Home Blog Page 250

சிறுபான்மை தாஜா‌ அரசியல் தான் திராவிட மாடலா?

kadeswara subramaniam hindu munnani - 2026

மாவட்ட தலைநகரங்களில் கிறிஸ்தவ, முஸ்லீம்களுக்கு பிணம் புதைக்க இடம் – இந்துக்களை புறக்கணிக்கும் திமுக – சிறுபான்மை தாஜா‌ அரசியல் தான் திராவிட மாடலா? என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு சிறுபான்மையினரின் துதி பாடி அவர்களுக்கு மட்டுமான அரசாக அடையாளப்படுத்திக் கொள்வதிலேயே நாட்டம் உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய மதபோதகர்ளுடனும் தனியாக ஆலோசனை நடத்தி சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்களை வெளியிட்டுள்ளார்.

  1. மாநில அரசால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் சான்றிதழ் இனி நிரந்தரமாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
  2. அரசு சாரா தொண்டு நிறுவனங்களை பதிவு செய்வதிலும் மானியம் பெறுவதிலும் நடைமுறைகள் தளர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
  3. ஐந்தாண்டுக்கு ஒருமுறை சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். தற்போது தமிழக அரசின் இந்த அறிவிப்பால் இனி புதுப்பிக்க தேவையில்லை என அறிவிப்பு. அனால், ஒரு இந்து கல்வி நிறுவனம் பள்ளிக்கூடமோ, கல்லூரியோ தொடங்கினால் எத்தனை விதமான இடர்பாடுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. எவ்வளவோ அரசாங்க நடைமுறைகளை பின்பற்றி தான் பள்ளிகள் உருவாக்கப்படும். ஆனால் சிறுபான்மையினர் என்றால் கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது தமிழக அரசு.
  4. கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டங்கள் மற்றும் முஸ்லிம்களின் கபரஸ்தான் போன்றவற்றை விரிவுபடுத்துவதற்காக மாவட்ட தலைநகரங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளால் கட்டித் தரப்படும் என்று உறுதி.
  5. கல்லறைகளில் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் இன்னொரு உடலை புதைத்துக் கொள்ள விதிகள் தளர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
  6. இதில் சிறப்பாக, ஆழமாக ஆலோசித்து புதைக்கப்பட்ட சவப்பெட்டியில் 12 மாதங்களுக்கு பிறகு அதே குடும்பத்தை சேர்ந்தவர்களை புதைத்துக் கொள்ளலாம், உலோகத்தால் செய்யப்பட்டிருந்தால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களை புதைத்துக் கொள்ளலாம் என்று கிறிஸ்தவர்களை குதூகலப்படுத்தி இருக்கிறார்.

7) கோவில், தேவாலயம், மசூதி போன்ற இடங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்ற உறுதிமொழி கூறியுள்ளார். இத்தனை அறிவிப்புகளை வழங்கிய முதல்வர் கண்துடைப்புக்காகத் தான் கோவில் நிலம் மீட்பு என்று கூறியுள்ளதாக மக்கள் எண்ணுகின்றனர்.

மதசார்பற்ற அரசியல் செய்வவதாகக் கூறிக் கொள்ளும் முதல்வர் இந்துக்களின் சுடுகாடுகள் பராமரிப்பின்றி கிடக்கின்றன என்பது பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. பல சுடுகாடுகளில் அடிப்படை வசதிகளே இல்லை. சென்னை மற்றும் பிற முக்கிய மாவட்டங்களில் இந்துக்களின் சடலங்களை எரிப்பதோடு சரி. புதைப்பதற்கு அரசாங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை.

இந்துக்கள் உயிரோடு இருந்தாலும் உரிமைகள் மறுக்கப்படுகிறது. இறந்த பின்பும் கூட அவர்களது உரிமைகள் பறிக்கப்படுகிறது. இந்துக்களின் கோவில்களை போன்று இந்துக்களின் சுடுகாடுகளும் அரசாங்கத்தின் பிடியில் சிக்கி சீரழிகிறது, கட்டண கொள்ளை நடக்கிறது.

சென்னை,கோவை, திருப்பூர், சேலம் உட்பட அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் உள்ள இந்து சுடுகாட்டு இடத்தில் இடித்து நவீன கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன.

அதேபோல ஒரு இந்து உடலை புதைத்தால் பல்வேறு விதமான ஆவணங்களை வழங்கியும் கூட இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு பெரும்பாடு பட வேண்டி இருக்கின்றது. இப்படி பெரும்பான்மை இந்துக்கள் நசுக்கப்படுகிறார்கள் என்பது முதல்வருக்குத் தெரியாதா?

முஸ்லிம் கிறிஸ்தவர்களின் கல்லறை தோட்டங்களுக்கும் கபர்ஸ்தானங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்பது இந்துக்களின் கேள்வியாக உள்ளது.

எத்தனையோ இடங்களில் மசூதி,சர்ச் போன்று கபர்ஸ்தான் மற்றும் கல்லறை தோட்டங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படுகிறது. அங்கு பிணத்தை புதைப்பதற்கு கட்டணம் வசூலிக்க்கப்படுகிறது. அதில் வரும் வருமானத்தையும் அவர்களே பயன்படுத்துகின்றனர். இவ்வாறிருக்க அரசு பணத்தை அங்கு கொண்டு கொட்டுவது ஏன்?

மசூதி சர்ச் நிலங்களை ஆக்கிரமித்ததாக முதல்வர் கூறுவது அபத்தம். பல மாவட்டங்களில் இந்து சுடுகாடுகளையும் இந்து கோவில்களையும் கபரஸ்தானும், கல்லறைத் தோட்டங்களும் ஆக்கிரமித்துள்ளது என்பதற்கான ஆதாரங்களை அடுக்க முடியும்.

சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடும் இடுகாட்டில் அதிமுக; தி.மு.க போன்ற கட்சிகள் மாறி மாறி ஊழல் தாண்டவம் ஆடி வருகின்றன.

தமிழகத்தில் பல விவசாய நிலங்கள் கல்லறை தோட்டங்களாக மாறி இருப்பது கவலைக்குரியது. ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கள்ளிமந்தயம், கன்னிவாடி, அம்பிளிக்கை போன்ற பகுதிகளில் பல இந்துக்களின் விவசாய நிலங்கள் கல்லறை தோட்டங்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளுக்கு காரணம் யார்?

இந்த அறிவிப்புகளுக்கு அடிப்படைக் காரணம் இப்பொழுது திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளிடையே நடைபெறும் யார் சிறுபான்மையினரை தாஜா செய்வதில் சிறந்தவர், அவர்களின் வாக்கு வங்கியை யாருக்கு சாதகமாக்குவது என்ற போட்டிதான். சிறுபான்மை நலன் விஷயத்தில் திமுகவும் அதிமுகவும் சளைத்தவர்கள் இல்லை. போட்டி போட்டுக் கொண்டு சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாக தங்களை காண்பித்துக் கொள்கின்றனர்.

அதிமுக ஆட்சியில் எஸ் டி பி ஐ என்ற முஸ்லிம் அமைப்பின் மீது பல வழக்குகள் போடப்பட்டது. ஆனால் இப்பொழுது எஸ்டிபிஐயின் மாநில மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொள்கிறார். அவர் கலந்து கொண்ட இரண்டாவது நாளே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிறுபான்மையினர் நலனுக்காக கூட்டம் நடத்துகிறார்.

கருமத்தம்பட்டியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இதையெல்லாம் மனதில் கொண்டே அதிமுக பக்கம் சிறுபான்மையினர் சென்று விடக்கூடாது என்று உடனடியாக கல்வி நிறுவனங்களுக்கு, கப்ரஸ்தான், கல்லறைத் தோட்டம் என்று அவர்களுக்காக சலுகைகளை அவசர கதியில் முதல்வர் அறிவிக்கிறார்.

கிறிஸ்தவ உபதேசிகளுக்கு நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டிய நடைமுறைகளை தளர்த்துகிறார். கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்கள், கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்கள் என சிறுபான்மையினருக்காக தங்களது மூளையையும் பணத்தையும் செலவிடும் திராவிட மாடல் அரசு பெரும்பான்மை இந்து சமுதாயத்தைப் பற்றியும் கொஞ்சம் கவலைப்பட வேண்டும். தமிழக அரசு பெரும்பான்மை இந்துக்களின் பல பிரச்சினைகளை கண்டு கொள்வதே இல்லை.

அனால் இனி உங்களின் வாக்கு வங்கி அரசியல் எடுபடாது தூங்கிய இந்துக்கள் விழித்து விட்டார்கள் . ஒட்டுமொத்த இந்துசமுதாயமும் கேள்வி கேட்கும் காலம் வந்துவிட்டது. இனியாவது திமுக; அதிமுக போன்ற கட்சிகள் இந்துக்களின் நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

‘லவ் ஜிஹாத்’ பிரசாரப் படம் என குற்றச்சாட்டு! ஓடிடி.,யில் இருந்து நீக்கப்பட்ட அன்னபூரணி!

annapooranai movie - 2026
#image_title

லவ் ஜிஹாத் பிரசாரப் படம் என்றும், நாட்டின் பெரும்பான்மை மதத்தையும் நம்பிக்கைகளையும் புண்படுத்தும் கருத்துப் படம் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவான நிலையில், அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

‘அன்னபூரணி’ திரைப்படம் குறித்தும், அதன் கதை அம்சம் குறித்தும் படம் எடுக்கப்பட்டு வந்த போதே தகவல்கள் வெளியாகி, சமூகத் தளங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்தப் படத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று தணிக்கைத் துறைக்கு சிலர் வேண்டுகோளும் வைத்தனர். எனினும், இந்தப் படம் டிச.1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான அன்றிலிருந்தே கடும் விமர்சனத்தைப் பெற்றது. எனினும், தமிழகத்தில் இந்தப் படம் பெரும்பான்மை ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டது.

நடிகை நயன்தாராவின் 75 ஆவது படம் என எதிர்பார்ப்புகளுடன் அன்னபூரணி படம் ரிலீஸ் ஆனது. இதில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கி இருந்தார்.

படம் வெளியான முதல் நாளில் இந்த படம் 60 லட்சம் ரூபாய் அளவுக்கு வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து திரையரங்கு மூலமாக சுமார் 80 லட்சம் மட்டுமே தயாரிப்பாளர் தரப்பு வரவாக இந்தப் படம் கலெக்ஷன் காட்டியது. ஆனால் இந்தப் படத்துக்கு நயன்தாராவின் சம்பளம் 10 கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. இதனால், படத்தின் நட்சத்திர நடிகைக்குக் கொடுத்த சம்பளத்தின் அளவு கூட படம் கலெக்சன் காட்டவில்லை, அதனால் தயாரிப்பாளர் தலையில் துண்டு போட்டுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

சமூகத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை விமர்சனம், மற்றும் சென்னையில் பெய்த பலத்த மழை போன்ற பல்வேறு காரணிகள் இதன் பின்னணியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இதை அடுத்து இப்படம் டிச.29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஓடிடி.,யில் வெளியான பின்னர், இப்படத்திற்கு பலத்த எதிர்ப்புகள் வந்தது. மும்பையைச் சேர்ந்த சிவசேனா கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் ‘அன்னபூரணி’ திரைப்படம் இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும், லவ் ஜிகாத்தை பிரசாரம் செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை காவல் நிலையத்தில் இப்படத்திற்கு எதிராக புகாராளித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து பலர் ‘அன்னபூரணி’ படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து இப்படம் நீக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்து மதத்தை புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.

நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்!

hanuman1 - 2026

“ஸ்ரீராம தூதன்”

மீ. விசுவநாதன்

“அஞ்சனை மைந்தனை ஆருயிர்த் தோழனை
நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்
அஞ்சுதல் இல்லாத ஆனந்த நாட்களாய்
செஞ்சுதான் வைப்பான் சிறந்து. (1)

சிறந்ததோர் பூமியாம் சீராம் அயோத்தி
பிறந்ததோர் ராமனைப் போற்றிப் பறந்தவன்
கிட்கிந்தை சுக்ரீவன் கிட்டே இருந்தவன்
சட்டெனக் காப்பான் களித்து. (2)

களித்துநாம் சொல்கிற ராம்ராம் ஒலியில்
குளித்து மகிழும் குழந்தை – துளியும்
ஒளிக்கும் குணமிலாத் தூய ஒளியோன்
அளிப்பான் நமக்கே அருள். (3)

அருளாளன் ஆஞ்சநேயன் ஆழ்கடல் தாண்டி
பெருமானின் சேவையாய்ச் சீதைத் திருமாதைத்
தேடித் திரிந்துதான் கண்டு தெளிந்ததைப்
பாடியே சொன்னான் பணிந்து. (4)

பணிந்தவன் சொன்னதைப் பார்த்து மகிழ்ந்து
துணிந்தவன் நீயெனச் சொல்லி – பிணிதனைத்
தீர்த்தவன் என்றே பிரியமாய் அன்பிலே
வேர்த்தானே ராமன் வியந்து. (5)

வியத்தகு வித்தைகள் செய்யும் திறவோன்;
நயத்தகு வார்த்தைகள் நல்கி பயத்தை
விரட்டுற சொல்லோன்; வினைவென்ற யோகி;
அரட்டை அகன்ற அறம். (6)

அறத்தினது நாயகன் அன்புப் பிடியில்
மறத்தை மறந்த மதியோன் – புறத்தும்
அகத்தும் இராம அழகில் திளைக்கும்
மகத்தான ஞானி மனம். (7)

மனத்தில் துணிவு, மதியில் அகழம்,
சினத்தைச் சிதைத்த குணத்தோன் – இனத்தில்
குரங்கே எனினும் குவிக்கும் தியான
அரங்கில் அடங்கும் அகம். (8)

அகங்காரம் இல்லா அழகன் அனுமன்;
முகங்கோணாத் தூயதோர்த் தொண்டன் – இகத்தில்
பரத்தில் இணையில்லா பக்தரில் முக்தன் ;
கரத்தைக் குவித்திருப்போன் காப்பு. (9)

காப்பதில் ராம கனிவு; பகைக்கெனில்
ஆப்படிக்கும் வீரன்; அனைவர்க்கும் கூப்பிடு
தூரத்தில் உள்ள துணையவன்; ஞாலத்தின்
சாரமாய்த் தோன்றுகிற அஞ்சு. (10)
( அஞ்சு – பஞ்ச பூதமாக இருப்பவன்)


(இன்று – 11.01.2024 – ஸ்ரீ அனுமன் பிறந்த தினம்)


அரசு நலத்திட்டங்களை அனைத்து நிதியுதவிப் பள்ளிகளுக்கும் வழங்க கோரிக்கை!

tn secretariat - 2026
#image_title

காலை உணவுத் திட்டம் மற்றும் அரசு நலத் திட்டங்களை அனைத்து நிதியுதவிப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று, தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து தேசிய ஆசிரியர் சங்க (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் மு.கந்தசாமி வெளியிட்ட அறிக்கையில்,

சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் கூறியதாக வந்துள்ள பத்திரிக்கை செய்திகளில் கிராமப்புற சிறுபான்மை நிதிஉதவிப் பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் 6-12 தமிழ்வழியில் பயின்ற சிறுபான்மை நிதியுதவி பள்ளிகளில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம்,பணிநியமன வயது தளர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல் குறித்த அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வெளிவரும் என அறிவித்துள்ளதாக வந்துள்ளது

இது சமதர்ம சமூகநீதி கொள்கைக்கு முரணாக உள்ளது ஆகவே இது போன்ற நலத்திட்டங்களை நீட்டித்தால் அதை அனைத்து நிதிஉதவிப் பள்ளிகளுக்கும் சேர்த்தே வழங்க வேண்டும். சிறுபான்மை, சிறுபான்மையற்ற எனப் பாகுபாடு காட்டக்கூடாது. அனைத்து நலத் திட்டங்களையும் சிறுபான்மையினருக்கு தருவது போல மற்ற அரசு நிதிஉதவிப் பள்ளிகளுக்கும் கொண்டு வர வேண்டும். இதில் பாரபட்சம் காட்டக்கூடாது.

ஏனெனில் அனைத்து பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு மட்டும் சலுகைகள் வழங்குவது சமூக நீதியாக கருத இயலாது. எனவே சிறுபான்மையினர் பள்ளிக்கு வழங்கும் அனைத்து நலத் திட்டங்களையும் அனைத்து திட்டங்களையும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அறிவிப்பு இருக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு கேட்டுக் கொள்கிறது… என்று தெரிவித்துள்ளார்.

கச்சபேஸ்வரர் கோயில் மரத்தை வெட்டிய அறிவற்ற அறநிலைய துறை: இந்து முன்னணி கண்டனம்!

kanchipuram kachapeswarar temple - 2026
#image_title

அறமும், அறிவும் இல்லாத அக்கிரமத்துறையாக மாறும் அறநிலையத்துறை, காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் ஸ்தல விருட்சத்தை வெட்டிய அநியாயத்தை கண்டிக்கிறோம் என்று இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் 1600 ஆண்டு தொன்மையானது இத்திருக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகின்றது.

இன்னிலையில் கோயிலில் உள்ள அரிய வகை மரங்களான சிவபூஜைக்குரிய நாகலிங்க மரம், சரக்கொன்றை மரம், வன்னி மரம் , மாமரம்,200 ஆண்டு தொன்மையான அரச மரத்துடன் இணைந்த வேப்பமரம், வில்வ மரம், ஸ்தல விருட்ச முருங்கை மரத்தையும் வெட்டியுள்ளார்கள்.

கும்பபிஷேகத்திற்கு யாக குண்டத்தில் போட வெட்டப்பட்டுள்ளதாக இக்கோயில் அறநிலையத்துறை அதிகாரி செயல் அலுவலர் திரு.நடராஜன் கூறியதாகத் தெரிகிறது.

காஞ்சி புராணத்தில் “அக்காஞ்சியில் நீங்காது அமர்ந்திடும் கொன்றைவார் சடையனைக் கச்சபேசன் தனைக் கும்பிடச் சென்றவர் கண்டவர் கருதினர் யாவரும் தீது தீர்ந்து ஒன்றி ஒன்றா நிலை மாறிலா முத்தி பெற்றுய்வரே” என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு பாடல் பெற்ற ஸ்தலத்தின் மரங்களை வெட்டி உள்ளது இந்து சமய அறநிலைத்துறையின் உச்ச பட்ச கொடிய செயல். பக்தர்களுக்கும் , வழிபாட்டிற்கும் எவ்வித இடையூறும் இல்லாத மரங்கள் வெட்டப்பட்டுள்ளது அதிர்ச்சிக்குரிய விஷயமாக உள்ளது.

பல லட்சம் செலவில் பிரம்மாண்ட யாகசாலை கட்டியவர்களுக்கு யாக குண்டத்தில் போட விறகு வாங்குவதற்கு பணம் இல்லையா? யாரிடம் அனுமதி பெற்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை ஆலயங்களைக் காக்கவா? அல்லது அழிக்கவா? என்று பக்தர்கள் கேட்கிறார்கள்.

இத்தகைய அலட்சிய, அராஜகப் போக்கினை இந்துமுன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்குக் காரணமாக இருந்த அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும். இதுபோல் தொடரந்து கோவில்களில் நடைபெறும் அக்கிரமங்களை அடக்கத் தெரியாத அமைச்சர் சேகர் பாபு தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்துமுன்னணி துவங்கப்பட்ட காலத்திலிருந்தே அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆகவே பக்தர்கள் தன்னெழுச்சியாக குரல் கொடுத்து இந்த அக்கிரமத்துறையை அகற்ற போராட முன்வர வேண்டும்

விஎச்பி., பஜ்ரங்தள் சார்பில் சிவகாசியில் அனுமன் ஜயந்தி விழா!

hanumat jayanthi in sivakasi - 2026
#image_title

சிவகாசியில், அனுமன் சிலை வழிபாடு… 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்….!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெறும் 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிவகாசி சிவன் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஆஞ்சநேயர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்று வருகின்றன.

வரும் 11ம் தேதி (வியாழன் கிழமை) அனுமன் ஜெயந்தியன்று, பூஜையில் வைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலை, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏற்றப்பட்டு நான்கு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மதுரையில்…

மதுரை மாவட்டத்தில், ஜன. 11-ம் தேதி அமாவாசை, ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அணுப்பட்டி ஆஞ்சநேயர் ஆலயம், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர், சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயர், சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ அருகே அமைந்துள்ள ஆஞ்சநேயர், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயர், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், வடைமாலை அணிவித்தும், பூஜைகள் நடைபெறுகிறது.

சித்தாந்தங்கள் காலாவதி ஆகிவிட்டனவா? கம்யூனிஸ்ட்களே… என்னதான் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

tn bus colors - 2026

அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்!

– கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

சித்தாந்தங்கள் தத்துவங்கள் போராட்டங்கள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டனவா? அல்லது இன்றைய பின் நவீன மூலதனத்தில் உட்செரிக்கப்பட்டு விட்டனவா?

தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட சில அம்ச கோரிக்கை உள்ளடக்கிய போராட்டம் நடைபெறகிறது. வாகனங்களை இயக்க முடியாது என்று ஸ்ட்ரைக் செய்யவும் உள்ளார்கள்.
பலமுறை பேச்சு வார்த்தைக்கு பின்னும் அது தோல்வியில் முடிந்துள்ளது.

எப்போதும் எதற்கெல்லாமும் தெருவில் போராடும் இடது சாரிக் கட்சிகள் இந்த விஷயத்தில் தங்களது தமிழ்நாடு தழுவிய பெரிய அளவில் எதிர்ப்புணர்வை ஏன் காட்டாமல் இருக்கிறார்கள் என்று புரியவில்லை.

சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த இந்திய தேசிய காங்கிரஸின் குடியாட்சி என்பது உண்மையில் இந்தியப் பெரு முதலாளித்துவத்தின் வர்க்கச் சார்புடையது! அந்த ஆட்சி ஒருபோதும் தொழிலாளர்களுக்கு இழப்பதற்கு கை விலங்குகளைத் தவிர வேறு ஒன்றையும் அதாவது குறைந்தபட்சக் கூலியை கூட அளிக்காத சுரண்டல் அமைப்பு என்றும் அத்தகைய பொருளாதாரம் ஒரு அரை தரகு முதலாளித்துவம் என்றெல்லாம் அன்று இடதுசாரி அறிவு ஜீவிகள் போராளிகள் வர்ணித்தார்கள். எங்கு நோக்கினும் செங்கொடி !!தொழில் புரட்சி காலத்தில் எழுந்த பொருளாதார மாற்றங்கள் ஒரு பக்கம் இருக்க தங்களது தீவிரமான பிரச்சாரத்தின் அடிப்படையில் அன்றைய நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இடம் பெற பல்வேறு மாநிலங்களில் தங்களின் பிரதிநிதிகளை வெற்றி பெறச் செய்துநாடாளுமன்றத்திற்கு அனுப்பியும் வைத்தார்கள் என்பது தான் வரலாறு.!

கூலி உழைப்பு பஞ்சப்படி என்று தொழிலாளர்களை மேம்படுத்தும் வகையில் போராட்டங்களை நடத்தி மக்களிடையே பிரசித்தி பெற்றிருந்தார்கள். அப்போது எல்லாம் சிபிஐ சிபிஎம் என்று கட்சி இரண்டாக உடையவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதாவது சுருக்கக் கோடாக சிபிஐ மட்டும்தான் இருந்தது. பின் கட்சி இரண்டாக பிரிந்தது.

அந்நிலை இந்திரா காந்தி பிரதமராகும் வரையும் இருந்தது . அப்போதெல்லாம் போராடிய இடதுசாரிகள் குறிப்பாக டாங்கே நம்பூதிரி பாடு முதல் பி ராமமூர்த்தி வரை மக்களின் முன்பு சோசலிஸ சமூகத்தை அமைக்க போகிறோம் என்று பிரகடனப்படுத்தினார்கள்.

புத்திசாலித்தனமான நேரு அவ்வாறு போராடிய கம்யூனிஸ்ட்களை உள்ளடக்கிச் செரித்து அதை சோசலிச ஜனநாயகம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் தாராளவாதச் சிந்தனைக்குள் இடப்படுத்தினார்.

இந்த வரலாறு ஒருபுறம் இருக்க தமிழகத்தில் திராவிட சிந்தனை இடதுசாரி சிந்தனை என்று அண்ணா முதல் கலைஞர் ஈறாக இன்றைய திராவிட அரசியல்வாதிகள் தமிழ்நாட்டின் சாதிஓட்டு வங்கிகளைப் பெற இடதுசாரிகளின் பொது சித்தாந்தத்தை சமத்துவமே குறிக்கோள் என்பதாக பயன்படுத்தி உண்மையில் தங்களுடைய லேபர் பிரிவாக அவர்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதில் என்ன சூட்சுமம் இருக்கிறது?

1950இல் இருந்து தொடரும் தெருமுனைகள் சலூன் கடைகள் தொழிற்சாலைகளின் முன்பான போராட்டங்கள் பலவற்றையும் வரலாற்றில் அல்லது என் வாழ்க்கையிலும் இதை கண்ணாரப் பார்த்து வந்திருக்கிறேன்! இந்த திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கத்தில் இருந்தே இடதுசாரி தொழிற்சங்கங்களையெல்லாம் தந்திரமாக ஒழித்துவிட்டு இப்பொழுது தங்களுக்கான அரசியல் கூட்டணியில் ஓரிரு இடங்களை சிபிஎம் சிபிஐ இருவருக்கும் தானமாக கொடுத்து தங்களுக்கான ஊழியர்களாக அவர்களை வைத்துக் கொண்டு விட்டார்கள் என்பதை நாம் அதிகம் விளக்க வேண்டியதில்லை.

கலைஞர் காலத்திலேயே மணலி கந்தசாமி விவகாரம் என பல உண்டு, ஓரிடத்தில் கலைஞர் இந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஒழித்து கட்டுவேன் என்றெல்லாம் கூட சவால் விட்டுள்ளார். அதெல்லாம் போகட்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அளவிற்கு அதாவது இடதுசாரிகளின் தேர்தல் செலவிற்கு
பெரும்பங்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது ஊரறிந்த செய்தியாக இன்றும் இருக்கிறது.

இன்றைய போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்திற்கு வேலை நிறுத்தம் செய்யும் அந்தத்தொழிலாளர்களின் சார்பாக இரண்டு இடதுசாரிகளும் ஏதும் கடுமையான அளவில் அறிக்கை கூட விடாமல் வாய்மூடி மௌனமாக இருப்பார்கள் என்பதை தவிர ஒரு நாடு தழுவிய போராட்டத்தை இன்றைய ஆளுங்கட்சிக்கு எதிராக அவர்கள் தொடங்க மாட்டார்கள் என்று தான் தெரிகிறது .

குதிரை குப்புறத் தள்ளி குழியும்பறித்த கதையாக இன்றைய முதல்வர் ஒருவேளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்கு வராமல் இருந்தால் அவர்களைப் பணி நீக்கம் செய்வதோடு சட்டப்படி அவர்கள் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்வேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

தீராத மழை காலங்களிலும் பல்வேறு பருவ காலங்களிலும் இந்த போக்குவரத்து தொழிலாளர்கள் தாங்கள் பெறும் சம்பளத்தின் பொருட்டு இரவு பகல் காணாது ஷிப்ட் முறையில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றைய விலைவாசி உயர்வில் சம்பளப் பற்றாக்குறையும் இருக்கிறது. தமிழ்நாடு எங்கும் வேறு மாநிலங்களை விட போக்குவரத்து சிறப்பாக இருக்கிறது என பாராட்டப்படும் ஊழியர்களின் சேவைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமான ஆலோசனை.

அவர்களுடைய கோரிக்கைகளை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பது தான் முறை. அதை விட்டு கைது செய்வேன் பணி நீக்கம் செய்வேன் வேறு ஊழியர்களைக் கொண்டு போக்குவரத்தை இயக்குவேன் என்றெல்லாம் சொல்வது அதிகாரப் போக்குதான்.

ஆனால்,அரசு எங்களுக்கு கடன் பட்டிருக்கிறது! ஸ்டிரைக் நிச்சயம் நடக்கும்..போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கறாராக உள்ளது,

தகுதியுள்ளவர்களை புறம் தள்ளு குடும்ப அரசியல் கோமகன் முதல்வர் ஸ்டாலின் சொல்லட்டும் !ஆனால் தமிழ்நாட்டின் இடதுசாரிகள் இதுகுறித்து ஏன் மௌனம் காக்கிறார்கள்.

சித்தாந்தங்கள் தத்துவங்கள் போராட்டங்கள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டனவா? அல்லது இன்றைய பின் நவீன மூலதனத்தில் உட்செரிக்கப்பட்டு விட்டனவா? அல்லது உண்மையில் இப்போது நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

#ரசுபோக்குவரத்துஊழியர்களின்_போராட்டம் #ksrpost

அயோத்தி ராமர் கோயில் குறித்த அவதூறு கருத்தை நம்பாதீர்: சிருங்கேரி மடத்தின் விளக்கம்!

sringeri swamigal - 2026

சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி புகைப்படத்துடன், சமூக வலைதளங்களில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து, சுவாமிகள் தவறாகக் கூறியதாக பரப்பப்படும் தகவலை, பக்தர்கள் நம்ப வேண்டாம்’ என சிருங்கேரி சாரதா பீடத்தின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மடம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

அயோத்தியில் பகவான் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு, பிராண பிரதிஷ்டை நடக்க இருப்பது, அனைத்து ஆஸ்திகர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விஷயம். இந்த நேரத்தில், நம் தர்மத்தை விரும்பாத சிலர், www.dainikjagran.com என்ற சமூக வலைதளம் வழியே, தக்ஷிணாம்னாய சிருங்கேரி சாரதா மடத்தின் பீடாதிபதி, ஜகத்குரு சங்கராச்சார்யா ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் புகைப்படத்துடன், சிருங்கேரி சங்கராச்சாரியா சுவாமிகள், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு எதிரான கருத்துகளைக் கூறியதாக தகவல் பரப்பி உள்ளனர்.

சிருங்கேரி சங்கராச்சாரிய சுவாமிகள், இது போன்ற தகவல் எதையும் வெளியிடவில்லை. இது, முற்றிலும் தவறான பிரசாரம். எனவே, ஆஸ்திகர்கள் இதை நம்ப வேண்டாம். நம் மடத்தின், www.sringeri.net அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் தகவல்களை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.

ஆத்ம தர்சனத்துக்கு உதவாத வித்தை வித்தையே அல்ல!

sringeri swamigal - 2026

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

“மனிதனுக்கு உண்மையான சொந்தக்காரன் யார்?” என்று கேட்டால் தனக்குத்தானே தான் சொந்தக்காரன் என கீதையில் பகவான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

சாதாரணமாக நமக்கு யார் நன்மை புரிகிறார்களோ, அவர்தான் நம் சொந்தக்காரர். அப்படி பார்க்கும் பொழுது “உனக்கு நல்லது எது?” என்று கேட்டால் அதற்கு பதில்” இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை தான் எனக்கு நல்லது” என்பதாகும். இது நம்மால் தான் நமக்காக செய்ய முடியுமே தவிர வேறு யாராலும் செய்ய முடியாது.

ஸம்ஸாரஸாகரத்தில் மூழ்கி இருக்கும் தன்னை தன்னால்தான் உத்தரித்துக் கொள்ள முடியும் என்று பலரும் சொல்லி இருக்கிறார்.

அது எப்போது முடியும்? என்றால், வெளி விஷயங்களில் இருந்து மனதை ஆத்ம விஷயத்தில் திருப்பினால் தான்.

இது நடக்கவேண்டி இருந்தால், லௌகீக விஷயங்களில் முழு விரக்தி உண்டாக வேண்டும். இந்த விரக்தி லௌகீக விஷயங்கள் நிஸ்ஸாரமானவை என்கிற பாவம் உறுதியானால் தான் உண்டாகும். அதற்கு குருவின் உபதேசம் அருளும் மிகவும் அவசியம். இவ்வாறு ஒரு குருவின் உபதேசத்தால் எவனுக்கு வைராக்ய பாவனை அதிகமாகிறதோ அவனுக்கு ஆத்ம தர்சனம் செய்யும் தகுதி ஏற்படும். ஆத்ம சாக்ஷாத்காரம் ஏற்பட்டவனுக்குத்தான் ஜன்ம ஸார்த்தகம் (ஸாபல்யம்) கிடைக்கும். எவ்வளவு படிப்பு படித்திருந்தாலும் அந்தக் கல்வி கடைசியில் ஆத்ம தர்சனத்துக்கு ஒரு சாதனமாக வேண்டும்.

सा विद्या या विमुक्तये என்று முன்னோர்கள் சொல்லி இருப்பதை ஒருவரும் மறக்கக்கூடாது. ஆத்ம தர்சனத்துக்கு உதவாத வித்தை வித்தையே அல்ல.


பகவான் கீதையிலே சொல்லியிருக்கின்றார்;

தஸ்மாத்  சாஸ்த்ரம்  ப்ரமாணம்  தே  கார்யாகார்ய  வ்யவஸ்திதெள  |
ஞாத்வா  சாஸ்த்ரவிதானோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி  ||

அதாவது,  “எதைச் செய்யலாம்?  எதைச் செய்யக் கூடாது?  நாம் எதைச் செய்தால் நமக்கு நல்லதாகும்? “  எதைச் செய்தால் நமக்குக் கெட்டதாகும்?”  என்பதைத் தீர்மானம் செய்ய நம்மால் முடியாது.  ஒவ்வொருவனுடைய புத்தியும் ஒரே வழியில் போகும் என்று சொல்ல முடியாது.  ஆகவே, சாஸ்திரம்தான் பிரமாணம், இந்த தர்ம அதர்மங்களைப் பற்றி தீர்மானமாகச் சொல்வதற்குச் சாஸ்திரம் ஒன்றிற்குத்தான் உரிமை உண்டு.  சாஸ்திரம் எதைச் சொல்கின்றதோ அதைத்தான் நாம் அனுசரிக்கவேண்டும். சாஸ்திரத்தின் மூலமாகத் தான் எது பாபம், எது புண்ணியம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.


மனிதனுடைய அகம்பாவத்துக்கு காரணமான  அவனுடைய பணம், பாண்டித்யம் அல்லது பலம் அவனை கர்வம் கொள்ளச்செய்கிறது.  ஆனால் இந்த மமதை உண்மையில் சத்ரு என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அது அவனை மிகவும் தொந்தரவு செய்யது தவறுகளிலும் ஈடுபட வைக்கிறது. தன்னை யாரும் எதிர்க்க முடியாது என்று அவன் தவராக நினைக்கிரான். ஆனால் அவனுடைய கெட்ட கர்மாவினால் அவன் கஷ்டங்களை அனுபவிப்பது நிச்சயம். அகம்பாவத்தை கைவிட்டாலே இதை தவிர்க்க முடியும்.

    மனிதன் பணம், யௌவனம், பாண்டித்யம் காரணமாக கர்வப்படக்கூடாது.  எல்லாவற்றையும் காலம் எடுத்து சென்றுவிடும். அவை சாஸ்வதமல்ல. பகவத்பாதர் போன்ற மஹரிஷிகள்  எவ்வளவு அறிவாற்றல் பெற்றிருந்தாலும் துளி கர்வம் கூட இல்லாதவர்கள். அதனால் ஜனங்கள் அவர்களை மஹா புருஷர்கள் என்று வர்ணித்து இருக்கிறார்கள். ஆகவே எக்காரணம் கொண்டும் அகம்பாவம் கொள்ளாமல் மனிதன் எளிமையுடன் வாழ வேண்டும்..


பிரதமர் மோடியால் லட்சியத் தீவான லட்சத் தீவு! மலங்க விழிக்கும் மாலத்தீவு!

modi lakshadweep maldeives - 2026
#image_title

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் மாலத்தீவில் சர்ச்சை வெடித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4-ம் தேதி லட்சத்தீவுக்கு சென்றார். அங்கு ரூ.1,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர், லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். மேலும், லட்சத்தீவில் பிரதமர் மோடி ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதையடுத்து பலரும் லட்சத்தீவை மாலத்தீவுடன் ஒப்பிட்டு, மாலத்தீவை விட லட்சத்தீவு சிறந்த சுற்றுலாத் தலம் என்று கூறினர்.

தன்னுடைய பயணம் குறித்த அனுபவத்தை எக்ஸ் தளத்தில் மோடி பகிர்ந்தார். லட்சத்தீவு என்பது அமைதியும், அழகும் நிறைந்த லட்சத்தீவு மனதை மயக்குவதாக உள்ளது. நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயண பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டது, கடலுக்கு அடியில் நீந்தும் சாகசம் ஆகியவற்றின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதோடு இணைய தள தேடலில் லட்சத்தீவு கவனத்தை ஈர்த்தது. மாலத் தீவுக்கு போட்டியாக லட்சத் தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து மாலத்தீவு அரசியல் தலைவர்கள், பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்தியர்களை கேலி செய்தும், தரக்குறைவான கருத்துகளை பகிர்ந்தனர். இதனால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள் இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை புறக்கணிக்க வேண்டும். மாறாக லட்சத்தீவு உள்ளிட்ட இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடியை விமர்சித்து இருந்தது இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை கோமாளி, பொம்மை என்று மாலத்தீவு அமைச்சர் மரியம் விமர்சித்து இருந்தார். மேலும் 2 அமைச்சர்களும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்தது.

இதை தொடர்ந்து பிரதமர் மோடியை இழிவாக விமர்சனம் செய்த மாலத்தீவு அமைச்சர்களான மால்ஷா ஷெரீப், மரியம் சியுனா, அப்துல்லா மசூம் மஜித் ஆகிய 3 பேரை மாலத்தீ அரசு இடைநீக்கம் செய்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்தது தொடர்பாக மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பியது. தில்லியில் உள்ள மாலத்தீவு தூதரான இப்ராகிம் ஷஹிப்புக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியது.

மாலத்தீவு தூதர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இன்று காலை 9:35 மணிக்கு வரவழைக்கப்பட்டு 9:40 க்கு அமைச்சகத்தை விட்டு வெளியில் சென்றார். வெறும் 5 நிமிடம் கூட அவரிடம் பேசாமல் இந்தியா அவரை கடிந்துள்ளது.

லட்சத்தீவு கடற்கரையில் பிரதமர் மோடி இருந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு பெருகும் ஆதரவு!

இந்த நிலையில் இந்த சர்ச்சை குறித்து, பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் அக்ஷய் குமார், சல்மான் கான், ஜான் ஆபிரகாம், நடிகை ஷ்ரத்தா கபூர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில், லட்சத்தீவின் அழகை முன்னிலைப்படுத்தி பதவிட்டுள்ளனர்.

மாலத்தீவு தலைவர்களின் கருத்துகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ள அக்ஷய் குமார், “மாலத்தீவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்தியர்கள் மீது வெறுக்கத்தக்க மற்றும் இனவெறிக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் இந்தியாவுக்கு அவர்கள் இதைச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. நாம் நமது அண்டை நாடுகளுக்கு நல்லவர்கள்தான். ஆனால் இதுபோன்ற காரணமில்லாத வெறுப்பை ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும்?

நான் மாலத்தீவுக்கு பலமுறை சென்றிருக்கிறேன், எப்போதும் அதைப் பாராட்டியிருக்கிறேன். ஆனால் கண்ணியம்தான் முதலில். இந்திய தீவுகளுக்கு சென்று நமது சொந்த சுற்றுலாவை ஆதரிப்பது என்று முடிவு செய்வோம்” என்று கூறியுள்ளார்.

சல்மான் கான் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் பிரதமர் நரேந்திர மோடியை லட்சத்தீவின் அழகான, தூய்மையான மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளில் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் சிறந்த அம்சம் என்னவென்றால், அது எங்கள் இந்தியாவில் உள்ளது” என்று கூறியுள்ளார்.

ஷ்ரத்தா கபூர் வெளியிட்டுள்ள பதிவில், “லட்சத்தீவுகள் அழகிய கடற்கரைகளை கொண்டுள்ளன. இந்த ஆண்டு ஏன் இந்திய தீவுகளுக்கு செல்லக்கூடாது?” என்று தெரிவித்து உள்ளார்.

ஜான் ஆபிரகாம், “அற்புதமான இந்திய விருந்தோம்பல், அதிதி தேவோ பவ என்ற எண்ணம் மற்றும் ஆராய்வதற்கான பரந்த கடல்வாழ் உயிரினங்கள். லட்சத்தீவு செல்ல வேண்டிய இடம்” என்று கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்து, “இந்தியா அழகான கடற்கரைகள் மற்றும் அழகிய தீவுகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. நமது அதிதி தேவோ பவ தத்துவத்துடன், நாம் ஆராய்வதற்கு நிறைய இருக்கிறது, பல நினைவுகளை உருவாக்க காத்திருக்கின்றன” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பலரும் பிரதமர் மோடிக்கு ஆதரவு கருத்து தெரிவித்து வருகின்றனர்.