Home Blog Page 54

சம்ஸ்கிருத ந்யாயமும் விளக்கமும்- 54: கோமுக வ்யாக்ர ந்யாய:(2)

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 54 (தொடர்ச்சி)

தெலுங்கில்: பி.எஸ். சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

கோமுக வ்யாக்ர ந்யாய: – பசுந்தோல் போர்த்திய புலி
கோமுக: – பசுவைப் போன்ற முகம். வ்யாக்ரம் – புலி

சில தசாப்தங்களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம்:

உள்நாட்டுத் தடுப்பூசியின் பரிசோதனைகள் இறுதிக் கட்டத்தை எட்டின. குரங்குகளின் மேல் அந்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மனிதர்களின் மீது முயற்சிப்பதற்கு முன்பாக அவ்வாறு பரிசோதனை செய்வது ஆராய்ச்சியின் ஒரு பகுதி. ஹைதராபாதில் என்.ஐ.என். அமைப்பில் இந்த ஆய்வுகள் நடந்தன. ஆனால் ‘விலங்கு ஆர்வலர்கள்’ என்ற பெயரில் ஒரு கும்பல் அந்த ஆராய்ச்சி நிறுவனத்தைத் தாக்கி அந்த வானரங்களை விடுவித்தது. அதன் பலனாக தடுப்பூசித் தயாரிபில் பின்னடைவு ஏற்பட்டு, கால தாமதமானது. வெளிநாட்டு தடுப்பூசிக் கம்பெனிகள் சதித்திட்டம் தீட்டி ‘ப்ளூ க்ராஸ்’ குழுவினரைத் தூண்டி, இந்தத் தாக்குதளைச் செயவித்த உண்மை பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது.  

ஸ்லீப்பிங் செல்கள்: பஹல்காம் கொடூரம் நடந்த சில மணி நேரங்களிலேயே, இந்திய உள்துறை அமைச்சரின் வருகை பற்றிய விவரங்களும், அரசாங்கத்தால் மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களின்    தகவல்களும், CRPF படையின் அசைவுகளும் பகை நாட்டைச் சென்றடைந்தன. இது ஒரு தொலைகாட்சிப் நிருபர் வேடத்தில் இருந்த ஒரு பெண் செய்த தேசத் துரோகம். ஜோதி மல்ஹோத்ரா போன்ற பசுந்தோல் போர்த்திய புலிகள் இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ. சிலர் செய்திகளில் இடம்பெற்றனர். பலர் பசுத்தோலைப் போர்த்திச் சதி புரிந்து கொண்டு இன்றைக்கும் வளைய வருகிறார்கள்.

‘புத்தா இன் ட்ராஃபிக் ஜாம்’: துப்பாக்கி பிடித்தால் மட்டுமே நல்ல புரட்சிகளைச் செய்ய முடியும் என்று இளைஞர்களிடம் ஏமாற்றுப் பேச்சுப் பேசி, அவர்களைத் தவறாக வழி நடத்தி, வன்முறையால் தேசபக்தர்களைக் கொன்று, மக்களின் சொத்துக்களை அழித்துவருகிறது  ஒரு ஜனநாயக விரோதக் கும்பல். அதனிடம் சிக்கி இளைஞர்கள் சிலர் நக்சலைட்டுகளாக மாறிவருகிறார்கள். அவர்களுக்கு துணைபோகும் சிலர் மறைமுகமாக கல்வி நிலையங்களில் ஆசிரியர்களாகவும், பலகலைக் கழகங்களில் பேராசிரியர்களாகவும் மனித உரிமைப் பாதுகாவலர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் நகரங்களில் இஷ்டத்திற்குச் சுற்றித் திரிகிறார்கள். ஜனநாயகம் ஒரு போலித்தனம் என்று குற்றம் சாட்டும் போலி மேதாவிகள் சிலர். கட்சிகளைத் தொடங்கி அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். போலி மதச்சார்பின்மை பேசுகின்றனர். இவர்கள் அனைவரும் பசுந்தோல் போர்த்திய புலிகளே. இத்தகையவர்களே ‘அர்பன் நக்சல்ஸ்’ எனப்படுவர்.  

‘விவேக் அக்னிஹோத்ரி’ என்ற தேசியவாதி, “புத்தா இன் ட்ராஃபிக் ஜாம்” என்ற  திரைப்படத்தின் மூலர் இவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார். அண்மையில் பாரதப் பிரதமர் திரு மோதிஜி, உரையாற்றுகையில் ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். தேசத் துரோகச் செயல்களுக்கும், அழிவுக்கும்   நக்சலைட்டுகளும், அர்பன் நக்சல்களும் மறு பெயராக விளங்குகிறார்கள்.

மதமாற்றங்களின் தாய்: சில கும்பல்கள் சேவை, மருத்துவம், கல்வி போன்ற முகமூடிகளில் மறைந்து மத மாற்றங்களை ஊட்டி வளர்த்து வருகின்றன. அதோடு, சமுதாயத்தில் வேற்றுமையைக் கற்பித்து தேசத்தை ஆட்டம் காண வைக்கும் சதிகளையும் தீட்டி வருகின்றன. அத்தகைய மறைமுக அமைப்புகளும் பசுந்தோல் போர்த்திய புலிகளே.

விஷ விதைகள்: சோஷல் மீடியா மூலம் இளைய தலைமுறை மீது பாதிப்பை ஏற்படுத்தி பொழுதுபோக்கு ரீல்கள் என்ற பெயரில் கலாசாரத்தையும் மரபுகளையும் எதிர்க்கும் கருத்துக்களைப் பரப்புகிறார்கள். மறைமுக நிகழ்ச்சி நிரலுடன் திரைப்படத் துறையை மாசுபடுத்துபவர்களும் பப்கள், கிளப்புகள் போன்றவற்றின் விரிவாக்கத்திற்குத் தேவையான விதைகளை நாட்டுபவர்களும் இந்த நியாயத்திற்கு எடுத்துக்காட்டுகள்.

வண்ணப் புடவைகள், கரங்களில் வளையல்கள், நெற்றியில் குங்குமம் போன்றவற்றை எதிர்த்தும், ஹிந்து மதத்தின் முக்கியக் கொள்கையான கர்ம சித்தாந்தத்தையும், திருமண அமைப்பையும், முனிவர்கள் உரைத்த வாஸ்து, ஜோதிடம் போன்ற அறிவியல் உண்மைகளை அவமதித்தும் பேசி வருகின்றனர். சிலர். காலையில் எழுந்தவுடம் நினைவு கூறத் தக்கவர்களான தேவ, தேவியர்களை ஏளனம் செய்தும், வக்கிரமாகப் பேசியும், விஷ நூல்களை பொதுமக்களிடம் விநியோகித்தும் விருதுகளைப் பெற்று வருகிறார்கள். இத்தகைய மறைமுக விஷக் கும்பல்களும் இந்த நியாயத்திற்கு எடுத்துக்காட்டுகள்.

நோய்க்கான காரணங்கள்: விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த தேசிய காங்கிரஸ் ஒரு வெளிநாட்டவரால் உருவாக்கப்பட்டது. அசாதாரணமான அறிவுக்கும், தேச பக்திக்கும் மறு வடிவங்களாக விளங்கிய பல முக்கிய பிரமுகர்கள் செயல் வீரர்களாக அதில் பங்கு பெற்று விளங்கினார்கள். அந்த தேசிய காங்கிரஸ் அமைப்பு, 1947 சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு அரசியல் கட்சியாக உருமாற்றம் பெற்றது.  

நேருவின் வம்ச அரசியல், ஜனநாயகம் என்ற போர்வையில் நிலப்புரபுத்துவத்திற்கு வழி கோலியது. அவர்களுடைய ஆட்சியில் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக புதிய பிரச்சினைகளை உருவாகின. தேச பக்தி என்ற பெயரில் நாட்டைப் பிரிப்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. அந்தக் கட்சித் தலைவர்களும்  வாரிசுகளும் பேசும் வார்த்தைகள், நாட்டு நலனுக்கு தீங்கிழைக்கும் விதமாக இருப்பது (கோமுக வ்யாக்ர) பசுந்தோல் போர்த்திய புலி என்ற பழமொழிக்குச் சரியான உதாரணம்.

அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம், இலக்கியம், விவசாயம் என்று ஒன்றல்ல எல்லா துறைகளிலும் நம் தேசத்தை ஏதோ விதத்தில் சீரழிக்கும் அமைப்புகள் நாய்க்குடைகள் – காளான்கள் போல தோன்றி வருகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும் போது, மும்மூர்த்திகளின் பெயரோ, ஹிந்து தேவதைகளின் பெயரோ வைத்துக் கொண்டு இந்த மிஷினரிகளும் மடங்களும் வேலை செய்கின்றன. இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி வருகின்றன. கல்யுகத்தில் இப்படிப்பட்ட புலிகள் மேலும் அதிகரித்து வருகின்றன. அவைகளிடம் கவனமாக விழிப்புடன் இருக்க வேண்டும் அதற்குத் தேவையான பயிற்சிகளும், புலிகளை எதிர்க்கும் சாகசம் நிறைந்த துணிச்சலும் சுபாவத்தில் சாதுவான ஹிந்துக்களுக்கு ஏற்பட வேண்டும். 

சிறிதளவு அடிப்படை வேறுபாடு இருந்த போதிலும், இந்த நியாயத்தைப் போன்றதே “பயோமுக விஷ கும்பம்” என்ற நியாயமும். “பால் இருக்கும் பானை போலிருந்தாலும் உள்ளே இருப்பது விஷம்” என்பது இந்த நியாயத்தின் பொருள். இதனையே “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது” என்கிறோம்.

பரோக்ஷே கார்ய ஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரியவாதினாம் |
வர்ஜயேத்தாத்ருசம் மித்ரம் விஷ கும்பம் பயோமுகம் ||

பொருள்: எதிரில் இனிப்பான பேச்சு. பின்னாலிருந்து வெறுப்பான பேச்சு. அப்படிப்பட்டவர் நண்பராக மாட்டார். அவர்கள் மேலுக்கு பாற்குடம் போலிருந்தாலும் விஷம் நிரம்பிய பானை போன்றவர் என்பர் பெரியோர்.

இம்மாதிரியான நடத்தை மனித குலத்திற்கு இழைக்கப்படும் அநீதி. இது மனிதர்களுக்கு இடையில் இருக்கவேண்டிய நம்பிக்கையை அழிக்கக் கூடிய அபாயம் நிறைந்தது. சமுதாயத்தில் எங்கோ நடக்கும் சம்பவங்களைப் பரவலாக பிரச்சாரம் செய்வதால் இத்தகைய அபாயங்கள் நேர்கின்றன.

ரயிலில் நீண்ட தொலைவு பயணம் செய்யும் போது எடுத்து வந்த உணவுப் பொருளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது, மகிழ்ச்சியாக ஒன்றுசேர்த்து பயணிப்பது போன்றவற்றை அனுபவித்திருக்கலாம். ஆனால் துறையினரின் எச்சரிக்கை காதில் விழுகிறது. “முன்பின் தெரியாதவர் கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டாம்” என்று. அடுத்து சந்தேகப்படத் தொடங்குகிறோம். பரஸ்பரம் அன்யோன்யமாக இருக்க வேண்டிய உறவினர்களின் இடையே டிவி சீரியல்கள் சந்தேக விஷத்தைப் புகட்டி மாசுபடுத்துகின்றன அல்லவா?

நம்பிக்கை தொடர்பான கதை ஒன்று உண்டு.

ஒரு காட்டுப்பகுதியில் கருணையுள்ள துறவி ஒருவர் வசித்து வந்தார். அந்த வழியாகச் செல்லும் பாதசாரிகளுக்குத் தேவையான உணவும் தண்ணீரும் அளிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அதோடு அவர் மூலிகை மருத்துவத்திலும் சிறந்து விளங்கினார்.

ஒரு முறை அந்த வழியாகச் சென்ற ஒரு செல்வந்தர் நோய்வைப்பட்டபோது, துறவி அவருடைய களைப்பைப் போக்கி தேவையான சேவை செய்தார். அதற்கு நன்றியாக ஒரு நல்ல குதிரையைச் செல்வந்தர் துறவிக்குப் பரிசளித்தார். அந்தக் குதிரையின் உதவியோடு துறவி தேவையானவர்களுக்கு மேலும் சிறந்த சேவைகளைச் செய்தார்.

நல்லது இருக்கும் இடத்திலேயே தீமையும் இருக்கும். அந்தக் காட்டுப்பகுதியில் இருந்த வழிப்பறித் திருடனுக்கு அந்தக் குதிரையின் மேல் கண் விழுந்தது. அந்தத் துறவியின் சேவைகளைப் பெற்றிருந்தாலும், அந்தத் துறவியிடம் சென்று அந்தக் குதிரையைத் தனக்குத் தந்துவிடும்படி கேட்டான். ஆம்புலன்ஸ் போல உதவியாக இருந்த குதிரையைக் கொடுக்க இயலாது என்றார் துறவி.

ஒருநாள் குதிரையின் மேல் சென்று கொண்டிருந்த துறவிக்கு சாலையோரத்தில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் தென்பட்டான். அவர் குதிரையை நிறுத்தி அந்த நோயாளியைத் தன் குதிரையின் மேல் ஏற்றிக் கொண்டு தன் குடிசைக்கு எடுத்துச் செல்ல நினைத்தார். நோயாளிபோல் நடித்தவன் வேறு யாரோ அல்ல. அந்த வழிப்பறித் திருடனே.

துறவியைத் தள்ளிவிட்டு, அந்தக் குதிரையைத் தான் எடுத்துச் செல்லப் போவதாக எக்காளமிட்டான். துறவி அதிர்ந்து போனார். திருடனிடம், “குதிரையை எடுத்துக் கொள். என்னால் உன்னோடு போராட இயலாது. ஆனால், உனக்கு இந்த குதிரை எப்படிக் கிடைத்தது என்ற செய்தியை யாருக்கும் சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடு” என்று கேட்டார். திருடன் வியந்து போய், “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு சாது கூறிய பதில் திருடனிடம் மாற்றத்தை உண்டாக்கியது. அவர் என்ன சொன்னார் தெரியுமா? “நோயாளியைப் போல நடித்து என்னை ஏமாற்றி இந்த குதிரையைப் பறித்துக் கொண்டாய் அல்லவா? இது தெரிந்தால் இனிமேல் சாலையோரத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற யாரும் முன் வரமாட்டார்கள். மனிதர்களிடம் நம்பிக்கையைக் குலைக்கும் இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் போவதே மேல்” என்றார். திருடனின் கண்கள் பனித்தன. துறவியின் பாதங்களைப் பணிந்து, அவருக்கு உதவியாளனாக மாறினான்.

“முத்யால முக்கு”: “முத்தியால முக்கு” (முத்து போன்ற கோலம்) என்ற தெலுங்கு திரைப்படம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1975 ல் வெளிவந்தது. பாப்பு, ரமணா என்ற இரட்டையர்கள் இதை எழுதி இயக்கினர். இது உத்தர ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அதில் ஒரு ஒப்பந்தக்காராரின் கதாபாத்திரம் (ராவ் கோபாலராவ்) உண்டு. அவனிடம் ஒரு வியாபாரி வருவான். சர்க்கரையை சந்தைக்கு வராமல் பார்த்துக் கொள்ளும்படிக் கேட்பான். சர்க்கரையை முடக்கி, அதன்மூலம் மக்களிடம் அதிக விலைக்கு விற்று, அதில்  கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியை காண்ட்ராக்டருக்கு அளிப்பதாகக் கூறுவான். அது ஒரு ஏமாற்று வேலை.

இடதுசாரிகளின் வணிகம்: இடது சாரி தீவிரவாதிகள், பார்ப்பதற்கு பசுவைப் போலவும் நல்லவர்களைப் போலவும் நடித்து, உலகளாவிய தொழிலாளர் ஒற்றுமை, நலன் என்று முழக்கம் எழுப்புவார்கள். இவர்கள் தொழிலாளர் யூனியன்களை நிறுவி, அவர்களின் உரிமையைக் காப்பாற்றுவதாக கோஷமிட்டு, நிர்வாகத்தின் மீதான விரோதத்தை வளர்த்து, வேலையின் மேல் கவனத்தைக் குறைத்து, தேசத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான தொழிலகங்களை மூடுவதற்கு காரணமாகின்றனர். இத்தகைய தொழிற்சங்க யூனியன்கள், ‘பசு முகம் கொண்ட புலி’ என்ற இந்த நியாயத்திற்குச் சிறந்த உதாரணம்.

முக்கியமாக இடதுசாரி அரசாட்சி நடக்கும் மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் முக்கியத் தொழில்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. சீனாவின் மீதான அவர்களின் பக்தி நிரூபிக்கப்பட்டது.

வங்காளத்தில் ‘டன்லப் டயர்’ கம்பெனி, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், மேலும் பல சணல் ஆலைகள், ஐடிஎல், ஐடிபிஎல் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டன. பிஎஸ்என்எல்  போன்ற நிறுவனங்கள் தளர்ச்சியடைவதற்கு இவர்களே காரணம். இவர்கள் தாம் வாழும் நாட்டிற்கே சேதம் விளைவிக்கிறார்கள்.

சனாதன தர்மத்தை அடியோடு அழிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ‘ஆப்ரகாமிக்’ மதங்களோடு கைக் கோர்த்து இயங்குவது, இந்த நாத்திகக் கட்சிகள் கடைப்பிடிக்கும் இரட்டை நிலைப்பாடு. “பயோமுக விஷ கும்பம்” என்ற நியாயத்திற்கு இவர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள்.

தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் வர்த்தகம் செய்வதே இவர்களின் குறிக்கோள்.  தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து உறுப்பினர் கட்டணம், போனஸ்களில் இருந்தும்  ஊதியத் தீர்வுகளில் இருந்தும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாருமானத்தின் மேல் இடதுசாரிகளின் வரி விதிப்பு, இவையே இந்த பசுந்தோல் போர்த்திய புலிகள் செய்யும் ‘சேவைகள்’.


தர்க்கத்தை விட சிரத்தை முக்கியம்!

hindu
ohm

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

தர்மம் அல்லது மதம் தர்க்கத்திற்குள் அடங்காது. அது நம்பிக்கைக்கு உட்பட்டது. உலகியலுக்கு அப்பாற்பட்ட உண்மைகள் அனுபவத்திற்கு வரும் வரை நம்பிக்கையே அடிப்படையான ஆதாரம். ஆனால் கற்பனைக்கு அப்பாற்பட்ட அத்தகைய தெய்வீக   அனுபவங்களைப் பெற்ற ஞானிகளின் வாழ்க்கை வரலாறும், போதனைகளும் சான்றுகளாக நின்று சாமானியர்களின் நம்பிக்கைக்கு ஊட்டமளிக்கும். அவற்றைத் தர்க்கத்தாலோ, பகுத்தறிவாலோ விளக்க முடியாது. இது சனாதன தர்மத்திற்கும் பொருந்தும்.

தர்க்கம் எதுவும் செய்யாமல், தம்முடைய புனித நூல் கூறுவதே உண்மை என்று ஹிந்துவல்லாத பிற மதத்தினர் ஆழமாக நம்புகின்றனர். அதனால்தான் அவர்கள் பல நாடுகளில் வலுவாகப் பரவியுள்ளனர்.  

பல அமைப்புகள் தர்க்கத்தாலோ, தந்திரத்தாலோ அன்றி அன்பாலும் நம்பிக்கையாலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மனத்தால் கடைப்பிடிப்பதற்கும், நிலைபெறுவதற்கும் நம்பிக்கையே ஆழமான சக்தியாக வேலை செய்கிறது. அறிவியலும், தொழில்நுட்பமும்  முன்னேற்றம் அடைந்துள்ள இக்காலத்தில் இன்னும் மத நம்பிக்கை எதற்காக என்று வினா எழுப்பும் ஹிந்துக்களைக் காண முடிகிறது. ஆனால் இதே அறிவியல் யுகத்தில் வாழும் பிற மதத்தினர் அவ்வாறு ஏன் கேள்வி கேட்பதில்லை? உலகியல் விஷயங்களில் தர்க்கமும், மத அம்சங்களில் நம்பிக்கையும் தேவை என்று வேறுபடுத்திப் பார்க்கும்  தெளிவான புரிதல் அவர்களிடம் உள்ளது. அவ்விதமான பகுத்தறியும் குணம் ஹிந்துக்களிடம் குறைவுபடுகிறது. 

சிரத்தையோடும், நல்லெண்ணத்தோடும் பரிசீலனை செய்து ஆராய வேண்டும். அப்படிச் செய்தால், தர்க்க அறிவையும் திருப்திப்படுத்தும் பதில்களைக் கண்டுபிடிக்க முடியும். அதற்கான சாத்தியமும், சக்தியும் ஹிந்து மதத்தில் மட்டுமே உள்ளது என்பதற்கு அளவுகோல்களாகப் பல உண்மைகளைக் காட்ட முடியும்.

அறிவியல் வளர வளர, ஹிந்து மரபுகளின் ஞானமும் உயர்வும் தெரியவருகின்றன. ஹிந்துக்களின் வாழ்க்கை முறையும், சிந்திக்கும் முறையும் அறிவியல் பூர்வமானவையே என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் பல நூற்றாண்டுகளாகக் காணக் கிடைக்கின்றன.

தர்க்க ரீதியாகவும், பகுத்தறிவு முறையிலும் சிந்திக்கும் மேல்நாட்டு அறிவுஜீவிகள் பலர்   வேதம், புராணம், இதிகாசம், மந்திர சாஸ்திரம் போன்ற ஹிந்து மத நூல்களில் இருக்கும் அற்புதங்களை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

இளைய தலைமுறை ஹிந்துக்கள் தங்கள் முதிர்ச்சியற்ற தர்க்கரீதியான பார்வையால் ஹிந்து மதத்தில் இருக்கும் அற்புதமான அம்சங்களை அறிந்து கொள்ள இயலுவதில்லை. அதன் காரணமாக அவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டு விடுகிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.

ஆனால், பிற மதத்தவரின் பேச்சு சாமர்த்தியத்தில் சிக்கி, அந்த மதங்களுக்கு மாறுகிறார்கள். இது மிகவும் வியப்பளிக்கிறது. இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். முதலாவது, தம் தாய் மதத்தின் மீது கௌரவமோ, அன்போ இல்லாமல் போவது. இரண்டாவது, சரியான புரிதலின்மை. இவற்றுள் முதல் காரணம் முக்கியமானது. நம்பிக்கை இருந்தால்தான் மரியாதையும், ஆதரவும் உண்டாகும். அப்போதுதான் நேர்மறை அணுகுமுறையோடு புரிதல் சாத்தியமாகும். 

பிற மதத்தவர் அத்தகைய நம்பிக்கையோடு தம் மதத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் மீது அனுதாபமும், நல்லெண்ணமும் கொண்ட ஹிந்துக்கள் தம் சொந்த மதத்தில் இருக்கும் நற்பண்புகளை அறிந்து கொள்வதற்குச் சிறிதும் முயற்சிப்பதில்லை. 

ஹிந்துக்களில் பலருக்கும் தம் மதத்தின் மீது மரியாதை இல்லாமையால் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். அத்தகைய கேள்விகளுக்கு மேதைகளும் மகநீயர்களும் விடை அளித்துள்ளார்கள். இன்றும் அளித்து வருகிறார்கள். ஆனால் கேள்வி கேட்பவர்கள்  பதில்களின் மேல் கவனம் செலுத்துவதில்லை.

பிற மதங்களைச் சார்ந்த மத அமைப்புகள் தங்களின் மத நூல்களைக் கற்பிக்கும்  பள்ளிகளை நடத்தி வருகிறார்கள். நமது கோவில்களில் கடந்த காலத்தில் அதே நடைமுறை இருந்து வந்தது. ஆனால், வருவாய் சார்ந்த அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில்  சிக்கிய கோவில்கள் ஹிந்து மதக் கல்வியை போதிப்பதில்லை.

அனைவரும் இல்லாவிட்டாலும் பல அர்ச்சகர்களுக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும்  ஹிந்துமதம் பற்றிய அறிவு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. வாழ்கைக்காக  அவற்றைப் பற்றிக் கொண்டு இருந்தாலும், அவற்றின் மீது அன்பும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் கொண்டிருக்கலாம் அல்லவா? அது கூட இல்லாமல் போவது வருந்தத்தக்கது.

கல்வி அமைப்புகளில், நம் தேசத்தின் கலாசார உன்னதம், வரலாறு, மாபெரும் ஹிந்து மத இலக்கியங்கள் போன்றவற்றைப் படிக்க அனுமதியில்லை. ‘மதசார்பின்மை’ என்ற ஒட்டடை படிந்ததால், அவற்றுக்கு இடமில்லாமல் போய்விட்டது. அதோடு கூட, நம் கலாசாரம் இழிவு படுத்தப்படுவதையும் காண முடிகிறது. 

நம்பிக்கையும், அன்பும் வலுவடையும் வரை ஹிந்து தர்மத்தை நிலை நிறுத்துவது கடினம். பெற்றோரும் அவற்றைப் புகட்டத் தவறி விடுகிறார்கள். காரணம், அவர்களுக்கும் ஹிந்து தர்மத்தின் மேல் அன்போ ஆதரவோ இல்லை. வம்ச பாரம்பரியமான பல சிறந்த பழக்க வழக்கங்களையும், மரபுகளையும், உயர்ந்த இலக்கியங்களின் படிப்பையும் நம்பிக்கை இல்லாமையாலும், பிறவற்றின் மேல் ஏற்பட்ட மோகத்தாலும் விட்டு விடுகிறார்கள். அதனால் அடுத்த தலைமுறைக்கு அவற்றைக் கடத்த முடியவில்லை.

அவ்வப்போது கஷ்டங்களைச் சந்திக்கும்போது மட்டும் ஜாதகம், வாஸ்து, பிரார்த்தனை  என்று அலைகிறார்களே தவிர, தர்மத்தின் உண்மையான தன்மையை அறிவதற்குச் சிறு முயற்சி கூடச் செய்வதில்லை. நம்பிக்கையோடு கூடிய அன்பே ‘சிரத்தை’ எனப்படுகிறது. அப்படிப்பட்ட சிரத்தை இருந்தால் ஹிந்து தர்மம், கற்பக மரம் போல் அனைத்தையும் அளிக்கும்.

(ருஷிபீடம் மாத இதழ் செப்டம்பர் 2025)


விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க செயல்படும் ‘சட்ட விரோத’ காவல்துறை!

kadeswara subramaniam hindu munnani - 2026

விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்க, திட்டமிட்ட செயலில் காவல்துறை ஈடுபடுவது சட்டவிரோதம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

தமிழகத்தில் கடந்த 42 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்து ஒற்றுமை, எழுச்சித் திருவிழாவாக இந்து முன்னணி நடத்தி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுவிழாவாக நடத்துவதன் நோக்கத்தை, வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் தெளிவாக வகுத்துக் கொடுத்துள்ளார்.

இந்துக்கள் சாதி, மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றுகூடி ஒருங்கிணைவதற்கும், இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை உணர்வதற்குமாக இது நடத்தப்படுகிறது.

கோவில் திருவிழாவில் சாதி-சமுதாய பிரச்சினை ஏற்படும் போது அரசு ஒதுங்கிக் கொள்வதை பார்க்கிறோம். ஆனால் எந்தப் பகுதியிலும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் அத்தகைய நிலை இல்லை. இதற்கு காரணம் இந்து முன்னணியின் வழிகாட்டுதல்கள்.

ஆனால் சமுதாய ஒற்றுமை தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் கசக்கிறது. பிடிப்பதில்லை. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதற்கு விநாயகர் சதுர்த்தி விழாவை கெடுப்பதற்கு கட்டுப்பாடு என்ற பெயரில் சதி நடக்கிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.

நேற்று சென்னையில் பல இடங்களில் தேவையற்ற கெடுபிடிகளை காவல்துறை ஏற்படுத்தி உள்ளது. சூளைமேடு பகுதியில் வைத்து இருந்த விநாயகரை நள்ளிரவில் காவல்துறையினர் துணையோடு திருடி சென்றது அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் ஒன்றியம், சுப்பிரமணிய பேரி கிராமத்தில் மக்கள் எதிர்ப்பை மீறி கூடங்குளம் காவல்துறை ஆய்வாளர் ரகுநாதன் விநாயகர் திருமேனியை எடுத்து சென்றுள்ளார்.

நெல்லை நாங்குநேரி பட்டர் புரம் ஶ்ரீ அல்லல் காத்த அய்யனார் கோவிலில் வைத்த விநாயகருக்கு வழிபாடு நடத்த விடாமல் காவல்துறை கெடுபிடி. கோவிலை மூடி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பட்டுக்கோட்டை பகுதியில் பதட்டம். முத்துப்பேட்டை, திண்டுக்கல் பகுதிகளில் காவல்துறை அடக்குமுறையை கையாண்டுள்ளது.

இவை தவிர காவல்துறை அதிகாரிகள் தனியார் விநாயகர் வைக்க ஊக்கப்படுத்தி, லஞ்சமாக கட்டிங் – கமிஷன் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு பகிரங்கமாக, உங்கள் பகுதியில் விநாயகர் எண்ணிக்கை குறைந்தால் வெகுமதி கிடைக்கும். அதுவே விநாயகர் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட ஒன்று கூடினாலும் உங்களுக்கு ஏதாவது காரணம் கூறி மெமோ அளிக்கப்படும் என பலரது முன்னிலையில் வாக்கிடாக்கி மூலம் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இத்தகைய செய்திகள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை சீர்குலைக்க காவல்துறையில் உள்ள சிலருக்கு உள்நோக்கம் இருப்பதாக தெரிய வருகிறது.

வேளாங்கண்ணி விழா ஊர்வலத்திற்கு, மிலாது நபி ஊர்வலத்திற்கு காவல்துறை எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. அவர்களும் காவல்துறை அனுமதி கேட்காமல் தான் பெரும்பாலும் நிகழ்ச்சி நடத்துகின்றனர். காவல்துறை, அரசு அதிகாரிகள் அடங்கி தான் போகிறார்கள்.

ஆனால் சாதாரண இந்துக்கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏன் இத்தனை வன்மம்? என்ற கேள்வி எழுகிறது. ஆட்சியாளர்களை மகிழ்விக்க காவல்துறை இத்தகைய செயலைச் செய்கிறதா? அல்லது ஆளும் கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அழுத்தமா? அல்லது காவல்துறையில் உள்ள சில கறுப்பாடுகளின் செயலா? எது எப்படி இருந்தாலும் இந்த செயல் ஒருதலைப்பட்சமானது, ஜனநாயக விரோதமானது.

இதுபோல் செயல்பட்ட அதிகாரிகள், ஆட்சியாளர்கள் எந்த நிலைக்கு ஆளானார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே தமிழக முதல்வர், காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கவனம் கொடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி திருவிழா சுமூகமாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிட அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளுக்கு எடுத்துரைத்து, அறிவுரை வழங்கிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

விநாயகரின் பன்னிரு அவதாரங்கள்

12 vinayakas - 2026

வருவாய் அருள்வாய் கணபதியே!

விநாயகரின் பன்னிரு அவதாரங்கள்

வக்கிரதுண்ட விநாயகர்: இவர் பிரளயகால முடிவில் தோன்றி அரி, அயன், ருத்திரன் முதலான மூவருக்கும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களை அருளினார்.

சிந்தாமணி விநாயகர்: கபில முனிவருடைய சிந்தாமணியைக் கவர்ந்து சென்ற கணராஜனை வென்று அதனை மீட்டருளினார்.

கஜானன விநாயகர்: பிரம்மனிடம் இருந்து தோன்றிய சிந்துரன், தேவர்களுக்கு தொல்லை தந்தபோது அவனை அழித்து தேவர்களை காப்பாற்றினார்.

விக்னராஜ விநாயகர்: காலரூபன் என்ற கொடியவனை அழித்து உலகினை காத்தருளினார்.

மயூரேச விநாயகர்: பிரம்மதேவனிடத்தில் இருந்த வேதங்களைக் கவர்ந்து சென்ற கமலாசுரனையும், தேவர்களையும் சிறையில் வைத்த சிந்தாசுரனையும் வென்றருளினார்.

பாலசந்திர விநாயகர்: எமனிடத்தில் உதித்த அனலாசுரனை சிறிய குழந்தை வடிவில் சென்று அந்த அசுரை விழுங்கி அருளினார்.

தூமகேது விநாயகர்: மாதவராசனுக்கும் அவர் மனைவி சுமுதைக்கும் தீங்கு செய்த தூமராசனைக் கொன்று அவர்களை காத்து அருளினார்.

கணேச விநாயகர்: தம்மிடத்தில் அருள்பெற்ற பெலி என்ற அசுரன் தேவர்களுக்குத் துன்பம் தந்து அலைக்கழித்த போது தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஐந்து முகத்தினராய் அவதரித்து அந்த அசுரனை அழித்தார்.

கணபதி விநாயகர்: கஜமுகாசுரனை வெல்வதற்காக சிவபெருமானால் படைக்கப் பெற்றவர். விஷ்ணுவின் சாபத்தை நீக்கியருளினார்.

மகோற்கட விநாயகர்: காசிராஜனுக்காக நராந்தகனையும், தேவாந்தகனையும் நாசம் செய்து காசிராஜனை காத்தருளினார்.

துண்டி விநாயகர்: துராசதனை வென்று திவோதாசன் மனம் களிக்கச் செய்தார்.

வல்லபை விநாயகர்: மரீசி முனிவருடைய புத்திரியாகிய வல்லபையினையும், விஷ்ணு புத்திரிகள் பன்னிருபேரையும் திருமணம் செய்து கொண்டு விஷ்ணுவுக்கு யோக ஞான தத்துவம் என்றும் கணேச கீதையை அருளினார்.

பிரிவினைவாதிக்கு சாமரம்; தேசியவாதி மீது வழக்கு! நாட்டை அழிக்கத் தூண்டும் திமுக., அரசின் அணுகுமுறை!

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்தியா மீது படையெடுப்பு என்று முஸ்லீம் பேசினால் வழக்கில்லை, அதை கண்டித்த தேசியவாதி மீது வழக்கு – திமுக அரசின் அணுகுமுறை இந்தியாவை அழிக்கத் தூண்டும் பயங்கரவாதம்-காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா? என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உஸ்தாத் பீர் முகமது சதக்கி என்பவர் இந்தியாவின் மீது படையெடுக்கும் முஸ்லிம்களை அல்லா நரகத்திற்கு அனுப்ப மாட்டார் என பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தமிழகத்தின் பொது அமைதியை குலைக்கும் வகையில் மதவெறியை தூண்டி பேசியுள்ளார். இவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சுன்னத் ஜமாத் ஸ்டுடென்ட் பெடரேஷன், சுன்னத் ஜமாத் பாலகர் சங்கம் போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்த தாவா யாத்திரையில் கலந்து கொண்டவர்.

இத்தகைய மதவெறியாக பேசி தேசத்தின் அழிவை தூண்டும் இவரைப் பற்றி முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல், தமிழக அரசும் காவல்துறையும் அலட்சியமாக இருக்கின்றன.

கடந்த காலங்களில் இதுபோன்ற வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுகள் தான் மதக் கலவரங்கள் ஏற்பட வழி வகுத்தன என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

நமது நாட்டிலேயே இருந்து கொண்டு, நமது நாட்டின் மீது படையெடுப்போம் என பேசிய கொடூர எண்ணம் கொண்ட உஸ்தாத்தை கைது செய்ய வேண்டும் என்ற பொறுப்பு உணர்வு காவல்துறைக்கு இல்லை. இத்தகைய வன்முறை, தேச விரோத பேச்சு, வெறுப்புணர்வை தூண்டுவோர் மீது காவல்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் கருத்தை தமிழக காவல்துறை மதிக்கவில்லை.

மாறாக உஸ்தாத்தின் பேச்சின் அபாயத்தை எடுத்து கூறி தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு எச்சரித்த வேத விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்தின் தலைவரும், சிறந்த தேசபக்தருமான ஊடகவியலாளர் பால கெளதமன் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

யாரும் தாமாக முன்வந்து புகார் கொடுக்காத நிலையில் சமூக வலைத்தள கண்காணிப்பு குழு உதவி ஆய்வாளர் மூலம் புகார் அளித்து அதை வழக்காக பதிவு செய்துள்ளது, ஒரு தலைபட்சமானது. தேசவிரோதிகளுக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டு வருவது வேதனையான உண்மை.

முஸ்லிம்களை இந்தியாவின் மீது போர் தொடுக்க சொல்லும் உஸ்தாத்தின் பேச்சு சமூக அமைதியை பாதிக்கவில்லையா? அது தேசத்திற்கு அச்சுறுத்தல் இல்லையா?

ஆனால் அவர் பேசிய கருத்து நமது தேசத்திற்கு எதிரான கருத்து என என பேசிய பாலகௌதமன் அவர்களின் கருத்து சமூக அமைதியை பாதிக்கும் எனக்கு காவல்துறை விளக்கம் அளிப்பது கேலிக்கூத்தானது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் முஸ்லிம் பயங்கரவாத பேச்சுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் உந்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு, பயங்கரவாத செயல்களுக்கு தயார் செய்யப்படுகின்றனர். கோவையில் நடந்த மனித வெடிகுண்டு சம்பவத்தை மறக்க வேண்டாம்.

இத்தகைய ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறியாமல் விட்டு விடுவதால் வரும் காலத்தில் பயங்கரவாத செயல்கள் ஏற்பட வாய்ப்பாக அமையும் என்பதை காவல்துறை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆளுங்கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தால் கூட அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளும் திமுக அரசு, பயங்கரவாத பேச்சுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

ஆன்மீக பேச்சாளர்களையும், நல்ல சிந்தனையாளர்களையும் அரசியல் விமர்சனம் செய்யும் ஊடகவியலாளர்களையும் திட்டமிட்டு சிறையில் அடைத்து விட்டு தேச விரோத கருத்துக்களை கூறுபவர் மீது ஆதரவளிப்பது திராவிட மாடலின் கொள்கையாக உள்ளது.

சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக பயங்கரவாதம் பேசுபவர்களை ஆதரிப்பதும், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் சீர்குலைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற செயலாகும்.

தமிழக அரசும் பயங்கரவாதத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை.

யாராவது அதை சுட்டிக்காட்டி பேசினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுப்பது சர்வாதிகார ஆட்சிக்கு சமமானதாகும்.

கடவுள் மறுப்பு பேச்சுக்களும், நமது ராணுவ வீரர்களுக்கு எதிரான பேச்சுகளும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அமைப்புகள் சார்பாக வந்த வண்ணம் உள்ளன. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க ஆளுங்கட்சி தயாராக இல்லை.

தேச நலன் விரும்பி யாராவது கருத்துக்களை வெளியிட்டால் அவர்கள்மீது பொய் வழக்கு போடுவது இந்த அரசின் வாடிக்கையாகி விட்டது.

ஸ்ரீ டிவியின் இயக்குனரான பாலகவுதமன் அவர்கள் சிறு வயது முதலே தெய்வபக்தியும் தேசபக்தியும் கொண்ட சிந்தனையாளர். சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் சிறந்த பேச்சாளர். அவர்மீது பொய் வழக்கு பதிவு செய்து காவல்துறை தேடி வருவது அபத்தத்திலும் அபத்தம்.

தேனி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகள் பயிற்சி எடுப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வருகிறது. இவர்களையெல்லாம் கண்காணிக்காமல் கைது செய்யாமல், பால கௌதமன் அவர்களை கைது செய்ய நினைப்பது, கருத்து சுதந்திரத்தின் ஆணிவேரை அறுக்கின்ற செயலாகும்.

வெறுப்பு பேச்சு பேசியவர்கள் மீது தாமாகவே முன்வந்து காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை, தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.

மத வெறுப்புணர்வுடன் பேசிய உஸ்தாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், பால கௌதமன் அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

விருதுநகரில் சோகம் ..

1000897521 - 2026

தாய்க்கு சிறுநீரக நோய், வாய் பேச முடியாத இரு மகள்களுடன் சேர்ந்து ரயில் முன் விழுந்து உயிரை மாய்த்த பரிதாபம் விருதுநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் தாய் ராஜவள்ளி, சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்ததாலும், வறுமை காரணமாகவும் வாய் பேச முடியாத தனது இரு மகள்களுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் ரயில்வே தண்டவாளத்தில் உடல்கள் துண்டு துண்டாக சிதறி கிடப்பதாக விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் விசாரித்ததில் இறந்தது தாய், இரு மகள்கள் என்பது தெரிந்தது.

விருதுநகர் பட்டம்புதுார் காலனியை சேர்ந்த ராஜவள்ளி 60, இவருக்கு உப்புச்சத்து அதிகரித்து சிறுநீரக குறைபாடு இருந்தது. கணவர் தர்மர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு மாரியம்மாள் 30, முத்துமாரி 27, முத்துப்பேச்சி 25 என மூன்று மகள்கள் உள்ளனர்.

ராஜவள்ளி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். மற்ற நால்வரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இதில் மாரியம்மாள், முத்துப்பேச்சி இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள்.

சிறுநீரக நோய் பாதிப்பு, வறுமை, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் நேற்று மாலை 5:30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தாய் ராஜவள்ளி, மகள்கள் மாரியம்மாள், முத்துபேச்சி என மூவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

போலீசார் சிதறிக்கிடந்த உடலின் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் முகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் துண்டானதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

கணவர் தர்மர், இளைய மகளான முத்துமாரி கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் இந்த சம்பவம் நடந்தது. தர்மர் உடல்களை அடையாளம் கண்டார். வறுமை காரணமாக மகள்களுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாமல் திணறி வந்ததால் இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிளக்ஸ் பேனர் வைத்து விஜய் ரசிகர் பலி…

1000897539 - 2026

விஜய் மாநாட்டிற்கு வரவேற்பு பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் காளீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல்குளத்தில் விஜய் மாநாட்டிற்கு வரவேற்பு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக கம்பி எடுத்து வந்த போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவன் காளீஸ்வரன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநாடு வியாழக்கிழமை மதுரையில் விமர்சையாக நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மாநாட்டை வரவேற்கும் விதமாக பேனர்கள் போஸ்டர்கள் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் காளீஸ்வரன் கிருஷ்ணன் கோவில் அருகே தனியார் கல்லூரியில் விஸ்காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் இவர் விஜய் ரசிகராக உள்ளார் மேலும் இனாம் கரிசல்குளம் பகுதியில் பிரதான சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வரவேற்கும் விதமாக பேனர்கள் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த கம்பியை எடுத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் காயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.

இறந்த கல்லூரி மாணவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா: கதலி குடியரசா?

donald trump - 2026

— ரவிக்குமார்

அண்மையில் நண்பர் ஒருவர் சிறிய காணொளியை அனுப்பி இருந்தார். அது அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை பற்றியது. அதில், ஒரு பெண் உறுப்பினர் நீண்ட வாழைப்பழத்தை கையில் எடுத்துக்காட்டி இதை அமெரிக்க மக்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுகிறோம். இதற்கு இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளீர்களா ? அப்படி என்றால் ஏன் அதிகரித்தீர்கள் ? , என்று காட்டமாக கேட்கிறார்.

U S going bananas என்று எழுதி ஒரு ஸ்மைலியையும் சேர்த்து பதில் அனுப்பினேன். கதலி/ வாழை குடியரசு – பலகீனமான பொருளாதாரம்’ அரசும் கொண்ட நாடாக அமெரிக்கா மாறி வருகிறது என்று அதற்கு பொருள்.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று , அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நாளொரு அதிரடி அறிவிப்புகள். இரண்டு , கருங்கல் ஜல்லி ஏற்றி போகும் லாரி மெர்சிடெஸ் பென்ஸ் கார் மீது மோதினால் ……பாக் இராணுவ தளபதியின் சவடால்.

பாக் சவடால்

இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டு அதில் வெற்றி பெற்ற நாட்டு தளபதிக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைப்பது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் உதை வாங்கி தோற்ற நாட்டு தளபதிக்கு பதவி உயர்வு என்றால் அது பாகிஸ்தானில் தான்.

பஹல்காம் பயங்கரவாத செயலுக்கு பதிலடியாக இந்தியா (ஆபரேஷன்) சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானை அடித்து நொறுக்கியது. பாகிஸ்தானில் அமெரிக்கா வைத்துள்ள அணு ஆயுத கிடங்கு வாசலை இந்திய ஏவுகணைகள் தாக்கி அழித்தன என்று நம்பத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்களும் செய்தித்தாள்களும் எழுதின. அதனால்தான் பாகிஸ்தானின் கையை முறுக்கி மோதலை நிறுத்த மண்டியிட வைத்தது அமெரிக்கா என்பது இந்திய செய்தியாளர்களின் உலகத்தில் உலா வரும் செய்தி.

ஆனால், தோற்று தாக்குதலை நிறுத்தும்படி கேட்டுக் கொண்ட பாகிஸ்தான் நாட்டு தளபதி அசீம் முனீர் தனக்குத்தானே பீல்ட் மார்ஷல் பட்டத்தையும் பாராட்டையும் சூட்டிக் கொண்டார். இது உலக நாடுகளிடையே நகைப்பை ஏற்படுத்தியது. அது பற்றி எல்லாம் பாகிஸ்தான் கவலைப்படவில்லை. அவ்வளவு சுரணைக் கிடையாது அந்த நாட்டு தலைவர்களுக்கு. (இந்தியாவிலும் அப்படி பாரத ரத்னா வாங்கியவர்கள் உண்டு)

முதல் காரணம்

தனக்குத்தானே பட்டத்தை சூட்டிங் கொண்ட முனீர் தன்னை மண்டியிட வைத்த மகானுபாவர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நகைச்சுவை. அதற்கும் அடுத்த கட்டம் ஒன்று உண்டென்றால் அது வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லியின் பேச்சு. அந்தப் பெண்மணி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென பாகிஸ்தான் தளபதி அசீம் முனீர் சொன்னதை பாராட்டி அவரை விருந்துக்கு அழைத்தோம் , என்று முனீர் (தோல்விக்கு பின்) முதல் முறை அமெரிக்காவுக்கு அழைத்தக் காரணம் சொன்னார்.

அதைவிட உச்சபட்ச கோமாளித்தனம், போர் நிறுத்தத்திற்கு காரணம் அமெரிக்கா அல்ல என்று கூறும் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய் சொல்கிறார் என்று சொல்ல முடியுமா, என்ற ராகுலின் பேச்சு. இவரது தந்தை ராஜீவ் காந்தி என்ன செய்தார் என்பதை மறந்துவிட்டார். ஒரு விருந்து. அதில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அமெரிக்க அதிபருடன் கையில் கோப்பையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாகிஸ்தானின் அதிபராக இருந்த ஜியா உல் ஹக் வருகிறார். அமெரிக்க அதிபரிடம் ஒருவரை அறிமுகப்படுத்தி, இவர் தான் ஆசாதி காஷ்மீரின் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர்) பிரதமர், என்கிறார். ராஜீவ் காந்தி எப்படி பதில் வினையாற்றுவது என்று தெரியாமல் திகைத்தார் அந்த இடத்தை விட்டு நழுவிச் சென்றார். இதை அவரே ஒரு நேர்காணலில், பாகிஸ்தான் அதிபரின் பேச்சைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று புரியாமல் திகைத்தேன் . அங்கிருந்து விலகிச் சென்றேன், என்று சொல்லி உள்ளார்.

பென்ஸ் காரும் ஜல்லி லாரியும்

அடுத்த சில வாரங்களில் முனீர் மீண்டும் அமெரிக்கா சென்றார். இந்த முறை சென்ற போது அமெரிக்க ராணுவத்தின் மத்திய தலைமை தளபதியான மைக்கேல் குரில்லா பணி ஓய்வு பாராட்டு நிகழ்ச்சியில் ( டெக்ஸாஸில் நடந்தது) கலந்து கொண்டார். அதில் தான் முனீர் , எங்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. ஏவுகணைகளுக்கும் பஞ்சமில்லை, நிறைய இருக்கின்றன. எங்கள் நாட்டின் மீது யாராவது கை வைத்தால் எங்களோடு சேர்ந்து பாதி உலகத்தையும் அழித்து விடுவோம், என்று கொக்கரித்தார்.

அப்போதுதான், மெர்சிடஸ் பென்ஸ் கார் போல இந்தியா உள்ளது. அது குவாரிகளில் கருங்கல் ஏற்றி செல்லும் லாரி (பாகிஸ்தான்) மீது மோதினால் யாருக்கு சேதம் விளையும் என்பது எல்லோருக்கும் தெரியும், என்று நக்கலாக பேசினார்.

அந்த விருந்தில் அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேல் ராணுவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருப்பார்கள். இந்தியா சார்பாக கலந்து கொண்டதாக இதுவரை செய்தி இல்லை. இஸ்ரேலுக்கும் இந்த பேச்சு அச்சுறுத்தலை தந்திருக்கும் .

அமெரிக்காவின் அதிகார வர்க்கத்தை சேர்ந்த எவரும் இதை கண்டிக்கவில்லை. அவர்களது அமைதி காதை பிளப்பதாக உள்ளது. அவரை கண்டித்தால் பாகிஸ்தான் மண்ணை அமெரிக்கா பயன்படுத்த விடாமல் செய்துவிட்டால், ஆசியாவில் தான் கால் வைப்பதற்கு இடம் இல்லாமல் போய்விடுமோ என்ற தயக்கம். அவரை ஆதரித்தாலோ அவரது அணு ஆயுத அச்சுறுத்தலை சரியென ஏற்றுக் கொள்வதாகவும் இந்தியாவுடனான நட்புக்கு எதிரானதாகவும் கருதப்படும்.

ஆ(த)னால், அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் தளபதி மைக்கேல் ரூபின் பாகிஸ்தான் தளபதி முனீரை வன்மையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் ஒரு பொறுக்கி நாடு. முனீர் கோட்டு போட்ட ஒசாமா பின் லேடன். அவரது விசாவை உடனடியாக தடை செய்ய வேண்டும். பாகிஸ்தானின் நேட்டோவில் இல்லாத நட்பு நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு, அதன் மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும், என்று மைக்கேல் ரூபின் என்று சொல்லி உள்ளார்.

அமெரிக்க மண்ணிலிருந்து பாகிஸ்தான் அணு ஆயுத அச்சுறுத்தலை விடுவதும் , அதை கண்டிக்காமல் அமெரிக்கா அமைதி காப்பதும் அதன் புவியரசியல் யுத்தி என்று சிலர் கருதலாம். வாழைக் குடியரசு என்றும் சொல்லலாம்.

இரண்டாவது காரணம்

டிரம்பின் அதிரடி அறிவிப்புகள். முதலில் 25 சதவீதம். பிறகு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் மேலும் 25 சதவீதம் . டிரம்ப் ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமாக வரி விதித்தது நட்பு நாடான இந்தியா மீதுதான். எதிரியான சீனா மீதல்ல.

நெருங்கிய நண்பர் என்று மோடி சொன்னாரே , அடுத்த முறை டிரம்ப் சர்க்கார் என்று மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தாரே , இப்போ ??? , என்று மோடி எதிர்ப்பாளர்கள் நக்கல் அடிக்கிறார்கள். அவர்களது கேலி நியாயமற்றது என்று கூறி விட முடியாது. ஏனெனில் அதெல்லாம் பொதுவெளியில் எல்லோரும் பார்க்கும்படி நடந்தது.

டிரம்பின் முந்தைய ஆட்சியில்

ஆனால் , முதல் முறை டிரம்ப ஆட்சியின் போது நமக்கு கசப்பான அனுபவங்கள்தான் கிடைத்தன, என்கிறார் பங்கஜ் சரண். இவர் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் ரஷ்யாவில் இந்திய தூதராகவும் பணியாற்றியவர் .

ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்க டேவிட்சன் பைக்குகளுக்கு (இருசக்கர வாகனங்கள்) இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். போர்ன்பான் விஸ்கிக்கு இறக்குமதி வரி குறைக்க வேண்டும் என்று இந்தியாவின் கையை முறுக்கி வரியை குறைத்தார். தீநுண்மீ (கொரோனா) காலத்தில் வேறு நாட்டுக்கு நாம் அனுப்பிய தடுப்பூசியை நடுவழியில் மறித்து கடத்திக் கொண்டு போனார். அமெரிக்காவுக்கு தடுப்பூசியை தராவிட்டால்…. என்று மிரட்டினார். அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா. அது வரி விதிப்பில் அரசன் ( Tax King ) என்று சாடினார். இதெல்லாம் தெரிந்தும் ஊடகங்கள் நெருங்கிய நண்பர் என்றாயே , தேர்தல் பிரச்சாரம் செய்தாயே , என்றெல்லாம் வெற்று அரசியல் பேசுகின்றன.

டிரம்ப் சொல்வது என்ன?

ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்காதே. ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் வாங்காதே. இந்திய விவசாய துறையை அமெரிக்காவுக்கு திறந்து விடு. பால் வளத் துறையில் அமெரிக்காவை அனுமதி, என்கிறார்.

ரஷ்ய எண்ணெய் விவகாரம்

ரஷ்யா – உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யா குறைந்த விலைக்கு எண்ணையை விற்றது. ஆனால் அதன் மீது வர்த்தக தடை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரஷ்யா பெட்ரோலிய எண்ணெய்க்கு விலையும் நிர்ணயமும் செய்யப்பட்டது. உலக நாடுகள் நிர்ணயித்த விலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெயை வாங்கியது.

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெயை வாங்கியது. யாராவது அதை வாங்கித்தானே ஆக வேண்டும். இல்லையென்றால் விலை ஏறி விடும். எனவே அவர்கள் வாங்கி சுத்திகரித்து மற்றவர்களுக்கு விற்றார்கள். இதில் தவறு எதுவும் இல்லை. தடை திட்டத்தை அப்படித்தான் வடிவமைத்தோம். அதன்படியே அவர்கள் நிறைவேற்றித் தந்தார்கள், என்று 2004 மே மாதத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கை பற்றிய கருத்தரங்கில் எரிக் கார்சிட்டி கூறியுள்ளார். இவர் ஜோ பைடன் காலத்தில் இந்தியாவில் தூதராக இருந்தவர்.

இதைத்தான் நமது அயலுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறினார் . உலக நாடுகளின் அனுமதியோடுதான் நாங்கள் வாங்கினோம். அது மட்டுமல்ல, நாங்கள் ஒரு மாதத்தில் இறக்குமதி செய்ததை நீங்கள் ஒரு வாரத்தில் இறக்குமதி செய்துள்ளீர்கள். இதுவும் எங்களுக்கு தெரியும் . அப்படி இருக்கையில் இந்தியா எண்ணெயை இறக்குமதி செய்ததன் மூலம் ரஷ்யா – உக்ரைன் போரை தொடர்ந்து நடத்துகிறது என்று குற்றம் சாட்டுவது எப்படி சரி என்று கேட்டு உலக நாடுகளை திணறடித்தார் ஜெய்சங்கர். அது மட்டுமல்ல, ரஷ்யாவிடம் இருந்து யுரேனியம், புளோடோனியம், விவசாய உரங்கள், நிக்கல், இரும்பு ஆகியவற்றை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மற்ற நாடுகளும் இறக்குமதி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், என்றார். நம்மூர் எதிர்க்கட்சிகளும் இவரது பதிலால் திகைப்படைந்தன.

அமெரிக்காவின் வலு எது ?

உலக யுத்த காலத்தில் இருந்தே போர் விமானங்கள், ஆயுதங்கள், பயணியர் விமானங்கள், உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றில் அமெரிக்கர்கள் வல்லவர்களாக உள்ளார்கள். இரண்டாம் முறை டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு மோடியுடன் நடந்த சந்திப்பின்போது எப் 35 போர் விமானங்களை தருவதாக அறிவித்தார். இந்தியா அதை கேட்காமலே தருவதாக அறிவித்தார்.

அந்த அதிநவீன விமானங்களை இங்கிலாந்து வாங்கி உள்ளது. அதுதான் மூன்று மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பழுதாகி நின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அதே எப் 35 ரக விமானம் ஜப்பானில் பழுதாகி நின்றது. டிரம்பின் அதிரடி அறிவிப்புகளுக்கு பதிலடியாக இந்தியா விலை உயர்ந்த அந்த போர் விமானத்தை வாங்க மாட்டோம் என்று அறிவித்து விட்டது.

நாம் ஏற்கனவே அமெரிக்க போயிங் விமான நிறுவனத்திடம் 450 விமானங்களை வாங்க ஆர்டர் போட்டதை மறந்து விட்டாரா டிரம்ப் , என்று கேட்கிறார் மோகன்தாஸ் பை. இவர் ஒரு பொருளாதார வல்லுனர் . பதிலடியாக நாம் அதை ரத்து செய்தால் என்னவாகும் என்று கேள்வி எழாமல் இல்லை.

விவசாயம்

அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய விவசாயத்துறை திறந்து விட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். மன்மோகன் சிங் ஆட்சியின் போது மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் அனுமதிக்கப்பட்டது. பருத்தி அனுமதிக்கப்பட்டது . விளைவாக மகாராஷ்டிரத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தன.

மான்சாண்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதித்ததின் விளைவுகளை பார்த்த பிறகு (ஆர் எஸ் எஸ் சார்புடைய விவசாய சங்கமான) பாரதிய கிசான் சங்கம் அதை கடுமையாக எதிர்க்கிறது. காந்தியவாதியான டாக்டர் வந்தனா சிவா பொதுவெளியில் எதிர்ப்பை கூர்மைப்படுத்தி வருகிறார்.

பால் வளம்

அதேபோல் பால்வளத் துறையில் அமெரிக்கா நுழைய முயல்கிறது. அவர்களது மாடுகளுக்கு மாமிச கழிவுகளை உணவாக கொடுக்கிறார்கள். பால் அதிகரிக்க ஊக்க மருந்து கொடுக்கிறார்கள் . இதெல்லாம் அந்த நாட்டின் மாடுகளின் தன்மையையும் பாலின் தன்மையையும் மாற்றியுள்ளன.

நம் நாட்டில் பசு தெய்வமாக வணங்கப்படுகிறது. பசுவின் பால் தாய் பாலுக்கு நிகராக கருதப்படுகிறது பசுவினம் (எருமை, எருது) தூய சைவம். பால் சைவ உணவு.

வெண்மை புரட்சி மூலம் பால் வளம் நம் நாட்டில் பெருக காரணம் குரியன் வர்க்கீஸ். அவர்தான் காங்கிரஸ் ஆட்சியில், குஜராத்தில் கூட்டுறவு பால் உற்பத்தி மூலம் மாநில பொருளாதரத்தையே மாற்றிக் காட்டியவர். அதை பின்பற்றி நம்மூர் ஆவின் முதல் எல்லா மாநிலங்களிலும் கூட்டுறவு மூலம் பால் வளமும், கால்நடை வளர்ப்பும், பால் பொருள்களும் அதிகரித்தன. இந்தியர்களின் ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் பெரிய மாற்றத்தை அது ஏற்படுத்தியது.

இந்தியாவில் பெரும் மாற்றங்கள் வந்துள்ளன . இருந்தாலும், இன்றும் பெருவாரியான மக்கள் விவசாயம், அது சார்ந்த தொழில்களில்தான் ஈடுபட்டு உள்ளனர். பிரதமர் மோடி அண்மையில், விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பதில் நான் உறுதியாக உள்ளேன். இதற்காக பெரும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது எனக்கு தெரியும். விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்க எந்த விலையையும் கொடுக்கத் தயார், என்று பொதுக்கூட்டத்தில் சூளுரைத்துள்ளார். இது ட்ரம்புக்கு கொடுக்கப்பட்ட பதிலாக தெரிகிறது.

வாஜ்பாய் ஆட்சியில்

பிரதமர் வாஜ்பாயின் அனுமதியோடு, தோஹாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில், முரசொலி மாறன் அமெரிக்காவை கடுமையாக எதிர்த்து பேசினார் . அப்போது இந்தியாவை சீனா ஆதரித்தது. அதேபோல் இப்போது பிரதமர் மோடி ஆட்சியில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறது.

ரஷ்யா – உக்ரைன் போர் பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் புத்தினும் (நாளை) பேச உள்ளார்கள் . அது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார். பிறகு தன் எக்ஸ் தளத்தில், நான் இந்திய பிரதமருடன் நீண்ட நேரம் பேசினேன். இரண்டு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு பற்றியும் ஒட்டுமொத்த ராஜாங்க ரீதியான செயல்பாடுகள் பற்றியும் பேசினோம். பிரதமர் மோடி கனிவான, ஆறுதலான பேச்சின் மூலம் எங்கள் நாட்டு மக்களுக்கு ஆதரவளித்தார். அமைதியை திரும்புவதற்கு நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அமைதிப் பேச்சில் தனது நிலையை உக்ரைன் தான் மேற்கொள்ள வேண்டும். வேறு வகையாக நடந்தால் அது பலன் அளிக்காது என்று அவர் சொன்னார் , என்று குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் பிரச்னையும் ஆசையும்

ஆகஸ்ட் 15 தேதி ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் பற்றி அலாஸ்காவில் அமெரிக்க அதிபரும் ரஷ்ய அதிபரும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் . பேச்சுவார்த்தைக்கு முன்பு, ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தது இந்தியா தான் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். (கட்டுரை பதிவேறும்போது சந்திப்பு சுமுகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருந்தது என்றும் அந்த இரு தலைவர்களின் அடுத்த சந்திப்பு ரஷ்யாவில் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்ததாக ஜெலன்ஸ்கி அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. )

ட்ரம்புக்கு சில பிரச்சனைகளும் ஆசைகளும் உள்ளன. அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வேண்டும். உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

பற்றாக்குறையை குறைக்க இறக்குமதி பொருள்களுக்கு அதிகமான வரி விதிப்பு என்கிறார். அதன் மூலம் அமெரிக்காவில் விலைவாசி ஏறிவிடும். உள்ளூர்காரர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க இந்தியா உட்பட பல நாட்டினரை வெளியேற வேண்டும் என்கிறார். ஆனால் அமெரிக்காவில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறையில் சுமார் 50 சதவீதம் பேர் இந்தியர்கள். எனவே , என்ன செய்வது என்று தெரியாமல் சலுகைகளும் பிரம்படியும் என்று மாறி மாறி பேசுகிறார். அவர் கஷ்டங்களை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை.

அதேபோல், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போல் தனக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்ற ஆசை . அது அவரை அலைகழிக்கிறது.

இனி …..

மிகப்பெரிய ஜனநாயக நாடாக சொல்லப்படும் அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் தளபதி அசீம் முனீரின் பயங்கரவாத பேச்சை கண்டிக்க முடியாத நிலை , பொருளாதார சரிவு மற்றும் உலக விவகாரங்களில் அமெரிக்காவுக்கு மதிப்பு குறைந்து வருவது ஆகியவற்றை பார்க்கும் போது அமெரிக்கா கதலிக் குடியரசாக மாறி வருவதாக கருதலாம்.

உலகில் கம்யூனிசம் விழுந்துவிட்டது. அதன் மறுபக்கமாக இருக்கும் முதலாளித்துவமும் வீழ்வது தவிர்க்க முடியாதது. அந்த வீழ்ச்சியை டிரம்ப் துரிதப்படுத்தி வருகிறார் என்று பொருளாதார நோக்கர்கள் கருதுகிறார்கள் . போகப் போக அது உறுதியாக தெரிய வரும்.

மலையாள புத்தாண்டு, மாத பூஜை சபரிமலையில் கோலாகலம்..

1000890602 - 2026

மலையாள புத்தாண்டு சிம்மம் முதல்நாள் மற்றும் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை சனிக்கிழமை மாலை திறந்து புதிய திதந்திரி பொறுப்பேற்ற இன்று ஞாயிற்றுக்கிழமை மலையாள புத்தாண்டு வழிபாடுகள் சன்னிதானத்தில் கோலாகலமாக துவங்கியது.பல்லாயினக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே இருமுடி செலுத்தி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.இவர்களுக்கு புதிய தந்திரி பிரசாதம் வழங்கினார்.

மலையாள புத்தாண்டு மற்றும் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரரு பொறுப்பேற்றார்.

சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்பட்டது.

1000890601 - 2026

இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறந்ததும் கணபதி ஹோமம் அபிஷேகத்தை தொடர்ந்து நெய்யபிஷேகம் தொடங்ககயது.பின்னர் உஷ பூஜை, மதியம் கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடக்கும்.

21- ம் தேதி வரை எல்லா நாட்களிலும் காலை 11:00 மணி வரை நெய்யபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். 21 இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்படும். இன்று முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக மகேஷ் மோகனரரு நேற்று பொறுப்பேற்றார். தாழமன் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த கண்டரரு ராஜீவரரு மற்றும் மகேஷ் மோகனரரு சுழற்சி முறையில் சபரிமலையில் பூஜைகளுக்கு தலைமை வகிக்கின்றனர்.

ஆவணி ஒன்றாம் தேதி கேரளாவில் வருடப்பிறப்பாக உள்ளதால் இன்று காலையில் ஐயப்பனை வழிபட நேற்று மாலையே பக்தர்கள் கூட்டம் பம்பை சபரிமலையில் நிரம்பி வழிந்தது.

1000890603 - 2026

இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் இன்று தந்திரி மகேஷ் மோகனர் தலைமையில் லட்சார்ச்சனை நடைபெறும். வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும். சபரிமலையில் பலத்த மழை பெய்வதால் பக்தர்கள் பம்பையில் குளிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மலையாள புத்தாண்டு சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு..

கேரளாவில் பிரசித்தி பெற்ற மலையாள புத்தாண்டு சிம்மம் ஆவணி மாத பூஜைக்காக கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.ஞாயிற்றுக்கிழமை மலையாள புத்தாண்டு வழிபாடுகள் பூஜைகள் அபிஷேகம் ஆராதனை விமர்சையாக நடைபெறும்.சபரிமலை புதிய தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்கிறார்.இவர் ஒரு ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதான பூஜை வழிபாடுகள் நடத்துவார்.

sabarimala aiyappa concluding pooja - 2026

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது.இது போல் மலையாள புத்தாண்டு கேரளாவில் ஆவணி சிம்மம் முதல்நாள் அதி விமர்சையாக கொண்டாடப்படும்.அதன்படி மலையாள புத்தாண்டு மற்றும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு இன்று பொறுப்பேற்கிறார். அவரது முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். பக்தர்களுக்கு பஷ்ப பிரசாதம் வழங்கப்படும்.தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடை திறப்பையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 21 -ந் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். மேலும் 21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை ஞாயிற்றுக்கிழமை ஆவணி முதல் நாள் மலையாளிகள் மலையாள புத்தாண்டாக கொண்டாடுவார்கள் இதற்காக சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஏராளமான மலையாளிகள் இருமுடி கட்டி சபரிமலைக்கு அதிகளவில் வந்து ஐயப்பனுக்கு பல்வேறு முயற்சிகள் செலுத்தி பூஜை வழிபாடுகள் நடத்தி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்