Home Blog Page 44

வடகிழக்குப் பருவமழை தொடக்கம்; 24ல் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

school students going in rain - 2026
#image_title

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

வடகிழக்குப் பருவமழை இன்றிலிருந்து தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருக்கிறது.

தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதிலிருந்தும் விலகிவிட்டது.

குமரிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டலக் காற்றுச்சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் வலுவான கிழக்கு-வடகிழக்குக் கஆற்று வீசுகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் விட்டுவிட்டு மழைபெய்யும். குறிப்பாக இரவு, அதிகாலை நேரங்களில் மழைபெய்யும்.

பிற இடங்களில் பகல்நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இன்று கடலூர் மாவட்டத்தில் இடி தாக்கியதால் வயலில் வேலைசெய்துகொண்டிருந்த நான்கு பெண்கள் இறந்துபோனதாகத் தகவல் வந்துள்ளது.

அரபிக்கடலில் நிலவும் வளிமண்டலக் காற்றுச் சுழற்சி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மஆறக்கூடும்.

வங்கக் கடலில் வருகின்ற 24ஆம் தேதி ஒரு காற்றாழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது. இது வலுவடைந்து, வடதமிழகப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இந்த காற்றாழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுவடையுமா, தமிழகத்தைத் தாக்குமா என்பது குறித்து 24ஆம் தேதி வானிலைத் தரவுகள் கிடைத்த பின்னரே சொல்ல இயலும்.

சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு; ஜனாதிபதி வருகையால் தரிசனத்தில் மாற்றம்!

president to sabarimala - 2026

ஐப்பசிமாத பூஜை- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை அக்17ல் மாலை திறப்பு : ஜனாதிபதி வருகை! தரிசனத்தில் மாற்றம்!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்கு நாளை மாலை திறக்கப்பட்டு சனிக்கிழமை முதல் ஐப்பசி மாத பூஜை மற்றும் சபரிமலை புதிய மேல் சாந்தி தேர்வு நடைபெறும்.இந்தநிலையில் ஜனாதிபதி வருகை! தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை 17-ந் தேதி மாலை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்திவைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார்.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமையன்று) மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து நாளை மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.

கோவிலில் நாளை மறுநாள் சனிக்கிழமை வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.

ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான 22-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் வருகிற 21-ந் தேதி திருவனந்தபுரம் வருகிறார். அன்று இரவு கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர் மறுநாள் காலை 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வருகிறார்.

அங்கிருந்து கார் மூலம் பம்பை வரும் அவர் இருமுடி கட்டி தேவஸ்தானத்தின் சிறப்பு வாகனம் மூலம் சன்னிதானம் செல்கிறார். தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு சன்னிதானத்தில் ஓய்வெடுக்கிறார், பின்னர் வாகனம் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருகிறார்.

பின்னர் மறுநாள் 22-ந் தேதி வர்க்கலாவில் நாராயண குரு ஆசிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு மீண்டும் திருவனந்தபுரம் திரும்புகிறார். தொடர்ந்து 24-ந் தேதி வரை கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருவதையொட்டி வருகிற 21, 22-ந் தேதிகளில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த 2 நாட்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக 18-ந் தேதி காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

சபரிமலை செல்ல வேண்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வரும் 21 ஆம் தேதி திருவனந்தபுரம் வந்து ராஜ்பவனில் தங்குகிறார். 22 ஆம் தேதி காலை அங்கிருந்து, ஹெலிகாப்டரில் நிலக்கல் வருகிறார். நிலக்கலில் இருந்து சாலை வழியாக பம்பாவை அடையும் அவர் பம்பா நதியில் நீராடவும் திட்டமிட்டுள்ளார்

பின்னர் பம்பாவிலிருந்து மலையேறி புதிய கூர்க்கா ஜீப்பில் சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். நாட்டின் குடியரசுத் தலைவர் ஒருவர் சபரிமலைக்கு வருவது இதுவே முதல் முறை.

ஜனாதிபதி சபரிமலை வருவதை ஒட்டி 21 ஆம் தேதி பிற்பகல் முதல் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

தாம்பரம் – செங்கோட்டை தீபாவளி சிறப்பு ரயில்… நாளை தவற விட்டுடாதீங்க!

railway news - 2026
#image_title

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவையாக, தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு ரயில் எண் 06013 / 6014 இயக்கப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை நாளை மாலை தாம்பரத்தில் புறப்பட்டு, சனிக்கிழமை காலை செங்கோட்டைக்கு நேர் வழியில் வந்து சேரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பதிவு செய்யும் வகையிலான 11 இரண்டாம் வகுப்பு அமரும் பெட்டிகள், ஒரு குளிர்சாதன பெட்டி, நான்கு முன்பதிவில்லா அமரும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய 18 பெட்டி வண்டி. இதனால் தென்மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பின் படி, வண்டி எண் 06013 – அக்டோபர் 17ம் தேதி வெள்ளிக்கிழமை தாம்பரத்தில் இரவு 7.30க்குப் புறப்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல்,  மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு மறு நாள் காலை 7.3க்கு வந்து சேரும். 

அதுபோல், வண்டி எண் 06014 அக்டோபர் 20ம் தேதி திங்கள் கிழமை இரவு 8.45க்கு செங்கோட்டையில் புறப்பட்டு, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக மறுநாள் செவ்வாய்க் கிழமை காலை 9:45க்கு தாம்பரம் சென்றடைகிறது.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் நன்றி

செங்கோட்டைக்கு தாம்பரத்திலிருந்தும் தாம்பரத்திற்கு செங்கோட்டையிலிருந்தும் தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க ஆணை பிறப்பித்த தெற்கு ரயில்வே அதிகாரிகள் அனைவருக்கும் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் மனமார்ந்த நன்றிகளையும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றனர். இதற்காக உதவிய பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் நிர்வாகிகள், தென்காசி விருதுநகர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இனிய நன்றி கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
07/10/25 அன்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் தெற்கு ரயில்வே அதிகாரிகள் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய கீழ்கண்ட மின்னஞ்சல் கடிதம்தான் தீபாவளி சிறப்பு ரயிலை பெற முக்கிய காரணியாக அமைந்தது என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த ரயில் அறிவிக்கப்பட்டு செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே ஏசி பெட்டி முன்பதிவு நிறைவடைந்தது. அடுத்த சில நிமிடங்களில் அமரும் பெட்டிகளின் முன்பதிவும் முழுமையாக நிறைவடைந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.

பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம்!

thiruchuzhi fireworks awareness program - 2026

திருச்சுழியில் பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

விருதுநகர், காரியாபட்டியில் பட்டாசுகளை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்து பள்ளி மாணவர்கள், மற்றும் பொது மக்களிடம் பிரச்சாரம்
செய்யப் பட்டது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகை யை முன்னிட்டு, பட்டாசுகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடை பெற்றது.

தமிழ் பாடி அரசு மேல்நிலைப்பள்ளி அல்லி முத்து நாடார் நர்சரி பிரைமரி பள்ளி மற்றும் பேருந்து நிலையம், மற்றும் பொது நிறுவனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

குடிசைb பகுதியில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து திறந்த வெளிப் பகுதியில் பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் , எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் உடனையாக தண்ணீர் ஊற்றி அனைக்க வேண்டும். பட்டாசுகளை டின் பாட்டில்களில் வைத்து வெடிக்கg கூடாது, பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான உடைகள் அணிய வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை உடனடியாக அகற்றி விட வேண்டும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அருகில் இருந்து கண்காணிக் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாணவர்களுக்கும், பொது மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது

நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் வீரர்கள் பிரச்சாரம் செய்தனர்.

மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழா; முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்!

melakkal mari amman temple mulaippari - 2026

சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது திருவிழாவில் சுமார் 600க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேலக்கால் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக வந்து காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர்

பின்னர் கோவில் முன்பு வைத்து கும்மி பாட்டு பாடினர் தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது இன்று காலை கோவிலில் இருந்து வைகை ஆற்றிற்கு ஊர்வலமாக சென்று முளைப்பாரியை கரைத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர் முளைப்பாரியுடன் பொதுமக்கள் மஞ்சள் நீராடியும் பல்வேறு வேஷங்கள் போட்டும் ஊர்வலத்தில் சென்றனர்

திருவிழாவில் மேலக் கால் மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை மேலக்கால் கிராம பொதுமக்கள் கிராம கமிட்டியாளர்கள் செய்திருந்தனர் இதே போல் விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்

தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது விக்கிரமங்கலம் மற்றும் எட்டூர் கிராம பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்

கரூரில் சுயசார்பு பாரத சங்கல்ப நாள்!

karur bjp swadeshi day - 2026

பாரதிய ஜனதா கட்சி இன்றைய தினம் நாடு முழுவதும் சுயசார்பு பாரதம் சங்கல்பம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கரூர் மத்திய நகரம், வாக்கு சாவடி எண் 117 ல் கரூர் மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் வீடு தோறும் சுதேசி எனது பெருமை, சுதேசி பொருள்களை பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் பொறுப்பாளர், மாவட்ட துணை தலைவர் சக்திவேல் முருகன் முன்னிலை வைத்தார்.

மாவட்டச் செயலாளர்கள் முருகேசன், வெங்கடாசலம், கரூர் மத்திய மாநகரத் தலைவர் சரண்ராஜ் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

‘ஜனசேவா டிரஸ்ட்’ சார்பில் தீபாவளி புத்தாடைகள் வழங்கல்!

janaseva trust free deepavali distributions - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் தீபாவளி புத்தாடை வழங்கல் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா பாஜக மாவட்ட தலைவா் ஆனந்தன் அய்யாசாமி பயனாளிகளுக்கு வழங்கினர்.

செங்கோட்டை வல்லம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து செங்கோட்டை ஜனசேவா டிரஸ்ட் சார்பில் ஏழை, எளிய முதியோர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.

செங்கோட்டை நகரில் ஜனசேவா டிரஸ்ட் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. கொரோனா காலம் தொட்டு கபசுர குடிநீர், ஆறு துாய்மை படுத்துதல், இரத்த தானம் வழங்கல் உள்பட பல்வேறு சமூகநல பணிகளைச் செய்து வருகிறது. அதேபோல் கடந்த 5 வருடங்களாக ஏழை,எளிய ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் இலவச வேஷ்டி, சேலை வழங்கி வருகிறது.

இந்தாண்டு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஜனசேவா டிரஸ்ட் பொருளாளா் டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். டிரஸ்ட் கௌரவ ஆலோசகர் ஆசிரியா் முருகன் முன்னிலை வகித்தார். டிரஸ்ட் நிறுவனா் சமூக சேவகர் நாணயம் கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

டிரஸ்ட் சட்ட ஆலோசகர் வழக்கறிஞா் சுபசேகர், ஸ்ரீ நர்சரி பள்ளி முதல்வர் மீனாகுமாரி, டிரஸ்ட் செயலாளா் ஐயப்பன் 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் பொன்னுலிங்கம் (எ)சுதன் சமூக ஆர்வலா் ஹரிஹரகிருஷ்ணய்யர் பாஜக மாவட்ட மகளிரணி செயலாளா் ரேவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழச்சிக்கு சிறப்பு விருந்தினராக கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா, வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேஷ்டி, சேலை வழங்கி வாழ்த்தி பேசினா்.

நிறைவாக செங்கோட்டை நகராட்சி 24 வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் செண்பகராஜன் நன்றி கூறினார்.

IND Vs WI Test: இரண்டாம் டெஸ்டையும் வென்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!

shumbam gill test series cup - 2026

இந்தியா – மே.இ. தீவுகள் அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று, இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. 

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

(இடம்: டெல்லி; சுருக்கமான ஸ்கோர்: இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் -518/5 டிக்ளேர், இரண்டாவது இன்னிங்க்ஸ் – 124/3 ; மேற்கு இந்திய தீவுகள் முதல் இன்னிங்க்ஸ் – 248, இரண்டாவது இன்னிங்க்ஸ் –  390) 

போட்டியின் முதல் நாள் முழுக்க முழுக்க இந்திய அணியின் தினம். முதல் நாள் முடிவில் எடுத்த இரண்டு விக்கட் இழப்பிற்கு 318 ரன் என்பது தரமான ஸ்கோர். ஜெய்ஸ்வாலின் 173 ரன் ஒரு தவறான ஷாட் இல்லாத ஸ்கோர். ராகுல் விரைவாக அவுட் ஆனதால் சாய் சுதர்ஷன் சீக்கிரமாகவே விளையாட வந்து விட்டார். இரண்டே முக்கால் மணி நேரம், 57 ஓவர்கள் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடி 87 ரன்கள் எடுத்தார். அவர் மூன்று தவறான ஷாட்டுகள் விளையாடினார். முதல் ஷாட்டில் மே.இ. தீவுகள் ஒரு கேட்சை கோட்டைவிட்டது. மூன்றாவது தவறான ஷாட்டில் அவர் ஆட்டமிழந்தார். 

மே.இ. தீவுகள் பந்துவீச்சில் விசேஷமாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர்களுடைய பந்துவீச்சில் அவர்கள் ஒரு எக்ஸ்ட்ரா கூட கொடுக்கவில்லை. ஆனால் ரன்னைத் தடுக்கும் வகையிலோ, அல்லது, விக்கட் எடுக்கும் வகையிலோ அவர்கள் பந்து வீசவில்லை. எனவே இந்திய அணி மேலும் ரன் எடுக்க வசதியாக அமைந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்தியா விரைவாக இரு விக்கெட்களை இழந்தது. என்றாலும் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணி திறமையாக விளையாடியது. நாளின் தொடக்கத்தில் நிச்சயமாக இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னிற்கு ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் நிதீஷ் குமாருக்கு இன்று பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் 43 ரன் கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் ஷுப்மன் கில் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். அடுத்த மட்டையாளர் துருவ் ஜுரல் 44 ரன்னில் இருக்கும்போது ரோஸ்டன் சேஸ் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அச்சமயத்தில் கில் இந்திய அணியின் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். மொத்தத்தில் இன்று, இந்திய அணி 44.2 ஓவர் விளையாடி 200 ரன்கள் சேர்த்தது.

(இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 134.2 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 518 டிக்ளேர்டு; கே.எல். ராகுல் 38, யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 175, சாய் சுதர்ஷன் 87, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 129, நிதீஷ்குமார் ரெட்ட் ஜோமல் வாரிகன் 3/98, ரோஸ்டன் சேஸ் 1/83) 

இதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸைத் தொடங்கிய மே.இ. தீவுகள் அணி பும்ரா மற்றும் சிராஜ் ஓவர்களை நன்கு சமாளித்தனர். ஆனால் ஜதேஜா பந்துவீச வந்ததும் முதல் விக்கட் விழுந்தது. இரண்டாவது விக்கட்டிற்கு சந்தரபாலும் அதனாசேயும் 50 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். பின்னர் சந்தரபால் மற்றும் ரோஸ்டன் சேஸ் இருவரும் ஜதேஜாவின் சுழலில் ஆட்டமிழந்தனர். குல்தீப் தன் பங்கிற்கு அதனாசேயின் விக்கட்டை வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மே.இ. தீவுகள் அணி 43 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 140 ரன் எடுத்திருந்தது. ஃபாலோ ஆனைத் தவிர்க்க அந்த அணி இன்னமும் 179 ரன்கள் எடுக்கவேண்டும். 

மே.இ. தீவுகள் அணி முதல் இன்னிங்க்ஸ் (43 ஓவர்களில் 140/4, ஜான் கேம்ப்பெல் 10, சந்த்ரபால் 34, அதனசே 41, ஷாய் ஹோப் ஆட்டமிழக்காமல் 31, ரோஸ்டன் சேஸ் பூஜ்யம், டெவின் இம்ல்ச் ஆட்டமிழக்காமல் 14, ஜதேஜா 3/37, குல்தீப் யாதவ் 1/45)

இந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நடுத்தர வரிசை ஆட்டக்காரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்ததால், அந்த அணி 248க்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, ஃபாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் ஆட்டக்காரர்கள் இம்முறை சிறப்பாக நின்று ஆடினார்கள். சந்தர்பால், அதனாஸ் என இரு தொடக்க வரிசை ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து 35க்கு 2 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்து 3வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் பாட்னர்ஷிப் போட்டு,  212க்கு 3 என்ற நிலை வரை அழைத்து வந்தனர் காம்பெல், ஹோப் இருவரும்.  காம்பெல் 115 ரன்னும் ஹோப் 103 ரன்னும் எடுத்தனர். அதன் பின்னர் கேப்டன் சேஸ் 40 ரன்னும் கிரீஸ் 50 ரன்னும் எடுத்தனர். கடைசி விக்கெட்டுக்கு நின்று நிதானித்து விளையாடி 79 ரன் பார்ட்னர்ஷிப் போட்டு சீல்ஸ் 32 ரன் எடுத்து கை கொடுத்தார். இதனால் அந்த அணி 390க்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

இதன் பின்னர் தொடர்ந்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடத் தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன் எடுத்திருந்தது இந்திய அணி.

நான்காம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு போட்டிகளிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. 

இந்தப் போட்டியில் குல்தீப் யாதவ் இரு இன்னிங்க்ஸிலும் சேர்த்து (5/80, 3/104) 8 விக்கெட்கள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.

செங்கோட்டையில் ஆர்எஸ்எஸ்., நூற்றாண்டு விழா!

rss centenary in sngottai - 2026

விஜயதசமி அன்று தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு, அக்.12 ஞாயிறு மாலை, செங்கோட்டை பூத்திரம் தெரு நாகம்மன் கோவில் அருகில் வைத்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பணிநிறைவு பெற்ற சிஆர்பிஎப் கண்காணிப்பாளா் நடராஜன் தலைமை தாங்கினார். எஸ்கே.சங்கரன் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி கோட்ட பொறுப்பாளா் சிவா பஞ்ச பரிவர்த்தனை குறித்து விளக்கினார்.

அதில் குடும்ப நலன், சமுதாய நலன் மற்றும் கட்டமைப்பு, சுற்றுச்சூழல் இயற்கை வளம், ஆறு, குளம், ஏரி பாதுகாத்தல், குடிமக்கள் கடமை, சுதேசிய பொருட்கள் பயன்பாடு மற்றும் ஆதரவு அளித்தல் குறித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ்., உறுப்பினா்கள் சீருடை அணிந்து கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை செங்கோட்டை நகரச் செயலாளா் அயோத்தி முருகேசன் சிறப்பாக செய்திருந்தார்.

‘தாயின் மடியில்’ அறக்கட்டளை சார்பில் எளியோருக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கல்!

thayin madiyil trust free distributions function - 2026

செங்கோட்டையில் அக்.12 ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் 6ஆம் ஆண்டு தீபாவளி புத்தாடைகள் எம்எல்ஏ., கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா வழங்கினார்.

செங்கோட்டை தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் கொரோனா பெருந்தொற்று காலம் தொட்டு ஏழை, எளிய ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருப்பிடம் தேடி உணவு வழங்கி சேவை செய்தும் ஆண்டுதோறும் ஏழை,எளிய ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி, சேலை வழங்கி வருகிறது.

6ஆம் ஆண்டு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கோட்டை ஸ்ரீஜெயேந்தரா மெட்ரிக் பள்ளி நிர்வாகி ராணி ராம்மோகன் தலைமை தாங்கினார். பிஎல்எம் ஸ்போர்ட்ஸ் அகடாமி நிர்வாகி பிரபாமுரளி முன்னிலை வகித்தார். குற்றாலம் பராசக்தி வித்யாலயா ஆசிரியை ராஜகுமாரி சக்திவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.

திருக்குற்றாலம் ஐந்தருவி ஸ்ரீசுவாமி விவேகானந்தா ஆஸ்ரம ஸ்தாபகர் ஸ்ரீமத் சுவாமி அகிலானந்த மஹராஜ், ஸ்ரீசாரதா ஆஸ்ரமம் ஸ்ரீஆத்மப்ரியா மாதாஜி ஆகியோர் ஆசியுரை வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி (எ)குட்டியப்பா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் பாஜக மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில செயலாளா் மருதுபாண்டியன், விஜிசி. மாநில பொதுச்செயலாளா் குமரேசன், பசிபோக்கும் தென்பொதிகை அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன், பெரியபிள்ளைவலசை பஞ்சாயத்து தலைவா் வேல்சாமி, கட்டளைகுடியிருப்பு பஞ்சாயத்து தலைவா் முத்துப்பாண்டி, பணிநிறைவு பெற்ற வேளாண் துணை அலுவலா் ஷேக்முகைதீன், சீனியா் ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுகன்யா, வழக்கறிஞா் கணேசபாண்டியன், முருகன், சங்கர்ரவி ஸ்தபதியார், ஹரிஹரகிருஷ்ண்ணயர், பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் சிங்கப்பூர்தங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முடிவில் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகம் நன்றி கூறினார்.

முன்னதாக செங்கோட்டை நகராட்சி , புதுார் பேரூராட்சி, பெரியபிள்ளைவலசை, கற்குடி உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியம் துாய்மை பணியாளா்கள் அனைவருக்கும் மதிய உணவும், இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்பட்டது.