Home Blog Page 5749

பி.வி.சிந்துவுக்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை:
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் இறகு பந்தாட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை பி.வி. சிந்து சிறப்பாக விளையாடி வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது. அவருக்கு தமிழ்நாடு இறகு பந்தாட்ட சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒலிம்பிக் இறகு பந்தாட்டத்தில் சிந்து தங்கம் வெல்ல வேண்டும் என்பது தான் இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நோக்குடன் சிந்து தொடக்கம் முதலே கடுமையாக போராடினார். உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கரோலின் மரினை இந்தளவு போராட வைத்ததே சிந்துவின் சாதனை தான். அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றியை விட போராட்டத்திற்கு பின் கிடைத்த தோல்வி பெருமையானது. அந்த பெருமை சிந்துவுக்கு கிடைத்துள்ளது.
இறகு பந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பெருங்கனவு என்பது அனைத்து இங்கிலாந்து ஓபன் இறகு பந்தாட்ட சாம்பியன் பட்டம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வதாகவே இருக்கும். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல முடியவில்லை என்றாலும் வெள்ளி வென்றிருப்பது சாதாரண சாதனையல்ல மாறாக இமாலய சாதனை. இதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்; எத்தனை பூங்கொத்து, வெகுமதிகள் வழங்கினாலும் அவை போதாதவையாகவே இருக்கும்.
ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய போது இந்தியா ஏராளமான பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நாளுக்கு நாள் தோல்விகளே பரிசாக கிடைத்ததால் இந்திய ரசிகர்களின் இதயங்களில் ஏமாற்றமே குடியேறியது. இரசிகர்களின் இதயங்களே ஏமாற்றத்தில் துவண்ட போது, தனது சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் தாக்கம் தம்மை அண்ட விடாமல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது போற்றத்தக்க சாதனையாகும்.
இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட் தான் என்றாகிவிட்ட சூழலில் இறகுபந்தாட்டத்தில் உலக அளவில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் சாதனை படைத்து வருவது இந்த ஆட்டத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதைகளை விதைத்திருக்கிறது. வீராங்கனை சிந்துவும், அவரது பயிற்சியாளர் கோபிசந்துவும் தான் இதற்குக் காரணம் ஆகும். கோபிசந்த் மட்டும் இல்லாவிட்டால் சாய்னா நேவால்களும், சிந்துக்களும் உலக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்களா? என்பதே சந்தேகம் தான். இனிவரும் காலங்களில் இந்தியாவிலிருந்து உலகத்தரம் வாய்ந்த இறகு பந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உருவாவதற்கு சிந்துவின் இந்த சாதனை வெற்றியும், கோபிசந்தின் அயராத உழைப்பு மற்றும் பயிற்சியும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சிந்து இளம் வீராங்கனை. இன்னும் பல ஆண்டுகளுக்கு அவரால் இறகு பந்து போட்டிகளில் விளையாட முடியும். இந்த போட்டியில் வெள்ளி வென்ற சிந்து, அடுத்த ஒலிம்பிக்போட்டியில் நிச்சயம் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்; அதற்காக அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

சென்னையில் எம்.வி.அனந்தபத்மநாபாசாரியரின் தொடர் சொற்பொழிவு

சென்னை:
ஜன்மாஷ்டமி உத்ஸவம் சென்னை ஸ்ரீராமபக்த ஜன சமாஜத்தின் சார்பில் கொண்டாடப் படுகிறது.
ஆக. 19 முதல் ஆக. 25ம் தேதி வரை தினமும் மாலை 6.30க்கு சென்னை மேற்கு கே.கே.நகர்., வேம்புலியம்மன் கோவில் தெரு, மீனாட்சி பொறியியற் கல்லூரியின் ஏஎன்ஆர் அரங்கில் ஸ்ரீ.உ.வே. எம்.வி. அனந்தபத்மநாப ஸ்வாமியின் தொடர் உபந்யாசம் நடைபெறுகிறது.

சைக்கோ டாக்டர் சைக்கோவானால்?: சொல்கிறது ‘ஒரு முகத்திரை’

பேஸ்புக் தான் கதாநாயகன் பேஸ்புக் தான் வில்லன். ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர், சைக்காலஜிக்கல் ஸ்டூடண்ட், ஐடி துறையில் வேலை செய்யும் இளைஞர் இவர்களை சுற்றி பின்னப்பட்டுள்ளது. சைக்காலஜிக்கல் டாக்டர் சைக்கோவானால் என்ன நிகழும் என்பதை த்ரில்லர் ஆக சொல்லி இருக்கிறார் இயக்குனர் செந்தில்நாதன்.
Oru Mugathirai

Oru Mugathirai Is A Psychiatric Psychology Thriller. ..Facebook Is Used As A Prime Factor In The Story.. The Movie’S Screenplay Is Spun In Different Way, Which Has Not Been Experimented In Indian Cinemas..On The Whole The Movie Depicts The Dark Side Of Each Individual.

“There is no particular hero and heroine in this movie the hero is Facebook and Villain is Facebook The Story revolves around the psychiatrist and Psychology Student, Who are being connected to other characters through the screenplay of the story.

Title Name: ORU MUGATHIRAI (Tamil Straight)

Artist List :

Rahman

Shures R (New Face)

Aditi Acharaya (New Face)

Devika

Shruthi (New Face)

Delhi Ganesh

Meera Krishnan

Swaminathan

Chams

Balaji

Ravi

Rekha Suresh

Pandu

Master Mithilesh

Baby Shakthi Abirami

Technicians:

Produced By : R.Selvam

Story,Screenplay,Direction : R.Senthil Nadan

Cameraman : Sharavana Pandian

Editing : S.P.Ahmed

Music : Premkumar Sivaperuman

Art : Vinod Raveendran

Lyrics : Madhankarky,Annamalai,Priyan,Gee Pee

Dance : Poppy, Arun Kumar

Stunt : Billa Jagan

Production Executive : Kanoor Nirmal

P R O : Nikkil

Lab : REAL IMAGE

உருவாகிறது ஒரு திரில்லர் பேய்க் கதை – மெர்லின்!

JSB FILM STUDIOS வழங்கும் “மெர்லின்” ஒரு திரில்லர் பேய்க்கதையாக உருவாகி வருகிறது.

சென்னையின் ஒண்டுக்குடித்தனங்களில் வசிக்கும் கோடம்பாக்க கனவுலகவாசி உதவி இயக்குனர் வெற்றி. அவனது அறையில் எப்போதும் நண்பர்கள் கூட்டம். படம் இயக்கும் முயற்சியில் இருக்கிற வெற்றிக்கு நடிகர் தினேஷிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. கதையை கேட்ட தினேஷ் முழுக்கதையையும் ஒரு வாரத்திற்குள் சொல்ல வேண்டும் என நாள் குறிக்கிறார். ஒரு வாரத்திற்குள் கதை சொல்வதற்காக அறையில் கதை எழுத ஆரம்பிக்கிறான் வெற்றி. அவனால் அறை நண்பர்கள், வெளி நண்பர்களின் தொந்தரவால் கதை எழுத முடியவில்லை. நண்பர்கள் வரவை குறைக்கவும், கதையை எழுதி முடிக்கவும் வெற்றி பல வகையில் முயன்று தோற்று, நண்பர்களை பயமுறுத்துவதற்காக தான் இருக்கும் இந்த அறையில் ஒரு பேய் இருப்பதாகவும் அது ஏற்கனவே பல பேரை கொன்றதாகவும் சொல்கிறான்.
நண்பர்கள் அச்சமடைகிறார்கள் ஆனால் உண்மையிலேயே அவனை ஒரு பேய் துரத்துகிறது. புனைந்த கதையே உண்மையாக நடக்க துவங்குகிறது. அவனது மனதுக்கும், உண்மைக்குமான போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. உண்மையிலேயே பேய் இருக்கிறதா… அந்த பேய் யார்… எதனால் அவனது வாழ்க்கை பல திருப்பங்களாக மாறுகிறது என்பது விரிவான திரைக்கதை… கதை மூன்று கால கட்டங்களில் நடக்கிறது.

இது குறித்து இயக்குனர் கீராவிடம் கேட்டபோது…
அழகான திரில்லர் பேய் கதை. 3 கால கட்டங்களில் நடக்கிற கதை. கதைப்படி ஹீரோ வெற்றி எப்படியாவது இயக்குனர் ஆக வேண்டும் என்று வாய்ப்பு தேடுகிறார்.
தினேஷ் நடிக்க பவர்ஸ்டார் தயாரிப்பில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கதையின் கரு பிடித்து போவதால் ஒரு வாரத்திற்குள் முழுகதையையும் சொல்ல வேண்டும் என நடிகர் தினேஷ் கூறுவதால் கதை எழுத அறையிலேயே இருக்கிறார்.
கதை எழுத தொடங்கினால் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் அடிக்கடி வ ந்து போவதால் கவனம் சிதறுகிறது. இ ந்த அன்பு தொல்லையில் இரு ந்து தப்பிக்க குடியிருக்கும் வீட்டில் கன்னிப்பேய் இருப்பதாக ஒரு பொய் கதையை சொல்கிறார் இயக்குனர் வெற்றி.
அதோடு அ ந்த கதைய வீட்டின் கீழே இருக்கும் வயதான பாட்டி சொன்னதாகவும் பேய் உண்மையை சொல்லிவிட்டதால் எ ந்த நேரமும் தான் அ ந்த பேயால் கொல்லப்படலாம் எனவும் சொல்லும் பாட்டி திடீரென இறந்து போக பேய் கதை கேட்ட நண்பர்கள் அதிர்ச்சியடை ந்து அ ந்த வீட்டுப்பக்கம் வருவதையே நிறுத்தி விடுகிறார்கள்.
இயக்குனர் வெற்றி பொய்யாக உருவாக்கிய பேய் கதை நிஜமானதா… கதையை எழுதி முடித்தாரா… உண்மையில் பேய் என்ற ஒன்று இருக்கிறதா… இதற்கெல்லாம் விடை சொல்வதுதான் மெர்லின் கதை. ஜே.எஸ்.பி.பிலிம்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஜே.எஸ்.பி.சதீஷ் பெரும் செலவில் தயாரிக்கிறார்.

ஹீரோ – விஷ்ணுபிரியன்
ஹீரோயின் – அஸ்வினி
நட்புக்காக – தினேஷ்
நடிகர்கள்
‘ஆடுகளம்,விசாரணை’ முருகதாஸ், லொல்லுசபா ஜீவா, சிங்கம்புலி, மனோபாலா, தங்கர்பச்சான், மு.களஞ்சியம், ரிசா, ‘நான் மகான் அல்ல’ ராமச்சந்திரன், ஆதவன், ‘கயல்’தேவராஜ், வினோத், ஆதித்யா, கம்பம் மீனா, வீரசந்தானம், வைசாலி,

தொழில் நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு- முத்துக்குமரன்
படத்தொகுப்பு – சாமுவேல்
இசை – கணேஷ் ராகவேந்திரா
கலை – ந.கருப்பையா
பாடல் – யுகபாரதி,சாவி, கு.கார்த்திக், வ.கீரா
பாடகர்கள் – மரண கானா ‘விஜி’, சைந்தவி, பிரியங்கா, கணேஷ் ராகவேந்திரா,குரு, முருகதாஸ்
டிசைன் – இ.எல்.சிகா
ஒப்பனை – பழனி
சண்டை – ‘Fire ‘ கார்த்தி
நடனம்- சங்கர்
உடை – வரதன்
தயாரிப்பு நிர்வாகம் – சங்கர்
மக்கள் தொடர்பு – இரா. குமரேசன்
இயக்கம் – வ.கீரா
இணை தயாரிப்பு – J. பாலாஜி
தயாரிப்பு – J. சதீஷ்குமார்

‘கும்பேஸ்வரன்’னு பேர் வை..”

20fr_mahaperiyava10_634796g

‘கும்பேஸ்வரன்’னு பேர் வை..”

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

செல்லையா முதலியார் தம்பதிகளுக்குக்
குழந்தைகள் இல்லை.

பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

“ரெண்டு பேரும் பிரதோஷ விரதம் இருங்கோ.

அன்னிக்கு சாயரட்சை சிவதரிசனம் பண்ணிவிட்டு
பலகாரம் பண்ணலாம்.சுவாமி அபிஷேகத்துக்கு
ஒரு குடம் நிறைய பால் கொடுக்கணும். குடத்தை,
கோயிலிலேயே வெச்சுட்டு வந்துடு…. யார்
வேணுமானாலும் எடுத்துண்டு போகட்டும்….”

தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது.
பெயர் வைக்கணுமே?.

பெரியவாளிடம் வந்தார்கள்.

” நீ குடம் குடமா பாலபிஷேகம் பண்ணியிருக்கே.
குடம்னா, கும்பம். கும்பத்தினால் ஈஸ்வரனுக்கு
அபிஷேகம்!.. ‘கும்பேஸ்வரன்’னு பேர் வை..”

 
முதலியார் தம்பதிகள் ஆட்சேபிக்கவில்லை.
‘எங்கள் குடும்பத்தில் இந்த பெயர் சூட்டுவது
வழக்கமில்லை என்று முணுமுணுக்கக்கூட இல்லை’!

‘கும்பேஸ்வரனை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்.!

கீழப்பாவூரில் மின்சாரவாரியம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

0

கீழப்பாவூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நெல்லை மாவட்டம், தென்காசி கோட்ட அளவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கீழப்பாவூர் நேருநகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு தென்காசி செயற்பொறியாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மேலும் மின் உற்பத்தி உதவி செயற்பொறியாளர், சுரண்டை, தென்காசி மற்றும் தென்காசி கோட்டத்திலுள்ள உதவி மின் பொறியாளர்கள், இளமின் பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள், வயரிங் காண்ட்ராக்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் அதிகாரிகள் மின்சார சிக்கனம் ,மின்சார பாதுகாப்பு ,மற்றும் மின்சாதனங்களை கையாளும் முறை மற்றும் எல்.ஈ.டி பல்புகள் பயன்படுத்தவும் அதன் பயன்கள் குறித்து பேசினார்கள் மேலும் மின்வாரிய ஊழியர்கள் தங்களின் அனுபவங்களை பொதுமக்களோடு பகிர்ந்துகொண்டனர்
கலந்து கொண்ட பொதுமக்கள் மின்சாதனங்களை தாங்கள் கையாளும் விதம் குறித்தும் மின்பாதுகாப்பு சம்பந்தமாக தங்களது சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்டன

வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து

இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ளது. பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ரியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் தோற்றதால், வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார் பி.வி.சிந்து.

பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் வெள்ளி வென்று பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து ஆடிய கரோலினா மரினிடம் 21-19, 12-21, 15-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்ததன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

முன்னதாக நேற்று இரவு நடந்த அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் ஓகுஹரா நஸோமியை, 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய இந்தியாவின் பி.வி.சிந்து, ஒலிம்பிக் பேட்மின்டன் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பெயினின் கரோலினா மரின், 2 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான வீராங்கனையான அவரது சவாலை எதிர்த்து விளையாடிய சிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள முதல் வெள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவுக்கு இது 2வது பதக்கமாகும்.

ஒலிம்பிக்கில் இதுவரை 4 இந்திய வீராங்கனைகள் மட்டுமே பதக்கம் வென்றுள்ளனர். அவை அனைத்துமே வெண்கலம். தற்போது பி.வி.சிந்து வெள்ளி வென்ற இந்திய வீராங்கணை என்ற சாதனையை படைத்துள்ளார். இதனால் ஒலிம்பிக்கில் வெண்கலம் அல்லாத பதக்கத்தை கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கு பி.வி.சிந்து சொந்தக்காரரானார்.

நேதாஜியின் மர்மங்கள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பைசாபாத் நகரில் கும்நாமி பாபா என்ற பெயரில் 1985-ம் ஆண்டுவரை உயிரோடு வாழ்ந்ததாக வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதியை கொண்ட விசாரணை கமிஷனை அமைத்து உத்தரப்பிரதேசம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

லக்னோ:

இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மனி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, இயந்திரக்கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது மரணம் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த 1956ம் ஆண்டு ஷா நவாஸ் கமிட்டியும், 1999ம் ஆண்டு முகர்ஜி கமிஷனும் அமைக்கப்பட்டது. 2005ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முகர்ஜி கமிஷன் அறிக்கையில், 1945ம் ஆண்டு நேதாஜியின் விமானம் எரிந்து விழுந்ததாக கூறப்படும் இடத்தில் அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கடந்த 70 ஆண்டுகளாக நிலவி வரும் நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மமுடிச்சு, இதுவரை அவிழ்க்க முடியாத கல்முடிச்சாகவே இருந்து வருகிறது.

நேதாஜி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் தலைமையக அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த 64 கோப்புகளை சமீபத்தில் மம்தா பானர்ஜி வெளியிட்டார். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து பணியாற்றி, பின்னர், காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிவந்த டெப்நாத் தாஸ் என்பவரைப் பற்றிய போலீசாரின் உளவுத்தகவல்கள் மேற்கண்ட 64 கோப்புகளில் 22-ம் எண் கோப்பில் காணப்படுகிறது.

அவரது கருத்தின்படி,1948-ம் ஆண்டுவரை சீனாவின் மன்சூரியா பகுதியில் நேதாஜி உயிருடன் வாழ்ந்ததாகவும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மூன்றாம் உலகப்போர் வெடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா மற்றும் சர்வதேச அரசியலின் போக்கை அவர் உன்னிப்பாக கவனித்து வந்ததாகவும் தெரியவந்தது.

இதற்கிடையில், நேதாஜியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவரான சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் டக்கோவா கிராமத்தில் தற்போது வசித்து வருகிறார். தனக்கு 115 வயதாவதாக கூறும் நிஜாமுதீன், நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களில் ஒருபகுதி வெளியாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்திருந்தார்.

‘கடைசியாக நேதாஜியை 1947-ம் ஆண்டு நான் சந்தித்தேன். அவரை ஒரு காரில் அழைத்துவந்து, பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம். மிகவும் குறுகலான அந்த நதி, இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கக் கூடியது. அங்கிருந்து அவரை எங்கோ அழைத்துச் செல்வதற்கு கடலில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயார் நிலையில் காத்திருப்பதாக கூறப்பட்டது.

அவர் படகில் ஏறிச்சென்ற சில நிமிடங்களில், நேதாஜியை நாங்கள் அழைத்து வந்த கார் மீது அங்கு வந்த ஒரு போர் விமானம் குண்டு வீசித் தகர்த்துவிட்டு சென்றது. நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். என்னுடன் இருந்த சிலர் மரணம் அடைந்தார்கள்’ என்று அந்த பேட்டியின்போது அவர் தெரிவித்திருந்தார்.

1945-ம் ஆண்டு நேதாஜி இறந்து விட்டதாக அவரது வரலாற்றின் சந்தேகத்துக்குரிய பகுதி கூறுகின்றதே..? நீங்கள் 1947-ம் ஆண்டில் அவரை சந்தித்ததாக சொல்கிறீர்களே..? என்ற நிருபரின் கேள்விக்கு ‘இந்தியன்’ தாத்தா பாணியில் ஒரு மர்மப் புன்னகை உதிர்த்தபடி, பதில் அளித்த நிஜாமுதீன், ‘ஆமாம், அவர் மரணம் அடைந்து விட்டதாக வானொலியில் அப்போது வாசிக்கப்பட்ட செய்தியை எங்களுடன் சேர்ந்து அவரும் கேட்டுக்கொண்டிருந்தார்’ என்று தெரிவித்திருந்தார்.

அவரது மரணச் செய்தியை அவரே வானொலியில் கேட்டதாக வந்த திடுக்கிடும் தகவலையடுத்து, 1952-ம் ஆண்டு வரை சர்தானந்தா முனிவராக வாரணாசி குகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்ந்ததாக மற்றொரு தகவலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதவாக்கில் வெளியானது.

மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஷியாமாச்சரண் பாண்டே என்பவர், தனது தந்தையான கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட சில விபரங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

அந்த குறிப்புகளின் அடிப்படையில் நேதாஜி 1945-ம் ஆண்டு இறந்ததாக கூறப்படும் வரலாறு தவறானது என அவர் சுட்டிக் காட்டியிருந்தார். 1952-ம் ஆண்டுவரை நேதாஜி வாரணாசியில் உள்ள ஒரு குகையில் சர்தானந்தா முனிவர் என்ற பெயரில் ரகசியமாக வாழ்ந்து வந்ததாகவும் ஷியாமாச்சரண் பாண்டே மத்திய அரசிடம் ஆதாரத்துடன் தெரிவித்தார்.

இதற்கு ஆதாரமாக நேதாஜிக்கும் தனது தந்தை கிருஷ்ணகாந்த்துக்கும் இடையில் நடைபெற்ற கடித தொடர்புகளையும் அவர் ஆவணப்படுத்தி இருந்தார்.

2-12-1951 அன்று கங்கை-மோமதி ஆற்றங்கரை பகுதியில் நைந்துப்போன உடையில் இருந்த ஒரு முனிவரை எனது தந்தை சந்தித்தார். காசிபூரில் உள்ள பஹுரி பாபா ஆசிரமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த அந்நபர், எனது தந்தையிடம் இன்றிரவு இந்த பகுதியில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டுள்ளார்.

உடனடியாக அவருக்கு ஒரு கம்பளியை கொடுத்த எனது தந்தை கிருஷ்ணகாந்த், நீங்கள் விரும்பும்வரை இங்கே தங்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கு ஒப்புக்கொண்ட அந்த முனிவர், நான் யார் கண்களிலும் படாமல் வசிக்கக்கூடிய ஒரு தனிஇடத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, வாரணாசி-காசிபூர் சாலையில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காத்தி என்ற இடத்தின் அருகே மூங்கில்களினால் உருவாக்கப்பட்ட ஒரு குகைக்குள் 14-1-1952 சங்கராந்தி தினத்தன்று அந்த முனிவர் குடியேறினார். அந்த குகையில் அவர் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது, மிக பிரபலமாக விற்பனையாகிவந்த ஒரு ஆங்கில நாளிதழை அவர் அன்றாடம் விரும்பி படித்தார்.

அந்த மூங்கில் குகையில் ஒரு புதிய முனிவர் தங்கியுள்ளதை அறிந்த உள்ளூர் மக்கள் அவரது அருளைப்பெற குகையை நோக்கி வர ஆரம்பித்தனர். ஒரேயொரு நிபந்தனையின் பேரில் அவர்களில் சிலரை நேதாஜி சந்தித்துள்ளார். தேசிய விடுதலைப் படை ராணுவத்தை உருவாக்கிய நேதாஜியின் ஜாடையை ஒத்துள்ள தன்னிடம் நேதாஜி தொடர்பாக யாரும், எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்பதே அந்த நிபந்தனை.

அந்த முனிவரைப் பற்றிய செய்தியை இரு உள்ளூர் பத்திரிகைகள் அப்போது வெளியிட்டிருந்தன. இதையடுத்து, காத்தி குகையில் இருந்து தனது இருப்பிடத்தை காலி செய்த அவர், பிப்ரவரி மாதம் 14-ம் தேதி விந்தியாச்சல மலைப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்தார் என கிருஷ்ணகாந்த் பாண்டேவின் டைரி குறிப்புகளில் கண்ட ஆதாரங்களை சுட்டிக்காட்டிய ஷியாமாச்சரண் பாண்டே, பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

நேதாஜி சொந்த நாட்டிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய முக்கிய காரணமும் இருந்தது. இந்தியாவுக்கு விடுதலை அளித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சர்வதேச போர்க்குற்ற உடன்படிக்கையின்படி, நேதாஜி உயிருடன் கிடைத்தால் அவரை பிரிட்டன் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

அந்த நிலையில், அப்போது யார் கண்களிலாவது பட்டால், மேற்கண்ட நிபந்தனையின்படி, அந்நாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நேதாஜியை கைது செய்து பிரிட்டன் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதை தவிர்க்கவே அவர் முனிவர் வேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய அவசியம் ஏற்பட்டது, என தெரியவந்தது.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் இரட்டை நகரமான அயோத்தி மற்றும் பைஸாபாத்தில் சுமார் 15 வருடங்களாக சுற்றிக் கொண்டிருந்தவர் பகவான்ஜி. பார்ப்பதற்கு ஒரு சாதுவை போல் தோற்றமளித்த அவர் கோயில்களுக்கு அடிக்கடி செல்லாதவராக இருந்திருக்கிறார். தோற்றத்தில் நேதாஜியை போல் இருந்தவரது நடவடிக்கைகள் மிகவும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது. இதனால், அவரை அங்குள்ள மக்கள் ‘கும்நாமி (காணாமல் போன) பாபா’ என அழைத்தனர்.

18-9-1985 அன்று அவர் இறந்தபின்னர், அயோத்தியின் சரயு நதிக்கரையில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பிறகு அவர் தங்கியிருந்த அயோத்தியின் ராம்பவனில் இருந்த அவரது உடமைகளை சோதனையிட்டபோது பகவான்ஜி எழுதிய பல கடிதங்கள் கிடைத்தன. இதை தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வு மையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குநரான பி.லால் ஆய்வு செய்தார். அவை நேதாஜியின் கையொப்பத்துடன் ஒத்துப்போவதாக முன்னர் கூறி இருந்தார்.

இந்நிலையில், மாவட்ட கருவூலத்தில் பாதுகாத்து வைக்கப்படிருந்த கும்நாம் பாபாவின் உடமைகளை நேதாஜியின் குடும்பத்தார் கடந்த மார்ச் மாதம் பெற்றுகொண்டனர். அந்த டிரங்க் பெட்டியை திறந்துப் பார்த்தபோது, அதில் நேதாஜி தனது மனைவி மகளுடன் காணப்படும் ஒரு புகைப்படமும், இதுவரை யாருமே கண்டறியாத மற்றொரு அபூர்வ புகைப்படமும் கிடைத்துள்ளது.

அந்த அபூர்வ புகைப்படத்தில் நேதாஜியின் பெற்றோரான ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி போஸ் ஆகியோர் காணப்படுகின்றனர்.

அவர்களுடன் சுதிர் சந்திரபோஸ், சதிஷ் சந்திரபோஸ், சரத் சந்திரபோஸ், சுரேஷ் சந்திரபோஸ், சுனில் சந்திரபோஸ், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் நின்றபடி காணப்படுகின்றனர். நடுவரிசையில் நேதாஜியின் பெற்றோரான ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி போஸ் ஆகியோர் தங்களது மூன்று மகள்களுடன் அமர்ந்த நிலையில் உள்ளனர்.

இதுதவிர, இந்திய விடுதலைக்காக நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்துப் போரில் ஈடுபட்ட அவரது உளவுத்துறை மூத்த அதிகாரியான பகிட்ரா மோஹன் மற்றும் சுனில் காந்த் குப்தா ஆகியோர் துர்கா பூஜை மற்றும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி மாதம் 23-ம் தேதி ஆகிய நாட்களில் முன்னர் அனுப்பியிருந்த வாழ்த்து தந்திகள் போன்றவையும் அந்த பெட்டியில் காணப்படுகிறது.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது ‘சர்தானந்தா முனிவர்’ மற்றும் ‘கும்நாம் பாபா’ என்ற புனைப்பெயர்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நமது நாட்டின் பலபகுதிகளில் 1985-ம் ஆண்டுவரை வாழ்ந்திருப்பதாக யூகிக்க முடிகிறது, அல்லவா..?

இந்த நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பைசாபாத் நகரில் கும்நாமி பாபா என்ற பெயரில் 1985-ம் ஆண்டுவரை உயிரோடு வாழ்ந்ததாக வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பாக விசாரிக்குமாறு உத்தரப்பிரதேசம் மாநில அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க ஒருநபர் நீதி விசாரணை கமிஷனை அமைத்து உத்தரப்பிரதேசம் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி விஷ்ணு சஹாய் இந்த விசாரணையை நடத்தி கும்நாமி பாபாவாக வாழ்ந்தவர் நேதாஜியா? என்பதை கண்டறிவார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த முசாபர்நகர் கலவரம் தொடர்பான விசாரணை கமிஷனுக்கும் நீதிபதி விஷ்ணு சஹாய் தலைமை ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.…

நிர்வாண நிலையில் மனநோயாளிகள்: மேற்கு வங்க அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புதுதில்லி:

அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அஞ்சலி என்பவர், சுதந்திர தினத்தன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெர்கம்பூர் மனநல மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கே ஓர் அழுக்கு நிறைந்த அறையில் மனநலம் குன்றிய சில ஆண் மற்றும் பெண் மனநோயாளிகள் நிர்வாணமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்த தகவல்கள் ஊடகங்களில் செய்தியாக வெளியானது. இது குறித்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.

அவர்கள் மாதக் கணக்காக குளிக்காமலும், மழிக்கப் படாமலும் இருந்தனர். அவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்ததற்கான அறிகுறிகள் இருந்தன. கழிவறைகள் யாரும் பயன்படுத்த முடியாதவாறு மிகவும் மோசமாக இருந்தது. படுக்கையில் மூட்டைப்பூச்ச்சிகள் ஊர்ந்து சென்றன. சலவை வசதி இல்லை. முடித்திருத்துபவர் இல்லை, குளியறைகள் மோசமான நிலையில் உள்ளன. இதில் நோயாளிகள் தடுமாறி விழுந்து காயம் அடைந்து உள்ளனர் என மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் மேற்கு வங்க அரசாங்கத்தின் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.

மருத்துவமனைகளில், மாநில அரசால் நடத்தப்படும் நிலையை மன நல மருத்துவமனை குறித்து விரிவான அறிக்கை வழங்க கேட்டு கொண்டு உள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் ஆணையம் தானாக எடுத்து உள்ளது.

ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி ஆகஸ்ட் 17-ம் தேதியன்று சுமார் 430 நோயாளிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் நோயாளிகள் மனநல மருத்துவமனையில் உள்ளனர்.

 

 

மிளகாய்ப்பொடி தூவி ஒரு கிலோ தங்கம் கொள்ளை

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே நகை கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி ஒரு கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு கடை வீதி பகுதியில் திருப்பதி என்பவர் நகைக் கடை வைத்துள்ளார். இவரது உறவினர் செல்வராஜ் நேற்றிரவு கடையை பூட்டி விட்டு 1 கிலோ தங்கம் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்களை ஒரு பையில் எடுத்து கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது காமராஜபுரம் அருகே செல்வராஜை வழிமறிந்த மர்மநபர்கள் இரண்டு பேர், அவர் மீது மிளகாய் பொடி தூவியுள்ளனர். பின்னர், பையை பறித்த மர்மநபர்கள், இருசக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து, கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது.

one-kg-gold-jewels-20-kg-silver-looted-dindugal-jewel-shop-owner