Home Blog Page 5731

முதல்வர் ஜெயலலிதாவுக்கு…மாரடைப்பு!:அப்பல்லோ டாக்டர்கள் தீவிர சிகிச்சை

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று மாலை, 6:00 மணி அளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடல்நிலை தொடர்பாக, கடுமையான வதந்திகள் பரவின. உடன், தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர். போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனர், ஜார்ஜ், கூடுதல் கமிஷனர்கள் சங்கர், ஸ்ரீதர், இணை கமிஷனர் மனோகரன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளும் மருத்துவமனைக்கு வந்தனர்.

இதற்கிடையில், அப்பல்லோ மருத்துவமனைக்கு, புதிதாக சிகிச்சை பெற வந்த யாரையும், மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால், மருத்துவமனை வளாகத்தில் ஒரு பரபரப்பான சூழல் நிலவியது. அது, வதந்திகளுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, இரவு, 9:25 மணி அளவில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக, அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில், முதல்வருக்கு மாலையில் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர்கள் அவரின் உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முதல்வருக்கு, ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்படலாம், எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.இதுதொடர்பாக, அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை சிகிச்சை அளித்து விட்டனர். இனி, கடவுளை வேண்டி கொள்வது தான் ஒரே வழி’ என, தெரிவித்தார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருகையைத் தொடர்ந்து, தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும், இரவு மும்பையிலிருந்து அவசரமாக சென்னை புறப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். இதற்கிடையில், இரவு, 9:30 மணிக்கு மேல், அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை வெளிவந்த பிறகு, அ.தி.மு.க., தொண்டர்கள் திரளாக மருத்துவமனை பகுதியை சூழ்ந்தனர்.

அதனால், 10:30 மணிக்கு மேல், பதற்றமான சூழல் நிலவியது; மருத்துவமனை வாயில் மூடப்பட்டது. தொண்டர்கள், போலீஸ் மோதலில் லேசான தடியடி நடத்தப்பட்டது. இரவு முழுவதும் பரபரப்பு

தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின், துாத்துக்குடியில், நாளை நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். அதை ரத்து செய்து விட்டு, நேற்றிரவு அவசரமாக சென்னை திரும்பினார்

தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன; போலீசார் அனைவரும், இரவே பணிக்கு வரவழைக்கப்பட்டனர்

அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் உள்ளிட்ட பெண் ஊழியர்கள், உடனடியாக வீடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள், பின்வாசல் வழியாக, வெளியேறினர்.

சென்னையில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனுக்கு, நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் பங்கேற்காமல், அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து விட்டார்.

மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த கட்சியினர், இரவு, 10:00 மணியளவில், பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்

மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை தவிர, வேறு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

காங்கிரஸ் துணை தலைவர், ராகுலுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசரிடம், முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்திற்கு, முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

‘கடைகளை இன்று திறக்க வேண்டாம்’ என, வணிகர் சங்கங்களுக்கு, போலீசார் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நேற்று இரவே, சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன.

முதல்வர் ஜெ., உடல்நிலை குறித்து, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரித்தார்.

சட்டம் – ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க, மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

தி.மு.க., தலைவர்களின் வீடுகளுக்கு நேற்று இரவு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு… தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் மூடல்.. பஸ்கள் ஓடவில்லை

சென்னை, டிச. 4:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை அடுத்து பேருந்துகள் ஓடவில்லை.

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு நுரையீரல் தொற்று சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் பூரண குணம் அடைந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
முதல்வர் சீக்கிரம் வீடு திரும்பி விடுவார் என்று அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் இன்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்ட வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ளது.

பேருந்துகள் நிறுத்தம்

இந்த செய்தி மெல்ல தமிழகம் முழுவதும் பரவி ஒருவித பதற்றம் உருவாகியுள்ளது.

இன்று ஞாயிற்றுக் கிழமை இன்று என்பதால் குறைவான பேருந்துகளே சென்னையில் இயக்கப்பட்டு வரும் நிலையில் பேருந்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. வெளியூர் செல்லும் பேருந்துகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் பங்குகள் மூடல்
ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல் பரவியுள்ளதால் தலைநகரான சென்னையில் கூடுதல் பதற்றம் உருவாகியுள்ளது. இங்கு செயல்பட்டுவந்த அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டன.

இதே போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.

கடைகளுக்கு பூட்டு

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் குறைவான கடைகளே சென்னையில் திறக்கப்பட்டிருந்தது. அந்த கடைகளும் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்த தகவலால் விரைவாக மூடப்பட்டன. சின்ன சின்ன கடைகள், ஒருசில டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், தியாகராயர் நகரில் 11 மணி வரை திறந்திருக்கும் அனைத்து துணிக்கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன

பயணிகள் தயக்கம்
ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் தாங்களாகவே வெளியூர் செல்வதை தவிர்த்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறைக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் இன்று இரவு புறப்பட்டு நாளை காலை சென்னைக்கு திரும்ப ஆயத்தமான நிலையில், முதல்வரின் உடல் நிலை குறித்த தகவலால் பயணத்தை நிறுத்தியுள்ளனர்.

செய்தி அப்டேட்ஸ்:
சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது
கோபாலபுரத்தில் போலீஸ் குவிப்பு என தகவல்
தொண்டர்கள் மற்றும் காவல்துறை இடையே மோதல்.பேரி கார்டை உடைத்து மருத்துவமனை உள்ளே போக முயற்சி
சென்னை நகர் முழுவதும் கடைகள் அடைக்கபட்டது!
சி.ஆர்.பி.எப் 30 கம்பெனி சென்னை வந்துள்ளனர்
மதுரை பட்டாலியன் கேம்பிலும், ஏஆர் கேம்பிலும் தயாராக இருக்குமாறு உத்தரவு
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சென்னை அப்பலோவுக்கு விரைகிறார்கள்
அனைத்து அமைச்சர்களும் அப்பலோவுக்கு அழைப்பு. ..
காவல்துறை உஷார் நிலை!

சென்னை மாநகர் முழுவதும் பாதுக்காப்பை பலப்படுத்தியது மாநகர காவல் துறை

மும்பையில் இருந்து சென்னைக்கு விரைந்து வந்த ஆளுநர், முதலில் ராஜ்பவன் சென்றார். பின்னர் அப்பலோ வந்த அவர், 10 நிமிடத்தில் அப்பலோவில் இருந்து ஆளுநர் மாளிகை திரும்பினார். ஆளுநர் மாளிகையில் இருந்து செய்திக் குறிப்பு வெளியிடலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. அடுத்த உத்தரவு வரும் வரை, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவு இட்டுள்ளார்.

லண்டன் மருத்துவர் ஆலோசனைப்படி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை

முதல்வர் ஜெ.,வுக்கு அப்போலோவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜெயலலிதா குணமடைய அரசியல்கட்சி தலைவர்கள், பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என அப்போலோ மருத்துவமனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனைப்படி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நடாவை அடுத்து உருவாகிறது புதிய புயல் சின்னம்

சென்னை:
இந்தோனேஷியாவின் சுமத்ரா மற்றும் தெற்கு அந்தமான் இடையே புதிய காற்றழுத்த தாழ்வு சுழற்சி உருவாகி உள்ளது. இது அடுத்த, 24 மணி நேரத்தில் தாழ்வு நிலையாக மாறி, 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடா புயல் வலுவிழந்த நிலையில், நேற்று சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை மேலும் இரு தினங்களுக்குப் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா கூறியதாவது:

நேற்று உள்தமிழகத்தில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில் விருதுநகரில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. மதுரை விமான நிலையம், சென்னை விமான நிலையத்தில்,7 செ.மீ., மழை பெய்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா மற்றும் தெற்கு அந்தமான் தீவுகள் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு சுழற்சி உருவாகி உள்ளது. இது அடுத்த, 24 மணி நேரத்தில்குறைந்த அழுத்த தாழ்வு நிலையாக மாறி, 48 மணி நேரத்தில் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – என்று ஸ்டெல்லா கூறினார்.

‘பறவைச் சித்தர்’ ஸ்ரீசக்கரை அம்மா

sakkaraiammabஓம் நமசிவாய’ – அடியார்களின் கோஷம் நம் காதுகளின் வழியே நெஞ்சைத் தொடுகிறது. சென்னையின் கடற்கரைப் பயணத்தில், திருவான்மியூர் சாலையில் செல்லும் எவரையும் உள்ளிழுத்து அருள் வழங்கும் அற்புத ஆலயம் மருந்தீசர் ஆலயம். உள்ளத்தில் புகுந்த ஓம்கார ஒலியால் ஆலயத்தின் உள்ளே புகுந்த நமக்கு மருந்தீசரின் தரிசனம் அற்புதமாகக் கிட்டுகிறது. அடியார்களின் தேவாரத் திருப்பாடல்கள் உள்ளத்தை ஈரமாக்குகின்றன. அந்த உணர்வுடனே திருக்கோயிலை விட்டு வெளியே வருகிறோம். தெப்பக்குளத்தை ஒட்டி இடப்புறம் திரும்பி, நேராக கலாக்ஷேத்ரா சாலை நோக்கி பயணிக்கிறோம். சிறிய சாலை. இடையில் ஒரு சாலை குறுக்கிடுகிறது. அதையும் தாண்டி நேரே செல்ல முயலும்போது, இடப்புறம் ‘சக்கரை அம்மா ஆலயம்’ என சேதி தெரிவித்து அழைக்கிறது, அறிவிப்புப் பலகை ஒன்று.

பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணியபடியே உள்ளே நுழைகிறோம். மரம் செடிகள் என இயற்கை அழகு கூடிய அருமையான ஆலயத்தைப் பார்த்து அப்படியே சிலையாக நிற்கிறோம்.

மிகச் சிறிய ஆலயம்தான் எனினும் அவ்வளவு அழகு; அத்தனை நேர்த்தி!

வாசலில் வாட்ச்மேன் பாலகிருஷ்ணன் இன்முகத்துடன் வரவேற்கிறார். கோயிலுக்குள் நுழைகிறோம். சிறிய சந்நிதி. கருவறையின் உள்ளே பளீரெனக் காட்சி தருகிறது சக்கரை அம்மாவின் கல் விக்கிரகம்! உள்ளே ஆழ்ந்த அமைதி. இந்த அமைதி தரும் அதிர்வலைகள், நம்மை இந்த உலகத்தையே மறக்கச் செய்கிறது; தியான நிலைக்குத் தூண்டுகிறது. விஸ்வநாத குருக்கள் சக்கரை அம்மாவுக்கு தீபாராதனை காட்டினார். நமக்கு விபூதி குங்குமம் கொடுத்து விட்டு, ”சார்… இந்த விபூதி மிகவும் மகத்துவம் வாய்ந்தது. எத்தனை பேரின் துன்பத்தை நீக்கியிருக்கிறது தெரியுமா?” என்று சொல்லி, ஓர் அற்புதத்தை சொல்லத் தொடங்குகிறார்.

p18b - 2026”ஒரு முறை யார் மூலமாவோ கேள்விப்பட்டு ஒருத்தங்க வந்தாங்க. அவங்களோட பொண்ணு பதினாறு வயசாகியும் ருதுவாகலைன்னு சொல்லி, சக்கரை அம்மா சந்நிதில அழுதாங்க. விபூதியக் கொடுத்து, கொஞ்சமா சாப்பிடக் கொடுங்கன்னு சொல்லி அனுப்பினேன். ரொம்ப பயபக்தி யோட வாங்கிட்டுப் போனவங்க, ஊருக்குப் போய் மகளுக்கு விபூதியக் கொடுத்திருக்காங்க. அடுத்த ஒரே வாரத்துல அந்தப் பெண் புஷ்பவதியாயிட்டான்னு சந்தோஷமா தகவல் சொன்னாங்க… இப்படி எத்தனையோ அற்புதங்கள்…”

குருக்கள் சொல்ல, கேட்டவாறே சந்நிதியை வலம் வருகிறோம். ஆலயத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பாலகிருஷ்ணன் என்பவர், கோயிலைப் பற்றி விவரித்தபடியே உடன் வருகிறார். இடப்புறம் சிறிய அரங்கம். இங்கு உபந்யாசங்கள், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் முதலானவை அடிக்கடி நடைபெறுமாம். திருவான்மியூர்வாசிகளுக்கு நல்ல ஆன்மிக விருந்துதான்! அரங்கின் பின்புறம் டாக்டர் நஞ்சுண்டராவின் மார்பளவு சிலை. ஆலயத்தின் பின்புறம் அழகான கூடம். சிறுவர் சிறுமியருக்கு ஆன்மிக-நீதிக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார் ஒருவர். விசாரித்தோம். பெயர் சுமனா சுரேஷ். இவர்தான் டாக்டர் நஞ்சுண்டராவ் பிரைவேட் ரிலீஜியஸ் டிரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர். இந்த சமாதிக் கோயிலை நிர்வகிப்பது இந்த டிரஸ்ட்தானாம். இங்கே ஒவ்வொரு வியாழக்கிழமையும் நஞ்சுண்டராவின் பேரன் டாக்டர் ஆர். நஞ்சுண்டராவ் ஏழைகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து வழங்கி வருகிறார்.

p20a - 2026வலப்புறம் மிக அழகிய தியான மண்டபம். பச்சைப் பசேல் என விரிந்திருக்கும் புல்வெளி. மனதுக்கு அமைதி தரும் செயற்கை நீரூற்று. நடுவே தியான நிலையில் புத்தர் சிலை. தண்ணீர், அருவிபோல் விழுகிறது. எதிரே எண்கோண மண்டபத்தில், கண்ணாடிப் பேழை ஒன்றில் சக்கரை அம்மாவின் சிலை! தரை படு சுத்தம். அமர்ந்து தியானம் செய்யத் தோன்றுகிறது. கண்மூடி சில நிமிடங்கள் தியானம் செய்கிறோம். மனம் லேசாகிறது. ஏதோ ஓர் அமைதி உள்புகுந்ததை உணர்கிறோம். எழுந்து வெளியே வருகிறோம். ‘டாக்டர் நஞ்சுண்டராவ் ரிலீஜியஸ் டிரஸ்ட்’ எனும் வரிகள் நம் கண்களில் படுகிறது.

யார் இந்த நஞ்சுண்டராவ்?

மகாகவி பாரதியைப் படிக்கும்போது, நஞ்சுண்டராவும் அங்கங்கே வருவார். புகழ்பெற்ற ஆங்கிலமுறை மருத்துவர்; சிறந்த தேசபக்தர். ஆங்கில அரசிடம் இருந்து பாரதியை பாதுகாத்தவர்; சுவாமி விவேகானந்தரின் சீடர். பாரதி ஆசிரியராக இருந்த ‘பாலபாரதம்’ இதழின் நிறுவனர். இவரே சக்கரை அம்மாவின் பெருமையை உணர்ந்து, அவருக்கு சீடராகி, அம்மாவின் புகழைப் பரப்பியவர்.

p20b - 2026அவர் குறிப்பிடுகிறார்… ”முக்தி என்பது என்ன என்பதை எழுத்தறிவற்ற எளிய அந்தணப் பெண்மணி ஒருவரைக் கண்டபின்தான் தெரிந்துகொண்டேன். அவர்தான் கோமளீஸ்வரர் மடத்து சக்கரை அம்மா. அவர் எப்போதும் இருந்த ஆனந்த நிலையே அவரது மகிமைக்குச் சான்று. உடலின் ஒவ்வோர் அணுவிலும் பரிபூரண ஆனந்தத்தை வெளிப்படுத்திய வேறு எவரையும் நான் கண்டதில்லை…”

இந்த நிலை ஸித்திக்க, அனந்தாம்பாள் என்ற சக்கரை அம்மா என்ன தவம் செய்தார்? அவர் இந்தப் பெயர் பெற்றது எப்படி?

அது 1854ஆம் வருடம். வட ஆற்காடு மாவட்டம் போளூரில் உள்ள சிற்றூரான தேவிகாபுரத்தில் வசித்துவந்த சேஷ குருக்கள் என்ற சிவாச்சார்யரின் குடும்பத்தில் பிறந்தார் அனந்தாம்பாள். பிறந்த சில காலத்திலேயே அன்னையை இழக்க நேர்ந்தது. அவரின் சித்தி சுப்பம்மாவே அனந்தாம்பாளை வளர்த்து வந்தார். சுப்பம்மாவின் சகோதரர் சாம்பசிவ சிவாச்சார்யர் அப்போது சென்னை கோமளீஸ்வரன்பேட்டை கோமளீஸ்வரன் மடத்தில் அதிபதியாக இருந்தார். அவருடைய மனைவி இறந்ததால், அனந்தாம்பாளை அவருக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்தனர். அப்போது அனந்தாம்பாளுக்கு வயது ஒன்பது. சாம்பசிவ சிவாச்சார்யருக்கு வயது 24.

p21a - 2026இளவயது தடுமாற்றத்தில் சாம்பசிவ சிவாச்சார்யர் துர்நடத்தை கொண்டவரானார். சிறு வயதானாலும் கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடையைச் செய்து விட்டு, எந்நேரமும் கோமளீஸ்வரன் ஆலயத்தில் அடியாருடன் அடியாராக வழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினார் அனந்தாம்பாள். நாளின் முக்கால்வாசி நேரம் சிவ-சக்தி வழிபாட்டில் சென்றது. உலகப் பற்று அறுந்து, உலகநாதன் இறைவன் பேரில் பற்று வளர்ந்தது.

அதிவேக ஆட்டத்தின் இறுதியாக, சாம்பசிவ சிவாச்சார்யர் தன் 34-ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார். அப்போது அனந்தாம்பாளுக்கு வயது 20. உறவினர் தடுத்தும் கேளாமல், 11-ஆம் நாள், தலை மழித்து வெள்ளுடை தரித்து வீட்டின் மொட்டை மாடியில் உள்ள திண்டில் அமர்ந்து மோனத் தவத்தில் ஈடுபடத் தொடங்கினார் அனந்தாம்பாள்.

பத்து வருடங்கள்… குளியல் இல்லை; உணவு இல்லை; தண்ணீர்கூட அருந்தவில்லை. பத்தாவது வருட முடிவில், ஓர் பரவொளியைக் கண்டார் அனந்தாம்பாள். இந்த ஒளியே… அவரது சித்தத்தை ஈர்த்தது; பரவசம் தந்தது. ஜோதி தரிசனம் கண்ட பின்னே, சித்தம் ஜோதிஸ்வரூபன் மீதே முழுவதும் சென்றது.

அதன் பின், அவர்  கோமளீஸ்வரன் ஆலய வாசலில் அமர்ந்து உரக்கச் சிரிப்பாராம். அனைவரும் அவரை சித்தம் கலங்கியவர் என்றே எண்ணி விலகிச் சென்றனர். நஞ்சுண்டராவ் கூட, அவரை அப்படியே எண்ணியிருக்கிறார். ஆனால், அவருடைய ஸித்திகள் கைவரப்பெற்ற நிலையை உணர்ந்து, அவரே பின்னாளில் சக்கரை அம்மா புகழ் பரப்பியவர்களின் முதன்மையானவரும் ஆனார்.

p21b - 2026பரவொளி தரிசனத்துக்குப் பின்னே பல ஸித்திகள் அவருக்குக் கைவந்தன. மகான் ரமணர் விரூபாட்சி குகையில் இருந்தபோது, டாக்டர் நஞ்சுண்டராவுடன் வந்த சக்கரை அம்மா, ரமணருக்கு சில சூட்சும ரகசியங்களையும் சொல்லியிருக்கிறார்.

சக்கரை அம்மா அடைந்த ஸித்திகளில் குறிப்பிடத்தக்கது, ‘லஹிமா’ என்ற ஸித்தி. அது, உடலை மிக லேசாக்கி, பறவையைப் போல் ஆகாய மார்க்கத்தில் பறப்பது. கர்ம ஸித்தி வகையைச் சேர்ந்த இந்த ஸித்தி கைவரப்பெற்ற சக்கரை அம்மா, அந்தக் கால அறிவியல் அறிஞர்களின் ஆராய்ச்சிக்கும் ஆளாகியிருக்கிறார். இது, திரு.வி.க.வின் குறிப்பிலிருந்து தெரிய வருகிறது.

‘அம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல் மாடியில் பறந்து வந்து நின்றனர்… அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர்… நான் தேசபக்தன் ஆசிரியனானபோது, டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழக நேர்ந்தது. பறவையாரைப் பற்றி நான் அவரிடம் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தர் இனத்தில் சேர்ந்தவர்’ என்றார்…’ – தமிழ்த்தென்றல் திரு.வி.க தாம் எழுதிய ‘உள்ளளி’ என்ற நூலில் நேரில் கண்ட சாட்சியாக சக்கரை அம்மாவைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.

”சக்ர பூஜை செய்துவந்ததால், அனந்தாம்பாள் என்ற பெயர் மாறி, சக்கரத்தம்மா, சக்கரை அம்மா, சக்கரை அம்மன் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்பட்டுள்ளது.” – இப்படிச் சொன்ன ஆலய குருக்கள் விஸ்வநாத சிவாச்சார்யரின் அப்பா பாலசுப்பிரமணிய சிவாச்சார்யர், சக்கரை அம்மாவின் பேரனாம். இவர்கள் கோமளீஸ்வரன் மடத்திலிருந்து சிறப்பு தினங்களில் சக்கரை அம்மா ஆலயம் வந்து பூஜைகளைச் செய்கிறார்கள். இன்றும் கோமளீஸ்வரன்பேட்டை (தற்போது புதுப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது) மடத்தில் சக்கரை அம்மா மொட்டை மாடியில் அமர்ந்து தியானம் செய்த திண்டு, அவருடைய சிலை, படங்கள் எல்லாம் இருக்கின்றன.

தன் பூவுடலைத் துறக்க காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த சக்கரை அம்மா, திருவான்மியூர் மருந்தீசரை தரிசித்தார். அப்போது, நஞ்சுண்டராவ் தன் சொந்த இடத்தில் சமாதிக் கோயில் எழுப்பக் கேட்டார். தற்போதுள்ள இந்த இடத்தை சுட்டிக் காட்டினாராம் சக்கரை அம்மா.

ஆனால், ”ஆள் நடமாட்டம் இல்லாத இந்த இடத்துக்கு யார் வருவார்?” என்று கேட்டதற்கு, ”இன்னும் நூறு வருடம் கழித்துப் பாருங்கள்…” என்று மெள்ள புன்னகைத்தபடி சொன்னாராம் அம்மா!

p21c - 20261901 பிப்ரவரி 28-ஆம் தேதி, தனது 47-வது வயதில் ஜீவன் முக்தி அடைந்த சக்கரை அம்மா சொன்னதுபோல், இந்த ஆலயம் 2002-ல்தான் நன்கு அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தற்போது பிரபலமாக விளங்குகிறது.

ஆனால், இதன் பெருமையை முன்னரே உணர்ந்திருந்த காஞ்சி மகாபெரியவர், 1948 ஜனவரியில் ஐந்து நாட்கள் இங்கே தங்கி தியானம் செய்தாராம்.

சித்தர்கள் மகான்களின் புண்ணிய பூமியான இங்கு, அண்மைக் காலத்தில் வாழ்ந்த சக்கரை அம்மாவின் கோயிலை தரிசித்து, வேண்டியது நிறைவேறி, ஆனந்தமும் அமைதியும் பெறுவோம்.

கச்சேரி அனுபவங்கள்

பாடாய்ப் படுத்திய வான் மழை சற்றே ஓய்ந்து பாட்டால் படுத்தும் இசை மழை சென்னையைக் கலக்கப் போகும் டிசம்பர் சீசன் வந்துவிட்டது. மார்கழி மகோத்ஸவம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இறைவனுக்கு உகந்த மாதமாயிற்றே! அவன் நினைவால் அவன் புகழ்பாடி உய்வதற்கு உகந்த மாதமும் கூட!

படுத்தும் இசை என்று குறிப்பிட ஒரு காரணமும் உண்டு. திரைத்துறையில் பாட்டா மெட்டா என்று பட்டி மன்றம் நடந்த காலம் போய், சவுண்ட் எபட்டுக்கு ஏற்ற ஒற்றை வார்த்தைகளால் பாடல்கள் வெளிவரும் முன்னேற்றம் கண்டுள்ளது இப்போது! இசைத்துறையிலும் இப்படியோர் புதுமை ஏற்பட்டு வருகிறது… மெல்ல மெல்ல… நாளை எப்படியோ?
தாளத்திற்கு ஏற்ப குரல் வளத்திற்கு ஏற்ப, பாடல்களைப் பதம் பிரித்து அவர் பாட்டுக்குப் பாடும் போக்கை சிலர் கையாண்டு வருகின்றனர். விவரம் அறிந்த பழுத்த இசை ரசிகர்கள், கொஞ்சம் வெளிப்படையாகவே மனம் நொந்து இவற்றை என்னிடம் சொன்னதுண்டு.

இசைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அதற்கு அடித்தளமாய் அமைந்திடுக்கும் பாடல் வரிகளுக்கும் (கீர்த்தனைகளுக்கும்) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக பாடப்படும் பாடலின் பொருள் அறிந்து அனுபவித்துப் பாடினால், கேட்பவர்களையும் ஆனந்தத்தில் திளைக்க வைக்கலாமே!

ஒரு மார்கழி உத்ஸவத்தில்… சகோதரிகள் இருவர் பாடிக்கொண்டிருந்தனர். அருமையான சாரீரம். மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். மார்கழிக்கே உரிய திருப்பாவை பாசுரம். “மாலே மணிவண்ணா” பாடினார்கள். ரசித்துக் கேட்டுக்கொண்டே வந்தபோது, ஒரு இடத்தில் சற்றே துணுக்குற வைத்தது-அந்த உச்சரிப்பு… பாடலில் “கோல விளக்கே! கொடியே! விதானமே! ஆலின் இலையாய்…” என்னுமிடத்தில் தாளத்தின் தன்மைக்கேற்ப, தட்டித்திருப்ப வேண்டுமாம்! இடைவெளியின்றி அவசரமாய் “கொடிய விதானமே!” என்று உச்சரிக்க ‘சுருக்’ என்றது. ‘ஏ!’ என்ற விளி வேற்றுமைதானே அடுக்கடுக்காக வரும் அச்சொற்றொடரின் சிறப்பு?! அதையா சிதைத்து அர்த்தம் அனர்த்தமாகப் போகும்படி செய்ய வேண்டும்?

நிறுத்திப் பாடவேண்டியதை சேர்த்துப் பாடியதால் எழுந்த அனர்த்தம் போல், சேர்த்துப் பாடவேண்டியதை நிறுத்திப் பாடி சிலர் புதுப்புது அர்த்தங்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள். ஒரு சினிமா பாடல் காதில் விழுகிறது… ‘பார்வதி பரமேஸ்வரெள’ என்பது, ‘பார்வதீப ரமேஸ்வரெள’ என்று!
நவராத்திரி கொலுவின் போது, ஒருநாள்… பக்கத்துவீட்டில் ஒரு சிறுமி பாடினாள். இப்போதுதான் சங்கீதம் கற்றுக்கொள்கிறாளாம். எம்.எஸ்ஸின் கேசட்டுக்களைப் போட்டுக் கேட்டு, அதேபோல் பாட முயற்சித்து வருகிறாளாம். வாழ்த்தி உற்சாகமூட்டினேன். ‘கண்டதுண்டோ கண்ணன் போல்-சகியே’ பாடினாள். ராகத்துக்கு ஏற்ப, ‘போலப் போலப் போல…’ என்று வரும் இடத்தில், ‘போ’வுக்கு அழுத்தம் கொடுத்து, ‘லபோ லபோ’ என்று பாட…. கேட்கக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

ஊத்துக்காடு மகாகவியின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. புரந்தரதாசரின் கீர்த்தனங்களும்தான்! கிருஷ்ண பக்தியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துபவை அவை! ‘ஜகதோத்தாரண அடிசிதள யசோதா’ வை யாரேனும் பாடினால், எந்த வேலை என்றாலும் கேட்டுவிட்டுத்தான் மறுவேலை! ஆனால் பலரும் ‘அடிசிதளசோதா’ எனப் பாடும்போது வருத்தமாக இருக்கும். பின்னே… ‘சோதா சோதா’ என்றால் எப்படி ஜீரணிக்க? எதற்கெடுத்தாலும் ‘யா’ ‘யா’ எனப் பிளந்து கட்டுபவர்கள், யசோதாவிலுள்ள ‘ய’வை மட்டும் மறப்பது ஏன்? அது ஒரு ஸ்டைலா?

பெரிய பாடகர் ஒருவர். ஒரு நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க அவரை அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சியில் ‘டைப்’ செய்யப்பட்ட ஒரு தாளைக் கொடுத்து பாடச் சொன்னார்கள். பாடிய போது, அதிர்ச்சியில் உறைந்தேன். பாடியது புரியவில்லை. ‘உறிந்து நீ எழுந்து நில்’ என்று பாடினால் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது? அவர் பாடி முடித்தபின் அந்தத் தாளை வாங்கிப் பார்த்தால்… இன்னும் அதிர்ச்சி! ‘டைப்ரைட்டர் மிஷினில்’ தமிழில் டைப் செய்யும்போது, ‘ஹ’ என்ற எழுத்தை அடிக்க, ‘உ’ அடித்து, அடுத்து ‘ற’ அடிக்க வேண்டும். தாளில் அப்படித்தான் ‘டைப்’ செய்யப்பட்டிருந்தது….
பொருள் தெரிந்து பாட வேண்டும் என்று எல்லோருமே சொல்கிறார்கள். சரிதான்! தியாகராஜ ஸ்வாமிகள் ‘தெலிஸி ராம சிந்தநதோ’ கீர்த்தனத்தில், எப்படிப் பொருள் விளங்கிக் ‘கொள்வது’ என்று பாடியது நமக்கு நினைவுக்கு வருகிறது. ‘ராம’ என்ற சொல்லுக்கு, பெண் என்றும் ஒரு பொருள். இப்படிப் பொருள் கொள்வோர், காமத்தில் உழன்று, அவற்றோடு போர் புரிவராம்! அர்க்க என்பதற்கு, எருக்கஞ்செடி, சூரியன்… இப்படிப் பல அர்த்தங்கள். சூரியன் என்ற பொருள் உணர்வோர், மன இருள் நீங்கப் பெறுவர். ‘அஜ’ என்ற சொல்லுக்கு பிரம்மா, ஆடு என இருள் பொருள்கள். பிரம்மா என்ற பொருள் உணர்ந்தால் வெற்றி கிட்டும்…

இது, இரண்டில் எந்தப் பொருளை உணர்ந்தால் என்ன பலன் ஏற்படும் என தியாகராஜ சுவாமிகள் சொன்னது. இதுபோல் அர்த்தம் புரியாமல் சிலர் எப்படி சொற்களைப் பிரித்து பொருள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று சம்ஸ்க்ருதம் படித்த ஒரு பெரியவர் சிலவற்றை என்னிடம் பகர்ந்தார். கேட்டபின் தகர்ந்தது உள்ளம்.

காஞ்சித்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஏகாம்ரேச்வரரின் மேல் முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றிய பைரவி ராக க்ருதி – ‘சிந்தய மாகந்த மூலகந்தம் சேத ஸோமாஸ்கந்தம்…’ என்பது. இதன் பொருள் அறியாமல் பலரும், ‘சிந்தயமாம் கந்தமூல கந்தம்’ என்று பாடுகிறார்கள். ‘மாம்’ என்றால் ‘என்னை’ என்று பொருள். ‘சிந்தயமாம்’ என்றால், ‘என்னை நினை’ என்றாகிவிடும். தீட்சிதர் பஞ்ச லிங்கங்களைப் பாடியதில், காஞ்சித்தலத்தில் ஒரு மாமரத்தடியில் உள்ள ‘ம்ருத்’ லிங்கத்தைத் துதித்துப் பாடிய கீர்த்தனம் இது. எனவே, ‘சிந்தய மாகந்த மூலம் (மாமரத்தடியிலுள்ள) என்பதே சரியாம்!
பல கீர்த்தனங்களில் சம்ஸ்க்ருத பதங்களும் கலந்திருக்கும். அவற்றை பதம் பிரித்துப் பாடும்போது எச்சரிக்கை உணர்வு தேவைப்படுகிறது.

கரஹரப்ரியா ராக, ‘ஸக்கநி ராஜ மார்க்கமு’ பாடும்போது சிலர் ‘ராஜா மார்க்கமு’ என, ஜ வை நெடிலாக இழுத்துப் பாடுகிறார்கள். ராஜ மார்க்கம் – ராஜ வீதி. மற்றதன் பொருள் – அரசனின் பாதை! ‘ராம நீ ஸமான மெவரோ’ என்று பாடுவதற்கு பதில், ஸ்டைலாக ‘ரமணீ ஸமானமெவரோ’ என்று பாடுகிறார்கள். ரமணி – என்றால் அழகிய பெண் என்ற பொருளல்லவா?
தமிழ்ப் பாடல்கள் என்றால் நமக்குப் பொருள் புரிகிறது… கேட்டு ஆனந்திக்கிறோம். அதுபோல் சம்ஸ்க்ருத, தெலுங்கு கீர்த்தனங்களைப் பாடும்போது, இயன்றால் அந்தப் பாடல் விளக்கும் பாவத்தைச் சொல்லி, ரசிகர்களை பாட்டோடு ஒன்ற வைக்க முயலலாம். அதற்கு கீர்த்தனங்களின் பொருள் தெரிவது மட்டுமல்லாது, உச்சரிப்பும் நேர்த்தியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

எப்போது பார்த்தாலும் பகவானையே மனசால் நினைத்துக் கொண்டு, அவன் திருவடிகளில் சரண் புகுந்து பிரார்த்தித்தும் அவனுடைய அருள் கிடைக்காததால், உனக்கு யார் இப்படி பொருத்தமில்லாத பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்? உனக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் அவ்வளவு பொருத்தமாக இல்லையே!- என மனத்தில் அங்கலாய்த்து ஒரு கீர்த்தனத்தில் தியாகராஜ ஸ்வாமி பகவானைக் கேட்கிறார்.

அடாணா ராகத்தில் அமைந்த அருமையான கீர்த்தனை. ‘இலலோ ப்ரணதார்த்திஹர’ என்ற இந்த கீர்த்தனையைப் பாடும்போது, தியாகராஜ ஸ்வாமியின் இந்த உளப்பாங்கு வெளித்தெரிய குழைந்து பாடினால் கேட்போரும் அதில் லயித்து விடுவர். ‘ப்ரணதார்த்திஹரன்’ என்றால், ‘வணங்குபவர் கஷ்டத்தைப் போக்குபவன்’ என்று பொருள். சங்கரன் என்றால் நலம் புரிபவன். இப்படிப் பெயர்களை வைத்துக் கொண்டு எனக்கு ஏன் கருணை காட்டவில்லை என்பது தியாகராஜ ஸ்வாமியின் ஆதங்கம்.

ப்ரணதார்த்திஹர என்ற பெயர் அவரவர் போற்றும் எல்லா தெய்வங்களுக்கும் உரிய பெயர்தான்! மகான் ஸ்ரீராமாநுஜர் தமது கத்யத்ரயத்தில் இந்தப் பெயரை நாராயணனுக்குச் சூட்டி அழகு பார்க்கிறார். ஹர – என்றால் அற்றுப் போதல், நீக்குதல்… இப்படிப் பல பொருள்கள். விநாயகர் அருள் பெறும் சங்கட ஹர சதுர்த்தியை பலரும் சங்கட சதுர்த்தி என்று அவசரமாகச் சொல்கிறார்கள். சங்கடங்களை நீக்கும் சதுர்த்தியா, சங்கட சதுர்த்தியா எனப் பொருள் உணர்ந்தால், அவர்கள் இதைத் திருத்திக் கொள்வர்.

‘ஆர்த்தி’ என்றால் ‘கஷ்டம்’ என்ற பொருள். இன்று பெரும்பாலும் பொருள் தெரிகிறதோ இல்லையோ, சம்ஸ்க்ருதப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படித்தான் ஆர்த்தி என்பதும்! ‘ஆர்த்தி! ஆர்த்தி!’ என்று அழைக்க, ‘கஷ்டம்! கஷ்டம்!’ என சொல்லாமல் சொல்கிறது உள்ளம்.

பெயர் சூட்டல் – என்றதும் பெரியாழ்வார் நினைவுக்கு வருகிறார். ஒரு பாசுரம்….
நம்பிபிம்பி என்று நாட்டு மானிடப் பேரிட்டு அழைத்தக்கால்
நம்பியும் பிம்பியும் நாலுநாளில் அமுங்கிப்போம்
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தன் அன்னை நரகம் புகாள்!

இந்தப் பாசுரத்தில், நம்பி, பிம்பி என்று பேரிடல் தவறு என்கிறார் பெரியாழ்வார்.

“ஆனால் அழகிய நம்பி, வடிவுடைய நம்பி … இப்படி நம்பி என்று பெருமாள் பெயரும் உண்டே… அப்படி இருக்க, இறைவன் பெயரைச் சூட்டுங்கள் என்று கடைசி வரியில் சொல்லும் ஆழ்வார், முதல் வரியில் நம்பி என்று பெயரிடாதீர் என்று சொன்னால்… முரண்பாடாக இருக்கிறதே!” – இப்படி ஒரு கேள்வியை ஒரு பெரியவர் கேட்டார். அவர் பணிஓய்வு பெற்ற பேராசிரியர்.

உண்மைதான்! சீனிவாசனை – சீனு, சீனி, சீச்சு… நாராயணனை-நாணு, வெங்கடேசனை-வெங்கி,வெங்கு, வெங்கட், டேசு…. கிருஷ்ணனை-கிச்சா, கிச்சு, கிட்டா… இன்னும் விக்னேஷ், விக்கி, மகேஷ், சுரேஷ்… இப்படி ‘ஷ்’ ‘ஸ்’ வகையறா பெயர்கள்…. முழுமுதற்கடவுள் பெயர் சூட்டியும் முழுதாய்க் கூப்பிடாமல், அரைகுறைக் கொலை செய்து அழைத்தால் என்ன புண்ணியம்? அவற்றுக்கு என்ன பொருள்? ஆழ்வார் அங்கலாய்ப்பு சரிதான் என்றே தோன்றுகிறது.

– செங்கோட்டை ஸ்ரீராம்

வினை தீர்க்கும் விநாயகர் அகவல்

ஒளவையார் அருளிச் செய்த
விநாயகர் அகவல்


சீதக் களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்

பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கர்பகக் களிறே

முப்பழம் நுகரும் மூஷிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடிவாகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென

வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கு அருளிக்

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலம் ஒரு நான்கும் தந்தெனக் கருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

ஆறாதாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

இடை பிங்கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழுபாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச்

சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி

என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

இருள் வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில்

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

விநாயகர் துதி

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே!

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட வெழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த வச்சிவன் உரைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமானே!

கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கூட்டறிக்கை

*கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை*

ஓய்வுபெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி கிறித்துதாஸ் காந்தி மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக முற்போக்கு இயக்கங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அறிக்கையின் விவரம் வருமாறு:

தொலைக்காட்சி (தந்தி) விவாதம் ஒன்றில் முன்னாள் கூடுதல் தலைமைச்செயலாளர் கிறித்துதாசு காந்தி அவர்கள் கூறிய கருத்துக்காக, பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் அவர் மீது தனிப்பட்ட தாக்குதலில் இறங்கியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் அவர் தெளிவாக, ” தனிப்பட்ட ஒருவர் எந்த மத நிகழ்ச்சியிலும் பங்கேற்கலாம்; ஆனால் முதலமைச்சராகவோ பிரதமராகவோ குறிப்பிட்ட ஒரு மத நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொள்வது, மதச்சார்பற்ற நாட்டில் தவறானது. ஒன்று எல்லா மதத்தினரின் நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம் அல்லது அனைத்து மதநிகழ்வுகளையும் புறக்கணிக்கலாம்”என்று விளக்குகிறார். அதற்கு பதில்கூற வேண்டிய பா.ச.க. பிரமுகர் இராகவன் என்பவர், “திமுக தலைவர் கருணாநிதியிடம் போய் இதைக் கூறுங்கள்” என்க, தொடர்ந்த விவாதத்தில், “இந்த நாட்டில் கடவுள்மறுப்புக் கொள்கையும் உண்டு; இதுதான் மதச்சார்பின்மை…அப்புறம் யாரையோ..” எனச் சொன்ன காந்தி, “ராமனை செருப்பால் அடிப்பேன் எனக் கூறவும் மதச்சார்பின்மை நாட்டில் உரிமை உண்டு; அதை எப்படி தப்புனு சொல்வீங்க; எனக்கு அதற்கு உரிமை இருக்கு..”என்ற பொருளில் பேசிக்கொண்டிருந்தபோதே, அவரின் பேச்சு தடுக்கப்பட்டது. கடைசிவரை அதில் அவர் பேசிமுடிக்கவிடாமல் பாசக பிரமுகர் கூச்சலிட்டபடி இருந்தார். அவரின் நியாயமான கேள்விக்கு கடைசிவரை பதிலளிக்கப்படாதது பற்றிப் பேசாமல், அவரின் ஒரு வாசகத்தை மட்டும் பிடித்துத் தொங்கிக்கொண்டு, பிரச்னை ஆக்கினர். அவர் அதற்காக மன்னிப்பு கேட்டபிறகும் விடவில்லை! இதுதான் நடந்தது!

முன்னாள் கூடுதல் தலைமைச்செயலர் என்ற அனுபவத்திலும் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கான செயல்பாட்டின் மூலமான சமூக அறிவைக் கொண்டு, இரண்டு ஆண்டுகளாக தொலைக்காட்சி உரையாடல்களைப் பொருள்கொண்டவையாகச் செய்துவருகிறார். குறிப்பாக, மைய, மாநில அரசின் செயல்பாடுகள், நிர்வாகம் பற்றிய அவருடைய கருத்துகள் குறிப்பிடத்தக்கவை.

இந்த நிலையில், இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமையின் வரம்புக்கு உட்பட்டு ஐயா காந்தி பேசியதற்கே, அவர் மீது பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள், தினமலர் போன்ற ஊடகங்களைப் பயன்படுத்தி, அவரின் முகவரி, தொலைபேசி எண்ணை வெளியிட்டு, சாதிய சக்திகள்- முகம்காட்டத் திராணியற்ற கோழைகளை ஏவிவிட்டு மிரட்டுவது, காந்திக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் உளைச்சலை உண்டாக்குவது, இதன் மூலமாக பொதுசமூகத்தில் அவரைச் செயல்படவிடாமல் தடுப்பது என பாசிசத்தை அரங்கேற்றியுள்ளன.

குறிப்பாக, காந்தி அவர்களை கிறித்துவர் எனப் பொய்கூறி, சாதியசக்திகளிடம் மதவாதத்தைத் தூண்டிவிடும் பெரும் சதியிலும் பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் ஈடுபட்டுள்ளன. இதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

இது தனியொரு காந்தி மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல; பொது சமூகத்தில் மதம் எனும் பெயரால் முன்வைக்கப்படும் அனைத்துக்கும் இதே சமூகத்தில் மாற்றுக்கருத்தை வைக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை நாம் இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

எனவே, கிறித்துதாசு காந்தி அவர்கள் மீது புனையப்பட்டுள்ள வழக்கை ரத்துசெய்யவேண்டும்.

* சனநாயகரீதியில் நடந்த உரையாடலை, பார்ப்பனிய இந்துத்துவ சக்திகளின் புகாரைப் பெற்றுக்கொண்டு, ஒரு குற்றமாக எடுத்து, வழக்காகப் பதிவுசெய்த போலீசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் இனி இது போன்ற தவறுகளை உடந்தையாகக்கூட செய்வதற்கு மற்றவர்கள் தயங்குவார்கள் எனும் நிலை உறுதிசெய்யப்பட வேண்டும்.

* தொலைக்காட்சிகளில் நடப்பாய்வுகளில் பங்கேற்கும் கருத்துரையாளர்கள் மீது இவ்வாறு சட்டரீதியிலான, சமூகவிரோத, சட்டவிரோத தாக்குதல்கள் நடத்தப்படும்போது குறிப்பிட்ட ஊடகங்கள் இதை எதிர்த்துநிற்கவேண்டும். இது, நான்காவது தூண் எனக் கூறப்படும் ஊடகங்களின் கடமை என்பதையும் அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இவண்

கருத்து வெளிப்பாட்டுக்கான சனநாயகக் குரல்கள்

கையெழுத்திட்டுள்ளவர்களின் விவரம்:

*மாற்றத்துக்கான ஊடகவியலாளர் மையம்

* மே பதினேழு இயக்கம்

* இளந்தமிழகம் இயக்கம்

*கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

* டி.கே.ரங்கராஜன், நா.ம.உ., சிபிஐ(எம்) மத்தியக்குழு உறுப்பினர்

* ஜவாஹிருல்லா, ம.ம.க. தலைவர்

* பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலர்

* தியாகு- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

* வாலாசா வல்லவன்- மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி சென்னை மாவட்டச் செயலாளர்

* ஓவியா- ஒருங்கிணைப்பாளர், புதிய குரல்

* சி.சொக்கலிங்கம்- கலைஇலக்கியப் பெருமன்றத் தலைவர்

* இரா.காமராசு, க.இ.பெ.ம. பொதுச்செயலாளர்

* ப.பா.ரமணி, க.இ.பெ.ம. பொருளாளர்

* மீ.த.பாண்டியன்- மா-லெ மக்கள் விடுதலை கட்சி தலைமைக்குழு

* சாமுவேல்ராஜ்- தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொ.செ.

* அதியமான், ஆதித்தமிழர் பேரவைத் தலைவர்

* மஞ்சுளா, இந்திய மாதர் தேசிய சம்மேளனம், மாநிலத் து.செ.

* செல்வி, தமிழ்நாடு மக்கள் கட்சி, பொதுச்செயலர்

* சுப. உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சி அமைப்பாளர்

* கௌதம சன்னா, வி.சி.க. துணைப்பொதுச்செயலர்

* ஆளூர் ஷானவாஸ், விசிக, து.பொ.செ.

* முத்துகண்ணன் – முன்னாள் தலைவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

* அருள்- ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி

* சீராளன் – புரட்சிகரத் தொழிலாளர் முன்னணி

* தமிழ்வாணன்- புரட்சிகர இளைஞர் முன்னணி

* திவ்யபாரதி – அ.இ.மாணவர் கழகம், ஆவணப்பட இயக்குநர்

* திலீபன் – புரட்சிகர மாணவர் முன்னணி

* இளையராஜா, தமிழ்நாடு மாணவர் இயக்கத் தலைவர்

* தீபா, ஜனநாயக வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர்

* பெர்னார்ட் பாத்திமா, பெண் தொழிலாளர் கூட்டமைப்பு

*நாச்சிமுத்து ஹரிசங்கர், மாணவர் சங்கத் தலைவர், பூனா திரைப்படக் கல்லூரி

மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள்

அ.மார்க்ஸ்
கோ.சுகுமாரன்
ச.பாலமுருகன்- பி.யு.சி.எல். தேசியக் குழு உறுப்பினர்
கிரேஸ் பானு- (திருநங்கையர் தளம்)

ஆய்வாளர்கள்

ஆ.சிவசுப்பிரமணியன்
டி. இலட்சுமணன்
கஜேந்திரன், தற்சார்பு ஆய்வாளர்
ஜெ.பாலசுப்பிரமணியம்
புது எழுத்து மனோன்மணி
ஏர் மகாராசன்

கல்வியாளர்கள்

பேரா.வசந்திதேவி
பேரா. வீ.அரசு
பேரா.வெங்கடேஷ் சக்கரவர்த்தி பேரா.அரங்கமல்லிகா
பேரா.பூவை இலெனின்
பேரா.டி.தர்மராஜ்
பேரா.பிரேம்
பேரா. ஜோதிராணி
பேரா.சுந்தரவள்ளி
பேரா.வீ. மலர்க்கொடி
ராஜ்தேவ், விரிவுரையாளர்

திரைப்படைப்பாளிகள்

அஜயன் பாலா- இயக்குநர்
ஏகாதசி-பாடலாசிரியர்
எஸ்.கருணா- இயக்குநர், தமுஎகச
தனிக்கொடி-பாடலாசிரியர்
மீரா கதிரவன்- இயக்குநர்
யுகபாரதி-பாடலாசிரியர்
ஜேம்ஸ் வசந்தன்- இசையமைப்பாளர் கலீல் ராஜா

ஆவணப்பட இயக்குநர்கள்

ஆர்.பி.அமுதன்
ஆர்.ஆர்.சீனிவாசன்
கோம்பை அன்வர்
மகா. தமிழ் பிரபாகரன்

வழக்குரைஞர்கள்

சிகரம் செந்தில்நாதன்
ஹென்றி திபேன் (மனிதவுரிமைத் தளம்)
மு.வெற்றிச்செல்வன்
சுசீலா
ஆர்தர் குமார்
கிருபா முனுசாமி

நிகழ்த்துகலைச் செயற்பாட்டாளர்கள்

பிரகதீஸ்வரன், புதுகை பூபாளம் கலைக்குழு
அ. மங்கை
லிவிங் ஸ்மைல் வித்யா
பிரேமா ரேவதி
பார்த்திபராஜா- நாடகவியலாளர் பிரளயன்- நாடகவியலாளர்
ஹேமா- கலைஞர், த.மு.எ.க.ச.
ஸ்ரீஜித் சுந்தரம், கட்டியக்காரி குழு

ஓவியர்கள்

புகழேந்தி
ஸ்ரீரசா

பதிப்பாளர்கள்

எதிர் அனுஷ்
சரோலாமா- பாதரசம் பதிப்பகம்
சிராஜுதீன்- பாரதி புத்தகாலயம்
ஆழி செந்தில்நாதன்
நீலகண்டன்- கருப்புப் பிரதிகள்
கீற்று ரமேஷ்

சூழலியல் செயற்பாட்டாளர்கள்

அருண் நெடுஞ்செழியன்- எழுத்தாளர்
கோ.சுந்தர்ராஜன்
நக்கீரன்- கவிஞர்
நித்யானந்த் ஜெயராமன்

மருத்துவர்கள்

மரு.அன்பழகன்
மரு. ஷாலினி
மரு.அரவிந்தன் சிவக்குமார்
மரு.எழிலன்
மரு.குருமூர்த்தி

எழுத்தாளர்கள்

எஸ்.வி.ராஜதுரை
அம்பை
யமுனா ராஜேந்திரன்
பா.செயப்பிரகாசம்
இரா.ஜவஹர்
அப்பணசாமி
அசதா
ஆதவன் தீட்சண்யா
இமையம்
இந்திரன்
கவின் மலர்
எஸ்.காமராஜ்
வ.கீதா
துரை.குணா
குமார் அம்பாயிரம்
சுப்ரபாரதிமணியன்
கி.நடராசன்
பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்
பூங்குழலி
சம்சுதீன் ஹீரா
கே.என்.செந்தில்
எச்.பீர்முகம்மது
பெருமாள்முருகன்
வே.மதிமாறன்
மாரி செல்வராஜ்
மீனா கந்தசாமி
அ.முத்துகிருஷ்ணன்
இரா.முருகவேள்
ராஜன் குறை
ப.கு.ராஜன்,
எஸ்.விஜயன்
ஜமாலன்
பா.ஜீவசுந்தரி
ஸ்டாலின் ராஜாங்கம்
புதியதடம் மேகவண்ணன்

கவிஞர்கள்

கலாப்ரியா
சுகுமாரன்
மனுஷ்யபுத்திரன்
இசை
ஒடியன்
கண்டராதித்தன்
தை.கந்தசாமி
கரிகாலன்
காலபைரவன்
குட்டி ரேவதி
சல்மா
சாம்ராஜ்
சிபிச்செல்வன்
சுகிர்தராணி
நரன்
நறுமுகைதேவி
தி.பரமேசுவரி
ந.பெரியசாமி
மாலதி மைத்ரி
யாழன்ஆதி
ஹெச்.ஜி.ரசூல்
லிபி ஆரண்யா
ச.விஜயலட்சுமி
ஷங்கர் ராமசுப்பிரமணியன்
சுந்தரபுத்தன் – எழுத்தாளர், செய்தியாளர்
கார்முகில், எழுத்தாளர், செய்தியாளர்

செய்தியாளர்கள்

அருள்எழிலன்- இணையாசிரியர், இணைய ஊடகம்
வ.மணிமாறன் – செய்தியாசிரியர், காட்சி ஊடகம்
கா.சு.துரையரசு – பொறுப்பாசிரியர், அச்சு ஊடகம்
மு.வி.நந்தினி, ஆசிரியர், இணைய ஊடகம்
பீர் முகம்மது- ஆசிரியர், இணைய ஊடகம்
கோவி.லெனின்- பொறுப்பாசிரியர், அச்சு ஊடகம்
விஜயசங்கர் – ஆசிரியர், அச்சு ஊடகம்

அமுதா- இணைய ஊடகம்
அதிஷா – அச்சு ஊடகம்
இராதிகா- தற்சார்புச் செய்தியாளர்
இளமதி சாய்ராம் – காட்சி ஊடகம்
உமா மகேஸ்வரன் – காட்சி ஊடகம்
கவிதா முரளிதரன்- அச்சு ஊடகம்
குணவதி – காட்சி ஊடகம்
ச.கோபாலகிருஷ்ணன்- இணைய ஊடகம்
கௌரி நீலமேகம்- அச்சு ஊடகம்
சுபஸ்ரீ தேசிகன்- அச்சு ஊடகம்
இர.இரா.தமிழ்க்கனல் – அச்சு ஊடகம்
தயாளன்- காட்சி ஊடகம்
பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார்- இணைய ஊடகம்
நீரை மகேந்திரன்- அச்சு ஊடகம்
மகிழ்நன்- காட்சி ஊடகம்
கே.கே.மகேஷ்- அச்சு ஊடகம்
ஜெ.முருகன்- அச்சு ஊடகம்
ராமேஸ்வரம் ராஃபி- அச்சு ஊடகம்
விஜய்ஆனந்த்- காட்சி ஊடகம்
ஜோ.ஸ்டாலின் – அச்சு ஊடகம்
ஹசீஃப் முகம்மது, காட்சி ஊடகம்

உடுமலை கௌசல்யா சங்கர்

நவம்பர் 1, 2016.

படவாய்ப்புகள் பிரகாசம்: உற்சாகத்தில் அமலாபால்

திறமையும் அழகும் இணை சேர்ந்த அமலாபால்:
நடிப்பு கலையில் அழகை காட்டி தன் திறமையை கூட்டி திரைத்துறையில் ஜொலித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்து அமர்க்களம் ஏதுமின்றி அமைதியாக வென்று வருபவர் நடிகை அமலா பால்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாக தயாரிக்கப்படும் “வட சென்னை” படத்தில் தனுஷ் ஜோடியாக முக்கிய வேடம், கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள “ஹெப்புலி” படத்தில் கதாநாயகி வேடம், தெலுங்கில் இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் முக்கிய வேடம் என தற்போது மிகவும் பிசியான கதாநாயகியாக உலா வருகிறார் நடிகை அமலாபால்.
மேலும் தற்போது ஏ.ஜி.எஸ் எண்டர்டெயன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் பிரம்மாண்ட பொருட்செல்வில் உருவாகும் “திருட்டு பயலே” படத்தில் சிம்மா மற்றும் பிரசன்னா இருவருக்கும் போட்டி போடும் வகையில் மிகுந்த சவாலான வேடத்தில் நடிக்கின்றார்.
தான் நடிக்கும் ஒவ்வோரு கதாபாத்திரமும் வித்தியாசமும் அதே நேரம் தன் நடிப்பு திறமையை மெருகேற்றும் வாய்ப்பும் அளிப்பதால் மிகுந்த உற்சாகத்தோடு நடித்து வருகிறார் நடிகை அமலாபால்.
Amalapaul – A Mixture of Talent and Beauty
amalapaul2
Being one of the Top Most Heroines of South Indian Cinema, Amalapaul has always remained calm and down to earth even when she is on Cloud Nine
The happening actress is currently flooded up with Multiple Mega Budget Projects which includes doing a Female lead in Vada Chennai Starring with Dhanush and Directed by Vetrimaaran, Female lead in Kicha Sudeep starring Hebbuli, a Kannada flick. Also she has signed up with couple of Telugu Projects which is yet to be announced officially by Production Unit.
Moreover, currently she is doing a challenging role in a mega venture project, produced by Kalpathi S Aghoram’s AGS Entertainment, Susiganesan Directorial Thiruttu Payale 2. This film has Simhaa and Prasanna in lead roles.
Amala paul is happy with the projects as each and every character that she does gives her an opportunity to explore her acting skills more deeper and looking to accomplish the task as expected.

திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திரப் பெருமாள் திருக்கோயில்

sirupuliyur-krupasamudra-perumal
sirupuliyur-krupasamudra-perumal

பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். விளைவு- இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கி தரிசனமளித்த பெருமாள், ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார்.

இத்தகைய புராணப் பெருமையுடன் திகழ்கிறது, திருச்சிறுபுலியூர்.

ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற 108 வைணவத் திருப்பதிகளுள் ஒன்றான இந்தக் கோயில், 11வது தலமாக இடம்பெற்றுள்ளது. பெருமாள் புஜங்க சயனத்தில் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

108 திவ்ய தேசங்களில் பெருமாள் சயனக் கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சி தருவதாக அமைந்த தலங்கள் இரண்டுதான். முதல் தலமான ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மிகப் பெரிய வடிவினனாக ஆனந்த சயனத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது தலமான இங்கே பெருமாள் பால சயனத்தில் குழந்தை வடிவினனாகக் காட்சி தருகிறார் என்பது இந்தத் தலத்தின் சிறப்பு.

தில்லையில் நடராஜப் பெருமானை வேண்டி பல காலமாகத் தவம் செய்துவந்தார் வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர். அவருக்குக் காட்சி தந்த பரமனிடம், தமக்கு முக்திப் பேறு அளிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பரமன், மகாவிஷ்ணு பால சயனத்தில் கோயில் கொண்ட இத்தலத்தே தவம் புரியுமாறு வழி கூறினார். அதன்படி இந்தத் தலம் வந்த வியாக்ரபாதர், கடுந்தவத்தில் ஈடுபட்டார். அவருக்குக் காட்சி தந்த பெருமாள், அருள்புரிந்து அருகே வைத்துக் கொண்டார்.

ஆதிசேஷ அம்சமான பதஞ்சலி முனிவரும் பெருமாளின் அருளுக்குப் பாத்திரராகி, பெருமாளின் அருகேயே இருந்துகொண்டார். தில்லையில் சிவநடம் கண்ட பதஞ்சலியும் வியாக்ரபாதரும், இங்கே பெருமாளின் அருகே கருவறையில் காட்சி தருகின்றனர். இவ்வாறு, புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் வழிபட்டதாலும், பெருமாள் அம்முனிவருக்கு பால சயனக் கோலத்தில் காட்சி தந்ததாலும் இத்தலத்துக்கு திருச்சிறுபுலியூர் என்று பெயர் ஏற்பட்டது.

இங்கே பெருமாளுக்கு அருள்மாகடல் அமுதன் , சல சயனப் பெருமாள், கிருபா சமுத்திரப் பெருமாள் எனப் பல பெயர்கள். தாயாருக்கு தயாநாயகி, திருமாமகள் நாச்சியார் எனப் பெயர்கள். வில்வ மரம் தலவிருட்சமாகத் திகழ்கிறது. பெருமாள் இங்குள்ள நந்தியாவர்த்த விமானத்தின் கீழ் அருள்புரிகிறார். சலசயனம், பால வியாக்ரபுரம், திருச்சிறுபுலியூர் என்றெல்லாம் இந்தத் தலத்துக்கு திருநாமங்கள் ஏற்பட்டன.

பிரார்த்தனை: குழந்தை பாக்கியம் வேண்டி ஏராளமான பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வருகிறார்கள். மாங்கல்ய தோஷம், காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், பாலாரிஷ்ட தோஷம், திருமணத்தில் தடை, நவக்கிரக பரிகாரம் என, பல்வேறு தடை சிரமங்களைச் சந்திப்பவர்களுக்கு இந்தப் பெருமான் அருள்புரிந்து ஆறுதல் தருவான் என்பது நம்பிக்கை. தீராத நோய், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், இங்கே வந்து, சிறப்பு வழிபாடுகளைச் செய்து, நலம் பல பெற்றுச் செல்கின்றனர்.

sirupuliyur krupasamudra perumal2 - 2026

இந்தத் தலத்தை திருமங்கையாழ்வார் போற்றிப் பாடியுள்ளார்.

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதிக் கழல் தொழுவீர்
வெள்ளம் முதுபரவைத் திரை விரியக் கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சல சயனத்து
உள்ளும் எனது உள்ளத்துள்ளும் உறைவாரை உள்ளீரே
(பெரிய திருமொழி 7-9-1)

கள்ளத்தனம் செய்யும் மனம், தூய்மையை அடையும் வழியினை எண்ணுபவர்களே நீங்கள் சிறுபுலியூர் திவ்ய தேசத்தில் உறையும் சலசயனப் பெருமான் திருவடிகளைத் தொழுவீர்களாக. அவன் அருள்மாகடல். எனவே நம் மனதை நிச்சயம் தூய்மை செய்திடுவான். தொன்று தொட்டு விளங்கும் சிறுபுலியூர் திவ்ய தேசமானது, பரந்த நீர் நிலையினை உடையது. அதில் உள்ள அலைகளின் வெள்ளமானது, கரையில் பற்பல மணிகளைக் கொண்டு வந்து தள்ளுகிறது.

இத்தகு பெருமை உடைய சிறுபுலியூர் திவ்யதேசத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமான் எனது உள்ளத்தின் உள்ளேயும் உறைகின்றான். நீங்களும் அவனை தியானம் செய்து மகிழ்வீர்களாக

திருவிழா: தமிழ் வருடப் பிறப்பு(சித்திரைப் பிறப்பு), வைகாசி பிரமோற்ஸவம், ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், கோகுலாஷ்டமி, நவராத்திரி பவித்ர உற்ஸவம், (ஐப்பசி மூலத்தில்) மணவாள மாமுனிகள் உற்ஸவம், திருக் கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மகர சங்கராந்தி, மாசி சுக்லபட்ச ஏகாதசி, பங்குனி உத்திரம் ஆகியவை இந்தத் தலத்தே மிகச் சிறப்பாக நடக்கும் உற்ஸவங்கள்.

கோயில் திறக்கும் நேரம்: காலை 7-12 மணி வரை, மாலை 5.30-8 மணி வரை.

தகவலுக்கு : 97871 07777 (செயல் அலுவலர்)

ஏபி ஸ்ரீதரின் தந்திரக் கலை அருங்காட்சியகம் அமெரிக்காவில்!

A.P.ஸ்ரீதரின் கலைவண்ணத்தில் உருவாகியுள்ளது அமெரிக்காவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகம் .

இந்திய ஓவியர்,  A.P. ஸ்ரீதர்,முதல் 3D ‘தந்திரக் கலை’  அருங்காட்சியகத்தை சென்னை VGP யில்  துவக்கினார்.தனது எல்லைகளை விரிவாக்கம் செய்துள்ள A.P. ஸ்ரீதர், தற்போது  அமெரிக்காவில்  முதல்  தந்திரக்  கலை அருங்காட்சியகத்தை Stoneridge Shopping Center  Pleasanton, California வில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளார், இந்தமாதம் அக்டோபர், 2016 தந்திரக் கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்கு திறந்து வைத்தார், மேலும்  கணிசமான மக்கள் அதனை கண்டு ரசித்துள்ளனர். மொத்தம் 18 புதிய கவனமாக தேர்வு  செய்த   3D  ஓவியங்களை  கொண்டு  அமைந்துள்ளது  இந்த அருங்காட்சியகம் .  வழக்கமான  ஆர்ட்  கேலரி  போன்று   இல்லாமல்,  இங்குள்ள ஓவியங்களுடன் பார்வையாளர்   ஒன்றிணைத்து, விளையாடி ,  நடித்து  மகிழும்  விதமாக  உள்ளது  குறிப்பிடத்தக்கது .

உதாரணமாக, சிம்பான்சியுடன் selfie எடுத்துக்கொள்ளலாம் , Oscar அவார்டை Oscar ரிடம் இருந்தே பெறலாம், யானையுடன் கயிற்றில்  நடை பழகலாம் மேலும் மிக பெரிய அளவிலான தரை ஓவியமும் முதல் முறையாக இதில் இடம் பெற்றுள்ளது. இந்த optical illusion  கிளிக் ஆர்ட் அருங்காட்சியத்தின் மையமாக உள்ளது. இப்போது அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது  மேலும் அதன்  மூலம் துல்லியமாக டிஜிட்டல் கேமராவிற்கு இணையாக படங்கள் எடுக்க முடியும் என்பதால், அருங்காட்சியகத்தை அனைவரும் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் ஒரு வேடிக்கை நிறைந்த தரமான நேரமாய், புதிய அனுபமாய் அமையும்.

அருங்காட்சியகம் பற்றி, ஸ்ரீதர் கூறுகையில் : “நான் அமெரிக்காவில்  கிளிக்ஆர்ட்  அருங்காட்சியகம் துவங்கியது மகிழ்ச்சியளிக்கிறது. கலை ஆர்வலர்கள்சிலர்க்கு  நவீன  ஓவியங்கள்  பிடிக்கும்,  மேலும் சிலர்க்கு பாரம்பரிய ஓவியங்கள்பிடிக்கும்.  “மக்கள் ஆர்ட் கேலரி வெறும் ஓவியங்கள் கண்காணிக்க  வருவது மாறி இந்த அருங்காட்சியகம் ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது”.

A.P. ஸ்ரீதர்மேலும்கூறுகையில் கலைப்படைப்புகளை கலைஞர்களை காட்டிலும் அமெரிக்கர்கள்  அதிகமாய்  வரவேற்பது  குறிப்பிடத்தக்கது.  அமெரிக்கர்களின் வரவேற்பினை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் .

அருங்காட்சியகத்தை  பின்வரும் முகவரியில் தொடர்புகொள்ளலாம் .

CLICK ART MUSEUM,

F138, Level 1, STONERIDGE SHOPPING CENTRE,

1 STONERIDGE MALL ROAD, PLEASANTON, CA: 94588.