Home Blog Page 251

திருப்பாவை- பாசுரம் 24 (அன்று இவ் வுலகம் அளந்தாய்)

thiruppavai pasuram 24 - 2026

அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
மாரிமலை முழைஞ்சில் பாசுரத்தில் சீரிய சிங்காசனம் ஏறி கம்பீரமாக அமர்ந்து, நாங்கள் வேண்டும் பறையைக் கேட்டு, அதனை அளித்தருள் என்று கூறிய ஆய்ச்சியர்கள், இந்தப் பாசுரத்தில், கண்ணனின் குண நலன்களையும் வீரத்தையும் புகழ்ந்து போற்றி அவன் மனத்தை அடியார்க்கு அருளத் தயார்படுத்துகிறார்கள்.

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் மஹாபலியால் பெரும் சிரமங்களைச் சந்தித்தது. அன்று, நீ உன் ஈரடியால் இந்த உலகங்களை அளந்து அனைவருக்கும் அருளினாய். உன்னுடைய அந்தத் திருவடிகள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. ராவணனின் பட்டணமாகிய தென்னிலங்கைக்கு எழுந்தருளி, அந்த அழகிய லங்காபுரியை அழித்து அருளினவனே.

உன்னுடைய மிடுக்கு பல்லாண்டு வாழ்க. சகடாசுரன் அழியும்படி அந்தச் சகடத்தை உதைத்து அருளியவனே உன்னுடைய புகழானது பல்லாண்டு வாழட்டும்! சீதா பிராட்டியைக் களவாடிச் சென்ற ராவணன் இருக்கும் இடத்தில், கன்றாக நின்ற வத்ஸாசுரனை எறிகின்ற தடியாகக் கொண்டு கபித்தாசுரன் மீது எறிந்தாய். உன் திருவடிகள் போற்றி. கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துத் தூக்கியவனே. உன்னுடைய சீர்மையும் சீலமும் நிறைந்த குணங்கள் போற்றி.

பகைவர்களுடன் பொருதி அவர்களின் பகைமையை வென்று அழிக்கின்ற உனது திருக்கையிலுள்ள வேல் வாழ்க… என்று இப்படிப் பலவாறாக மங்களாசாசனம் செய்துகொண்டு உன்னுடைய வீரியங்களையே புகழ்ந்துகொண்டு உன்னிடம் பறைகொள்வதற்காக இன்று நாங்கள் வந்தோம். எங்களுக்கு இரங்கி அருள் புரியவேண்டும்… என்று கண்ணன் புகழைப் பாடி, பெரியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு பாடி மங்களாசாசனம் செய்ததுபோல், ஆண்டாளும் போற்றிப் பாடுகிறார்.

வெறும் கையைக் கண்டே போற்றி என்பவர்கள், வேல்பிடித்த அழகைக் கண்டால் போற்றி எனக் கூறாதிருப்பரோ? இங்கே, “அடிபோற்றி, திறல்போற்றி, புகழ்போற்றி, கழல்போற்றி, குணம்போற்றி, வேல்போற்றி!” என்று இவர்கள் கண்ணனைப் போற்றுதற்கே அமையப் பெற்ற நாவின் சுவையை வெளிக்காட்டுகின்றார் ஸ்ரீஆண்டாள்.

– விளக்கம் .. செங்கோட்டை ஸ்ரீராம்

கலைமகள்- 93: மாலன், சுரேஷ்-பாலா, லக்ஷ்மி ரமணனுக்கு விருது!

kalaimagal award func - 2026
#image_title

“இந்தியக் கலாசாரத்தை உலகம் அறிய, நம் இலக்கியங்களை மொழிபெயர்க்க வேண்டியது அவசியம்; கலைமகள் இதழ் டிஜிட்டல் வடிவில் உலகமெங்கும் சென்றடைய வேண்டும்” என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், புதுச்சேரி ஆரோவில் பவுண்டேஷனின் செயவருமான ஜெயந்தி ரவி பேசினார்.

‘கலைமகள்’ இதழின், 93வது ஆண்டு விழா. எழுத்தாளர்களுக்கு, ‘கலைமகள்’ விருது வழங்கும் விழா, ‘தாமிரவருணி கேள்வி பதில் நூல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் ஜன.7 ஞாயிறு அன்று நடைபெற்றன.

எழுத்தாளர்கள் மாலன், சுரேஷ் -பாலா, லக்ஷ்மி ரமணன் ஆகியோருக்கு கலைமகள் விருதுகளை வழங்கி, முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஜெயந்தி ரவி பேசியதாவது:

தமிழ் இலக்கியம், வாழ்வியல் நெறிகளை மக்களுக்குச் சொல்ல, ஓர் இதழைத் தொடங்க வேண்டும் என, நாராயணசாமி அய்யர் விரும்பினார். அதன் விளைவாக, பழமையான தமிழ் இலக்கியச் சுவடிகளை தேடித்தேடி கண்டறிந்த உ.வே. சாமிநாத ஐயர் ஆசிரியராகப் பொறுப்பேற்க, கலைமகள் இதழ் வெளியானது. அதில் தான் பிச்சமூர்த்தி, அகிலன் உள்ளிட்டோர் எழுதினார்கள். பாரதியின் முதல் கையெழுத்து கவிதையும் அதில்தான் வெளியானது. அப்படிப்பட்ட கலைமகள் இதழில்தான், மதிப்பு மிக்க இந்திய ஆன்மிகமும், கலைகளும் சொல்லும் சிறுகதைகள் வெளியாகின. அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால், பிற நாட்டினரும் உணர வசதியாக இருக்கும். கலைமகள் இதழ் நவீன காலத்துக்கு ஏற்ப, டிஜிட்டல் வடிவில் மேலும் உலகமெங்கும் சென்றடைய வேண்டும் என்ற ஆசையை இங்கே வெளிப்படுத்துகிறேன்” என்று பேசினார்.

கலைமகள் இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பேசியதாவது:

‘தினமணி’ நாளிதழின் ஆசிரியரும், என் தாத்தா உறவுமுறையினருமான ஏ.என்.சிவராமன்தான், என் எழுத்துக்குப் பின் புலமாக இருந்தார். கலைமகளில் அன்றைய காலங்களில் ஆசிரியராக இருந்த கி.வா.ஜகந்நாதன் இலக்கியக் கேள்விகளை எழுதிய விடையவன் பதில்கள் என்ற பகுதி மிகப் பிரபலம். அதன் பின், நான் ஆசிரியராகப் பொறுப்பேற்று, கேள்வி பதில் பகுதியைத் தொடங்க ஆலோசித்த போது, கேள்வி பதில் பகுதியில் ஒரு தனித்துவம் வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்படி, வாசகர்களின் கேள்விக்கு பதில் சொல்வதுடன், அந்த பதிலுடன் சேர்து உபரி தகவல் சொல்வதை வழக்கமாக்கினேன். அதென்ன கேள்வியும் பதிலும் தாமிரபரணி? என்று நண்பர் பிரபுசங்கர் ஒருமுறை கேட்டார். தமிழகத்தின் வற்றாத நதி தாமிரவருணி; அதைப்போல இதுவும் தொடா வேண்டும் என்பதால், இதே பெயர் இருக்கட்டும் என்றார் ஏ.என்.சிவராமன். அதனால்தான். தாமிரவருணி கேள்வி பதில் என்று தலைப்பிட்டேன். இதன் முதல் தொகுதி தற்போது வெளி வந்துள்ளது. இன்னும் 10 தொகுதிகள் வெளிவரும் என்று பேசினார்.

அறிஞர் பட்டாளமே ஆசிரியர் குழுவாய் இருந்த கலைமகள் இதழின் ஆசிரியராக உள்ள, கீழாம்பூர் சங் கர சுப்பிரமணியன், சர்க்கஸ் கயிற்றில் ஒற்றை சக்கர வண்டியை ஓட்டுவது போல பழமையையும், புதுமை யையும் இணைத்து, மிக கவனமாக இதழை நடத்துகி றார். ‘திருக்குறள் களஞ்சியம்” உள்ளிட்ட நுால்களை எழுதிய அவர், ‘தாமிரவருணி கேள்வி பதிலை’யும் எழுதி உள்ளார்; அவருக்கு பாராட்டுகள். நான் பெற்ற இந்த விருதை, இதழியலாளர் மற்றும் எழுத்தாளராக வெற்றி பெற்ற பாரதி உள்ளிட்ட அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். என்றார் விருதைப் பெற்றுக் கொண்ட மாலன்!

கலைமகள் விருதைப் பெற்றுக் கொண்டு மாலன் ஆற்றிய ஏற்புரையில் தெரிவித்ததாவது…

கலைமகள் என்பது வெறும் பத்திரிகையல்ல, அது ஓர் அறிவியக்கமாகத் தோன்றியது. கலைமகளின் தொடக்க கால ஆசிரியர் உ.வே.சா. அவரது முயற்சிகள் இல்லை என்றால், இன்று, நாம் தமிழ் உலகின் தொன்மையான மொழி என்று ஊரெல்லாம் முழக்கித் திரிவதற்கு முகாந்திரமே இல்லாமல் போயிருக்கும்.

அதன் ஆரம்பகாலத்தில் கலைமகளுக்கு ஓர் ஆசிர்யர் குழு இருந்தது. அதில் இடம் பெற்றவர்கள் எல்லோரும் தத்தம் துறைகளில் பேராளுமை கொண்ட அறிஞர்கள். விவரங்களைச் சொல்லப் போவதில்லை. பெயர்களை மாத்திரம் சொல்கிறேன். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை, ராகவய்யங்கார், பெ.நா. அப்புசாமி, பிஸ்ரீ, கா.ஸ்ரீ ஸ்ரீ. இதில் எனக்கு ஒரு சொல்ப சந்தோஷம், அல்ப சந்தோஷமல்ல, சின்ன சந்தோஷம் உண்டு. இவர்களில் பெரும்பாலானோர் திருநெல்வேலிக்காரர்கள். அவர்கள் தங்களது எழுத்துக்களால் தாங்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, அதற்கு அடுத்து வந்த தலைமுறைகளிலும் தாக்கம் செலுத்தினார்கள். கே. ஏ. நீலகண்டசாஸ்திரியில் உள்ள கே கல்லிடைக்குறிச்சியைக் குறிக்கிறது. அவர் தாமிரபரணி தந்த தனயன். ஆனால் அவர் இல்லை என்றால் பொன்னியின் செல்வன் இல்லை. அவரது இம்பீரியல் சோழாஸ் மற்றும் சதாசிவப் பண்டாரத்தார் நூல்களை அடிப்படையாகக் கொண்டே கல்கி தனது பாத்திரங்களை உருவாக்கினார். அண்மையில் அமைச்சர் நிர்மலா சீதாரமன் பத்ரி பதிப்பித்த நூல் வெளியிட்டு விழாவில் தனக்கு திருப்பாவை அறிமுகமானது பிஸ்ரீயின் நூலின் மூலமாக எனச் சொன்னார்.

அறிவியக்கமாக மலர்ந்த இதழில் இலக்கிய மணத்தைச் சேர்த்தவர் கி.வா.ஜ. அப்பாவின் நண்பராக அவர் சிறிய வயதில் எனக்கு அறிமுகமானார். 1960 களின் தொடக்கமாக இருக்கலாம். மதுரையில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதற்கு கி.வா.ஜ. ஆர்.வி. தி,ஜ.ர, அகிலன், சுகி சுப்ரமணியம் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்பா கி.வா.ஜவை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். அவர்கள் வரும் நேரம் எனக்கும் என் சகோதரனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. என் சகோதரன் எப்போதுமே வாதத்தில் மல்லுக்கட்டமாட்டார். நானோ பிடித்த முயலுக்கு மூணே கால் அல்ல முணேகால் கால் என விடாக் கண்டன். அவர்கள் இருவரும் வந்ததும் என் பேச்சு நின்று விட்டது. ஆனால் என் குரல் உயர்ந்ததை கி.வா.ஜ கேட்டிருந்திருக்க வேண்டும். அருகில் வந்து முதுகில் வாஞ்சையோடு சாந்தப்படுத்துவது போலத் தடவிக் கொடுத்தார். அப்பா ஆட்டோகிராஃப் வாங்கிக்கோடா என்றார். நான் என் ஆட்டோகிராப் புத்தகத்தை நீட்டினேன். “இன்சொல்லால் உலகத்தை வெல்லலாம்” என்று எழுதிக் கையெழுத்திட்டார். எனக்கு அது ஒரு திறப்பு. வாதத்தில் வெல்ல வேண்டுமானால் குரலை உயர்த்த வேண்டியதில்லை என அன்று புரிந்தது.

கலைமகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கடினமான பணியை கீழாம்பூர் செய்து வருகிறார். விழுமியங்கள், ரசனை, வாசிப்பு என்பது மாறிவிட்ட காலத்தில் தரத்தைக் கைவிடாமல் பத்திரிகை நடத்துவது அத்தனை எளிதல்ல. அது ஒற்றைச் சக்கர சைக்கிள் ஓட்டுவது போன்றது. அதை அவர் 27 வருடங்களாகச் செய்து வருகிறார்!

எனக்கு சர்வதேச விருது, இந்திய அளவிலான விருது , இலக்கிய அமைப்புகளின் விருது எனச் சில விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த விருதை ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த விருதாகக் கருதுகிறேன். காரணங்கள் மூன்று. எனக்கு ஆசான், நண்பன், விமர்சகன் எல்லாம் பாரதிதான். பாரதியினுடைய அதுவரை வெளிவராத கவிதைகளை முதலில் வெளியிட்ட பெருமை கலைமகளினுடையது. 1966 கலைமகள் தீபாவளி மலரில் பாரதியின் சகோதரர் விஸ்வநாதன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் அதில் அதுவரை வெளிவராத பாரதியின் காதலும் துறவும் என்ற கவிதையை வெளியிட்டிருந்தார். பெ.தூரன் பாரதியின் படைப்புக்களை நூலாகக் கொண்டு வந்த போது சிலவற்றை ‘கலைமகளில் பிரத்யேகமாக வெளியானது’ எனக் குறிப்பிட்டிருந்தார்

என் முதல் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதியவர் தி.ஜானகிராமன். தி.ஜா. தனது ஐம்பதாண்டுக்கும் மேற்பட்ட இலக்கியப் பயணத்தில் ஐந்து பேருக்குத்தான் முன்னுரை எழுதியிருக்கிறார். இருவர் அவரது நெருங்கிய நண்பர்கள். எம்.வி.வி, ஆர்.வி. இருவர் அவரது சக தில்லி வாசிகள். இ.பா, ஆதவன். ஐந்தாவதாக இது எதிலும் இல்லாத நான். அந்த முன்னுரையில் தி.ஜா. என்னுடைய ஒரு கதையைப் படித்துவிட்டு சிலிர்த்துப் போய் சில வரிகள் எழுதியிருந்தார். “இது சென்டிமெண்டாலிட்டி என்று எள்ளப்படுகிற பேதைத்தனமல்ல. உண்மையை அழகை தரிசிக்கும் போது ஆளையே வேரோடு ஆட்டுகிற ஒளியாட்டம். நல்ல சங்கீதத்தைக் கேட்கும் போது ஊழிக்கூத்தைப் பாரதியார் பார்க்கும் போது, நந்திதேவனை, கவச குண்டலங்களைப் பிய்த்துக் கொடுத்த கர்ணனைப் பார்க்கும் போது ஏற்படும் தரிசனம் ஒளி உதயம்” என்று எழுதியிருந்தார். என்னுடைய முதல் நாவல் வெளியான போது வெளியான மறுநாள் தில்லியிலிருந்து, ‘ அருமையாக வந்திருக்கிறது. ஞாபகத்தை தூங்க அடிக்காமல் இருப்பதுதான் நல்ல எழுத்து. அதனால்தான் இது நல்ல படைப்பு” என்ரு கடிதம் எழுதினார்.

அந்த தி.ஜா தன் வாழ்நாளில் மொத்தம் 122 கதைகள் எழுதினார். அவர் அதிகம் கதைகள் எழுதிய பத்திரிகை கலைமகள். கலைமகளில் 25 கதைகள் எழுதினார். அதற்கு அடுத்தபடியாக கல்கியில் 22. ஆனந்த விகடனில் 20.

பத்திரிகைகளில் பெரிய பத்திரிகை சிறிய பத்திரிகை என்றெல்லாம் கிடையாது. நல்ல பத்திரிகை மோசமான பத்திரிகைதான் உண்டு என்று திஜா சொல்வார். நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இலக்கியச் சிற்றேடுகள் தபாலில் வரும். அவற்றில் சட்டென்று புரியாத மார்டன் ஆர்ட் அட்டையிலும் உள்ளும் இடம் பெற்றிருக்கும். அட்டையை நோட்டுப்புத்தகத்திற்குப் போடுகிற பிரவுன் காகிதத்தில் அச்சடித்திருப்பார்கள். அதைப் பார்த்த அம்மா, ஏண்டா, எழுதறதுதான் எழுதற, நல்ல பத்திரிகையில் எழுதக் கூடாதோ என்பார். நல்ல பத்திரிகை என்றால் என்னம்மா என்றால் கலைமகள், கல்கி என்பார்.

இந்த விருதை இந்த மூவரும் சேர்ந்து அளிக்கும் ஆசிர்வாதமாகக் கருதி நெகிழ்கிறேன். நான் எனக்கு கிடைத்த விருதுகள் எல்லாம், எனக்கு அளிக்கப்பட்டவை அல்ல, , அருளப்பட்டவை எனக் கருதுவது வழக்கம். அவை என் மொழிக்கு, அதன் மரபிற்கு, அதைச் செழுமைப் படுத்திய என் முன்னோடிகளுக்கு அளிக்கப்பட்டவை, அவர்கள் சார்பில் அதை நான் பெற்றுக் கொள்கிறேன் என்று கருதுகிறவன். அதனால் அவற்றை அவர்களுக்கு சமர்பிப்பது வழக்கம்.

எனக்கு பாரதிய பாஷா பரிஷத் விருது அளிக்கப்பட்ட போது, அதை தங்கள்து மொழியில் எழுதிய போதிலும் பிற இந்திய மொழிகளில் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் என்று தாகூருக்கும், பங்கிம் சந்திரருக்கும் அர்ப்பணித்தேன். சாகித்ய அகாதெமி பரிசை மொழிபெயர்ப்பு மொழியாக்க முன்னோடிகள் கம்பன், பாரதி, த.நா. குமாரசாமி, கா.ஸ்ரீஸ்ரீ உள்ளிட்டவர்களுக்கு அர்ப்பணித்தேன். ‘உரத்த சிந்தனை’ வாழ்நாள் சாதனை விருது அளித்த போது வாழ்நாள் முழுதும் எனக்கு உறுதுணையாக இருந்து வரும் என் சகோதரருக்கு அர்ப்பணித்தேன்.

இலக்கியம் பத்திரிகை என இரு குதிரைகளில் பயணித்த என் முன்னோடிகளின் பட்டியல் பாரதி, திரு.வி.க, எனத் தொடங்கி, கல்கி, சி.சு..செல்லப்பா, பி.எஸ்.ராமய்யா, க.நா.சு, கஸ்தூரிரங்கன், நா.பா என விரிந்து இன்று வரை கீழாம்பூர் ,திருப்பூர் கிருஷ்ணன் எனத் தொடர்கிறது. இந்த விருது அவர்களுக்கு உரியது. இதை அந்த முன்னோடிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.. என்றார் மாலன்.

ஏற்புரை நிகழ்த்திய சுபா – இரட்டை எழுத்தாளர்களில் ஒருவரான சுரேஷ் பேசியபோது,

நான் மாணவனாக இருந்த போது, கலைமகள் குழுமத்தின் கண்ணன் இதழ் அறிமுகமானது. அதில், கதைகளைப் படித்த நான், அதற்கே என் கதைகள் அனுப்பினேன்; அவை பிரசுரமாகின. நான் எழுத்தாளரானேன். கல்லுாரியில், எழுதுவதில் ஆர்வம் உள்ள பாலகிருஷ்ணன் நண்பரானார். இருவரும் இரண்டு கதைகளை ஒரு பரிசுப் போட்டிக்கு அனுப்ப இருந்தோம். எங்களுக்குள் போட்டி வரக்கூடாது என்பதை உணர்ந்து, சுரேஷ், பாலகிருஷ்ணன் என்பதன் முதல் எழுத்துகளை வைத்து, ‘சுபா’ என்று மாற்றி அனுப்
பினோம்; பரிசு கிடைத்தது. இப்போது வரை, நாங்கள் இரட்டை எழுத்தாளர்களாக தொடர்கிறோம்…

‘நானும் எழுத்தும்’ என்ற சமூக வலைத்தளத் தொடரில் என் முதல் கதையைப் பதிப்பித்து, பத்தாம் வகுப்பிலேயே என்னை எழுத்தாளனாக அங்கீகரித்த ‘கண்ணன்’ பத்திரிகை பற்றி எழுதியது குறித்து தெரிவித்தேன். கண்ணன் பத்திரிகை மூலமாக அன்றே எனக்குப் பெருமை சேர்த்த கலைமகள் குழுமத்தின் இன்னொரு கருணை இன்று எனக்கு அருளப்பட்டது. பாரம்பரியம் மிக்க கலைமகள் தனது 93-ஆம் ஆண்டில் எனக்கும் பாலாவுக்கும் – சுருக்கமாக சுபாவுக்கு – கலைமகள் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. ” என்று குறிப்பிட்டார்.

“நான் பிரமித்த கலைமகளில், நானும், ‘தாய்பசு, போட்டி சித்திரம் உள்ளிட்ட கதைகளை எழுதினேன். அதிலிருந்து விருது பெறுவது சந்தோஷம்,” என்றார் பாலகிருஷ்ணன் என்ற பாலா.

எழுத்தாளர் லஷ்மி ரமணன் பேசுகையில், “கலைமகள் இதழில் எழுதுவதும், விருது பெறுவதும் பெருமை; அது கிடைத்துள்ளது. நன்றி,” என்றார்.

எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி; சர்வீஸ் சாலையில் புகுந்து சென்ற பரிதாபம்!

edapppadi car in service road - 2026
#image_title

எஸ்டிபிஐ மாநாட்டில் கலந்து கொள்ள வந்து, மதுரை வாடிப்பட்டி அருகே போக்குவரத்தில் சிக்கிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி வாகனம் சர்வீஸ் சாலையில் புகுந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பாதுகாப்பு குறைபாடு காரணம் என கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் நடைபெற்ற எஸ். டி. பி. ஐ. கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வரவேற்பதற்காக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டி அருகே தனுச்சியம் பிரிவில் சோழவந்தான் உசிலம்பட்டி திருமங்கலம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில், காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசாரை போதிய அளவில் நிறுத்தாததால் வாடிப்பட்டி முதல் தனிச்சியம் பிரிவு வரை வாகனங்கள் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது..

மதியம் 2 மணி முதல் நான்கு மணி வரை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய அளவு போலீசார் இல்லாததால், இரண்டு கிலோமீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் சாலையில் ஊர்ந்து சென்ற வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் சுமார் 4:30 மணி அளவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி வாடிப்பட்டி வந்த நிலையில், அவரது கார் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், சிறிது நேரம் கட்சியினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் வாகனத்திற்கு முன் வந்த போலீசார் வாகனம்அருகே திடீரென சர்வீஸ் சாலையில் புகுந்து போக்குவரத்து நெருக்கடியில் இருந்து வெளியேறி சென்றது.

பின்னர் கட்சியினர் வரவேற்பு கொடுத்த பின்பு, மதுரை புறப்பட்டு சென்றது. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் வருகை தரும் நிலையில் போதிய அளவில் போலீசார் நிறுத்தாததால், எடப்பாடி பழனிச்சாமி வந்த வாகனம் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டது. கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து, அங்கிருந்தவர்கள் கூறுகையில்: ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே போக்குவரத்தை சரி செய்ய போதிய அளவில் போலீசாரை நிறுத்தாததால், இந்த நிலைமை ஏற்பட்டது. இனிவரும் காலங்களிலாவது முக்கிய தலைவர்கள் வரும்போது போதிய அளவில் போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என, கேட்டுக் கொண்டனர்.

இன்னும் ஒரு வாரத்துக்கு… மழைதான்! எச்சரிக்கும் வானிலை மையம்!

weather rain alert jan - 2026
#image_title

தமிழகத்தில் இன்னும் 7 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை அறிவிப்பும் வெளியானது.

சென்னையில் அதிகன மழை பெய்யும் என ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் கனமழை மட்டுமே பெய்யும் என்று அடுத்து வெளியான தகவல் சென்னை மக்களுக்கு நிம்மதியை தந்தது. அதே நேரத்தில் சென்னையில் மழை தொடர்ந்து ஒரு வாரம் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஜன.8 இன்று விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை காரணமாக, திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகையில், நாகபட்டினம், கீழ்வேளூர் தாலுகாக்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. வேதாரண்யம், திருக்குவளை தாலுகாகளில், பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று கனமழை அறிவிக்கப் பட்டுள்ளது.

வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியிலும், தென் கிழக்கு பகுதியிலும், வளிமண்டல கீழடுக்கில் தலா ஒரு சுழற்சி நிலவுகிறது. இதனால், வங்கக்கடலின் தென் மேற்கு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல், 10ம் தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வரும், 11ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை:

கடந்த 24 மணி நேரத்திற்கான வானலை தொகுப்பு:
வடகிழக்கு பருவமழை தென்தமிழக உள் மாவட்டங்களில் மிகத்தீவிரமாக உள்ளது.

தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

சிவகாசி (விருதுநகர்) 11,

சீர்காழி (மயிலாடுதுறை), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 7,

பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) 6,

காரைக்கால் (காரைக்கால்), அண்ணாமலை நகர் (கடலூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), பாபநாசம் (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 5,

செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), சிதம்பரம் (கடலூர்), ராஜபாளையம் (விருதுநகர்), நன்னிலம் (திருவாரூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 4,

ஆண்டிபட்டி (தேனி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), எழுமலை (மதுரை), பெரியகுளம் (தேனி), பரங்கிப்பேட்டை (கடலூர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), மரக்காணம் (விழுப்புரம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கின்னக்கோரை (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கே.எம்.கோயில் (கடலூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), வலங்கைமான் (திருவாரூர்), உசிலம்பட்டி (மதுரை) தலா 3,

வைகை அணை (தேனி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கடனா அணை (தென்காசி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), நீடாமங்கலம் (திருவாரூர்), ஆண்டிபட்டி (மதுரை), கருப்பாநதி அணை (தென்காசி), அரண்மனைப்புதூர் (தேனி), திருப்போரூர் (செங்கல்பட்டு), குந்தா பாலம் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), வீரபாண்டி (தேனி), புதுச்சேரி (புதுச்சேரி), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), கெத்தை (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), களக்காடு (திருநெல்வேலி), வாடிப்பட்டி (மதுரை), முத்துப்பேட்டை (திருவாரூர்), கொடவாசல் (திருவாரூர்) தலா 2,

கும்பகோணம் (தஞ்சாவூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), சோத்துப்பாறை (தேனி), திருவாரூர் (திருவாரூர், மேல் பவானி (நீலகிரி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), லால்பேட்டை (கடலூர்), வனமாதேவி (கடலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), சண்முகாநதி (தேனி), பேரையூர் (மதுரை), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), போடிநாயக்கனூர் (தேனி), புவனகிரி (கடலூர்), பாண்டவரடி (திருவாரூர்), ஆழியார் (கோயம்புத்தூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), வானூர் (விழுப்புரம்), மணல்மேடு (மயிலாடுதுறை), கடலூர் (கடலூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), குப்பணம்பட்டி (மதுரை), அவலாஞ்சி (நீலகிரி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 1.

திருப்பாவை பாசுரம் – 23 (மாரி மலை முழைஞ்சில்)

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா
உன்கோயில்நின்று இங்ஙனே போந்தருளி
கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து
யாம்வந்த காரியம் ஆராய்ந் தருளேலோர் எம்பாவாய்.

thiruppavai pasuram 23 - 2026

விளக்கம்:
முந்தைய பாசுரத்தில், வேறு புகல் இன்றி உன் திருவடி அடைந்தோம் என்று ஆய்ச்சியர் சொன்னது கேட்ட கண்ணன், பெண்களே இவ்வளவு வருத்தம் அடைந்தீர்களே. உங்கள் இருப்பிடம் தேடி வந்து உங்களை நோக்குவது அன்றோ என் கடமை. அதை நீங்கள் உணர்வீர்களே. என்னிடம் வந்து முறையிட்டும் நான் உடனே வந்து உங்கள் கண்ணீரைத் துடைக்காது போனேனே! இனி உங்கள் வேண்டுதலைக் கேட்கின்றேன். சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்றான். அதற்கு அந்தப் பெண்கள், எங்கள் விருப்பம் இப்படி ரகசியமாகச் சொல்லுவதற்கு உரியதன்று. பெரும் கோஷ்டியாக இருந்து கேட்டருள வேண்டும். அதற்காக அந்த சிங்காதனம் ஏறக் கிளம்பு என்று பிரார்த்தித்தனர் இந்தப் பாசுரத்தில்.

மழைக்காலம் ஆகையால் வெளியே சுற்றித் திரியாது, மலைக் குகைகளில் பேடையும் தானும் ஒன்றுதானோ என்ற எண்ணம் தோன்றும்படி சிங்கம் உறங்காமல் ஒட்டிக் கொண்டு நிற்கும். வீரியமும் சீர்மையும் வாய்ந்த அந்த சிங்கமானது, உணர்ந்து எழுந்து, நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை அகல விழித்துப் பார்க்கும். தங்கள் இனத்துக்கே உரிய மணம் நிறைந்த உளை மயிர்களைச் சிலுப்பிக் கொண்டு நாலாப் புறங்களிலும் புடைபெயர்ந்து அசைந்து, உடலை உதறி சோம்பல் முறித்து கர்ஜனை செய்யும். அப்படி கர்ஜனை செய்து கொண்டு வெளியே புறப்பட்டு வரும் வலிமையான சிங்கத்தைப் போலே, காயாம்பூ நிறத்தை உடைய கண்ணபிரானே… நீயும் உன் திருக்கோயிலில் இருந்தும் இந்த இடத்துக்கு வரும்படி வெளிவந்து, அழகும் சீர்மையும் மிக்க இந்த சிங்காசனத்தில் எழுந்தருள்வாய். நாங்கள் மனதிலே நினைத்து வந்த எங்கள் விருப்பம் குறித்து நீ எங்களிடம் விசாரித்து அறிந்து கொள்வாய். பின்னர், அது நிறைவேறும்படி எங்களுக்கு அருள வேண்டும் என வேண்டினர் ஆய்ச்சியர்.

சிங்கம் பேடையைக் கட்டிக் கொண்டு கிடந்துறங்கும்போது அறிவிழந்திருக்கும். கண்ணனும் அவ்வாறே அடியாருக்காக உதவ எண்ணும் முன்னர் அறிவற்ற பொருளாகவே எண்ணப்படுவானாம். அடியார் நினைவு வந்தபோது அவன் அறிவுற்று எழுவானாம். அறிவுற்றுத் தீவிழித்து எனும் பதத்தால் இதனை உணர்த்துகிறார் ஸ்ரீஆண்டாள்.

யாம் வந்த காரியம் இப்போதே சொல்லுதற்கு அன்று என்றனர். எங்கே முதலிலேயே சொல்லிவிட்டால் சர்வ சுதந்திரனாகிய கண்ணன் மறுத்துவிடுவானோ என்ற அச்சம். அதனால், சிற்றஞ்சிறுகாலே பாசுரம் வரை கொண்டுசென்று, தங்கள் விருப்பத்தை, வேண்டும் பறையைத் தெரிவிக்கின்றனர்.

விளக்கம் செங்கோட்டை ஸ்ரீராம்.

சிவகாசி முருக பக்தர்கள், திருச்செந்தூருக்கு பாதயாத்திரை!

IMG 20240107 WA0004 - 2026
#image_title

சிவகாசியில் இருந்து, ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை!

சிவகாசி : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான முருக பக்தர்கள் பாதயாத்திரை புறப்பட்டனர்.

சிவகாசி நகரின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழு என்ற அமைப்பில் உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், மார்கழி மாத கடைசியில் சிவகாசியில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள்.

இன்று காலை, திருச்செந்தூர் பாதயாத்திரை பக்தர்கள் குழுவைச் சேர்ந்த ஏராளமான முருக பக்தர்கள் செண்டை மேளம் முழங்க, மயில் காவடிகள் சுமந்து ஆடிப்பாடியபடி முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா என்று கோஷங்கள் முழங்கியபடி சிவகாசியின் முக்கிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை தொடங்கினார்கள்.

பாதயாத்திரை செல்லும் பக்தர்களை அவர்களது குடும்பத்தினர் மாலையணிவித்து வழியனுப்பி வைத்தனர்.

நம்ம நாட்டு சுற்றுலா: சில்கா ஏரி

silikca lake odisha - 2026
#image_title

12. சில்கா ஏரி

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

எங்களின் மூன்றாம் நாள் பயணத்தில், காலை 0600 மணிக்கு பூரி நகரை விட்டுக் கிளம்பி சுமார் 50 கிலோமீட்டர் தென் மேற்கில் உள்ள சில்கா ஏரியை நோக்கிப் புறப்பட்டோம்.

          ஒடிசாவில் உள்ள சில்கா ஏரி ஆசியாவின் மிகப்பெரிய உள் உப்பு நீர் ஏரி ஆகும், இது மிகவும் அழகான ஹனிமூன் தீவு மற்றும் காலை உணவு தீவு உட்பட சில சிறிய தீவுகளைக் கொண்டுள்ளது. இந்த பேரிக்காய் வடிவ ஏரி, வங்காள விரிகுடாவில் இருந்து மெல்லிய கடற்கரையால் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சில்கா ஏரி சரணாலயம் உள்ளது. இது ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. ஏராளமான அளவிலான தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நீர்வாழ் விலங்கினங்கள், ஏரியின் உப்பு நீரிலும் அதைச் சுற்றியும் காணப்படுகின்றன.

          தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தவிர சில்கா ஏரி சரணாலயம் அதன் மிக அழகமான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகளுக்கு முக்கியமானது. இந்த அற்புதமான காட்சிக்காக ஏராளமான மக்கள் குறிப்பாக இந்த சரணாலயத்திற்கு வருகிறார்கள்.

சில்கா ஏரி வரலாறு

          சில பண்டைய நூல்களின்படி, சில்கா சர்வதேச வர்த்தகத்திற்கான முக்கிய துறைமுகமாகக் கருதப்படுகிறது. புகழ்பெற்ற சீனப் பயணிகள் பாஹியான் மற்றும் யுவான் சுவாங் இருவரும் சில்கா ஏரியின் கரையில் சத்ரகாரில் அமைந்துள்ள துறைமுகத்தின் வழியாகச் சென்றனர். மேலும் அகழ்வாராய்ச்சியில், சில்கா ஏரி ஒரு ஆழமான மற்றும் திறந்த விரிகுடாவாகவும், ஆசியாவை நோக்கிச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு முக்கியமான துறைமுகமாகவும் தங்குமிடமாகவும் இருந்தது தெரிய வந்துள்ளது.

சில்கா ஏரியில் படகுப் பயணம் செய்ய ஒரிசா அரசின் படகுத் துறைகள் உள்ளன. நான் புவனேஷ்வரத்திலிருந்து காரில் வந்ததால் சில்காவில் படகுப் பயணம் செய்வது பற்றி சரியாகத்திட்டமிடவில்லை. உள்ளூர் சுற்றுலா ஆபரேட்டர்கள் தனியார் படகு சேவையைப் பெற நம்மை ஊக்குவிக்கிறார்கள். முதலில் அவர்கள் சொல்வது ஒரு கட்டணம்; பின்னர் வசூலிப்பது வேறு ஒரு அதிகமான கட்டணம். சில்கா பகுதிக்குள் நுழைவதற்கு முன் தனியார் ஜெட்டி வருகிறது.

இறுதியாக சில்காவை அடைந்தோம். நாங்கள் அங்கு சென்றபோது, ​​OTDC அலுவலகம் இருக்கும் இடத்தைப் பற்றி யாரும் சொல்லவில்லை. இந்த பகுதியில் ஏஜெண்டுகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மற்ற உள்ளூர் மக்கள் கூட OTDC எங்கே என்று பகிர்ந்து கொள்ளவில்லை. அதனால் OTDC அலுவலகத்தை எப்படி அடைவது மற்றும் படகு சவாரி செய்வது எப்படி என்று தெரியாமல் நாங்கள் திகைத்து போனோம். எங்கள் டிரைவர் கூட எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. அவரை காரின் உள்ளே உட்கார வைத்தோம். பின்னர் அருகில் இருந்த பான் கடைக்கு சென்று அலுவலக விவரங்களை கேட்டோம்.  அவர் OTDC அலுவலகத்திற்கு செல்லும் வழியைக் காட்டினார். சில நிமிட நடைப்பயணத்திற்குப் பிறகு, OTDC அலுவலகத்தை அடைந்தோம். அது சில்கா அரசாங்கப் படகுப் பாதையில் நுழைவதற்கு சற்று முன்பு வருகிறது. டிரைவர் இங்கே நிறுத்தியிருக்கலாம், ஆனால் அவர் நிறுத்தவில்லை.

OTDC அலுவலகத்தின் விவரம்: OTDC நிவாஸ், சதபாதா -752001, தொலைபேசி – 06752-262077. இங்கு நல்ல உணவு மற்றும் தங்கும் வசதி உள்ளது. ஜெட்டி பகுதிக்கு அருகில் நல்ல ஓய்வு இல்லாததால், OTDC அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். OTDC படகுச் சேவையைப் பெறுவது நல்லது. நாங்கள் அங்கு சென்றடைந்தபோது, ​​OTDC அதிகாரி, நீங்கள் 14 இருக்கைகள் கொண்ட படகை உங்கள் குழுவிற்கு மட்டும் எடுத்துச் செல்லலாம் அல்லது மற்ற சக சுற்றுலா பயணிகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். பொதுவாக 14 இருக்கைகள் கொண்ட படகுக்கு ரூ 1400 வசூலிக்கிறார்கள். ஆனால் அதுவும் பிறகு இல்லை எனச் சொல்லிவிட்டார்கள்.

          பின்னர் ஒரு தனியார் படகை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, சில்கா ஏரியில் பயணம் செய்தோம். அந்தப் படகை ஓட்டுபவர் எங்களை அருகில் ஒரு தீவில் முதலில் கொண்டு சென்றார். அங்கே முத்து வளர்ப்பதாகவும் அதனைப் பாருங்கள் எனவும் கூறினார். சிப்பியில் இருந்து முத்துக்களை எடுத்துக் காட்டினார்கள். அதனை புகைப்படம் எடுத்து முகனூலில் பதிவு செய்தேன். உடனே நண்பர்களிடமிருந்து அந்த முத்துக்களை வாங்காதே என குறுந்தகவல் வந்தது. சுமார் 15 நிமிடம் எங்களை மன ரீதியாக முத்துக்களை வாங்க அழுத்தம் கொடுத்துப் பார்த்து, பின்னர் ஏதும் நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிந்ததும் அங்கிருந்து டால்பின் பார்க்கக் கூட்டிச் சென்றனர்.

          சில்கா மேம்பாட்டு ஆணையத்தில் மீன் மீன்வளம் மற்றும் டால்பின் கண்காணிப்பு கோபுரம் உள்ளது. இது படகுப் பாதைக்கு மிக அருகில் உள்ளது, நுழைவுக் கட்டணம் ரூபாய் 10. நீங்கள் டால்பின் கண்காணிப்பு கோபுரத்தைப் பார்வையிடலாம். சில்கா ஏரியின் உள்ளே உள்ள தொலைதூர இடங்களைக் காணலாம். தொலைநோக்கியைப் பயன்படுத்தி, காளிஜாய் தீவைப் பார்க்க முடிந்தது.

          சில்கா ஏரியிலிருந்து மீண்டும் புவனேஷ்வரம் வந்து இரவு தங்கினோம். அடுத்த நாள் காலையில் புவனேஷ்வரத்தில் உள்ள மேலும் சில கோயில்களுக்குச் சென்றோம். பின்னர் மதியம் விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு மாலை 0600 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

திருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)

குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீஉன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

thiruppavai pasuram19 720x486 1 - 2026

விளக்கம்:
முந்தைய பாசுரத்தில் “சீரார் வளை ஒலிப்ப வந்து திறவாய்” என்று நப்பின்னையை இந்தப் பெண்கள் வேண்டினர். உடனே அவளும் எழுந்து கதவைத் திறக்க வந்தாள்.

அப்போது கண்ணன், நம் திருவடி பற்றின அடியாரைத் தன் அடியாராகவே இவள் எண்ணுவதுபோல, இந்த ஆய்ச்சியரையும் எண்ணி அவர்களுக்கு உதவப் போகிறாளே என்று நினைத்தான்.

உடனே நப்பின்னை கதவைத் திறக்காதபடி அவளைத் தடுத்து இழுத்து பஞ்சணையில் தள்ளி அவள் மீது மயங்கிக் கிடந்தான். நப்பின்னையும் ஆய்ச்சியர் வந்த காரியத்தை மறந்து கிடந்தாள்.

அதனால் நம் முயற்சியைத் தடை செய்து ஆய்ச்சியரின் வெறுப்புக்கு நம்மை ஆளாக்கிவிட்டானே கண்ணன் என்று வாய்திறக்காது கிடந்தாளாம் நப்பின்னை. அவளிடம் இந்தப் பாசுரத்தில் மீண்டும் வேண்டுகிறார்கள் ஆய்ச்சியர்கள்!

நிலை விளக்குகள் நாற்புறமும் ஒளிபரப்ப எரிகின்றன. யானைத் தந்தங்களினால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டில். அதன் மீது மெத்தென்று இருக்கும் படுக்கை. அந்தப் படுக்கையும் அழகு, குளிர்ச்சி, மென்மை, பரிமள மணம், வெண்மையான தூய்மை என ஐந்து குணங்களை உடையதாக உள்ளது. அதன் மீதேறி சயனித்தபடி, கொத்துக்கொத்தாக அலர்கின்ற மலர்களை அணிந்த கூந்தலை உடைய நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத் தடங்களை தன் மேல் வைத்தபடி பள்ளி கொள்கின்ற கண்ணா..! அகன்ற திருமார்பினை உடைய பிரானே! உன் வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் அருளிச் செய்ய வேண்டும்.

மையிட்டு அலங்கரிக்கப் பெற்ற குளிர்ச்சி பொருந்திய, அகல விரித்த கண்களை உடைய நப்பின்னையே. நீ உன் மணாளன் கண்ணபிரானை ஒரு நொடிப்பொழுதும் படுக்கையை விட்டு எழ விடுகிறவளைப் போல் தெரியவில்லை!

கண நேரமேனும் அவன் உன்னைப் பிரிந்து இருக்காத நிலையை நீ ஏற்படுத்தியிருக்கிறாய். ஆஹா!! நீ இப்படி இருப்பது உன் தகுதிக்குப் பொருத்தமே. ஆனால், நீ எங்கள் மீது பாராமுகமாக இருப்பது உன் கருணை உள்ளத்துக்குத் தக்க தத்துவமோ? அன்று! எனவே எங்களுக்கு கருணை காட்டு! என்கிறார் ஸ்ரீஆண்டாள்.

விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்


இந்தக் கட்டுரைகளையும் படிக்க…

திருப்பாவை பாசுரம் 20 :(முப்பத்து மூவர் அமரர்க்கு)

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

thiruppavai pasuram20 - 2026

விளக்கம்: முந்தைய பாட்டில், எங்களைப் புறக்கணித்தல் உன் கருணைத் தத்துவத்துக்கு அழகல்ல என்று கூறி நப்பின்னைப் பிராட்டியை சரண் புகுந்த ஆய்ச்சியர்கள், இந்தப் பாசுரத்தில், தங்கள் நோன்பு கைகூட, விசிறியும், கண்ணாடியும், கூடவே கண்ணனையும் தந்தருள வேண்டும் என்று நப்பின்னையிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் துன்பம் வரும்போது, அந்தத் துன்பம் வரும் முன்னரேயே எழுந்தருளி அவர்களின் நடுக்கத்தை நீக்கியருளவல்ல மிடுக்கினை உடைய கண்ணபிரானே! பகைவர்களுக்கு பயமாகிய காய்ச்சலைக் கொடுக்க வல்ல தூய்மையும் வலிமையுமுள்ள குணம் கொண்டவனே. பகைவர்கள் மண்ணைக் கவ்வும் படியான வலிமையுடைய கண்ணபிரானே. பொற்கலசம் போன்ற, விரஹதாபம் பொறுக்க மாட்டாத மென்மையான முலைகளையும் சிவந்த வாயையும் நுண்ணிய சிற்றிடையையும் கொண்ட நப்பின்னைப் பிராட்டியே.

ஸ்ரீமகாலட்சுமியே. நீ படுக்கையில் இருந்து எழுந்து எங்களுக்கு அருள் செய்வாய். துயில் எழுந்து, எங்கள் நோன்புக்கு உபகரணமாக உள்ள ஆலவட்டமான விசிறியையும் கண்ணாடியையும், உன் வல்லபனான கண்ணபிரானையும் எங்களுக்குத் தந்து, பிரிவுத்துயரால் மெலிந்துள்ள எங்களை இந்தக் கணத்திலேயே நீராட்டச் செய்! என்று கண்ணனுடன் உள்ளம் கலக்க பிராட்டியின் அருளை வேண்டி நிற்கிறார்கள் ஆய்ச்சியர்கள்.

இங்கே, உக்கமும் தட்டொளியும் என்று விசிறியையும் கண்ணாடியையும் வேண்டியது, கண்ணனைப் பெற வேண்டியவர்களுக்கு இது ஒரு குறியீடு. மேலும், இப்போதே எம்மை நீராட்டு என்று கூறியது, இந்தக் கணம் தப்பினால் பின்னர் ஊரார் இசைய மாட்டார்கள் என்றும், நாங்களும் பிரிந்து உயிர் வாழ்ந்திருக்க மாட்டோம்; விரஹம் எங்கள் உடலைத் தின்றுவிடும் என்றும் உணர்த்துவதாம்.

விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்


இதையும் படிக்கலாமே..!

திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

PSX 20240102 174854 - 2026
#image_title PM SPEECH AT TIRUCHIRAPALLI ON 2.1.24

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

தமிழ்நாட்டின் ஆளுநர் திரு. ஆர்.என். இரவி அவர்களே,

தமிழக முதல்வர் திரு. எம்.கே. ஸ்டாலின் அவர்களே, 

மத்தின அமைச்சரவையின் என் சகாவான திரு. ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே,

தமிழக அரசின் அமைச்சர்களே,

நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களே,

மேலும் தமிழ்நாட்டின் என் குடும்பச் சொந்தங்களே!!

வணக்கம்!!

எனது தமிழ் குடும்ப உறவுகளே,

முதற்கண் உங்கள் அனைவருக்கும் 2024க்கான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

2024ஆம் ஆண்டு அனைவருக்கும் அமைதியானதாகவும், வளமானதாகவும் இருக்கட்டும்!!

2024ஆம் ஆண்டுக்கான என்னுடைய முதலாவது பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதை நான் என் பாக்கியமாகவே கருதுகிறேன்.

சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான இன்றைய வளர்ச்சித் திட்டங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை பலப்படுத்தும்.

சாலைவழிகள், ரயில்பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி ஆற்றல் மற்றும் ஒரு பெட்ரோலியக் குழாய் இணைப்பு ஆகிய இந்தத் திட்டங்களுக்காக நான் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் பல திட்டங்கள் பயணிப்பதில் சுலபத்தன்மையை ஊக்கப்படுத்துவதோடு, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

# # # # #

நண்பர்களே, தமிழ்நாட்டில் பலருக்கு 2023ஆம் ஆண்டின் கடந்த சில வாரங்கள் மிகவும் கடினமானவையாக இருந்தன.

கனமழை காரணமாக நமது பல சககுடிமக்களை நாம் இழக்க வேண்டியிருந்தது.

சொத்துக்கள்-உடைமைகள் இழப்பும் கணிசமானதாக இருந்தது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை எனக்குள்ளே மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நெருக்கடியான வேளையிலே, மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு மக்களுக்குத் துணையாக நிற்கின்றது.

சாத்தியமான அனைத்து ஆதரவையும் மாநில அரசாங்கத்திற்கு நாங்கள் அளித்து வருகிறோம்.

இதோ சில நாட்கள் முன்பாகத் தான், நாம் திரு. விஜய்காந்த் அவர்களை நாம் இழந்திருக்கிறோம்.

அவர் சினிமா உலகின் கேப்டன் மட்டுமல்ல, அரசியலிலுமே அவர் கேப்டனாகவே இருந்து வந்திருக்கிறார்.

திரைப்படங்களில் அவருடைய செயல்பாடு வாயிலாக அவர் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார்.

ஒரு அரசியல்வாதி என்ற முறையில், அவர் அனைத்திற்கும் மேலாக தேசிய நலனுக்கே முன்னுரிமை அளித்து வந்திருக்கிறார்.

அவருக்கு நான், என்னுடைய அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

அவருடைய குடும்பத்துக்கும், அபிமானிகளுக்கும் நான் என் ஆழமான இரங்கல்களை உரித்தாக்குகிறேன்.

நண்பர்களே,

இன்று, நான் இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் வேளையிலே, நான் தமிழ்நாட்டின் மேலும் ஒரு மைந்தரான முனைவர். எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களையும் நினைவு கூர்கிறேன்.  

அவர் நமது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்காக, ஒரு முக்கியமான பங்களிப்பை ஆற்றினார்.

கடந்த ஆண்டிலே நாம் அவரையும் இழந்திருக்கிறோம்.

# # # # # 

என் தமிழ் குடும்ப உறவுகளே,

சுதந்திரத்தின் அமுதக்காலம், அதாவது வரவிருக்கும் 25 ஆண்டுக்காலகட்டத்திலே, பாரதத்தை வளர்ந்த தேசமாக நாம் ஆக்க வேண்டும்.

நான் வளர்ச்சியடைந்த பாரதம் என்று கூறும் போது, இதிலே பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் என்ற இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.

அந்த வகையிலே, தமிழ்நாட்டிற்கு இதிலே சிறப்பானதொரு பங்களிப்பை என்னால் காண முடிகிறது.

பாரத நாட்டின் வளம் மற்றும் கலாச்சார மரபின் பிரதிபலிப்புத் தான் தமிழ்நாடு.

தமிழ்நாட்டின் வசம் தமிழ் மொழி மற்றும் ஞானம் என்ற பழைமையான கருவூலம் இருக்கிறது.

புனிதர் திருவள்ளுவர் தொடங்கி, சுப்பிரமணிய பாரதி வரை பலப்பல தூயோர், ஞானிகள் ஆகியோர், அற்புதமான இலக்கியங்களைப் படைத்தளித்திருக்கிறார்கள்.

சி.வி. இராமன் தொடங்கி இன்று வரை, அற்புதமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மூளைச்சக்திக்குச் சொந்தக்காரர்கள் பலரை இந்த மண் உருவாக்கியளித்திருக்கிறது.

ஆகையால் தான், நான் எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் ஒரு புதிய சக்தியை எனக்குள்ளே நிரம்பிக் கொண்டு செல்கிறேன்.

# # # # # 

எனக்குப் பிரியமான குடும்ப உறுப்பினர்களே,

திருச்சிராப்பள்ளி நகரம் என்று சொன்னாலே, வளமான வரலாற்றுக்கான சான்றுகள் அங்கிங்கெனாதபடி, எல்லா இடங்களிலும் கொட்டிக் கிடக்கிறது.

இங்கே பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் போன்ற பல்வேறு அரசவம்சங்களின் நல்லாட்சி மாதிரிகள் கண்கூடாகக் காணக் கிடைக்கின்றன.

எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு, அவர்களிடத்திலே எனக்கு மிக நெருக்கமான உறவுகள் உண்டு.  இவர்களிடமிருந்து தமிழ் கலாச்சாரம் பற்றி வெகுவாகக் கற்கக்கூடிய நல்வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது.  

உலகின் எந்த இடத்திற்கு நான் சென்றாலும் கூட, தமிழ்நாட்டைப் பற்றிப் பேசாமல், தமிழ்மொழியை மனதாரப் புகழாமல் என்னால் இருக்க முடிவதில்லை.

நண்பர்களே,

தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் கலாச்சார உத்வேகம் தொடர்ந்து விரிவாக வேண்டும், பரவ வேண்டும் என்பதே என்னுடைய முயற்சியாக இருக்கிறது.

தில்லியின் நாடாளுமன்றப் புதிய கட்டிடத்தில், புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம்.

தமிழ் பாரம்பரியமானது தேசத்திற்கு அளித்திருக்கும் நல்லாளுகை மாதிரியிலிருந்து, கருத்தூக்கம் பெறும் முயற்சியே இது.

காசி தமிழ்சங்கமம், சௌராஷ்டிரா தமிழ்சங்கமம் போன்ற இயக்கங்களின் பொருளும் கூட இது தான்.

இந்த இயக்கங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதிலும் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் தொடர்பான உற்சாகம் அதிகரித்திருக்கிறது.

# # # # #

என் அன்புநிறை குடும்ப சகோதர சகோதரிகளே,

கடந்த பத்தாண்டுகளில், நவீன கட்டமைப்பின் மீது மிகப்பெரிய முதலீட்டை  பாரதம் புரிந்திருக்கிறது.

சாலைவழி, ரயில் பாதை, துறைமுகம், விமான நிலையங்கள், ஏழைகளுக்கான வீட்டுவசதிகள் அல்லது மருத்துவமனைகள் என, இன்று பாரதம் கட்டுமானம் மற்றும் சமூகக் கட்டமைப்பின் மீது இதுவரை காணாத முதலீடுகளைச் செய்து வருகிறது.   

இன்று பாரதம் உலகின் தலைசிறந்த 5 பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது.

உலகின் ஒரு புதிய நம்பிக்கைத் தாரகையாக, இன்று பாரதம் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

பெரியபெரிய முதலீட்டாளர்கள் எல்லாம் இன்று பாரதத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.  

இதன் நேரடி ஆதாயம், தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் கிடைத்து வருகிறது.

தமிழ்நாடு இந்தியாவில் தயாரிப்போம், மேக் இன் இண்டியாவின் மிகப்பெரிய ப்ராண்ட் அம்பாஸடராக ஆகி வருகிறது.

# # # # # 

என் நெஞ்சம்நிறை குடும்ப உறவுகளே,

மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்ற மந்திரத்தை அடிநாதமாகக் கொண்டு செயல்படுகிறது.

கடந்த ஓராண்டிலே, மத்திய அரசாங்கத்தின் 40ற்கும் மேற்பட்ட பல்வேறு அமைச்சர்கள், 400க்கும் மேற்பட்ட முறை தமிழ்நாட்டின் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு விரைவான வளர்ச்சியை அடையும் போது, பாரதத்தின் வளர்ச்சியும் விரைவாகும்.

இணைப்பு கூட, முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய ஊடகமாக விளங்குகிறது.

இதனால் வியாபாரமும் வணிகமும் பெருகுவது மட்டுமல்ல, மக்களுக்கு வசதிவாய்ப்புகளும் ஏற்படுகின்றன.

வளர்ச்சியின் இந்த உணர்வைத் தான் இன்று, இங்கே, திருச்சிராப்பள்ளியிலே நாம்  பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருச்சி சர்வதேச விமானநிலையத்தின் புதிய முனையம் காரணமாக, இந்த இடத்தின் இணைப்புத்திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும்.

இங்கிருந்து கிழக்காசியா, மத்திய ஆசியா மேலும், உள்நாட்டின் – உலக நாடுகளின் பிற பாகங்கள் வரை, திருச்சியின் இணைப்பு, மேலும் வலுவானதாக ஆகும்.

இதனால் திருச்சியைத் தவிர, அண்டைப்புறத்தில் இருக்கும் மிகப்பெரிய பகுதியில் முதலீடுகளும், புதிய வணிகத்திற்கான புதிய சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படும்.

இங்கே கல்வி, உடல்நலம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் மிகப்பெரிய பலம் கூட்டப்படும்.

இங்கே விமானநிலையத்தின் திறன் அதிகரிப்பதோடு, இதை உயர்த்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் உயர்த்தப்பட்ட சாலையாலும் கூட மிகப்பெரிய வசதி உண்டாகும்.

திருச்சி விமானநிலையம், உள்ளூர் கலை-கலாச்சாரம் வாயிலாக, தமிழ் பாரம்பரியம் பற்றிய பெருமைமிகு விஷயங்களை உலகினுக்குப் பறைசாற்றும் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது.

# # # # # 

என் உயிரினும் மேலான என் குடும்பச் சொந்தங்களே,

இன்று தமிழ்நாட்டின் ரயில் இணைப்புத்திறனை மேலும் வலுவானதாக ஆக்க, 5 புதிய திட்டங்கள் தொடங்கப்பட இருக்கின்றன.

இவற்றால் பயணம் மற்றும் போக்குவரத்து எளிதாக ஆகும் என்பது ஒரு புறம்;  மற்றொரு புறத்தில் இந்தப் பகுதியில் தொழில்களுக்கும், மின்சார உற்பத்திக்கும் கூட பெரும் வலு கூட்டப்படும்.

இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் மக்கள்நலத் திட்டங்கள், ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, இராமேஸ்வரம், வேலூர் போன்ற மகத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்கின்றன. 

இவை நமது நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவின் பெரிய மையங்கள்.

இவற்றால் எளிய சாமான்யர்களோடு கூடவே, புனிதப்பயணங்களை மேற்கொள்வோருக்கும் கூட மிகப்பெரிய வசதிகள் உண்டாகும்.

# # # # # 

என் நெஞ்சுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்களே,

கடந்த பத்தாண்டுகளிலே மத்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய கவனம், துறைமுகம் வழிநடத்தும்க் முன்னேற்றம் மீது இருந்து வந்திருக்கிறது.

நாம் கடற்கரையோர கட்டமைப்பின் முன்னேற்றம் மற்றும் மீனவ நண்பர்களின் வாழ்க்கையை மாற்றும் நோக்கிலே பல பணிகளை ஆற்றியிருக்கிறோம்.

சுதந்திரம் கிடைத்த பிறகு முதன்முறையாக, மீன்வளத்திற்கென பிரத்யேகமான தனியொரு அமைச்சகத்தை ஏற்படுத்தி, அதற்கென பிரத்யேகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

முதன்முறையாக, மீனவர்களுக்கும் கூட, விவசாயிகள் பற்று அட்டை வசதியும் அளிக்கப்பட்டிருக்கிறது.

மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக, நவீனமயமாக்கல் விஷயத்திலும் கூட அரசாங்கம் உதவிகள் செய்து வருகின்றது.

பிரதம மந்திரி மீன்வளத் திட்டத்தால் மீன்பிடித் தொழிலோடு இணைந்திருக்கும் நண்பர்களுக்கு மிகப்பெரிய உதவி கிடைத்து வருகிறது.

# # # # #

என் உயிரினும் மேலான என் குடும்ப பந்தங்களே,

சாகர்மாலா திட்டத்தால் இன்று தமிழ்நாடு உட்பட தேசத்தின் பல்வேறு துறைமுகங்கள், நல்ல சாலைகளோடு இணைக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் பெருமுயற்சிகளால் இன்று பாரதத்தின் துறைமுகத் திறனிலும், கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து திரும்பிச் செல்லும் நேர அளவிலும் பெரிய மேம்பாடு ஏற்பட்டிருக்கிறது.

காமராஜர் துறைமுகமும் கூட இன்று தேசத்தின் மிக விரைவாக மேம்பாடு அடைந்து வரும் துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்தத் துறைமுகத்தின் கொள்திறனை, நமது அரசாங்கம் கிட்டத்தட்ட 2 மடங்கு வரை அதிகப்படுத்தி இருக்கிறது.

இப்போது பொதுவான சரக்கு பர்த் 2 மற்றும் கேப்பிடல் ட்ரெட்ஜிங் 5ஆவது கட்டத்தின் தொடக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் ஆகவிருக்கும் ஏற்றுமதி-இறக்குமதிக்குப் புதிய சக்தி கிடைக்கும்.

சிறப்பான வகையில் இது வாகனத் துறையில் தமிழ்நாட்டின் திறன்கள்-திறமைகளை விரிவாக்கும்.

அணுசக்தி உலை மற்றும் எரிவாயுக் குழாய் மூலமாகவும் கூட தமிழ்நாட்டின் தொழில்சாலைகளுக்கு, வேலைவாய்ப்பு உருவாக்கல்களுக்கு புதிய பலம் கிடைக்கும்.

# # # # # 

எனதருமை குடும்பச் சொந்தங்களே,

இன்று மத்திய அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத்தில் வரலாறுகாணாத நிதியைச் செலவு செய்து வருகிறது.

2014ற்கு முன்பான பத்தாண்டுகளில் மத்திய அரசு தரப்பிலிருந்து மாநிலங்களுக்கு சுமார் 30 இலட்சம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டது.

நம்முடைய அரசாங்கமானது கடந்த பத்தாண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு 120 இலட்சம் கோடி ரூபாயை அளித்திருக்கிறது.

2014க்கு முன்பான பத்தாண்டுகளில் எத்தனை நிதியை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றதோ, அதை விட இரண்டரை மடங்கிற்கும் அதிகமான நிதியை நம்முடைய மத்திய அரசு அளித்திருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கும் பொருட்டு மத்திய அரசு முன்பைக் காட்டிலும் 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்திருக்கிறது.

இரயில்வே துறையை நவீனமயமாக்க, நமது அரசாங்கம், முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிக அளவு செலவு செய்து வருகிறது.

இன்று தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள் கிடைத்து வருகின்றன, இலவசமாக மருத்துவ சிகிச்சை கிடைத்து வருகின்றது.

நம்முடைய அரசாங்கம், கான்கிரீட் வீடுகள், கழிப்பறை வசதிகள், குடிநீர் இணைப்புகள், எரிவாயு இணைப்புகள் போன்ற பல வசதிகளை நம் தமிழ் சொந்தங்களுக்குச் செய்து வருகிறது.

# # # # # 

என் பேரன்புடைய குடும்பத்தாரே,

வளர்ச்சியடைந்த பாரதத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று சொன்னால், அனைவரின் முயற்சியும் அவசியமானது.

தமிழ்நாட்டு மக்களின், தமிழ் இளைஞர்களின் திறன்கள்-திறமைகளின் மீது அபாரமான, அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

தமிழ் இளைஞர்களிடத்திலே ஒரு புதிய எண்ணம், புதிய உற்சாகத்தின் உதயத்தை என்னால் தெளிவாகக் காண முடிகிறது.

இந்த உற்சாகம் தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் சக்தியாக ஆகும்.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.

பாரத் மாதா கீ ஜய்!