Home Blog Page 5746

100 மணி நேர சாதனை 26 மணி நேரத்தில் முறியடிப்பு: அயர்னிக் சாதனை செய்த டேனியல் சூர்யா

ஆஸ்திரேலியர் 100 மணி நேர சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து கின்னஸ் உலக சாதனை செய்தார் சென்னை வாலிபர் டேனியல் சூர்யா.

ஆஸ்ரேலியாவை சேர்ந்த வாலிபர் மாரத்தான் ஐயர்னிங் மூலம் 100 மணி நேரத்தில் 2000 துணிகள் ஐயர்னிங் செய்து கின்னஸ் சாதனை படைத்தார்.

இவரின் சாதனையை முறியடிக்க சென்னை வாலிபர் டேனியல் சூர்யா 101 மணி நேர மராத்தான் ஐயர்னிங் நிகழ்ச்சியை சென்னை ஸ்பென்சர் பிளாசா அரங்கில் 25ம் தேதி காலை தொடங்கினார்.

சென்னை மாநகராட்சியின் வணக்கத்துக்குரிய மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். சாதனை நிகழ்ச்சியை லயன்ஸ்கிளப் A1, A6 மாவட்டங்கள் சார்பில் லயன்ஸ் கவர்னர்கள் குமார், குணராஜா, மாவட்ட தலைவர்கள் தியாகராஜா, முரளி, சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரமாண்டமான முறையில் செய்திருக்கிறார்கள். நேற்று காலை தொடங்கிய சாதனை நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் மதியம் 1 மணிக்கு கின்னஸ் சாதனையான 2000 துணிகளுக்கு மேல் ஐயர்னிங் செய்து டேனியல் சூர்யா புதிய உலக சாதனை படைத்தார்.

முதல் முறையாக வெளி நாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை இந்தியர் அதிலும் குறிப்பாக சென்னை வாலிபர் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருந்த கின்னஸ் உலக சாதனையை டேனியல் சூர்யா முறியடித்த பிறகும் தொடர்ந்து ஐயர்னிங் செய்து வருகிறார். தொடர் ந்து 5 நாட்கள் இ ந்த சாதனை செய்ய இருக்கிறார். இ ந்த 5 நாளில் சுமார் 1 கோடி பேர்களிடம் கண் தான உறுதி மொழி பெற வேண்டும் என்பதே இவர் விருப்பமாம்.

இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவருமான தியாகராஜா கூறும்போது: கண் தான விழிப்புணர்வை வலியுறுத்தி இ ந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாதனை நிகழ்ச்சி முடியும் போது ஒரு கோடி பேராவது கண் தான உறுதி தர வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

முதல் முதலாக வெளி நாட்டினர் செய்த கின்னஸ் சாதனையை ஒரு இந்தியர் குறிப்பாக தமிழர் முறியடித்ததை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்றார் தியாகராஜா.

எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து கைது

சென்னை: எஸ்.ஆர்.எம்., குழு தலைவரும், ஐ.ஜே.கே., கட்சி தலைவருமான பச்சமுத்துவை இன்று சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வேந்தர் மூவிஸ் மதன் சமீபத்தில் மாயமானார். இவரை கண்டு பிடித்து தருமாறு சென்னை ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட் மதனுக்கு நெருக்கமான பச்சமுத்துவிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை என கேள்வி எழுப்பியது. இதன் படி நேற்று இரவு முதல் பச்சமுத்துவிடம் சென்னை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று ( 26 ம்தேதி ) பச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர். மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் ரூ.72 கோடி வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவ சீட் கேட்டு 102 மாணவர்கள் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை மோசடி செய்ததாக இவர் மீது ஜாமினில் வெளி வர முடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது. மருத்துவ சீட் கேட்டு பலர் மதன் மூலம் பணம் கொடுத்ததாகவும் சிலர் புகார் தெரிவித்திருந்தனர்.

அவர் 406 மற்றும் 420 IPC பிரிவின் கீழ் கைது செய்யப்படுவதாகவும், அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது.

முன்னதாக, வேந்தர் மூவிஸ் – தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மதன் சில மாதங்களுக்கு முன்பு ‘தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக’ கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார். அந்தக் கடிதத்தில் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக 102 பேரிடம் 72 கோடி ரூபாய் வசூல் செய்து அதனை பச்சமுத்துவிடம் கொடுத்ததாக எழுதியிருந்தார்.

இது தொடர்பான வழக்கில் பச்சமுத்துவை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை அடுத்து நேற்று மாலை முதல் சுமார் 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்து தம்பதிகளே.. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வீர்: ஆர்எஸ்எஸ்

அதிகரித்து வரும் முஸ்லிம் மக்கள் தொகையை ஈடு செய்ய இந்து தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியுள்ளது.

ஆக்ராவில், புதுமணத் தம்பதிகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர் தர்பன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஒரு வீடியோ பதிவு ஒளிபரப்பப்பட்டது. பின்னர் பேசிய தர்பன், “நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் செழிக்கச் செய்ய நாம் நமது சந்ததிகளை பெருக்க வேண்டும். இதைத் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியிருக்கிறார்.

உதாரணத்துக்கு பிரான்ஸ் நாட்டை எடுத்துக் கொள்வோம், “பிரான்ஸ் நாட்டில் வசிப்பவர்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 1.8% பேர் மட்டுமே ஆனால் அங்கு மற்ற சமூகத்தினரின் அளவு 8.1% ஆக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் பிரான்ஸ் நாட்டில் அடுத்த 25 ஆண்டுகளில் வெளியில் இருந்து குடியேறியவர்கள் மட்டுமே இருப்பர்.

இதேபோல் ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் முஸ்லிம்களே அதிகம் இருக்கின்றனர். எனவே, இந்து தம்பதிகளே.. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வீர்” என்றார்.

“கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்” (பெரியவா இட்டுக் கட்டின கதை)

18698_10153209347029244_3030028360467212073_n

“கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்”
(பெரியவா இட்டுக் கட்டின கதை)
. [ரா.கணபதி எழுதியது]
(ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து
முடிச்சுப் போட்டா “கொகுலாஷ்டமியும் குலாம் காதரும்”னு வசனமாவே சொல்றதா ஆச்சு)
புத்தகம் கருணைக் கடலில் சில அலைகள்.(பக்கம் 43,44-45)
.புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்
23-02-2012 போஸ்ட் -மறுபதிவு
சரியானதைத்துல்லியமாககண்டுபிடிப்பதற்குநகைச்சுவைசொட்டும்ஓர்உதாஹரணம்’கோகுலாஷ்டமியும் குலாம்காதரும்’ என்ற சொற்றொடர் எப்படி வந்தது என்று காட்டுகிறார்
“தென் திருப்பேரை–ன்னு தென்பாண்டி நாட்டில ஒரு உசந்ததிவ்யதேசம்,”திவ்யதேசம்”னாஎன்னன்னா,
தேவாரம் இருக்கிறசிவ க்ஷேத்ரங்களைப் “பாடல் பெற்ற ஸ்தலம்”-கிறாப்பல,திவ்ய ப்ரபந்தம் இருக்கிற பெருமாள் க்ஷேத்ரங்களுக்குதிவ்ய தேசம்”னு பேர்.அப்படி 108 இருக்கிறதுல, பாண்டியதேசத்துல 18 இருக்கு.அதுல ஒண்ணு திருப்பேரை.அங்கே பெருமாளுக்கு ஸம்ஸ்கிருதத்துல மகர பூஷனர்-னு பேர்.
மகர குண்டலம் போட்டுண்டு இருக்கிறவர்னு அர்த்தம்.
மகரம் என்கிற ஜாதியைச் சேர்ந்த மத்ஸ்யம் [மீன்] சுருட்டிண்டுஇருக்காப்பல அந்தக் குண்டலத்தோட “ஷேப்” இருக்குமானதால்அப்படிப் பேர். மகரபூஷணப் பெருமாளைத் தமிழ்ல மகரநெடுங்குழைக் காதர்னும்,சுருக்கிக் “குழைக் காதர்”னு
மாத்திரமும் சொல்லுவா.
ரொம்ப நாள் முன்னாடி நம்ப மடத்து ஆதரவுல “ஆர்ய தர்மம்”னு ஒரு மாஸப் பத்திரிகை வந்துண்டிருந்தது.அதுல குழைக்காதையங்கார்னு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஆர்டிகிள்எழுதறதுண்டு. அவரைக் காதர் ஐயங்கார்,காதர் ஐயங்கார்னே சொல்லுவோம்!”
“அந்த மாதிரி ஒரு குழைக்காதர், பிரிட்டிஷ் ராஜாங்கத்துல
குமாஸ்தாவாஉத்யோகம்பண்ணிக்கிண்டிருந்தவர்,
வெள்ளைக்காரதுரைகிட்ட கோகுலாஷ்டமிக்கு லீவ் அப்ளை பண்ணியிருந்தார்.
கொகுலாஷ்டமிக்கு ‘பப்ளிக் ஹாலிடே’ உண்டுதான். ஆனா,க்ருஷ்ண ஜயந்தின்னு ஸ்மார்த்தாள் அஷ்டமி திதியை வெச்சுகோகுலாஷ்டமின்னும், வைஷ்ணவாள் ரோஹிணி நக்ஷத்ரத்தை வெச்சு ஸ்ரீஜயந்தின்னும் பண்றதுனால திதி ஒரு நாள்லயும்,
நக்ஷத்ரம் வேற நாள்லயும் வரது ஸகஜம்
. அப்படி ரெண்டு க்ருஷ்ண ஜயந்தி வந்தாலும், கவர்மென்ட் ஹாலிடே என்னமோ கோகுலாஷ்டமிக்குத்தான் விட்டிண்டிருந்தா. அதுலதான், ஸ்ரீஜயந்தி வேற நாளில் வந்த ஒரு வருஷம். அந்தக்குழைக்காதர் ஐயங்கார், ஒரே பண்டிகைக்கு இரண்டு பேரைக் காட்டிதுரையைக் குழப்ப வேண்டாம்னு நெனச்சு, “எங்க ஸப்-ஸெக்டுக்கு இப்பத்தான் கோகுலாஷ்டமி.அதனால் லீவு தரணும்”னு
அப்ளிகேஷன் போட்டார்.
“திருவல்லிக்கேணியைட்ரிப்ளிகேன்னும்,
தரங்கம்பாடியைட்ரான்க்யுபார்னும் புரிஞ்சுண்டவாதானே அந்த துரைமார்கள்!
மூணே எழுத்து, ஸிம்பிள் ‘மதுரை’யை தக்ஷிணத்துல ‘மெஜுரா’வாகவும்வடக்கே ‘மட்ரா’வாகவும் புரிஞ்சுண்டவாளாச்சே!
அதனால் அந்த துரை என்ன பண்ணினார்ன்னா, “குழைக்காதர்”ங்கிறதை, ‘குலாம் காதர்’னு நெனச்சுண்டுட்டான்!. ‘குலாம் காதர்’ [என்பது] துருக்காள் நெறயவேவெச்சுக்கற பேரானதால அவன் காதுக்கு ஃபெமிலியரா இருந்தது.
ஹிண்டு-முஸ்லீம் பேர் வித்யாஸம் பார்க்கத் தெரியாம
ஸ்ரீவைஷ்ணவரை குலாம் காதராக்கிட்டான்!
தன்னோட டைப்பிஸ்ட்கிட்ட “குலாம் காதர்னு” ஒரு க்ளார்க்கோகுலாஷ்டமிக்குலீவ்கேட்டிருக்கார்,
ஸாங்க்ஷ்ன் பண்ணியாச்சுன்னு தெரிவிச்சுடு”ன்னான்.
“அந்த டைப்பிஸ்ட் ஹிந்து. “இதென்னடா கூத்து?”ன்னு அவர்அப்ளிகேஷனைப் பார்த்தார். அவருக்கு ஒரே வேடிக்கையாயிடுத்து.
வேடிக்கையை எல்லார்கிட்டயும் சொல்லி ‘ஷேர்” பண்ணிக்கிண்டார்.
அதுலேர்ந்து தான் ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா “கொகுலாஷ்டமியும் குலாம் காதரும்”னு வசனமாவே சொல்றதா ஆச்சு.
“இந்தக் கதை…நானே கட்டினதுதான். எழுத்தாளர்கள்
என்ன ‘மார்க்’ போடுவாளோ?”
(மெம்பர்களே பெரியவா கதைக்கு ஒரு கமென்ட் போடுங்கோ)

உதவி இயக்குனர்களுக்கு பாடமாக வரும் சாக்கோபார்

வெறும் இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா? இன்று
இருக்கும் சினிமா சூழலில் டிஸ்கஷனுக்கே அது போதாது என்கிறீர்களா?
மிகக்குறைந்த செலவில் படம் எடுப்பது தான் திறமையான இயக்குனருக்கு சவால்
என்பதை நிரூபிக்கும் வகையில் தெலுங்கின் பிரபல இயக்குனர் ராம்கோபால்வர்மா
இரண்டேகால் லட்சத்தில் ஒரு படம் எடுத்து வெளியிட்டு அதனை சூப்பர்
ஹிட்டும் ஆக்கினார்.
தமிழ்நாட்டில் சினிமாவுக்கு வரத் துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு
அந்த படம் ஒரு பாடமாக அமையட்டுமே என்று அதனை வாங்கி டப் செய்து
சாக்கோபார் என்ற டைட்டிலில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர் மதுராஜ்.
இந்த படம் பற்றி மதுராஜ் என்ன சொல்கிறார்? ‘’ இந்திய சினிமாவில் ஒரு
வரலாற்று சாதனை செய்த திரைப்படம் தமிழில் ’சாக்கோபாரா’க வெளிவருகிறது.
ஒரு திரைப்படம் எடுக்க ஒரு அலுவலகம் அமைப்போம். அதற்கு குறைந்தபட்சம்
இரண்டு லட்சத்தில் இருந்து 3 லட்சம் அட்வான்ஸாக கொடுப்போம். ஆனால் அந்த
அட்வான்ஸ் பணத்திலேயே படத்தை முடித்திருக்கிறார்கள் என்றால் நம்ப
முடிகிறதா? நம்ப முடியவில்லை என்றால் வரும் 26 ஆம் தேதி தியேட்டரில்
வந்து பாருங்கள். வெறும் இரண்டேகால் லட்சம் பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை
ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். இதில் இதுவரை இந்திய சினிமாவில்
காட்டப்படாத காட்சிக் கோணங்கள் இடம் பெற்று இருக்கிறது. கிளாமர் ஹாரர்
படமான சாக்கோபார் படத்தில் ஆறு பேர் மட்டுமே நடித்து இருக்கிறார்கள். ஆறு
நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன்பிறகு இப்படத்திற்கு
ராம்கோபால்வர்மா ஒன்றரை கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார். தெலுங்கிலும்
இந்தியிலும் சக்கைபோடு போட்ட இந்த படத்தை இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம்
என வெளிவந்து இருக்கிறது.

நான் ஹைதராபாத் சென்றபோது யதார்த்தமாக பார்த்த படம் தான் இது.
படத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் வாங்கி வெளியிட முடிவு செய்துவிட்டேன்.
எப்போதும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராம்கோபால்வர்மா ‘என் படம்
தமிழ் ரசிகர்களுக்கு புரியாது’ என தர யோசித்தார். நான் உறுதியாக இருந்து
படத்தை வாங்கி டப்பிங் செய்துள்ளேன். ஒரே ஒரு லொக்கேஷனில் மிகக்குறைந்த
கலைஞர்களை வைத்து மிக்க்குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சாக்கோபார் படம் திரைத்துறையினருக்கு மிகவும் உதவும். சாதாரண ரசிகனையும்
திருப்திபடுத்தும் அளவுக்கு திகில் காட்சிகளும், கவர்ச்சியும்
நிறைந்திருக்கிறது சாக்கோபார்.

இப்படியும் நடக்குமா என்ற ஆச்சர்யம் உங்களுக்கு இருந்தால் சாக்கோபார் படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள். அடுத்து தமிழில் வெளியாகும் குற்றமே தண்டனை படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியிருக்கிறேன். அந்த பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. இங்கே குற்றமே தண்டனை வெளியாகும் நாளிலேயே அங்கேயும் அந்த படம் வெளியாகும்’’ என்றார்.

நின்றந்த மயிலொன்று தாளங்கள் போட

aruna-sairam

https://soundcloud.com/naribala/a8gbp6p1lu6l
நின்றந்த மயிலொன்று தாளங்கள் போட
கண்டந்த வண்டொன்று ரீங்காரம் பாட

கன்றொண்டு வாலினால் சாமரம் போட
எங்கள் கண்ணனும் குழலூதி கானங்கள் பாட

கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா.. கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
பக்த கோலாஹலா ச்ந்த ப்ருந்தவனா ஆனந்த கோபி ஜனாம்போதி சந்திரா

எப்போது இதைப்போல ஏற்றையோ காதே
இன்னும் உனக்கு ஏற்றவரை ஏதும் தப்பாதே
அப்போது இப்போது உரைத்தால் ஆகாதே
ஆகையால் மற்றதையும் ஆய புகாதே

நீல ஒளி மேனியதில் நின்றாடும் மாலை
பேருயர வானுயர வான பசும் சோலை
கோலமொடு கோவிந்தன் குழலூதும் வேலை
நில்லாது போகுமோ இங்கென்ன வேலை

கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா ..கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
நித்ய கோலாஹலா கந்த ப்ருந்தவனா ஆனந்த கோபி ஜனாம்போதி சந்திரா

அங்கே இங்கே என்று அலையாதே மனமே
ஆழ்ந்து பார் உன் உள்ளே ப்ருந்தாவனமே
தங்காது கண்ணனின் பேர் பாடும் உணமே
அது தானாக தோன்றுமே சங்கையே இனிமேல்

கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
நித்ய கோலாஹ சந்த பிருந்தாவன கோபி ஜனாம்போதி சந்திரா

“பிரும்ம வித்தைக்கும் வரகூர் உறியடிக்கும் முடிச்சு” ((வரகூர் உறியடி (இவ்வருடம் 26-08-2016)

11054482_924033570960760_4881393388095922503_n

“பிரும்ம வித்தைக்கும் வரகூர் உறியடிக்கும் முடிச்சு”
((வரகூர் உறியடி (இவ்வருடம் 26-08-2016)
 
(வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள்
வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும்
போகச் சொல்லிட்டா, எப்படி.?”)
 
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
மறு பதிவு-
 
ரிக்வேத கனபாடிகள் ஒருவர் தன்னுடைய ஐந்து
மாணவர்களுடன் பெரியவாளிடம் வந்தார்.
கற்றுக் கொண்ட பாடத்தில் ஒரு பகுதியைப்
பெரியவா முன்னிலையில் சொல்லிக் காட்டச் சொன்னார்.
 
ஸ்வரம், அபஸ்வரமாக இருந்தது.அத்துடன் மாணவர்களுக்கு சம்ஸ்க்ருத ஞானமும் குறைவாக இருந்தது.
 
“குழந்தைகளுக்கு வேதம் கற்றுக் கொடுப்பது ரொம்பச் சிரமம்,இங்கிலீஷ் படிப்புக்கு அனுப்பி விடலாம்”என்றார் கனபாடிகள்.
 
பெரியவா அவரை உட்காரச் சொன்னார்கள்.
 
“கனபாடிகளே, உலகத்திலே எல்லாக் காரியங்களும்
சிரமம் தான்.!..சமையல் செய்வது சிரமம்…அடுப்பு மூட்டணும்உலை வைக்கணும்,கஞ்சி வடிக்கணும்,கறிகாய் நறுக்கணும், வேக வைக்கணும்…
 
“துணி தோய்ப்பது சிரமம் – தோய்த்து, அலசி,பிழிந்து,உதறி உலர்த்தணும். எல்லாமே சிரமம்.
 
“வரகூர் உறியடி உத்ஸவம்னு கேள்விப்பட்டிருப்பேளே.?
சறுக்கு மரம் ஏறி மேலே கட்டியிருக்கிற மூட்டையை
எடுக்கணும்.சறுக்குமரத்திலே கத்தாழை,
விளக்கெண்ணெய்பூசியிருப்பா. ஒரே வழவழப்பு. ஏறவே முடியாது….அது தவிர, பீச்சாங்குழல் மூலம் தண்ணீர் அடிப்பார்கள்! ரொம்பச் சிரமம்.
 
“ஆனாலும் வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி பெறணும்னு,
எக்கச்சக்கமா போட்டா போட்டி.!..கடைசியிலே யாரோ
ஒருவர் உறியடி செய்து ஜெயிப்பார்.
 
“கொஞ்சம் பிரயாசை எடுத்து முயற்சி பண்ணினால்,
குழந்தைகள் நன்றாக வேதம் கற்றுக் கொள்வார்கள்.
வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள்
வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும்
போகச் சொல்லிட்டா, எப்படி.?”
 
ரிக்வேத வாத்தியாருக்குப் பெரியவாளுடைய அறிவுரை
உயர்ந்ததாகப் பட்டது. தன் சிரமத்தைப் பாராட்டாமல்
முழு ஆர்வத்துடன் மாணவர்களுக்குப் பாடம்
சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.
 
ஐந்து ஆண்டுகள் கழிந்தன. வேத ரக்ஷண நிதி டிரஸ்ட்
நடத்தும் பரீக்ஷைக்கு ஐந்து மாணவர்களும் வந்து
பரீக்ஷை கொடுத்தார்கள்.
 
ரிக்வேத பரீக்ஷையில் ஐந்து பேருமே முதல் வகுப்பில்
தேர்ச்சி பெற்றார்கள். அதற்கான கணிசமான
சம்பாவனையும் பெற்றார்கள்.
 
ஆசிரியரின் முயற்சி வீண் போகவில்லை என்பதை
சிஷ்யர்கள் நிரூபித்தார்கள்.
 
பெரியவாளுடைய வாக்குப் பலிதமாகாமல் போகுமா.?

டிஎஸ்பி விஷ்ணுப் பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு எதிர்ப்பு

புது தில்லி:
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் ஆர்.விஷ்ணுபிரியா (27). திருமணமாகாதவர். இவரது தந்தை ரவி. கடலூரைச் சேர்ந்த விஷ்ணுபிரியா பி.எஸ்சி. கணிதத்தில் பட்டம் பெற்றவர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த் துறையில் பணிபுரிந்துவந்த இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சிபெற்று, சிவகங்கையில் பயிற்சி முடித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. முகாம் அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி மாலை தூக்கில் தொங்கிய நிலையில் விஷ்ணுபிரியா இறந்து கிடந்தார். சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவைத் தலைவர் யுவராஜ் அளித்த நெருக்கடி காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமார் அளித்த நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி.யாக இருந்த மகேஸ்வரி, வழக்கறிஞர் மாளவியா ஆகியோர் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கோடு, பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்துவர் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

முதலில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பிறகு, ரவி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. தற்போது தமிழக அரசு, சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் சிபிசிஐடி விசாரணை நிறைவடையும் நிலையில் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தெளிவான காரணங்கள் இல்லை. எனவே மேல்முறையீடு செய்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப்படிப்பு: தமிழக மாணவர்களின்  எதிர்காலம் குறித்து விவாதம் தேவை!: ராமதாஸ்

மருத்துவப்படிப்பு: தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதம் தேவை என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
கைகளில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாகத் கூறி, கைகளையே துண்டித்தால் எப்படி இருக்குமோ, அதேபோன்ற நிலை தான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த  மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வால் (NEET) ஏற்பட்டிருக்கிறது. பொது நுழைவுத் தேர்வால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி வணிகம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், ஊரக ஏழை மாணவர்களின் வாய்ப்புகள் மட்டுமே பறிக்கப்பட்டுள்ளன.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்த போது அதற்காக சொல்லப்பட்ட காரணங்களில் முக்கியமானது ‘‘தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மருத்துவ மாணவர் சேர்க்கை வெளிப்படைத் தன்மையின்றி நடைபெறுகிறது; தகுதியே இல்லாத மாணவர்கள் அவற்றில் சேர்க்கப்படுகிறார்கள்; இந்த நிலை மாற்றப்பட வேண்டும்’’ என்பது  தான். ஆனால், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் எந்த வெளிப்படைத் தன்மையும் ஏற்படுத்தப்படவில்லை. மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்திய மத்திய அரசு, அதனடிப்படையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கையை நடத்தும் பொறுப்பை மாநில அரசுகளிடம் ஒப்படைத்திருந்தால் மட்டுமே வெளிப்படைத்தன்மையை உருவாக்கியிருக்க முடியும்.
ஆனால், மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை தேசிய அளவில் நடத்தி தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ள மத்திய அரசு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் பொறுப்பை தனியார் கல்வி நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கிறது. இதனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. கடந்த காலங்களில் தனியார் மருத்துவக்கல்வி நிறுவனங்கள் எப்படி மருத்துவ இடங்களை விலை பேசி விற்பனை செய்தனவோ, அதேபோல் தான் இம்முறையும் மருத்துவ இடங்களை தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் விலை பேசி விற்பனை செய்யப் போகின்றன.
ஏனெனில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 51 ஆயிரம் மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால், நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் 4.09 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது ஒரு மருத்துவ இடத்திற்கு 8 பேர் போட்டி போடுகின்றனர். தனியார் கல்லூரிகள் அல்லது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 100 இடங்களுக்கு 800 பேர் போட்டியிட்டால், அவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ, அவர்களின் விண்ணப்பங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவர்கள் விண்ணப்பங்களை ஏதோ ஒரு காரணம் கூறி கல்லூரி நிர்வாகம் நிராகரிக்கும் ஆபத்து உள்ளது. மாணவர் சேர்க்கையில் மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பு இல்லாத பட்சத்தில் அனைத்து விதமான முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவை கட்டுப்படுத்தப்படாவிட்டால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்பட்டு விடும். எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஒற்றைச்சாளர முறையில் மாநில அரசுகளே மாணவர் சேர்க்கை நடத்த மத்திய சுகாதாரத்துறை ஆணையிட வேண்டும்.
மற்றொருபுறம், மருத்துவ மாணவர் சேர்க்கை இனி தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 12&ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு பயனில்லாமல் போகிறது. அதுமட்டுமின்றி,  தேசிய நுழைவுத் தேர்வு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ) அதன் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து 3% மதிப்பெண்களுக்கு மட்டுமே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் தமிழக அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களே கைப்பற்றிக் கொள்ளும் நிலை ஏற்படும். மாநிலப் பாடத்திட்டத்தில்  படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகிவிடும். ஐ.ஐ.டி. படிப்பு எப்படி மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு எட்டிப்பிடிக்க முடியாத தொலைவுக்கு சென்று விட்டதோ அதேபோல், மருத்துவப் படிப்புகளும் ஆகிவிடும். இது எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வது தான் இந்த பிரச்சினைக்கு  முழுமையான தீர்வாக அமையும். உச்சநீதிமன்றத்தின் கெடுபிடி காரணமாக அது சாத்தியமாகவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வருவது, நுழைவுத் தேர்விலிருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவது, மாநிலப் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து ஆராய வேண்டும். இது குறித்து  விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக நீதியில் அக்கறையுள்ள கல்வியாளர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

செவாலியே விருது: ஏன்..எதற்கு..எப்படி?

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையுடன் வலம் வரும் கலைஞர்கள் அரிதினும் அரிது. அந்த பட்டியலில் தனியிடம் பிடித்தவரான நடிகர் கமல்ஹாசனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியே விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ் மொழி சினிமாக் கலைஞர்களில் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுக்கு மட்டுமே செவாலியே அந்தஸ்து கிடைத்திருந்தது. இந்நிலையில், நடிகர் திலகத்தைத் தொடர்ந்து, உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் கமலுக்கும் வழங்கப்பட உள்ள இந்த செவாலியே விருது, அவரது திரைப்பயணத்தில் மைல்கல்லாய் மாறியுள்ளது.

எனினும், சினிமா தவிர செவாலியே விருது பெற்ற பல்துறை சார்ந்த கலைஞர்கள் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், மக்கள் கலை ஊடகம் என்பதில் இங்கே சினிமாவுக்குத்தான் முதலிடம்.

செவாலியே விருது குறித்தும், அதற்கான அங்கீகாரத்தினைப் பெற்றிருக்கும் வெவ்வேறு துறை வல்லுனர்கள் குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

செவாலியே விருது:
* மாவீரன் நெப்போலியன், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளில் வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்காக துவங்கியதுதான் இந்த செவாலியே விருது.

* 1802-ம் ஆண்டிலிருந்து இவ்விருது எல்லாத்துறை வல்லுனர்களுக்கும் வழங்கப்பட ஆரம்பித்தது.

* பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்துறை, சர்வதேச அளவில் துறை சார்ந்த சிறப்பியல்புகளுடன் மிளிரும் பிரபலங்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.

* பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் அமைந்திருக்கும் அதிபர் மாளிகையான எல்சீ அரண்மனையில் சிறப்பு விருந்துடன், இந்த விருது அளிக்கப்படும். அல்லது, விருது வழங்கும் நடுவர்கள் மற்றும் அரசு பிரமுகர்கள் நமது நாட்டிற்கே நேரடியாக வந்தும் இந்த விருதினை அளிப்பார்கள்.

* செவாலியே விருது பெற்ற கலைஞர்கள், பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அரசாங்க பிரதிநிதிகளுக்கு சமமானவர்கள்.

* அந்நாட்டு ராணுவ வீரர்கள் விருது பெற்றவர்களை ‘சார்’ மற்றும் ‘மேம்’ என்று உரிய மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது அந்நாட்டின் சட்டம்.

* செவாலியே விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் பிரபலங்கள், அந்தந்தத் துறையில் 25 வருடங்கள் சேவையாற்றியிருக்க வேண்டியது அவசியம்.
* சிவப்பு நிற ரிப்பனில் 5 பக்கங்கள் கொண்ட ஓக் மர வடிவமைப்பைக் கொண்டிருக்கும் செவாலியே பதக்கம். பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடி நடுவில் இரட்டையாக அமைக்கப்பட்டிருக்கும்.

* இதுவரையில் சர்வதேச அளவில் 93,000 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினைச் சேர்ந்த 400 பேர், வருடாவருடம் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

* நடிப்புத் துறையில் தனக்கான ஒரு முத்திரையுடன் சிறந்து விளங்கியதற்காகவே நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கும், நடிப்புத் துறையுடன் கூடிய பன்முக ஆளுமைத்தன்மைக்காக நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இவ்விருதினைப் பெற்ற சில பிரபலங்கள்:
ஜே.ஆர்.டி.டாட்டா – 1983 (தொழில் துறை)

சத்யஜித்ரே – 1987 (சினிமா)

சிவாஜி கணேசன் – 1995 (சினிமா)

ஜூபின் மேத்தா – 2001

எம்.பாலமுரளிகிருஷ்ணா – 2005 (இசை)

அமிதாப்பச்சன் – 2007(சினிமா)

ஐஸ்வர்யா ராய் – 2012(சினிமா)

ஷாரூக்கான் – 2014 (சினிமா)

யஸ்வந்த் சின்ஹா – 2015 (நிதி நிபுணத்துவம்)

மனிஷ் அரோரா – 2016 (ஆடை வடிவமைப்பு)

இந்த மதிப்பிற்குரிய விருது வரிசையில் புதியதாக இணைந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன் என்பது இந்தியாவிற்கு கிடைத்துள்ள மற்றுமொரு கவுரவம்!