டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தமிழக அரசால் நடத்தப் பெற்ற அயலகத் தமிழர்கள் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள மலேசிய தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் டததோ சகாதேவன் அவர்களையும், உடன் வந்துள்ள மலேசிய அன்பர்களையும் வரவேற்று உபசரிக்கும் ஒரு நிகழ்வை கலைமகள் இதழ் மற்றும் தேஜஸ் ஃபவுண்டேஷன் இணைந்து நடத்தியது.
டத்தோ சகாதேவன் அவர்கள், தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் மற்றும் மலேசிய முத்தமிழ்ச் சங்க புரவலராக இருப்பவர். அவருடன் ஒரு குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்களது சேவைகளும் பெருமைகளும் தமிழகத்தில் உள்ளோருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் எனும் வகையிலும், அவர்களைப் பாராட்டும் விதத்திலும் ஒரு விருந்தோம்பல் நிகழ்ச்சியை கலைமகள், தேஜஸ் ஃபவுண்டேஷன் நடத்தியது.
ஜன.13 அன்று காலை மயிலாப்பூர் கிளப்பில் வைத்து நடைபெற்ற இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியில், மலேசிய விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் இந்திரநீலன் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார். சென்னையின் பிரபல தொழிலதிபர் இலக்கிய ஆர்வலர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் கலந்து கொண்டு அன்பர்களைப் பாராட்டினார். அவர் தமது பாராட்டுரையில், தமது மலேசிய தொழில்துறை அனுபவங்கள், சென்னையில் பாரம்பரியம் உள்ளிட்டவற்றை சுவையாகக் கூறினார்.
டத்தோ சகாதேவன் அவர்களுக்கு மலேசிய முத்தமிழ்சங்கம், ‘முத்தமிழ்க்காவலர்’ என்ற விருதை அளித்துள்ளது. நக்கீரர் தமிழ்ச் சங்கம் மனித நேயச் செம்மல் விருதை வழங்கி கௌரவித்துள்ளது. அவர் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தேசிய நில நிதி கூட்டுறவு சங்க ஆஸ்தான ஓவியர் லேனா,. முத்தமிழ்ச் சங்க தேசிய தலைவர் மனோகரன், துணைத் தலைவர் எட்வர்ட் ஞானசேகரன், செயலாளர் கரு பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் மதி மரீனாதேவி. செயலவை உறுப்பினர்களான பொன் சாமி , கருணாநிதி, கலைஞர் காந்திதாசன், சங்கிலிமுத்து, திருமதி லூசியா சாந்தி, குமாரி நாகேஸ்வரி உள்ளிட்டவர்களை இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களது சேவைக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அனைவருக்கும் மாலை, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவரின் பின்னணி, குணநலன்களைச் சொல்லி, அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அனைவருக்கும் மதிய விருந்துடன் நிகழ்வு நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேஜஸ் பவண்டேஷன் அறங்காவலர் மற்றும் கலைமகள் இதழ் பதிப்பாளர் பி.டி.டி. ராஜன் செய்திருந்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் துறைவாரியாக கல்லூரி மாணவர்கள் சர்க்கரை பொங்கலிட்டு சூரியனார்க்கு படைத்து உண்டு மகிழ்ந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கல்லூரி மைதானத்தில் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, குலபதி ஶ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த, முதல்வர் முனைவர் வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் முனைவர் ஜெயசங்கர், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி மாணவர்கள் குழுவாக மல்லர் கம்பம், கராத்தே, சிலம்பம், யோகா, தப்பாட்டம், தேவாரட்டம் ஆகிய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகளை உற்சாகத்துடன் செய்து காட்டினர். பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியை, வரலாற்று துறை உதவி பேராசிரியர் முருகன் தொகுத்து வழங்கினார். கல்லூரியின் விளையாட்டு துறை இயக்குனர் முனைவர் நிரேந்தன், விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் மற்றும் விவேகானந்த குருகுல கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சந்திரசேகரன், முனைவர் எல்லைராஜா இரகு, முனைவர் காமாட்சி, முனைவர் பிரேமானந்தம் ஆகியோர் மாணவர்களின் உடற்பயிற்சி திறமையை முன் நின்று ஒருங்கிணைத்தனர்.
மன அமைதி வேண்டும் போதெல்லாம் ஆலயங்களுக்குச் செல்வது என் வழக்கம். அலுவலகத்தில் ஓயாத வேலை, வீட்டில் மனைவியுடன் கருத்து வேறுபாடு, குழந்தைகள் பள்ளித் தேர்வுகள் முடித்து ரிலாக்ஸ் செய்ய விரும்புகிறார்கள் என ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் போதுமானது. உடனே வடசென்னை சுற்றுலாவுக்குக் கிளம்பிவிடுவோம். பள்ளி இறுதித் தேர்வுக்கு முன்னால் எனக்குத் தெரிந்த மாணவர்களை அவர்களது பெற்றோர்களுடன் ஏதாவது ஒரு சரஸ்வதி ஆலயம் அல்லது ஹயக்ரீவர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்வது ஒரு வழக்கம். அந்த வகையில் சென்ற ஒரு சுற்றுலா, இந்தத் தொடரில் இப்போது எழுதப்போகிறேன்.
பயணத்திட்டம் என்னவென்றால், பெரம்பூர் நரமுக விநாயகர், மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்ஹர் கோயில், பெரிய பாளையம் பவானியம்மன் கோயில், ஆத்துப்பாக்கம் சரஸ்வதி கோயில், சிறுவாபுரி முருகன் கோயில், ஆனந்த ஷிர்தி சாயி பாபா கோயில், ஞாயிறு சூரியனார் கோயில், ஶ்ரீ சீதா சமேத ஸ்ரீ கல்யாணராமர் ஆலயம், தேவதானம் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கு சென்று வருவது.
என்னுடன் வரும் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தவேரா கார் அல்லது மஹிந்த்ரா வேன் வாடகைக்கு எடுத்துக்கொள்வோம். தின்பதற்கு முறுக்கு, தட்டை, கடலை மிட்டாய், பிஸ்கட்டுகளாகியவை, குடிநீர் ஒரு கேன் ஆகியவை எடுத்துக்கொள்வோம். காலை 0530 மணிக்கு கிளம்பிவிடுவோம்.
முதலில் பெரம்பூர் நரமுக விநாயகர் கோயில். இது ஒரு கோயில் அல்ல. சாலையோரம் இருக்கின்ற ஒரு பிள்ளையார். அண்மையில் இதற்கு லைட் ரூஃபிங்க் ஷெட் போட்டிருக்கிறார்கள். நல்ல வண்ணமயமான களிமண் விநாயகர் பொம்மை. பெரம்பூரிலிருந்து மத்திய சென்னை நோக்கி வரவேண்டுமென்றால் இந்தப் பிள்ளையாரைக் கடந்து இரயில்வே கீழ்ப்பாலம் வழியாக வரவேண்டும். எனவே அந்த வழியாக இரண்டு சக்கர வாகனங்களில் அல்லது ஆட்டோவில், காரில் செல்பவர்கள் இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுப் போவார்கள். காலில் செருப்பு அணிந்திருந்தாலும் இங்கே நின்று விநாயகருக்கு கும்பிடு போடுவது நிற்காது.
படம் 1: சென்னை, பெரம்பூர் நரமுக விநாயகர்
நான் எங்கு வெளியூர் சென்றாலும் இந்த விநாயகர் அருகே வண்டியை நிறுத்தி வணங்கிவிட்டு, அவருக்கு ஒரு தேங்காய் காணிக்கை செலுத்திவிட்டு, உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டுத்தான் வெளியில் செல்வேன். நரமுக கணபதி என்று பெயர்தானே ஒழிய கணபதி யானை முகத்தோடு காட்சியளிப்பார். உட்கார்ந்த நிலையில் சுமார் 4 அடி உயர, வண்ணச் சிலை. பெரம்பூரின் இரயில்வே கீழ்மட்ட பாலச் சாலை தொடங்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. இப்போது முரசொலி மாறன் மேம்பாலம் கட்டியிருக்கிறார்கள். இருந்தாலும் கனரக வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் இன்றும் இந்த தரைப்பாலத்தின் வழியாகச் செல்கிறார்கள். இந்த நரமுக கணபதியை வணங்கித்தான் செல்கிறார்கள்.
இந்த சுற்றுலாவிலும் முதலில் நரமுக கணபதியைத் தரிசித்துவிட்டு அங்கிருந்து மூலக்கடை மாதவரம் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் (வட கிராண்ட் ட்ரங்க் ரோட்டில்) ஓரிடத்தில் இடப்புறம் திரும்பி பொன்னியம்மன்மேட்டில் இருக்கின்ற ஸ்ரீ பிரசன்ன லட்சுமி நரசிம்ஹர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலின் பிரகாரத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர் இருக்கிறார். அவரைத் தரிசிப்பதுதான் நோக்கம். இருந்தாலும் உடல், மனம் ஆகியவற்றில் ஏற்படும் சகல ரோகங்களையும் தீர்க்க வல்லவர் ஸ்ரீ நரசிம்ஹர் என்பதால் எங்கள் பயணத்திட்டத்தில் இக்கோவில் ஒரு அங்கமாகிறது. கோயிலில் நுழைந்ததும்
என்ற ஸ்லோகத்தை முணுமுணுத்தவாறே கோயிலை வலம் வந்தோம்.
இப்பகுதியில் வசித்து வந்த ஸ்ரீ கணபதி நாயக்கர், ஸ்ரீமதி நவநீதம்மாள் ஆகியோரின் கனவில் தோன்றி இறைவன் இங்கே கோயில் எழுப்புமாறு வேண்டிக் கொண்டதாகவும் அதன்படி அவர்கள் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோவிலைக் கட்டினார்கள் எனவும் மக்கள் கூறுகிறார்கள். கணபதி நாயக்கர், நவநீதம்மாள் இருவருடைய மண்ணால் செய்யப்பட்ட வண்ணச் சிலை ஒன்று கோயிலில் உள்ளது.
படம் 2: பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி நரசிம்ஹர்
ஸ்ரீ கல்யாண நரசிம்மர் நின்ற கோலத்திலும், கமலவல்லித் தாயார் அமர்ந்த கோலத்திலும் காணப்படுகிறார். சுவாமிக்கு எதிரே சிறிய கருட மண்டபம் உள்ளது. வெளியில் பிரகாரத்தில் சுதை சிற்பமாக ஸ்ரீ ஹயக்ரீவர் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ சுதர்சன ஆழ்வார், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் உள்ளன. விநாயகர், பால முருகன் மூர்த்தங்களும் உள்ளன.
1. நெல்லை மேயர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு; சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட திமுக கவுன்சிலர்கள் 2. மதத்தின் அடிப்படையில் சலுகை கொடுக்கவே Article 30 – கபில்சிபல் வாதம் 3. கோவிலுக்குள் பொது கழிப்பறை – அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவு 4. பாரததத்தின் நீளமான கடற்பாலம்; பிரதமர் மோடி திறப்பு
விஜய் சேதுபதி சிறந்த தமிழ் நடிகர். ஹிந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஹிந்தி, தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட அவரது புதிய படம் இப்போது வந்திருக்கிறது. அது சம்பந்தமான செய்தியாளர் சந்திப்பில், அவர் ரசிக்காத ஒரு கேள்வி அவரை நோக்கி வந்தது.
“தமிழ்நாட்டுல 75 வருஷமா ஹிந்தி எதிர்ப்பு இருக்கு. இங்க ஹிந்தி தெரியாது போடான்னு சொல்றாங்க. நம்ம மாநிலத்துல ஹிந்தி படிக்கணுமா வேண்டாமா” என்று ஒரு நிருபர் கேட்க, “இந்தக் கேள்வியை என்னை மாதிரி ஆள் கிட்ட கேட்டு உங்களுக்கு என்ன ஆகப்போகுது? இப்ப எதுக்கு இந்தக் கேள்வி? இது தேவை இல்லாத கேள்வி. நாம ஹிந்தி படிக்க வேணாம்னு சொல்லலை. திணிக்க வேணாம்னுதான் சொல்றோம்” என்று அந்த விஷயத்தை அவசரமாகத் தவிர்க்க நினைத்தார் விஜய் சேதுபதி. அதற்குக் காரணம் இருக்கிறது.
பல ஆண்டுகள் முன்பு, ஹிந்தி எதிர்ப்பு என்பது திமுக-வின் அரசியல் பாதையில் ஒரு மைல்கல்லாக இருந்தது. அப்போது ஹிந்தி எதிர்ப்பாளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, 1967-ம் ஆண்டு பாராளுமன்றம் ஒரு சட்டதிருத்தம் செய்தது. அதன் பின்னர், “ஐயோ, ஹிந்தித் திணிப்பு பண்றாங்களே!” என்று ஹிந்தி பேசாத மாநிலத்தில் ஒருவர் பாசாங்கு செய்யவும் முடியாமல் போனது.
சுருக்கமாக, என்ன சொல்கிறது அந்த சட்ட திருத்தம்? ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஒன்று விடாமல், ஹிந்தி மட்டும் மத்திய அரசின் அலுவல் மொழியாக இருக்கட்டும் என்று ஏற்றுக் கொண்டால் ஒழிய, அதன் பின்னர் பாராளுமன்றமும் அதற்கு இசைந்தால் தவிர, ஆங்கிலமும் முன்பு போல மத்திய அரசின் அலுவல் மொழியாகத் தொடரும். இதுதான் அதன் உறுதியான சாராம்சம். இதற்குப் பிறகு ஹிந்தித் திணிப்பு என்ற பேச்சுக்கே இடம் நஹி. இந்நாளில் ஹிந்தித் திணிப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்பது செத்த பாம்பு – இன்றைக்கு வெள்ளையனே வெளியேறு கோஷம் மாதிரி.
பல மொழிகள் பேசப்படும் இந்தியாவில், அதுவும் கல்வியறிவு குறைந்த நமது நாட்டில், அந்நிய மொழி ஆங்கிலம் எல்லா மக்களுக்கான தொடர்பு மொழியாக இருக்க முடியாது. நம் நாட்டில் அதிகப் பிராந்தியங்களில் பேசப்படும் ஹிந்தி அத்தகைய தொடர்பு மொழியாக அமைவது இயற்கை. அனைத்து மக்கள் தொடர்பு மொழியாக அதைக் கற்கும் அவசியத்தை, அதன் பொருளாதார அனுகூலத்தை, அதிகமான தமிழர்கள் இப்போது உணர்கிறார்கள். இந்தக் கால மாற்றமும் சேர்ந்து திமுக-வையும் அதன் அனுதாபிகளையும் மனதுக்குள் பின்வாங்க வைக்கிறது.
மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, கற்பனையான ஒரு பிசாசை உருவாக்கி அதனிடம் இருந்து மக்களைக் காப்பது தாங்கள்தான் என்று பேசித் தங்களை வளர்த்துக் கொள்பவர்கள் திமுக தலைவர்கள். அப்படித்தான் அவர்கள் சிருஷ்டித்த ஹிந்திப் பிசாசுக்கு அவர்களே இன்னும் செயற்கை சுவாசம் கொடுத்துப் பராமரிக்கிறார்கள். அந்தப் பிசாசு நம்மிடையே இல்லை என்று தெரிகிற மாதிரி யார் கேள்வி கேட்டாலும் திமுக தலைவர்களுக்குப் பிடிக்காது. திமுக-வோடு ஒன்றியிருக்கும் பிரபலங்களுக்கும் அந்த மாதிரிக் கேள்விகள் தலைவலி. விஜய் சேதுபதிக்கு அப்படித்தான் இருந்திருக்கும்.
விஜய் சேதுபதி நடிக்கும் ஹிந்திப் படங்களில் அவருக்காக டப்பிங் கலைஞர்களின் குரல் ஒலிக்கிறது. அதனால் அவர் ஹிந்தி சினிமாவிலும் பிழைக்கிறார். ஆனால் மற்ற பல துறைகளில் வேலை தெரிந்த தமிழ்நாட்டு இளைஞர்கள் ஹிந்தி படித்தால்தானே மற்ற மாநிலங்களில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியும்? அவர்களுக்கு ஹிந்தி மொழியறிவும் ஒரு திறன் என்றாகிறதே? அதை எளிதாக்கித் தருவது தமிழக அரசின் கடமை ஆகிறதே?
தாய் மொழியைக் கொஞ்சமாவது விட்டுத்தான் வேற்று மொழியான ஆங்கிலமோ ஹிந்தியோ படிக்க முடியும் என்பதில்லை. ஆனால் திமுக-வானது தமிழை அழிக்கவந்த மொழி ஹிந்தி, அதைத் தமிழர்கள் முற்றிலும் விலக்கி வைப்பது தமிழைக் காக்கும், தமிழை வளர்க்கும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கியது. படித்தவர்களும் அதில் சிக்கினார்கள், இப்போது வயதானபோது வருந்துகிறார்கள்.
ஒன்றைக் கவனியுங்கள். ‘ஹிந்தி அரக்கி’ நடமாடியபோது தனது தமிழைக் காத்துக் கொண்டவர், தாய் மொழியில் வல்லவராக விளங்கியவர், திமுக தலைவராக இருந்த கருணாநிதி. அவர் ‘போரிட்டு அந்த அரக்கியை அடக்கித் தமிழைக் காத்த பின்’ பிறந்தவர் அவர் பேரன் உதயநிதி. ஆனாலும் உதயநிதி பேசும் தமிழ் சுமார் ரகம்தான். கடமை, கண்ணியம், கட்டுப்பாடும் அதில் கிடையாது. இன்று திமுக இளைஞர்கள் காட்டும் ஹிந்தி எதிர்ப்பு – அல்லது ‘ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு’ – அக் கட்சித் தலைவர்களுக்கு மட்டும்தான் லாபம் சேர்க்கும். அவர்கள் காட்டிக் கொள்ளும் தமிழ்ப் பற்றும் போலியானது.
ஹிந்தி எதிர்ப்பை மகுடமாக அணிகிறது திமுக. ஆனால் அந்தக் கட்சி சில மாதங்கள் முன்பு (16.9.2023) அதிகார பூர்வமாகத் தனது பெயரில் ஹிந்தி மொழியில் ட்வீட் செய்தது. “மகளிர்க்கு மாத உரிமைத் தொகை கிடைத்துவரும் போது, ஸ்டாலின்தான் இம் மண்ணை ஆள்வார்” என்ற அர்த்தத்தில் ஸ்டாலின் படம் போட்டு ஹிந்தியில் மார் தட்டியது திமுக. வடமாநில மக்களிடம் திமுக ஹிந்தியில் பேச விரும்புகிறது. ஆனால் தமிழக இளைஞர்கள் ஹிந்தி படிக்க வசதிகள் செய்து அவர்கள் மற்ற மாநிலங்களில் எளிதாக வேலை தேடிக் கொள்ள திமுக உதவாது. நம் இளைஞர்களை இங்கேயே வைத்து அவர்களின் ஓட்டுக்களை அள்ள வேண்டுமே?
திமுக-வின் முக்கியத் தலைவர்களுக்கு ஒன்று தெரியும். அவர்களது தொழில் பிரதானமாகத் தமிழகத்தில் நடக்கிறது. திமுக அகில இந்திய அளவில் வளர்ந்து அந்த சக்தியில் அவர்கள் யாரும் இந்தியாவின் பிரதம மந்திரி ஆக முடியாது. அதனால் ஹிந்தி படிக்காமல் இருப்பது, கட்சியினரைப் போடா-வாடா கோஷங்கள் போடவைப்பது, என்பது அவர்களுக்கு நஷ்டத்தைத் தராது. அவர்களின் லாபக் கணக்கு வேறு. கணிசமான தமிழ்நாட்டு எம்.பி-க்களை வைத்து மத்திய ஆட்சியில் பங்கு பெறவேண்டும். வேண்டிய பங்கு கிடைத்து விட்டால் போதும். யார் எக்கேடு கெட்டாலும் என்னடா!
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
Blog: https://rvr-india.blogspot.com
வாழ்க்கையின் சில கணங்கள், இறைவனின் ஆசிகளாலேயே நிறைவடைகின்றன, மெய்யானவையாகின்றன. இன்று பாரத நாட்டவர்களான நம்மனைவரைக்கும், உலகெங்கும் பரவியிருக்கும் இராம பக்தர்களுக்கும், இப்படிப்பட்டதொரு பவித்திரமான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
அனைத்துத் திசைகளிலும், பிரபு ஸ்ரீ இராமச்சந்திரனின் பக்தியின், அற்புதமான சூழல் நிலவுகிறது. நாலாபுறங்களிலுமே, ராமநாமத்தின் எதிரொலியைக் கேட்க முடிகிறது. ராமபஜனையின், அற்புதமான, சௌந்தர்யம் நிறைந்திருக்கிறது. அனைவருமே ஜனவரி மாதம், 22ஆம் தேதிக்காக காத்திருக்கின்றார்கள். அந்த வரலாற்றுப்பூர்வமான புனிதமான கணத்திற்காகப் பார்த்திருக்கின்றார்கள்.
ஆனால் இப்போது, அயோத்தியிலே, ராம் லலாவின் பிராணபிரதிஷ்டைக்கு இன்னும், 11 நாட்களே எஞ்சியிருக்கின்றன. என்னுடைய பெரும்பேறு என்னவென்றால், எனக்கும் கூட, இந்தப் புண்ணியமான சந்தர்ப்பத்தில் பங்கெடுக்கும், வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில், இது கற்பனைக்கு எட்டாத, அனுபவத்திற்கான வேளை. நான் உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிறேன்.
உணர்ச்சிகளால் நெகிழ்ந்து போயிருக்கிறேன். முதன்முறையாக என் வாழ்க்கையிலே, இதுபோன்ற ஒரு உணர்ச்சி வெள்ளத்தை அனுபவிக்கிறேன். நான் வித்தியாசமான உணர்வுகளின் சங்கமத்தை எதிர்கொண்டு வருகிறேன். என்னுடைய உள்மனத்தின் இந்த உணர்வுப் பயணம், என்னை நான், வெளிப்படுத்துவதற்காக அல்ல. அனுபவிப்பதற்கான தருணம்.
நான் விரும்பினாலும் கூட, இதன் ஆழம் இதன் பரந்துபட்ட தன்மை, இதன் தீவிரத்தைக் கூட, சொறகளில் வடிக்க இயலவில்லை. என்னுடைய இந்த நிலையை, உங்களால் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
எந்தக் கனவினை, பற்பல தலைமுறைகளும், பல்லாண்டுகளாகவே, ஒரு உறுதிப்பாடாக, தங்களுடைய இதயத்திலே பூட்டி வாழ்ந்தார்களோ, அது இன்று, நனவாகும் வேளையிலே இருந்து அனுபவிக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கிறது. இறைவன் எனக்கு, பாரதநாட்டவர் அனைவரின் பிரதிநிதியாக இருக்கும், கருவியாக ஆக்கியிருக்கிறான்.
நிமித்தமாத்ரம், பாவ சவ்ய சாசின். இது மிகப்பெரிய பொறுப்பாகும். நமது சாஸ்திரங்களிலே கூட, என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால், நாம், இறைவனை வணங்குதற்கு, அவனைப் பூஜிப்பதற்குக்கூட, நமக்குள்ளே இறையுணர்வை விழிப்படையச் செய்ய வேண்டும். இதன் பொருட்டு, சாஸ்திரங்களிலே, விரதங்களும் தீவிரமான நியமங்களும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றை, பிராண பிரதிஷ்டைக்கு முன்பாக கடைப்பிடிக்க வேண்டும். அந்த வகையிலே, ஆன்மீகப் பயணத்தின் தவம்புரியும் ஆன்மாக்கள், மேலும் மகா புருஷர்களிடமிருந்து, எனக்கு கிடைத்த வழிகாட்டுதல்படி, அவர்களும் கூட யமநியமங்களை அறிவுறுத்தினார்கள். அதன் வழி நின்று, நான் இன்றிலிருந்து, 11 நாட்களுக்கு, விசேஷமான அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்க இருக்கிறேன்.
இந்த பவித்திரமான வேளையிலே, நான் இறைவனிடத்திலே வேண்டிக் கொள்கிறேன், ரிஷிகள்-முனிவர்களின் புனித பாதங்களில் பணிகிறேன், மேலும், இறைவனின் வடிவங்களான மகேசர்களான குடிமக்கள், அவர்களிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன், நீங்கள் அனைவரும், எனக்கு நல்லாசி வழங்குங்கள். இதனால், நான் மனதால் வாக்கால் செயலால், எந்த ஒரு குறைபாடும் என் தரப்பில் இல்லாதிருக்க வேண்டும்.
நண்பர்களே, என்னுடைய பேறு என்னவென்றால், 11 நாட்கள் என்ற இந்த என்னுடைய அனுஷ்டானத்தை, நான் நாசிக் தலத்தின், பஞ்சவடியிலிருந்து தொடங்குகிறேன். பஞ்சவடி, எப்படிப்பட்ட பவித்திரமான பூமி என்றால், அங்கே, பிரபு ஸ்ரீ இராமன், கணிசமான காலத்தைக் கழித்தார்.
மேலும் இன்று, என் விஷயத்தில், ஒரு சுகமான தற்செயல் நிகழ்வு, இன்றைய தினம், ஸ்வாமி விவேகானந்தரின் ஜன்ம தினமும் ஆகும் என்பதே. நம்முடைய ஸ்வாமி விவேகானந்தர் தானே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அடிமைத்தளையில் சிக்குண்டிருந்த பாரதீய ஆன்மாவைத் தட்டி எழுப்பினார்!! இன்று, அதே தன்னம்பிக்கை, மகோன்னதமான இராமர் கோயிலின் வடிவிலே, நம்முடைய அடையாளமாக ஆகி, அனைவரின் கண் முன்பும் துலங்குகிறது.
மேலும், சர்க்கரைப் பந்தலில் தேன்மாரியைப் பாருங்கள்!! இன்று, அன்னை ஜீஜாபாயின் பிறந்த நாளும் ஆகும். மாதா ஜீஜாபாய்!!….. இவர் தாம், சத்ரபதி சிவாஜி மகாராஜரின் வடிவினிலே, ஒரு மகாபுருஷனை ஈன்றெடுத்தார். இன்று நாம், நமது பாரதத்தை, ஒன்றுபட்ட பூமியாகப் பார்க்கிறோமென்றால், இதிலே, அன்னை ஜீஜாபாய்க்கு ஒரு மகத்தான பங்களிப்பு இருக்கிறது.
மேலும் நண்பர்களே, நான் அன்னை ஜீஜாபாய் பற்றிய புனிதமான நினைவுகளை மனதில் கொள்ளும் வேளையிலே, எனக்கு என்னுடைய, தாயைப் பற்றிய நினைவு வருவதென்பது, மிகவும் இயல்பான ஒன்றாகும். என்னுடைய தாய், வாழ்க்கையின் இறுதிக்கட்டம் வரை, ஜபமாலையை உருட்டிக் கொண்டு, சீதாராமனைப் பற்றியே நினைந்த வண்ணம் இருந்தார்.
நண்பர்களே, பிராண பிரதிஷ்டையின் மங்கலமான வேளை, சராசரத்தின் படைப்பின் விழிப்புநிறந்த கணம், ஆன்மீக அனுபவத்தின் இந்த மஹோத்சவம், கர்ப்பகிருகத்திலே, அந்தக் கணத்திலே, என்னதான் நடக்காது!! நண்பர்களே, உடல் அளவிலே அந்த பவித்திரமான கணத்தின் சாட்சியாக என்னவோ நான் அங்கே இருப்பேன். ஆனால், என் மனத்திலே, என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும், 140 கோடி நாட்டுமக்களும் என்னுடனே இருப்பார்கள். நீங்கள் என்னுடன் கூட இருப்பீர்கள், அனைத்து இராமபக்தர்களும் என்னுடனே இருப்பார்கள்.
மேலும், அந்த விழிப்புநிறைந்த கணம், நம்மனைவரின், நேரடி அனுபவமாக இருக்கும். நான் என்னுடன் கூட, இராமர் கோயிலுக்காக, தங்களுடைய இன்னுயிரை சமர்ப்பித்த, எண்ணிலடங்கா, ஆளுமைகளிடமிருந்து, உத்வேகம் பெற்றுச் செல்வேன். அன்பு தவம் நிறைந்த அந்த மாமனிதர்கள், 500 ஆண்டுக்கால பொறுமை, ஆழ்ந்த பொறுமை நிறைந்த அந்தக் காலம், எண்ணற்ற தியாகம் மற்றும் தவத்தின் சம்பவங்கள், கொடையாளிகளின் உயிர்த்தியாகிகளின் வரலாறு, இவர்களின் எத்தனையோ பேர்களின், பெயரைக் கூட அறிவார்களில்லை.
ஆனால், இவர்களின் வாழ்க்கையின் ஒரே இலக்கு என்று சொன்னால், மகத்தான இராமர் கோயிலின் நிர்மாணமாகவே இருந்து வந்திருக்கிறது. இப்படிப்பட்ட கணக்கில்லாத மனிதர்களின், நினைவுகள் எல்லாம் என்னுள்ளே இருக்கும். 140 கோடி நாட்டுமக்கள், அந்தக் கணத்தில் என்னோடு இணையும் போது, அப்போது நான், உங்களிடமிருந்து சக்தி பெற்று, கர்ப்பகிருகத்தில் பிரவேசிக்கும் போது, அப்போது என்னுள்ளும் கூட, ஏற்படும் உணர்வு, நான் தனியாள் இல்லை, நீங்கள் அனைவரும் என்னோடு கூடவே இருக்கிறீர்கள் என்பது தான்.
நண்பர்களே, இந்த 11 நாட்கள், தனிப்பட்ட முறையிலே, நான் விதிகளைக் கடைப்பிடிப்பது உறுதி. ஆனால் என் உணர்வுலகில், நீங்கள் அனைவரும் கலந்து கரைந்திருக்கிறீர்கள். என் வேண்டுதல் எல்லாம், நீங்களும் கூட, மனதார, என்னோடு இணைந்திருங்கள் என்பது தான். ராம் லலாவின் திருப்பாதாங்களில், நான் உங்களின் உணர்வுகளையும், எனக்குள் பொங்கும் உணர்வுகளை, அர்ப்பணிப்பது போலவே, அதே சிரத்தையோடு அர்ப்பணிப்பேன்.
நண்பர்களே, நாம் அனைவரும் ஒரு சத்தியத்தை நன்கறிவோம். அதாவது இறைவன் உருவமற்றவன். ஆனால், இறைவன், வடிவத்தோடும் கூட, நம்முடைய ஆன்மீகப் பயணத்திற்கு பலம் அளிப்பவன். மகேசர்களான மக்களிடத்திலே, இறைவனின் வடிவத்தைக் காண முடியும். இதை நான் நேரடியாகக் கண்டும் இருக்கிறேன், உணர்ந்தும் இருக்கிறேன். ஆனால், இறைவன் வடிவில் இருக்கும் இதே மக்கள், சொற்களில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது, ஆசியளிக்கும் போது, அப்போது என்னிலும் கூட, புதிய சக்தி பெருக்கெடுத்து ஓடுகிறது.
இன்று எனக்கு, உங்களின் நல்லாசிகளின் தேவை இருக்கிறது. ஆகையினாலே, நான் வேண்டுவதெல்லாம், சொற்களில், எழுத்துக்களில், உங்களின் உணர்வுகளைக் கண்டிப்பாக வெளிப்படுத்துங்கள். கண்டிப்பாக உங்கள் ஆசிகளை எனக்குத் தாருங்கள்!! உங்களின் ஆசிகளின், ஒவ்வொரு சொல்லும், எனக்கு, சொல் அல்ல, மந்திரம் ஆகும். மந்திரத்தின் சக்தி என்ற முறையிலே, இது கண்டிப்பாகச் செயல்படும்.
நீங்கள் உங்கள் சொற்களிலே, உங்களின் உணர்வுகளை, நமோ செயலியின் வாயிலாக, நேரடியாக என்னிடம் கொண்டு சேர்க்க முடியும். வாருங்கள்!! நாமனைவரும், பிரபு இராமனின் பக்தியில் மூழ்கித் திளைப்போம்!! இந்த உணர்வோடு கூட, இராம பக்தர்களான உங்கள் அனைவருக்கும், கோடானுகோடி தெண்டன் சமர்ப்பிக்கிறேன்!!
விளக்கம்: முந்தைய இரு பாசுரங்களில் மார்கழி நீராட்ட நோன்பை எடுத்துக் கூறி, அதற்கு வேண்டிய சங்கு முதலான உபகரணங்களைச் சொன்ன ஆய்ச்சியர்கள், நோன்பினை முடிக்கும்போது அலங்கரிக்க ஆடை ஆபரணங்களைப் பெற்று உடுத்தி, பால் சோறு உண்டு பறை தருமாறு கண்ணனிடம் கோரினர். அதற்கு கண்ணன், பெண்களே. உங்கள் கருத்து இவ்வளவு என்று எனக்குத் தோன்றுவில்லை. நீங்கள் கேட்டதையும் இன்னும் சில கேட்டால் உங்கள் நிலையை அறிந்து அதையும் நான் தரவேண்டும் என்றால், அதற்காக நீங்கள் கடைபிடிக்கும் உபாயம் ஏதும் உண்டோ? என்று கேட்டான் கண்ணன். அதற்கு பதிலாக ஆய்ச்சியர், எங்களுக்கு இரங்கி நீ தயை காட்ட வேண்டும் என்று கண்ணனிடம் பிரார்த்திக்கும் பாசுரம் இது.
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னே சென்று காடு சேர்ந்து, உடலுக்கு ஊக்கமூட்டும் உணவுகளையே உண்டு திரிகிறோம். அறிவு குறைவுப் பட்டிருக்கும் எங்கள் இடைக்குலத்தில் வந்து பிறந்தாய். உன்னைப் பெறுவதற்குத் தக்க புண்ணியம் செய்தவர்களாகவும் நாங்கள் இல்லை. ஆயினும் எங்கள் இறைவனான கண்ணபிரானே. உன்னோடு எங்களுக்கு உண்டான உறவானது, இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாதது. உலக மரியாதையாகிற எதையும் நாங்கள் அறியாத சிறு பிள்ளைகளாக உள்ளோம். உன்னை அன்பினால் சிறிய பேராலே நாங்கள் அழைத்ததைக் குறித்து கோபிக்காதே. உன்னை ஆராதிப்பவர்களை அன்பாக அணுகும் நீ எங்கள் மீது கோபம் கொள்ளாமல், பறையைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர்.
பெருமானுடன் தங்களுக்கு ஏற்பட்ட உறவை எடுத்துக் காட்டி, முதலடியில் பசுக்களின் பின்னே போய்த் திரிந்து உடல் வளர்க்கிறோம்; எங்களுக்கு நற்கருமம் இல்லை என்றும், இரண்டாம் அடியில், அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து என்றும் தங்களைத் தாழ்த்தி, குறை ஒன்றுமில்லாத கோவிந்தா என்று நான்காம் அடியில் அவனைப் போற்றி, ஐந்தாம் அடியில் உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்று பிரிக்க முடியாத பந்தத்தைக் கூறி, ஏழாம் அடியில் சீறியருளாதே என்று, தாங்கள் முன்னர் ஏதேனும் அவமரியாதையாக நடந்துகொண்டால் அதற்கு மன்னிப்பும் கேட்டு, எட்டாம் அடியில் “இறைவா நீ தாராய் பறை” என்று முடிக்கிறார் ஸ்ரீஆண்டாள்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முடக்க சதி- முதலமைச்சரின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை. தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்பி போரட்டத்தை உதயகுமார் நடத்திய போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் போராட்டங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்று காவல்துறையினரின் துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தினார்.
இந்த அணுகுமுறை போராட்டக்காரர்களுக்கு சாதமாக அமைந்ததால் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு களேபரமானது ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன கைது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாமல் அதிமுக, திமுக இரண்டு ஆட்சிக் காலங்களிலும் வழக்குகளை ரத்து செய்ததன் காரணமாக தான் இப்போது மீண்டும் மக்களை தூண்டி போராட்டம் நடத்த சுப.உதயகுமார் திட்டமிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து சில அமைப்புகள் அன்னிய நாடுகளின் துணையுடன் மக்களை தூண்டி போராட்டம் நடத்தி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடத்தி அந்த ஆலை மூடப்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர் மேலும் நாட்டின் காப்பர் தேவைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது குலசேகரன்பட்டினம் அனல் மின் நிலையத்திற்கு எதிராக சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்கள் காரணமாக பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீட்டு செய்ய முன்வராமல் வேறு மாநிலங்களில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழக அரசு தொழில் வளர்ச்சியை பெருக்க உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ள நிலையில் இது போன்ற போராட்டங்களினால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் இன்றியமையாத ஒன்று மேலும் வளர்ந்த நாடுகளை போன்று போக்குவரத்து, ரயில்வே என அனைத்து துறைகளிலும் மின்சார தேவை அதிகரித்து வருகிறது எனவே மின்சார தேவைக்காக புதிய திட்டங்களும் அவசியமாகிறது.
எனவே உலைகள் குறித்த மக்களின் அச்சத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம் மக்கள் மத்தியில் அணு உலைகள் குறித்து தவறான கருத்துக்களை பரப்பி போரட்டத்தை முன்னெடுக்கும் சுப.உதயகுமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.
செங்கோட்டை மற்றும் பிரானூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்!
ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதேபோல தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல்நிலையம் மேல்புறம் உள்ள அருள்மிகு ராம பக்த ஆஞ்சநேயா் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் சாமிக்கு முழு உருவ வெள்ளி அங்கி அணிவித்து வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் சாத்தி சிறப்பு வழிபாடும், தீபாராதனையும் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதே போல செங்கோட்டை பிரானூர் பார்டரில் உள்ள ஸ்ரீ ஜெய வீர் அபயகஸ்த சர்வசக்தி ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு காலையில் ஆஞ்சனேயா் ஹோமம் நடைபெற்றது.
தொடா்ந்து பஞ்ச திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து சந்தனக்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அனுமன் ஜயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் களைகட்டின. இதனை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் சென்று ஹனுமத் தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகம் மற்றும் கேரளத்தில் மார்கழி மாதம் வரும் அமாவாசை மற்றும் மூல நட்சத்திர நாளில் ஹனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, இன்று புகழ்பெற்ற அனுமன் தலங்களில் ஆஞ்சநேயருக்கு ஜன்ம தினமாகக் கொண்டாடி, சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் உள்ளது புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில். இங்கே ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து ஹனுமத் தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைப் போல், புகழ்பெற்ற தலமான நாகர்கோவில் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, வடைமாலைகள் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.