Home Blog Page 248

கும்பாபிஷேகம்: ராமஜன்ம பூமி தீர்த்தக்ஷேத்ர அமைப்பின் வேண்டுகோள் என்ன தெரியுமா!?

ram invitations - 2026
#image_title

வரும் ஜன.22 அன்று அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் எனப்படும் பிராணப்பிரதிஷ்டை விழா நடைபெறவுள்ளது. 500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் பல கடந்து தற்போது அயோத்தியில் ஸ்ரீராமரின் அவதாரத் தலத்தில் ராமர் கோயில் எழும்பி கும்பாபிஷேகம் காணவுள்ளது. இதை அடுத்து ஸ்ரீராம பக்தர்களுக்கு அழைப்புகள் அனுப்பப் பட்டு வருகின்றன.

இதில், ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அமைப்பு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதாவது, ஆலய பிராணப்ரதிஷ்டை நிகழ்வு முடிந்த பின்னர், தங்களுக்கு வசதிப்படும் ஏதாவது ஒரு நாளில் ஆலயத்துக்கு வருகை தாருங்கள் என்பதுதான் அந்த அழைப்பு! இந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள விவரங்கள்…

ஸ்ரீராம ஜென்மபூமி அழைப்பிதழ்

ஆன்மீக அன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள்…. தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகளே…..

வரும் சோபகிருது ஆண்டு தை மாதம் 8ம் தேதி (22-1-2025) திங்கட்கிழமை மதியம் 12:20 மணிக்கு சுக்லபட்ச துவாதசி மிருகசீரிஷ் நட்சத்திர சுபயோக சுபதினத்தில் பிரபு ஸ்ரீராமனின் குழந்தை வடிவிலான விக்ரஹம் ஸ்ரீராம ஜன்மபூமியில் புதிதாக கட்டப்பட்ட ஆலயத்தில் ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனால் அயோத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

நிகழ்ச்சிகள் கோவிலை மையமாக வைத்து அமைய வேண்டும்.

தாங்களும் ப்ராண பிரதிஷ்டை அறிவிக்கப்பட்ட புனித நாளில் தங்கள் பகுதிகளில் உள்ள ஆலயங்களின் அருகில் உள்ள பக்தர்களை அழைத்து ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம மந்திரத்தை குறைந்தது 108 முறை சொல்வதோடு பஜனை, கீர்த்தனைகள், மேளதாளங்கள், சங்கொலி, மணியோசை தீபாராதனை செய்து ப்ரசாதம் வழங்கவும்.

மேலும் ஸ்ரீராம ஜென்மபூமி ப்ராண பிரதிஷ்டை வைபவம் நேரடியாக அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப் பட உள்ளது. நம் பகுதியில் தொலைக்காட்சி அல்லது எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்து ஆலய நிகழ்வுகளை சமுதாயத்திற்கு காண்பிக்கவும்.

ப்ராண பிரதிஷ்டை நாளன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக நமது வீடுகளில் திருக்கார்த்திகை போன்று தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும்.

ப்ராண பிரதிஷ்டை நிறைவுற்ற பின்பு தங்களுக்கு வசதியான நாளில் அயோத்திக்கு வருகை புரிந்து குழந்தை வடிவிலான ஸ்ரீராமபிரானை வழிபட்டு அனுக்ரஹம் பெற வேண்டுகிறோம்.

அன்புடன்
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ்ட், அயோத்தி


500x300 1753284 ayodhya ram temple - 2026
  1. ஆலயம் பாரம்பர்யமிக்க அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
  2. ஆலய நீளம் (கிழக்கு மேற்காக) 390 அடி. அகலம் 250 அடி உயரம் 161 அடி.
  3. மூன்று தளங்களாக ஆலயம் அமைந்துள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரமுடையது. மொத்தம் 392 தூண்கள், 44 வாசல்கள்.
  4. தரை தளமான கர்ப்பக்ரஹத்தில் பிரபு ஸ்ரீராமபிரானின் குழந்தை வடிவமும், முதல் தளத்தில் ஸ்ரீராமபிரானின் பட்டாபிஷேக மண்டபமும் அமைய உள்ளது.
  5. மொத்தம் 5 மண்டபங்கள். நாட்டிய மண்டபம், ரங்க மண்டபம். தரிசன மண்டபம், ப்ரார்த்தனா மண்டபம், கீர்த்தனை மண்டபம்.
  6. தூண்களில் இறைவன் மற்றும் நாட்டிய மாந்தர்களின் சிலைகள்,
  7. நுழைவுவாயில் முன்பு 32 படிகள் (உயரம் 16.5 அடி ஏறி பிரதான நுழைவாயிலை அடையலாம்.
  8. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ரேம்ப் மற்றும் லிப்ட் வசதிகள்.
  9. நான்கு பக்கங்களிலும் கோட்டைச் சுவர்கள் 732 மீ. நீளம், 4.25 மீ. அகலம், கோட்டையின் நான்கு மூலைகளில் முறையே சூரியன். சிவன். கணபதி, தேவி பகவதி ஆகியோருக்கான ஆலயங்கள். கோட்டையின் தெற்கு முகமாக ஹனுமானும், வடக்கு முகத்தில் அன்னபூரணி ஆலயங்கள்.
  10. ஆலயத்தின் தென்பகுதியில் பழமையான சீதை கிணறு உள்ளது.
  11. கோட்டையின் வெளியே தென்திசையில் வால்மீகி மகரிஷி, வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்ர மகரிஷி. அகஸ்திய மகரிஷி, குகன், சபரிமாதா மற்றும் தேவி அகல்யாவிற்கான ஆலயங்கள்.
  12. தென்மேற்கில் குபேரன் குடிலில் உள்ள சிவாலய புனர்பிரதிஷ்டை மற்றும் ராமபக்த ஜடாயுவின் பிரதிஷ்டைகள்.

பிரதமர் மோடி வரவுள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் ஆளுநர் ரவி!

rn ravi in thiruppullani - 2026
#image_title

பிரதமர் மோடி வரும் 21ம் தேதி வரவுள்ள நிலையில், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமேஸ்வரத்தில் ஆய்வு செய்து சுவாமி தரிசனம் செய்தார்.

இன்று அவருடைய முதல் நிகழ்ச்சியாக, காவி நாயகன் வள்ளுவருக்கு மரியாதை செய்தார். அதன் பின் திருப்புல்லாணியில் தர்ப்பசயன ராமர், ஆதிஜகந்நாதப் பெருமாள் தரிசனம் செய்தார். அதையடுத்து ராமேஸ்வரம் சென்று, ஸ்ரீ ராமநாதசுவாமி தரிசனம் செய்தார்,

பிரதமர் மோதி சொன்னதையடுத்து, ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் பிராகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் ஆளுநரும் அவரது துணைவியாரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அதை அடுத்து, ஸ்வரத்தில் உள்ள மனவள சவால்களை எதிர்கொள்வோருக்கான மனோலயா இல்லத்தில் இருப்போருக்கு உணவு பரிமாறினார்! இந்நிகழ்ச்சிகள் குறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திகள்…

ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், திருவள்ளுவர் தினத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் மற்றும் லேடி கவர்னர் தரிசனம் மற்றும் பூஜை செய்து, தமிழக சகோதர சகோதரிகளின் நலனுக்காகவும் பாரத மாதாவின் மேன்மைக்காகவும் வேண்டிக் கொண்டனர்.

ஆளுநர் திரு. ரவி மற்றும் லேடி கவர்னர் திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இங்குள்ள புனித சிவலிங்கத்தை பிரபு ஸ்ரீ ராமர் நிறுவி வழிபட்டார். ஆலய தூய்மைப் பணியில் தாமாக முன்வந்து பங்கேற்ற உள்ளூர் மக்களின் உற்சாகத்தைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. #ஒரேபாரதம்உன்னதபாரதம் என்ற நோக்கத்துடன் நாம் குதூகலிப்போம்!

“ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை மற்றும் தர்பசயனத்தில் பிரபு ஸ்ரீ ராமர் இருக்கும் ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். இங்கு தர்பையில் சயன கோலத்தில் ஓய்வெடுத்தபோதுதான் பிரபு ஸ்ரீ ராமர், இலங்கைக்கு பாலத்தை கட்ட முடிவெடுத்தார். இப்பகுதி முழுவதும் ஸ்ரீ ராமரின் புராண கதைகளால் நிரம்பியுள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான பிரபு ஸ்ரீராமர் கோயிலின் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் உள்ளூர் மக்களிடையே முழு அளவிலான உற்சாகம் நிலவுகிறது. நமது பன்முக மக்கள் மற்றும் இடங்களுக்கு மத்தியில் ஒரே குடும்பம் என்ற தீவிர உணர்ச்சிப் பிணைப்பு, பாரதத்தின் எண்ணத்தையும் அடையாளத்தையும் உருவாக்கி நிலைநிறுத்துகிறது.” – ஆளுநர் ரவி

ஆளுநர் திரு. ரவி மற்றும் லேடி கவர்னர் திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தைச் சுற்றி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இங்குள்ள புனித சிவலிங்கத்தை பிரபு ஸ்ரீ ராமர் நிறுவி வழிபட்டார். ஆலய தூய்மைப் பணியில் தாமாக முன்வந்து பங்கேற்ற உள்ளூர் மக்களின் உற்சாகத்தைக் கண்டு நெஞ்சம் நெகிழ்கிறது. #ஒரேபாரதம்உன்னதபாரதம் என்ற நோக்கத்துடன் நாம் குதூகலிப்போம்!

ஆளுநர் ரவி அவர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள மனவள சவால்களை எதிர்கொள்வோருக்கான மனோலயா இல்லத்தை பார்வையிட்டார். இங்கிருப்பவர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்தவர்கள். மனநல சவால்களை எதிர்கொள்வோருக்கு தங்களிடம் உள்ள சொற்ப வளங்களைக் கொண்டு ‘மனோலயா’ அனைத்து நெருங்கிய பராமரிப்பை வழங்கி வருவது, நமது கலாசாரத்தில் இயற்கையாக உள்ள சேவை மனோபாவத்தை பிரதிபலிக்கிறது. இதன் அங்கத்தினர் அனைவருக்கும் நமது வணக்கங்களும் நல்வாழ்த்துகளும்.

ராம பக்தர்களுக்கு… அயோத்தி ஸ்ரீராமர் கோயில் ‘ப்ராண ப்ரதிஷ்டா’ அழைப்பிதழ்!

ramjinvitations - 2026
#image_title

“உங்களுக்கு அழைப்பிதழ் வந்ததா?” என்று ஒருவர் கேட்டபோது, “நான் ஊரில் இருந்திருந்தால் முதல் ஆளாக கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள்…” என்றேன்.

“அட… உங்களை அழைப்பதற்கு இல்ல… மற்றவர்களை அழைப்பதற்கு உங்களுக்கு வந்து சேர்ந்ததா? நீங்க அழைப்பிதழ் பெற வேண்டியவரா என்ன? அழைப்பு கொடுக்க வேண்டியவராயிற்றே…” சொல்லிவிட்டு அழைப்பிதழ்கள், ராமர் கோயில் படம், பூஜிக்கப்பட்ட அட்சதை பாக்கெட் கொஞ்சம் அனுப்பி வைத்தார்.

பன்னிரெண்டு வயதில் வீட்டில் ஒரு மரப்பெட்டி தயார் செய்து, அதை கோயில் கருவறை முகப்பு போல் வெட்டி ஒட்டி கதவு திரைத்துணி எல்லாம் போட்டு, நவராத்திரி கொலுவில் வைக்க வேண்டிய ராமர் சீதை லட்சுமணர் அனுமன் பொம்மைகளை வைத்து, அதன் கீழ் ’ஸ்ரீராம்’ என எழுதப்பட்ட 12 செங்கற்களை வைத்து நாற்பது நாள் பூஜை செய்து … வண்டியில் ஏற்றி பூப்போட்டு அனுப்பி வைத்த மனமெல்லாம் நிறைந்த கோயில், இதோ முப்பத்தைந்தாண்டு கால ஏக்கத்தினூடே எழும்பியிருக்கிறது. அதில் அன்று அடியேன் பூஜித்த மனபாவனையில் இன்று தான் அவதரித்த மண்ணில் ராமன் கோயில் கொள்ளப் போகிறான்.

நாம் மனக்கோயிலைக் கட்டி பூஜிக்கின்ற, பூசலார் நாயனாரைப் போன்ற எளிய பக்தர்கள்தான்! இப்போது நம்மிராமபிரான் மதிற்கோயிலில் குடிகொள்ளப் புகும் பிரதிஷ்டை நிகழ்வுக்கான அழைப்பிதழை மற்றவர்களுக்கும் கொடுத்து, ராமகாரியத்தில் நம்மையும் இணைத்துக் கொள்ள பெருவிருப்பம் கொண்டான் போலும்! அவன் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறேன்!

500x300 1753284 ayodhya ram temple - 2026

அயோத்தி ஸ்ரீராமர் ஆலய பிராணப்ரதிஷ்டைக்கான அழைப்பிதழ்களை ராமபக்தர்களுக்குக் கொடுத்து வருகிறேன்.

காட்டாங்குளத்தூர் பகுதியில் வசிக்கும் சங்கரகிருஷ்ண ச்ரௌதிகள் (கண்ணன் சாஸ்திரிகள்) சாமவேத உபாத்யாயர். ஆய்க்குடிதான் சொந்த ஊர். இங்கே வந்து வசிக்கிறார். இப்போது பார்வைக் குறைபாடு. வாசலில் இருந்து பெயரைச் சொன்னதும் சந்தோஷம் பொங்க வாங்கோ வாங்கோ என்றார். அவரிடம், அயோத்தி ராமர் கோயில் ஆலய அழைப்பும் அட்சதையும் கொண்டு வந்திருக்கிறேன் என்றதும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பிஜேபி., அத்வானி., மோடி… இல்லாவிட்டால் கோயில் சாத்யமில்லை… அந்த சில நிமிட உணர்ச்சிப் பேச்சில் அடிக்கடி அவர் சொன்ன வார்த்தைகள். அட்சதையை வாங்கித் தமக்கே சேர்த்துக் கொண்டார். நானும் உடன் வந்த மருமான் முகுந்தனும் நமஸ்காரம் செய்தபோது, ஆசீர்வாத மந்திரம் சொல்லி அட்சதையை சேர்த்தார். கும்பாபிஷேகத்தன்று அயோத்தி ராமனை மனசால் தியானிப்பேன், இங்கிருந்தபடியே வேத மந்திரங்களைச் சொல்வேன் என்று குதூகலித்தார்.

இன்னொருவர் அருகே வசிக்கும் ரகுநாதன் ஸ்வாமி. நெய்வேலியில் ராஜாஜி அமைப்பு வைத்து நடத்தியவர். வைணவ சம்ப்ரதாய நூல்களை கவிநடையில் எழுதியவர். எழுதிக் கொண்டிருக்கிறார். அடுத்து நான் வசிக்கும் அபார்ட்மெண்டில் சிலர். அவர்களில் ராமநாதன் மாமா. படு ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டார். ஸ்வாமி சந்நிதியின் முன் நின்று பக்தி சிரத்தையுடன். அடுத்த மாதம் காசி, அயோத்யா விமான டிக்கெட் போட்டிருக்கிறாராம். அயோத்தி ராமர்தான் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்!

திரு ராஜூவுக்கு போன் செய்தேன். அடடே என்ற ஆச்சரியத்துடன் தற்காலிகமாக வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்திருப்பவர் தன் மனைவியுடன் பிளாட்டைப் பார்க்க வந்த நேரத்தில் பழங்கள் சகிதமாக ஸ்வாமிக்கு அர்ப்பணம் செய்துவிட்டு, தம்பதியாக அந்த அட்சதையைப் பெற்றுக் கொண்டார்கள்.

இன்னும் அசோக் என்னும் இளைஞர். அருப்புக்கோட்டை சொந்த ஊர். அருமையான பாகவத கோஷ்டி. இவரின் தாயார், ப்ரபந்தங்களை கோஷ்டியாக இருந்து சொவதற்காகவே இந்த மார்கழியை சொந்த ஊரில் இருந்து கழித்திருக்கிறார். இப்படியாக, ஸ்ரீராமனின் அட்சதைப் பிரசாத விநியோகம் இன்னும் தொடரும்…

திருப்புல்லாணி, ராமேஸ்வரம் கோயில்களில் ஆளுநர் ரவி தரிசனம்!

rn ravi in thiruppullani - 2026
#image_title

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திருப்புல்லாணி, ராமேசுவரம் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். 

தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் சென்றார். அங்கு ஆட்சியர் விஷ்ணுசந்திரன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதன் பின்னர் அவர் திருப்புல்லாணியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ராமாயண காவியத்துடன் நெருங்கிய தொடர்புடைய தர்ப்பசயன ராமர் தலத்தில் வீற்றிருக்கும் ஆதிஜகநாதப் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். அங்கே அனைத்து பிராகாரங்களையும் சுற்றி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மூலவர் மற்றும் உத்ஸவரை தரிசித்தார். சிறப்புக் கோலத்தில் தர்ப்பசயனத்தில் உள்ள ஸ்ரீராமரையும் தரிசித்தார்.  அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆளுநர் ரவி அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் ராமநாதஸ்வாமி கோவிலுக்குச் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பளிக்கப்பட்டது. கோவிலில் மூலவர் ராமநாத ஸ்வாமியை தரிசித்த ஆளுநருக்கு பட்டர்கள் பிரசாதம் வழங்கினார்கள்.  

கோவிலை விட்டு வெளியே வந்த ஆளுநர் ராமநாதஸ்வாமி கோவில் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்திருந்த தூய்மை பாரத திட்டத்தின்கீழ் நடைபெற்ற பணியில் கலந்துகொண்டார். மேலும் அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

ராமேஸ்வரத்தில் இருந்து காரில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். 

முன்னதாக திருப்புல்லாணி, ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து தமிழ்ப்  பாரம்பரிய முறைப்படி ஆலயவழிபாட்டுக்கு வந்தார்!

திருப்புல்லாணி கோயிலில் தாம் தர்ப்பசயன ராமரை தரிசித்தது குறித்து ஆளுநர் பதிவிட்ட கருத்து: 

“ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை மற்றும் தர்பசயனத்தில் பிரபு ஸ்ரீ ராமர் இருக்கும் ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். இங்கு தர்பையில் சயன கோலத்தில் ஓய்வெடுத்தபோதுதான்  பிரபு ஸ்ரீ ராமர், இலங்கைக்கு பாலத்தை கட்ட முடிவெடுத்தார். இப்பகுதி முழுவதும் ஸ்ரீ ராமரின் புராண கதைகளால் நிரம்பியுள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான பிரபு ஸ்ரீராமர் கோயிலின் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் உள்ளூர் மக்களிடையே முழு அளவிலான உற்சாகம் நிலவுகிறது. நமது பன்முக மக்கள் மற்றும் இடங்களுக்கு மத்தியில் ஒரே குடும்பம் என்ற தீவிர உணர்ச்சிப் பிணைப்பு, பாரதத்தின் எண்ணத்தையும் அடையாளத்தையும் உருவாக்கி நிலைநிறுத்துகிறது.” – ஆளுநர் ரவி

அயோத்தி ராமர் கோயில் பிராணப்ரதிஷ்டை விழா: பிரதமர் மோடி செய்வது ஏற்புடையதா?!

pmmodiji in ayodhya - 2026

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பிரதமர் மோடியே தன் கையால் செய்யலாமா என்று ஓர் அரசியல் சர்ச்சையை எதிர்க்கட்சிகள் கிளபியுள்ளன. இது குறித்து பலர் சமூகத் தளங்களில் விளக்கங்களைச் சொல்லி வருகின்றனர். அவற்றில் மூன்று முத்தான கருத்துகள் இங்கே….

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பிரதமர் மோடியே தன் கையால் செய்யக் கூடாது! கோயிலைக் கட்டி முடிக்காமல் கும்பாபிஷேகம் செய்யவே கூடாது…

— இப்படிச் சொன்னார் பெரியவர் ஒருவர். அவர் மதிப்பான பதவியில் இருந்து பணி ஓய்வு பெற்றவர்.

இன்று காலை ஒரு நிகழ்ச்சி தொடர்பில் மயிலாப்பூர் சென்றிருந்தேன். மயிலாப்பூர் க்ளப்பில் வைத்து நிகழ்ச்சி. அதற்கு வந்திருந்தார் அந்தப் பெரியவர். நாட்டு நிலவரம் அரசியல் சூழல் எல்லாம் நம்மிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் முன்வைத்த கருத்துகள் தாம் இவை.

அதற்கு சில விளக்கங்களைச் சொன்னேன். அவற்றில் ஒன்று…

எங்கள் தென்காசிக் கோயில். மாமன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு ஒரு கனவு… “காசியில் என் கோயிலை கொடியவர்கள் பாழ்படுத்தி விட்டார்கள், எமக்கு ஒரு கோயிலை தெற்கே உன் ராஜ்ஜியத்தில் எழுப்பு. உன் முன்னோர் வழிபட்ட எனது லிங்க ரூபம் இருக்குமிடத்தை காட்டித் தருகிறேன்” என்று காசி வாழ் ஈசனே கனவில் சொன்னான். ஈசன் காட்டியபடி லிங்கம் செண்பகவனத்தில் கிடைக்கப் பெற்றது. உடனே நன்னாள் பார்த்து ஈசன் கனவில் காட்டிக் கொடுத்த இடத்தில், நிலத்தை நிலைப்படுத்தி, ஈசனை முதலில் லிங்கப் பிரதிஷ்டை செய்தார். பின் கோயிலை விரிவாகக் கட்டி கோபுரம் எழுப்ப முயன்றார். ஆனால் முடியவில்லை. அடுத்து வந்தவரே கோபுரத்தைப் பூர்த்தி செய்தார்.

எனவே முதலில் கருவறை அமைத்து அதற்கு மட்டும் கும்பாபிஷேகம் செய்து, பின்னர் படிப்படியாக சுற்று சந்நிதிகள் அமைத்து தனித்தனியாக அவற்றுக்கு கும்பாபிஷேகம் செய்து, பின்னர் கோயில் கோபுரம் கட்டி அதற்கு தனியாக கும்பாபிஷேகம் செய்து வைப்பது நம் வழக்கத்தில் இருப்பதுதான்! இப்படி பல கோயில்கள் உண்டு. இன்னும் சில கோயில்களில், பெருவுடையார் லிங்கம், அல்லது மூலஸ்தான விக்ரஹம் சந்நிதி கருவறை வாசலை விட பெரிதாக இருக்கும். அவற்றின் அமைவும் அப்படியே!

முடியாட்சி என்றால் ராஜா. குடியாட்சி என்றால் ஆளும் பிரதானி. தஞ்சைப் பெருவுடையார் கோயிலைச் சொன்னால் சிவபாதசேகரனான அருண்மொழித் தேவனான ராஜராஜ சோழனே கண் முன் நிற்பான். நாம் கோயில்களில், வீடுகளில் யாகமோ வைதீக விழாவோ நடத்தில், செய்து வைப்பவர்கள் புரோஹிதர்கள் என்றாலும், செய்பவர் – கர்த்தா-வாக அமர்பவர் ஒரு முக்கியஸ்தரே! கிராமங்களில் இப்போதும் ஊர் நாட்டாமை அல்லது தக்கார் அல்லது கோயில் கமிட்டி தலைவர் இப்படித்தான் கர்த்தாவாக அமர்ந்து கும்பாபிஷேகம் செய்வார்கள். எனவே பிரதமர் மோடி மக்கள் பிரதிநிதியாக – ஒரு கர்த்தாவாக அமர்ந்து கும்பாபிஷேகம் செய்வதில் தவறு ஏதும் இல்லை! — என்றேன்.

என்னதான் தர்மத்தின் அடிப்படையிலான விளக்கங்களை நாம் சொன்னாலும், தர்ம சிந்தனை மனத்தில் இருந்தால் அவற்றை மனது உடனே ஏற்றுக் கொள்ளும்!

  • செங்கோட்டை ஸ்ரீராம்

இராமன் எத்தனை ராமனடி…

சரியான நேரத்தில் சரியானதை செய்யும் நம் பாரதப் பிரதமர்.

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்புவிழாவிற்கு தயாராகி வரும் நம் இந்திய தேசத்தில் ஆங்கொன்றும் இங்கொன்றுமான சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. அதில் பிரதானமானது நம் பிரதமரை குறித்தானது….

அவர் எப்படி சிலாரூபத்தை பிரதிஷ்டை செய்யலாம்…என்பதே.

இதற்கு பல்வேறு வாதங்கள்… விவாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆளாளாளுக்கு சாஸ்திர சம்பிரதாயங்களை பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் இதில் உள்ள சுவாரஸ்யமான அம்சமே. அது போலவே திறப்பு விழாவிற்கு ஏன் இந்த தேதியினை தேர்ந்தெடுத்தனர் என்பதும் விவாதப்பொருளாகி வருகிறது.

அன்றைய தினம் அதாவது 22/01/2024 அன்று குறிப்பிட்ட நேரத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் வரும்படியான காலத்தை கொண்டு இருக்கிறார்கள். பொதுவில் பார்த்தால் எதனோடும் பொருந்தாத சமாச்சாரமாக தெரியும் இஃது… இதன் பின்னணியில் மிகப்பெரிய காலக் கணித விஷயம் ஒன்றும் உள்ளது. நம் இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற காலத்தில் ரிஷப லக்னம் அமையப் பெற்றதாக ஓர் கணக்கு வருகிறது.அது தவிர மகர ராசியில் வரும் படியாக நம் தேசம் உள்ளது, அதன் அடிப்படையில் ரிஷபம் ஐந்தாவது பாவாதிபதி.பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கொண்டிருக்கிறது.இப்படியான உள்ளீடாக பற்பல கணித சமன்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

இவற்றை எல்லாம் விடுத்து நம் பிரதமருக்கு அனுஷ நட்சத்திரம் விருட்ஷக ராசி… அதற்கு நேர் பார்வையில் ரிஷப ராசி என்பதால் தான் இந்த நாளை தேர்வு செய்து இருக்கிறார்கள் என்பதெல்லாம் இங்கு இரண்டாம் பட்சமே.

அடுத்ததாக அவர் மணமாகி மனைவியை பிரிந்து வாழ்பவர் என்பதால் மனைவியை பிரிந்த கிரகஸ்தன் என்பதால் யாக வேள்வியை முன் நின்று செய்யும் தன்மையை இழக்கிறார் எனும் காரணத்தினால் அவர் முன் நின்று இந்த கோவில் பணிகளை மேற்கொள்ள கூடாது என கிளம்பி இருக்கிறார்கள். அவர் தன்னளவில் அந்த திருமணத்தை…. பொதுவாழ்வில் ஈடுபடும் நபராக தன் பிரமாணப் பத்திரத்தில் தகவலாக மறைக்காமலும் மறுதலிக்காமலும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அவ்வளவே. இது தவிர அன்று தன் குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் நடைபெற்ற அந்த குழந்தை திருமணத்தை தாண்டி இல்லறத்தில் ஈடுபட்டதில்லை என அவரது மனைவி ஸ்தானத்தை கொண்ட யசோதா பென் என்பவரே தீர்க்கமாக எடுத்து சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இல்லற துறவி போலவே தன் வாழ்நாளில் பிரம்மச்சாரியத்தை கைக்கொண்டு வரும் இவரை தவிர வேறு யார் தகுதி வாய்ந்த நபராக இருக்க முடியும்.???

சரி,சாஸ்திரம் என்ன சொல்கிறது…??

ஓர் அரசன் அதுவும் இன்று உள்ள நிலையில் மக்கள் பிரதிநிதியாக முன்னிலைப் படுத்தப்பட்ட ஒருவர் முன்னின்று செய்யும் சுப காரியங்களுக்கு தனி மனித தோஷம் இல்லை என்கிறது. அப்படி உள்ள சூழ்நிலையில் ராஜரிஷி போல் வாழும் பேறு பெற்ற நம் இந்திய பிரதமர் எல்லா வகையிலும் இந்த கோவில் திருப்பணிகளை செய்ய தகுதி வாய்ந்த நபரே….. இவர் செய்வதே சாலச் சிறந்ததாகும். கிரகஸ்தருக்கு கிரகஸ்தன்…. பிரம்மச்சாரிக்கு பிரம்மச்சாரி. ஆகச் சிறந்த ராஜ ரிஷி.

எல்லா வகையிலும் சரியே.

இராமரை…
ஸ்ரீராமரை… இஷ்வாகு குல தனம் என்பர். அவர் இஷ்வாகு எனும் சூரிய குலத்தை சார்ந்தவராக கொண்டாடுவர். அவர்களுக்கு…. அதாவது அந்த குலத்துதித்தவர்களுக்கு ஆஸ்தான தெய்வம் நம் ஸ்ரீரங்கத்து பெரிய பெருமாள்.
இஷ்வாகு எனும் மன்னனுக்கு அடுத்து வந்த 41 தலைமுறையில் வந்தவர் தசரதன். அவருக்கும் பிள்ளை தான் ராமர். பாரோரும்…. நம் பாரதமும் கொண்டாடும் ஸ்ரீராமர். பகீரத பிரயத்தனங்களுக்கு பிறகு அவர் பிறந்த அயோத்தியில் மீண்டும் திருக்கோயில் எழுந்தருளிப்பண்ணப்பட்டுள்ளது. பகீரதனும் இதே இஷ்வாகு வழி தோன்றல் தான் என்பது இங்கு கூடுதல் சிறப்பு. அயோத்தியில் குழந்தை வடிவினில் அதாவது 14 வயது கோலத்தில் ஸ்ரீராமரை ஸ்தாபிக்க இருக்கிறார்கள். சரியாக சொன்னால் கோசலை ராமனை சிவதனுஸை முறித்து சீதையை கரம் பிடித்த கையோடு நாடு திரும்பிய கோலத்தில் இங்கு பிரதிஷ்டை செய்ய இருக்கிறார்கள். கோலாகலமான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சொல்லி வைத்தார் போல் இங்கு நம் ஸ்ரீரங்கத்தில் தைத்தேர் பத்து நாட்கள் உற்சவம் ஆரம்பமாகி இருக்கிறது. பூபதி திருநாள் என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
இந்த வாரக் கடைசியில் பிரதமர் இங்கு வந்து செல்லவிருப்பதாக தகவலும் உண்டு. மிகப் பெரிய சகாப்தத்தின் ஓர் அங்கமாக நாமும் இந்நிகழ்வில்… இந்த கோலாகல விழாவில் பங்கேற்க இருக்கிறோம். நம் கண் முன்னே ஓர் பிரமாண்டம் நம்மை கடந்து செல்லவிருக்கிறது. அயோத்தி சென்று தான் விழா நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பதில்லை….. நம் அருகில் அருள்பாலிக்கும் ஏராளமான திருக்கோவில்கள் உண்டு. அங்கு திருக்கோலத்தில் வீற்றிருந்து சேவை சாதிக்கும் அந்த அழகனை…. அவன் அழகை நன்றாக தரிசிக்கலாம். அன்று முழுவதும் விளக்கு எரிக்க முடிகிறதா எனப் பாருங்கள்.வாழ்வியலை சொல்லித் தந்த வள்ளல் அவன்.நம் மனித வடிவில் வாழ்ந்து காட்டிய வள்ளல் அவன்.இன்றுள்ள நிலையில் நாம் புரிந்து கொண்ட …. உணர்ந்து கொண்டது சொற்பமே. அவன் புகழ் பாட ஓர் கம்பன் மட்டும் போதாது. அவரவர் பார்வையில் புரிந்து கொண்டதை பகிர்ந்து கொண்டு கொண்டாட ஏராளமான விஷயங்கள் நம் இந்திய தேசத்தில் உண்டு. அதில் பிரதானமானதாக அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழா அமைந்திடட்டும். நம் அனைவரையும் ஸ்ரீரங்கத்து திவ்ய தம்பதிகள் கடாக்ஷத்து ரக்ஷக்கட்டும்.

  • ’ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

முழு கோவிலும் கட்டி முடிக்காமல் பிராண பிரதிஷ்டை செய்யலாமா ? ஒரு அலசல் !!

பல நூறு வருட போராட்டங்களை கடந்து ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையிலும்,

அதனை சுற்றிய அரசியல் ஓய்வதாக தெரியவில்லை !!

கோவிலில் முழுமையான கட்டுமான பணிகள் முடிக்கப்படாமல், அவசர அவசரமாக திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது !!

மக்களவைத் தேர்தலை ஒட்டி,இந்த அரசியல் நாடகத்தை பாஜக நடத்துவதாக பலரும் அதை வசதியாக திசை திருப்பி விடுகிறார்கள் !!

ஆனால் ,

இதற்கு காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீ பிரம்மஶ்ரீ ஞானேஸ்வர் சாஸ்திரி அவர்கள் தெளிவான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் !!

அதாவது, ” கோவில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்தால் மட்டுமே பிராண பிதிஷ்டை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை !!

கோவில் கர்ப்ப கிரகத்தின் வேலைகள் முழுமையாக முடிந்த பின்பு, தாராளமாக பிராண பிரதிஷ்டை செய்யலாம் !!

காரணம், கோவில் கட்டுமான பணிகள் என்பது காலத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கலாம்…

ஆகச்சிறந்த உதாரணம் குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயம் !!

தொடக்கத்தில் கர்ப்ப கிரகத்தின் கட்டுமானம் முடிந்த பின்பு அங்கே பிராண பிரதிஷ்டை நடந்தது !!

ஆனால்,

இப்பொழுது இருக்கும் கோவில் வளாகம் மிகப் பிரமாண்டமாக பின்பு விரிவாக்கம் செய்யப்பட்டது தான் !!

அதே போல, கோவில் கோபுரம் கலசம் நிறுவப்படுவதற்கு முன்பு பிராண பிரதிஷ்டை செய்யலாமா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது !

கோவில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்பு, ஒரு சன்னியாசி அந்த கடமைகளை ஆகம விதிப்படி செய்வார் !!

இது சன்யாசியால் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நியதி !!

காரணம், ஒருவேளை ,இவை குடும்பஸ்தர்களால் மேற் கொள்ளப்பட்டால் அவர்களுக்கு பின்னாளில் சந்ததி இல்லாமல் போகலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன !!

சரி, கலசம் நிறுவப்படாமல் கோவில் திறக்கலாமா ??

ஶ்ரீ அன்ன சாஸ்திரிகள் கலச ஆரோபன விதி பற்றி எழுதியதில் , தெளிவாக குறிப்பிடுகிறார் !

ஶ்ரீ பஞ்ச ராத்ர ஆகாமம் ஈஸ்வர சம்ஹிதை பொறுத்தவரையில் ,

குறைந்த பட்சம் கோவிலின் ஒரு தளத்தின் கட்டுமானம் முடிந்து கதவுகள் அமைக்கப்பட்டால் , கலசம் பிரதிஷ்டை செய்யாமலேயே பிராண பிரதிஷ்டை செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது !!

இவை அனைத்தும் எதோ பாஜகவிற்கு ஆதரவாக அரசியல் சார்புடன் எழுத வேண்டும் என எழுதியது அல்ல !!

பிருஹன் நாரத புராணத்தில் 46 அத்தியாயத்தில் 697, 698 ஸ்லோகங்களில் தெளிவாக கூறப்பட்டு உள்ளது !!

அதனால் ,

சகோதர சகோதரிகளே !!
உலக இந்துக்களில் நூற்றாண்டு கனவான ராமர் கோவில் திறப்பு விழாவில் தேவையில்லாத அரசியலை தவிர்ப்போம்!!

அமையவிருக்கும் ராமராஜியத்தை வரவேற்க தயாராவோம்!!

ஜெய்_ஶ்ரீராம் !!

Mesmerising Arisi- Grain of Life!

0
music vijayaraghvan article - 2026
#image_title

By        Narasimhan Vijayaraghavan 

On 15th Jan,2024, Pongal Day. Music Academy, Chennai- 18.34 p.m. yours  truly was in attendance for the ‘All are Welcome’ show. Honestly, came as escort to my two daughters.They had come to see a couple of their dancer colleagues performing. 

However, willingly sat back, mesmerized by the light, song and dance extravaganza, in that pecking order, revealing my lack of artistic nuances. And then, I wrote, what I wrote. Now read on and tell me whether anyone, for the life of me, can dance to the following exposition. Make a storyline on the life of two farmers immigrating to Singapore from our rice bowl in Tanjore District of Tamil Nadu. Yes, the performers did!

I found myself thoroughly incompetent to review the stellar show. Nothing unusual. So I wrote on Arisi-Rice, as I saw and heard the running commentary and the compositions in Tamil, set to music by Rajkumar Bharathi with ‘music direction’  of Sai Shravan. We were told that it took 90 musicians, as if a philharmonic orchestra associated with the west. Stunningly beautiful and brilliant. If classical art was portrayed like this, it has a bright future. It cannot be surely a  dying art. And a full ground floor at the Academy, overflowing into Balcony as well, was a welcome testimony.

From Seed to Soul, Rice is the Lifeblood of Asia. Rice is more than just a grain in Asia; it is the very thread that weaves together the fabric of life. From the cradle to the grave, rice nourishes bodies, sustains communities, and shapes the cultural tapestry of the region. In the hands of skilled farmers, it transforms from humble seed to life-giving bounty, feeding teeming millions and embodying the spirit of resilience and resourcefulness that defines the Asian spirit.

For the farming community, rice is not just a crop; it is a way of life. The cycle begins with the careful selection of seeds, passed down through generations, each carrying the whispers of past harvests and the hopes of future abundance. The act of sowing is a sacred ritual, a prayer whispered into the earth, a promise of life to come.

As the monsoon paints the fields emerald green, the young rice shoots unfurl, their delicate blades reaching for the sun. Farmers tend to their charges with meticulous care, nurturing them through sun and rain, weeding out pests, and coaxing them towards maturity. It is a dance of interdependence, a silent conversation between human and plant, a testament to the deep understanding that binds farmer to field.

The golden wave of ripening rice signals a time of celebration. Families gather under the warm sun, their hands moving in practiced rhythm as they reap the rewards of months of toil. The air is filled with laughter and the rhythmic thrum of threshing, a symphony of human and natural energy.

The harvest is not just about filling bellies; it is a time for community, for sharing stories and laughter, for expressing gratitude for the land’s bounty. Rice binds families, strengthens villages, and connects generations through a shared understanding of the simple yet profound truth – that life, like rice, is best nurtured with care, patience, and cooperation.

In birth and death rituals, rice marks significant life transitions. It is sprinkled on newborns for good luck, and offered to ancestors in remembrance. It is a symbol of life’s cyclical nature, a reminder that even in death, new life will spring forth.

The dedication of Asian farmers has transformed this humble grain into the lifeblood of a continent. From the sprawling rice paddies of Vietnam to the terraced fields of Nepal, farmers have met the challenge of feeding a growing population with unwavering determination and ingenuity.

Their efforts have not only ensured food security but also fostered a culture of sharing and selflessness. In the face of natural disasters or economic hardship, communities come together, sharing their rice and supporting one another in times of need. This spirit of collective action is a testament to the power of rice to bind people together, creating a web of support that stretches across borders and generations.

Rice is more than just a food; it is a symbol of hope, resilience, and the enduring spirit of Asia. Its journey from seed to soul, from field to family, and from generation to generation is a testament to the power of human ingenuity and the deep connection between people and the land. As we face the challenges of the 21st century, let us remember the lessons etched in every grain of rice – the importance of cooperation, the power of tradition, and the unwavering belief that even in the face of adversity, life, like rice, will find a way to flourish.

The light imagery danced to by the dancers from south east Asia, including our own Chennai, was dazzling. It took one’s breath away. Awesome and mind blowing, used too commonly, deservingly fitted the bill for this dance ensemble. The grace and colourful costumes in multiple  rainbow lights, altering and swaying to the ‘Thathingthinathom’ magical phrasings, were stupefyingly captivating. The result of time, effort, resources  and creativity on display, were breath-taking.

It was our CULTURE. Our OWN. Woven seamlessly into Javanese, Balinese et al consummately, revealed amazing synchronization, even to a nincompoop like me. For once, one was lost for words to satisfactorily capture the beauty of the light, song, dance, and above all else, the unique THEME.


(Writer is practicing advocate in the Madras High Court)


தில்லியில் பிரதமர் கொண்டாடிய பொங்கல் விழா! (முழு உரை)

pongal day speech by pm modi - 2026
#image_title

பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, இன்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை ஆகியவற்றின் இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், புது தில்லியில் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் இன்று பங்கெடுத்து ஆற்றிய உரையின் தமிழாக்கம்!

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

வணக்கம்.  உங்கள் அனைவருக்கும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பலப்பல நல்வாழ்த்துக்கள்.  இனிய பொங்கல், நல்வாழ்த்துக்கள்.  பொங்கல் பவித்திரமான நாளன்று, தமிழ்நாட்டின், ஒவ்வொரு வீட்டிலிருந்தும், பொங்கலின் பெருக்கு பொங்கிப் பல்குவது வழக்கம்.   என் விருப்பம் என்னவென்றால், அதைப் போலவே, உங்கள் வாழ்க்கையிலும் கூட, சுகங்கள், நல்வளம், மேலும் சந்தோஷம் இடையறாது பொங்கிப் பெருகட்டும். 

நிரந்தரமாக இது தொடர்ந்து இருக்க வேண்டும்.  நேற்றுத் தான் தேசத்திலே, லோஹ்டி திருநாள், பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.   சிலர் இன்று, மகர சங்க்ரமணு…… உத்தராயணத்தைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் சிலரோ அதை நாளை கொண்டாடுவார்கள்.  மாக பிஹுவும் கூட, தொடர்ந்து வரவிருக்கின்றது.  இந்த அனைத்துத் திருநாட்கள் தொடர்பாக, நாட்டுமக்கள் அனைவருக்கும், பலப்பல பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். 

நண்பர்களே, இங்கே என்னால், பல, பரிச்சயமான முகங்களைக், காண முடிகிறது.  கடந்த ஆண்டும் கூட, நாமனைவரும், தமிழ் புத்தாண்டு வேளையிலே, இங்கே சந்தித்திருக்கிறோம்.  நான் முருகன் அவர்களுக்கு, என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.   இவர் தான், இந்த அற்புதமான நிகழ்ச்சியில் எனக்கு, பங்கெடுக்கும் வாய்ப்பை அளித்திருக்கிறார்.  இது எப்படி இருக்கிறதென்றால், ஏதோ நான், என்னுடைய குடும்பம், மற்றும் நண்பர்களோடு கூட, கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போல உள்ளது. 

நண்பர்களே, புனிதர் திருவள்ளுவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?  தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்விலாச் செல்வரும், சேர்வது நாடு.  அதாவது, நல்ல விளைபொருளும், தக்க அறிஞரும், மேலும் நாணயமான வணிகர்கள், இந்த மூவரும் இணைந்து, தேசத்தை நிர்மாணம் செய்கிறார்கள். 

புனிதர் திருவள்ளுவர் அரசியல்வாதிகளைக் குறிப்பிடவில்லை.  இது நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் செய்தி.  பொங்கல் திருநாளன்று, புதிய விளைபொருளை, இறைவனின் திருவடிகளில் படைக்கும் பாரம்பரியம் இருக்கிறது.  இந்த ஒட்டுமொத்த கொண்டாட்டப் பாரம்பரியத்தின் மையத்திலே, நமக்கெல்லாம் உணவு படைக்கின்ற, உழவர் பெருமக்கள் இருக்கின்றார்கள்.  இதைப் போலவே, பாரதத்தின் அனைத்துப் பண்டிகைகளும், ஏதோ ஒரு வடிவத்திலே, கிராமத்தோடு, உழவர்களோடு, விளைபொருட்களோடு இணைந்திருக்கின்றது. 

எனக்கு நினைவிருக்கிறது, கடந்த முறை நாம், மேலும் ஒரு விஷயம் குறித்தும் விவாதித்தோம்.  அதாவது எப்படி நம்முடைய சிறுதானியங்கள், அல்லது ஸ்ரீ அன்னம், தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்திருக்கிறது என்று.   எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, இந்த சூப்பர் உணவு தொடர்பாக, தேசத்திலும், மொத்த உலகிலும் கூட, ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.  

நமது இளைஞர்கள் பலரும், சிறுதானியங்கள், ஸ்ரீ அன்னம் தொடர்புடைய, பல புதிய ஸ்டார்ட் அப்புகளை தொடங்குகிறார்கள்.  மேலும் இந்த ஸ்டார்ட் அப்புகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.   சிறுதானியங்களை விளைவிப்பதிலே, நமது தேசத்தின், 3 கோடிக்கும் மேற்பட்ட, சிறு விவசாயிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள்.  நாம், சிறுதானியங்களை முன்னிறுத்தும் போது, அப்போது நேரடியாக, 3 கோடி விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுகிறது. 

நண்பர்களே, பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழ் பெண்கள், தங்கள் இல்லங்களுக்கு முன்பாக, கோலம் போடுவது வழக்கம்.  முதன்மையாக, அவர்கள் அரிசிமாவைப் பயன்படுத்தி தரையினிலே, பல புள்ளிகளை வைக்கிறார்கள்.  அனைத்துப் புள்ளிகளும் போட்டு முடிக்கப்பட்டு விட்ட பின், ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு முக்கியத்தும் இருக்கிறது.   இந்தக் காட்சியே கூட, மனதைக் கொள்ளை கொள்ளும் ஒன்றாகும்.  

ஆனால் கோலத்தின் உண்மையான வடிவம், மெருகூட்டப்பட்டதாக எப்போது இருக்கும் என்றால், அந்தப் புள்ளிகள் அனைத்தும், நன்கு இணைக்கப்படும் போது, இது ஒரு கலைப்படைப்பாக மாற்றமடைந்து, அதிலே வண்ணங்கள் சேர்க்கப்படும் போது தான்.   நம்முடைய தேசமும், அதனுடைய பன்முகத்தன்மையும் கூட, கோலத்தைப் போன்றது தான்.  

தேசத்தின் அனைத்து இடங்களும், ஒன்றோடு ஒன்று உணர்வுப்பூர்வமாக இணைகின்ற போது தான், நம்முடைய சக்தியானது, ஒரு பிரத்யேகமான வடிவத்தை எடுக்கிறது.  பொங்கல் திருநாளும் கூட, இப்படிப்பட்ட ஒரு திருநாள் தான்.  இது, ஒரே பாரதம் உன்னத பாரதத்தின், தேச உணர்வினை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. 

கடந்த காலத்திலே, காசி தமிழ் சங்கமம், மற்றும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம், என்ற ஆழமான மகத்துவமான பாரம்பரியம் தொடங்கப்பட்டிருக்கிறன.   இவற்றிலும் கூட, இந்த உணர்வு, பிரதிபலிக்கிறது, இந்த உணர்வை, உணர முடிகிறது.   இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலுமே, அதிக எண்ணிக்கையிலே, நம்முடைய தமிழ் சகோதர சகோதரிகள், உற்சாகத்துடன் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். 

நண்பர்களே, ஒருமைப்பாட்டின் இதே உணர்வு தான், 2047ஆம் ஆண்டு வரை, வளர்ச்சியடைந்த பாரதத்தை நாம் அமைக்க, மிகப்பெரிய சக்தியாகும், மிகப்பெரிய மூலதனமாகும்.   உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், செங்கோட்டையிலிருந்து நான், எந்த 5 உறுதிப்பாடுகள் குறித்து அறைகூவல் விடுத்திருந்தேனோ, அதன் அடிநாதமான விஷயம், தேசத்தின் ஒற்றுமைக்கு சக்தி அளிப்பது, தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்துவது, பொங்கலின் இந்த புனிதமான வேளையிலே, நாம் தேசத்தின் ஒற்றுமையை, சக்தியுடையதாக ஆக்கும், சங்கல்பத்தை மீண்டும் மேற்கொள்ள வேண்டும். 

நண்பர்களே, இன்று என்னிடம் கூறப்பட்டிருக்கிறது, பல கலைஞர்களும், மேலும், பிரபல கலைஞர்கள்….. பெயர் பெற்ற கலைஞர்கள், நிகழ்ச்சி அளிப்புக்குத் தயாராக இருக்கிறார்கள்.   நீங்களும் காத்திருக்கின்றீர்கள் நானுமே கூட காத்திருக்கின்றேன். 

இந்தக் கலைஞர்கள் அனைவரும், தலைநகர் தில்லியிலே, தமிழ்நாட்டினை, மேலும் துடிப்புடையதாகச் செய்ய இருக்கிறார்கள்.  சில கணங்கள் தமிழை சுவாசிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.   இதுவும் ஒரு பெரும் பேறாகும்.  நான் இந்தக் கலைஞர்கள் அனைவருக்கும், என் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் மீண்டும் ஒருமுறை, முருகன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  வணக்கம். 

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும்!

hindumunnani - 2026

பக்தர்கள் விபத்தில் சிக்குவதால், திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும் – என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:

இந்துக்களின் பாரம்பரியமான வழிபாட்டு முறையான பாதயாத்திரையாக சென்று இறைவனை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றுவது என்பது இந்துக்கள் வாழ்நாளில் கடைபிடிக்கும் முக்கியமான இறைப்பணியாகும்.

அதன்படி திருச்செந்தூர், பழனி, சபரிமலை, சமயபுரம் ஆகிய பகுதிகளுக்கு காவடி, தீர்த்த குடம், இரு முடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக பக்தர்கள் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக தை மாதம் திருச்செந்தூர், பழனி மற்றும் ஆறுபடை முருகன் தலங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபாடு செய்கின்றனர்.

இதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்துக்கள் தங்களது வாழ்வியலாக வழக்கப்படுத்திக் கொண்டு தற்போது வரை இந்த புனித பாதயாத்திரையை தங்களது வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய பாரம்பரிய கடமையாக செய்து வருகின்றனர்.

தைப்பூச திருவிழாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பக்தர்கள் வரத் தொடங்கி விடுவார்கள். இப்படி பக்தர்கள் பாதயாத்திரையாக வரும்போது பல இடங்களில் விபத்து ஏற்படுகிறது . இதுமாதிரியான விபத்துக்களால் பல நேரங்களில் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது .

கடந்த வாரம் கூட திருச்செந்தூர் பாதயாத்திரை சென்ற பக்தர் ஒருவர் லாரி மோதி பலியாகியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பழனி பாதயாத்திரை பக்தர் இருசக்கர வாகனம் மோதியதில் பலியானார்..

இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் அமரர் ஸ்ரீ இராம. கோபாலன் அவர்கள் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி சாலை வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அப்போதைய அரசு திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை மற்றும் செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை பாதயாத்திரை பக்தர்கள் பயன்படுத்திட தனியாக சாலை அமைத்துக் கொடுத்தது.

அந்த சாலைகளெல்லாம் தற்போது பக்தர்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக புல் செடிகள் முளைத்து விஷ பூச்சிகள் நடமாடும் இடமாக இருப்பதால் பக்தர்கள் அதனை பயன்படுத்துவதை தவிர்த்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் போகக்கூடிய தார் சாலையில் நடந்து வரக்கூடிய சூழ்நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது மட்டுமா தாராபுரம் மார்க்கமாக வரக்கூடிய பக்தர்களுக்கு தனி சாலையே இல்லை உடுமலைப்பேட்டை வழியாக வரக்கூடிய பக்தர்களுக்கும் தனி சாலை இல்லை அவர்கள் கனரக வாகனங்கள் வரக்கூடிய தார் சாலைகளையே பயன்படுத்தி பாதுகாப்பற்ற முறையில் வருகின்றனர்.

இவ்வாறு நடந்து வரும் போது எதிரே வரும் வாகனங்களும் பக்தர்களுக்கு பின்னால் வரும் வாகனங்களும் இரவு நேரங்களில் அதிவேகமாக வருவதால் கவனக்குறைவாக விபத்துக்கள் ஏற்படுகின்றது.

கனரக வாகனங்களை இயக்கி வரும் ஓட்டுநர்களுக்கு பக்தர்கள் நடந்து செல்வது தெரிவதற்காக ஒளிரும் குச்சிகள் கடந்த காலங்களில் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஒளிரும் குச்சிகள் தயார்நிலையில் இருந்தும் தற்போதுவரை கொடுக்கப்படவில்லை. பழனி பகுதி இப்படி என்றால் திருச்செந்தூர் பகுதி அதை விடக் கொடுமையிலும் கொடுமை.

பல வருடங்களாக பக்தர்களுக்கு தனி சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் போட்டவாறு உள்ளது. சாலை பணி முழுமை அடையாமல் பக்தர்களை ஏமாற்றும் செயலே நடந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் வரை தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை இருக்கும் தார் சாலையும் மிகவும் மோசமான நிலையில் குண்டு குழியுமாக உள்ளது.

திருச்செந்தூர் மற்றும் பழனி பகுதியில் பாதயாத்திரையாக வரக்கூடிய பக்தர்களுக்கு எந்த வித கழிப்பிட வசதியோ, குடிநீர் வசதியோ, மருத்துவ வசதிகளோ கிடையாது. அவ்வாறு கடினமான முறையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தனி ஏற்பாடுகள் கோவிலில் கிடையாது. அவர்களிடம் தரிசன கட்டணம் என்ற பெயரில் பணம் பறிப்பது மட்டுமே இந்து சமய அறநிலைத்துறையின் தலையாய நோக்கமாக இருப்பது வேதனைக்குரிய விஷயம்.

லட்சக்கணக்கான மக்கள் தைப்பொங்கலை முன்னிட்டு தைப்பூசத்தை முன்னிட்டு கோவிலுக்கு வந்து காணிக்கையாக தங்களது பெருமளவிலான பணத்தை இந்து சமய அறநிலைத்துறைக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்தை எடுத்து அவர்களுக்கான வசதியை செய்து தர இந்த அரசு மறுப்பது நியாயமற்ற செயல்.

தைப்பூசம் என்பது கொடிய அரக்கனை அழிப்பதற்காக அன்னை பராசக்தியிடம் இருந்து முருகப் பெருமான் வேல் வாங்கிய தினமாகும் அந்த தினத்தில் அப்பன் முருகனை வழிபடுவதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு அரசு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இல்லையேல் அரசுக்கே போதாத காலமாக மாறிவிடும்.

எனவே எந்த வித சமரசமும் இன்றி பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி சாலை வசதி, ஒளிரும் குச்சிகள், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, சிறப்பான முறையில் தரிசனம் செய்யக்கூடிய வசதிகள் ஆகியவைகளை தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் உடனடியாக செய்து தர வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

கிரிக்கெட் லவ்வர்ஸ்க்காக வருகிறது ‘ப்ளூ ஸ்டார்’

bluestar movie - 2026
#image_title

“புளூ ஸ்டார்” அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார் இயக்குனர் ஜெய்குமார். 

அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன் , திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதிபெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “புளூஸ்டார்” 

லெமன்லீப் கிரியேசன் பிரைவேட் லிமிடெட் R. கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா , மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய்குமார் இயக்கியிருக்கிறார்.

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது. சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள் வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் வெகுபிரபலம்.

அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் விளையாட்டு , காதல், நட்பு , அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கும் படம்தான் ‘புளூஸ்டார்’

அசோக் செல்வன்,  சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள்.  இவர்கள் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலம்.

இந்தப்படம் இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இப்போது விளையாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் , என அனைவருக்கும் இந்தப்படம் நெருக்கமான உணர்வைத்தரக்கூடியபடமாக இருக்கும்.

இந்தப்படத்திற்க்காக முழுக்க அரக்கோணம் ஊர் பசங்களாகவே நடிகர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். 

படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது, கோவிந்த் வசந்தா பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் அற்புதமாக அமைத்திருக்கிறார்.

எடிட்டர் செல்வா RK , படத்தின் கலை இயக்குனர் ஜெய்யரகு , மற்றும் சண்டைபயிற்சி ஸ்டன்னர் சாம், அனைவரது பங்களிப்பும் மிகமுக்கியமானது. படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் இந்தபடத்திற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை சுற்றி கதை இருப்பதால் ஒளிப்பதிவுக்கென்று மெனக்கெட்டிருக்கிறார். 

இளைஞர்கள், குடும்பங்கள் என எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும். ஜாலியான ஒரு படம் பண்ணியிருக்கிறோம்.  ஜனவரி 25 தியேட்டரில் வெளியாகிறது,  சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறார்கள்…. என்கிறார் இயக்குனர் ஜெய்குமார்.

ராமகிருஷ்ணா மடத்தில் விவேகானந்தர் ஜயந்தி விழா!

vivekananda jayanthi in ramakrishna mutt - 2026
#image_title

மதுரை: மதுரையில், விவேகானந்தர் பிறந்தநாளை இந்தியா அரசாங்கம் அறிவித்துள்ளபடி தேசிய இளைஞர் தினமாக ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது .

மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள ரிசர்வ்லயன் பகுதியில், ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம்: என்று, மத்திய அரசு 1985-ஆம் ஆண்டு அறிவித்தது. அது முதல் கடந்த 38 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும், சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம் என்று,இந்தியா முழுவதும் உள்ள பல அமைப்புகள் கொண்டாடி வருகின்றனர்.

விழாவில், ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் ஆசி உரை வழங்கினார். சுவாமி அர்கபிரபானந்தா சிறப்புரையும் நிகழ்த்தினார். சிறப்பு பேச்சாளர்கள் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் மாணவர்களுக்கு போதனைகளை எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் சுவாமி அர்கபிரபானந்தா கூறியது:

சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம் என்று, மத்திய அரசு அறிவித்தது. அது முதல் கடந்த 38 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும், சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம் நடைபெற்று வருகிறது

தேசிய இளைஞர் தின நிகழ்ச்சியில், பங்கேற்க 11பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அழைக்கப்பட்டன. இதில், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 1300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

மதுரை சிம்மக்கல்லை சார்ந்த சாரதா வித்யாவனம், மாணவிகள், சுவாமி விவேகானந்தர் பற்றிய பாடல்களை பாடினர். பங்கேற்ற மாணவர்கள் மாணவியர்கள் அனைவருக்கும் “எனது பாரதம் அமர பாரதம் ” என்ற சுவாமி விவேகானந்தர் நூல் அனைவருக்கும் வழங்கக்கப்பட்டது.


தஞ்சாவூர் மடத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்: 

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு  தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் ஜன.10,11,12  ஆகிய மூன்று நாட்களுக்கு  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

ஜன. 10 அன்று,  கும்பகோணம், அரசு கவின் கலைக் கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் ஓவியத் திருவிழாத் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.  கும்பகோணம், பாணாதுறை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். 

ஜன. 11 அன்று,  அரசுப் பள்ளியில் படிக்கும் காது கேளாத, வாய் பேசாத மாணவ மாணவிகளுக்கான விவேகானந்த விளையாட்டுத் திருவிழா நடத்தி பரிசளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 130 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

தேசிய இளைஞர் தினமான ஜன.12 அன்று காலை 7.30க்கு தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்து வாசலில் சுவாமிஜியின் திருவுருவப் படத்திற்குப் பக்தர்களின் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. காலை 09.15க்கு  கும்பகோணத்தில் சுவாமிஜி உரையாற்றிய இடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடந்தை எம்.எல்.ஏ, அன்பழகன் மாலை அணிவித்தார்.  காலை 10.30க்கு ஆடுதுறையில் விவேகானந்தர் விளையாட்டுத் திருவிழாவில் மாநில அளவிலான இறகு பந்து போட்டித் தொடங்கி நடைபெற்றது.  

மதியம்  ஆடுதுறை, அரசு மேல் நிலைப் பள்ளியில் சுவாமிஜியின் பிறந்த நாள் விழாவில் 150 மாணவர்கள் கலந்துகொண்டார்கள். பிற்பகல் 3.00 மணிக்கு கும்பகோணத்தில், 1876 -இல் தொடங்கப்பட்ட பாரம்பரியம் மிக்க நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தினத்தை ஒட்டி, தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தா உரை நிகழ்த்தினார்.