Home Blog Page 5726

அஸ்வின்- இந்தியா- வின்

அஸ்வின் அபாரம்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி; தொடரையும் வென்றது!
இந்தியா: 631 (கோலி 235, விஜய் 136, ஜெயந்த் 104)
இங்கிலாந்து: முதல் இன்னிங்க்ஸ் 400 (ஜென்னிங்க்ஸ் 112, பட்லர் 76, மொயின் 50; அஸ்வின் 6-112, ஜடேஜா 4-109)
இரண்டாவது இன்னிங்க்ஸ் 195 (ரூட் 77, பெர்ச்டோ 51, அஸ்வின் 6-55)
இந்தியா ஒரு இன்னிங்ஸ் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி

கும்மிடிப்பூண்டி அருகே கரை கடக்கிறது வர்தா புயல்: சென்னையில் பலத்த மழை

சென்னை:

வர்தா புயல் பழவேற்காடு – கும்மிடிப்பூண்டி இடையே இன்று கரையை கடக்கிறது. சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 7-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் அது புயலாக உருவானது. ‘வர்தா’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.

இந்நிலையில் வர்தா புயல் சென்னைக்கு கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது சென்னையை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னையை புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் புயல் பழவேற்காடு – கும்மிடிப்பூண்டி இடையே இன்று பிற்பகல் கரையைக் கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 67 கி.மீ. வேகத்தில் காற்று வீசத் தொடங்கிவிட்டது. புயல் கரையைக் கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் பழவேற்காடு சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு பலத்த காற்று வீசி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பலத்த காற்று வீசுவதால் மின்கம்பங்கள் மரங்கள் சாய்ந்து உள்ளன.

சென்னை நகருக்குள்ளும் பலத்த காற்றுவீசியது. காலை நேரம் வீசிய காற்றில் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. சாலையில் இலைகள்,சருகுகள், மரங்களில் குச்சிகள் பரவலாக விழுந்து கிடந்தன.

பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இன்று பெரும்பாலான அலுவலகங்களுக்கு பணியாளர்கள் செல்லாததால், பேருந்து, புறநகர் ரயில்களில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன. பெரும்பாலான கடைகள், வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலா: தஞ்சம் அடைந்த தம்பிதுரை

அதிமுகவை வழிநடத்தத் தேவையான தலைமைப் பண்புகள் நிறைந்தவர் சசிகலா என்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு சசிகலாதான் என்றும் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

“மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்பதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாரக மந்திரம்.

சமூகநீதி காக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வை உறுதி செய்யவும், சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படவும், இந்திய குடியரசில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் தன்னையே அர்ப்பணித்து தன்னை நேசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று அதிமுகவை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். ஆவார். அவருக்குப் பின்னர் கட்சியை வழிநடத்த அவரால் அடையாளம் காட்டப்பட்டவர் ஜெயலலிதா.

இப்போது ஜெயலலிதா நம்மிடையே இல்லாத நிலையில், அதிமுகவை வழிநடத்தும் தகுதியும், ஆற்றலும், அனுபவமும் ஒருங்கே அமையப் பெற்றவர் வி.கே. சசிகலா மட்டுமே.

அகில இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அறியப்பட்ட இயக்கமாக ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டிருக்கும் அதிமுகவையும், அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் வழிநடத்தி காப்பாற்ற காலம் நமக்களித்திருக்கும் கொடையாக சசிகலா திகழ்கிறார்.

கட்சியை நடத்துவதிலும், ஆட்சியை நடத்துவதிலும் ஜெயலலிதாவுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உறுதுணையாக இருந்தவர்.

பல்வேறு சோதனைகளிலும், சரித்திர நிகழ்வுகளையும் ஜெயலலிதாவோடு தோளோடு தோள் நின்று எதிர்கொண்டவர். அதன்படி, கட்சியை வழிநடத்த தேவையான தலைமைப் பண்புகள் நிறைந்தவர் சசிக்கலா மட்டுமே.

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்களின் வழியில் சாதி, மத வேறுபாடுகளை கடந்து தொண்டர்களை அரவணைத்து பாதுகாத்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆற்றல் நிறைந்தவர் சசிகலா ஒருவர் மட்டுமே.

இவரே ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பதை கட்சித் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவர்.

எனவே, கட்சித் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று, கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலா ஏற்று அதிமுகவையும், அதன் ஒன்றரை கோடி தொண்டர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.

அரசியலுக்கு நான் ரெடி : ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா

சென்னை
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர நான் தயாராக இருக்கிறேன் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுளார்.

இதுகுறித்து அவர் ஆங்கில செய்தி சேனலான ‘நியூஸ்எக்ஸ்’க்கு அளித்த சிறப்பு பேட்டி: –

சசிகலாவை அதிமுக., தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்துவது துரதிஷ்டவசமானது. தமிழக மக்கள் நிச்சயம் இதனை ஏற்க மாட்டார்கள். நான் பிறந்தது போயஸ் இல்லத்தில்தான். ஆனால் பிற்காலத்தில் எங்கள் குடும்பம் சசிகலாவால் வெளியே விரட்டப்பட்டது.

எனது அத்தை அவரது ரத்த உறவுகளிடமிருந்து பிரித்து தனிமைப் படுத்தப்பட்டார். எனது அத்தை சிறையில் அடைக்கப்படக் காரணமே அவரைச் சுற்றி இருந்த மோசமான நபர்கள்தான். எனது அத்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்டபோது அவருக்கு உரிய பராமரிப்பு கொடுக்கப்படவில்லை. உரிய நேரத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல் வெளியே தெரிவிக்கப்படவில்லை.

சரியான நேரத்தில் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனது அத்தை மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது என்னை அனுமதிக்கவில்லை. அதிமுக.,வைப் பொறுத்தளவில் ஜெயலலிதாவுக்குப் பிறகு யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்கப்படவில்லை.

ஜெயலலிதா தனது சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வைத்துள்ளதாக வரும் தகவல் பற்றியும் எனக்கு எதுவுமே தெரியாது. மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயாராக உள்ளேன்.

பால் போட்ட பிரசன்னா; சுழற்றி அடித்த சினேகா!

ஸ்டூடியோ  9 நிறுவனத்தின் மூலம் ஆர்.கே சுரேஷுடன் இணைந்து   கிட்டத்தட்ட 18 படங்களை விநியோகம் செய்தவர். நாசர் அலி. தற்போது    Naro Media  என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். 
 
 அ.நாசர் அலி (CEO) மற்றும் Dr.ரொஃபினா சுபாஷ் (COO) இருவரும் இணைந்து HIV யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பட்டுக்காகவும் நிதி திரட்டும் வகையில் “Just Cricket ” எனும் கிரிக்கெட் போட்டியை நடத்தினர். இந்த போட்டியில் சென்னையை சார்ந்த 32 அணிகள் கலந்துகொண்டனர்.
 
 இதனால் வரும் நிதியானது HIV யினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்கும். மருத்துவ செலவுக்கும். வழங்கப்படுகிறது. 
 
நவம்பர்  27ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று தொடங்கிய இந்த போட்டியானது சென்ற வாரம் டிசம்பர்  4ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது.. இதன் இறுதிப் போட்டியானது  இன்று டிசம்பர்  11ம் தேதி நந்தனம் YMCA மைதானத்தில் நடை பெற்றது. .
 
இதில் திரைப்படத் தயாரிப்பாளர்  R.K .சுரேஷ் மற்றும் இயக்குனர்கள் V.Z.துரை, மீரா கதிரவன் போன்றோரும் நடிகர்கள் ஷாம்,பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், போஸ் வெங்கட், ரமணா, அசோக், சந்தோஷ், ப்ரஜன், கோலிசோடா கிஷோர், மாஸ்டர் மகேந்திரன், தீனா மற்றும் நடிகைகள் சினேகா, சங்கீதா க்ரிஷ், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்  தியா  ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர் . மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின்   “சென்னை 600028” படக்குழுவும், பழைய வண்ணாரப்பேட்டை படக்குழுவும், விழித்திரு படக்குழுவும் வருகைதந்து போட்டியை உற்சாகப்படுத்தினார்..
 
இந்நிகழ்வில் சினேகா பால் போட பிரசன்னா பேட்டிங் செய்து வந்திருந்த நூற்றுக்கும்  மேற்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். ஷாம் குழந்தைகள்  பாடிய பாடலுக்கு கண்கலங்கி ஆறுதல் கூறினார். இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவரது சென்னை 600028 படக்குழுவும்  வெற்றிபெற்ற   எப் சி சி அணியோடு கிரிக்கெட்   விளையாடியாடினார்.   அனைத்து பிரபலங்களும் இணைந்து ரூபாய் 25,000/- க்கான  முதல்    பரிசை வழங்கினர். இரண்டாம் பரிசை  சீ ஹார்ஸ் அணியும் தட்டிச் சென்றது.  அவர்களுக்கு 15,000/- ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 
 
நடிகர் பிரசன்னா குழந்தைகளிடையே பேசும்போது  இங்கே யாருடைய வாழ்வும் நிரந்தரம் அல்ல. இருக்கும்வரை சந்தோசமாக வாழ்வோம்..நீங்கள்  யாரும் தனிப்பட்டவர்கள் அல்ல. நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்றபோது குழந்தைகள் அனைவரும் இளகினர். மொத்தத்தில் இந்நிகழ்வு  நட்சத்திரங்களுக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும்   ஒரு உருக்கமான நிகழ்வாக அமைந்தது. 
 
இந்த தொடரின் முதல் பரிசை  HOTEL MILLATH நிறுவனமும் இதர பரிசுகளை திரு. அரவிந்த், வேலு மிலிட்டரி ஹோட்டல், அம்மா நானா, WHITE CLIFS ஆகியோரும் வழங்கி வீரர்களை கவுரவப்படுத்தினர் . 
 
மேலும் “7up”  நிறுவனம் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் “Revive” பானம் வழங்கி உற்சாகப்படுத்தினார்.  நந்தனம்  YMCA (பவிலியன்) மைதானத்தில் நிகழ்வு நடைபெற்றது. 

அஇஅதிமுக., சட்ட விதிப்படி சசிகலா பொதுச் செயலாளராக முடியாது!

அஇஅதிமுக வின் அடுத்த பொதுச் செயலாளராக சசிகலாவைக் கொண்டு வருவதற்கான பிரம்மப் பிரயத்தனத்தில் தமிழ் நாட்டின் பல ஊடகங்களும் இன்று ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. பசி நோக்காமல், கண் துஞ்சாமல் இந்த தியாக வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இத்தகைய ஊடகங்கள் அடிப்படையில் ஒரு விஷயத்தை கவனிக்க மறுத்தும், தவறியும் வருகின்றன. அதுதான் அஇஅதிமுக வின் சட்ட திட்ட விதிகள். இதன்படி சசிகலா தற்போதைக்கு அஇஅதிமுக வின் பொதுச் செயலாளராக வர முடியாது என்பதுதான் யதார்த்தம்.

எம்ஜிஆரால் துவக்கப் பட்ட அஇஅதிமுக வின் சட்டதிட்ட விதிகள் 1.11.1976 ல் பெரியளவில், விரிவாக உருவாக்கப்பட்டது. அதற்கு கடைசியாக திருத்தங்கள் அதாவது amendment மேற்கொள்ளப் பட்டது 5.2.2007-ல். AIADMK Rules and Regulations 2007 … இதில் Section 30 (5) என்ன சொல்லுகிறது என்றால், Those who want to contest for the post of office bearers in the Organization should have been members of the party for 5 years without any break. The General Secretary is vested with the power to relax this. அதாவது அஇஅதிமுக வின் சட்ட திட்ட விதிகள் பிரிவு 30, உப பிரிவு 5 ன் படி கட்சியின் நிருவாகிகள் பதவிக்கு வர போட்டியிடுபவர்கள் கட்சியின் உறுப்பினர்களாக தொடர்ந்து ஐந்தாண்டுகள் இருந்திருக்க வேண்டும். இதற்கு விலக்கு அளிக்கும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு.

ADMK bylaw couldn’t allow Sasikala to become as Gen Sec?
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 11 பேர் டிசம்பர் 19, 2011 ல் ஜெயலலிதாவால் அஇஅதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். அப்போது சசிகலா அஇஅதிமுக வின் நிர்வாக குழு அதாவது executive committee உறுப்பினராகவும் இருந்தார். 2012 மார்ச் 28-ல் சசிகலா மன்னிப்புக் கடிதம் எழுதினார். அது அன்றைய தினமே ஊடகங்களில் வெளி வந்தது. ஏப்ரல் 1 ம் தேதி அதிகாரபூர்வமாக மீண்டும் ஜெயலலிதாவுடன் அவரது போயஸ் தோட்ட வீட்டில் இணைந்தார். ஆனால் எப்போது மீண்டும் சசிகலா அஇஅதிமுக வில் உறுப்பினராக ஆனார் என்பது பற்றி எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் வரவில்லை. நிச்சயமாக ஏப்ரல் 1, 2012 க்குப் பிறகுதான், அவர் அஇஅதிமுக வில் உறுப்பினராகச் சேர்ந்திருக்க முடியும். அப்படியென்றால் 2017 ஏப்ரலுக்கு முன்பாக சசிகலா பொதுச் செயலாளராக முடியாது.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவருமே ஒவ்வோர் முறையும் போட்டியின்றித்தான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர். இதில் தேர்வு முறை என்பது, அதாவது electoral college என்பது கிளைச் செயலாளர், பொருளாளர் மற்றும் தலைவரிலிருந்து, எம்எல்ஏ க்கள் எம் பிக்கள் வரையில் வாக்களித்துதான் பொதுச் செயளாரைத் தேர்ந்தெடுக்க முடியும். இதில் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஒருவர் கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் கொண்டு வந்ததே, திடீரென்று கட்சிக்குள் புற்றீசல் போல ஊடுருபுபவர்களால் கட்சி சிதைக்கப்படாமல் இருக்கத்தான். மேலும் நிர்வாகி எனும்போது அதில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியும்தான் அடக்கம் என்றே பொருள் கொள்ளப் படுகிறது.

இதற்கு விதிவிலக்கு அளிக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் கொடுக்கப் பட்டிருக்கிறது. அதே போன்று தேர்தல்களில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னமான இரட்டை இலையை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு சிபாரிசு செய்யும் அதிகாரமும் பொதுச் செயலாளருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் சமீபத்திய 4 இடைத் தேர்தல்களில் ஜெவின் கைநாட்டுடன் வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆகவே முக்கியமான இந்த அதிகாரங்களை ஜெ தன் வசமே வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இன்று அஇஅதிமுக வின் பொதுச் செயலாளர் காலமாகி விட்டார். அப்படியென்றால் எப்படி விதிவிலக்கு கொடுக்கப்பட முடியும்? இதனையும் மீறி வேறு ஒரு நடைமுறையை கடைபிடிக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். அதாவது கட்சியின் அவைத் தலைவர் தலைமையில் பொதுக் குழுவைக் கூட்டி அஇஅதிமுக வின் சட்ட, திட்ட விதி 30, உப விதி 5 க்கு திருத்தம் கொண்டு வந்து அதன்படி சசிகலாவை பொதுச் செயலாளராக ஆக்கலாம். ஆனால் இது அவ்வளவு சுலபமல்ல. காரணம் இந்த விதி தெளிவாகவே இந்த திருத்தத்தை மேற்கொள்ளும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குத்தான் இருக்கிறது என்றே சொல்லுகிறது.

ADMK bylaw couldn’t allow Sasikala to become as Gen Sec?
வேறு வழிகளில் ஏதாவது தில்லாலங்கடி வேலைகள் செய்து சசிகலா வை பொதுச் செயலாளராக ஆக்க முடியாதா?

‘முடியும். அதனை செய்யக் கூடியவர்கள்தான் தற்போது சசிகலா வை கட்சியில் ஆதரித்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் அப்படிச் செய்தால் கண்டிப்பாக விவகாரம் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். காரணம் அவ்வளவு சுலபத்தில் ஒரு கட்சியின் சட்ட திட்டங்களில் சொல்லப் பட்டிருப்பவற்றை காற்றில் பறக்க விட்டு விட்டு ஒரு தனி நபருக்காக காரியங்களை நிகழ்த்த முடியாது. தேர்தல் கமிஷனும் இதில் தலையிடுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன,’ என்கிறார் அஇஅதிமுக வில் எம்ஜிஆர் காலத்திலிருந்து கட்சியிலிருந்து வரும் முன்னாள் எம்எல்ஏ ஒருவர்.

சரி. யார் இந்த விவகாரத்தை நீதிமன்றங்களுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் எடுத்துச் செல்லுவது? ‘பொது மக்கள் செல்ல முடியாது. அஇஅதிமுக வின் அடிப்படை உறுப்பினராக உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஏற்கனவே தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ள சிலர், அந்தமான், டில்லி, பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள அஇஅதிமுக உறுப்பினர்கள் சிலர் இதுபற்றி சிந்தித்து வருவதாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் பணியிலும், அவர்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கும் பணியிலும் தற்போது ஓரங்கட்டப் பட்டிருக்கும், ‘வானளாவிய அதிகாரத்திலிருந்த’ அந்த முக்கியப் புள்ளி ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது’ என்கிறார் அந்த முன்னாள் எம்எல்ஏ.

சசிகலா உள்ளிட்டவர்களை கட்சியிலிருந்து நீக்கிய 11 நாட்களில், டிசம்பர் 30, 2011 ல் சென்னையை அடுத்த வானகரத்தில் அஇஅதிமுக பொதுக் குழு நடந்தது. அதில் பேசிய அப்போதய அமைச்சர் கே.பி. முனுசாமி, ‘அம்மா பிடித்து வைத்தால் பிள்ளையார், வீசியெறிந்தால் சாணி’ என்று பேசினார். ஆனால் அந்தப் பொதுக் குழுவில் ஜெயலலிதா பேசியதுதான் முக்கியமானது …
“தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியை சேர்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம். நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால் நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களை பழி வாங்கி விடுவோம். ஆகவே எங்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லுபவர்களும் உண்டு. அப்படி தலைமை மீது சந்தேகம் வருகின்ற அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல அத்தகையவர்களின் பேச்சை கேட்டு நம்பி அதன்படி செயல்படுகின்ற கட்சி காரர்களுக்கும் மன்னிப்பே கிடையாது!”
– இதுதான் ஜெயலலிதாவின் டிசம்பர் 30, 2011 பேச்சு …
2011 டிசம்பரில் கட்சியிலிருந்து தூக்கியெறியப் பட்ட சசிகலா 2016 டிசம்பரில் அஇஅதிமுக வை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார். காலம் தான் எத்தகைய வியக்கத்தக்க கோலங்களைப் போடுகிறது!

கட்டுரை: ஆர்.மணி

கீழப்பாவூரில் மகாகவி பிறந்தநாள்விழா

0

கீழப்பாவூரில் மகாகவி பாரதியார் பிறந்தநாள்விழா
கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றம் சார்பில் மகாகவி பாரதியாரின் 135 வது பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது
விழாவிற்கு கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்றத் தலைவர் தீப்பொறி அப்பாதுரை தலைமை தாங்கினார் ,சுரேஷ்முருகன் ,மதியழகன் ,இராமராஜா ,விவேகானந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் , பாரதியார் மன்ற செயலாளர் செல்லப்பா வரவேற்றார் ,பொன் கணேசன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் ,பாக்கியராஜ,ஆறுமுகச்சாமி ,சுப்பிரமணியன்,ஆறுமுகப்பாண்டி,அருள்செல்வன்உள்பட பலர் கலந்துகொண்டனர் ,முடிவில் சிங்கக்குட்டி என்கிற குமரேசன் நன்றி கூறினார்

நெல்லை ; ஆலங்குளத்தில் அதிமுகவினர் மவுன அஞ்சலி

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பிரபாகரன் எம்.பி தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் ஆலங்குளம் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் சென்றனர் இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம் ,சட்டமன்ற உறுப்பினர்கள் முருகையா பாண்டியன்,செல்வமோகன் தாஸ் பாண்டியன் ,மாவட்ட துணைச்செயலாளர்கள் செவல் முத்துசாமி பார்வதி பாக்கியம் ,முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணப் பெருமாள் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சக்திவேல்முருகன்,மாணிக்கராஜ் அம்மா பேரவை இ.நடராஜன்,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ,பெரிய பெருமாள் ,எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் சண்முகவேலு ,மாவட்ட அம்மா பேரவை அவைத் தலைவர் ஏ.கே.சீனிவாசன்,பாசறை மாவட்ட செயலாளர் மூ.சேர்மபாண்டியன் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை ,மாணவரணி முருகேசன் ,விவசாய அணி முருகேசன் , சிறுபான்மை பிரிவு கேபிரியல் ராஜன் ,ஓட்டுனர் அணி சுப்பையா,தொழில்நுட்ப பிரிவு சாந்தசீலன் ,பாசறை இணைச் செயலாளர் பாரதி,கலாபத்மபாலா ,இம்மாகுலேட் ,யோகராணி ,ஒன்றிய செயலாளர்கள் நடராஜன்,சங்கரபாண்டியன் ,என்.ஹெச்.எம் பாண்டியன் ,அருள்வேல்ராஜ் ,ராம்குமார் ,கருத்தபாண்டி,ஜெயராமன் ,இராம சுப்பிரமணியன் ,அந்தோணி அமலராஜன்,செல்வராஜ் ,நகர செயலாளர் முத்துக்குமார் ,அறிவழகன் ,எம்.ஜி.ஆர்.மன்றம் நாராயணன் பரமசிவ ஐயப்பன் ,எஸ்.எஸ்.என் சொக்கலிங்கம் ,விவசாய அணி லாசர் ,பேரூர் கழக செயலளர்கள் சுப்பிரமணியன் ,அசோக் பாண்டியன் ,செந்தூர் பாண்டியன்,பாஸ்கர் ,மயில்வேலன்,பண்டாரம்,சங்கர் ,செல்வராஜ் ,ஜெய்னாலுதீன்,உள்ளிட்ட திராள அதிமுகவினர் மவுன அஞ்சலி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்

தல அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்

வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்து விஜய்சேதுபதி நடித்த சேதுபதி திரைப்படம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சேதுபதி வெற்றியை தொடர்ந்து ஷான்சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படம் “: எனக்கு வாய்த்த அடிமைகள்”. புதுமுக இயக்குனர் மகேந்திரன் ராஜமணி  இயக்குனாரக அறிமுகம் ஆகும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.

ப்ரணிதா, கருணாகரன், காளிவெங்கட், ”நான்கடவுள்”ராஜேந்திரன், தம்பிராமையா உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடிக்கும்  இப்படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அஜீத் பட சூட்டிங் என்று தகவல் பறவியதால், தல ரசிகர்கள் திரண்டுவிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது அஜீத் படமல்ல. ஆனால் ஷேர் ஆட்டோ ஓட்டும் காளிவெங்கட் தீவிர அஜீத் ரசிகராக நடிக்கிறார் என்று படக்குழுவினரால் விளக்கம் அளிக்கப்பட்டது. விஷயமறிந்த தல ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

ஏன் புறக்கணித்தார்கள் தெரியவில்லை: பழைய வண்ணாரப்பேட்டை பிரஜின் வருத்தம்

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிரஜினைப் பாராட்டத் தவற வில்லை.

பார்த்தசினிமா ரசிகர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் என பல தரப்பிலிருந்து வரும் விமர்சன,பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் பிரஜின்.

ஆனால் இந்த ஒரு தகுதிக்கு அவர் கொடுத்த விலை அதிகம். அனுபவித்த வலிகளும் அதிகம்.

பிரஜின் பிரபல தொலைக் காட்சிகளில் நடிகராக வலம் வந்தவர். அலுவலக வேலைபோல போய் கைநிறைய சம்பளம் பெற்று வாழ்ந்தவர். ஆனாலும் அங்கேயே தங்கி விடவில்லை .பறவைக்கு இறக்கை இருப்பது பறப்பதற்கே தவிர நடப்பதற்கல்ல என்பதைப் புரிந்து கொண்டார். தன் இலக்கு சின்னத்திரை அல்ல பெரியதிரை என்று உணர்ந்து கொண்டார். திரைவாய்ப்புகள் தேடத் தொடங்கினார்.இன்று ஒருபடத்தின் முழு நாயகனாக  நிற்கிறார்…!
இனி அவரே பேசட்டும்.

“என் முதல் படம் ‘சாபு த்ரீ’ அந்தப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. அடுத்து ‘தீ குளிக்கும் பச்சைமரம்’ அது மது அம்பாட் இயக்கிய படம். 2012ல் வெளியானது மார்ச்சுவரி,பிணம் என்று வித்தியாசமாக நகரும் கதை. அந்தப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது.. ஆனந்தவிகடன் 43 மார்க் கொடுத்தது.படத்துக்குப் பெரிய விளம்பரம்  இல்லை என்றாலும் விருதுகள் நிறைய வந்தன.அது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. சீனுராமசாமி, சமுத்திரக்கனி, அறிவழகன் போன்ற இயக்குநர்கள் என்னைப் பாராட்டிய படம்.

 நான் நடித்த படங்களுக்கு சரியான விளம்பரம் இல்லாததால் பெரிதாகப் போகவில்லை.இதைச் சம்பந்தப்பட்டவர்களிடம். சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களை ஈகோ தடுக்கும் என்ன செய்வது?.

ஆனால் இதற்கெல்லாம் முன்னாடி 2010ல் ஒப்பந்தமான படம்தான் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. . படம் பல்வேறு தடைகளால் தாமதமாகிக் கொண்டே வந்தது. இப்போது வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஓரே ஆண்டில் முடியும் என்று நினைத்தோம். காலம் நீண்டுவிட்டது.”

 ‘பழைய வண்ணாரப்பேட்டை’. பட அனுபவம் பற்றி என்ன சொல்கிறார்?

 ” அதற்காக  5 ஆண்டுகள் விட்டு,  விட்டு படப்பிடிப்பு நடந்தது.ஆனாலும்  48 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப் பட்ட படம். அது 24 மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் ஒரே தோற்றம், ஒரே உடைதான் வர வேண்டும் . அதனால் என் எடை 73 கிலோவை 16 ஆண்டுகளாகப் பராமரித்தேன் தாடியுடன் இருந்ததால் வேறு படங்களிலும் நடிக்க முடியாது.இப்படி பல சிரமங்களை எதிர் கொண்டு முடித்த படம். ‘பழைய வண்ணாரப்பேட்டை’

படத்தைப் பார்த்தவர்கள் படம்  நன்றாக இருந்தாலும் வாங்கத் தயங்கினார்கள். அதனால் தயாரிப்பாளர் எம். பிரகாஷ் சிரமப்பட்டார். எங்களை நம்பி அனாமிகா பிக்கசர்ஸ் வாங்கினார்கள். அது இளவரசன், விஜய் ஆதிராஜ் ஆகியோரின் விநியோக நிறுவனம்.நம்பி வெளியிட்டார்கள். சென்னை நகரில்  சத்யம் சினிமாஸ் வெளியிட்டார்கள். அது எங்களுக்கு நம்பிக்கையாகவும் பெருமையாகவும் இருந்தது.” என்கிறார்.

  ‘பழைய வண்ணாரப்பேட்டை’ பட ஆடியோ விழாவில் விழாவுக்கு அழைத்த யாரும் வரவில்லையே என்று கண்ணீர் சிந்தி வருத்தப்பட்டீர்களே..?

”அது வருத்தமான ஒன்றுதான். நாங்கள் விழாவுக்கு எல்லாரையும் முறைப்படி சம்மதம் பெற்று விட்டுத்தான்அழைப்பிதழில் பெயர் போட்டோம். அப்படியே முறைப்படி அழைத்தோம். ஆனால் யாரும் வராதது பெரிய வருத்தம் .அந்த அதிர்ச்சியிலிருந்து மீளப்பலநாள் ஆனது. ஏன் அப்படிப் புறக்கணித்தார்கள்  என்று தெரியவில்லை. இதே விழா பெரிய நடிகர் சம்பந்தப் பட்டது என்றால் வராமல் இருப்பார்களா?  5 ஆண்டுகள் போராடி ஒரு படம் எடுத்தோம். அப்படிப்பட்ட படத்தின் விழாவுக்கு வராமல் ஏன் அப்படிப் புறக்கணித்தார்கள்  என்று தெரியவில்லை ? ”என்று  ஆதங்கத்துடன் கூறியவர்,.

”எல்லாவற்றுக்கும் ஒன்றுதான் பதிலாக இருக்கும்.நாம் வளர வேண்டும். நம் வெற்றி ஒன்றுதான் பதிலாக இருக்கும். அதை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறேன். உழைத்துக்கொண்டிருக்கிறேன் . ” என்கிறார்  உறுதியுடன்.

எப்போதாவது சின்னத்திரையிலேயே இருந்து பாதுகாப்பாக பயணம் செய்திருக்கலாமோ என்று நினைத்ததுண்டா?

”  2003-ல் டிவிக்குப் போன நான் நான்கு ஆண்டுகள்  மட்டுமே அங்கே இருந்தேன். 2007-ல் வெளியே வந்து விட்டேன்.நான் டிவி யிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன.இடையில் மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்திவிராஜ், லால் படங்களும் அதில் அடங்கும்.

இடைப்பட்ட காலத்தில் போராட்டங்கள் தான். ஆனாலும் போராடியே நமக்கான இடத்தை அடைவது என்பதில் உறுதியாக இருந்தேன் அதனால் மனதை திசைதிரும்ப விடவில்லை சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வருவதில் சாதகமும் உண்டு. பாதகமும் உண்டு.

டிவி மூலம் எல்லாருக்கும் தெரிந்திருப்பதாலேயே வாய்ப்பு தரத்தயங்குவார்கள். என்னை எல்லாருக்கும் தெரியும் .ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள். இது ஒரு மாதிரியான சிக்கல் .சிலர் இவருக்கு என்ன வியாபாரமதிப்பு இருக்கிறது? என்பார்கள். இதற்கிடையே நான் 2007 ல் திருமணம் செய்து கொண்டே:ன் என் மனைவி ஒரு சின்னத்திரை நடிகை. அவர் என்னையும் என் இலக்கையும் புரிந்து கொண்டிருப்பதால் ஆதரவு தந்து பக்கபலமாக இருந்தார். இது சாதாரண விஷயமல்ல.” என்கிறார்.

இப்போது நடித்து வரும் படங்கள் பற்றி?

”  ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ படம் வெளிவரத் தயாராக இருக்கிறது. இதை  தயானந்தன் இயக்கியிருக்கிறார். இவர் சீனு ராமசாமியின் உதவி இயக்குநர்.
இன்னொரு படம் ‘மிரண்டவன்’ .அதை இயக்கியிருப்பவர் முரளி கிருஷ்ணா. இப்படமும் வெளிவரத்தயாராக இருக்கிறது.

தாமிரா இயக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் 2 வது நாயகனாக நடிக்கிறேன். சமுத்திரக்கனி சார்தான் நாயகன். அவர்தான் என்னை டிவியில் அறிமுகப் படுத்தியவர்.அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி.பேசும் போதே நம்பிக்கை தருபவர் அவர்.
அடுத்து இன்னொரு புதிய படம்  பேச்சுவார்த்தையில் இருக்கிறது, நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். ”என்று வருங்கால வாய்ப்புகள் பற்றிப் பட்டியலிடுகிறார்.