Home Blog Page 5747

ஸ்ரீமகாவிஷ்ணுவின் சயன தலங்கள்

மஹாவிஷ்ணுவின் சயனதலங்கள்:

ஸ்ரீரங்கம் – வீர சயனம்.

மகாபலிபுரம் – தல சயனம்.

திருமயம் – போக சயனம்.

திருக்கோஷ்டியூர் – பால சயனம்.

கும்பகோணம் – உத்தான சயனம்.

திருவனந்தபுரம் – அனந்த சயனம்.

திருமோகூர் – பிரார்த்தனா சயனம்.

திருப்புல்லாணி – தர்ப்ப சயனம்.

திருச்சித்திரக்கூடம் – போக சயனம்.

திருநீர்மலை – மாணிக்க சயனம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் – வடபத்திர சயனம்.

திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும்.

அவைகள்

1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
4. உத்தியோக சயனம்
5. வீர சயனம்
6. போக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்

1 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம் 107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது.

2 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தல சயனம் மாமல்லபுரம், கடல மல்லை 63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் கடல மல்லையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

3 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்) முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.

4 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்) 12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (சாரங்கபாணிப் பெருமாள்) திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார். இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

5 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான வீர சயனம் 59 வது திவ்ய தேசமான திருஎவ்வுள்ளூர் என்னும் திருவள்ளூரில் அமைந்துள்ளது. திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் திருஎவ்வுள்ளூர். இங்கு திருமால் (வீரராகவப் பெருமாள்) வீர சயனத்தில் காட்சி தருகிறார்.

6 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான போக சயனம் 40 வது திவ்ய தேசமான திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.

7 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தர்ப்ப சயனம் 105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் (இராமநாதபுரம் அருகே) அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார். தர்ப்ப சயனம் பாம்பனை அல்ல. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.

8 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான பத்ர சயனம் 99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது. இங்கு திருமால் (வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள்) வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர எனில் ஆலமரத்து இலை என்று பொருள்

9 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான மாணிக்க சயனம் 61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.

10 வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான உத்தான சயனம் திருக்குடந்தையில் அமைந்துள்ளது. இங்கு திருமால் அரவணையில் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார்.

கபாலி ஸ்டைலில் கலக்கிய பெண்ணை அழைத்துப் பாராட்டிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி பட வசனத்தை மாற்றி பேசிய ஒரு பெண்மணியை ரஜினி நேரில் அழைத்து சந்தித்து பாராட்டியுள்ளார்.

கபாலி படத்தில் ரஜினி பேசும் ‘கபாலிடா’ வசனம் பல ரசிகர்களை கவர்ந்தது. தமிழ் மொழி தெரியாத சீனா, ஜப்பான் ரசிகர்கள் கூட அந்த வசனத்தை பேசி வீடியோ வெளியிட்டனர்.

‘அம்மாடா’ என்று தமிழக சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் புகழ் பாடும் அளவுக்கு போனது அந்த வசனம்.

மேலும் சிலர், அந்த வசனத்தை கொஞ்சம் மாற்றி பேசி இணையத்தில் வெளியிட்டனர். அதில் குறிப்பாக, சென்னையை சேர்ந்த ஒரு பெண் “பொண்டாட்டினா பழைய படத்துல வரமாதிரி தழைய தழைய பொடவை கட்டிகிட்டு, தல நிறைய பூவ வெச்சிகிட்டு… நெத்தி நிறைய குங்குமம் வெச்சிகிட்டு ‘ஏ பொண்டாட்டி’ அப்படின்னு கூப்பிட்ட உடனே, வந்து காலப் புடிச்சு.. சொல்லுங்க அத்தான்னு வந்து நிப்பாளே.. அந்த மாதிரி பொண்டாட்டின்னு நெனச்சியா… பொண்டாட்டிடா” என்று பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்தது.

அந்த வீடியோவை ரஜினியும் கண்டு ரசித்துள்ளார். எனவே அவரை நேரில் சந்திக்க விரும்பிய ரஜினி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் பேச, அந்த பெண்ணுக்கு தலை கால் புரியவில்லையாம்.

இதையடுத்து, சென்னை சேமியர்ஸ் சாலையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் அந்த பெண்ணை ரஜினி சந்தித்தார். அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இந்த மாதிரி பேசனும்னு உங்களுக்கு எப்படி தோனுச்சு. இதைக்கேட்டு உங்க சொந்தக்காரங்கலாம் என்ன சொன்னாங்க.. என்று ஆர்வமாக ரஜினி கேட்ட கேள்விகளுக்கு.. வெட்கத்துடன் பதில் சொன்னாராம் அந்த பெண்..

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 92. இவருக்கு ஊர்மிளா என்ற மனைவியும் மகன் ஆசித், மகள் ஜோதிகா, 3 பேரக் குழந்தைகளும் உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த செல்லப்பன், அபிராமி தம்பதியரின் 3-வது மகனாக 1924 ஜூலை 3-ம் தேதி ராமநாதன் பிறந்தார். வேலை காரணமாக அவரது குடும்பம் மலேசியாவின் ஜொகூர் மாநிலம் மூவார் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் நாதனின் தந்தை எழுத்தராகப் பணியாற்றினார். குடும்ப வறுமை காரணமாக பகுதிநேர வேலைகளை செய்து கொண்டே நாதன் படித்தார். இரண்டாம் உலகப்போரின் போது சிங்கப்பூரை ஜப்பானிய ராணுவம் ஆக்கிரமித்தது. அப் போது ஜப்பானிய நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராக பணி யாற்றினார். அந்த போர் அவருக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

1955-ல் சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் அவர் பணி யில் சேர்ந்தார். அரசுத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் அவர் திறம்பட பணியாற்றினார். 1982-ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். 1999 ஆகஸ்ட் 18-ம் தேதி சிங்கப்பூர் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அதிபர் பதவியேற்றபோது உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை நிலவியது. அதிலிருந்து சிங்கப்பூரை அவர் மீட்டு வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார். இதன் காரணமாக 2005-ம் ஆண்டில் அவர் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப் பட்டார். வயது முதுமை காரணமாக 3-வது முறையாக அவர் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை.

கடந்த ஜூலை 31-ம் தேதி அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு அவர் காலமானார்.

எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு பிரதமர் லீ சியன் லூங், அதிபர் டோனி டான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”

77134_693849987312454_1034041963_n
“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”



(‘மகாசுவாமிகள் ஒரு கலைக்களஞ்சியம்’
என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
அன்றைய தினம் நேரில் கண்டு உணர்ந்தேன்.)

சொன்னவர்-புலவர் ந.வேங்கடேசன்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
(கட்டுரையில் ஒரு பகுதி)

நான் சென்ற ஒரு சோம வாரத்தில்,
சிதம்பரம் தீட்சிதர்கள் சிலர் வந்து கும்பாபிஷேகப்
பத்திரிகையை சமர்ப்பித்து ஆசி கோரி நின்றார்கள்.

பெரியவாள் கும்பாபிஷேகப் பத்திரிகையைப்
படித்தார்கள்.பத்திரிகையின் இறுதிப்பாராவில்
‘சர்மகஷாயத்தால் திருமுழுக்குச் செய்யப்பெறும்’

என்ற வரி காணப்பட்டது.

“சர்மகஷாயம் என்றால் என்ன?” என்று பொதுவாக
கேள்வியைக் கேட்டார், பெரியவர்.

மடத்துத் தொண்டர்,’அது,தமிழ்ச் சொல்..’ என்று பதில்

 கூறினார்.(ஆழமாகத் தமிழ் படித்தவர் எவரும் இங்கு
இல்லை-என்ற மறைமுகமான பதில் உள்ளே இருந்தது)

உடனே பெரியவர், “இங்கே தமிழ் படிச்சவா யாராவது
இருக்காளா?” என்று கேட்டார்.

நண்பர்கள் என்னை முன்னுக்குத் தள்ளி,
‘இதோ இருக்கிறார்’ என்றார்கள்.

அப்போது மகாசுவாமிகள் என்னை விளித்துக்
கூறிய சொல், என்னை சிலிர்க்க வைத்தது.

“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”

‘சுவாமி, அது வடமொழிச் சொல்,
நான் பொருள் அறியேன்”

“அது சம்ஸ்கிருதச் சொல்தான்.
அந்தக் கஷாயம் எப்படிச் செய்கிறார்கள்?…

தொடர்ந்து பெரியவா; ‘பால்துளிர்க்கும் மரங்களின்
பட்டைகளைச் சேகரித்து,இடித்து, தண்ணீரில் போட்டு,
ஒரு மண்டலம் நன்றாக ஊற வைப்பார்கள். அந்த
கஷாயத்தைக் கலசங்களில் நிரப்பி, வேதிகையில்

வைத்து, ஒவ்வொரு கால வழிபாட்டிலும் பூஜிப்பார்கள்.அந்த மரப்பட்டைக் கஷாயத்தைக் கொண்டு, சில மூர்த்தங்களையும்,கும்பங்களையும் அபிஷேகம் செய்வார்கள்….”

ஒவ்வொரு வாக்கியத்திலும் இடைவெளிவிட்டு,
பாலகரும் புரிந்து கொள்ளும் விதத்தில் பெரியவர்
விளக்கிய தன்மையை என்னென்று சொல்வது!

“பால் துளிர்க்கும் மரம் என்றால்,தெரியுமோ?…

ஆலமரம்,அரசமரம்,அத்தி, பலா…..இதெல்லாம்!”
என்று மேலும் விளக்கினார்கள்.

‘மகாசுவாமிகள் ஒரு கலைக்களஞ்சியம்’
என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
அன்றைய தினம் நேரில் கண்டு உணர்ந்தேன்.

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் ஒரு தலம்!

எழு வகைப் பிறவிகளில் மனிதப் பிறவிக்கு மட்டுமே பல்வேறு சிறப்புக்கள் உண்டு. ஆகையால் தான் ஒளவை ‘அரிதரிது மானிடராதல் அரிது’ என்றார். மேலும் இனி பிறவி வேண்டாம் போதும் என்று கருதினால் அதை நிறுத்திக்கொள்ளக் கூடக்கூடிய வாய்ப்பும் மனிதப் பிறவிக்கு மட்டுமே சாத்தியம். மற்ற பிறவிகளில் அது சாத்தியமில்லை. காரணம் மனிதப் பிறவிக்கு உள்ள பல்வேறு
தனித்தன்மைகளில் ஒன்றான ‘இறைபக்தி’.

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும். அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் தங்களால் எத்தனை முடியுமோ அத்தனை தலங்களை தரிசிக்கவேண்டும்.

வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்கிற கருத்து பலரிடம் உள்ளது. அது தவறு. தவறு. தவறுக்கும் தவறான தவறு. இந்த சரீரம் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும்போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.

‘நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்’
என்று வள்ளுவர் கூறுவது அறச்செயல்களுக்கு மட்டுமல்ல. திருத்தலங்களை தரிசிப்பதற்கும் தான்.

‘நல்வினை’ என்று அவர் கூறியிருப்பதை கவனியுங்கள். வைஷ்ணவ திவ்ய தேசங்களை தரிசிக்க முதலில் செல்லவேண்டிய கோவில் காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில்.காரணம் இந்த ஒரு தலத்தை தரிசித்தாலே 108 வைணவ திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உங்களுக்கு கிடைக்கும். இது வைஷ்ணவ திவ்ய தேசம் அல்ல. ஆனால் அதனினும் பெருமை மிக்கது.
நாலாயிரத் திவ்ய பிரபந்தங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம் இது. எனவே முதலில் இந்த தலத்தை தரிசித்துவிடுவது சாலச் சிறந்தது.ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம். சிதம்பரத்துக்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார் கோவில்) குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள் இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள்
அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு மக்களுக்கு வழங்கினார். இவரை முதல்வராகக் கொண்டே வைணவ ஆச்சார்யர்களின் பரம்பரை துவங்குகிறது.
இந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கம் என்று கல்வெட்டுகளில் உள்ளது. வீரநாராயணன் என்ற பேர் பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது. இதன் அருகில் தான் தமிழகத்திலேயே மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரி இருக்கிறது.

‘வீரநாராயண ஏரி’ என்பதே நாளடைவில் ‘வீராணம் ஏரி’ என்று மருவிட்டது. பெருமாளுக்கும் பிராட்டியாருக்கும் திருமணம் நடைபெற்ற போது இது பெருமாளுக்கு சீராக கொடுக்கப்பட்டதாம்.

காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம். மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.

இறைவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி பல அடி எடுத்து வைப்பான்.

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்

‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?
ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோண்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல். இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறது ‘பழனிமலை பாதுகாப்புக் குழு’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு.
‘‘தமிழனோட நாகரிகம் தாவரத்தோட இணைஞ்சே இருந்திருக்கு சார். ஊர்ப் பெயர்கள்ல கூட மரங்களின் பெயரை வச்சு அழகு பார்த்திருக்காங்க நம் முன்னோர்கள்.

மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு இருந்திருக்கு. ஆனா, இன்னைக்கு அப்படி ஒரு மரம் இருந்துச்சா?ன்னு கேட்கற மாதிரி ஆகிருச்சு. மரங்களை இழந்து நாம மழையையும் இழந்துட்டோம்’’ – வருத்தத்தோடு ஆரம்பிக்கிறார் பழனிமலை பாதுகாப்புக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்திரன் கண்ணன்.
‘‘தமிழ்நாட்டுல இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பத்தி ஒரு அகராதியே போடலாம். அவ்வளவு செழிப்பா இருந்த பூமி இது. ‘உசில்’ மரங்கள் நிறைஞ்சு இருந்த இடம்தான் உசிலம்பட்டி. ‘இலுப்பை’ மரங்கள் நிறைஞ்ச பகுதி இலுப்பையூர், ‘விளாமரம்’ இருந்த இடம் விளாத்திகுளம், ‘வாகை’ மரங்கள் செழித்த பகுதி வாகைகுளம்… இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து இப்படி பல ஊர்ப் பெயர்கள்ல மரங்கள் இருக்கு. ஆனா, இன்னைக்கு அந்தந்த ஊர்கள்லயே அந்த மரங்களைக் காணோம்.

அதுக்கெல்லாம் பதிலா, ‘தைல’ மரம், ‘சீமைக் கருவேலம்’, ‘யூஃபோடீரியம்’, ‘தூங்குமூஞ்சி’ன்னு விதவிதமா வெளிநாட்டு மரங்கள் இங்க ஆக்கிரமிச்சிடுச்சு. இந்த மரங்கள் சீக்கிரமே வளர்ந்துரும். அதிகளவு நீரையும் உறிஞ்சும். இதனால, புல்வெளிகளுக்கு நீர் கிடைக்காம அழிய, அதை நம்பி வாழுற கால்நடைகளும் குறைஞ்சு, உயிர்ச் சுழற்சியே மொத்தமா மாறிடுச்சு. பார்த்தீனியம் செடிகள் நீர்நிலைகளையும் அழிச்சிருச்சு. இப்படி வளர்ற மரங்கள்ல காய்கள், பழங்கள்னு எதுவுமே வராது. அதனால பறவைகளும் இல்லாம போயிருச்சு’’ என ஆதங்கப்படுகிறவர், நம்மால் மறக்கப்பட்ட மரங்களின் மருத்துவ மகத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.

‘‘ உசில்” மரம் வறட்சியைத் தாங்கி வளரும். எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும்.

“வேங்கை” மரம் இன்னைக்கு அரிதாகிப் போச்சு. இந்த மரத்துல ஒரு குவளை செஞ்சு, அதுல தண்ணி ஊத்தி வச்சா, கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியைக் குடிச்சா சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேதத்தில் இதைப் பயன்படுத்துறாங்க. மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைத் தடுக்கும் மருந்து தயாரிக்கற ஆராய்ச்சி நடக்குது.

“இலுப்பை” மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய், தமிழர் கலாசாரத்துல ரொம்பக் காலமா விளக்கேத்த பயன்பட்டிருக்கு. இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.

“தோதகத்தி” மரத்துல எந்தப் பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள்ள மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்துல கண்டுபிடிச்சாங்க. அங்க தோதகத்தி மரத் துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க. ஆனா, இப்ப இது அரிதாகி வர்ற மரம்ங்கிறதால, தமிழக அரசு இதை வெட்ட தடை செஞ்சிருக்கு.

இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் குறுஞ்செடிகள்னு நம்ம ஊர்ல நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு. இதுல ‘துத்தி’ன்னு ஒரு செடி… மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளர்ற இடத்துல வச்சா, தொடர்ந்து பார்த்தீனியம் வளராது’’ என்கிறார் அவர் உற்சாகம் பொங்க. 1988ம் ஆண்டு தொடங்கி இப்படிப்பட்ட அரிதான மரங்களை வளர்த்து, அந்தக் கன்றுகளை மக்களுக்கு வழங்கி வருகிறது பழனிமலை பாதுகாப்புக் குழு.
‘‘ஆரம்பத்துல அரிதான மரங்கள், மூலிகை மரங்கள்னுதான் இதையெல்லாம் நினைச்சோம். அவற்றின் தாவரவியல் பெயர் சொல்லித்தான் மக்கள்கிட்டேயும் கொடுத்தோம். அப்புறம்தான் இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுப் பாரம்பரியம்னு தெரிய வந்துச்சு. அதனால இன்னும் இன்னும் நிறைய மரங்களைத் தேடி வனங்களுக்குப் போனோம். இன்னைக்கு எங்க நாற்றங்காலில் 65 வகையான மரக் கன்றுகள் இருக்கு. எல்லாமே பழமையான அரிதான மர வகைகள்.

புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்னைகளை இந்தத் தலைமுறையில் நாம சந்திச்சுக்கிட்டு இருக்கோம். வீட்டுக்கு ஏ.சியைப் போட்டு தங்களைக் குளிர்ச்சியா வச்சிக்க நினைக்கறவங்க, ஒரு பாரம்பரிய மரம் நட்டா இந்த பூமியும் குளிர்ச்சியாகும்னு நினைக்கணும். மழையை அதிகப்படுத்தி, நீர்வளத்தை தக்க வச்சு, இந்த பூமியை வளப்படுத்தவும் இது மாதிரி மரங்களைத்தான் நாம நம்பியாகணும்!’’ என்கிறார் அவர் அழுத்தமான குரலில்.

மரங்கள் தருதே ஷாம்பு:
* உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாகப் பயன்படுத்தலாம்.
* ‘வழுக்கை மரம்’ எனப்படுகிற ‘தடசு’ மரத்தின் பட்டையை சுடுநீரில் போட்டால், வழுவழு ஷாம்பு ரெடி. இந்த இரண்டு ஷாம்புக்களுக்கும் மருத்துவ குணங்கள் உண்டு.
* மருத மரத்தின் பட்டையைக் காய வைத்து, கஷாயம் பண்ணிக் குடித்தால், உடலில் கொழுப்புச் சத்து குறையும்.
* தாண்டி மரத்தில் காய்கிற தாண்டிப் பழம், மூலத்தைக் குணப்படுத்தக் கூடியது. சளி, வயிற்றுப் போக்கையும் இது கட்டுப்படுத்தும்.

– மரபை மீட்டெடுப்போம் …. !

பழனி மலை பாதுகாப்பு குழுவினரின் தொடர்புக்கு….

Sankara Narayanan Reddy… 9445555598.

செவாலியே விருது பெற்ற கமலஹாசனுக்கு அன்புமணி வாழ்த்து

சென்னை:
பிரான்ஸ் நாட்டின் விருதான செவாலியே விருது பெற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு வழங்கப்படும் பிரான்ஸ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது நடிகர் நண்பர் கமலஹாசனுக்கு வழங்கப்பட இருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன். நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.
பிரான்ஸ் நாட்டின் சார்பில், கலை மற்றும் இலக்கியத்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மூன்றாம் நிலையில் உள்ளது செவாலியே விருதாகும். 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்விருதை பெறும் இரண்டாவது தமிழ் கலைஞர் கமலஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசாக கருதப்படும் கமலஹாசன், சிவாஜிக்கு அடுத்தபடியாக இந்த விருதை பெற்றிருப்பது சிறப்பாகும். பிரான்ஸ் நாட்டில் செவாலியே விருது தோற்றுவிக்கப்பட்டதன் அறுபதாவது ஆண்டில், அந்த விருது நடிகர் கமலஹாசனுக்கு வழங்கப்படுவது கூடுதல் பெருமையாகும்.
உலகப்புகழ் பெற்ற விருதுகளில் ஒன்றான செவாலியே விருதை எந்த கலைஞர் வென்றாலும் அது வியப்புக்குரிய செய்தி தான். ஆனால், கமலஹாசன் இந்த விருதை வென்றதில் வியப்புக்கு இடமில்லை. நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, அந்த படத்திற்காக ஆறு வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தை வென்றவர் கமலஹாசன். 3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிலிம்ஃபேர் விருதை 19 முறை வென்றதுடன், இனி தமக்கு அவ்விருது வழங்க வேண்டாம் என கூறிய பெருமை, ஆசிய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள், தமிழக அரசின் கலைமாமணி விருது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் என எண்ணற்ற பெருமைக்கு சொந்தக்காரரான கமலஹாசனுக்கு இது இன்னொரு விருது அவ்வளவு தான். இன்னும் கேட்டால் இந்த விருது இன்னும் ஒரு தசாப்தத்திற்கு முன்பே கமலஹாசனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
நடிப்பை பிழைப்பாக கருதாமல் மூச்சாக கருதும் நண்பர் கமலஹாசனுக்கு இன்னும் பல பெருமைகள் காத்திருக்கின்றன. சிறந்த மனித நேயரும், சமூக அக்கறையாளருமான கமலஹாசன் ஆஸ்கர் முதல் பாரதரத்னா வரை மீதமுள்ள அனைத்து விருதுகளையும் வென்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.

ஹிந்து மக்களின் மத நம்பிக்கைகளில் நீதித் துறை எல்லை மீற வேண்டாம்: சிவசேனை

ஹிந்து மக்களின் மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில் நீதித்துறை எல்லை மீற வேண்டாம் என்று சிவசேனைக் கட்சி எச்சரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெறும் “தஹி வரண்டி’ என்னும் உறியடித் திருவிழாவுக்கு உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்ததைக் கண்டிக்கும் வகையில் சிவசேனைக் கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான சாம்னாவில் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரத்தில் நெடுங்காலமாக உறியடித் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த உறியடித் திருவிழாவில் அமைக்கப்படும் மனித கோபுரங்களின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், 18 வயதுக்குள்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் யாவும் ஹிந்து மக்களின் நம்பிக்கை சார்ந்தவை. இதுதொடர்பான விவகாரங்களில் நீதித் துறை எல்லை மீறக்கூடாது.

நம் நாட்டில் ஜனநாயக முறைப்படி, தங்களுக்கான அரசை மக்களே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த அரசு, மக்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்கிறது. இதனை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமே தவிர, தேவையின்றி தலையிடக் கூடாது.

அரசு செய்ய வேண்டிய பணிகளை நீதிமன்றங்கள் கையில் எடுக்கும்பட்சத்தில், அதற்கு வரும் எதிர்ப்புகளையும் அவை சந்திக்க நேரிடும்.

ஹிந்து பண்டிகைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் பிறப்பித்து வரும் உத்தரவுகளால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். மக்களுக்கு நன்மை எது, தீமை எது என்பது அரசுக்குத் தெரியும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்கும் முயற்சியை மக்கள் தோற்கடிப்பார்கள் என அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுள் கோச்சு கோச்சுக்குவாரு…

கவுண்டமனி : தம்பி பழனி போய்ட்டு வந்தேன்… இந்தா பஞ்சாமிருதம் புடி…… மூக்கு புடிக்க அடி !!

பெந்தகோஸ்டு : வேண்டான்ய்யா !! அதை நான் சாப்பிட மாட்டேன் ?

கவு : ஏன் சாமி ? ஏசு கடிச்சு வச்சிருவாரா ? இல்லை ஆதாம் ஆப்பிளை சாப்டா மாதிரி, இதை சாப்பிட்டைனா பலான எண்ணமெல்லாம் உனக்கு வந்திருமா ? பஞ்சாமிருதத்ல‌ என்ன சாமி உனக்கு பிரச்சனை ? வம்ச வம்சமா இதெல்லாம் நாம‌ சாப்டு வந்தது தான தம்பி ? …. ஒரு வேல‌ சக்கர வியாதி வந்துருச்சா ஒனக்கு ? இல்லை தொண்டைல‌ புத்து நோயி ஏதாவது இருக்கா ?

பெந் : இது எங்களுக்கு விலக்கப்பட்டிருக்கு அண்ணே. சாத்தானுக்கு படைக்கப்பட்டதை நான் சாப்பட கூடாது.

கவு : அட்ரா செருப்பால, ஏண்டா நேத்து வரைக்கும் பண்ணி மேச்சிட்டிருந்த நாயி நீயு, ஃபிலாசபி பேசறியா ? ஏண்டா ஒரு பக்கம் தமிலை வெச்சு பொலைகற தெள்ளவாரி க்ரூப் கூட சேர்ந்துகிட்டு, “தமில் தமில்” நு சவுண்டு உடறீங்க‌, இன்னொரு பக்கம் தமில் கடவுள் முருகனையே சாத்தான்கறீங்களா ? ஏண்டா அஞ்சு காசுக்கு தேன் மிட்டாய் வாங்கிக் கொடுத்தா, அரை மணி நேரம் அதை சப்பி திங்கற நாயி நீ, ஆர்ரா உனக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தா ?

பெந்த் : எங்க யேசு கோயில் ஐயரு தான் சொல்லிக் கொடுத்தாரு !! ஞானஸ்தானம் வாங்கியாச்சுன்னா இந்து சாமிகளை கும்புட கூடாதாம்.

கவு : அட்ரா சக்கை, அட்ரா சக்கை !! யேசு கோவிலா ???? ஏண்டா யேசுக்கு ஏதுடா கோவில் ?? அது சர்ர்ச்சுடா !! அங்க எதுக்குடா ஐயரு வந்தாரு ?? ஒங்களுக்கெல்லாம் பித்தம் தெளியனும்னு ஓமம் வளர்த்தவா ?

பெந்த் : “ஃபாதர்” தான் ஐயர் !! எல்லாரும் ஐயர் என்றுதான் கூப்பிடுவார்கள்.

கவு : ஏண்டா ஊர்ல கஞ்சா வித்தவன், கள்ள சாராயம் காய்ச்சுனவன், கட்டப் பஞ்சாயத்து செய்யறவனெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு ஜெப வீடு ஆரம்பிச்சு நாலு பெண்டுகள மடக்கி போட்டா, அவன் ஐயராடா ? வெளிய சொல்லிராதடா வெள்ளக்கார மண்டையா !! ஊர்ல இருக்க ஐயருக பூரா கூட்டமா தீமூட்டி, குதிச்சுருவாங்க !! ……டேய் சுவிசேச வாயா, ஐயருங்கல்லாம் படிச்ச‌ சமூகம்டா, படிச்ச சமூகமெல்லம் உங்க மெண்டல் க்ரூப்புக்கு வர மாட்டாங்கடா ‘ப்ளடி ஃபூல்’ !!

பெந்த் : உங்களுக்கு தெரியலைன்னு சொல்லுங்க,….. ஐயருங்க, புரோகிதருங்க, தீக்சிதருங்கன்னு நிறைய பேரு பிரசங்கம் செய்ய வர்றாங்க‌. கூட்டத்துக்கு முன்னாடி அவங்க போட்டோ போட்டு பேனரு வெக்கறாங்க !!

கவு : அடேய் அல்லேலூயா ஆபீசர், எந்த‌ ஒரு சமூகத்துலயும் நூத்துக்கு நூறு உருப்படியா இருந்துருவாங்களா ? பெரும்பான்மைய தானடா நாம பேசனும் ????….. ஐயரு சாதிலயும் ஒன்னு ரெண்டு முடிச்சவுக்கிங்க இருக்கத்தானே செய்வாங்க, அந்த முடிச்சவுக்கீங்கள இவனுங்க ஏலத்துல எடுத்து பேனர் வெக்கறானுங்க !! அப்பதானே உன்ன மாதிரி பன்னி மேச்சவனெல்லாம், ஆகா ஐயரே வெள்ளைக்கார சாமியோட‌ பெருமை பேசறாருன்னு நினைப்பீங்க ? ஏண்டா இன்னைக்கு காச வீசுனா, எந்த சோத்துக்கு வழி இல்லாத கபோதிடா கூவமாட்டேன்னு சொல்வான்

இந்து மதத்தின் அற்புதத்தை அறிந்து கிறிஸ்தவத்தை தூக்கி எறியும் ஜெர்மனியர்கள்!

இந்து மதமானது 1950ம் ஆண்டு இந்தியர்கள், மற்றும் 1970ல் இலங்கை தமிழ் மக்கள் இடப்பெயர்வு மூலமாக ஜெர்மனியில் காலூன்றியது. பின்னர் 1980ல் ஆப்கானிஸ்தான் சிவில் போரினாலும் சில இந்துக்கள் குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மன் ஒரு மதசார்பற்ற (Secularism) நாடாகும்.
இருந்தாலும் கிறிஸ்தவத்தை ஆதரித்து காலணி ஆதிக்கத்தின் போது பல மக்களை அங்கே கிறிஸ்தவத்தை ஏறற்றுக்கொள் அல்லது சாவு என்று வன்முறையில் மதம் மாற்றியுள்னர் முந்தைய காலகட்டத்தில்!,

மக்களிடையே இது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இந்து மத வருகையால் இந்து மதத்தின் அற்புதங்களை புரிந்து கொண்டுள்ளனர் மக்கள்.
சில சொற்பமாக இருந்த இந்து மக்கள் தொகையானது படிப்படியாக உயர்ந்து
2000ல் 90,000 ஆகவும்,
2011 ல் 1,20,000 ஆகவும் அதிகரிக்கின்றது.

இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களின் மத புனிதப் போரை பற்றி அறிந்த ஜெர்மனியர்களுக்கு இந்து மதம் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்து மதம் இந்தியாவில் படும் பாட்டினை அறிந்த மக்கள் இந்து மதம் மற்ற மதங்களை போல புனித போரையோ, மத திணிப்பையோ மேற்கொள்ளாதது இந்து மதத்தின் பெருமையை அறிய செய்துள்ளது.
மற்ற நாட்டினரைப் போல அல்லாமல் ஜெர்மனியர்கள் கொஞ்சம் வித்தியாசாமானவர்கள். மத சுதந்திரத்தையும், அறிவியலையும் கொண்டவர்கள். 2011ம் ஆண்டு கணக்கீன்படி 5.5 மில்லியன் மக்கள் தேவாலயத்திற்கு செல்வதை கைவிட்டுள்ளனர். விவிலியம் கூறுவதில் உள்ள பல அர்த்தமற்ற கருத்துகளையும், இயேசு ஒருவரே கடவுளை அடைவதற்கான வழி என்பதையும் நம்ப மறுக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணமாக உள்ளது இந்தியர்களின் “இந்துத்வா ” கொள்கையே! அங்கே உள்ள இந்துக்கள் மூலமாக பல அறிவியல் பூர்வமான உண்மைகளை அறிந்துள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம் வன்முறையாலே தங்களது மதத்தை பரப்பியதிற்கிடையே வன்முறையில்லாத மதமாக இந்து மதம் காட்சியளிக்கின்றது.
அதற்கான காரணங்கள்
1. எப்படியும் வாழாலாம் என்பவர்களுக்கிடையே இப்படி தான் நீ வாழ வேண்டும் என்று வரைமுறை வகுக்கின்றது இந்து மதம்.
2. இந்துக்களின் கல்வி முறைகள்.
3. இந்துக்களின் தர்மம் மற்றும் வாழ்க்கை தத்துவங்கள்.
4. இந்துக்களின் மத சுதந்திரம்.
5. அறிவியல் பூர்வமான சித்தாந்தங்கள்
6. இசை, கலை, நடனம், அறிவியல், பொருளாதார முறை, அரசியல் போன்றன.
7. இந்துக்களின் மத சகிப்புத் தன்மை.
8. குடும்ப வாழ்க்கை முறை மற்றும் அன்பு செலுத்துதல்,
என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இதற்கும் மேலாக இராமாயணம், மகாபாரத இதிகாசங்களை படித்து தெரிந்து கொண்டு இந்துக்களின் ஒரு அங்கமாக இந்து மதத்தை வளர்க்கின்றனர் ஜெர்மனியர்கள். விரைவில் இந்து மதம் பரவட்டும்! .