
மேக ராகக் குறிஞ்சி”
நடிகர் சங்கத்திற்காக டிராமா போடும் விஷால்: தல, தளபதிக்கு அழைப்பு இல்லை
சென்னை: நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட போடப்பட உள்ள பிரமாண்ட நாடகத்திற்கு அஜீத், விஜய்யை அழைக்கப் போவது இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி வசூலிக்கும் வகையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் கூடுதல் நிதி திரட்ட பிரமாண்ட நாடகத்தை நடத்த நடிகர் சங்க தலைவர் நாசர் திட்டமிட்டுள்ளாராம்.
இது குறித்து விஷால் கூறுகையில்,
நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளில் பிரமாண்ட நாடகத்தை நடத்த உள்ளார் நாசர். அதில் நான் இருக்கிறேனா என தெரியவில்லை. ஆனால் கமல் சார் நிச்சயம் இருப்பார்.
ரஜினி சார் போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அஜீத்தை அழைக்க வாய்ப்பே இல்லை. நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதற்கே விஜய் வரவில்லை. அதனால் நாடகத்திற்கும் அவரை அழைக்கப் போவது இல்லை என்றார்..
கமலும், வைரமுத்துவும் குடிக்க மாட்டார்கள் என்று நிரூபிக்க முடியுமா? : கவிஞர் சவால்
கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான நா.முத்துகுமார் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரின் மரணத்திற்கு காரணம், அதிகப்படியான மதுப்பழக்கம் என்றும், மஞ்சள் காமாலை என்றும், திடீரெனெ அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என்றும் பல்வேறு தகவல் கூறப்படுகிறது. முத்துக்குமாரின் மரணம் பற்றி கவிஞர் வைரமுத்து கருத்து கூறியிருந்த போது “படைப்பாளிகளே தங்களின் நீண்ட வாழ்க்கைக்கு அர்ப்பணிப்பதில்லை” என்று கூறியிருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்த போது “நா.முத்துக்குமார் மிக மெதுவாய் செய்த தன் நலம் பேணாத தற்கொலை” என்று கூறியிருந்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த, முத்துக்குமாருக்கு மிகவும் நெருக்கமான அந்த அறிவு கவிஞர் “சமீபத்தில் கவிஞர் ஞானக்கூத்தன் இறந்த போது, தமிழுக்கு அவர் செய்த பங்களிப்பு பற்றிதான் பேசினார்கள். முத்துக்குமாரை மட்டும் ஏன் இப்படி பேசுகிறார்கள்?. கமலும், வைரமுத்துவும் இப்படி பேசியுள்ளனர். கமலுக்கு எப்படி கால் உடைஞ்சதுனு தெரியுமா?. வைரமுத்துவிற்கு குடிப்பழக்கம் இல்லை என்று அவரால் நிரூபிக்க முடியுமா?
இங்கே எல்லோரும்தான் குடிக்கிறார்கள். ஏன் முத்துக்குமாரை மட்டும் கொச்சை படுத்துகிறார்கள்?. அவனின் பிள்ளைகள் வளர்த்து எதிர்காலத்தில் “என் தகப்பனை இந்த சமூகம் குடிகாரன் என்றுதான் நினைவில் வைத்துள்ளது” என்று நினைக்க மாட்டார்களா? என்று கொந்தளித்து விட்டாராம் அந்த கவிஞர்.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட கழக அலுவலகத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் .எம்.பி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சரித்திரம் பேசும் சாதனைகள் நிகழ்த்தும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது தமிழக முதல்வரின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் பாடு பட வேண்டும் என பேசினார்கள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் .எம்.பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இன்பதுரை எம்.எல்.ஏ,செவல் முத்துசாமி ,மாவட்ட இணைச் செயலாளர் ஞானபுனிதா ,மாவட்ட துணைச்செயலாளர் பாரதிபாக்கியம் ,மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் ,எம்.ஜி.ஆர் மன்ற பெரியபெருமாள ,அம்மா பேரவை இ.நடராஜன்,எம்.ஜி.ஆர் .மன்ற இளைஞர் அணி பால்துரை ,மகளிர் அணி பானு,மற்றும் மாவட்ட மாணவர் அணி முருகேசன் ,மருத்துவர் அணி டாக்டர் அருணா ,விவசாய அணி முருகேசன் ,சிறுபான்மை பிரவு கேப்ரியல் ராஜா .மாவட்ட பாசறை செயலாளர் மு.சேர்மபாண்டியன் .,தொழில் நுட்ப பிரிவு சாந்தசீலன் ,ஒன்றிய செயலாளர்கள் சங்கர பாண்டியன் ,நடராஜன் ,அருள்ராஜ்,ராம்குமார் ,கருத்த்பண்டி,இராமசுப்பிரமணியன் ,அழகானந்தா ,ஜெயராமன்,செல்வராஜ்,ஆலங்குளம் பாண்டியன் ,கருத்தபாண்டியன் ,அந்தோணி அமல் ராஜா ,பேரூர் கழக செயலாளர்கள் கார்த்திக்,மயில் தேவன்,பண்டாரம்,செந்துர்பாண்டியன் ,பாஸ்கர் ,சுப்பிரமணியன் ,சங்கர் ,மரியஜெசியம் ,ராமையா ,தங்கவேலு,சுடலைகண்னு ,அசோக்குமார் ,தவசிமுத்து ,செல்வராஜ்,முருகன் உப்பட மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ,மற்றும் ஒன்றிய ,நகர,பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்
கணேசினி வடிவம்
கணேசினி வடிவம்:
பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையாரை கணேசினி என்றும், கஜானனி என்றும் அழைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண் வடிவத்துடன் நிற்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில், சுவாமி சந்நிதி நுழைவு வாசலில், கணேசினியின் திருவுருவம்
பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி எனப்படுகிறார்.
‘கொள்ளு யோகம்!’

‘கொள்ளு யோகம்!’
(குதிரையின் மேல் கருணை)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
மகாராஷ்டிர மாநிலத்தில் யாத்திரை.
உடல் மெலிந்து முதுமையடைந்த ஒரு குதிரையும்
யாத்திரை கோஷ்டியுடன் வந்து கொண்டிருந்தது.
பெரியவாளுக்கு அந்தக் குதிரையின் மேல் கருணை
பிறந்தது.
மராத்திய செல்வந்தர் ஒருவர் பெரியவாளுடன்
வந்துகொண்டிருந்தார். பெரியவா அவரிடம்,
“இந்தக் குதிரைக்கு வயதாகிவிட்டது. இனிமேல்
உபயோகமில்லை என்றதும் அதன் சொந்தக்காரர்,
முடியாமல் தவிக்கிறது. இந்தக் குதிரையை
நீங்கள் வீட்டுக்குக் கொண்டுபோய்,புல்லு,கொள்ளு,
தண்ணீர் கொடுத்து கடைசிவரை ரட்சித்து வாருங்கள்”
மராத்தியருக்கு ரொம்ப சந்தோஷம்.
“பெரியவா என்னை ஒரு பொருட்டாகக் கருதி என்னிடம்
ஒரு சேவையை ஒப்படைத்திருக்கிறாரே!” என்று
மறுநாள் முதல், குதிரைக்கு அடித்தது
‘கொள்ளு யோகம்!’
அவரசக் கல்யாணமா? வேண்டவே வேண்டாம்: அலறும் அனுஷ்கா சர்மா!
விராட் கோலி – அனுஷ்கா சர்மா… இவர்களின் காதல் வாழ்க்கை தற்போது ஊடகங்களின் வெளிச்சம் இல்லாமல் ரகசியமாக பயணித்து கொண்டிருக்கிறது. பெற்றோர்களின் முன்னிலையில் வீட்டில் சந்திப்பது, உறவினர்களின் திருமணங்களில் ரகசியமாக கலந்து கொள்வது… என கேமரா கண்களில் சிக்காமல் தங்கள் காதலை பரிமாறிக் கொள்கிறார்களாம்.
‘ஏன் இந்த இருள் வாழ்க்கை…?’
அனுஷ்காவைக் கேட்டால்… ‘நல்ல செய்தி சொல்லும் வரை இருள் வாழ்க்கையே நல்லது…!’ என்கிறார்.
‘சரி…! ஏதாவது ஒரு கட்டத்தில் அவசர… அவசரமாக திருமணம் செய்து கொள்வீர்களா…?’ என்றால்,
‘அவசர திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை…!, என்னுடைய தோழிகள் அனுபவிக்கும் கஷ்டங்களே போதும்…!’ என்கிறார்.
‘அவசர திருமணம்’ என்றாலே பதறும் அனுஷ்கா, அதுபற்றிக் கூறியபோது,
“பொதுவாக காதல் திருமணங்கள்தான் அதிகமாக பிரிவினையை சந்திக்கின்றன. இதன் அடிப்படைக் காரணங்களில் ‘அவசரக் கல்யாணம்’ தான் முதலில் நிற்கிறது. காதலைச் சொல்லி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, வீட்டில் பெரியவர்களின் அனுமதியோடு நடக்கும் காதல் திருமணங்களை விட, அவசர அவசரமாக தங்களது திருமணங்களை நடத்திக் கொள்ளும் காதலர்கள் விரைவில் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறிவிடுகிறார்கள்.
காதலர்கள் தங்களது காதலைச் சொல்ல வேண்டுமானால் அவசரம் காட்டலாம். அதில் தவறில்லை. ஆனால் கல்யாணம் செய்து கொள்ள அவசரப்படவே கூடாது. நிதானமாக தங்களது நிலைமையை ஒருவருக்கொருவர் புரிய வைக்க வேண்டும். தங்களது வருங்காலத்தை பற்றி தெளிவாக பேசி ஒருமித்த கருத்துக்கு உடன்பட வேண்டும். அதற்கான வேலைகளில் தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்” என்று கூறும் அனுஷ்கா, காதலிப்பவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்குகிறார்.
“பொதுவாக காதலிப்பவர்கள்…. வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம், தங்கள் காதல் விவகாரத்தை கூறி அவர்களிடம் அனுமதி பெற முயற்சிக்க வேண்டும். சில காலம் பொறுத்திருந்து அவர்களது மனதில் இடம் பிடிக்கவும், நம் காதல் மீதான உறுதியை காட்டவும் அவகாசம் அளிக்க வேண்டும்.
அதற்கு பிறகும் அவர்களுக்கு எதிர்ப்பு அதிகரித்தால், அப்போது வீட்டை விட்டு வெளியேறுவதோ, சுயமாக திருமணம் செய்து கொள்வதோ தவறில்லை. ஆனால், காதல் விவகாரம் வீட்டில் தெரியவரும் போது, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறி அவசர அவசரமாகத் திருமணத்தை முடித்து கொண்டால், காதல் வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்துவிடும். அவசரக் கோலத்தில் இல்லற வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் காதலர்கள் இருவருமே வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றை இழந்து, கிடைத்ததைக் கொண்டு வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.
ஓரளவிற்கு வசதியான குடும்பத்தில் இருந்து வந்த ஆணோ, பெண்ணோ, திடீரென தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களை திருமணமான புதிதில் வேண்டுமானால் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அதையே வாழ்நாள் முழுவதும் சகித்துக் கொள்ள முடியாதவர்களாக ஒரு காலக்கட்டத்தில் திருமணத்தையே வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்ததாக தாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தனது வாழ்க்கைத் துணையின் மீது தங்களது கோபத்தை திருப்புவார்கள்.
என்னுடைய தோழிகளில் சிலர் இன்று அப்படிப்பட்ட ஒரு கசப்பு வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், அவசரக் கல்யாணத்தினால் இருவருமே தங்களது பெற்றோர், உறவினர்களின் ஆதரவினை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது, காதல் ஜோடிகளை தனிமை நிலைக்கு தள்ளிவிடும். ‘இத்தனை கஷ்டங்களை தரும் அவசர திருமணம் வேண்டுமா…?’ என்பதை பலமுறை யோசித்து அதற்கு பின்னர், முடிவெடுங்கள்” என்று அறிவுரை தருகிறார்.
10 ரூபாயில் ஜோக்கர் படம் பார்க்கலாம்
மக்கள் பிரச்னைகளை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ஜோக்கர். இப்படம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பத்தூர் ஸ்ரீ ராமஜெயம் தியேட்டரில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 4 காட்சிகளுக்கும் 10 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட இருக்கிறது.
நல்ல சினிமாவை பொது மக்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இதைச் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கணையின் சகோதரத்துவக் கடிதம்
ரக்ஷா பந்தன் விழாவையொட்டி முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை சாந்தி செளந்திரராஜன் பிரதமர் மோடிக்கு சகோதரத்துவ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், ”என்னுடைய மூத்த சகோதரராக உங்களை நான் பார்க்கிறேன். ரக்ஷா பந்தன் வாழ்த்துத் தெரிவித்த இந்தத் தங்கையை ஏன் மறந்துவிட்டீர்கள்? அநீதி இழைக்கப்பட்ட எனக்கு என்ன பரிசுப்பொருள் கொடுக்கப் போகிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.
”நான் மட்டும் ஏன் புறகணிக்கப்பட்டுள்ளேன்?”
”என்னைப்போன்று பாலினச் சோதனையில் சிக்கியவர் ஒடிசா வீராங்கனையான டூட்டி சந்த். அவர், தனது தடைக்கு எதிராகச் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்தத் தடை விலக்கப்பட்டு, அவர் தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இருவருக்குமே ஒரே பிரச்னைதான். ஆனால், அவருக்கு மட்டும் நீதி கிடைத்துள்ளது. நான் மட்டும் ஏன் புறக்கணிக்கப்பட்டு உள்ளேன். டூட்டி சந்தின் நியாயமான போராட்டத்துக்கு அந்த மாநிலம் முழுவதுமாக ஒத்துழைப்பு அளித்தது. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக விவாதங்கள் நடைபெற்றன. என் தடை மீது மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு மட்டும் ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை?
ரக்ஷா பந்தன் விழாவை நீங்கள் கொண்டாடி வருகிறீர்கள். என் சகோதரா… உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். என்னை மட்டும் ஏன் மறந்துவீட்டீர்கள்? 10 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால், என் நீதிக்கான கேள்விகளுக்கு மட்டும் இதுவரை ஏன் பதில் கிடைக்கவில்லை. பாலினச் சோதனையால் சிறந்த வீரர்கள் தடை விதிக்கப்படுகிறார்கள். ‘எனக்குத் தடை விதிக்கவில்லை’ என்று இந்திய விளையாட்டு ஆணையம் சொல்கிறது. அவ்வாறு எனக்கு தடை விதிக்கவில்லை என்றால், என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது? இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளை எண்ணும்போது மிகவும் அதிருப்தி அளிக்கிறது. ஒரு விளையாட்டு வீரருக்கு ஊக்குவிப்பும், மற்றொரு விளையாட்டு வீரருக்குத் தடைவிதிப்பும்தான் இந்த நாட்டின் நீதியா? வீளையாட்டு வீரர்களுக்காக Run with Rio போன்றவற்றைச் செயல்படுத்தி வருகிறீர்கள். உங்களிடம் கேட்கிறேன்… என்னுடைய போராட்டத்துக்கான நீதியைக் காப்பற்றுங்கள். இந்தச் சகோதரியை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று மோடிக்கு சாந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக சாந்தியை தொடர்புகொண்டபோது, ”நான் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதாலும், ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றி நடப்பதாலும் மீடியாக்களிடம் எதுவும் பேச முடியாது” என்றார்.
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பாலின விதிகளை எதிர்த்துப் போராடிவரும் கோபிசங்கர், ”ஒடிசாவைச் சேர்ந்த தடகள வீராங்கனையான டூட்டி சந்துக்கு டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி, அவரைத் தகுதி நீக்கம் செய்தது இந்திய தடகள சம்மேளனம். தடகளப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ஒருவரை ஆண் என்றும், பெண் என்றும் எவ்வாறு நிர்ணயம் செய்கிறீர்கள்? ஹார்மோன்களை அடிப்படையாகவைத்து மட்டும் பாலினத்தை நிர்ணயம் செய்வது முற்றிலும் அறிவியல் பூர்வமற்றது. பெண் தன்மையை உறுதி செய்வதற்காகத் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது. எனவே, சர்வதேச தடகள விளையாட்டுச் சம்மேளனம், பாலினப் பரிசோதனை முறை மற்றும் விதிமுறைகள் பற்றி 2 ஆண்டுகளுக்குள் திருப்தி அளிக்கும் வகையில் பதில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், பாலினப் பரிசோதனை நடைமுறை ஒட்டுமொத்தமாக நீக்கப்படும்’ என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில், ஓர் ஆண், தான் ஓர் ஆண்தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்கள் மட்டும் தங்களைப் பெண் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விதிமுறையால் சர்வதேச அளவில் இதுவரையில் 75 வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டூட்டி சந்து விவகாரத்துக்குப் பிறகு சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தின் புதிய உத்தரவு மூலம் விளையாட்டுத் துறையில் பாலினச் சமத்துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. டூட்டி சந்துக்கு 2 ஆண்டுகளுக்குள் நீதி கிடைத்துள்ளது. அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தடை விலகிவிட்டது. கடந்த 2006-ம் ஆண்டு இதே விதியின் அடிப்படையில்தான் சாந்தி செளந்திரராஜனிடம் பதக்கங்கள் பறிக்கப்பட்டதோடு, போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லையே” என்றார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் குளறுபடியா?
சாந்தி, டூட்டி சந்த் இருவருக்குமே ஒரே பிரச்னைதான். இதில், ஒருவருக்கு நீதி கிடைத்துள்ளது. மற்றொருவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை சாந்திக்கு பாலினச் சோதனை ரிப்போர்ட்கூட கொடுக்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தேசிய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகிய அமைப்புகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சாந்திக்கு ஒரு பதிலும்… சாந்தி சார்பாக மற்றொருவர் கேட்ட கேள்விக்கு வேறொரு பதிலும் வந்துள்ளது.
தகவல் உரிமைச் சட்டத்தில் சாந்தி கேட்ட கேள்விக்கு வந்துள்ள பதில்!
1. பாலினச் பரிசோதனை அறிக்கை எனக்கு வழங்க வேண்டும்?
உங்கள் அடையாளத்தை நிரூபித்துவிட்டு, இந்திய தடகள சங்கத்திடம் இருந்து அறிக்கையை வாங்கிக்கொள்ளுங்கள்.
2. என்னைப் பாலினச் பரிசோதனை செய்த அறிக்கையை நீங்கள் எப்படி நியாமான ரிபோர்ட் என்று நம்புகிறீர்கள். அதற்குப் பதில் கொடுங்கள்? எதைவைத்து, செல்லும்… செல்லுபடியாகாது என்ற முடிவுக்கு வந்தீர்கள்?
அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தம் இல்லை.
3. பாலினப் பரிசோதனையில் தோல்வி அடையும் வீராங்கனைகள் தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று தடை இருக்கிறதா? அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா… அந்த ஆணையைக் கொடுங்கள்?
அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்மபந்தம் இல்லை.
4. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதா?
இந்திய ஊக்க மருந்து தடுப்புக் குழுவின் விசாரணைக்கு நீங்கள் வராததன் காரணமாக அதைப் பற்றி நாங்கள் மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை.
இந்தக் கேள்விகளை சாந்தி சார்பாக மற்றொருவர் கேட்டபோது சில கேள்விகளுக்கு பதில்கள் மாறியுள்ளன. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘தடை விதிக்கவில்லை’ என்று பதில் அளித்துள்ளனர். ஆனால் சாந்தியின் கேள்விக்கோ, ‘இந்திய ஊக்க மருந்து தடுப்புக் குழுவின் விசாரணைக்கு நீங்கள் வராததன் காரணமாக அதைப் பற்றி நாங்கள் மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை’என்று கூறியுள்ளனர். இந்தப் பதிலுக்கு சாந்தி தரப்பில், ”அதுபோன்ற அழைப்பு தமக்கு வரவில்லை என்றும், விசாரணையும் நடைபெறவில்லை” என்றும் கூறுகின்றனர்.
சாந்திக்கு தடை செய்யப்பட்ட விவகாரத்தில், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தை ஆய்வுக்கு உட்படுத்தினால் மட்டுமே ஓர் உண்மையான வீரரின் அடையாளம் வரலாற்றில் பதிவாகும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
செக்ஸ் பொம்மைக்கு மனைவியின் உடையை அணிவித்து கொஞ்சி மகிழும் டாக்டர்
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சாங்சூ நகரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஷாங் வென்லியாங். இவருக்கு வயது 70 ஆகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டிருந்த ஷாங்கின் மனைவி, ஓராண்டிற்கு முன்பு புற்றுநோயால் மரணமடைந்தார். மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்து வந்த அவர், ஒரு மாதத்திற்கு பிறகு 16000 யுவான் ( சுமார் ரூ. 1 லட்சத்து 61 ஆயிரம் ) கொடுத்து செக்ஸ் பொம்மை ஒன்றை வாங்கி வந்தார்.
அந்த பொம்மையை தனது மனைவியாகவே பாவித்த ஷாங், அதற்கு தனது மனைவியின் உடையை போட்டு விட்டு, அதனுடன் கொஞ்சிப் பேசி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த பொம்மை சேதம் அடைந்துள்ளது. இதனால் கோபமடைந்த அவர், பொம்மையின் தயாரிப்பாளரிடம் இழப்பீடும் கோரியுள்ளார்.

