சிறப்பிடம் உண்டு.
இது சேம்பியன்களை உருவாக்கும் பூமி.
இந்த மண்ணில் தான் டென்னிஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த அமிர்தராஜ் சகோதரர்கள் பிறந்தார்கள்.
இதே மண்ணில் தான் ஹாக்கி அணியின் கேப்டன் பாஸ்கரனும் பிறந்தார், இவருடைய தலைமையின் கீழ் தான் பாரதம் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்க பதக்கத்தை வென்றது.
சதுரங்க விளையாட்டின் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், பிரஞ்யாநன்ந்த், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் சேம்பியனான மாரியப்பன் ஆகியோரும் கூட தமிழ் மண்ணின் மைந்தர்கள் தாம்.
இப்படிப்பட்ட எத்தனையோ விளையாட்டு வீரர்கள் இந்த மண்ணிலிருந்து தோன்றியிருக்கிறார்கள், ஒவ்வொரு விளையாட்டிலும் செயற்கரிய செயலைச் செய்து காட்டியிருக்கிறார்கள்.
நீங்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டின் மண்ணிலிருந்து உத்வேகம் அடைவீர்கள் என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, நாமனைவரும் பாரதத்தைக் உலகின் தலைசிற்ந்த விளையாட்டு நாடுகளில் ஒன்றாகக் காண விழைகிறோம்.
இதன் பொருட்டு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், தேசம் தொடர்ந்து பெரியபெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும், விளையாட்டு வீரர்களின் அனுபவத்தை அதிகப்படுத்த வேண்டும், அடித்தளத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பெரிய போட்டிகளில் விளையாட வர வேண்டும்.
கேலோ இண்டியா இயக்கமானது, இன்று இந்த பங்களிப்பையே நிறைவேற்றி வருகிறது.
2018ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 12 கேலோ இண்டியா விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
கேலோ இண்டியா பல்கலைக்கழக விளையாட்டுக்கள்,
கேலோ இண்டியா பனிக்கால விளையாட்டுக்கள் மற்றும் கேலோ இண்டியா மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்,
விளையாடவும் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது, புதிய திறன்கள் முன்னிறுத்தவும்படுகிறார்கள்.
இப்போது மீண்டும் ஒருமுறை, கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்கள் நல்லமுறையில் தொடங்கப்பட இருக்கின்றன.
சென்னை, திருச்சி, மதுரை, கோயமுத்தூர், என தமிழ்நாட்டின் நான்கு அருமையான நகரங்களிலும் நம்முடைய சேம்பியன்களை வரவேற்க தயாராக இருக்கின்றார்கள்.
நண்பர்களே, விளையாட்டு வீரராகட்டும், பார்வையாளராகட்டும், அனைவரும் சென்னையின் அழகான கடற்கரைகள் உங்களைக் கொள்ளை கொண்டு விடும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
திருச்சியின் ஆலயங்கள், அங்கே இருக்கும் கலையும், கைவினைத்திறனும் உங்கள் இதயங்களைக் கொள்ளை கொண்டு விடும்.
இதோடு கோயமுத்தூரின் உழைப்பாளர்கள், தொழில்முனைப்புடையோர் உங்களை திறந்த மனத்தோடு வரவேற்பார்கள்.
தமிழ்நாட்டின் இந்த அனைத்து நகரங்களிலும் உங்களுக்கு ஒரு திவ்வியமான அனுபவம் ஏற்படும், இதை உங்களால் மறக்க முடியாது.
நண்பர்களே, கேலோ இண்டியா விளையாட்டுப் போட்டிகளின் போது 36 மாநிலங்களின் தடகள வீர்கள் தங்கள் திறமைகளையும், தன்முனைப்பையும் காட்சிப்படுத்துவார்கள்.
5000த்திற்கும் மேற்பட்ட இளைய விளையாட்டு வீரர்கள் தங்களுடைய விடாமுயற்சி, தங்களுடைய உற்சாகம் ஆகியவற்றோடு மைதானத்தில் இறங்கும் போது இங்கே என்ன சூழல் நிலவும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்!!
வில்வித்தை, தடகள விளையாட்டு, பேட்மிண்டன் போன்ற விளையாட்டுப் போட்டிகளின் ஆனந்தத்திற்காக காத்திருக்கிறோம்.
கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஸ்க்வாஷ் விளையாட்டில் வெளிப்படும் உற்சாகத்தைக் காண ஆவலோடு இருக்கிறோம்.
தமிழ்நாட்டின் பண்டைய கௌரவம் மற்றும் மரபுசார் விளையாட்டின் சின்னமான சிலம்பத்தைக் காண ஆர்வம் பொங்குகிறது.
பல்வேறு மாநிலங்களில், பல்வேறு விளையாட்டு வீரர்கள் ஒரே சங்கல்பம், ஒரே தன்முனைப்பு, ஒரே உணர்வுடன் கூட இங்கே ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
விளையாட்டுக்களின்பால் அர்ப்பணிப்புணர்வு, அவர்களின் தன்னம்பிக்கை, இடர்களைக் கடக்க முடியும் என்ற திடமான உணர்வு, அசாதாரணமான வெளிப்பாடு என்ற தாகம் ஆகியவற்றை நாடு முழுவதும் காணும்.
நண்பர்களே, தமிழ்நாட்டின் மகான் திருவள்ளுவர் பிறந்த மண் இது.
புனிதர் திருவள்ளுவர் தன்னுடைய படைப்புக்களின் வாயிலாக இளைஞர்களுக்கு புதிய திசையைக் காட்டினார், அவர்கள் முன்னேற கருத்தூக்கம் அளித்தார்.
கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களின் சின்னத்திலுமே கூட மகான் திருவள்ளுவரின் முகத்தைக் காண முடியும்.
புனிதர் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார்,
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்,
பெருமை முயற்சி தரும்.
அதாவது,
விபரீதமான சூழ்நிலைகளிலும் கூட நாம் பலவீனப்பட்டுவிடக் கூடாது, நாம் கடினங்களைக் கண்டு ஓடி ஒளியக் கூடாது.
நாம் நமது மனத்தை உறுதியாக வைத்துக் கொண்டு இலக்கை சாதிக்க முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
ஒரு விளையாட்டு வீரருக்கு இது மிகப்பெரிய உத்வேகமாகும்.
இந்த முறை கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக வீரமங்கை வேலு நாச்சியார் ஆக்கப்பட்டிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
நிஜ வாழ்க்கையைச் சார்ந்த ஒருவர் சின்னமாக ஆக்கப்பட்டிருப்பது, இதுவரை அறியப்படாத ஒன்று.
வீரமங்கை வேலு நாச்சியார், பெண்சக்தியின் அடையாளம்.
இன்று, அரசின் பல முடிவுகளில் அவருடைய ஆளுமை பிரதிபலிக்கிறது.
அவருடைய கருத்தூக்கத்தால் தான் அரசு விளையாட்டு வீராங்கனைகளுக்கும் கூட அதிகாரப்பங்களிப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
கேலோ இண்டியா இயக்கத்தின்படி 20 விளையாட்டுக்களில் பெண்களின் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதிலே 50,000 விளையாட்டு வீராங்கனைகள் பங்கெடுத்துக் கொண்டார்கள்.
தஸ் கா தம் போன்ற முன்னெடுப்பிலும் கூட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் தங்களுடைய திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.
நண்பர்களே,
திடீரென்று 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு எப்படி நம்முடைய தடகள விளையாட்டுக்களில் செயல்பாடு இத்தனை சிறப்பானதாக ஆகியிருக்கிறது என்று இன்று பலருக்குத் திகைப்பாக இருக்கலாம்.
பாரதம் டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுக்களிலும் இதுவரை காணாத அளவுக்கு சிறப்பான செயல்பாட்டினைத் செய்திருப்பதை நீங்களே கவனித்திருக்கலாம்.
ஆசிய விளையாட்டுக்களிலும் ஆசிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுக்களிலும் கூட பாரதம் சரித்திரம் படைத்திருக்கிறது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளிலுமே கூட பாரதம் பதங்கங்கள் விஷயத்தில் புதியதோர் சாதனையைப் படைத்திருக்கிறது.
இவையெல்லாம் திடீரென்று நிகழ்ந்து விடவில்லை.
தேசத்தின் விளையாட்டு வீரர்களின் கடும் உழைப்பும், பேரார்வமும் முன்காலத்திலும் ஒன்று சளைத்திருக்கவில்லை.
ஆனால் கடந்த பத்தாண்டுகளிலே, அவர்களுக்கு புதியதோர் தன்னம்பிக்கை பிறந்திருக்கிறது, ஒவ்வொரு அடியிலும் அரசு அவர்களுக்கு துணை நின்றது.
முந்தைய போட்டிகளில் எப்படி விளையாட்டுக்கள் அரங்கேற்றப்பட்டனவோ, அந்த வழிமுறைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்தோம்.
கடந்த பத்தாண்டுகளில் அரசாங்கம் சீர்திருத்தம் மேற்கொண்டது, விளையட்டு வீரர்கள் செயல்பட வைத்தது, விளையாட்டுக்களின் ஒட்டுமொத்த அமைப்பிலும் மாற்றமேற்படுத்தியது.
இன்று கேலோ இண்டியா இயக்கம் வாயிலாக தேசத்தின் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய்க்கும் மேற்பட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டில் நாம் டாப்ஸ் அதாவது ஒலிம்பிக் போடியம் ஸ்கீம் என்ற ஒன்றை தொடக்கினோம்.
இதன் வாயிலாக தலைசிறந்த தடகள பயிற்சி, சர்வதேச அளவிலான அனுபவம், பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகளில் அவர்களுடைய பங்கேற்பை உறுதிப்படுத்தினோம்.
இப்போது நம்முடைய பார்வை இந்த ஆண்டு பாரீஸ் நகரில்ஜும், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்ஜெலஸில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் மீதே இருக்கிறது.
இதற்காகவும் கூட டாப்ஸ் திட்டத்தின்படி, விளையாட்டு வீரர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.
நண்பர்களே,
இன்று விளையாட்டுக்கள் இளைஞர்களின் வருகைக்காக காத்திருப்பதில்லை, நாம் விளையாட்டுக்களை இளைஞர்களிடமே கொண்டு செல்கிறோம்.
நண்பர்களே,
கேலோ இண்டியா போன்ற இயக்கம், கிராமங்கள், ஏழைகள், பழங்குடியினர், கீழ்தட்டு நடுத்தர மக்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது.
இன்று நாம் உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் எனும் போது, இதிலே விளையாட்டுத் திறன்களும் அடங்கும்.
இன்று நாம் உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்காக மிகச் சிறப்பான வசதிகளையும், நல்ல போட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகிறோம்.
இதன் வாயிலாக இவர்களுக்கு சர்வதேச அளவில் ஒரு நேரடி அனுபவம் கிடைக்கிறது.
கடந்த பத்தாண்டுகளிலே இப்படி பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை முதன்முறையாக பாரதத்திலே அமைத்தளித்திருக்கிறோம்.
தேசத்தின்வசம் இத்தனை பெரிய கரையோரப் பகுதி இருக்கின்றன, இத்தனை அதிக அளவில் பீச்சுகள் இருக்கின்றன.
இருந்தாலும் கூட, இப்போது தான் முதன்முறையாக தீவ் தீவிலே பீச் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் மல்லகம்பம் போன்ற பாரம்பரியமான இந்திய விளையாட்டுக்களோடு கூடவே 8 விளையாட்டுக்களும் இடம் பெற்றிருக்கின்றன.
நாடெங்கிலுமிருந்தும் 1600 விளையாட்டு வீரர்கள் இதிலே போட்டியிட்டார்கள்.
இதன் காரணமாக, பாரதத்தின் கடற்கரை விளையாட்டுக்களுக்கும், விளையாட்டுச் சுற்றுலாவுக்கும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இதனால் நம்முடைய கரையோர நகரங்களுக்கும் பெரும் ஆதாயம் ஏற்படும்.
நண்பர்களே,
நம்முடைய இளம் விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நேரடி அனுபவம் கிடைக்க வேண்டும், உலக விளையாட்டு சூழலமைப்பின் மையமாக பாரதம் ஆக வேண்டும் என்பதே நம்முடைய உறுதிப்பாடு.
ஆகையால், நாம் 2029ஆம் ஆண்டிலே இளைஞர்களுக்கான ஒலிம்பிக்ஸ் மற்றும் 2036ஆம் ஆண்டிலே ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகியவற்றை பாரதத்திலே நடத்த முழு முயற்சியை மேற்கொண்டு பணியாற்றி வருகிறோம்.
விளையாட்டுக்கள் களத்தோடு மட்டுமே நின்று போவதில்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.
மாறாக விளையாட்டுக்கள் என்பவை தாமே ஒரு மிகப்பெரிய பொருளாதாரமாகும்.
இதிலே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பல சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் பாரதத்தை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக ஆக்கும் உத்திரவாதத்தை நான் அளித்திருக்கிறேன்.
இந்த உத்திரவாதத்தில் விளையாட்டுக்கள் சார்ந்த பொருளாதாரத்தின் பங்களிப்பும் அதிகரிக்க வேண்டும் என்பதே நம்முடைய முயற்சி.
அந்த வகையிலே கடந்த பத்தாண்டுகளில் நாம் விளையாட்டுக்களோடு தொடர்புடைய பிற துறைகளையும் கூட மேம்படுத்தி வருகிறோம்.
இன்று தேசத்தில் விளையாட்டுக்களோடு தொடர்புடைய தொழில் வல்லுநர்களை உருவாக்கும் பொருட்டு, திறன் மேம்பாடு தொடர்பாகவும்
பலம் அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு புறத்தில், விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் சேவைகளோடு தொடர்புடைய சூழலமைப்பையும் கூட மேம்படுத்தி வருகிறோம்.
தேசத்திலே விளையாட்டு அறிவியல், புதுமைகள் கண்டுபிடிப்பு, தயாரிப்பு, விளையாட்டு பயிற்றுவித்தல், விளையாட்டு உளவியல், விளையாட்டு ஊட்டச்சத்து போன்றவற்றோடு தொடர்புடைய தொழில் வல்லுநர்களுக்கு நாம் தளமைத்துக் கொடுக்கிறோம்.
கடந்த ஆண்டுகளில் தேசத்தில் முதன்முறையாக தேசிய விளையாட்டுக்கள் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டிருக்கிறது.
இன்று கேலோ இண்டியா இயக்கத்தின் வாயிலாக, தேசத்தில் 300க்கும் மேற்பட்ட பிரபலமான கழகங்கள் Academies உருவாகி விட்டன.
ஓராயிரம் கேலோ இண்டியா மையங்கள், 30க்கும் மேற்பட்ட தனிச்சிறப்பு மையங்கள் இணைந்திருக்கின்றன.
தேசத்தின் புதிய தேசிய கல்வித் திட்டத்தில் நாம் விளையாட்டுக்களை முக்கிய பாடத்திட்டத்தின் அங்கமாக ஆக்கியிருக்கிறோம்.
இதன் காரணமாக, விளையாட்டுக்களை ஒரு வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கும் விழிப்புணர்வு சிறுவயது தொடங்கியே வருகிறது.
நண்பர்களே,
வரவிருக்கும் சில ஆண்டுகளிலேயே பாரதத்தின் விளையாட்டுத் தொழில்துறை, கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடி ரூபாயாகி விடும் என்று அனுமானிக்கப்படுகிறது.
இதனால் நேரடி ஆதாயம் அடையப்போவது நம்முடைய இளைய நண்பர்கள் தாம்.
கடந்த ஆண்டுகளிலே விளையாட்டுக்கள் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் இந்த புதிய விழிப்புணர்வு காரணமாக, ஒலி-ஒளிபரப்பு, விளையாட்டுப் பொருட்கள், விளையாட்டுச் சுற்றுலா, விளையாட்டு ஆடைகள் போன்ற தொழில்களிலும் கூட விரைவான முன்னேற்றம் நடந்து வருகிறது.
விளையாட்டு உபகரணங்கள் தயாரித்தலிலும் கூட பாரதம் தற்சார்புடையதாக ஆக வேண்டும் என்பதே நம்முடைய முயற்சியாகும்.
இன்று நாம் 300 வகையான விளையாட்டுக் கருவிகளைத் தயாரித்து வருகிறோம்.
தேசத்தின் பல்வேறு பாகங்களில் இதோடு தொடர்புடைய தயாரிப்புத் தொகுதிகள் நிறுவப்பட வேண்டும் என்பதே நம்முடைய முயற்சியாகும்.
நண்பர்களே,
கேலோ இண்டியா இயக்கத்தின்படி, நாடெங்கிலும் உருவாகிவரும் விளையாட்டுத் துறை கட்டமைப்புகளும் கூட வேலைவாய்ப்புக்கான பெரிய ஊடகமாக ஆகி வருகின்றன.
இன்று பல்வேறு விளையாட்டுக்களோடு தொடர்புடைய லீகுகள் விரைவாக பெருகி வருகின்றன. இதனாலும் கூட பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
அதாவது நமது இளைய பள்ளி-கல்லூரி மாணவமாணவியர், விளையாட்டுக்கள் தொடர்பான துறைகளில் தங்களுடைய எதிர்காலத் தொழில்பாதையை அமைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
அவர்களுக்கான சிறப்பான எதிர்காலத்திற்கு மோதியின் உத்திரவாதம் உண்டு.
நண்பர்களே,
இன்று விளையாட்டுக்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு துறையிலுமே பாரதத்தின் பெயர் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
புதிய பாரதம் பழைய பதிவுகளுக்கு முடிவு கட்ட, புதிய உறுதிப்பாடு, புதிய கற்பனை, புதிய உயரங்களைத் தொட நடைபோடத் தொடங்கி விட்டது.
நமது இளைஞர்களின் திறமைகளின் மீதும், உங்களுடைய வெற்றி மீதான தாகத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
உங்களுடைய மனவுறுதிப்பாடு மற்றும் மனோசக்தியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இன்றைய பாரதத்தில் பெரிய இலக்குகளை நிர்ணயிக்கவும் அதை சாதித்துக் காட்டவும் திறமை இருக்கிறது.
நம்மால் தகர்க்க முடியாத எந்தவொரு சாதனையும் கிடையாது.
இந்த ஆண்டு, நாம் புதிய பதிவுகளை ஏற்படுத்துவோம், நமக்காகவும் சரி, உலகிற்காகவும் சரி புதிய வரையறைகளை நிர்ணயிப்போம்.
நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும், ஏனென்றால் உங்களோடு தான் பாரதம் பயணிக்க வேண்டும்.
ஒன்று சேருங்கள், நீங்களும் வெல்லுங்கள், தேசத்தையும் வெற்றி பெறச் செய்யுங்கள்.
மீண்டும் ஒரு முறை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
உலகக் கோப்பை டி20 போட்டி வருகின்ற ஜூன் 2024இல் நடக்க உள்ளது. அனத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் இதற்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியும் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் ஒரு டி20 தொடரை விளையாடி உள்ளது.
மூன்று டி20 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களையும் இந்திய அணி வென்றது. முதல் ஆட்டம் மொஹாலியில் நடந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிறகு 158 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இந்திய அணி 17.3 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து ஆட்டத்தில் வெற்றி கண்டது. இரண்டாவது ஆட்டம் இந்தூரில் நடந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் ஆடி 20 ஓவரில் 172 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு இந்திய அணி 15.4 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 173 ரன் கள் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டு ஆட்டங்களிலும் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ஷிவம் டுபே ஆகியோரும் பவுலர் அக்சர் படேலும் சிறப்பாக ஆடினர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் டி20 ஆட்டங்களில் ஆட வந்துள்ள ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் சரியாக ஆடவில்லை. கோலியாவது கொஞ்சம் ரன் எடுத்தார். ஆனால் ரோஹித் ஷர்மா முதல் ஆட்டத்தில் பூஜ்யம் ரன்னுக்கு ‘ரன் அவுட்’ ஆனார்; இரண்டாவது ஆட்டத்தில் மறுபடியும் பூஜ்யம் ரன்னுக்கு பந்தை விக்கட்டின் மீது ஆடி போல்ட் ஆனார்.
ரோஹித் ஷர்மாவின் அதிரடி
ஆனால் நேற்று பெங்களூருவில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா ஆடிய ஆட்டமே வேறு. டாஸ் வென்று ஆஃப்கானிஸ்தான் அணி இந்திய அணியை பேட் செய்யச் சொன்னது. ரோஹித் ஷர்மாவும் ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ரோஹித் ஷர்மா ஒரு தடுமாற்றத்துடன் தொடங்கியதாகத்தான் தோன்றியது. அதற்கேற்றாற்போல மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஜெய்ஸ்வால் நாலு ரன்னிற்கு ஆட்டமிழந்தார்; அடுத்த பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார்; நாலாவது ஓவரின் கடைசிப் பந்தில் டுபே அவுட்டானார்; ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 22/4; ரோஹித் ஷர்மா 13 பந்துகள் விளையாடி 8 ரன் எடுத்திருந்தார்.
அடுத்ததாக விளையாட வந்தது ரிங்கு சிங். இவர் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடக்கூடியவர். மீதமுள்ள 14 ஓவர்களையும் நின்று ஆடுவாரா தெரியவில்லை. ரோஹித் ஷர்மாவும் ஃபார்மில் இல்லை; என்ன ஆகுமோ என அனைவரும் எண்ணிய நிலையில் ரோஹித் ஷர்மா இறுதி வரை ஆடி 69 பந்துகளில் 11 ஃபோர், 8 சிக்சர்களுடன் 121 ரன் அடித்தார். இது அவருக்கு டி20இல் ஐந்தாவது சதம். டி20இல் ஐந்து சதமடித்த ஒரே வீரர் இவர்தான். கடைசி 5 ஓவர்களில் ரோஹித்தும் ரிங்குவும் 103 ரன்கள் எடுத்தனர்.
ரோஹித் தன்னுடைய திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். ரிங்கு சிங், தான் ஒரு அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்ல, தேவைப்பட்டால் நிதானமாக ஆடி ரன் எடுப்பவர் என்பதை நிரூபித்தார். ஆட்டம் சூப்பர் ஓவர் வரை போனது. முதல் சூபர் ஓவரும் டை ஆனதால், இரண்டாவது சூப்பர் ஓவருக்குப் போனது. முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றது,
பொன்னியம்மன்மேட்டிலிருந்து மீண்டும் வட கிராண்ட் ட்ரங்க் ரோடு அல்லது சென்னை-கொல்கொத்தா சாலைக்கு வந்து நேராகப் பயணிக்க வேண்டும். 100 அடி சாலையைக் கடந்து, புழலேரியைக் கடந்து, கொசஸ்தலை ஆற்றின் மீதுள்ள காரனோடைப் பாலம் கடந்து பின்னர் ஜனப்பசத்திரம் கூட்டு ரோடு புள்ளியில் இடதுபுறம் சென்னை-திருப்பதி ரோடில் திரும்பி பயணிக்க வேண்டும்.
இந்தச் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் பயணித்தால் ஆரணி ஆற்றங்கரையில் பெரியபாளையம் வரும். பெரம்பூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் பெரியபாளையம் உள்ளது. காரில் சுமார் ஒரு மணி நேரப் பயணம். சுமார் 0720 மணிக்கு நாங்கள் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.
இந்தக் கோவிலில் எப்போதும் கூட்டமாக இருக்கும், அல்லது ரொம்பக் கூட்டமாக இருக்கும். பவானி அம்மனே இக்கோயிலின் பிரதான தெய்வம், வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள். பவானி அம்மனின் கதை கிருஷ்ணபரமாத்மாவின் பிறப்போடு தொடர்புடையது.
யதுவம்சத்துப் போசகுலத்தவனாகிய உட்க்கிரசேனனுக்கு குமாரனாகத் தோன்றிய கம்சனுக்கு தங்கையாகத் தோன்றிய தேவகியை கம்சன் வாசுதேவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஒரு நாள் மிக வினோதமாய் கம்சன் வாசுதேவரையும் தேவகியையும் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அந்தத் தேரை தானே செலுத்திச் சென்றான். அவ்வாறு செல்லுங்கால் தெய்வக் சக்தியால் அசரீரி ஒன்று உண்டாயிற்று அதாவது உன் தங்கை வயிற்றில் பிறக்கும் எட்டாவது சிசு உன்னை கொல்லும் என்றது.
இச்சொல்லைச் செவி மடுத்த கம்சன் தேரை நிறுத்தி தன் தங்கையைக் கொல்ல முற்பட்டான். அதைக் கண்டு வாசுதேவர் கம்சனை தடுக்க, கம்சன் மறுத்து தேவகியை கொன்றேத் தீருவேன் என்று நின்றபோது, வாசுதேவர் உன் தங்கை பெற்றெடுக்கும் சிசுக்கள் எல்லாவற்றையும் உன் முன் கொண்டு வந்து தருவேன் என்று உறுதிமொழி கூறினார். ஆனால் சினங்கொண்டு நின்ற கம்சன் வாசுதேவரின் உறுதிமொழியைச் செவிமடுக்காமல் வாசுதேவரையும், தேவகியையும் விலங்கிட்டு அழைத்துச் சென்று சிறையிலடைத்தான்.
சிறைக்குள் தேவகி பெற்றெடுத்த ஒவ்வொரு சிசுவையும் வாசுதேவர் தன் சொல் காக்கும் நிலையில் கம்சன் முன் கொண்டு வந்து வைப்பார். கம்சன் அந்த சிசுக்களை துன்புறுத்தி அழித்தான். எட்டாவது கருவை கம்சன் எதிர்பார்த்திருந்த பொழுது கண்ணன் பிறந்தான். முன்னர் வசுமதியென்றும், தாரா என்றும் இருந்தவள், அஸ்தியின் தேவியாகத் தோன்றிய இரப்பி அரசனது மந்திரியின் குமாரியாக விளங்கி நந்தகோபனை மணந்த யசோதை மாயையைப் பெண் மகளாகப் பெற்றெடுத்தாள். கண்ணன் நந்தகோபன் மனைக்குமாறி நந்தகோபன் மனையிலிருந்த மாயாதேவியை தேவகியிடம் சிசுவாக விடப்பட்டார்.
பிறந்தவுடன் கண்ணன் தமது பஞ்சாயுதத்துடன் வாசுதேவருக்கும், தேவகிக்கும் காட்சி தந்து, அவ்விருவரின் முற்பிறப்பின் சிறப்பை எடுத்துக் கூறித் தன்னை துஷ்டநிக்ரகம் செய்து நிஷ்ட பரிபாலனம் செய்ய நந்தகோபர் மனைவியான யசோதையிடம் கொண்டுபோய் விட்டு, அங்குள்ள மாயா தேவியை சிறைக்குக் கொண்டுவருமாறு ஸ்ரீகிருஷ்ணர் பணித்தார்.
உலகுய்யப் பிறந்த கண்ணன் உற்றமுறையில் யசோதையிடம் வளர்ந்து வருங்கால் தன்னைக் கொல்லும் நோக்குடன் பால்தர முற்பட்ட பூதகியையும் அவள் கணவன் பூதனையும் கொன்று, சகடா சூரனையும் திருவாவர்த்தனையும் கொன்றான். பெருந்தவ முனிவரான, சாக்கியரால் தமக்கு நாமகரணம் செய்யப் பெற்றும், ஆயர்பாடியிலுள்ள கோபியர்களின் நவநீதம் உண்டான். அங்கு விளையாடும் குழந்தைகளைபோல் கண்ணன் மண் உண்ண, அந்தக் காட்சியை யசோதை கண்டாள்.
யசோதை கண்ணனை அச்சுறுத்த, கண்ணன் தன் தாய்க்குத் தான் மண் சாப்பிடவில்லை என்பதைக் காட்டும் முறையில் தனது வாயைத் திறந்து தன்னுள் அடங்கிய அண்டங்கள் அனைத்தையும் அன்னை யசோதை அறியக்காட்டிநான். இதன் மூலம் கண்ணன் தானும் மாயையானவன்.
உத்தரப் பிரதேசம் அயோத்தியில் எழும் ராமர் கோவில், அதற்கான அடிக்கல் நாட்டும் முன்னரே ஒரு அற்புதத்தைக் காண்பித்து விட்டது. இன்னொரு அற்புதத்தையும் அது காண்பிக்கலாம்.
வருகிற ஜனவரி 22-ம் தேதி, புதிய அழகிய ராமர் கோவிலுக்கு அயோத்தியில் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது. பிரதமர் மோடி அதில் முன்னிலை வகிப்பார். அவரை வைத்துத்தான் அந்த ராமர் கோவில் ஏற்கனவே ஒரு அற்புதத்தை வெளிக்காட்டியது.
ராம ஜென்மபூமி ஹிந்துக்களின் கைகளுக்குத் திரும்ப வேண்டும், அங்கு புதிய ராமர் கோவில் கட்டப்பட வேண்டும், என்று கோரி ஒரு இயக்கம் பல வருடங்கள் நடந்தது. பல போராட்டங்கள் நடந்தன. ரத்தம் சிந்தியது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.
ராம ஜென்மபூமி விஷயத்தில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் சில வழக்குகள் தொடர்ந்தனர். இறுதியாக ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், நவம்பர் 2019-ல் ராம ஜென்மபூமி இயக்கத்தின் நோக்கத்திற்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதற்கு முன்னர் அதே வருடத்தில் நரேந்திர மோடி இரண்டாம் முறையாக இந்தியாவின் பிரதமரானார்.
சுப்ரீம் கோர்ட்டின் அந்தத் தீர்ப்பு வரும் சமயத்தில் மோடி பிரதமராக இல்லாவிட்டால், நீதிபதிகளே அப்படி ஒரு நியாயமான நல்ல தீர்ப்பை வழங்க முடிவது சந்தேகம் என்று பலரும் நினைப்பார்கள். அதற்குக் காரணங்கள் உண்டு.
ராம ஜென்மபூமி முழுமையாக ஹிந்துக்கள் வசம் வரவேண்டும், அந்த இடத்தில் புதிய ராமர் கோவில் வரட்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்னால், அதைச் சாக்காக வைத்து அரசியல் விஷமிகளும் சமூக விரோதிகளும் கைகோர்த்து நாட்டில் பெரிய மதக் கலவரத்தைத் தூண்டிவிடுவார்களா, அது நடந்தால் கலவரம் கட்டுக்கடங்காமல் பூதாகாரம் ஆகுமா என்ற கேள்விகள் யதார்த்தமானவை, ஆனால் அவற்றுக்கான பதிலை முன்கூட்டி ஊகிப்பது எளிதல்ல. அப்படி ஒரு மகா பாதகத்தை முயன்று பார்க்க நமது நாட்டில் சில அரசியல் சக்திகள், சில விஷம சக்திகள், தயங்காது. சில வெளிநாட்டு சக்திகளும் சேரலாம்.
அத்தகைய விபரீதம் திட்டமிட்டு நாட்டில் அங்கும் இங்குமாக நடத்தப்பட்டு மக்களும் பலவாறாகப் பாதிக்கப்பட்டால், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புதான் அதற்குக் காரணம் என்று நமது நீதித் துறையின் மீது பெரும் பழி சேர்கிற மாதிரி பேச்சுக்களும் சம்பவங்களும் அரங்கேறும்.
ராம ஜென்மபூமிக்குச் சாதகமான தீர்ப்பு வந்து அப்படியான கலவரம் நடந்தால், அதை உறுதியாக அடக்கி முறிக்கும் யோக்கியதையும் மன வலிமையும் கொண்ட ஒரு தலைவர் அப்போது பிரதமராக இருந்த மோடி மற்றும் அதிகாரத்தில் அவருக்குத் துணையாக இருந்த பலர் – அதில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உண்டு. இது அனைவருக்கும் தெரியும்.
அந்த சமயத்தில் மோடிக்குப் பதில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருவர் (மன்மோகன் சிங்கோ, ராகுல் காந்தியோ, மல்லிகார்ஜுன கார்கேயோ) அல்லது காங்கிரஸ் கூட்டணிக் கட்சியிலிருந்து ஒருவர் (தேவ கவுடா மாதிரி) நாட்டின் பிரதமராக இருந்தார் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இல்லை, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார் என்று யாரோ ஒருவர் பிரதமராக இருந்தார் என்றும் கவலையோடு நினைத்துப் பாருங்கள். அப்போது யார் என்ன காரணத்திற்காக என்ன திட்டமிடுவார், என்ன அசம்பாவிதம் எங்கு நடக்கும், அதைக் கட்டுப்படுத்தும் தெம்பும் திராணியும் அத்தகைய பிரதமருக்கு இருக்குமா என்பதெல்லாம் விடை தெரியாத கேள்விகள். இந்தச் சூழ்நிலையில், கோர்ட் சரியான நியாயத்தை வழங்கினாலும், பின்னர் வர வாய்ப்புள்ள கலவரத்தால் நீதித்துறைக்குப் பழியும் பொல்லாப்பும் வருமே என்ற கவலை நீதிபதிகளை வாட்டும். அந்தக் கவலை அவர்களின் தீர்ப்பில் எப்படி எதிரொலிக்கும் என்பதைக் கணிக்க முடியாது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரப் போகும் நாளில் மோடி பிரதமராக இருந்தார். ஆறு மாதங்கள் முன்பாக, அதற்கு ஐந்து வருடங்கள் முன்பாகவும், லோக் சபா தேர்தலில் நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தார். மக்கள் சக்தி, தேசப் பற்று, நேர்மைப் பண்பு, அசாத்தியத் தலைமை, நிர்வாகத் திறமை, சர்வதேச நற்பெயர், அனைத்தையும் கொண்டவர் அவர். தீர்ப்புக்கு மூன்று மாதம் முன்புதான், காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து கொடுத்த அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ஒரு தோட்டா சுடாமல், துளி ரத்தம் சொட்டாமல், சட்டரீதியாக முடக்கிக் காட்டினார். அதை உலகம் பார்த்தது.
ராம ஜென்மபூமி வழக்குகளில் சரியான இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டால் நாட்டில் அப்போது அமைதி காக்கப்படும் என்ற சூழ்நிலையைத் தனது பல குணாதிசயங்கள் மூலம் பிரதமர் மோடி உருவாக்கி இருந்தார். அதனால் அந்தத் தீர்ப்பு எளிதாக வரமுடிந்தது. தீர்ப்பு நாளில் மோடி பிரதமராக இல்லை என்றால், ராம ஜென்மபூமிக்குச் சாதகமான சரியான தீர்ப்பு வருவது மிகச் சந்தேகம் என்று நாம் நினைத்தால் தவறில்லை – நிச்சயம் வந்திருக்காது என்று ஒருவர் நினைத்தாலும் புரிந்து கொள்ளலாம்.
ராம ஜென்மபூமிப் பிரச்சனை சுமூகமாக முடிந்ததற்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒரு பக்கம் உதவியது. மறு பக்கத்தில் அதற்கான நீண்ட இயக்கம் உதவியது. அந்த மறு பக்கத்தின் முக்கியக் கடைசி அத்தியாயத்தை – அதாவது தீர்ப்பு சமயத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்புக்கு மத்திய அரசு நிச்சய உத்தரவாதமாக இருந்ததை – மோடி அமைதியாக எழுதினார். அந்த வகையில் மோடி ஒரு அற்புதம். அயோத்தியின் புதிய ராமர் கோவில் அந்த அற்புதத்தைக் காண்பிக்கிறது அல்லவா?
இன்னோரு அற்புதத்தையும் அயோத்தி ராமர் நமக்குக் காண்பிக்க வல்லவர். அதற்கான அடித்தளத்தை அவர் இட்டுவிட்டார். அதன்மேல் உறுதியாக, ஒரு அற்புதமாக, நிலைத்திருப்பது ஹிந்துக்களின் பொறுப்பு. அந்த அற்புதம் என்பது, ஹிந்துக்களின் மதம் சார்ந்த நியாயமான பெருமிதம்.
ராமரைப் போல அனைத்து மக்கள் மனதை வசீகரிக்கும் ஒருவர் இல்லை. பட்டாபிஷேகத்துக்கு அவர் தயாராகும் நேரத்தில் ‘காட்டுக்குப் போ’ என்று அப்பா அழுதவாறு சொன்னாலும், ‘சரி, போகிறேன்’ என்று சிரித்தவாறு கிளம்பியவர் ராமர். பெற்றவர் பேச்சை இப்படிக் கேட்கும் மகனான ராமரை, எல்லா அம்மா அப்பாக்களுக்கும் வெல்லமாகப் பிடிக்குமே? தனக்கு வந்த ராஜ்ஜியத்தைப் பதினாலு ஆண்டுகள் தம்பியிடம் கொடுத்த ராமரை இன்றைய தினம் எந்தச் சகோதரனுக்குப் பிடிக்காது? ஏக பத்தினி விரதனாக இருந்த ராமர் எல்லாப் பெண்களுக்கும் ஹீரோவாக இருப்பாரே? பாலம் அமைத்து இலங்கை சென்று ராவணனைப் போரிட்டு அழித்து சீதையை மீட்ட மாவீரன் ராமரின் பாராக்கிரமமும் எல்லாரையும் பரவசப்படுத்துமே?
ஆண் பெண் என்று எல்லா ஹிந்துக்களையும் கவர்கிறவர் ராமர். அவருக்காக மீண்டும் அயோத்தியில் எழும் பிரும்மாண்டமான கலைநயம் மிகுந்த கோவில், ஹிந்துக்கள் அனைவரையும் அயோத்திக்கு ஈர்க்கிறது. அதோடு, அவர்கள் அனேகரிடம் தற்போது இல்லாத ஒன்று வளரவும் உறுதிப்படவும் வழி வகுக்கிறது அப்படி ஹிந்துக்களிடம் வளர்ந்து உறுதிப்பட வேண்டியது, “இது என் மதம். இது எனக்குப் பெருமிதம்” என்கிற உணர்வு. அந்த உணர்வே ஹிந்துக்களை இணைத்துக் காக்கும் அற்புதம். ராமரின் உதவிக் கரத்தைப் பற்றி ஒன்றுபட்டு உயர்வது இனி ஹிந்துக்கள் கையில்.
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
email - veera.rvr@gmail.com
Blog: https://rvr-india.blogspot.com
பல சந்யாசி ஒருவரை நிருபர் ஒருவர் பேட்டி காணும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஹிந்தியில் நிருபர் கேள்விகள் கேட்க அதற்கு சிறுவரான அந்த பால சன்யாசி தெளிவாக பதில் அளிக்கிறார். அந்த வீடியோ பதிவின் தமிழாக்கம்….(அவர் குழந்தை அல்ல.. அவர் பால சன்யாசி – எனவே மகாராஜ் என்று அழைக்கப்படுகிறார். நிருபர் வேண்டுமென்றே கேள்விகள் கேட்கிறார்.)
நிருபர்: மொத்த நிகழ்வும் மோடியால் கடத்தப்பட்டு விட்டதாக மக்கள் கூறுகின்றனர்.
மகாராஜ்: ஒவ்வொரு கல்லிலும் பகவான் இருக்கிறார்.. ராமரை இதயத்தில் கடத்தினார் மோடி. உங்கள் இதயத்தில் ராம்ஜியையும் நீங்கள் கடத்தலாம்
நிருபர்: நீ சரியாக சொன்னாய். ஆனால் இதைச் சொல்பவர்களும் பூஜை செய்கிறார்கள் ஆனால் வெளிக் காட்டுவதில்லை: பாஜக தர்மம் செய்வதாக பறைசாற்றிக் கொள்கிறது.
மகாராஜ்: அட்லீஸ்ட் ஆடம்பரம் செய்கிறார்கள்.. தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புகிறார்கள். மேலும் சிலர் தம்பட்டம் அடிக்காமல் இந்துக்களை தூங்க வைக்கிறார்கள். ஆரத்தி செய்யும் போது மணி அடிக்கவில்லை என்றால், ஆரத்தி செய்வது எப்படி தெரியும்?
நிருபர்: மோடி/யோகி மக்களுக்கு காட்ட எதுவும் செய்யவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். 2024 தேர்தல் அவர்களுக்கு கடினமானது. எனவே 2024ல் மோடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மந்திர் கொடுத்தார்கள்.
மகாராஜ்: முதலில் – முந்தைய தேர்தல்களிலும் மந்திர் இல்லை.. இன்னும் மோடி ஜி வென்றார்.
நிருபர்: மந்திர் கட்டுவோம் என்று கூறுவார்கள்.
மகாராஜ்: முன்பெல்லாம் மந்திர் இல்லை.. சரி.. எதையாவது சொல்லி மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்களா? மக்கள் இப்போது விழித்துக் கொண்டுள்ளனர். அவர் பகவான் என்றும் கலியுகத்தின் ராஜா என்றும் மக்கள் நம்புகிறார்கள்
நிருபர்: கலியுக ராஜா யார்?
மகாராஜ்: ஹனுமான் ஜி. நான் ஹனுமங்கரியைச் சேர்ந்தவன். கலியுகத்தின் ராஜா ஹனுமான் ஜி. அதே வழியில் – இந்தப் பிரதேசத்தின் ராஜா முதல்வர் யோகி ஜியா? ஆம்.. பிரதமர் ராம் ஜி என்று நம்பப்படுகிறது – மோடி ஜி ராம் ஜி போன்றவர்.
நிருபர்: மோடி ஏதாவது செய்தாரா?
மகாராஜ்: அவர் எதுவும் செய்யவில்லை என்றால் – பகவானின் ஆசீர்வாதம் அவருக்கு எப்படி வரும்?
நிருபர்: அவர் என்ன செய்திருக்கிறார் – மந்திரைத் தவிர
மகாராஜ்: மந்திரை மறந்துவிடு.. அவன் செய்ததை எல்லாம் சரியாகச் செய்தார். கொரோனாவை எடுத்துக் கொள்ளுங்கள்.. எத்தனையோ பேர் இறந்து கொண்டிருந்தார்கள்.. இன்னும் மோடி ஜியால்தான் நாம் காப்பாற்றப்பட்டோம்.
நிருபர்: தயவு செய்து ஒன்று சொல்லுங்கள். இவ்வளவு நாள் வழக்கு நடந்து கொண்டிருந்தது.. நான் ஒரு சாதுவை சந்தித்த போது, மோடியை ஏன் விழாவிற்கு அழைக்கிறார்கள் என்றும் மோடியை பிராண பிரதிஷ்டை செய்ய விடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.. இதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?
மகாராஜ்: அந்த சாது தன் இடத்தை விட்டு வெளியே வந்து கோவில் கட்டியிருக்க வேண்டும். ஷிலான்யாஸ் பண்ணியிருக்காங்க.. ஷிலான்யாஸ் பண்ணினவர் தான் பூஜையில் அமர்வார்.
நிருபர்: மக்கள் பணம் கொடுத்தார்கள்..அவர்கள் ஏன் கோயில் திறப்பில் அமரவேண்டும்?
மகாராஜ்: எந்த பொது மக்கள்.? அப்படி இருந்திருந்தால் இங்கு பாதி பேர் சென்று திறப்பு விழா செய்திருப்பார்கள். எதை ஒருவர் துவக்குவார்.. அதனால் தான் ஒருவர் மட்டுமே அதை செய்ய வேண்டும். ஒருவேளை சாதுவுக்கு அழைப்பு வரவில்லை. எனவே அவர் மீடியாக்களிடம் பேசுவார், அவரும் அழைக்கப்படுவார்.
நிருபர்: அழைப்பிதழ் கிடைத்ததா?
மகாராஜ்: ஆம் எனக்கு அழைப்பிதழ் கிடைத்தது. கிடைக்காவிட்டாலும், இங்கிருந்தே ராம்ஜியை தரிசனம் செய்திருப்பேன். மந்திர் கட்டப்படுவதில் மகிழ்ச்சி.. அதைவிட முக்கியமானது. மேலும் வரும் 22ம் தேதி வீட்டில் தீபாவளியை கொண்டாடுங்கள் என்று மோடி கூறியுள்ளார். நாம் அங்கு சென்று தீபாவளி கொண்டாட வேண்டும் என்று அவசியமில்லை. ராமபகவான் எங்கும் இருக்கிறார்
நிருபர்: ராகுல் ஜிக்கு அழைப்பு வரவில்லை.
மகாராஜ்: அவர் பெயரை ஏன் எடுக்கிறீர்கள். ராமருக்கு சொந்தமில்லாதவன் யாருக்கும் சொந்தமில்லை. அவர் பெயரைச் சொன்னால் என் மூளை கெட்டுவிடும்.
நிருபர்: அவர் (ராகுல்) சிவபக்தர், இன்னும் அவர் அழைக்கப்படவில்லை
மகாராஜ்:அவரை உஜ்ஜயினியில் அழைத்தார்கள்.. ஷிவ்ஜியின் விழா நடந்தது.. அங்கே போயிருக்கலாம். இங்கு ராம பகவானுக்கு விழா
மகாராஜ் : ஏதாவது (பிரச்சனை) நடந்தால் அவர் இத்தாலிக்கோ அல்லது ஜப்பானுக்கோ ஓடிவிடுகிறார் . ஏன் இப்போது போகவில்லை.. அவரை இப்போதே (இந்த நாடுகளுக்கு) விடுங்கள். அவர் பாரத் ஜோடோ யாத்ராவில் இருக்கக்கூடாது.. இத்தாலி ஜோடோ யாத்ராவில் இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு ஓடிக்கொண்டே இருப்பார்..நம் நாட்டில் எப்பொழுது தீவிரமான பிரச்சனைகள் வந்தாலும் இத்தாலிக்கு ஓடிவிடுவார்.
நிருபர்: மகராஜ்.. தயவு செய்து ஒன்று சொல்லுங்கள்.. தலித்துகளும் சிறுபான்மையினரும் அடக்கப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. தொடர்ந்து அவர்கள் தாக்கப்பட்டு, மோடி சர்வாதிகாரி/பாசிஸ்ட் ஆகிவிட்டார், மோடி ஜனநாயகத்தை முடிக்க விரும்புகிறார்.
மகாராஜ்: எந்த தலித் அச்சுறுத்தலுக்கு உள்ளானார், எப்படி?
நிருபர்: பிடிஏ அச்சுறுத்தலில் இருப்பதாக அகிலேஷ் கூறுகிறார்
மகாராஜ்: எந்த அரசால் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன என்று சொல்லுங்கள்.. தலித்துகளுக்கு தினமும் தானியங்கள் கிடைக்கின்றன.. ஏழைகள் சரியாக உணவை உண்கிறார்கள்.. சொல்லப்போனால் இப்போது ஏழைகள் இல்லை – அனைவரும் ராம பக்தர்களே..
நிருபர்: ஒவைசி சொல்கிறார்..
மகாராஜ்: (குறுக்கிட்டு கூறுகிறார்) – ஒவைசி ஒன்றும் இல்லை.. அவர் ஹைலைட் பெற விரும்புகிறார்
நிருபர்: பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி கோவில் கட்டினார் மோடி..பாபர் மசூதியை நினைவுகூர சொல்லுவாரா?
மகாராஜ்: மக்கள் பாபரியை நினைவு கூர்ந்தனர்.. அதனால்தான் மந்திர் கட்டப்பட்டது. அது ராமர் கோவிலாக இருந்தது.. அது ராமர் கோவிலாக உள்ளது, அது ராமர் கோவிலாகவே இருக்கும்
பொங்கல் பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் பலரும் நாளை முதல் சென்னை திரும்புவார்கள். அந்த நிலையில் பொத்தேரி ரயில் நிலையத்தில் நாளை முதல் கூட்டம் நிரம்பி வழியப்போகிறது என்பது எதிர்பார்க்கப்படும் செய்தி.
பொங்கல் முடிந்து நாளை முதல் பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி வருவோரை, ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7 மணிக்கு மேல் வந்தால் விடமாட்டார்கள்.. அதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும்.
#image_title
இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வருவோர். கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக 1.5 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும். அவ்வளவு தூரம் பைகளை வைத்துக் கொண்டு நடக்கவோ, ஆட்டோக்களிலோ பயணிக்க முடியாது..
எனவே சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரி ரயில் நிலைய பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள். பொத்தேரி ரயில் நிலையம் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு இறங்கி அப்படியே உள்ளே நுழைந்து எளிதாக புறநகர் ரயில்களில் ஏறி எழும்பூர், திநகர், தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, கோடாம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னையின் எந்த பகுதிக்கும் மின்சார ரயிலில் செல்ல முடியும்.
சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியதிருக்கும். அதனால் அரசு பேருந்து ஓட்டுநர்களுமே, ரயிலில் செல்ல விரும்புவோரின் வசதிக்காக பெத்தேரியில் இறக்கிவிடுகிறார்கள். எனவே மின்சார ரயிலில் போக பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கிவிடுங்கள்.. எளிதாக இருக்கும்..
முன்னர் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பேருந்துகள் சென்ற போது சென்னை நகரத்துக்குள் பயணிக்க வேண்டியவர்கள் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை ஒட்டி உள்ள ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள் மூலம் சென்றார்கள். இப்போது கிளாம்பாக்கம், கோயம்பேட்டின் இடத்தைப் பிடித்துக் கொண்டதால், பெருங்களத்தூரின் இடத்தை பொத்தேரி பிடித்துக் கொண்டுள்ளது. பயணிகளுக்கு வசதியாக ஜிஎஸ்டி சாலையை ஒட்டி நடக்க வேண்டிய தேவை எதுவும் இன்றி அருகிலேயே அமைந்துள்ள பொத்தேரி ரயில் நிலையம், தொலைதூரத்தில் இருந்து வருபவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை தற்காலிகமாக ஏற்படுத்திக் கொடுக்கும்.
அயோத்தியில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பிராணப்ரதிஷ்டை (கும்பாபிஷேகம்) குறித்த பக்தர்களின் எண்ணங்களை சின்னச் சின்ன வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்துமாறு உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.
அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.22ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று ராமரின் குழந்தை வடிவிலான விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி கும்பாபிஷேகத்தில் அமர்ந்து, ஜன.22ல் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, பக்தர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் சிறிய வீடியோக்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை:
ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ ராமர் தனது உரிமையான வசிப்பிடத்திற்குத் திரும்புவது பிரபஞ்சத்தை இணையற்ற உணர்ச்சிகளால் நிரப்புகிறது. அவரது வரவேற்பின் மகத்துவத்தை அதிகரிக்க, உலகெங்கிலும் உள்ள அனைத்து ராமபக்தர்களும் இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றிய தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு சிறிய வீடியோ மூலம் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வீடியோவை அனைத்து சமூக ஊடக தளங்களிலும் #ShriRamHomecoming என்ற ஹேஸ்டேக் உடன் தங்களது முழுப்பெயர், இருப்பிடம் மற்றும் தங்களைப் பற்றிய தனிப்பட்ட குறிப்புடன் சுருக்கமாகக் குறிப்பிட்டு பதிவேற்றலாம்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 71 ஏக்கரில் அமையும் இந்த ஆலயம் நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
3 அடுக்குகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக 3 சிற்பிகள் குழந்தை ராமர் சிலையை வடிவமைத்துள்ளனர்.
51 இஞ்ச் உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை கருவறையில் வருகிற 22-ந்தேதி மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கான சிறப்பு பூஜைகளை செய்ய உள்ளார். விழாவில் சுமார் 7 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் குழந்தை ராமர் சிலைக்காக 3 சிற்பிகள் செய்த சிலைகளில் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான விழா இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகமவிதிகள்படி தொடங்கியது. இதையொட்டி அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு ஐதீகப்படி பூஜைகள் நடைபெறும்.
ராமர் கோவில் திறப்பு விழா: பிரமாண்ட ராமர் கோவில் பிராண பிரதிஷ்தா (கும்பாபிஷேக )விழாவிற்கான ஏற்பாடுகள் செவ்வாய்கிழமை இன்று தொடங்கி ஜனவரி 22 வரை நடைபெறுகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22 அன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் திறக்கப்படும். இவ்விழாவில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாதுக்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 7,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு சடங்குகளுடன் ஏழு நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அனுபம் கெர், அருண் கோவில், கங்கனா ரணாவத், ரன்பீர் கபூர், ஆலியா பட், முகேஷ் அம்பானி, கெளதம் அதானி சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி உள்ளிட்ட பிரபலங்களும் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகளும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று ராமர் கோவில் கமிட்டி தெரிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு என்னென்ன பூஜைகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ராம் மந்திர் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய நிகழ்வுகள்….
ஜனவரி 16: பிராயச்சித்த பூஜை மற்றும் கர்மாகுதி பூஜை
ஜனவரி 17: மூர்த்தி பரிசார பிரவேஷ்
ஜனவரி 18 (காலை): தீர்த்த பூஜன், ஜல யாத்ரா மற்றும் கந்தாதிவாஸம்
ஜனவரி 18 (மாலை): ஔஷாதிவாஸம், கேசராதிவாஸம், கந்தாதிவாஸம்
ஜனவரி 19 (மாலை): தான்யாதிவாஸம்
ஜனவரி 20 (காலை): புஷ்பாதிவாஸம்
ஜனவரி 20 (மாலை): ஷர்கராதிவாஸம் , பலாதிவாஸம்
ஜனவரி 21 (காலை): மத்யாதிவாஸம்
ஜனவரி 22 (மாலை): ஷையாதிவாஸம்
பிராண பிரதிஷ்டா விழா
பிராண பிரதிஷ்டா விழா பொதுவாக ஏழு அதிவாசங்களை உள்ளடக்கியது, இருப்பினும் குறைந்தபட்சம் மூன்று அதிவாசங்கள் அதாவது தான்யாதிவாஸம், ஜலாதிவாஸம், ஸயனாதிவாஸம் பொதுவாக பின்பற்றப்படுகின்றன. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் சடங்குகளை மொத்தம் 121 ஆசார்யர்கள் செய்வார்கள்.
கணேஷ்வர் சாஸ்திரி திராவிட் அனுஷ்டானத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டு, ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்குவார். முதன்மை ஆசார்யரின் பாத்திரத்தை காசியின் லக்ஷ்மி காந்த் தீட்சித் ஏற்றுக்கொள்வார்.
பிராண பிரதிஷ்டா விழா மற்றும் ராம் லல்லா கும்பாபிஷேகம் மதியம் 12:30 மணி முதல் மதியம் 01:00 மணி வரை நடைபெற உள்ளது.
இதன்படி, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 7 நாள் பூஜையின் தொடக்க நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு கருவறையில் பூஜைகள் நடந்தன. அங்கு முதல் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
இதையடுத்து புனித நீராடல் மேற்கொள்ளப்படும். இதற்காக அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பசுக்கள் தானம் செய்யப்பட்டு பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து விஷ்ணு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு பிராயசித்த பூஜைகள் முறைப்படி நடத்தப்பட்டது.
நாளை (புதன்கிழமை) குழந்தை ராமர் சிலை அயோத்திக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதே சமயத்தில் சரயு நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலசங்களில் புனித நீர் எடுத்துக்கொண்டு அயோத்தி ஆலயத்துக்கு வருவார்கள். அந்த புனித நீர் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பயன்படுத்தப்படும்.
18-ந்தேதி (வியாழக்கிழமை) யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. விநாயகர் பூஜையுடன் யாகசாலைகளில் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜைகள் செய்யப்படும். வருண பூஜை, வாஸ்து பூஜைகள் அடுத்தடுத்து நடைபெறும்.
அதற்கு அடுத்த நாள் (19-ந்தேதி) யாக சாலை பூஜைகள் தொடர்ந்து நடத்தப்படும். நவக்கிரக பூஜைகள் ஆகமவிதிகளின்படி மேற்கொள்ளப்படும். இதில் ஆயிரக்கணக்கான வேதவிற்பன்னர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக அயோத்தி ராமர் கோவில் அருகே மிக பிரமாண்டமாக குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
20-ந்தேதி (சனிக்கிழமை) அயோத்தி ராமர் கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். சரயு நதியில் இருந்து எடுத்து வரப்படும் புனித நீரால் ஆலயம் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.
அதன் பிறகு வாஸ்து சாந்தி பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை (21-ந்தேதி) முழுக்க குழந்தை ராமர் சிலை 125 வகை அபிஷேகங்களால் புனித நீராடல் செய்யப்படும்.
இதையடுத்து அயோத்தி ஆலயத்தில் முக்கிய நிகழ்வான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும். அன்று மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் குழந்தை ராமர் சிலையை ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்வார்கள். இந்த பூஜையை வாரணாசியில் இருந்து வரும் வேதவிற்பன்னர்கள் கண்காணிப்பார்கள். குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும்போது 121 ஆச்சார்யார்கள் வேத மந்திரங்களை முழங்குவார்கள்.
பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலைக்கு முக்கிய பூஜைகள் செய்வார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உடனிருப்பார்கள்.
ராம் லல்லா சிலை பற்றி
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய ராம் லல்லா சிலை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக வழிபடப்படும் தற்போதைய சிலை, புதிய கோவிலின் கருவறையில் வைக்கப்படும்.
கோவில் எப்போது பக்தர்களுக்காக திறக்கப்படும்?
ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கோயில் பொதுமக்களுக்காக மூடப்பட்டிருக்கும். ஜனவரி 23 அன்று பக்தர்களுக்காக திறக்கப்படும்.