Home Blog Page 5751

“காமோ கார்ஷீத் ஜப ஸங்கல்பம் 18-08-2016″

TharpaNam Pic (1)

“காமோ கார்ஷீத் ஜப ஸங்கல்பம்

(காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம) 18-08-2016

ப்ரதம ச்’ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.”)

ப்ரஹ்மசாரிகளும், க்ருஹஸ்தர்களும், அவசியம் செய்ய வேண்டியது

(முதல் ஆவணி அவிட்டம் (ச்ராவணம்) செய்பவர்கள் இதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை)

ஆசமனம் செய்து 2-பில் பவித்ரத்தை மோதிர விரலில் போட்டுக் கொண்டு 4-கட்டை தர்ப்பங்களைக் காலின் கீழ் ஆஸனமாகச் சேர்த்து, 4-கட்டை தர்ப்பங்ளை பவித்ர விரலில் மடக்கிக் கொண்டு ஸங்கல்பம் செய்யவும்.
.

விக்னேச்வர த்யானம்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம் !

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே !!

ப்ராணாயாமம்;.

ஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:, ஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம். ஓம் ஓம் ஓம் – என்று வலது காதைத் தொடவேண்டும். (வலது காதில் கங்கை தேவி வசிப்பதாக ஐதிகம் )

ஸங்கல்பம் மந்திரம்,

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,சு’பே சோ’பனே முஸூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்ததே, ச்’வேத வராஹ கல்பே,வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவிகும்ச திதமே, கலியுகே, ப்ரதம பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே.துர்முகி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, வர்ஷ ருதௌ, ஸ்ராவண மாஸே, சு’க்ல பக்ஷே, .பூர்ணிமாயாம் சு’பதிதௌ, குரு வாஸரயுக்தாயாம், ச்ரவிஷ்டா நக்ஷத்ரயுக்தாயாம், சோபன யோக, பவ கரண யுக்தாயாம் ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் பூர்ணிமாயாம் சு’பதிதௌ.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், தைஷ்யாம் பௌர்ணமாஸ்யாம், அத்யாயோத்ஸர்ஜன, அகரண ப்ராயச்’சித்தார்த்தம், அஷ்டோத்திர ஸஹஸ்ர,ஸங்க்ய்யா (1008 தரம்) அல்லது அஷ்டோத்திர சத ஸங்க்யயா (108 தரம்) “காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன்” இதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. (என்று தர்ப்பையை இடது பக்கம் போடவும்.)

(காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம)

(காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம: இந்த மந்த்ரத்தை ஜபித்து பிறகு பவித்ரத்தை அவிழ்த்து ஆசமனம் செய்து) ஸர்வம் ஸ்ரீ ப்ரஹ்மார்ப்பணமஸ்து ( என்று சொல்லி ஜலத்தைக் கீழே விடவும் )இதன் பிறகு மாத்யாஹ்னிகம் செய்து ப்ரஹ்ம யஜ்ஞம் செய்ய வேண்டும்.

1914843_1149315091752824_8573352737394903724_n

ஆவணி அவிட்டம் அப்பம்-போளி
 
தேவையானவை:
 
பச்சரிசி – ஒரு கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
தூளாக்கிய வெல்லம் – முக்கால் கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் – கால் கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
 
 
 
செய்முறை:
 
அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு இவற்றை ஒருமணிநேரம் ஊறவைத்துக் கழுவி தேங்காய்த் துருவலையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள், வெல்லம் சேர்த்து மீண்டும் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை குழிப்பணியாரத் தட்டில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.
 
குறிப்பு: ஆவணி அவிட்டத்தன்று முதன்முதலில் பூணூல் போடும் சிறுவர்களுக்கு இந்த அப்பத்தை தருவதால், இதற்கு ‘பிரம்மச்சாரி அப்பம்’ என்று பெயர்.
 
போளி
 
தேவையானவை:
 
மைதா – ஒரு கப்
கேசரி கலர் – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
வெள்ளை ரவை – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய், எண்ணெய் கலந்து – 3 டேபிள்ஸ்பூன்
 
பூரணம் செய்வதற்கு:
 
கடலைப்பருப்பு – ஒரு கப்
துருவிய வெல்லம் – ஒன்றரை கப்
துருவிய தேங்காய் – கால் கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
 
 
 
செய்முறை:
 
மைதா, உப்பு, கேசரித்தூள், வெள்ளை ரவை, வெண்ணெய், எண்ணெய் சேர்த்து தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட சற்றுத் தளர்த்தியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். கடலைப் பருப்பை அளவான தண்ணீர் விட்டு (சுண்டல் பதத்துக்கு) வேகவைத்து தேங்காய், வெல்லம், சேர்த்து மீண்டும் கொதித்து வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து அரைத்தால் பூரணம் தயார். பூரணம் தளர்வாக இருந்தால் மட்டும் வாணலியில் போட்டுப் புரட்டவும். ஆறியதும் இறுகிவிடும்.
 
வாழை இலையின் மேல், மாவை ஒரு சிறிய உருண்டை அளவு எடுத்துத் தட்டி பூரணத்தை வைத்து மீண்டும் உருண்டையாகப் பிடித்து வைத்து மூடி போளியாகத் தட்டி தவாவில் இட்டு ஓரங்களில் எண்ணெய், நெய் கலந்த கலவையை ஒரு டீஸ்பூன் ஊற்றி, ஒருபுறம் வெந்ததும், திருப்பிப்போட்டு எடுத்தால் போளி தயார்

“கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாய நிபுணர்” பெரியவா!

18698_10153209347029244_3030028360467212073_n

“கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாய

நிபுணர்” பெரியவா!

(பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம்

கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு
பற்றி கேட்பவர்களும் வருவார்கள்)

சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
.
மாந்தோட்டம் வைத்திருக்கும் விவசாய இளைஞன்
ஒருவன் பெரியவாளிடம் வந்தான்.

“மாஞ்செடி நட்டு வளர்க்கிறேன்.பூக்கிறது.
உதிர்ந்து போய்விடுகிறது; காய்ப்பதே இல்லை”
என்று வருத்தத்துடன் கூறினான்.

பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம்
கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு
பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.

பெரியவாள், இரு தரப்பினரையும் சமமாகப்
பார்த்து அவரவர்களுக்கு உரிய விதத்தில்
பதில் சொல்லுவார்கள்.

“காய்க்காத மாமரத்தின் பக்கத்தில் இன்னும் சில
மரங்கன்றுகளை நடு. அந்தக் கன்றுகள் வளர்ந்து
பூக்கத் தொடங்கியதும், எல்லா மரங்களும்
காய்க்க ஆரம்பிக்கும்” என்றார்கள்,பெரியவாள்.

அப்போது விவசாயத்துறை அதிகாரி ஒருவர் அங்கே
இருந்தார்.பெரியவாளின் அறிவுரைக் கேட்டு
ஆச்சர்யப்பட்டார். அவர் சொன்னார்.

“சில மாமரங்களில் பெண் பூ நிறைய இருக்கும்.
ஆண் பூ அதிகம் இருக்காது. வேறு சில மரங்களில்
ஆண் பூ நிறைய இருக்கும். பெண் பூ குறைவாக
இருக்கும்.

மகரந்தைச் சேர்க்கை ஏற்படாமல் பூக்கள்
கருகிப்போய் உதிர்ந்துவிடும். பல மரங்கள்
இருந்தால் இந்தக் குறையினால் பாதிப்பு
ஏற்படாது. தேனிக்கள் எல்லா மரங்களையும்
மொய்க்கும். மகரந்தசேர்க்கை ஏற்படும்.
மரங்கள் காய்க்க ஆரம்பித்துவிடும்”

“இது எப்படி மகா பெரியவாளுக்குத் தெரியும்?”

கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாய
நிபுணர் பெரியவா.

 

மேகதாது அணை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை:
கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான  முயற்சியில் அடுத்தக் கட்டத்திற்கு கர்நாடக அரசு நகர்ந்திருக்கிறது. புதிய அணை ரூ.5912 கோடியில் கட்டப்படும் என்றும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா பெங்களூரில் நேற்று நடந்த விடுதலை நாள் விழாவில் கூறியிருக்கிறார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு நடத்தி வந்த நாடகம் சித்தராமய்யாவின் இந்த பேச்சு மூலம் அம்பலமாகிவிட்டது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவே மேகதாது அணை அணை கட்டப்படுவதாக கர்நாடக அரசு கூறி வந்தது. ஆனால், இப்போது மேகதாது அணையில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சித்தராமய்யா கூறியுள்ளார்.  93 டி.எம்.சி கொள்ளவுள்ள மேட்டூர் அணையில் செயல்படுத்தப்படும் இரு மின்திட்டங்களின் மூலம்  250 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மேகதாது அணையில் 400 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது என்றால், அந்த அணையின் கொள்ளளவு எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும்.

கர்நாடக அரசு தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையின்படி, மேகதாது அணை முதல்கட்டமாக 2000 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் கட்டப்படவுள்ளது. மேகதாது அணையில் 60 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இது கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, 49 டி.எம்.சி  கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையை விட பெரியதாகும். குடிநீர் தேவைக்காக இவ்வளவு பெரிய அணையை கட்டத் தேவையில்லை. முழுக்க முழுக்க பாசனத் தேவைகளுக்காகவே மேகதாது அணை கட்டப்படுகிறது என்பது கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மூலம் தெளிவாகிறது.

காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளின்படி காவிரி பாசனப் பரப்பை கர்நாடக அரசு அதிகரிக்க முடியாது. அதேபோல், மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளில் புதிய  அணை கட்ட வேண்டுமானால் கடைமடை பாசன மாநிலத்திடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்று  நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்களிலும், நீதிமன்றத் தீர்ப்புகளிலும் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பாசனப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவது நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

மேகதாது அணை கட்டுவது மட்டுமின்றி, பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ் நகர், தும்கூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 490 ஏரிகளில் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான திட்டத்தை ரூ.1885 கோடி செலவில் செயல்படுத்தப்போவதாகவும் சித்தராமய்யா கூறியிருக்கிறார். 49 டி.எம்.சி கொள்ளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மட்டுமே இருக்கும் காலத்திலேயே தமிழகத்திற்கு உரிய அளவுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. அவ்வாறு இருக்கும் போது அதைவிட அதிகமான அளவு தண்ணீரை தேக்கிவைக்கும் அளவுக்கு புதிய அணை கட்டப்படுவதுடன், சுமார்  500 ஏரிகளிலும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால், தமிழகத்திற்கு ஒரு சொட்டுக்கூட தண்ணீர் கிடைக்காது. அதன்பின் காவிரி ஆறு இன்னொரு பாலாறாக மாறி, தஞ்சை பாசன பகுதிகள் பாலைவனமாக மாறிவிடக்கூடும்.

மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்து பல ஆண்டுகளாகவே கர்நாடக அரசு பேசி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பே மேகதாது அணை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க  அம்மாநில நிதிநிலை அறிக்கையில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே மேகதாது அணையை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. இச்சிக்கலில் தமிழக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியிருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததுடன் கடமை முடிந்ததாக தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதையும், அவ்வாறு அளிக்கப்படும் தீர்ப்புகள் கூட செயல்படுத்தப்படுவதில்லை என்பதையும் ஜெயலலிதா தலைமையிலான அரசு உணரவில்லை என்பதையே அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன.

இனியும் இத்தகைய நிலைப்பாட்டைத் தொடராமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது ஒருபுறம் இருந்தாலும், மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் அரசியல்ரீதியில் அழுத்தம் தருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோல், மத்திய அரசும் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கக்கூடாது. இப்பிரச்சினை தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கடந்த 09.06.2015 அன்று மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு எழுதிய கடிதத்தில் மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அரசு அனுமதி அளிக்காது என கூறியிருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடகம் எப்போது தாக்கல் செய்தாலும் அதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஆவணி அவிட்டம் 18-08-2016 யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்.

18698_10153209347029244_3030028360467212073_n

ஆவணி அவிட்டம் 18-08-2016
யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்.
.(ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்! பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்!)
 
(மகா பெரியவாளின் சில முக்ய கருத்துக்கள்)
 
தெய்வத்தின் குரலிலும்,வலையிலும்-குறிப்பு
எடுக்கப்பட்டது-வரகூரான்.
 
 
ஆவணி அவிட்டத்தில்தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு,
 
ஆவணி அவிட்ட உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று
 
வேத பாடங்களை ஆரம்பம் செய்ய வேண்டும்.
 
 
 
இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை
 
நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரீ ஜபம் செய்ய
 
வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
 
 
வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து
 
முடிக்காததற்காகத்தான் பரிகாரமாக “காமோகார்ஷீத்” ஜபம் சொல்லப்பட்டு
 
இருக்கிறது. ஆனால் எப்படியோ ஒரு அறியாமை இந்த விஷயத்தில் புகுந்து
 
விட்டது. ‘காமோ கார்ஷீத்’ ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று
 
ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.
 
 
அதேபோல் பலரும் வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை
 
மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும்
 
அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்
 
கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வது
 
எதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே
 
முக்கியம். பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை. பூணூலை மாற்றிக்
 
கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும்.
 
 
ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை
 
ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு “காமோர்கார்ஷீத்” ஜபம் செய்வது
 
போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம்
 
வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம்
 
ஸ்திரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து
 
இருக்கிறார்கள். பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான்
 
காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு
 
இருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம்,
 
காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி
 
இருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ
 
மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

 
யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்
(பலருக்கும் தெரியாத விஷயம்)
 
 
.மஹேஸ்வர ஸூத்ரம்:- ஆவணி அவிட்ட வேதாரம்பம்
 
ம்ஹேஸ்வர ஸூத்ரம்: பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா- பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்! நடராஜாவோட சாப்பும் 14 சப்தத்தையே குடுத்துது!
 
 
இந்த பதினாலு ஸூத்ரங்களையும், ஆவணியாவிட்டம் பண்றவா கேட்டிருப்பா. மஹேஸ்வரனோட டமருலேர்ந்து வந்ததால, அதுக்கு மஹேஸ்வர ஸூத்ரம்ன்னு பேர் வந்தது.
 
 
அ இ உண்
 
ருலுக்
 
ஏ ஒங்
 
ஐ ஔச்
 
ஹயவரட்
 
லண்
 
ஞமங் ண நம்
 
ஜ ப ஞ்
 
க ட த ஷ்
 
ஜப க ட த ச
 
க ப ச ட த சடதவ்
 
கபய்
 
சஷஸர்
 
ஹல்
 
ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயேசும்மா ஒப்பிச்சிருப்பேள்!
பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி முடிச்சப்போ குடுத்த சாப்புகள்தான் இதெல்லாம்!

விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்

மிழின் இலக்கிய வளமையும் தொன்மைச் சிறப்பையும் நமக்குள்ளே வைத்திருத்தல் தகாது; உலக மொழிகளில் எடுத்துச் சென்றால் அதன் பெருமை உயரும் என்றெண்ணியவர் க.நா.சு. அதனால் தமிழின் தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல மொழிபெயர்ப்புக் களம் கண்டார். உலக இலக்கியத்துக்கு இணையாக உயர்ந்த தரத்தில் நவீனத் தமிழ் இலக்கியமும் திகழ வேண்டும் என்ற விருப்பத்தால், இப்பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டவர்.

க.நா.சு. என்ற மூன்றெழுத்தால் இலக்கிய உலகில் செல்லமாக அழைக்கப்பட்டவர் க.நா.சுப்ரமணியம். கந்தாடை நாராயணசாமி ஐயரின் புதல்வராக சுவாமிமலையில், 1912-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி பிறந்தார்.

40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 80க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், தத்துவ விசார நூல்கள் 10, இலக்கிய விசாரம் என்ற கேள்வி பதில் நூல் ஒன்று, உலகத்துச் சிறந்த நாவல்கள், உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் என மூன்று தொகுதிகள், இலக்கிய விமர்சன நூல் ஒன்று. இன்னும் பல நூல்களை தம் 86 வயதுக்குள் எழுதிக் குவித்தவர் இவர். அதற்கு மூல காரணமாக அமைந்தது, சிறுவயதிலேயே இவர் ஊன்றிப் படித்த இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள்தான்.

÷சுவாமிமலை கோவிலருகே தொடக்கப்பள்ளியில் தொடங்கி, பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பு தொடர்ந்தது. அவருடைய தந்தைக்கு சுப்பிரமணியத்தை ஏதாவது ஓர் அரசுப் பணியில் அமர்த்திவிட எண்ணம். எனவே, ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றிப் படிக்க வைத்தார். கும்பகோணம் அரசுக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலை என விரிந்த அவருடைய கல்விப் பயணம், அவருக்கு இலக்கிய அறிவையும் கூடவே ஆங்கிலப் புலமையையும் தந்தது.

படிக்கும் காலத்திலேயே ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம். வெளிநாட்டு மற்றும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் அவருடைய கதை கட்டுரைகள் வெளிவந்தன. 1935-இல் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திவந்த “காந்தி’ இதழில் வெளிவந்த கதைகள் அவரது சிந்தனையை தமிழின்பால் திருப்பின. தொடர்ந்து மணிக்கொடி அவரை ஈர்த்தது. தமிழில் எழுதத் தொடங்கினார் க.நா.சு.

÷தமிழ் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்தவர், தன் எழுத்துகளுடன் கால் பதித்தது “தினமணி’ அலுவலகத்தில். அங்கே எழுத்தாளர் வ.ரா. இவருடைய கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தார். கே.என்.சுப்ரமண்யம் என்று கையெழுத்துப் போட்டிருந்தார்.

வ.ரா. கேட்டார்… “”நீர் என்ன ஆங்கிலேயனுக்குப் பிறந்தவரா… கே.என்.சுப்ரமண்யம் என்று எழுத?” வெடுக்கென்று கேட்டார். சுப்ரமண்யமோ யோசித்துக் கொண்டிருந்தார். “”கே.என்.சுப்ரமண்யம் என்றெல்லாம் எழுதாதீர்… கந்தாடை நாராயணசாமி ஐயர் மகன் சுப்ரமண்யம் அல்லவா நீர்; க.நா.சு. அல்லது க.நா.சுப்ரமண்யம் என்றே எழுதும்” என்று கட்டளையிட, இவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதுமுதல் க.நா.சு. என்ற மூன்றெழுத்துப் பெயர் தமிழ் இலக்கிய வானில் சுடர்விடத் தொடங்கியது.

ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் சுயமாக எழுதுவது, 15 பக்கங்கள் தமிழில் மொழிபெயர்ப்பது, 10 பக்கங்கள் ஆங்கிலத்தில் புதிதாகப் படைப்பது, இத்துடன் மதிப்புரை, விமர்சனங்கள் எழுதுவது என்பதை எழுத்துப் பணிக்கான திட்டமிடலாகக் கொண்டார். தழுவல் எனும் உத்தியோடு விகடன், சுதேசமித்திரன், இமயம், சக்தி, ஜோதி உள்ளிட்ட இதழ்களில் பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் தந்தார்.

“சூறாவளி’ எனும் இலக்கிய இதழைத் துவக்கினார். ராமபாணம், சந்திரோதயம், இலக்கிய வட்டம், ஞானரதம், முன்றில்… இவை எல்லாம் க.நா.சு.வால் தொடங்கப்பட்ட இதழ்கள்தான். இவற்றால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டம், தமிழுலகுக்கு மாபெரும் மொழிபெயர்ப்பு இலக்கிய நஷ்டத்தைத் தந்துவிட்டது.

÷தயவு தாட்சண்யமற்ற கண்டிப்பான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றவர் க.நா.சு. “தினமணி’யில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அதிகம் எழுதியவர். அசுரகணம், பித்தப்பூ, தாமஸ் வந்தார், கோதை சிரித்தாள் எனப் பல நாவல்களையும் எழுதியுள்ளார். 1979-இல் குமாரன்ஆசான் நினைவு விருது, 1986-இல் சாகித்ய அகாதெமி விருது என விருதுகளும் பெற்றவர். பொய்த்தேவு – இவரது பிரபலமான நாவல்களுள் ஒன்று.

÷அந்நாவலில் இவரது எழுத்து நடை கதை நடையாக இல்லாமல் பல இடங்களில் கட்டுரை நடையாகவே இருக்கிறது என்பது அந்தக் கால விமர்சகர்களின் கணிப்பு.

÷க.நா.சு. மேற்கத்திய எண்ணம் கொண்டவர்; தமிழ்நாட்டைப் பற்றி அக்கறை இல்லாதவர் என்றெல்லாம் அந்தக் காலத்தில் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் மேற்கொண்ட மொழிபெயர்ப்புப் பணி அதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், மொழிபெயர்க்கப் படைப்புகளைத் தேர்வு செய்யும்போது அதை உணர்வுப்பூர்வமாகவே செய்தார் என்பது புரியும். ÷தமிழர்களை, தமிழ்க் கலாசாரத்தை மனதில் கொண்டே, அவர்களுக்கு ஒட்டக் கூடியதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதையும் உடனிருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், க.நா.சு.வே விமர்சனக் கலைக்கு உரமிட்டவர். அவருடைய விமர்சனங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. அந்த வகையில், க.நா.சு.வுக்கு எழுத்துத் துறைக்கு அப்பால் நண்பர்கள் அதிகம் இருந்ததில்லை. சம காலத்து எழுத்தாளர்கள் பற்றி, படைப்புகள் பற்றி நிறைய விமர்சனங்கள் செய்துள்ளார் க.நா.சு. ஆனால், பாரதி பற்றி அவரிடம் ஒரு மெüனமே இருந்திருக்கிறது. பாரதியைக் குறைசொல்லி எழுதியதுமில்லை; பாராட்டியும் சொன்னதில்லை.

தன் விமர்சனங்கள் பற்றி அவர் ஓரிடத்தில் சொன்னது…

÷””நீங்கள் அழிக்கும் விமர்சனம் ஏன் எழுதுகிறீர்கள்; ஆக்க விமர்சனம் செய்யக்கூடாதா என்றுதான் விமர்சனம் எழுத ஆரம்பித்த காலத்தில் பல வாசகர்கள் என்னைக் கேட்டதுண்டு. அதற்கு ஒரே பதில்தான் உண்டு. அழிக்கப்பட வேண்டியது அதிகமாக இருக்கும்வரை அழிக்கும் விமர்சனம் செய்தேதான் தீரவேண்டும். ஆனால், ஆக்க விமர்சனம் இல்லாமல் அழித்தல் விமர்சனம் என்று ஒன்று கிடையாது. இலக்கிய விமர்சனத்தில் ஒரு நோக்கில் அழிப்பதும் ஆக்குவதும் ஒன்றே என்றுதான் பதில் தரவேண்டும். மற்றபடி கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக் கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. தான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும், டாண்டேயும், ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம்; ஆனால், இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு; அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும். இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்…” என்கிறார் க.நா.சு.

“சரஸ்வதி அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப் படவில்லை; ஜகன் மாதாவாகக் காட்சி கொடுத்தார்”.

11150315_929232457097952_160320049499770397_n

“சரஸ்வதி அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப்
படவில்லை; ஜகன் மாதாவாகக் காட்சி கொடுத்தார்”.
சொன்னவர்; சரஸ்வதி அம்மாள். காஞ்சீபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
உத்தராயண புண்யகாலம் நாலுநாளில் வருகிறது
என்ற நல்ல சமயத்தில் மகா வேதனையைத் தரும்
அந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது.
காஞ்சீபுரம் அஷ்டபுஜம் தெரு, சரஸ்வதி அம்மாளுக்கு
நெஞ்சுவலி.’டாக்டரைப் பார்த்துவிட்டு வரலாம்’ என்று
போய்க்கொண்டிருந்தபோது, பட்டப்பகல் வேளையில்-
நட்ட நடுத்தெருவில் அது நடந்துவிட்டது.
கழுத்தில் ஏதோ உரசினாற்போலிருந்தது,சரஸ்வதி
அம்மாளுக்கு. ‘என்ன,இப்படி?’ என்று எண்ணி,கையால்
கழுத்தைத் தடவிப் பார்த்தபோது.
திடுக்.!..
மஞ்சள் சரட்டில் கோர்த்திருந்த திருமாங்கல்யம்
பறிபோயிருந்தது..!
ஒட்டி உரசினாற்போல், சைக்கிளில் வேகமாகச்சென்று
மறைந்து போனானே,பாவி! அவன் வேலையாகத்தான் இருக்கும்.,
வீட்டுக்கு வந்து, பூஜை மாடத்தில் வழக்கமாகப்
பூஜிக்கப்படும் பெரியவா பாதுகைகளின் மேலிருந்து
ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து, மஞ்சள் சரட்டில் கட்டி
கழுத்தில் போட்டுக்கொண்டாகிவிட்டது. உடனே
நகைக் கடைக்குப் போய், திருமாங்கல்யம் வாங்கிக்
கொண்டு வந்து, சரட்டில் கோர்த்து கழுத்தில் போட்டுக்
கொள்ளலாம் – என்பதெல்லாம் நடைமுறைப்படுத்த
முடியாத செயல்திட்டம்.
எப்படியும் பெரியவாளிடம் சொன்னால் தான்
மனம் நிம்மதி அடையும்.
மறுநாள் தரிசனத்துக்குப் போனபோது கூட்டம்
கூடுதகலாகவே இருந்தது. மூகூர்த்த நாள். சிலர்
கல்யாண விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மங்களகரமான அந்த நேரத்தில், ‘என் திருமாங்கல்யம்
திருடு போய்விட்டது’ என்று சொல்வது அநாகரிகம்.
ஓரமாக நின்றுகொண்டிருந்தாள்,அம்மாள். பெரியவா
கண்களுக்கு, ஓர் எறும்பு ஊர்வது கூடப்பட்டுவிடும்.!.
சேவையாளர் ஸ்ரீகண்டனிடம், “அவள் என்னமோ
சொல்றா, கேளு” என்று ஆக்ஞை.
ஸ்ரீகண்டனிடம்,நடந்தவற்றை, கண்களில் நீர்
ததும்பக் கொட்டித் தீர்த்துவிட்டாள், சரஸ்வதி.
செய்தி, பெரியவா திருச்செவிகளை எட்டிவிட்டது.
சரஸ்வதி அம்மாள் நின்றுகொண்டேயிருந்தாள்.
பிரசாதம் வாங்கிக் கொள்ளணுமே.!.
ஐந்து நிமிஷமாயிற்று.
பெரியவாள் தொட்டுக் கொடுப்பதற்காகப்
பிரசாதத் தட்டை நீட்டினார், ஸ்ரீகண்டன்.
“….எடுத்துக்கோ…”
பார்த்தாள், மஞ்சள் சரட்டில் கோர்த்த திருமாங்கல்யம்,
குங்குமம்,விபூதி,அட்சதை,புஷ்பம்…
அம்மாளுக்குப் பரவசம், “எப்போ கட்டிக்கிறது..?”
-பெரியவாளிடம் கேள்வி.
“கனுப்பொங்கல் அன்னிக்கு..மஞ்சள் தீத்திண்டபிறகு..”
அதன்படியே செய்து,தரிசனத்துக்குப் போனாள்,அம்மாள்.
வெறுங்கையுடன் போகலாமா.? நூறு கிராம் டயமண்டு
கல்கண்டு வாங்கிக்கொண்டு போனாள்.
நமஸ்காரம், கல்கண்டு சமர்ப்பணம்.
“திருமாங்கல்யம் கட்டிண்டுட்டேன்…”
கல்கண்டுத் தட்டை அருகில் இழுத்து, ஒரு டயமண்டை
வாயில் போட்டுக் கொண்டார்கள், பெரியவா.
“…எல்லாருக்கும் கொடு, திருமாங்கல்ய தாரணம்
ஆனவுடன் ஸ்வீட் கொடுக்கணுமில்லையா.?”
சரஸ்வதி அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப்
படவில்லை; ஜகன் மாதாவாகக் காட்சி கொடுத்தார்.
இந்த சரஸ்வதிக்கு என்ன, அந்த சரஸ்வதிக்குமே
பெரியவா, ‘தாயார்’ ஸ்தானம் தான்.!

கொடி-கொள்கை-தியாகம்!

நான் ஏன் மூவண்ணக் கொடி தாளை
குண்டூசிகளால் என் சட்டைப் பைகளில்
குத்திக் கொள்வதில்லை தெரியுமா?
காரணத்தைப் படியுங்கள்….
//
சுதந்திர தினக் கொடியேற்றம்…
கொடியின் நிறங்கள்…
பசுமை-செழுமை-இஸ்லாமாம்…
வெண்மை-அமைதி-கிறித்துவமாம்…
காவி-தியாகம்-இந்துவாம்…
***
குண்டூசிகளால் குத்துப் பட்டும்
சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு
சிரிக்கிது தேசியக் கொடி!

குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.
தேசியக் கொடியும்
அதனால்தானே
விழாமல் தாங்கி நிற்கிறது?!

அதுதான் மேலே ஓங்கி
உயரப் பறக்கிறது!

தியாகம் மட்டும்
இல்லை என்றால்
தேசியம் எங்கே
நிலைக்கப் போகிறது!

குத்துப் பட்டும் சிரிக்கும்
காவியைப்போலே

வெட்டுப் பட்டும் வேதனைப் பட்டும்
தேசியத்தைத் தாங்கி நிற்பீர்…
இந்திய நாட்டின் இந்துக்களே!

தியாகிகளே!

சுதந்திரப் பாதை …

மழைக்குக் காத்திருந்த நிலம்போல்
வறண்டு கிடந்தது என் உள்ளம்…

மழைக் காலமாய் நிலம் குளிர்ந்த
வசந்த காலம் வீசிச் சென்றது…

அணைகளில் தேங்கிவைத்த நீரெல்லாம்
உடைப்பெடுக்கும் உருவகத்தை வழங்கின!

உபரிநீராய் வழிந்தோடியது என்னுள்ளே
உணர்ச்சிப் பெருக்காய் அன்பின் ஆறு!

சொட்டுச் சொட்டாய் கண்ணில் கசிகிறது
உணர்வுகளைக் கசக்கிப் பிழிந்தெடுத்த சாறு!

குன்றின் மேல் நின்றுகாணும் யானைப் போர்
தெருக்களில் குரைத்துத் திரியும் நினைவுகளாய்…

உயிரிருக்க வழியுண்டு உவகைக்கு இடமுண்டு
எஜமானன் என்றொரு ஜீவனும் உண்டுதான்!

வாலாட்டும் மட்டும் வாயில்லா ஜீவனாம்நான்
நாவொடு நக்கும்வரை நன்றாய் கவனிப்பும்தான்!

எந்தப் பாவி இடையில் வந்தானோ?
கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் காலன்போலே!

சாளரத்தின் வழியேநான் சாய்ந்துபார்ப்பேன்…
சகபாடிகளின் சன்னஈனக் குரலும் கேட்பேன்…

குளிருக்குள் அடங்கிக்கொண்டு சிறைப்பட்டேன்
குதூகலிக்கும் நட்புகளின் சுதந்திரம் கண்டேன்!

எத்தனைநாள் உணர்வுப் பிழியலில் உயிர்வாழ்வது?
சாளரத்தின் உள்ளுக்குள் சமைந்து போவது?

கதிரவனின் அறுபொழுது வெய்யில் காணாமல்!
கதைபலவும் அவிழ்த்துவிட்டு வாழ்தல் தகுமோ?

தேசம் விற்பனைக்கல்ல!

தேசியம் பேசினவன் ஒரு வகை
சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை
பாசிசம் பகன்றவனோ பல வகை
நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை
பூசித்துக் காப்பதெல்லாம் போதாதா?

தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?

அடிமைத்தனம் அறுத்து அவதி நீக்க அல்ல!
அடிமை மோகத்தால் அவதி பெருக்க!

நம் தேசத்தின் இசம் எது?
இந்துயிசமா? புத்திசமா?
கிறிஸ்துவ இஸ்லாமிசமா?
இல்லவே இல்லை!

இந்த இசங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி
நம்பர் ஒன் இடம்பிடித்த இசம் ஒன்றுண்டு!

அந்த இசம்…
கூட்டுக் குடும்பத்தைக் கொலை செய்தது!
கூட இருந்தவனைக் குழிபறிக்கச் செய்தது…
பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை
துறக்கச் சொன்ன இசத்தையும் இம்சித்தது…
பாசத்தைப் படுகுழியில் தள்ளி,
சுயநலப் பித்தை வளர்த்தெடுத்தது!

நண்பர்களோ, உறவினர்களோ…
ஏன் ஏன்…
அண்ணன் தம்பி அம்மா அப்பா என்றாலும்,
ஓர் அறைக்குள் ஒட்டிக் கொண்டிருந்தாலும்,
இருவேறு ஆசைகளை வளர்த்தெடுத்தது!

வாழ்க்கை நெறிமுறை தொலைக்க வைத்து
வாழுதற்காய் முறைதவறும் மனம் வளர்த்தது!

நட்பு தொலைத்தது;
நல் உளம் சிதைத்தது…
உதவும் எண்ணத்தை
உருத்தெரியாமல் ஆக்கியது!

உடன் வந்தான் உதவி செய்வோம்
உருப்படுவான் என்று பார்த்தால்,
கடன் வாங்கிக் கம்பி நீட்டிக்
கழுத்தறுக்கச் செய்தது!

ஊழல், லஞ்சம், ஏமாற்றல், நயவஞ்சகம்…
எல்லாம் இந்த இசத்தால்தான்!

தேசத்தில் நிகழும் தவறுகளுக்கெல்லாம்
இந்த இசத்தின் வீச்சும் ஆளுமையுமே காரணமாம்!

தேசத்தை விலை பேச வைக்குது!
வாயில் சுதேசியம் பேசி,
கையில் தேசியம் பிடித்து,
வாயில் கதவோ வெளிநாட்டுப் பொருளுக்கு
திறக்க வைக்குது!

பெரும்பான்மை மதம் போலே
நமக்குள் நுழைந்திட்ட இந்த இசம்…
எந்த இசம்..?

எல்லாம் இந்த
கன்ஸ்யூமரிசம்தான்!

கன்ஸ்யூமரிசம்தான்!

இந்த இசத்தின் வழி நடப்போர்க்கு
நுகர்வோர் என்பது பெயர்…

நாமும் நுகரத் தலைப்பட்டோம்
வசதியான வாழ்க்கைக்கு
ஆசைப்பட்ட நுகர்வோராய்!

இப்போது சொல்லுங்கள்…
நம் தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?