Home Blog Page 5750

பி.வி.சிந்து விவகாரத்தில் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்

பி.வி.சிந்து விவகாரத்தில் அதிமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்து:
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேட்மிட்டன் தொடரில் Chennai smashers அணியில் விளையாடிய சிந்துவிற்கு ஸ்பான்சர் கேப்டன் விஜயகாந்த் மகன் என்ற ஒரே காரணத்திற்காக சென்னையில் விளையாட அனுமதிக்காத அதிமுக அரசே வெட்கி தலைகுனியுங்கள்.
உங்களால் தமிழகத்தில் மட்டும் தான் தடை போட முடிந்தது. ஆனால் P.V. சிந்து இன்று உலகமே தன்னைத் திரும்பி பார்க்க வைத்தவிட்டார்.
இனிமேலாவது விளையாட்டு துறையில் உங்கள் கீழ்த்தரமான அரசியலை ஒதுக்கி வைத்து திறமையான வீரர்களை வெளிகொண்டு வாருங்கள். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிறைய பதக்கங்கள் இந்தியா வாங்க வழிவகை செய்யுங்கள்

சசிகலா புஷ்பாவும் ஆபாச விகடனும்: பெண்ணுரிமை இயக்கங்கள் எங்கே?

சசிகலா புஷ்பாவும் ஆபாச விகடனும்: பெண்ணுரிமை இயக்கங்கள் எங்கே? என்ற கேள்விக் கணையுடன் பதியப்பட்டுள்ள கட்டுரை, சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Push1b - 2026

இந்தவார ஜூனியர் விகடன் இதழில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்து மிக மோசமான ஆபாசக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பாவின் அரசியல் நிலைப்பாடு, அவர் சார்ந்திருந்த கட்சியுடனான மோதல், அவரது சாதி ஆதரவு கோரிக்கை குறித்தெல்லாம் பலருக்கும் பலவிதமான கருத்துகள் இருக்கலாம். அதுகுறித்தெல்லாம் நாம் இங்கே பேசவில்லை.

ஆனால், ஒரு பெண் என்பதற்காகவே சசிகலா புஷ்பா கொச்சைப் படுத்தப்படுவதை ஏற்க முடியாது. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான இந்த அநீதி எதிர்க்கப்பட வேண்டும்.

ஜூனியர் விகடனின் ஆபாசம்

ஒரு பெண்ணை, அதுவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, ஜூனியர் விகடன் இதழ் எவ்வளவு ஆபாசமாக சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளது என்பதைக் கீழே பாருங்கள்(மிஸ்டர் கழுகு, ஜூனியர் விகடன், ஆகஸ்ட் 17 இதழ்:

//”சாதாரண பள்ளி ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் சசிகலா புஷ்பா. அவரது கணவர் ஒரு எலெக்ட்ரீஷியன். அங்கிருந்து சென்னைக்குப் பயணம். இங்கும் பல பிரமுகர்கள் அவருக்கு உருகிஉருகி உதவி செய்துள்ளார்கள்.

Sasi1a - 2026

# கார்டனுக்குள் நெடுநாட்களாக இருக்கும் ‘சாந்த சொரூபி’க்கும் இவருக்கும் அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது. திருவான்மியூரில் இவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள்

# உளவுத்துறை அதிகாரிக்கு நெருக்கம் ஆனார்.

Sasi2a - 2026

# அடுத்து, முதல்வரின் செயலாளர்களில் ஒருவரையும் தன் வசம் ஆக்கிவிட்டாராம்.

# மாவட்டம்தோறும் சென்றபோது டெல்டா மாவட்ட அமைச்சரிடம் பழக்கம்.

# சரித்திரப் புகழ் பெற்ற கோட்டை உள்ள ஊர்க்காரர் அவர். பகையில் தொடங்கிய அவர்களது பழக்கம் நாளடைவில் படிப்படியாக நெருக்கத்தை உருவாக்கிவிட்டதாம்.”

# சசிகலா புஷ்பாவுக்கும் அமைச்சர் சண்முகநாதனுக்குமான நெருக்கம் முன்பே வெளிச்சத்துக்கு வந்தது.

Sasi3a - 2026
sasi4a - 2026

# வட சென்னை வட்டாரத்தில் மகளிர் விடுதி அமைக்க இடம் ஏற்பாடுசெய்த ஓர் அமைச்சரும், ‘நடிப்பு’க்குப் பெயர்போன இரண்டெழுத்து இன்ஷியல்கார அமைச்சர் ஒருவரும் புஷ்பா புயலில் சிக்கியவர்களாம்.”//

– இவ்வாறு “நெருக்கம், தன் வசம், சிக்கியவர்கள், சந்திப்பு” – என்கிற வார்த்தைகள் மூலம், ஒரு சிறு செய்தியில் எட்டு ஆண்களுடன் சசிகலா புஷ்பாவை தொடர்புபடுத்தி, அவரை பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்துகிறது ஜூனியர் விகடன்.

(இச்செய்தி உண்மையா இல்லையா என்பது முக்கியமல்ல. இச்செய்திக்கான தேவையே இல்லை என்பதுதான் முக்கியமாகும்)

பெண்களுக்கு எதிரான வன்முறை

ஜூனியர் விகடனின் ஆபாச செய்தி – அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான வன்முறை(Violence against women in politics – VAWIP) எனும் மனித உரிமை மீறலில் ஒரு அங்கம் ஆகும்.

இந்தியாவில் அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆய்வு செய்துள்ள ஐநா பெண்கள் அமைப்பு, இங்கு நிலவும் அசிங்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது. (UN Women – Violence against Women in Politics – A study conducted in India, Nepal and Pakistan).

Push1a - 2026

இந்தியாவில் அரசியலில் ஈடுபடும் பெண்களிடம் – பாலியல் இசைவுக்கு வற்புறுத்துதல் (sexual favours), நடத்தையை கொலைசெய்தல் (Character assassination) – ஆகிய வன்முறைகள் மிக அதிக அளவில் ஏவப்படுவதாக தெரிவிக்கிறது.

  • “The most widespread forms of VAWIP …related to expectation of sexual favours”
  • “Character assassination also persisted in relation to the expectations of sexual favours, but was also identified as a tool to seriously damage the reputation and achievements of a woman in politics with the desire to reduce her public support.”

பரந்துபட்ட அளவில் பார்த்தால், அரசியல் என்பதே ஆண்களுக்கானது, அதில் பெண்கள் ஈடுபடக் கூடாது என்கிற ஆணாதிக்க மனப்போக்கு இதன் காரணமாக உள்ளது.

அதையும் மீறி அரசியலில் பெண்கள் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கிலேயே – அரசியலில் ஈடுபடும் பெண்கள் மோசமாக சித்தரிக்கப்படுகின்றனர். ஜீனியர் விகடனின் செய்தி அத்தகைய வக்கிர உள்நோக்கம் கொண்டதுதான்.

UN VAWIP 2014 2a - 2026

பெண்கள் அரசியலுக்கு வருவது அரிதான ஒரு நிகழ்வு. ஒருசில பெண்கள் அரசியலில் உயர்ந்த பதவிகளை அடைந்தாலும் கூட, அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அனைத்து நிலை அரசியல் பதவிகளில் ஆண்களின் எண்ணிக்கையை விட மிகமிகக் குறைவாகவே பெண்கள் உள்ளனர்.

ஊடகங்கள் ஆபாசமாகவும் நடத்தையை கொலைசெய்யும் வகையிலும் செய்தி வெளியிடுவதால் – பெண்கள் புதிதாக அரசியலுக்கு வருவதில் தடை ஏற்படுகிறது. அரசியலில் இறங்கும் எல்லா பெண்களும் இப்படித்தான் என்கிற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியே இதுபோன்ற செய்திகளின் நோக்கம் ஆகும்.

பெண்கள் அமைப்புகள் தூக்கம் கலைக்குமா?

தமிழ்நாட்டின் பெண்கள் அமைப்புகளுக்கு ‘சாதி பிரச்சினைத் தவிர’ வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது. ஏனெனில், அவை அனைத்தும் கம்யூனிச சிவப்பு கண்ணாடி அணிந்துள்ளன. பெண்கள் அமைப்புகளை நம்பி பயனில்லை. பெண்கள் மட்டுமே இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு.

அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பின்வருமாறு கூறுகிறது ஐநா பெண்கள் அமைப்பு:

Violence against women in politics (VAWIP) is violence that occurs within the political sphere but that specifically targets women. VAWIP is used to reinforce traditional social and political structures by targeting women leaders who challenge patriarchy and the prevailing social expectations and norms. It restricts women’s mobility and capacity to participate within the political sphere.

அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகளுக்கு எதிராக மனித உரிமையிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை உள்ள எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு: சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவான பதிவாக இதனைக் கருத வேண்டாம். பெண்கள் மீதான ஊடக வன்முறைக்கான எடுத்துக்காட்டாக கொள்ளவும்.

முகநூல் பக்கம்: https://www.facebook.com/ArulPasumai/posts/1486431711382579

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும்: ராமதாஸ்

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டுமென்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக இரு கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(ழிணிணிஜி) முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இம்முடிவுகளின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படாததால் பெரும் குழப்பங்களும், முறைகேடுகளும் நடக்கும் வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் மே ஒன்றாம் தேதியும், ஜூலை 24 ஆம் தேதியும் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் 4.09 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 51 ஆயிரம் மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். இதனால் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களிடையே மருத்துவப் படிப்பில் சேர கடும்போட்டி நிலவும். இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்களை மட்டும் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 65% அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வழக்கம் போல மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தால் ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான 35% இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலுள்ள அனைத்து இடங்களும் எவ்வாறு நிரப்பப் படும் என்பது தான் மாணவர்கள் மத்தியில் இப்போது மிகப்பெரிய வினாவாக உருவெடுத்திருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள சில ஆயிரம் இடங்களுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டியிடும் போது, அதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணக் கொள்ளையிலும், நன்கொடைக் கொள்ளையிலும் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மை இல்லாதவை என்பது அனைவரும் அறிந்த உண்மை. நிகர்நிலைப் பல்கலைகழகங்கள் ஆராய்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அவற்றுக்கு அளிக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை என்பது தகுதி அடிப்படையில் இல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே நடைபெற்று வருகின்றன. மருத்துவப்படிப்பில் இடம் தருவதாகக் கூறி 109 பேரிடம் மொத்தம் ரூ.73 கோடி வசூலித்து ஏமாற்றிவிட்டதாக ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மீது புகார் எழுந்திருப்பதே இதற்கு சாட்சியாகும்.

அதுமட்டுமின்றி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (ழிணிணிஜி) அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப்படிப்பு இடங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்பது தான். தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை நடத்தி தரவரிசையை வெளியிடுவதால் மட்டுமே தனியார் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் மருத்துவ கல்வி வணிகத்தை தடுத்து விட முடியாது. நுழைவுத் தேர்வு தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தும் அதிகாரம் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், அந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசையை புறந்தள்ளிவிட்டு பணவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் ஆபத்து உள்ளது. இது மருத்துவ பொது நுழைவுத்தேர்வின் நோக்கத்தை சிதைத்து விடும்.

பஞ்சாப் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முறைகேடுகளை தடுக்கும் வகையில் அவற்றின் மாணவர் சேர்க்கையையும் அம்மாநில அரசே ஒற்றைச்சாளர முறையில் நடத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே அணுகுமுறை தேவை என்பதற்காக பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்த மத்திய அரசு, பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதித்து விட்டு, மற்ற மாநிலங்களில் முறைகேடுகள் நடப்பதற்கு வழிவகுத்து விடக்கூடாது. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒற்றைச்சாளர முறையில் அரசே மாணவர் சேர்க்கை நடத்த மத்திய சுகாதாரம் &குடும்ப நல அமைச்சகம் ஆணையிட வேண்டும்.

பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவதால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை பா.ம.க. ஏற்றுக்கொள்வதாக பொருள் அல்ல. அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் உறுதியான நிலைப்பாடு. ஒருவேளை அடுத்த ஆண்டில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டால், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையை அரசே நடத்த வேண்டும் என்பது தான் பாமக நிலைப்பாடாகும்.

கேமரா கலைஞனாக ஆசைப்படுகிறேன்: சிவ. கார்திகேயன்

கேமரா மியூசிய திறப்பு விழாவில் வரலாற்று ஆவண படங்களை வொளியிட்டு நடிகர் சிவகார்திகேயன் பேசியதாவது :
எனக்கும் கேமராக்கும் எந்த சம்மந்தமும் இல்லை இது வரைக்கும் இத்தனை விதமான கேமராக்களை நான் பார்த்தது இல்லை. ஶ்ரீதர் ஸார் என்னை அழைத்தப்போது இந்த மியூசியம் இந்த அளவுக்கு இருக்காது என்றுதான் நான் நினைத்தேன் ஆனால் உள்ளே நான் சென்றப்போது அவ்வளோ பெரிய கேமராவை பார்த்தது அதில் எப்படி செல்பி எடுப்பது என்றுதான் நினைத்தேன் ஏனென்றால் நம் மூளை அந்த அளவுக்குத்தான் யோசிக்கின்றது பி.சி.சாரும் ஶ்ரீதரும் அதைப் பற்றி எனக்கு சொன்னதும் நான் வியந்துப் போனேன் இப்போது எனக்கும் ஒரு கேமராவை வாங்கி புகைப்படம் எடுக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை வந்துள்ளது என்று அவர் கூறினார்.

சென்னையில் கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம்: பி.சி.ஸ்ரீராம் திறந்து வைத்தார்

 

சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திற ந்து வைத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் கேமரா வரலாற்று ஆவண படங்களை வெளியிட்டார்.

உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது.

ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும்.

தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார்.

சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் அமைந்துள்ள  உள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம் எடையளவே கொண்ட மிகச்சிறிய கேமராக்களும், முதல் 3டி கேமரா, பிஸ்டல் கேமரா, வாக்கிங் ஸ்டிக் கேமரா என பல அரியவகை ஆயிரக்கணக்கான கேமராக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது.

இது தவிர அரியவகை புகைப்படங்கள், புகைப்பட கலை தொடர்பான சுவாரசிய தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் இருக்கும். புகைப்பட கலையை அதன் வரலாற்றை தெரிந்துக் கொள்ளும் விதமாக 3 ஆவண படங்களும் திரையிடப்படுகிறது. புறா உடலில் கேமராவை பொருத்தி உலகப்போரின் போது பயன் படுத்தியது பற்றியும், சர்வதேச அளவில் துப்பறிவாளர்களால் பயன்படுத்தப்பட்ட மினாக்ஸ் கேமரா பற்றிய படமும், கேமராக்கள் பற்றிய வரலாறு பேசும் படமும் பார்வையாளர்களுக்கு தினமும் திரையிடப்பட உள்ளது.

மேலும் இந்த அருங்காட்சியகத்தின் முகப்பே ஒரு கேமராவின் தோற்றம் போலவும், நுழைவு வாயில் கேமராவின் லென்ஸ் போலவும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்று.

அதோடு இந்த அருங்காட்சியகத்தில் இன்னொரு சிறப்பம்சம் கிளிக் ஆர்ட் முறையில் புகைப்பட கலையின் முன்னோடியும் புகைப்படகலையின் பல சாதனங்களை கண்டுபிடித்தவர்களான பிரான்சு நாட்டைச்சேர்ந்த லூமியர் சகோதரர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவை சேர்ந்த பிரபல புகைப்பட கலையின் முன்னோடியும் புகழ் பெற்ற கோடாக் நிறுவனத்தின் நிறுவனருமான ஜார்ஜ் ஈஸ்ட்மேனிடம் அவர் கண்டுபிடித்த பாக்ஸ் கேமராவை பெற்றுக்கொள்வது போலவும் செல்பி எடுத்து கொள்ளலாம்.

19ம் நூற்றாண்டு தொடங்கி 21ம் நூற்றாண்டு வரையிலான புகைப்பட கலையின் நீண்ட வரலாறை ஒரே இடத்தில்  தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பது ஆசிய அளவில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்பது இதன் சிறப்பம்சம்.

உலக புகைப்பட தினத்தில் இந்த அருங்காட்சியகத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் திறந்து வைத்தார். கேமரா வரலாறுகள் குறித்த ஆவண குறும்படங்களை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இந்த கேமரா அருங்காட்சியகம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டிருக்கும். இ ந்த விழாவில் விஜிபி குழும தலைவர் சந்தோஷம் பேராசிரியர் இஸ்மாயில், பாவலர் அறிவுமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

சென்னையில் ஒட்டகம் வெட்ட அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை:

ஒட்டகம் வெட்டுவதற்கு பிரத்யேக இறைச்சிக்கூடங்கள் எதுவும் இல்லாததால், தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஒட்டகங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் பிரசன்னா, ராதா ராஜன் உள்பட பலர் தாக்கல் செய்த பொதுநலமனுவில், ‘இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின்படி இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளின் பெயர் பட்டியலில் ஒட்டகம் இல்லை. ஆனால், தமிழகத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டகங்கள் இறைச்சிக்காக வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு, வெட்டப்படுகிறது. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படியும், மத்திய அரசு சட்டத்தின்படியும் இது குற்றமாகும். எனவே தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஆடுகள் வெட்டப்படுவதையும், ஓட்டகம் வெட்டப்படுவதையும் ஒன்றாக கருத முடியாது. தமிழகத்தில் ஒட்டகம் வெட்டுவதற்கு பிரத்யேகமாக இறைச்சி கூடங்கள் இல்லை. மேலும், இந்த ஓட்டகங்களை சென்னையில் வெட்டுவதற்கு சட்டப்படி அனுமதி வழங்க முடியுமா? என்று கடந்த முறை நாங்கள் கேள்வி எழுப்பியிருந்தோம்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, மனிதன் உண்ணும் விலங்குகள் மட்டுமே இறைச்சிக் கூடங்களில் வெட்ட அனுமதிக்க முடியும் என்றும் இந்த பட்டியலில் இல்லாத விலங்களை பலியிடுவதற்கு அனுமதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ஒட்டகத்தை ஆண்டு முழுவதும் இறைச்சிக்காக வெட்டவில்லை. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மட்டும் பலியிடுவதாக கூறினார்கள்.

எனவே, பக்ரீத் பண்டியை முன்னிட்டு ஒட்டகம் வெட்டப்படுவது தொடர்பாக இருதரப்பின் வாதங்களையும் கேட்க வேண்டியதுள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் என்று அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை மனுவாக தாக்கல் செய்யவேண்டும்.

அதேநேரம், ஒட்டகங்களை வெட்டுவதற்கு தனியாக பிரத்யேகமான இறைச்சி கூடங்கள் தமிழகத்தில் இல்லை என்பதால், இந்த சூழ்நிலையில், ஒட்டகங்களை தமிழகத்தில் வெட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். இந்த வழக்கின் இறுதி விசாரணைக்காக அக்டோபர் 17-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

திமுக.,வும், அதிமுக.,வும் பேரவையை போர்க்களமாக்குகின்றனர்: விஜயகாந்த்

திமுக., அதிமுக இருவரும் சட்டப்பேரவையை போர்க்களமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சியை சேர்ந்த தி.மு.க.வினரை அவைக்காவலர்களை வைத்து கூண்டோடு வெளியேற்றியதையும், அதே ஒரு வார காலத்திற்கு அவர்களை சஸ்பெண்ட் செய்து அறிவித்து இருப்பதும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையையே நினைவுபடுத்தியுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தேமுதிக தினந்தோறும் மக்கள் பிரச்னைகளையும், தொகுதி பிரச்னைகளையும் பேச முற்பட்ட போதெல்லாம் இதுபோன்ற முறையற்ற நிகழ்வுகளையே அதிமுக அரசு அரங்கேற்றியது. அவையில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை முற்றிலும் செயல்படவிடாமல் தடுத்து, அரசுக்கு எதிராக யாரும் பேசி விடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களின் மைக்குகளை செயல்படவிடாமல் செய்வதும், அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றுவதும், நீண்ட நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதும் என்று சட்டப்பேரவை மரபுகளை கேள்விக் குறியாக்கும் அளவு செயல்பட்டனர்.

நியாயத்தை கேட்ட தேமுதிக., வினரின் உண்மை நிலையை மக்களிடையே கொண்டுசெல்ல விடாமல் பல்வேறு வகையிலும் தடுத்தனர். அதனால் தான் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது அவசியம் என்று வலியுறுத்தி பல தடவை அரசிடம் கேட்டும் பலனில்லாமல் போனது. நேரடி ஒளிபரப்பு செய்ய பல கோடி ரூபாய் செலவாகும் என்று காதில் பூ சுற்றுவதை போல சாக்குப் போக்கு சொல்லி நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.

தேமுதிக கடந்த ஐந்து ஆண்டுகளில் பட்ட கஷ்டத்தின் தொடக்கமாக திமுக.,வின் இன்றைய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. திமுக., அதிமுக இவர்கள் இருவரும் மாறி, மாறி இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி தமிழக சட்டப்பேரவையின் கலாச்சாரத்தை மாற்றிவிட்டார்கள்.

மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்த சட்டப்பேரவை, மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், இவர்கள் இரண்டு பேர்களுக்கும் இடையே நடக்கும் போர்க்களமாகவே இந்த சபையை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்குத்தான் காமராஜர் சொன்னார் இந்த (அதிமுக., திமுக) இரண்டு கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு சான்றாகவே இந்த சட்டப்பேரவை அரங்கேறி கொண்டுருக்கிறது. இந்த நிலைகள் தமிழகத்தில் முற்றிலும் மாற, இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும் பொழுதுதான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

திருட்டுப்பயலாக பாபி சிம்ஹா, வில்லனாக பிரசன்னா

கல்பாத்தி எஸ். அகோரம், சுசி கணேசன் இணையும் வெற்றிக் கூட்டணியாக, சுசியின் ’திருட்டுப் பயல் 2 தயாராகிறது. ‘திருட்டுப்பயலாக’ பாபி சிம்ஹா, வில்லனாக பிரசன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் ‘திருட்டுப்பயலே- 2’- இவர்களது வெற்றிக் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படைப்பு!. AGS நிறுவனத்தின் முதல் படமாக 2006ஆம் ஆண்டில் வெளிவந்து சக்கை போடு போட்டு வெற்றிவாகை சூடிய திருட்டுப்பயலின் இரண்டாம் பாகத்தை சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்க செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

“உன் ரகசியம் என் கையில் இருக்கும் வரை உன் சிண்டு என் கையில்”- வித்தியாசமாக வில்லனே கதை நாயகனாக உலா வந்த தளத்தில், தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், ‘பைவ் ஸ்டார்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாகவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்..! இரண்டு பேர் நடிப்பிலும், மிரட்டிலும் சிக்கிக் கொண்டு மிரள்கிற, மிரட்டுகிற ஒரு கதாநாயகியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். முதல் பாகத்தை போல, வருகிற ஒவ்வொரு சின்ன கதாபாத்திரங்களிலும் ஏதோ ஒரு வித ‘திருட்டுத்தனத்தின் சாயல் படர்ந்திருப்பது இதிலும் தொடர்கிறது!’. “பத்து வருஷத்துக்கு முன்னால் இந்த திருட்டுப்பயல்களின் எண்ணிக்கை வருஷத்துக்கு வருஷம் கூடுகிறதே தவிர குறைகிற வழியக் காணோம்..!. சாதாரணமாக சுற்றித் திரிந்த திருட்டுப்பயல்கள் தொழில்நுட்ப திருட்டுப்பயல்களாக பதவி உயர்வு பெற்று, சிறு சிறு குற்றங்கள் தொழில் நுட்ப குற்றங்களாக பெருகிக் கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையை விட சமூக சூழலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு மிகப்பெரிய உந்து சக்தி” என்றார் சுசி கணேசன்.

மீண்டும் தொடர்ந்து “பாகம் 2, 3…. என்பது பொதுவாக கதாநாயகனை மையப்படுத்துவதாக இருந்தாலும், சில நேரங்களில் கதை கருவையும் மையப்படுத்தும்!. “கையில் சிக்கிய ரகசியத்தை வைத்து காசு பண்ணும்”-பின்புலம் இன்றும் என்றும் எப்போதும் பசுமையாக பொருந்துவதால், இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூடுதல் உத்வேகம் பிறந்தது…” என்றார்.

முதல் பாகத்தின் பெரும்பகுதி ஆஸ்திரிலேயாவில் படப்பிடிப்பு நடைபெற்றதை போலவே, திருட்டுப்பயலே-2-விற்கு பிரமிக்க வைக்கும் ஒரு அழகான தீவை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பகுதி படப்பிடிப்பு, வெளிநாட்டில் திட்டமிடப்பட்டு பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் உணர்வு, ஒவ்வொரு திருமணமான பெண்ணையும் உருக வைக்கும் என்கிறார்கள்.

மற்ற கதாபாத்திரங்களுக்கு நடிகர் நடிகைகள், தொழில் வல்லுனர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தயாரிப்பு: கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ்
எழுத்து இயக்கம்: சுசி கணேசன்

புறநகர் பஸ் நிலைய திட்டம் வண்டலூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்

சென்னை:

சென்னைக்கு வரும் தென்மாவட்ட பஸ்கள் பெரும்பாலும் பெருங்களத்தூரை அடுத்து சென்னை கோயம்பேட்டுக்குச் செல்லும்போது, காலி பேருந்துகளாகவோ, குறைவான பயணிகளுடனோதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற விதத்தில் சுமார் போக வர என்று ஒரு பேருந்துக்கு 80 கி.மீ.க்கும் அதிகமாக டீசல் செலவு ஏற்படுகிறது. மேலும், கோயம்பேட்டில் நெரிசல் ஏற்பட்டு, விழாக்காலங்கள் என்றால் மணிக்கணக்கில் காத்திருந்து வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு புறநகர் பேருந்து நிலையத்தை வண்டலூருக்கு மாற்ற முன்னர் முடிவு செய்யப்பட்டது. அங்கே நிலம் கையகப் படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையால், கூடுவாஞ்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நந்திவரம் நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே பெருநகர வளர்ச்சிக்குழுமத்துக்கு தர ஒப்புதல் தெரிவித்து விட்டது. மேலும், வீட்டு வசதி நிலங்களையும் சேர்த்து தற்போது பேருந்து நிலத்துக்கான பணிகள் வேகம் பெற்றுள்ளன.

இந்நிலையில், வண்டலூரில் அறிவிக்கப்பட்ட புறநகர் பஸ் நிலைய திட்டம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தும், புதிய அறிவிப்புகளை வெளியிட்டும் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் ஜெயலலிதா 30-4-2013 அன்று 110-விதியின் கீழ் அறிவித்த தமிழ்நாட்டில் தென்பகுதி நோக்கி செல்லும் பஸ்களுக்காக வண்டலூரில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த ஜி.எஸ்.டி. மற்றும் வெளிவட்டச் சாலையை ஒட்டியுள்ள இடம் கண்டறியப்பட்டு கையகப்படுத்த நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், மத்திய அரசால் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களால் தனியார் நிலங்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக நந்திவரம்-கூடுவாஞ்சேரி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு உரிமை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவால் 15-7-2014 அன்று 110-விதியின் கீழ் கோயம்பேட்டில் அரசு அலுவலகங்களுக்கான கட்டிடம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று, ரூ.95 கோடி மதிப்பீட்டில் பிப்ரவரி, 2016-ல் பணி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை 24 மாதங்களில் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பெருநகர மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், பயண நேரத்தைக் குறைக்கவும் மற்றும் மேம்பட்ட போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவும், சென்னைப் பெருநகர பகுதியில் வேகமாக வளர்ந்து வரும் தெற்கு பகுதி மற்றும் வெளிவட்டச் சாலையை ஒட்டிய 53 கிராமங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பின்னல் வலைச் சாலைகள் திட்டத்தைத் தயாரித்து வருகிறது.

கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பஸ் முனையத்தின் போக்குவரத்து நெரிசல்களைக் குறைக்கும் நோக்கில், மாதவரம் பஸ் மற்றும் சரக்குந்து வளாகத்தில் உள்ள 8 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு துணைப் புறநகர் பஸ் முனையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் 24 மாதங்களில் நிறைவேற்றப்படும்.

பொதுமக்கள் தங்கள் பயணத்தைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும், குறைந்த நேரத்தில் மேற்கொள்ளும் வகையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் அனைத்து போக்குவரத்தையும் இணைத்து, ஒன்றில் இருந்து மற்றவைக்கு எளிதாக மாற மத்திய சதுக்கம் என்ற ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தால் ரூ.389.42 கோடியில் செயல்படுத்தவுள்ள இந்த மத்திய சதுக்க திட்டத்திற்கு குழுமத்தின் வளர்ச்சி நிதியில் இருந்து நிதி உதவி அளிப்பதற்கான நிர்வாக ஆணை வெளியிடப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டம் சென்னைப் பெருநகரின் ஒரு புதிய அடையாளமாக அமையும்.
– என்று அவர் கூறினார்.

“ஒரே இருட்டாய் போயிடுத்தே. யானை மிரண்டுடுத்தே?”

11150966_886065974767790_8191087934717149385_n

“ஒரே இருட்டாய் போயிடுத்தே.
யானை மிரண்டுடுத்தே?”
 
(பெரியவாளுக்கு,சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா?)
 
சொன்னவர்-டி.வி.சுவாமிநாதன்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
புதுப்பெரியவாள் 1971-72 கேரளத்துக்கு
விஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில்
நகர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல்வரிசையில்
புதுப்பெரியவாள் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள்.
 
திடீரென்று ஏற்பட்ட மின்தடையால் எல்லா
விளக்குகளும் அணைந்தன. குட்டி யானை
மிரண்டது. நல்ல காலமாக இரண்டு மூன்று
நிமிடங்களுக்குள் விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன.இடையில் புதுப்பெரியவாளும்
யானையிலிருந்து பத்திரமாக இறங்கிவிட்டிருந்தார்கள்.
 
வீதிவிளக்குகள் அணைந்ததும் என் (டி.வி சுவாமிநாதன்)
இல்லத்திற்கு விரைந்து விளக்குகள் அணைந்ததன்
காரணத்தைக் கேட்பதற்காக மின்வாரியத்துடன்
தொடர்பு கொண்டேன். அதற்குள் எல்லாம் சரியாயிற்று
என்று அறிந்து திரும்பவும் ஊர்வலத்தில் கலந்து
கொள்ளப் புறப்படும் சமயத்தில்காஞ்சியிலிருந்து
ஒரு மின்னல்வேக டெலிபோன் அழைப்பு.
 
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜ அய்யர்
விசாரித்தார்.”ஊர்வலத்தில் ஏதாவது குழப்பம்
உண்டாயிற்றா?
 
நடந்ததை விவரித்துவிட்டு, வியப்புடன் நான் வினவினேன்.
 
“அந்த சம்பவம் நடந்து ஐந்து நிமிஷம் கூட ஆகவில்லை,
அதற்குள் எப்படி நீங்கள் இதுபற்றி விசாரிக்கிறீர்கள்?”
 
ஸ்ரீ பெரியவாள் சிவாஸ்தானத்தில் சொல்லிக்
கொண்டிருந்தாராம்.
 
“நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன் நான்
மலையாள ராஜ்யத்தில் யாத்திரை செய்த போது
இருந்ததைவிட விமரிசையாக,புது சுவாமிகள்
ஊர்வலத்திற்கு இன்று தடபுடலான ஏற்பாடுகள்…”
 
இவ்விதம் அருளிக்கொண்டே இருந்த பெரியவர்,
திடீரென்று, “ஒரே இருட்டாய் போயிடுத்தே.
யானை மிரண்டுடுத்தே?” என்று முன்பின்
சம்பந்தமில்லாமல் கவலையோடு சொன்னார்களாம்.
 
உடனே எர்ணாகுளத்திலிருந்த என்னைக் கூப்பிட்டு,
‘என்ன நடந்தது என்று அறியப் பணித்தார் என்று
கூறினார்.
 
பெரியவாளுக்கு,சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா?