Home Blog Page 53

2025 – மகாளய பட்ச வழிகாட்டி! எந்த நாளில் என்ன திதியில்…!

amavasai pitru tharpanam - 2026

மகாளய பட்ச வழிகாட்டி!

2025 – விசுவாவசு வருடம் – மாளயபட்ச திதி விவரங்கள்

2025 இந்த வருடம் மகாளய பட்ச அமாவாசை வரும் புரட்டாசி மாதம் 5ம் தேதி (21.09.2025 ஞாயிறு) அன்று வருகிறது. அதற்கு முந்தைய ஒரு கிருஷ்ண பட்சமும் (தேய்பிறை) மகாளய பட்சமாக – பித்ரு கடன்களைத் தீர்ப்பதற்கு – பித்ரு பூஜைகளைச் செய்வதற்கு உகந்த காலம்.

செப்.07 இன்று பௌர்ணமியை அடுத்து, நாளை முதல் மகாளய பட்சம் தொடங்கும் நேரம் – நட்சத்திரம் – திதி ஆகியவை ஒரு வழிகாட்டலுக்காக இங்கே…

08.09.2025 -ஆவணி 23 திங்கள் – தேய்பிறை பிரதமை – இரவு 09.12 மணி வரை – பூரட்டாதி – இரவு 08.02 வரை

09.09.2025 – ஆவணி 24 செவ்வாய் – துவிதியை – மாலை 06.29 வரை – உத்திரட்டாதி – மாலை 06.07 வரை

10.09.2025 – ஆவணி 25 புதன் – திருதியை – மதியம் 03.38 வரை – ரேவதி – மாலை 04.03 வரை

11.09.2025 – ஆவணி 26 வியாழன் – சதுர்த்தி – பகல் 12.46 வரை – அஸ்வினி – பகல் 01.58 வரை

12.09.2025 – ஆவணி 27 வெள்ளி – பஞ்சமி – காலை 09.59 வரை – பரணி – காலை 11.58 வரை (மஹா பரணி)

13.09.2025 – ஆவணி 28 சனி – சஷ்டி – காலை 07.23 வரை சப்தமி – மறுநாள் அதிகாலை 05.04 வரை – கிருத்திகை – காலை 10.11 வரை

14.09.2025 – ஆவணி29 ஞாயிறு – அஷ்டமி – இரவு 03.06 வரை (மத்யாஷ்டமி) – ரோகிணி – காலை 08.41 வரை, மிருகசீரிடம் – மறுநாள் காலை 07.31 வரை

15.09.2025 – ஆவணி 30 திங்கள் – நவமி – இரவு 01.31 வரை திருவாதிரை- காலை 07.32 முதல் மறுநாள் காலை 06.46 வரை

16.09.2025 – ஆவணி 31 செவ்வாய் – தசமி – இரவு 12.22 வரை புனர்பூசம் – காலை 06.47 முதல் மறுநாள் காலை 06.26 வரை

17.09.2025 – புரட்டாசி 1 புதன் – ஏகாதசி – இரவு 11.40 வரை பூசம் – காலை 06.27 முதல் மறுநாள் காலை 06.32 வரை

18.09.2025 – புரட்டாசி 2 வியாழன் – துவாதசி – இரவு 11.25 வரை ஆயில்யம்- காலை 6.33 முதல் மறுநாள் காலை 07.05 வரை

19.09.2025 – புரட்டாசி 3 வெள்ளி – திரயோதசி – இரவு 11.37 வரை மகம் – காலை 07.06 முதல் மறுநாள் காலை 08.06 வரை

20.09.2025 – புரட்டாசி 4 சனி – சதுர்த்தசி – இரவு 12.17 வரை மகம் – காலை 08.06 வரை பூரம் – காலை 08.07 முதல் மறுநாள் காலை 09.32 வரை


சோழவந்தானில் வ.உ.சி.,யின் 154வது பிறந்தநாள் விழா!

voc birthday in usilampatti - 2026

செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ.உ.சி.யின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

சோழவந்தானில் உள்ள வடக்கு ரத வீதி தெற்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சார்பில் அதன் நிர்வாகிகள் வ உ சி யின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் முன்னதாக உறவின்முறை சங்கத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்

தொடர்ந்து ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் திமுக சார்பில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு வ உ சி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் விவசாய அணி வக்கீல் முருகன் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் கவுன்சிலர்கள் ஈஸ்வரி முத்துச்செல்வி சதீஷ் சிவா கொத்தாலம் செந்தில் வேல் குருசாமி செல்வராணி நிஷா முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி இளைஞர் அணி வெற்றிச்செல்வன் மற்றும் நல்லதம்பி பொருளாளர் பேட்டை கண்ணன் மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் அவைத் தலைவர் தீர்த்தம் என்ற ராமன் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் ஐயப்பன் கலாவதி ராஜா விவசாய அணி பேருர் துணைச்செயலாளர் சங்கங்கோட்டை சந்திரன் வார்டு செயலாளர் ரவி கண்ணதாசன் முட்டை கடை காளி முள்ளி பள்ளம்ஜீவாபாரதி ஞானசேகரன் வக்கீல் சுரேஷ் டாஸ்மாக் பொன்முடி செங்குட்டுவன் தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் வ உ சி யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரூர் செயலாளர் முருகேசன் கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா இளைஞரணி கேபிள் மணி மகளிர் அணி சாந்தி மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டனர் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் முள்ளிப்பள்ளம் நாகு ஆசாரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

ரஜினி நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் முத்துராமன் குரு ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது நற்பணி மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோதி ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் பிச்சைமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார் இதே போல் நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக சார்பில் அதன் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

தொடர்ந்து நேற்று மாலை வடக்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்கத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக சென்றனர் இதில் பொய்க்கால் குதிரை ஆட்டம் வானவேடிக்கை பேண்டு வாத்தியம் வ உ சி யின் சுதந்திர போராட்ட உரைகளை விளக்கும் சொற்பொழிவு வ உ சி போல் வேடமணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தில் வந்தனர்

தொடர்ந்து வ உ சி யின் சிலைக்கு பூக்கள் தூவி மரியாதை செய்தனர் சிலை முன்பு சொற்பொழிவு கவியரங்கம் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இதில் வடக்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

செங்கோட்டையனுக்கு பின்னடைவு அல்ல, அவரை நீக்கியவர்களுக்கே பின்னடைவு!

ttv dhakaran in usilampatti - 2026

கெடுவான் கேடு நினைப்பான் – வீணாசையே விபரீத புத்தி என்பார்களே அதை போல ஒரு டிரையல் நடத்தியுள்ளனர். செங்கோட்டையனுக்கு பின்னடைவல்ல – அவரை நீக்கியவர்களுக்கு தான் பின்னடைவு என்று, உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் பி.கே. மூக்கையாத்தேவரின் 46 வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், செங்கோட்டையன் மூத்த தலைவர் அவர் 1977 ஆம் ஆண்டு முதல் கிளைச் செயலாளராக அதிமுக கட்சியில் இருந்து விசுவாசத்தோடு உழைத்து வந்தவர். கிளைச்செயலாளராக இருந்து மாவட்டச் செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த மூத்த தலைவர்.

1987இல் இரண்டு அணியாக பிரிந்த போது அந்த மாவட்டத்தின் அண்ணன் முத்துசாமியுடன் நான்கு பேர் சென்றார்கள் செங்கோட்டையன் அவர்களிடம் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தனர். எப்போதுமே, ஏற்றத்தாழ்வுகளுக்கு இருந்த போதும் அம்மாவின் விசுவாசமாக இருந்தவர் .

அப்படி இருந்த சிறந்த ஒரு மூத்த நிர்வாகியின் கோரிக்கையாக மட்டுமில்லாமல் தொண்டர்களின் கோரிக்கையிலே அவர் கூறியுள்ளார். கெடுவான் கேடு நினைப்பான், வீனாசையே விபரீத புத்தி என்பார்களே அதை போல ஒரு டிரையல் நடத்தியுள்ளனர். இது செங்கோட்டையனுக்கு பின்னடைவு அல்ல எடப்பாடிக்குத்தான் பின்னடைவு என்று கூறினார்.

தரிசன கட்டணக் கொள்ளை மூலம் கோயில்களில் நவீன தீண்டாமை!

kadeswara subramaniam hindu munnani - 2026

அறநிலையத்துறையின் தரிசன கட்டண கொள்ளை தொடருகிறது!
பிரேக்கிங் (இடைநிறுத்தம்) தரிசனம் என்ற பெயரில் நவீன பொருளாதார தீண்டாமையை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக சட்டமன்ற 2025 -2026 மானிய கோரிக்கை எண் 47 இன் படி பெருவாரியான பக்தர்கள் வருகை தருகின்ற திருக்கோவில்களில்
பிரேக்கிங் தரிசன முறை ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார்.

பெரிய கோவில் வரிசையில் திருச்செந்தூரில் இது முதலாவதாக அமல்படுத்தப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பெருவாரியான பக்தர்களை சோதனைக்கு உள்ளாக்கும் முயற்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்ற சிறிய மற்றும் பெரிய கோவில்களின் நிலைமை பரிதாபகரமான நிலையில் உள்ளது.

திருவிழாக்கால சிறப்பு பேருந்து கட்டணம், சிறப்பு தரிசன கட்டணம், வாகன நிறுத்த கட்டணம், பிரசாத கட்டணம் என வசூல் கொள்ளை செய்யும் நிலையங்களாக அறநிலையத்துறை மாறி இருக்கிறது. இதில் பெரிய கோவில்களில் பிரேக்கிங் தரிசன கட்டணமுறை என்பது திராவிட மாடல் அரசின் பகல் கொள்ளையையே காட்டுகிறது.

ஆகம விதிகளின்படி மதியம் உச்சி பூஜை முடிந்த பிறகு கோயில்களை சாத்துவது என்பது வழக்கமாக உள்ளது. ஆனால் கட்டணம் வசூலிக்கும் நோக்கோடு ஆகம விதிகளுக்கு எதிராக மதியம் மூன்று மணி முதல் 4 மணி வரை கோவில்களை திறந்து வைக்கலாம் என அறநிலையத்துறை முடிவு எடுத்துள்ளது.

இடை நிறுத்த தரிசனமே தவறு என்கிற போது 500 ரூபாய் கட்டணம் வசூலிப்பது கடவுளை காட்சிப் பொருளாக்கும் நியாயமற்ற அரசின் நிர்வாகத்தைக் காட்டுகிறது. ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மதியம் ஒரு மணிக்கு மேலாக கட்டணம் பெற்றுக்கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. சினிமா தியேட்டர்கள் போன்று காலை, மதியம், இரவு காட்சி என கோவில்களை மாற்றுவது கோவில்களின் பாரம்பரியத்தை அழிக்கும் செயலாகும்.

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கடந்த இரண்டு மாத காலமாக திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்ய பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருக்கக் கூடிய அவல நிலையை காண முடிகிறது. ஏழை பக்தர்கள் வரிசையில் நின்றிருக்க ஒருபுறம் கட்டண தரிசனமும், மறுபுறம் கையில் காசை வாங்கிக்கொண்டு தரிசனத்திற்கு ஒரு சிலரை அனுமதிப்பதும் பக்தர்களை பெரும் அவதிக்குள்ளாக்கி வருகிறது.

முருகனின் அறுபடை வீடான திருத்தணியில் கோவில் ஊழியர்களுக்கும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் தொடர்ந்து கைகலப்பு ஏற்படுவதும் தரிசன முறைக்கு பணம் பெற்றுக் கொண்டு ஒரு சிலரை உள்ளே விடுவதால்தான் என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ஒரு பக்கம் கோவில்களில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் பக்தர்களுக்கு செய்து தருவதில்லை. மறுபுறம் சிதிலமடைந்த கோவில்களை செப்பனிடுவதும் இல்லை. பெரிய கோவில்களின் வருமானத்தையும் உண்டியல் பணத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடிய அறநிலையத்துறை சிறிய கோவில்களில் ஒரு கால பூஜையைப் பற்றி கூட கவலைப்படுவதில்லை. 37 ஆயிரம் கோவில்களில் விளக்கு எரியும் வசதி இல்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தன் வாதத்தை எடுத்து வைக்கிறது.

அறநிலையத்துறையின் அவலங்களை நீதிமன்றம் பலமுறை கண்டித்தும் கூட
இதுவரை கோவில்கள் விஷயத்தில் தமிழக அரசு அக்கறையின்றி இருந்து வருகிறது.

பிரேக்கிங் தரிசன கட்டணத்தின் அரசாணையின் முன் உதாரணமாக திருச்செந்தூர் கோவிலில் திருவிழா காலங்களை கழித்து மீதமுள்ள நாட்களில்
இடை நிறுத்த தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் அது குறித்த ஆட்சேபனைகள், ஆலோசனைகளை வழங்கலாம் என்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் கோவில் இடிப்பு, தரிசன கட்டணம் உயர்வு, கும்பாபிஷேகத்தில் முறைகேடு என அறநிலையத்துறையின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தபடியே உள்ளன. எந்த ஆட்சிக் காலத்திலும் இல்லாத அளவிற்கு கோவில்களின் பாரம்பரியம் நடைமுறைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. கடவுள் மறுப்புக் கொள்கை உடைய திமுக அதன் நிஜ முகத்தை காட்டுகிறதா? என்ற கேள்வியும் தமிழக மக்களிடம் எழுந்திருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்திற்கு கூட ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என முதலில் அறநிலையத்துறை அறிவித்திருந்தது.இதை பக்தர்கள் கடுமையாக எதிர்த்ததால், இந்த கட்டடண தரிசன முறை ரத்து செய்யப்பட்டது.

திமுக ஆட்சியில் நடந்த பல பெரிய கோவில்களின் கும்பாபிஷேகத்தில் பொதுமக்களும் பக்தர்களும் கும்பாபிஷேக நிகழ்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. மாறாக திமுகவினரும் அவர்களது குடும்பத்தினரும் மட்டுமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருச்செந்தூரில் பால்காவடி எடுத்து வந்த பக்தர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் தாக்கப்பட்டனர்.

இப்படியாக அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்று, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இடைநிறுத்த தரிசனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அறநிலையத்துறை. தனது முடிவை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தவிர்க்கும் பட்சத்தில்
ஒட்டுமொத்த இந்துக்களின் கோபத்திற்கு ஆளும் திமுக அரசு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு ஆன்மீக அமைப்புகள், பக்தர்கள், பொதுமக்கள், சமூக சிந்தனையாளர்கள் ஆகியோரின் எதிர்ப்புக்கிணங்க மானிய கோரிக்கையின் பிரேக்கிங் தரிசன கட்டண முறையை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

ஓணம் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்..

1000926301 1 - 2026

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சபரிமலை குருவாயூர் கோயிலில் ஓணம் சிறப்பு பூஜை வழிபாடுகள் ஓணவிருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு திருவோணவில் சார்த்தி பூஜை வழிபாடுகள் நடத்தி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1000926170 - 2026

தமிழ்நாட்டில் தை பொங்கல் விழா சிறப்பு என்றால், கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பு. தமிழ் மாதம் ஆவணியில் திருவோண நட்சத்திர நாளில் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இன்று (செப்டம்பர்) 5-ந்தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த மாநிலமான கேரளாவிற்கு வருவார்கள்.ஓணம் பண்டிகை ஆவணி மாதத்தில் அஸ்தம் (அத்தம்) நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விஷாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று இறுதியாக திருவோணம் நட்சத்திரம் வரை என 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

1000926169 - 2026

இறுதி நாளான திருவோணம் நட்சத்திரத்துக்கு உரியநாளான வருகிற 5-ந்தேதி வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, ஓணம் சத்யா எனப்படும் பிரமாண்ட சைவ விருந்து வைத்து புத்தாடை உடுத்தி மகாபலி ராஜாவை வரவேற்கும் விதமாக சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.இன்று செப் 5-ந் தேதி இந்த உன்னத விழா ஓணம் பண்டிகை சிறப்பாககொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகையின் தொடக்க விழா எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித் துறை நகராட்சி மற்றும் கேரள சுற்றுலா துறை சார்பில் கடந்த ஹஸ்தம் நாளில் அத்தப்பூ கோலம் மலர் ராஜவீதிகளில் அத்தசமயம் எனப்படும் பாரம்பரிய கலாசார ஊர்வலத்துடன் தொடங்கியது. கேரள உள்ளாட்சி துறை மந்திரி ராஜேஷ் கலை விழாவை தொடங்கி வைத்தார். நடிகர் ஜெயராம் கலாசார ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

1000926296 - 2026

இந்த ஊர்வலத்தில் கேரளாவின் பாரம்பரிய புலிக்களி கலைஞர்கள் உள்பட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான ஓணம் வாரவிழா திருவனந்தபுரத்தில் செப் 3-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளிலும், கவடியார் முதல் கிழக்கு கோட்டை வரை மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது இரவை பகலாக்கி சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கிறது.9-ந் தேதி ஓணம் வாரவிழா நிறைவாக திருவனந்தபுரம் கவடியார் முதல் கிழக்கு கோட்டை வரை கேரளாவின் பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை, கலாசார ஊர்வலமும் நடைபெறும்.

கேரளா மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், இன்று, 5ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி வியாழக்கிழமை முதல், நான்கு நாட்களுக்கு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்திராட நட்சத்திரம் நாளான நேற்று, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாலக்காட்டில் அரசு சார்பு நிகழ்ச்சிகள், நேற்று மாலை 5:30 மணிக்கு, கலால் துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமானது. அட்டப்பாடி மற்றும் மலம்புழா பூங்காவிலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், நேற்றிலிருந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. கேரளா அரசு கட்டடங்கள், கோவில்கள், முக்கிய பகுதிகள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

1000926287 - 2026

திருச்சூர் மாநகராட்சியில், செப்., 8ம் தேதி புலியாட்டம் நடக்கிறது. திருச்சூர் மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ஏராளமானோர், புலி, சிறுத்தை வேடமிட்டு, மேல தாளம் முழங்க வீதி உலா வர உள்ளனர். அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நிகழ்வையொட்டி நடைபெற உள்ளது. புலியாட்டத்தை கண்டு மகிழ தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து, அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் என்பதால், சிறப்பு பஸ்களை இயக்க, கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.

வரும் உத்ரட்டாதி நாளில் பிரசித்தி பெற்ற மஹாவிஷ்ணு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரு ஆரண்முழா பார்த்தசாரதி கோயில் பம்பை நதியில் நூறு அடி நீளமுள்ள பாம்பு படகுகள் பங்கேற்று மாபெரும் படகு போட்டி நடைபெறும்.

1000926276 1 - 2026

சபரிமலை குருவாயூர் கோயிலில் இன்று ஓணம் சிறப்பு பூஜை வழிபாடுகள் திருவோணவிருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயில் அதிகாலையில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு மாலையில் திருவோணவில் சார்த்தி பூஜை வழிபாடுகள் நடத்தி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.கேரளாவில் பெரும்பாலான வீடுகளில் வாசலில் மிகப்பெரிய அத்தப்பூ கோலம் போட்டு மரங்களில் ஊஞ்சல் கட்டி போன விருந்து படைத்து திருவோண பண்டிகை இன்று மிக விமர்சையாக கேரள மக்கள் கொண்டாடினார் கேரளா மட்டும் இல்லாது தமிழகத்திலும் இப்ப பண்டிகை பல்வேறு பகுதிகளில் விமர்சையாக நடைபெற்றது தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தானுமாலய மூர்த்தி கோவில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் நாகர்கோவில் நாகராஜா கோவில் கன்னியாகுமரி பகவதி கோவில் உட்பட பல்வேறு கோவில் வீடுகளில் திருவோணம் பண்டிகை இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது ஓணம் பண்டிகை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வடபத்திர சயன பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

திருவோணம் இன்று தலை ஓணத்துடன் கேரளாவில் துவங்கியது

1000923158 - 2026

உலகளவில் மலையாள இந்துக்கள் மிக கோலாகலமாக கொண்டாடடும் பண்டிகைகளில் ஒன்றாக திருவோணம் பண்டிகை இன்று தலை ஓணம் பண்டிகையுடன் துவங்கியது.சபரிமலையிலும் இன்று முதலாம் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.பக்தர்களுக்கு முதல் ஓணம் பண்டிகை விருந்து வழங்கப்பட்டது.


இந்த ஆண்டு திருவோணம் பண்டிகை செப் 4இல் தலை ஓணம் பண்டிகையாக துவங்கி செப் 5ல் திருவோணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.செப் 6இல் மூன்றாவது ஓணம் செப்4 கடைசி ஓணம் விழாவாக உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது .

சிம்மம் ஆவணி மாதத்தில் மலையாள மொழி பேசும் மக்களால் பாரம்பரிய முறையில் கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் கருதப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு புராணங்களில் பல கதைகள், காரணங்கள் சொல்லப்பட்டாலும் இது கேரள பாரம்பரியத்தை போற்றும் மாவேலி மன்னன் நினைவாக, மஹாவிஷ்ணு திருநட்சத்திரம் ஆவணி அறுவடை திருநாளை கொண்டு ஒற்றுமையின் அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாக பார்க்கப்படுகிறது.

கடவுளின் சொந்த தேசம் மலைநாடு கேரளா மாநிலத்தில் மலையாள மக்களின் அறுவடை திருவிழாவாக இந்துக்களால் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் விழாவாக திருவோணம் பண்டிகை உள்ளது.இந்த ஆண்டு திருவோணம் செப் 4இல் தலை ஓணம் பண்டிகையாக துவங்கி செப் 5ல் திருவோணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.செப் 6இல் மூன்றாவது ஓணம் செப்4 கடைசி ஓணம் விழாவாக உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது .அசுரகுல மன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அறுவடை காலத்தின் துவக்கமாக 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. 64 வகையான திருவோண விருந்து படகு போட்டிகள், வண்ண வண்ண மலர்களால் கோலமிட்டு மிக பிரம்மாண்டமாக ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் அன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது அஸ்தம் நாளில் துவங்கி, திருவோணம் வரை 10 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படும். 10ம் நாளான திருவோணம் நட்சத்திரம் மிக முக்கியமான நாளாக கருதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி செவ்வாய்கிழமை துவங்கி, செப்டம்பர் 05ம் வரையிலான 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

புராணங்களின் படி, கேரளாவை ஆண்ட அசுர குல அரசன் மாவேலி மகாபலி மன்னன் அசுரகுலத்தில் பிறந்தாலும் மக்கள் மகிழ்ச்சியடையும் படி தான் தர்மங்கள் செய்து ஆட்சி செய்தான்.தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காக மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். இந்த யாகத்தை அவன் வெற்றிகரமாக நடத்தி முடித்தால் இந்திரலோகமே அவனுக்கு வசமாகும். இதனால் கலக்கம் அடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். தேவர்களையும் மக்களையும் காப்பதற்காக 3 அடி உயரம் கொள்ள வாமன (குள்ளமான) வடிவம் எடுத்து மகாபலி மன்னன் யாகம் நடத்தும் இடத்திற்கு சென்றார் மகாவிஷ்ணு.

யாகம் நடத்தும் சமயத்தில் யார் வந்து என்ன யாசகம் கேட்டாலும் இல்லை சொல்லாமல் கொடுக்க வேண்டும் என்பது அரச நியதி. இதை அறிந்து, தனக்கு 3 அடி நிலம் வேண்டும் என கேட்டார் வாமனர். அதை ஏற்று, மகாபலி மன்னனும் கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தை வாமனரின் கைகளில் விட்டதும், விண்ணுக்கும், மண்ணுக்குமாக திரிவிக்ரமனாக உருவெடுத்த மகாவிஷ்ணு, முதல் அடியில் வானத்தையும், 2வது அடியில் பூமியையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் இல்லாததால் தன்னுடைய தலைமை காட்டிய மகாபலியின் தலை மீது கால் வைத்து அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பினார் மகாவிஷ்ணு. அதே சமயம் தன்னுடைய மக்களை காண ஆண்டு ஒரு முறை பூமிக்கு வரவும் மகாபலிக்கு வரமளித்தார் மகாவிஷ்ணு.

பெருமாள், மகாபலிக்கு அளித்த வரத்தின் படி ஆண்டுக்கு ஒரு முறை தனது நாட்டு மக்களை காண மன்னன் மாவேலத மகாபலி பூமிக்கு வரும் ஆவணி மாத திருவோணம் நட்சத்திர தினமே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மகாபலியை வரவேற்பதற்காகவே வீடுகள் தோறும் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரித்து, விதவிதமாக உணவு சமைத்து பரிமாறி கொண்டாடுகிறார்கள். மகாவிஷ்ணு, வாமனராக அவதாரம் எடுத்தது முதல், மகாபலி மீண்டும் பூமிக்கு திரும்பி வருவது வரையிலான காலத்தை போற்றும் விதமாகவே 10 நாட்கள் விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வல்லம் களி புளிகளி பூக்காலம் ஓணதப்பம் ஓணம் களி, கயிறு இழுத்தல், தும்பி துள்ளல் கும்மட்டி களி ஓண துள்ளல் ஓணவில்லு கழிசக்குல்லா மரக்கன்று தானம் அளித்தல், ஓணபொட்டன் ஆடை அலங்காரங்கள், அத்தசமயம் நாட்டுப்புற பாரம்பரிய நடனங்கள் ஓணம் சத்தியா இவை அனைத்தும் சேர்ந்தது தான் ஓணம் கொண்டாட்டம் அமைந்துள்ளது

பாரம்பரிய முறையுடன் கலந்த இந்த கொண்டாட்டம், சடங்குகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவையாகும். மகிழ்ச்சி, செல்வ வளம், நிறைவான செல்வம் ஆகியவற்றை வரவேற்கும் நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கேரளாவின் பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும் உன்னதமான பண்டிகையாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உலகளவில் மலையாள இந்துக்கள் மிக கோலாகலமாக கொண்டாடடும் பண்டிகைகளில் ஒன்றாக திருவோணம் பண்டிகை இன்று தலை ஓணம் பண்டிகையுடன் துவங்கியது.சபரிமலையிலும் இன்று முதலாம் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு விமர்சையாக நடைபெற்றது.பக்தர்களுக்கு முதல் ஓணம் பண்டிகை விருந்து வழங்கப்பட்டது.குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் முன்பு தினமும் ஓணக்கோலம் வரையப்பட்டு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஜிஎஸ்டி., வரி சீரமைப்பு! முன்கூட்டியே வந்த தீபாவளி இனிப்பு!

nirmala sitharaman - 2026

தில்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 ஆகிய விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, உப்பு முதல் கார் வரை, பெரும்பாலான பொருட்களின் விலை குறையும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்க அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்தனர்.  பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கடுமையாக ஆராயப்பட்டு பெரும்பாலான பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அதிக பணியார்களைக் கொண்ட துறைகளுக்கு வலுவான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த முடிவால், விவசாயிகள் பயனடைவர். விவசாயத் துறை பெரிதும் பயனடையும். நாட்டின் பொருளாதாரத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக, காப்பீடு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கான 40 சதவீத வரி விதிப்பு அமலாகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஜி.எஸ்.டி., பதிவு செய்வது, தாக்கல் செய்வது, ரீபண்டு பெறுவது உள்ளிட்டவை எளிதாக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வரி குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை. தற்போதைய சூழலில், வரும் அக்டோபர் 31ம் தேதி வரை இழப்பீடு செஸ் தொடரும். இதனால், புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்களுக்கு தொடர்ந்து 28 சதவீத வரியும் கூடுதலாக இழப்பீடு செஸ் வசூலிக்கப்படும். – என்று கூறினார். 

இந்த வருட தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தார். அதன்படி ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது சுதந்திர தின உரையின் போது, ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எங்கள் நோக்கம் குறித்து நான் பேசியிருந்தேன். சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருந்தது. மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய அரசு சமர்ப்பித்த ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது. இது சாமானியர், விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நமது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் மற்றும் அனைவருக்கும், குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அது குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், ” அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம். அதன்படி, “5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டி அடுக்குகளை 2 ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்படுகின்றன. 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் 5, 18 சதவீதத்துடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரிவிதிப்பும் அமையும். இதைத்தவிர்த்து உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், பிரட், பன்னீர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அனைத்து மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படும். டிராக்டர்கள், வேளாண் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படும். சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் அதிரடி மாற்றங்கள்!

பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் GST வரிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன – முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

உயிர் காக்கும் மருந்துகள் மீது இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது

பேண்டேஜ் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு 5% வரி வசூலிக்கப்படும். (இதுவரை இத்தகைய பொருட்களுக்கு 12% வசூலிக்கப்பட்டது)

ஏசி, டிவி, கார் உள்ளிட்டவற்றுக்கு வரி 28 சதவீதத்தில் இருந்து 18% ஆக குறைப்பு

டிராக்டர், விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு.

சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு

UHT பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற பொருட்கள் மீது வரி கிடையாது

சோப், ஷாம்பூ, டூத் பேஸ்ட் மீது 5% வரி மட்டுமே வசூலிக்கப்படும்

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%ஆக குறைப்பு

350CC இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் மற்றும் தனியார் பயன்படுத்தும் விமானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி

அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கும் இனி 18% வரி வசூலிக்கப்படும்

9 ஆட்டோ வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதுவரை ஆட்டோ வாகனங்களுக்கு 28% வரி வசூலிக்கப்பட்டது.

நொறுக்கு தீனிகள், வெண்ணெய் போன்ற பொருட்கள் மீது தற்போது 18% வரி வசூலிக்கப்பட்ட நிலையில் இனி 12% வசூலிக்கப்படும்

பான் மசாலா, சிகரெட், குட்கா, ஜர்தா, கார்பனேட்டட் குளிர்பானங்கள், சோடா போன்றவற்றுக்கு 40% ஜிஎஸ்டி வரி.

புகையிலை பொருட்கள் மீதான வரி எப்போது அமலுக்கு வரும் என்பதை முடிவு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

பிற பொருட்கள் மீதான புதிய ஜிஎஸ்டி வரிகள், செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகின்றன.

***

ஜிஎஸ்டி வரி விலக்கு விவரம் 

விவசாய பொருட்களுக்கான 18, 12% GST 5%ஆக குறைப்பு

விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் டிராக்டர் டயர் மற்றும் உதிரிப்பாகங்களுக்கு |விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி, 5%ஆக குறைப்பு

டிராக்டர், மண்ணை பதப்படுத்துவதற்குப் பயன்படும் கருவிகள், சொட்டு நீர் & தெளிப்பு நீர் உள்ளிட்ட பொருட்களுக்கு 12%-யில் இருந்து 5% ஆக குறைப்பு!

மருந்துகள்: விலக்கு

33 உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய், அரிய நோய்கள் மற்றும் பிற கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியில் விலக்கு. முன்னர் 12%, 5% என்ற விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது.

கணிசமாக குறைக்கப்பட்ட வரி விதிப்பு

மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் தெர்மோமீட்டருக்கு விதிக்கப்பட்ட 18% ஜி.எஸ்.டி 5% ஆக குறைப்பு!

உயிர்காக்கப் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன், நோய் கண்டறியும் உபகரணங்கள், குளுக்கோமீட்டர் & பரிசோதனை ஸ்ட்ரிப், பார்வை குறைபாடுகளுக்கான கண்ணாடிகளுக்கு 12%-யில் இருந்து 5% ஆக குறைப்பு!

எழுதுப்பொருள்கள்: விலக்கு

கல்வி சார்ந்த பொருட்களான பென்சில், ஷார்ப்னர், கிரேயான்ஸ், நோட்டுப்புத்தகம், எரேசர், வரைபடங்கள், சார்ட் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு. முன்னர் 12% வரை ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது.

• இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளில் மட்டுமே ஜிஎஸ்டி. 12% மற்றும் 28% வரி விகிதம் நீக்கம். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்திற்கு ஒப்புதல். புதிய வரி விதிப்பு செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

• தனி நபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு. முன்னதாக 18% வரி விதிக்கப்பட்ட நிலையில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

• 18% To 5%: தினசரி மக்கள் பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, ஷேவிங் கிரீம் உள்ளிட்டவற்றுக்கு 5% ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும்.

குறைகிறது சிமென்ட் விலை

• சல்பூரிக் ஆசிட், நைட்ரிக் ஆசிட் மற்றும் அமோனியா மீதான ஜிஎஸ்டி 18 ல் இருந்து 5 சதவீதமாக இருக்கும்

• புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான பாகங்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

• டிராக்டர், விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனவியல் இயந்திரங்கள், அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள், உரம் தயாரிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய பொ ருட்கள் மீதான ஜிஎஸ்டி 12 ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு

• கைவினை பொருட்கள், பளிங்கு, கிரானைட், தோல் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதம்

• சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 28ல் இருந்து 18 ஆக குறைப்பு

நூல் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு

• டிரக்குகள், பஸ்கள், ஆம்புலன்ஸ்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாக குறைப்பு

• மூன்று சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாக இருக்கும்

• ஜவுளித்துறையை பொறுத்தவரை மனிதர்களால் உருவாக்கப்பட்ட பைபர் மீதான ஜிஎஸ்டி 18 ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு

• மனிதர்களால் உருவாக்கப்பட்ட நூல் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்..!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என பிரதமர் மோடி கருத்து. சிறுவணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வணிகம் செய்வதை எளிமையாக்கும் என்றும் உறுதி

எவற்றுக்கெல்லாம் 5% ஜிஎஸ்டி வரி?

ஹேர் ஆயில்கள், டாய்லட் சோப்கள், சோப் பார்கள், ஷாம்பூக்கள், டூத் பேஸ்ட்கள், சைக்கிள்கள், மேஜை பொருட்கள், அடுப்பு உபயோக பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு

நொறுக்குத்தீனி, சாஸ், பாஸ்தா, இன்ஸ்டான்ட் நூடுல்ஸ், சாக்லேட், காபி, கார்ன்பிளேக்ஸ், வெண்ணெய், நெய், பழச்சாறுகள், சோயா பால், பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவற்றுக்கு 5 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைப்பு

• ரூ.100 மற்றும் அதற்கும் குறைவான விலை கொண்ட சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5%ஆக குறைப்பு.

ரூ.100க்கும் அதிகமான டிக்கெட்களுக்கு வசூலிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி 18%-ஆகவே தொடர்கிறது.

 பைக், கார்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு

350 சிசிக்கு குறைவாக உள்ள பைக்குகள், 1,200 சிசிக்கு குறைவாக உள்ள கார்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைப்பு

அனைத்து வாகன உதிரி பாகங்களுக்கான வரியும் 18 சதவீதமாக குறைத்து நடவடிக்கை

மற்ற வரி விலக்கு விவரம்

• யுஹெச்டி (UHT), பால், பனீர், பீஸா, ரொட்டி, சப்பாத்தி மற்றும் பிரட் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• மருத்துவ காப்பீடுகளுக்கு ஜகாப்பீடுகளுக்கு.

40 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பு

சிகரெட், குட்கா, குளிர்பானங்கள், பான் மசாலா, புகையிலைப் பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு.

தனி நபர் விமானங்கள், ரேஸ் கார்கள், விளையாட்டு போட்டி டிக்கெட்டுகள், மது அல்லாத பானங்கள் உள்ளிட்டவைக்கும் 40% வரி

லாட்டரி-சூதாட்டத்துக்கு 40 சதவீத GST

லாட்டரி, குதிரைப்பந்தயம், கேசினோக்கள், ஆன்லைனில் பணம் வைத்து விளையாடுதல் உள்ளிட்டவைகளுக்கு 40 சதவீத ஜி.எஸ்.டி பொருந்தும் என அறிவிப்பு.

ஐபிஎல் போன்றவற்றிற்கு விதிக்கப்படும் 40 சதவீத ஜி.எஸ்.டி, அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிக்கான நுழைவுகளுக்கு பொருந்தாது

திருவோணம் விழா சபரிமலை கோவில் செப் 3-நடை திறப்பு..

1000890601 - 2026

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்3ல் நடை திறக்கப்பட்டு செப் 4முதல் 7ஆம் தேதி வரை நடை திறந்து பூஜை வழிபாடுகள் நடைபெறும்.நான்கு நாள் திருவோணம் பண்டிகை நாட்களில் பக்தர்களுக்கு திருவோண விருந்து உபசரிப்பு வழங்கப்படும்.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 4-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெறும். 5-ந் தேதி திருவோண சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

தொடர்ந்து 7-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு 4, 5, 6 7ஆகிய 4 நாட்கள் ஐய்யப்ப பக்தர்களுக்கு ஓண சத்யா (விருந்து) வழங்கப்படும். ஓணத்தையொட்டி, சபரிமலை சன்னிதானத்தில் பிரமாண்ட அத்தப்பூ கோலம் அமைக்கப்பட உள்ளது.

07/09/2025 அன்று சந்திர கிரகணம்-

07/09/2025 அன்று இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கும் என்பதால், இந்த முறை ஓணம் பூஜைகளுக்குப் பிறகு, சபரிமலை திருநடை 07/09/2025 அன்று இரவு 8.50 மணிக்கு ஹரிவராசன பூஜை நடத்தி இரவு 9 மணிக்கு மூடப்படும். இந்த நேர மாற்றம் தந்திரி அறிவுறுத்தலின் படி மாற்றம் செய்ய பட்டுள்ளது.

தர்மஸ்தலா கோயில் அவதூறில் சிக்கிய காங். எம்.பி., சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரத நாடகம் கண்டிக்கத் தக்கது!

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்துக் கோவிலின் புகழைக் கெடுக்க நடந்த திட்டமிட்ட சதியில் சந்தேகத்திற்குரிய, திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில்-இன் உண்ணாவிரத நாடகம் கண்டனத்துக்கு உரியது என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடகாவில் மிகவும் தொன்மை வாய்ந்த தர்மஸ்தலா மஞ்சுநாதர் சாமி கோவில் அமைந்துள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் கேரளாவில் உள்ள சபரிமலை, ஆந்திராவில் உள்ள திருப்பதி போன்று உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து வழிபடக்கூடிய திருத்தலம் ஆகும்.

கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி இரண்டு வக்கீல்களின் தலைமையில் தர்மஸ்தலா கோவிலில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவரின் பெயரில் காவல் நிலையத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரில் அந்தக் கோவிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் 2014 ஆம் ஆண்டு அவர் அந்த கோவிலில் இருந்து சென்று விட்டதாக அந்த தூய்மை பணியாளர் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து மேலும் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த வழக்கு கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஆளும் காங்கிரஸ் அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

தடவியல் நிபுணர்களும் புகார் அளித்த தூய்மை பணியாளருடன் முன்னிலையில் கோவிலை சுற்றியுள்ள இடங்களில் தோண்டினர். அங்கு பிணங்கள் புதைக்கப்பட்டதற்கான எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. புகார் கூறியவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை காவல்துறை உறுதி செய்தது.

இது வெறும் வதந்தி தான் என்று தெரிந்தும் காங்கிரஸ் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டதை ஆன்மீகவாதிகளும் பக்தர்களும் எதிர்த்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

கர்நாடக பா.ஜ.கவினர் இந்து கோவிலின் புனித தன்மையை கெடுப்பதற்காக கட்டமைக்கப்பட்ட பொய் பிரச்சாரம் தான் இது என்று ஆதாரங்களோடு திட்டவட்டமாக கூறினர்.

பாரதிய ஜனதா கட்சியினுடைய எம்.எல்.ஏ ஜனார்த்தன ரெட்டி அவர்கள் தர்மஸ்தலா கோவில் பற்றி அவதூறு வெளியிட்ட இந்த சம்பவத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக குற்றம் சாட்டினார். விசாரணை முடிவில் தர்மஸ்தலா புனிதத்தை கெடுக்கவே இச்செய்தியை பரப்பியது உறுதி செய்யப்பட்டு முடிவுக்கு வந்தது.

தற்போது தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட எம்.பி. சசி காந்த் அவர்கள் தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதியை தராத மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 29ஆம் தேதி துவங்கியுள்ளார். தமிழக அரசோ, ஆளும்கட்சி, காங்கிரஸ் கட்சி தலைவர்ங கூட பேசாதபோது இவர் உண்ணாவிரதம் இருப்பது எத்தகைய பித்தலாட்டம்.

தர்மஸ்தலா கோவில் பற்றி அவதூறு பரப்பியதன் பின்னணியில் முக்கிய கருவியாக செயல்பட்டு இருக்கும் சசிகாந்த் செந்தில், அந்தப் பிரச்சினையை திசை திருப்புவதற்காகவே காலவரையற்ற உண்ணாவிரதம் என்ற கபட நாடகத்தை துவக்கி உள்ளார். இதன் பின்னணியில் இந்து மதத்திற்கு எதிரானவர்களும் தேசத்திற்கு எதிராக செயல்படும் அந்நிய நாட்டினரும் உள்ளனர்.

வெளிநாட்டு அல் ஐசிரா ராய்ட்டர்ஸ், பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் தர்மஸ்தலாவின் புனிதத்தை கெடுக்கும் வகையில், கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்து மதத்தின் புனித தன்மையை கெடுக்கும் வகையில், கிறிஸ்துவ நாடுகள்
கைகோர்த்துள்ளதையே இது உறுதி செய்கிறது.

தர்மஸ்தலாவை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்குடியினர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை முறியடிப்பதற்காக இந்து ஆசிரமங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.

இதனால்தான் கிறிஸ்துவ அமைப்புகளின் பின்னணியில் தர்மஸ்தலாவை பற்றி அவதூறு பரப்பப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் சம்பிரதாயங்களில் குழப்பத்தை ஏற்படுத்த பெண்களை சபரிமலைக்கு அனுப்ப முயற்சி செய்ததன் பின்னணியிலும், ஆந்திராவில் உள்ள திருப்பதியில் தொடர்ந்து குழப்பங்கள் உருவாக்கிய பின்னணியிலும் கிறிஸ்தவ அமைப்புகளே பின்புலமாக இருந்து செயல்பட்டன என்ற குற்றச்சாட்டும் எழுந்ததை சுட்டிக் காட்டுகிறோம். கோடிக்கணக்கான பக்தர்களை தன்னகத்தை கொண்ட ஈஷா யோகா மையத்தின் மீது தொடர் பழிகளை திட்டமிட்டு சுமத்துவதும் இவர்கள் தான்.

தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட எம். பி, வெளிநாட்டினரோடும் கிறிஸ்தவ நிறுவனங்களோடும் கைகோர்த்துக் கொண்டு தான் தர்மஸ்தலா பற்றி தவறான தகவல்களை பரப்பினாரா என்பதைப் பற்றி முழுமையாக விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என இந்து முன்னணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள் இது சுதேசிப் பொருள் என்று!: மனதின் குரலில் பிரதமர் மோடி!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல் (125ஆவது பகுதி)
ஒலிபரப்பு நாள்: 31-08-2025
தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  பருவமழையின் இந்த வேளையில் இயற்கைப் பேரிடர்கள் தேசத்தை சோதித்துப் பார்க்கின்றன.  கடந்த சில வாரங்களில் நாம் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்கம் ஆகியவற்றின் பெரும் தாண்டவத்தைப் பார்த்தோம்.  சில இடங்களில் வீடுகள் பிடுங்கி எறியப்பட்டன, சில இடங்களில் வயல்கள் நீரில் மூழ்கின, பல குடும்பங்கள் நிர்கதியாக்கப்பட்டார்கள், நீரின் பெருவெள்ளத்தில் சில இடங்களில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, சாலைகள் காணாமல் போயின, மக்களின் வாழ்க்கை பெரும் சங்கடத்தில் சிக்கியது.  இந்தச் சங்கடங்கள் இந்தியர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.  தங்களுடைய உறவுகளை இழந்த குடும்பங்களின் துக்கம் நம்மனைவரின் துக்கம்.  எங்கெல்லாம் சங்கடங்கள் வந்தனவோ, அங்கெல்லாம் மக்களைக் காப்பாற்ற நமது என் டி ஆர் எஃப்-எஸ் டி ஆர் எஃப், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மாநிலப் பேரிடர் மேலாண்மை மீட்பு வீரர்களும், பிற பாதுகாப்புப் படையினரும் இரவுபகலாகப் பாடுபட்டார்கள்.  வீரர்கள் தொழில்நுட்பத்தையும் துணைக்கொண்டார்கள்.  வெப்பஞ்சார் கேமிராக்கள், உடனடியாகக் கண்டறியும் கருவிகள், மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்கள் கண்காணிப்பு போன்ற பல நவீன சாதனங்களின் உதவியோடு நிவாரணப் பணிகளில் வேகத்தைக் கூட்ட முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த சமயத்தில் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டன, காயமடைந்தவர்கள் வான்வழி கொண்டு செல்லப்பட்டார்கள்.  பேரிடர்க்காலங்களில் இராணுவத்தின் உதவிகளும் கொஞ்சநஞ்சமல்ல.  வட்டாரத்தில் வசிப்பவர்கள், சமூக சேவகர்கள், மருத்துவர்கள், நிர்வாகம் என, இந்தச் சங்கட காலத்தில் அனைவரும் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.  குடிமக்கள் அனைவருக்கும் நான் என் இதயம்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, வெள்ளம், மழை ஆகியவற்றின் இந்த அழிவிற்கு இடையே ஜம்மு-கஷ்மீரத்தில் இரண்டு மிகப்பெரிய சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.  இவற்றின் மீது அதிகமானோரின் கவனம் செல்லவில்லை என்றாலும், நீங்கள் இந்தச் சாதனைகளைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் என்றால் உங்களுக்கும் பெருமகிழ்ச்சி ஏற்படும்.  ஜம்மு கஷ்மீரத்தின் புல்வாமாவின் ஒரு விளையாட்டு அரங்கிலே, சாதனை அளவிலான எண்ணிக்கையில் மக்கள் குவிந்தார்கள்.  இங்கே புல்வாமாவிலே முதல் பகல்-இரவு கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டது.  முன்பெல்லாம் இது சாத்தியமில்லாததாக இருந்தது ஆனால், இப்போது என்னுடைய தேசம் மாறி வருகிறது இல்லையா?!  இந்தப் போட்டி ‘ராயல் ப்ரீமியர் லீகின்’ ஒரு பகுதி தான், இதிலே ஜம்மு கஷ்மீரத்தின் பல்வேறு அணிகள் விளையாடி வருகின்றன.  இத்தனை பேர், குறிப்பாக இளைஞர்கள் புல்வாமாவின் இரவிலே, ஆயிரக்கணக்கான எண்ணிக்கையிலே கிரிக்கெட்டின் ஆனந்தத்தைப் பருகினார்கள், இந்தக் காட்சி உண்மையிலேயே கண்கொள்ளாக் காட்சி!!

நண்பர்களே, கவனத்தை ஈர்த்த இரண்டாவது ஏற்பாடு என்னவென்றால், அது தேசத்தில் நடந்த முதலாவது கேலோ இண்டியா நீர் விளையாட்டுக்கள் கொண்டாட்டம்.  அதுவும் ஸ்ரீநகரின் டல் ஏரியிலே நடந்தது.  உண்மையிலேயே, இப்படிப்பட்டக் கொண்டாட்டத்தை அரங்கேற்ற இது எத்தனை சிறப்பான இடம்!!  ஜம்மு கஷ்மீரத்திலே நீர் விளையாட்டுக்களை வெகுஜனங்களுக்குப் பிரியமானவையாக ஆக்குவதுதான் இதன் நோக்கம்.  இதிலே நாடெங்கிலுமிருந்தும் 800க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கெடுத்தார்கள்.  பெண் வீராங்கனைகள் எண்ணிக்கையும் குறைவல்ல, ஆண் வீரர்களுக்கு இணையாகவே இருந்தது.  இதிலே பங்கெடுத்த அனைத்து விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகளுக்கு நான் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   மிக அதிகமான பதக்கங்களை வென்ற மத்திய பிரதேச அணிக்கும், அடுத்து வந்த ஹரியாணாவுக்கும், அடுத்த இடம் பிடித்த ஒடிஷாவிற்கும் குறிப்பாக நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.  ஜம்மு கஷ்மீர் அரசாங்கம், அங்கிருக்கும் மக்களின் இனிமையான இயல்பு, விருந்தோம்பல் ஆகியவற்றை நான் முழுமையான வகையிலே பாராட்டுகிறேன். 

          நண்பர்களே, இந்த ஏற்பாட்டோடு தொடர்புடைய அனுபவங்களை உங்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நான் நினைத்த போது, சரி, இரண்டு விளையாட்டு வீரர்களோடு பேசிப் பார்க்கலாமே என்று தோன்றியது, இவர்கள் இந்த விளையாட்டுக்களில் கலந்து கொண்டவர்கள், இவர்களில் ஒருவர் ஒடிஷாவின் ரஷ்மிதா சாஹூ, மற்றொருவர் ஸ்ரீநகரின் மொஹ்சின் அலி.  வாருங்கள் இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று செவி மடுப்போம்.

பிரதமர் – ரஷ்மிதா அவர்களே, வணக்கம்!!
ரஷ்மிதா – வணக்கம் சார்.
பிரதமர் – ஜய் ஜகன்னாத்!!
ரஷ்மிதா – ஜய் ஜகன்னாத் சார்!!
பிரதமர் – ரஷ்மிதா அவர்களே, விளையாட்டுக்கள்ல உங்களோட வெற்றிகளுக்கு நான் முதல்ல என் வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்.
ரஷ்மிதா – தேங்க்யூ சார்.
பிரதமர் – ரஷ்மிதா, உங்களைப் பத்தியும், உங்க விளையாட்டுத்துறைப் பயணத்தைப் பத்தியும் தெரிஞ்சுக்க எல்லோரும் ஆர்வமா இருக்காங்க, நானும் கூட ஆர்வமா இருக்கேன், சொல்லுங்களேன்.
ரஷ்மிதா – சார், என் பேர் ரஷ்மிதா சாஹு.  நான் ஒடிஷாவிலேர்ந்து வர்றேன்.  நான்  canoeing அப்படீங்கற சிறுபடகோட்டுதல் வீராங்கனை.  நான் 2017ஆம் ஆண்டு தான் விளையாட்டுக்களோடு என்னை இணைச்சுக்கிட்டேன், சிறு படகு ஓட்டுதலைத் தொடங்கினேன்.  நான் தேசிய அளவுல, தேசியப் போட்டிகள்ல, தேசிய விளையாட்டுக்கள்ல பங்கெடுத்திருக்கேன்.  41 பதக்கங்களை ஜெயிச்சிருக்கேன்.  13 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்கள் சார்.

பிரதமர் –  அடேங்கப்பா!!  சரி, இந்த விளையாட்டுல உங்களுக்கு ஆர்வம் எப்படி ஏற்பட்டிச்சு?  யாராவது இதில ஈடுபட உங்களுக்கு உத்வேகம் கொடுத்தாங்களா?  உங்க குடும்பத்தில விளையாட்டு தொடர்பா என்ன சூழல் நிலவிச்சு?

ரஷ்மிதா – இல்லை சார்.  என்னோட கிராமத்தில இந்த விளையாட்டுக்கான எந்தச் சூழலும் கிடையாது, நதியில படகுகள் போகும், நான் முதல்ல நீச்சலடிக்கத் தான் போனேன், என் நண்பர்களும் நீச்சல் அடிச்சுக்கிட்டு இருந்தாங்க, அப்ப ஒரு படகு கடந்து போச்சு, அப்ப எல்லாம் இந்த canoeing- kayaking பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது.  நான் என் நண்பர்கள்கிட்ட, ஆமா இது என்னன்னு கேட்டேன்.  அப்ப தோழி சொன்னா, இங்க ஜகத்பூர்ல SAI Sports Centre இருக்கு, அங்க விளையாட்டுக்கள்லாம் கத்து தர்றாங்க, நானும் அங்க போக இருக்கேன்னு சொன்னா.  எனக்கு இது ரொம்ப சுவாரசியமா இருந்திச்சு.  தண்ணியில பசங்க என்ன எல்லாம் செய்யறாங்க, எனக்கு ஒண்ணுமே தெரியலையேன்னு நினைச்சேன்.  நாம படகுசவாரி போகலாமான்னு அவ கேட்க, நான் உடனே, நானும் அங்க போகணும்னு சொன்னேன்.  அதில எப்படி சேர்றதுன்னு எனக்கும் சொல்லுன்னு கேட்டேன்.  நீயே அங்க போய் கேட்டுக்கயேன்னு அவ சொன்னா.  அப்புறம் அப்பா கிட்ட சொன்ன போது, அவரும் சரின்னு என்னை அங்க கூட்டிக்கிட்டு போனாரு.  அப்ப எல்லாம் ட்ரயல்லாம் இல்லை, கோச்சு சொன்னாரு ட்ரயல் பிப்ரவரில தான் இருக்கும், பிப்ரவரி மார்ச் மாசங்கள்ல, ட்ரயல் டைம்ல வந்து பாருங்கன்னாரு, நாங்களும் அந்த வேளையில வந்தோம்.

பிரதமர் – சரி ரஷ்மிதா, கஷ்மீர்ல இந்த கேலோ இண்டியா நீர் விளையாட்டுக்கள் கொண்டாட்டத்தில உங்களோட அனுபவம் எப்படி இருந்திச்சு?  முத முறையா கஷ்மீர் வந்திருக்கீங்க இல்லையா?

ரஷ்மிதா – ஆமாம் சார்.  நான் முதமுறையா கஷ்மீருக்கு போயிருந்தேன்.  அங்க முதமுறையா கேலோ இண்டியா, முத கேலோ இண்டியா நீர் விளையாட்டுக்கள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தாங்க.  அதில நான் ரெண்டு போட்டியில கலந்துக்கிட்டேன்.   சிங்கில்ஸ் 200 மீட்டர், 500 மீட்டர் டபுள்ஸ்.  இரண்டுலயும் நான் தங்கப் பதக்கங்களை ஜெயிச்சிருக்கேன் சார்.

பிரதமர் – சபாஷ்!  ரெண்டுலயுமா?
ரஷ்மிதா – ஆமா சார்.
பிரதமர் – பலப்பல பாராட்டுக்கள்.
ரஷ்மிதா – தேங்க்யூ சார்.

பிரதமர் – சரி ரஷ்மிதா, நீர் விளையாட்டுக்களைத் தவிர, உங்களுடைய பொழுதுபோக்குகள் வேற என்ன?

ரஷ்மிதா – சார், நீர் விளையாட்டுக்களைத் தவிர, எனக்கு ஓட்டப்பந்தயம் ரொம்பப் பிடிக்கும்.  எப்ப எல்லாம் எனக்கு விடுமுறை கிடைக்குதோ, நான் ஓடப் போயிருவேன், எங்க ஊர்ல ஒரு பழைய மைதானம் உண்டு, அங்க முன்ன எல்லாம் கொஞ்சம் கால்பந்தாட்டம் விளையாட கத்துக்கிட்டேன், அங்க தான் நான் போவேன், நிறைய ஓடுவேன், ஓரளவுக்கு கால்பந்தாட்டமும் விளையாடுவேன்.

பிரதமர் – அப்படீன்னா உங்க உடம்புபூரா விளையாட்டு ஊறிப் போயிருக்கு இல்லை!?

ரஷ்மிதா – ஆமா சார், நான் ஒண்ணாப்புலேர்ந்து, பத்தாம் வகுப்பு வரை பள்ளியில படிக்கும் போது, நான் எதில எல்லாம் பங்கெடுத்தேனோ, அதில எல்லாத்திலயும் முதலாவதா வருவேன், நான் தான் சேம்பியனா இருந்தேன்.

பிரதமர் – ரஷ்மிதா, யாரெல்லாம் உங்களை மாதிரியே விளையாட்டுக்கள்ல முன்னேற நினைக்கறாங்களோ, அவங்களுக்கு ஒரு செய்தி சொல்லணும்னு நினைச்சீங்கன்னா, நீங்க என்ன சொல்லுவீங்க?

ரஷ்மிதா – சார், நிறைய குழந்தைங்களால வீட்டை விட்டு வெளியகூட வர முடியாது, நீ பொம்பள புள்ளை, எப்படி வெளிய போவேன்னு கேப்பாங்க.  சிலர் கிட்ட பணம் இருக்காது, அதனால விளையாட்டுக்களை நிறுத்த வேண்டியிருக்கும்.  ஆனா இந்த கேலோ இண்டியா திட்டம் வந்த பிறகு, பல பசங்களுக்கு பண உதவியும் கிடைக்குது, நிறைய பேத்துக்கு வேற பல உதவிகளும் கிடைச்சு வருது.  இது காரணமா பல பசங்களால முன்னேற முடியுது.  எல்லார் கிட்டயும் நான் சொல்லிக்கறது என்னென்னா, விளையாட்டுக்களை விட்டுறாதீங்க, விளையாட்டுக்கள் மூலமா நிறைய முன்னேற முடியும்.   விளையாட்டுன்னா விளையாட்டு மட்டுமில்லை, அதனால உடலோட ஒவ்வொரு உறுப்பும் ஆரோக்கியமா இருக்குது, மேலும் இந்த விளையாட்டுக்கள்ல நல்லா முன்னேறினா, இந்தியாவுக்கு பதக்கங்களை பெற்றுத் தரலாம், இப்படி செய்யறதுங்கறது நம்மோட கடமை சார்.

பிரதமர் – சரி ரஷ்மிதா அவர்களே, உங்களோட பேசறது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்திச்சு உங்களுக்கு மீண்டுமொரு முறை பலப்பல நல்வாழ்த்துக்கள், உங்க தகப்பனாருக்கும் என்னோட வணக்கங்களை தெரிவியுங்க; ஏன்னா இத்தனை சிரமங்களையும் பொருட்படுத்தாம, தன்னோட பெண்ணை முன்னேத்த எத்தனை ஊக்கப்படுத்தியிருக்காரு!!  பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நன்றி.

ரஷ்மிதா – தேங்க்யூ சார்.

பிரதமர் – ஜய் ஜகன்னாத்!!

ரஷ்மிதா – ஜய் ஜகன்நாத் சார்!!

பிரதமர் – மொஹ்சின் அலி வணக்கம்.

மொஹ்சின் அலி – வணக்கம் சார்.

பிரதமர் – மொஹ்சின் அவர்களே, உங்களுக்குப் பலப்பல பாராட்டுக்கள், உங்களோட பிரகாசமான எதிர்காலத்துக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். 

மொஹ்சின் அலி – தேங்க்யூ சார்.

பிரதமர் – மொஹ்சின், முதல்ல இந்த கேலோ இண்டியா நீர் விளையாட்டுக்கள் கொண்டாட்டம், இந்த முத பதிப்பிலேயே தங்கப்பதக்கம் ஜெயிக்கறது, இது எப்படி இருக்கு?

மொஹ்சின் அலி – சார், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், முதமுறையா நடந்திருக்கற, அதுவும் இங்க கஷ்மீர்ல நடந்திருக்கற இந்த விளையாட்டுக்கள்ல நான் தங்கப் பதக்கம் ஜெயிச்சிருக்கேன்.

பிரதமர் – மக்கள் என்ன பேசிக்கறாங்க?

மொஹ்சின் அலி – சார், ரொம்ப சந்தோஷப்படுறாங்க, என் குடும்பம் மொத்தமும் சந்தோஷப்படுறாங்க.

பிரதமர் – உங்க பள்ளியில?

மொஹ்சின் அலி – பள்ளிக்கூடத்திலயும் எல்லாருக்கும் சந்தோஷம் தான்.  கஷ்மீர்ல எல்லாரும் என்ன தங்கப் பதக்கம் ஜெயிச்சவன்னு சொல்றாங்க.

பிரதமர் – அப்படீன்னா இப்ப நீங்க ஒரு பிரபலம்னு சொல்லுங்க!

மொஹ்சின் அலி – ஆமா சார்.

பிரதமர் – சரி, நீர் விளையாட்டுக்கள்ல உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டிச்சு, உங்க பார்வையில அதனால என்ன ஆதாயம்னு சொல்லுங்க?

மொஹ்சின் அலி – என் சின்ன வயசுல படகுகள் டல் ஏரியில பயணிக்கறதை பார்த்திருக்கேன்.  அப்ப அப்பா என்கிட்ட கேட்டாரு, நீயும் சவாரி போகறியான்னு கேட்டப்ப, எனக்கும் ஆர்வம் அதிகம் இருந்திச்சா, பிறகு மத்தியில மேடம் கிட்ட போயிட்டேன், பில்கிஸ் மேடம் தான் எனக்கு படகு ஓட்ட கத்துக் கொடுத்தாங்க.

பிரதமர் – அப்படியா?  ஆங்….மொஹ்சின், தேசம் முழுக்கவிருந்தும் மக்கள் வந்தாங்க, முத முறையா நீர் விளையாட்டுக்கள் நடந்திச்சு, அதுவும் ஸ்ரீநகர்ல நடந்திச்சு, அதுவும் டல் ஏரியில நடந்திச்சு, இத்தனை பேர் வந்திருந்தாங்களே, கஷ்மீர் மக்கள் இதை எப்படி உணர்ந்தாங்க?

மொஹ்சின் அலி – ரொம்ப சந்தோஷப்பட்டாங்க சார்.  எல்லாரும் அருமையான இடம்னு சொன்னாங்க.  எல்லாம் நல்லாயிருக்கு, நல்ல வசதிகள் இருக்குன்னாங்க.  இங்க கேலோ இண்டியா விளையாட்டுக்கள்ல எல்லாமே ரொம்ப சிறப்பா இருந்திச்சு சார்.

பிரதமர் – நீங்க எப்பவாவது விளையாடுறதுக்கு கஷ்மீரை விட்டு வெளிய போயிருக்கீங்களா?

மொஹ்சின் அலி – ஆமா சார், போபால் போயிருக்கேன், கோவா போயிருக்கேன், கேரளா போயிருக்கேன், அப்புறம் ஹிமாச்சலம் போயிருக்கேன்.

பிரதமர் – அப்படீன்னா நீங்க இந்தியா முழுசுக்கும் போயிருக்கீங்கன்னு சொல்லுங்க.

மொஹ்சின் அலி – ஆமா சார்.

பிரதமர் – அப்ப எல்லாமும் கூட இத்தனை விளையாட்டு வீரர்கள் வந்திருந்தாங்களா?

மொஹ்சின் அலி – ஆமா சார்.

பிரதமர் – புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கிட்டீங்களா நீங்க?

மொஹ்சின் அலி – சார், நிறைய பேர் நண்பர்களானாங்க சார்.  ஒண்ணாவே நாங்க எல்லாரும் டல் ஏரி, லால் சௌக்னு பல இடங்களுக்கு சுத்திப் பார்க்க போனோம், பஹல்காமுக்கும் போனோம், எல்லா இடங்களுக்கும் போனோம்.

பிரதமர் – ஜம்மு கஷ்மீர்ல விளையாட்டுத் திறமைகள் ரொம்ப அற்புதமா இருக்குங்க.

மொஹ்சின் அலி – ஆமாம் சார்.

பிரதமர் – நம்ம ஜம்மு கஷ்மீரத்து இளைஞர்கள், தேசத்துக்கு பெருமை சேர்க்கற அளவுக்கு அவங்க கிட்ட திறன்கள் திறமைகள் இருக்கு, இதை நீங்க செஞ்சும் காட்டியிருக்கீங்க.

மொஹ்சின் அலி – சார், ஒலிம்பிக்ல பதக்கம் வெல்றது தான் என் கனவு சார்.

பிரதமர் – சபாஷ், பலே!!

மொஹ்சின் அலி – அதுதான் சார் என் கனவு.

பிரதமர் – நீங்க சொல்றதைக் கேட்டாலே எனக்கு மயிர்க்கூச்செறியுதே!!

மொஹ்சின் அலி – சார், ஒலிம்பிக்ல பதக்கம் ஜெயிக்கணும், தேசத்தோட தேசிய கீதம் ஒலிக்கணும், இதுமட்டும் தான் சார் என் கனவு.

பிரதமர் – என் தேசத்தின் தொழிலாளிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகன் இத்தனை பெரிய கனவைக் காண்கிறான் அப்படீங்கறதோட அர்த்தம் என்னென்னா, என் தேசம் மிகவும் முன்னேறிட்டு இருக்குங்கறது தான்.

மொஹ்சின் அலி – சார், ரொம்ப முன்னேறும் சார்.  இந்த அளவுக்கு இங்க கேலோ இண்டியாவுக்கு இந்திய அரசு ஏற்பாடு செஞ்சிருக்கு, முதமுறையா இப்படி நடந்திருக்கு, இதுக்கு நாங்க எல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கோம் சார்.

பிரதமர் – அப்படீன்னா உங்க பள்ளியில உங்களை தூக்கி வச்சுக் கொண்டாடியிருப்பாங்களே!!

மொஹ்சின் அலி – கண்டிப்பா சார்.

பிரதமர் – சரி மொஹ்சின், உங்களோட உரையாடினது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, என் தரப்பிலேர்ந்து உங்க அப்பாவுக்கு சிறப்பான நன்றிகளை தெரிவிச்சுருங்க.  ஏன்னா அவங்கதான் தினக்கூலியா இருந்தும் கூட, உங்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுத்திருக்காரு, நீங்களும் அப்பா சொன்னாரு, செஞ்சோம்னு எடுத்துக்காம, பத்தாண்டுகள் வரை கடுமையா உழைச்சு, மத்த விளையாட்டு வீரர்களுக்கும் ஒரு கருத்தூக்கமா இருந்திருக்கீங்க.  அதோட உங்க பயிற்றுநருக்கும் நான் என் பாராட்டுக்களைத் தெரிவிக்கறேன், அவங்களும் உங்க வெற்றிக்கு கடுமையா பாடுபட்டிருக்காங்க.  உங்க எல்லாருக்கும் என் பலப்பல நல்வாழ்த்துக்கள், பலப்பல பாராட்டுக்கள் சகோதரா.

மொஹ்சின் அலி – தேங்க்யூ சார், வணக்கம் சார், ஜய் ஹிந்த்!!

நண்பர்களே, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வு, தேசத்தின் ஒற்றுமை, தேசத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு மிகவும் அவசியமானது.  கண்டிப்பாக விளையாட்டுக்கள் இந்த உணர்வை வளர்த்தெடுப்பதிலே பெரும்பங்கு ஆற்றுகின்றன.  நமது தேசம் எத்தனை போட்டிகளில் பங்கெடுக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக மலர்ச்சி அடையும்.  இரண்டு விளையாட்டு வீரர்களுக்கும், உங்களுடைய நண்பர்களுக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள். 

எனதருமை நாட்டுமக்களே, நீங்கள் UPSC என்ற சொல்லைக் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.  இந்த அமைப்பானது, தேசத்தின் மிகக்கடினமான தேர்வுகளில் ஒன்றான குடிமைப்பணித் தேர்வுகளை நடத்துகிறது.  நாம் அனைவரும் குடிமைச் சேவைகளில் முதலிடம் பெற்றவர்களின் கருத்தூக்கம்தரும் விஷயங்களைப் பல வேளைகளில் கேட்டிருக்கிறோம்.  இந்த இளைஞர்கள் கடினமான சூழ்நிலைகளிலும் படித்து முடித்த பிறகு தங்களுடைய உழைப்பு காரணமாக இந்தச் சேவையில் இடம் பிடிக்கிறார்கள்.  ஆனால் நண்பர்களே, UPSC தேர்வு பற்றிய மேலும் ஒரு உண்மை இருக்கிறது.  ஆயிரக்கணக்கான தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய உழைப்பும் கூட யாருக்கும் சளைத்தது அல்ல என்றாலும் கூட, மிகச் சிறிய இடைவெளி காரணமாக அவர்களால் இறுதிப் பட்டியலில் இடம்பெற முடிவதில்லை.  இந்தப் போட்டியாளர்கள் பிற தேர்வுகளுக்குப் புதியதாக மீண்டும் தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.  இதிலே அவர்களுடைய நேரமும் பணமும் இரண்டுமே விரயமாகின்றன.  ஆகையால் இப்படிப்பட்ட புத்திகூர்மை உடைய மாணவர்களுக்கெனவே பிரதிபா சேது என்ற ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிரதிபா சேதுவிலே, பல்வேறு போட்டியாளர்களின் தரவுகள் இடம் பெற்றிருக்கின்றன, இவர்கள் UPSCயின் பல்வேறு தேர்வுகளின் அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், இறுதிக்கட்ட தகுதியானோர் பட்டியலில் அவர்களுடைய பெயர் இடம் பெறவில்லை.  இந்த தளத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்திகூர்மை படைத்த இளைஞர்களின் தரவுத்திரட்டு இருக்கிறது.  சிலர் குடிமைப்பணித் தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கலாம், சிலர் பொறியியல் சேவைகளில் நுழைய விரும்பியிருக்கலாம், சிலர் மருத்துவச் சேவைகளின் அனைத்து நிலைகளையும் கடந்திருந்தாலும், இறுதிக்கட்டத்தில் தேர்வாகாமல் போயிருக்கலாம்.  இப்படிப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்கள் பற்றிய தகவல்கள் இப்போது பிரதிபா சேதுவில் இடம்பெற்று வரத் தொடங்கியிருக்கிறது.  இந்தத் தளத்தைப் பார்த்து, தனியார் நிறுவனங்களும் கூட புத்திக்கூர்மை உடைய மாணவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு அவர்களை பணிக்கமர்த்திக் கொள்ளலாம்.  நண்பர்களே, இந்த முயற்சியின் விளைவுகளும் வரத் தொடங்கியிருக்கின்றன.  நூற்றுக்கணக்கான மனுதாரர்களுக்கு இந்தத் தளத்தின் உதவியால் உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது; எந்த போட்டியாளர்களுக்கு மிகக் குறுகிய இடைவெளியால் வேலை கிடைக்கவில்லையோ, இப்போது புதிய தன்னம்பிக்கையோடு முன்னேறி வருகிறார்கள். 

என் மனம்நிறை நாட்டுமக்களே, இன்று உலகம் முழுவதன் கவனமும் பாரதம் மீதே இருக்கிறது.  பாரதத்தின் மறைந்திருக்கும் சாத்தியக்கூறுகளின் மீதே உலகத்தின் பார்வை படிந்திருக்கிறது.  இதோடு தொடர்புடைய ஒரு இனிமையான அனுபவத்தை நான் இப்போது உங்களுடன் பகிர இருக்கிறேன்.  இப்போதெல்லாம் பாட்காஸ்ட் என்பது ஒரு ஃபேஷனாகி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.  பல விஷயங்களோடு தொடர்புடைய பாட்காஸ்டுகளை  பலரகப்பட்ட மக்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள்.  கடந்த நாட்களில் நானும் கூட சில பாட்காஸ்டுகளில் பங்கெடுத்தேன்.  இப்படிப்பட்ட ஒரு பாட்காஸ்ட் தான், உலகத்தின் மிகவும் பிரபலமான பாட்காஸ்டரான Lex Friedmanடன் நிகழ்ந்தது.  அந்த பாட்காஸ்டிலே பல விஷயங்கள் பேசப்பட்டன,உலகம் முழுவதிலும் மக்கள் அதைக் கேட்டார்கள்; மேலும் அந்த பாட்காஸ்ட் பற்றிப் பேச்சு வரும் போது, பேச்சுவாக்கிலே நான் ஒரு விஷயத்தை எழுப்புகிறேன்.  ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு விளையாட்டு வீரர் அந்த பாட்காஸ்டைக் கேட்டிருக்கிறார், அதில் நான் கூறியிருந்த விஷயத்தின் மீது அவரது கவனம் ஆழமாகச் சென்றிருக்கிறது.  அவர் அந்த விஷயத்தோடு தன்னை எந்த அளவுக்கு ஈடுபடுத்திக் கொண்டார் என்றால், அவர் அந்த விஷயம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, ஜெர்மனியில் உள்ள இந்தியத் தூதரகத்தோடு கடிதம் வாயிலாக தொடர்பு கொண்டு, இந்த விஷயம் தொடர்பாக பாரதத்தோடு தன்னை இணைத்துக் கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.  ஜெர்மனியில் உள்ள ஒரு விளையாட்டு வீரருக்கு உத்வேகம் பிறக்கும் வகையிலே பாட்காஸ்டிலே மோதிஜி அப்படி என்ன தான் கூறியிருப்பார், அந்த விஷயம் என்னவாக இருக்கும் என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள்.  பேச்சுவாக்கிலே நான் பாட்காஸ்டிலே மத்திய பிரதேசத்தின் ஷஹ்டோலின் கால்பந்தாட்ட பேரார்வம் உடைய ஒரு கிராமத்தைப் பற்றி கூறியிருந்தேன்.  உள்ளபடியே நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஷஹ்டோலுக்கு சென்றிருந்தேன், அங்கேயிருந்த கால்பந்தாட்ட வீரர்களை சந்தித்தேன்.  பாட்காஸ்டின் போது ஒரு வினாவிற்கு விடையளிக்கும் வகையிலே நான்  ஷஹ்டோலின் கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.  இந்த விஷயத்தைத் தான் ஜெர்மனியின் கால்பந்தாட்ட விளையாட்டு வீரரும், பயிற்றுநருமான Dietmar Beiersdorfer கேட்டிருக்கிறார்.  ஷஹ்டோலின் இளைய கால்பந்தாட்ட வீரர்களின் வாழ்க்கைப் பயணம் அவரிடம் மிகவும் தாக்கமேற்படுத்தியிருக்கிறது, உள்ளெழுச்சி உண்டாக்கியிருக்கிறது.  உண்மையிலேயே இப்படிப்பட்ட ஒரு பிரபலமான கால்பந்தாட்ட வீரர், மற்ற தேசங்களின் பார்வையை தன்னை நோக்கி ஈர்ப்பார் என்று யாரும் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.  இப்போது ஜெர்மனியின் இந்தப் பயிற்றுநர், ஷஹ்டோலின் சில விளையாட்டு வீரர்களுக்கு ஜெர்மனியின் ஒரு அகாதமியில் பயிற்சி அளிக்க முன்மொழிந்திருக்கிறார்.  இதன் பிறகு மத்திய பிரதேச அரசும் கூட அவரைத் தொடர்பு கொண்டிருக்கிறது.   விரைவிலேயே, ஷஹ்டோலின் நமது சில இளைய நண்பர்கள் பயிற்சி பெற ஜெர்மனி செல்வார்கள்.  பாரதத்தில் கால்பந்தாட்டம் மீதான நாட்டம் தொடர்ந்து வளர்ந்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.  நேரம் வாய்க்கும் போதெல்லாம் ஷஹ்டோலுக்குக் கண்டிப்பாகச் சென்று வாருங்கள், அங்கே நடைபெற்றுவரும் விளையாட்டுப் புரட்சிகளை அருகிருந்து பார்த்து வாருங்கள் என்று நான் கால்பந்தாட்ட ரசிகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எனதருமை நாட்டுமக்களே, சூரத்தில் வசிக்கின்ற ஜிதேந்திர சிங் ராடோட் பற்றித் தெரிந்தது மிகவும் சுகமான அனுபவமாக இருந்தது.  மனதில் பெருமிதம் பொங்குகிறது.  ஜிதேந்திர சிங் ராடோட் ஒரு பாதுகாப்புக் காவலர், அவர் செய்திருக்கும் ஒரு அற்புதமான முன்னெடுப்பு, தேசபக்தர்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்லது.   கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தாய்த்திருநாட்டைக் காப்பாற்ற தங்களுடைய இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதில் ஈடுபட்டு வந்தார்.  இப்போது இவரிடத்திலே, முதலாம் உலகப் போர் தொடங்கி இப்போதைய உயிர்த்தியாகிகள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.  இவரிடத்தில் உயிர்த்தியாகிகளின் ஆயிரக்கணக்கான படங்களும் இருக்கின்றன.  ஒருமுறை ஒரு உயிர்த்தியாகியின் தந்தை கூறிய ஒரு விஷயம் இவர் இதயத்தைத் தொட்டு விட்டது.   அந்த உயிர்த்தியாகியின் தந்தையார் கூறினார் – ‘மகன் போனால் அதனால் என்ன, தாய்நாடு நலமாக இருக்கிறது இல்லையா?’  இந்த ஒரு விஷயம், இந்த ஒரு வாக்கியம், இந்த உணர்வு, ஜிதேந்திர சிங் அவர்களின் மனதை தேசபக்தி என்ற அற்புதமான அமுதால் நிரப்பி விட்டது.  இன்று இவரிடத்தில் பல உயிர்த்தியாகிகளின் குடும்பங்களிடம் தொடர்பு இருக்கிறது.  இவர் கிட்டத்தட்ட 2500 உயிர்த்தியாகிகளின் தாய் தந்தையரின் பாதத் தூளிகளை தன்னிடத்தில் வைத்திருக்கிறார்.   ஆயுதப்படையினரிடத்தில் இவருக்கு இருக்கும் ஆழமான பாசம், உறவு ஆகியவற்றுக்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டு இது.  ஜிதேந்திரா அவர்களின் வாழ்க்கை தேசபக்தியின் இயல்பான ஒரு பாடம்.

என் கனிவான நாட்டுமக்களே, இப்போதெல்லாம் நீங்களே கவனித்திருக்கலாம், பல வீடுகளின் கூரைகளிலே, பெரிய கட்டிடங்களின் மேலே, அரசாங்க அலுவலகங்களில் எல்லாம் சூரியசக்தித் தகடுகள் பளிச்சிடுகின்றன.  மக்கள் இவற்றின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள், இவற்றைத் திறந்த மனத்தோடு ஏற்றுக் கொண்டு வருகிறார்கள்.  நமது தேசத்திலே சூரியதேவனின் எல்லையற்ற கருணை இருக்கிறது எனும் போது ஏன் நாம் அந்த சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?

நண்பர்களே, சூரியசக்தியால் விவசாயிகளுடைய வாழ்க்கை மாறிக்கொண்டு வருகிறது.  அதே வயல், அதே உழைப்பு, அதே விவசாயி ஆனால், இப்போது உழைப்பின் பலன் அதிகமாக இருக்கிறது.  இந்த மாற்றங்கள் எல்லாம் சூரியசக்தி பம்ப் காரணமாகவும், சூரியசக்தி அரிசி ஆலையாலும் தான்.  இன்று தேசத்தில் பல மாநிலங்களில், நூற்றுக்கணக்கான சூரியசக்தி அரிசி ஆலைகள் அமைக்கப்பட்டு விட்டன.  இந்த சூரியசக்தி அரிசி ஆலைகள், விவசாயிகளின் வருவாயோடு கூடவே அவர்களின் முகங்களில் மகிழ்ச்சிக் கீற்றுக்களைப் படர விட்டிருக்கின்றன.

நண்பர்களே, பிஹாரின் தேவ்கி அவர்கள், சூரியசக்தி பம்ப் வாயிலாக கிராமத்தின் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.  முஸஃப்ஃபர்பூரின் ரதன்புரா கிராமத்தில் வசிக்கும் தேவ்கி அவர்களை மக்கள் இப்போது அன்போடு சோலார் தீதி என்று அழைக்கிறார்கள். தேவகி அவர்களின் வாழ்க்கை அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை; சிறுவயதிலேயே அவருக்குத் திருமணம் ஆனது, சிறிய வயல் தான், நான்கு குழந்தைகளின் பொறுப்போடு கூடவே, எதிர்காலம் பற்றிய எந்த தெளிவான எண்ணமும் இருக்கவில்லை.   ஆனால் அவருடைய தன்னம்பிக்கை என்றுமே தகர்ந்து போகவில்லை.  அவர் ஒரு சுயவுதவிக் குழுவோடு தன்னை இணைத்துக் கொண்டார், அங்கே தான் அவருக்கு சூரியசக்தி பம்ப் பற்றிய தகவல் கிடைத்தது.  அவர் சூரியசக்தி பம்பிற்காக முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார்.  சோலார் தீதியின் சூரியசக்தி பம்ப் வந்த பிறகு கிராமத்தின் காட்சியே மாறி விட்டது.  முன்பெல்லாம் சில ஏக்கர் நிலங்களுக்கு மட்டுமே நீர்பாசனம் செய்ய முடிந்த நிலைமையிலே, இப்போது சூரியசக்தி தீதியின் சூரியசக்தியால் இயங்கும் பம்ப், 40 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்களுக்கு நீர் பாய்ச்சுகிறது.  சோலார் தீதியின் இந்த இயக்கத்துடன் கிராமத்தின் பிற விவசாயிகளும் இணைந்து விட்டார்கள்.   அவர்களின் வயல்வெளிகளும் பசுமையாகக் காட்சியளிக்கின்றன, வருவாயும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. 

நண்பர்களே, முன்பெல்லாம் தேவகி அவர்களின் வாழ்க்கை நான்கு சுவர்களுக்குள்ளே அடங்கிப் போனது.  ஆனால் இப்போதோ அவர் முழு தன்னம்பிக்கையோடு தனது பணிகளைச் செய்து வருகிறார், சோலார் தீதியாக ஆகி பணம் சம்பாதித்து வருகிறார்.  அனைத்திலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இவர் அந்த வட்டாரத்து விவசாயிகளிடமிருந்து யுபிஐ வாயிலாகவே தொகையைப் பெறுகிறார்.  இப்போது மொத்த கிராமத்திலும் இவருக்கு மிகுந்த மரியாதை கிடைக்கிறது.  சூரியசக்தி என்பது மின்சாரத்திற்கான சாதனம் மட்டுமல்ல, கிராமம்தோறும் புதிய ஒளியேற்படுத்தவல்ல புதியதொரு சக்தியும் கூட என்பதைத் தான் இவருடைய உழைப்பும் தொலைநோக்கும் எடுத்துக்காட்டி இருக்கின்றன.

என் மனம்நிறை நாட்டுமக்களே, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மாபெரும் பொறியாளர் மோக்ஷகுண்டம் விச்வேஸ்வரைய்யா அவர்களின் பிறந்த நாள் ஆகும்.  அந்த நாளன்று தான் நாம் பொறியாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.  பொறியாளர்கள் வெறும் இயந்திரங்களை மட்டும் உருவாக்குவதில்லை, அவர்கள் கனவுகளை மெய்ப்படச் செய்யும் கர்மயோகிகள்.  நான் பாரதத்தின் அனைத்துப் பொறியாளர்களையும் பாராட்டுகிறேன் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். 

நண்பர்களே, செப்டம்பரில் தான் பகவான் விஸ்வகர்மாவின் புனிதமான வழிபாட்டுக்காலமும் வரவிருக்கிறது.  செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியன்று விஸ்வகர்ம ஜயந்தியாகும்.   பாரம்பரியமான கைவினைக்கலை, திறன்கள் மற்றும் அனுபவ அறிவு-ஞானம் ஆகியவற்றை இடைவிடாமல் ஒரு தலைமுறையிடமிருந்து மற்றோர் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கிறார்கள்.  நமது தச்சர்கள், இரும்புக் கொல்லர்கள், பொற்கொல்லர்கள், மண்பாண்டம் தயாரிப்போர், சிற்பிகள், கட்டடக்கலைஞர்கள் போன்றோர் எப்போதுமே பாரதத்தின் வளத்தின் ஆதாரங்கள்.   நமது இந்த விஸ்வகர்மா உறவுகளுக்குத் துணைவரவே, அரசாங்கம் விஸ்வகர்மா திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

நண்பர்களே, இப்போது நான் உங்களுக்கு ஒரு ஒலிக்குறிப்பை இசைக்கச் செய்ய விரும்புகிறேன். 


மாநிலங்கள் விஷயத்தில் நான் செய்தது அல்லது ஹைதராபாத் தொடர்பாக நமது அரசாங்கம் செய்தது, ஆமாம் நாங்கள் தான் செய்தோம், இது பற்றி எல்லாம் நீங்கள் இந்த கௌரவப் பட்டயத்தில் எழுதியிருக்கிறீர்கள், எல்லாம் சரி தான்.  ஆனால் இந்த ஹைதராபாத் விஷயம் எப்படிப்பட்டது, நாங்கள் எப்படி செய்தோம், எத்தனை கடினம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  அனைத்து மாநிலங்களிடத்திலும், அனைத்து அரச குமாரர்களிடமும் நாங்கள் அளித்த வாக்குறுதி என்னவென்றால், எந்த ஒரு அரசகுமாரனுக்கோ, அரசருக்கோ எதிராக தவறான முடிவை எடுக்க மாட்டோம்.  அனைவருக்கும் பொதுவான வகையிலே தான் முடிவு எடுக்கப்படும்.  ஆனால் ஹைதராபாதிடம் நாங்கள் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்தினோம்.


நண்பர்களே, இந்தக் குரல் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலுக்குச் சொந்தமானது.  ஹைதராபாத் சம்பவங்கள் தொடர்பாக அவர் குரலில் இருந்த துயரம், அதை உங்களால் உணரமுடியும்.  அடுத்த மாதம் செப்டம்பரில் நாம் ஹைதராபாத் விடுவிப்பு நாளைக் கொண்டாடுவோம்.  இதே மாதம் தான் நாம் ஆப்பரேஷன் போலோவில் பங்கெடுத்த அனைத்து வீரர்கள், தீரர்களை நினைவில் கொள்வோம்.   ஆகஸ்ட் மாதம் 1947ஆம் ஆண்டு பாரதம் சுதந்திரம் அடைந்த போது, ஹைதராபாத் மட்டும் தனியொரு நிலைமையில் இருந்தது.  நிஜாம் மற்றும் ரஸாக்கர்களின் கொடூரங்கள் அன்றாடம் அதிகரித்து வந்தன.  மூவண்ணக் கொடியைப் பறக்க விட்டாலோ, வந்தே மாதரம் என்று கோஷமிட்டாலோ, அவர்கள் கொல்லப்பட்டார்கள்.  பெண்கள் மற்றும் ஏழைகளின் மீது கொடுமைகள் கட்டவழித்துவிடப்பட்டன.  இந்தப் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே வருவதாக, அந்த வேளையில் தான் பாபாசாகேப் ஆம்பேட்கரும் கூட எச்சரிக்கை விடுத்தார்.   கடைசியில், சர்தார் வல்லப்பாய் படேல் அவர்கள் விஷயத்தைத் தனது கைகளில் எடுத்தார்.  அவர் ஆப்பரேஷன் போலோவைத் தொடங்க அரசாங்கத்தைத் தயார் செய்தார்.  சாதனைபடைக்கும் வகையில் நமது இராணுவம் ஹைதராபாத் நிஜாமின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலை அளித்து, ஹைதராபாதை பாரதத்தின் அங்கமாக்கியது.  தேசமெங்கும் இந்த வெற்றிக்களிப்பு கொண்டாடப்பட்டது.

என் உளம்நிறை நாட்டுமக்களே, உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் நீங்கள் சென்று பாருங்கள், அங்கே உங்களால் பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் தாக்கத்தைக் காணமுடியும்.  இந்தத் தாக்கம் உலகின் பெருநகரங்களில் மட்டுமல்ல, இதைச் சின்னச்சின்ன நகரங்களிலும் கூட உங்களால் பார்க்க முடியும்.  இத்தாலியின் ஒரு சிறிய நகரமான கேம்ப் ரோதோந்தோ என்ற இடத்திலும் கூட இதைப் பார்க்கலாம்.  இங்கே மஹரிஷி வால்மீகி அவர்களுடைய திருவுருவச் சிலை திறக்கப்பட்டிருக்கிறது.  இந்த நிகழ்ச்சியில் அங்கிருக்கும் பகுதியின் நகரத் தந்தையைத் தவிர, வட்டாரத்தின் பல முக்கியமான நபர்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  மகரிஷி வால்மீகி அவர்களின் திருவுருவச் சிலையை பாரத நாட்டைச் சேர்ந்தவர்கள் அமைத்ததால், கேம்ப் ரோதோந்தோவில் வசிப்போருக்கு மிகுந்த மகிழ்ச்சி.  மகரிஷி வால்மீகியின் செய்தி நம்மனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிக்கிறது. 

நண்பர்களே, இந்த மாதம் தொடக்கத்தில் கனடாவின் மிஸிஸாகாவில் பிரபு ஸ்ரீ இராமனுடைய 51 அடி உயரமான திருவுருவச் சிலையும் திறக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சி தொடர்பாக மக்கள் பெரும் உற்சாகத்தில் இருந்தார்கள்.  சமூக ஊடகங்களில் பிரபு ஸ்ரீ இராமனுடைய மாபெரும் திருவுருவச் சிலை மீதான காணொளிகள் நன்கு பகிரப்பட்டன.

நண்பர்களே, இராமாயணம் மற்றும் பாரதநாட்டு கலாச்சாரத்திடம் அன்பு இப்போது உலகின் அனைத்து இடங்களிலும் சென்றடைந்து வருகிறது.  ரஷியாவின் ஒரு புகழ்மிக்க இடம் விளாடிவாஸ்டாக்.   குளிர்காலத்தில் இங்கே தட்பவெப்பம் பூஜ்யத்திற்கு கீழே 20-30 டிகிரி செல்ஷியஸைக் கூட தொடக்கூடிய இடமாக இது பார்க்கப்படுகிறது.  இந்த மாதம் விளாடிவாஸ்டாக்கில் ஒரு வித்தியாசமான ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது.  இதிலே ரஷிய நாட்டுக் குழந்தைகள் வாயிலாக இராமாயணத்தின் பல்வேறு கருத்துக்கள் தொடர்பாக வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  இங்கே ஒரு போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து பாரத நாட்டு கலாச்சாரத்திடம் பெருகிவரும் விழிப்புணர்வைப் பார்க்கும் போது உள்ளம் மிகவும் சந்தோஷத்தில் விம்முகிறது.

எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே.  இப்போது தேசமெங்கும் கணேச உற்சவம் பெரும் கோலாகலத்தோடு கொண்டாடப்பட்டு வருகிறது.  வரவிருக்கின்ற நாட்களில் பல பண்டிகைகள் ஒளிகூட்ட வரவிருக்கின்றன.   இந்தப் பண்டிகைகளின் போது நீங்கள் சுதேசி பற்றிய எண்ணத்தை எப்போதும் மறந்துவிடக்கூடாது.  பரிசுகள் என்றால் பாரதத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும், ஆடைகள் என்றால் அவையும் பாரதத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும், அலங்காரங்கள் என்றால் அவையும் பாரதத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும், விளக்குகளும் பாரதத்தில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும், இப்படி அனைத்துப் பொருட்களும், வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளும், அனைத்தும் சுதேசியாக இருக்க வேண்டும்.  பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று, பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று, பெருமிதம் பொங்கச் சொல்லுங்கள், இது சுதேசி என்று.  ஒரே ஒரு மந்திரம் தான், அது உள்ளூர் பொருட்களுக்கான குரல்.  ஒரே ஒரு பாதை தான், அது தற்சார்பு பாரதம்.  ஒரே ஒரு இலக்குத் தான், அது வளர்ச்சியடைந்த பாரதம்.

நண்பர்களே, இந்த சந்தோஷங்களுக்கு இடையே நீங்கள் அனைவரும் தூய்மை மீது அழுத்தம் அளித்து வாருங்கள், ஏனென்றால், எங்கே தூய்மை இருக்கிறதோ, அங்கே தான் பண்டிகைகளின் ஆனந்தமும் அதிகரிக்கிறது.  நண்பர்களே, மனதின் குரலுக்காக எப்போதும் போலவே நீங்கள் அதிக எண்ணிக்கையில் கடிதங்கள் எழுதி வாருங்கள்.  உங்களுடைய அனைத்து ஆலோசனைகளும் இந்த நிகழ்ச்சிக்கு மிகவும் மகத்துவம் வாய்ந்தவை.   உங்களுடைய பின்னூட்டங்களை எனக்கு அனுப்பி வாருங்கள்.  அடுத்த முறை நாம் சந்திக்கும் வேளையிலே, மேலும் புதிய விஷயங்களோடு சந்திப்போம்.  பலப்பல நன்றிகள்.  வணக்கம்.