Home Blog Page 5752

ஒப்படைப்பு

காலைக் கண்விழிப்பு
உன் கனவுகளுடனே!

என் தலையணையில் ஏறியது
உன் கூந்தலின் வாசம்!

காப்பியின் சுவை
நாக்கில் சுடும்போது…
உன் வார்த்தைக் கசப்பு
நெஞ்சைச் சுடுகிறது!

வாசலில் விழுந்த செய்தித்தாளின்
நாசியைத் துளைக்கும் வாசனை…

கண்கள் தேடும்
அன்றைய ராசிபலனை!
எனக்கு ராசியாகிப் போன
உன் ராசியின் பலனை
உடனே மேயும்!

நல்லதாய் இருந்தால்
என் மனம் துள்ளும்!
எதிர்மறை என்றால்..
எப்படி சமாளிப்பாய் என
சஞ்சலம் கொள்ளும்!

என்னைப் பற்றி என்ன கவலை?
என்னை உன்னிடம்
ஒப்படைத்த பின்னே!

‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’

77134_693849987312454_1034041963_n

‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’

(புண்ணியம் செய்தவர்களை தெய்வங்கள் பார்த்துக்
கொள்ளும். மகாபாவிகளை மீட்டுக் கொணர்வதற்குக்

காஞ்சிப் பகலவனால் தான் முடியும்.)

(மிலிட்டரி சைவம் ஆன கதை)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
அந்தணர் ஒருவர்,பாரத போர்ப்படையில் சேர்ந்தார்.
அப்புறம் அந்தணத்தன்மை அன்னண்டை போய் விட்டது. 
சூழ்நிலை,அப்படி. சகவாசதோஷம்,மலை,குளிர்காடு, வெய்யில், தனிமை.

பஞ்சமா பாதகங்கள் எல்லாவற்றையும்,
எல்லாவற்றையும் – குறைவறச் செய்தார்.!

பணி(னி)யில் இருக்கும்போது, எங்கோ ஒரு
முகட்டில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.
(அது போதிமரம் போலும்)

 
‘அட…!. வாழ்க்கையைத் தொலைத்து விட்டேனே!
எத்தனை வகையான பாதகங்களைச் செய்திருக்கிறேன்! மெய்,வாய்,மனம்-எல்லாம் கறை;அழுக்கு,பாவம்…
.
‘எனக்கு உய்வுண்டோ! மகாபாவியாயிற்றே!
என்னை யார் காப்பாற்றுவார்கள்! கருணை வள்ளல்
பரமேசுவரனால் கூட முடியாதே’.

Chalo Kailash to Kanchi via Kaladi.

நேரே காஞ்சீபுரம் வந்தார். ‘மெஷின்கன்’களை
இயக்கிய கரங்களால், வாய்பொத்தி நின்றார்.
கண்ணீர் வெள்ளத்துக்கு அணைகட்ட முடியவில்லை.

கச்சிமுதூர் வள்ளல். கருணை சமுத்திரம்.

புண்ணியம் செய்தவர்களை தெய்வங்கள் பார்த்துக்
கொள்ளும். மகாபாவிகளை மீட்டுக் கொணர்வதற்குக்

காஞ்சிப் பகலவனால் தான் முடியும்.

அனசூயையைக் காப்பாற்ற எல்லா தேவதைகளும்
ஓடிவரும்; அகலிகையைக் காப்பாற்ற அயோத்தி
ராமனால்தான் முடியும்!

” பிரஸித்தமான ஒரு சிவக்ஷேத்ரத்துக்குப் போ
புண்ணிய தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணு,
உபவாசம் இரு,நந்திகேஸ்வரிடம் போய்,
வாய்விட்டு – இப்போ என்கிட்ட சொன்னியே,
அது மாதிரி – சொல்லி,வேண்டிக்கோ. உன்னை
மன்னிக்கும்படி பரமேசுவரனிடம் சிபாரிசு
செய்யும்படி பிரார்த்தனை செய்.

“உன்னால் தப்புப் பண்ணாமல் இருக்க முடியாது.
க்ஷத்ரிய தர்மத்தை அவலம்பிச்சிருக்கே.
ரொம்ப குறைச்சுக்கோ…”

அந்த மிலிட்டரிக்காரர், சிவத்தை நாடிப் போனார்.

‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’
வால்மிகியின் இராமன் காஞ்சியிலும் காட்சி
கொடுப்பான்.

“வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

1507603_10202994818654217_4035239553088867808_n

“வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

(மலைவாசிகள் கொடுத்த மகத்தான காணிக்கை)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

சதாரா அருகிலுள்ள ஸஜ்ஜன் கட் என்ற மலையில்,
சமர்த்த ராமதாஸ் சுவாமிகள் கோவில் இருக்கிறது.
செங்குத்தான மலையில் சிரமப்பட்டு ஏறிச்
சென்றார்கள், பெரியவாள்.

அந்த மலையில்,’அய்யாபுவா’ ‘அன்னாபுவா’ என்ற
இனங்களைச் சேர்ந்த மலைவாசிகள் வாழ்ந்து
வருகிறார்கள்.

மலை ஏறி வந்திருக்கும் மகானுக்கு காணிக்கை
செலுத்த வேண்டுமே? காசு – பணம் ஏது?.

செழுமையான வாழைத்தோட்டங்கள் நிறைந்த மலை.
அவர்கள் உணவும் வாழையை மூலப்பொருளாகக்
கொண்டது தான்.

காய்ந்து போன வாழைக்காய்களின் தோலை
நீக்கிவிட்டு, உட்பகுதியை மாவாகச் செய்வார்கள்.

அந்த வாழைக்காய் மாவை, பெரியவாளுக்கு
சமர்ப்பித்தார்கள் – சங்கோஜத்துடன்.

“இது என்ன மாவு?”

“வாழைக்காய் மாவு…”

“இதை எப்படிச் சாப்பிடறது?”

“இட்லி,தோசை பண்ணலாம்…”

சிறு புன்னகை

” ஓ! வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

 
“ஆமா, சாமி…”
 
பெரியவாள், கள்ளங்கபடமற்ற அந்த மக்களின் ஆனந்த முகங்களைப் பார்த்து பெரிதும் சந்தோஷப்பட்டார்கள்.

அன்று முதல், பெரியவாள் பிக்ஷைப் பக்குவத்தில்,
வாழைக்காய் மாவு நீங்காத இடத்தைப் பெற்று விட்டது தானியங்களான உணவை முற்றிலுமாக நிறுத்தி விட்டிருந்த பெரியவாளுக்கு வாழைக்காய் மாவு ரொம்பவும் கைகொடுத்தது.

அய்யாபுவாவும்,அன்னாபுவாவும் நம்மைக் காட்டிலும்
மிக உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஆம் அவர்கள் மலைச் சிகரங்களில் அல்லவா வாழ்கிறார்கள்.

“இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?”

2002030700050201

“இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?”
 
கட்டுரை-சுப்பு ஆறுமுகம் (கல்கியில் வந்த தொடர்)
(அருளே அறிவே அமுதே!)
 
எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி
 
நண்றி-கல்கி & பால ஹனுமான்
 
 
வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, காலடியில் ஆதிசங்கரர் அவதரித்ததைக் குறிப்பிடும்போது, பெரியவாள் திருவனந்தபுரம், திருவாங்கூர் சமஸ்தானம், சேர நாடு என்றெல்லாம் ஆரம்பிக்காமல், ‘பரசுராம க்ஷேத்திரம்’னு ஆரம்பிக்கச் சொன்னதைப் பற்றி ஏற்கெனவே சொன்னேன்.
 
ஆனால் எனக்கு காலடியில் பிறந்த ஆதிசங்கரர்தான் காஞ்சியின் பீடாதிபதியான மஹா பெரியவாள்; அவருக்குரிய அனைத்து சீலமும், சிறப்பும் இவருக்கும் உண்டு. இருவருக்கும் இடையில் எந்தவிதமான வித்தியாசமும் என் கண்களுக்கோ, மனசுக்கோ புலப்படவில்லை. ஆகையினாலே, பெரியவாளிடமிருந்து உத்தரவு வந்ததும், ‘காலடி முதல் காஞ்சி வரை’ என்பது தான் அந்த வில்லுப்பாட்டுக் கதையின் தலைப்பு என்று என் மனத்துக்குள் தோன்றியது.
 
காஞ்சிபுரத்தையடுத்த பங்காருப்பேட்டையில்தான், ‘காலடி முதல் காஞ்சி வரை’ கதையை வில்லுப்பாட்டில் அரங்கேற்றம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பங்காருப்பேட்டைக்குப் போய் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பாக, மடத்துக்குப் போய், பெரியவாளை தரிசனம் செய்து, ஆசீர்வாதம் பெறுவதே திட்டம். மடத்துக்குச் சென்று பெரியவாள் தரிசனத்தின்போது, சுப்பு ஆறுமுகம் வந்திருக்கார். பங்காருப்பேட்டையில இன்னிக்கு அவரோட காலடி முதல் காஞ்சி வரை வில்லுப்பாட்டு முதல் புரோகிராம்” என்று பெரியவாளிடம் தெரிவிக்கப்பட்டதும், இங்கேயே சொல்லேன்; நானும் கேட்கிறேன்” என்றார். சற்றும் எதிர்பாராத இந்த வார்த்தைகளால் நான் திகைத்துப் போனேன். கதை சொல்லும் வில்லும், இதர வாத்தியங்களும் கூட காரில்தான் இருந்தன. அவசரம் அவசரமாக ஓடி, அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்து, பெரியவாள் முன்னிலையில் அமர்ந்து கதை சொல்வதற்குத் தயாரானோம்.
 
மனத்தின் ஒரு மூலையில், ‘பங்காருப்பேட்டையில் எல்லோரும் கதை கேட்கக் காத்துக் கொண்டிருப்பார்களே!’ என்ற நினைப்பும் ஓடிக்கொண்டிருந்தது. ஆரம்பிக்கச் சொல்லி, பெரியவாள் கையசைத்தார். பரசுராம க்ஷேத்திரத்திலிருந்து கதையை ஆரம்பித்தேன். எனக்குத்தான் அவர் (ஆதிசங்கரர்) தான் இவர்; இவர் (மஹா பெரியவாள்) தான் அவர் ஆயிற்றே! காலடிக்கும், காஞ்சிக்குமாக மாறி, மாறி இருவரது திவ்ய சரிதத்தையும் கலந்து சொல்லத் தொடங்கினேன்.
 
 
ஓங்காரம் குழந்தை என்றே உன்னுருவில்
 
வந்ததுவோ!
 
ஆங்கார சக்தியதே ஆசிமொழி தந்தனளோ!
 
காமதேனு பாலூட்ட கலைமகளே தாலாட்ட
 
ஆகமங்கள் சீராட்ட அன்னையின் கை தொட்டில் ஆட்ட
 
காமாட்சி காதில் வந்து கதைகள் ரசிக்கச்
 
சொல்லினளோ!
 
கலகல சிரிப்பினில் அன்னை கானமழை
 
பொழிந்தனளோ!
 
உதைக்கும் பாதங்களை உலகமே வணங்குமல்லோ!
 
காத்திருக்கும் நாளை அல்லோ
 
காமகோடி பீடமல்லோ!
 
அனுஷம் நட்சத்திரமோ! அவதாரம்
 
சரித்திரமோ!
 
ஆடல் அரசன் – திரு ஆடல்களில் நீயும்
 
ஒன்றோ!
 
ஆதி சங்கரர் அருளின் சேதியென்ன கொணர்ந்தாயோ!
 
ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ!
 
ஆராரோ!
 
தட்சிணா மூர்த்தியோ!
 
சனாதனக் கீர்த்தியோ!
 
தருமத்தின் குறைகள் கண்டு தான் எடுத்த அவதாரமோ!
 
ஆராரோ! ஆரிரரோ! ஆரிரரோ! ஆராரோ!”
 
இப்படியாக குழந்தை சுவாமி நாதன் (மஹா பெரியவாளின் பூர்வாசிரமப் பெயர்) தொட்டிலில் துயில் கொள்ளும் அழகுக்கு ஒரு தாலாட்டுப் பாட்டுப் போட்டிருந்தேன். இதைக் கேட்டதும், மஹா பெரியவாள், என்னைத் தொட்டிலில் போட்டு, தாலாட் டுப் பாடி தூங்கப் பண்ணிட்டியே! ” என்று சொல்லிச் சிரித்தார்.
 
பெரியவாளின் பால பருவத்தைப் பற்றிச் சொல்லும்போது,
 
நடித்தாரே!
 
நாடகம் தனில் அவர்
 
நடித்தாரே!
 
உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தாரே!
 
என்று பல்லவியும், சரணமாக
 
கடவுள் கொடுத்தது மானிட வேடம்!
 
கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்!
 
இன்றிவர் படித்தது இங்கிலீஷ் பாடம்!
 
எதிர்பார்த்திருக்குது காமகோடி பீடம்!
 
(நடித்தார்)
 
என்று சொன்னேன். உடனே மஹா பெரியவா, இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?” என்று கேட்டார். பெரியவா பத்தின புஸ்தகத்தை படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன்” என்று சொன்னேன்.
 
மேற்கண்ட வரிகளில் சொல்லப்பட்ட விஷயம் எல்லா பக்தர்களுக்கும் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, மாணவன் சுவாமிநாதன் மஹா புத்திசாலி. ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பள்ளிக் கூடத்துக்குப் பள்ளிக்கூட உதவி ஆய்வாளர் வருகை புரிந்தபோது, உயர் வகுப்பு மாணவர்களுக்குரிய ஆங்கிலப் பாடப் புத்தகத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னபோது, அபாரமாகப் படித்துக் காட்டிய சுவாமிநாதனது திறமையைப் பார்த்து, வியந்த அதிகாரியின் உத்தரவின் பேரில் சுவாமிநாதனுக்கு டபுள் புரமோஷன் வழங்கப்பட்டது.
 
 
பத்து வயதில், திண்டிவனத்தில், கான்வென்ட் பள்ளியில் ஃபோர்த் ஃபாரம் படித்துக் கொண்டிருந்தபோது, ஷேக்ஸ்பியர் எழுதிய ‘கிங் ஜான்’ நாடகத்தை பள்ளிக்கூடத்தில் நடத்த ஏற்பாடு செய்தார்கள். அந்த நாடகத்தின் முக்கியமான ஆர்தர் இளவரசர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பொருத்தமான மாணவன் என்று பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் சுவாமிநாதனைத் தேர்ந்தெடுத்தார்.
 
இரண்டே நாள் ஒத்திகையில், தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டு, ஆர்தர் இளவரசராக அற்புதமாக ஷேக்ஸ்பியரின் ஆங்கில வசனங்களைப் பேசி அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற பெருமைக்குரியவர் மஹா பெரியவா.
 
இதைத்தான் நான் வில்லுப்பாட்டில் சொல்லும் போது நடித்தார்.. நாடகம்தனில் அவர் நடித்தார்!… உலக நாடகம் நடத்திட வந்தவர் நடித்தார்! கடவுள் கொடுத்தது மானிட வேடம்! கல்விக்கூடத்தில் ‘கிங் ஜான்’ வேடம்” என்று சொன்னேன்.
 
இதில் விசேஷம் என்னவென்றால், மானிட வேடம், கிங் ஜான் வேடம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களை மிகவும் ரசித்து, எங்க! அதை இன்னொருதரம் சொல்லு” என்று கேட்டார். சந்தோஷமாக அந்த வரிகளைப் பாடிக் காட்டினேன்.
 
இந்த வரிகள் எந்த அளவுக்குப் பரவலாக ரசிக்கப் பட்டது என்பதற்கு இன்னொரு பெருமைமிகு உதாரணம், ஒருமுறை எம்.எஸ். அம்மாவை சந்தித்த சமயத்தில், அவர் ஒரு குழந்தையைப் போல, நீங்க பெரியவா கதைய வில்லுப்பாட்டுல சொன்னபோது, ஒரு பாட்டை ரெண்டு தடவை சொல்லச்சொல்லி கேட்டாளாமே? அதைச் சொல்லுங்க” என்று கேட்க, ‘இதுவும் அந்த மஹா பெரியவாளோட அனுக்கிரஹம்’ என்று சந்தோஷப்பட்டு, அந்தப் பாட்டை நான் சொன்னேன். அவர் கண் களை மூடி, கரகோஷம் செய்து, இந்தப் பாட்டைக் கேட்கிறவா நிச்சயம் உருகித்தான் போயிடுவா!” என்று சொன்னதோடு, பெரியவா பாதத்த கெட்டியா பிடிச்சுண்டிருக்கேள்! அவரோட அனுக்கிரஹத்துல அமோகமா இருக்கணும்!” என்று வாழ்த்தினார்.
 
இதற்குள், பங்காருப்பேட்டையில் கதை கேட்பதற்குத் திரளான கூட்டம். நான், மடத்தில் பெரியவா முன்னால் கதை சொல்லிக் கொண்டிருக்கும் தகவல் கிடைத்ததும், அங்கே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர்கள், அறிவித்தபடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை, ஏழு மணிக்கு ஆரம்பிப்பதற்கில்லை. சுப்பு ஆறுமுகத்துக்கு மடத்தில் கதை சொல்லச் சொல்லி உத்தரவாகி இருக்கு. அதை முடித்துவிட்டு, அவர் இங்கே வருவார். அவர் வந்த பிறகு வில்லுப் பாட்டு புரோகிராம் ஆரம்பமாகும்” என்று அறிவித்து விட்டார்கள்.
 
மடத்தில் கதை சொல்லி முடித்துவிட்டு, நான் பக்திப் பிரவாகத்தில் பெரியவாளைப் பற்றி திருப்புகழ் சந்தத்தில் ஒரு ஆசுகவி பாட, ஆறுமுகம், என்னை ஆறுமுகம்னு பாடறானே!” என்று சொல்லி ஆசீர்வதித்ததை இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்.

எதிர்கால சமுதாயத்தை சீரழிக்க அரசியல் செய்யும் தமிழக கட்சிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை:\

எதிர்கால சமுதாயத்தை சீரழிக்க அரசியல் செய்யும் தமிழக கட்சிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் கல்விக்கொள்கையானது பல ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படவில்லை. காலசூழலுக்கு ஏற்பவும், மாணவர்களின் நலன் கருதியும் புதிய கல்விக்கொள்கையை வகுக்க மத்திய அரசு அனைத்துத் தரப்பு மக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்து வருவது, அனைவரும் அறிந்ததே. மாணவர்களின் இன்றைய சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலும், பாரதத்தின் பண்பாட்டில் வளரவும் தக்க விதத்தில் பாடத்திட்டம் இருப்பதோடு, மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும், அவர்களின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படுவதை இந்து முன்னணி வரவேற்கிறது.

சம்ஸ்க்ருதம், இந்தி ஆகிய மொழிகளை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள், மக்களிடம் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இந்த விஷயத்தில் தமிழக மக்கள், இவர்களை நம்பத் தயாரில்லை, இது 1960ஆவது வருடம் இல்லை. வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி முதலானவற்றில் தமிழக மாணவர்கள் பாரதம் முழுவதும் சென்று சாதனை படைக்க மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது. அதுமட்டுமல்ல அண்ணல் அம்பேத்கர் அவர்களும், சுவாமி விவேகானந்தர் அவர்களும் சம்ஸ்க்ருதம் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறுயிருக்கிறார்கள். மொழிகளைக் கற்க வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இதில் திமுக, அதிமுக கட்சிகளின் நாத்திக, தேசிய விரோத எண்ணங்களை திணிப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. விருப்பம் உள்ள மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வது அரசின் கடமை என்பதை வலியுறுத்திக் கூறுகிறோம்.

இதுபோன்ற வரட்டுப் பிடிவாதத்தால், தமிழகத்தில் நிறுவியிருக்க வேண்டிய நவோதாய பள்ளிகளைப் புறந்தள்ளின தமிழக அரசுகள். இவற்றை ஏற்றுக்கொண்ட பக்கத்து மாநிலங்கள் இன்று கல்வியில் முன்னேறி உள்ளன. தமிழக மாணவர்கள் உயர் கல்வியில், தொழில் நுட்ப கல்விகளில், மருத்துவ படிப்புகளில் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் கொள்கை திணிப்பே காரணம். இந்தியை மூன்றாவது மொழியாகப் படிக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட அனைத்து மாநிலங்களும் தங்களது தாய்மொழியின் முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. ஆனால், ஆங்கில மொழியை மட்டும் படிக்கும் தமிழக மாணவர்கள் தாய்மொழி அறிவை இழந்து வருகின்றனர் என்பது எல்லோரது கருத்தும் ஆகும்.

புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்களின் உள்நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்லவும், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பகிரங்க ஆதரவு தரும் தமிழக பயங்கரவாத குழுக்களைக் கண்டித்தும் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி, இந்து முன்னணி தமிழகம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டத்தை மாவட்டம் தோறும் நடத்த உள்ளது.

தமிழக கல்வித் துறையின் தமிழக பாடல் நூல் வெளியிட்டுள்ள பாடங்களில் ஏராளமான குளறுபடிகள். அதில் கணக்கில் அடங்காத கருத்து, எழுத்து பிழைகள். இதனைப் படிக்கும் மாணவர்கள் வாழ்வில் பல சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதை இந்து முன்னணிகடந்த ஆட்சியில் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தும், எதனையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக முதல்வராக ஜெயலலிதாக வந்தால், கருணாநிதி படத்தையும், அவரது பாடத்தை எடுப்பதும், கருணாநிதி முதல்வரானால் ஜெயலலிதாக படத்தையும், அவரது புகழ்பாடும் பகுதிகளை நீக்குவதும், கிழிப்பதும் மட்டுமே நடக்கிறது. பாடத்திட்டக் குழுவில் உள்ள கம்யூனிஸ்ட்கள், திராவிடக்கழக நாத்திகவாதிகள் பாடத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் அவர்களது கொள்கைகளை, மாணவர்களின் மூளையில் கல்வி என்ற பெயரில் திணிக்கிறார்கள்.

கல்வி நிலைய மேம்பாட்டிற்காக மத்திய அரசு கொடுக்கும் நிதிகளை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவது வேதனையானது. இன்னமும் வகுப்பறை, கழிப்பறை, நூல்நிலையம் போன்றவை அவசியமான கட்டமைப்புகள் இல்லாத பள்ளிகளை தமிழகத்தில் காணும்போது  கான்வெண்ட் காலாச்சாரத்தில் வீழ்ந்த அரசியல்வாதிகளால் தமிழக மக்களுக்கு என்ன லாபம்? என்று நெஞ்சு விம்முகிறது.

பிற்பட்டவர்கள், சீர்மரபினர்கள் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் நலனுக்காக செயல்படும் விடுதிகளில், இன்றியமையாத கட்டமைப்புகள் கிடையாது. பழங்கால முறையிலேயே அவை நிர்வகிக்கப்படுவதை அம்மாணவர்கள் எதிர்த்து போராடுவதை எந்த அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை. இவற்றை பார்க்கும்போது தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி, எதிர்கட்சி இரண்டும் மாணவர்கள் நலனில் எந்தளவு அக்கறை உள்ளவர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

இத்துடன், சிறுபான்மை கல்வி நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள், பாலியில் வன்கொடுமைகள், நிர்வாக சீர்கெடுகள் குறித்து தினசரி செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஓட்டு வங்கி அரசியலுக்கு பயந்து அரசாங்கம் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பதில்லை. சேலம் ஓமலூர் பாத்திமா பள்ளி மாணவி சுகன்யா கொலையிலிருந்து பல கொலைகள், கற்பழிப்புகள், பாலியில் துன்புறுத்தல்கள் குறித்த எந்த வழக்கிலும் பல ஆண்டுகள் கடந்த பின்னரும், யாரும் தண்டிக்கப்படவில்லை என்பதை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். நாம் எத்தகைய சமூக பாதுகாப்பில் மாணவிகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். இதனாலேயே மாணவிகள் இடைநிற்றல் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இதனையெல்லாம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஆகஸ்ட் 14 அன்று நடைபெறும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பொது மக்கள், நடுநிலையாளர்கள் கலந்துகொள்ள இந்து முன்னணி சார்பில் அழைக்கிறோம்.

என்று ராம. கோபாலன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கீழப்பாவூர்ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஸ்ரீ கருட ஜெயந்தி

கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவில் ஆடி சுவாதி
” ஸ்ரீ கருட ஜெயந்தி ” யை முன்னிட்டு ( ஸ்ரீ கருட ஆழ்வார் பிறந்த தினம்)” கும்ப ஜெபம், அபிசேகம், அலங்காரம், தீபாராதனை,நடைபெற்றது ஆடி சுவாதிநாளில் கருட ஆழ்வாருக்கு நெய் தீபம் நீரஞ்சனம் போட்டு வழிபட்டால் திருமணம்,கல்வி, குழந்தை, பாக்கியம், தொழில், வியாபாரம் சிறக்கவும் கடன் தீரூம் என்பதால் பக்தர்கள் நிரஞ்சன தீபம் ஏற்றி வழிபட்டனர்

வரலட்சுமி விரதம், பூஜை முறை!12-08-2016 சங்கல்பத்துடன். மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி

unnamed (1)

வரலட்சுமி விரதம், பூஜை முறை!12-08-2016 சங்கல்பத்துடன்.
மற்றும் விக்னேஸ்வர பூஜை &
ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி
By செங்கோட்டை ஸ்ரீராம்
மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்

வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாகச் செய்ய வேண்டியவர்கள் பெண்கள்! சுமங்கலிகள், தாலி பாக்கியத்துக்காகவும், சுபிட்சம், சௌபாக்கியம் போன்றவற்றுக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமிதேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.

எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.

கொஞ்சம் சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவை :

மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை.
நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.
பழ வகைகள்:
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை…
பூஜைக்கான முன்னேற்பாடுகள்:
வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.
(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)
பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள். மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.
விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் & ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும். அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.
பூஜைக்குத் தேவையானவற்றை அருகில் வைத்துக்கொண்டு பூஜையைத் தொடங்கவும். .
மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.
விக்னேஸ்வர பூஜை

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு, ஓம் அச்சுதாய நம: / ஓம் அனந்தாய நம: / ஓம் கோவிந்தாய நம: என்று சொல்லி, மூன்றுமுறை உட்கொள்ள வேண்டும். இது ஆசமனம்.
கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம் ஆதௌ ஸ்ரீ
விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
– என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை முன்னால் சேர்க்கவும். விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும். மணி அடிக்கவும். பின், பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.
அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி / ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி & என்று சொல்லி, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.
இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
உபவீதம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)
புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.
ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:
அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.
அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்…
பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.
வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா||
– என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும். .
சங்கல்பம்
.துர்முகி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே
க்ரீஷ்மர்தௌ ஸ்ராவண மாஸே ஸுக்ல பக்ஷே
நவம்யாம் ஸுபதிதௌ ப்ருக வாஸர அனூராதா
நக்ஷத்ர மாஹேந்த்ர யோக கௌலவகரண ஏவங்குண
விசேஷண விஸிஷ்டாயாம் ஸுபதிதௌ மம ஸக
குடும்பஸ்ய ஸ்ரீ வரமஹாலக்ஷ்மீ ப்ரஸாத
ஸித்யர்த்தம் ஸ்ராவண பூர்ணிமோபாந்த்ய ப்ருகு
வாஸர புண்யகாலே கல்போக்த ப்ரகாரேண
ஸ்ரீ வர மஹாலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யான&ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே| &
– என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும். உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு,
ஸ்ரீ விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.
பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,
கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.
கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||
– என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.
அஸ்ய ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்ம-விஷ்ணு -மஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம்||
பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன்
பின்வரும் மந்திரம் சொல்லி, கும்பத்திலுள்ள லக்ஷ்மி பிம்பத்தில் சேர்க்கவும்.
ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
தேவி ஸர்வ ஜகன்நாயிகே யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதி- பாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
– இப்படி ப்ராணப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வரலக்ஷ்மி பூஜையைத் தொடங்கவும்.
கும்பத்தில் வரலக்ஷ்மியை தியானிக்கவும்.
பத்மாஸனாம் பத்மகராம் பத்மமாலா விபூஷிதாம்|
க்ஷீர ஸாகர ஸம்பூதாம் க்ஷீரவர்ண ஸமப்ரபாம்|
க்ஷீரவர்ணஸமம் வஸ்த்ரம் ததானாம் ஹரிவல்லபாம்|
பாவயே பக்தி யோகேன கலசே அஸ்மின் மனோஹரே|
வரலக்ஷ்ம்யை நம:|
என்று சொல்லி புஷ்பத்தை சேர்க்க வேண்டும்.
பாலபானு பரதீகாசே பூர்ண சந்த்ர நிபானனே ஸூத்ரேஸ்மின் ஸுஸ்திதா பூத்வா ப்ரயச்ச பஹுலான் வரான்||
என்று, 9 முடிச்சுகள் போட்ட சரடில் பூ முடித்து, கும்பத்தில் சாற்ற வேண்டும்.
ஸர்வ மங்கல மாங்கல்யே விஷ்ணு வக்ஷ: ஸ்தலாலயே|
ஆவாஹயாமி தேவித்வாம் அபீஷ்ட பலதா பவ||
வரலக்ஷ்மீம் ஆவாஹயாமி|
– என்று சொல்லி புஷ்பத்தை கும்பத்தில் சேர்த்து ஆவாஹனம் செய்யவும்.
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பாத்யம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அர்க்யம் ஸமர்ப்பயாமி (புஷ்பத்துடன் தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (தீர்த்தம் விடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி (தேன் கலந்த தயிர் நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி (பஞ்சமிர்த நிவேதனம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஸ்நானம் ஸமர்ப்பயாமி (தீர்த்த ப்ரோக்ஷணம்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி (வஸ்திரம் அல்லது அட்சதை)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கண்டஸூத்ரம் ஸமர்ப்பயாமி (கருகமணி/பனைஓலை அணிவிக்க)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| ஆபரணானி ஸமர்ப்பயாமி (ஆபரணங்கள் அணிவிக்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| கந்தம் ஸமர்ப்பயாமி (சந்தனம் இடவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| அக்ஷதான் ஸமர்ப்பயாமி ( அட்சதை சேர்க்கவும்)
ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம:| புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (புஷ்பம், மாலை சேர்க்கவும்)
பிறகு அங்க பூஜை செய்யவும்.
முழுதாகச் செய்யாவிடினும், மகாலட்சுமி பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக
பாவனை செய்து, ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.
பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோ த்ரசத நாமம் சொல்லி, புஷ்பம் அல்லது குங்கும அர்ச்சனை செய்யவும்.
ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி
(ஒவ்வொரு நாமாவளிக்கு முன்னும் ஓம் என்றும், பின்னர் நம: என்றும் சேர்த்துச் சொல்லவும்)
ஓம் ப்ரக்ருத்யை நம:
விக்ருத்யை
வித்யாயை
ஸர்வபூத ஹிதப்ரதாயை
ச்ரத்தாயை
விபூத்யை
ஸுரப்யை
பரமாத்யை
வாசே
பத்மாலயாயை
பத்மாயை
சுசயே
ஸ்வாஹாயை
ஸ்வதாயை
ஸுதாயை
தன்யாயை
ஹிரண்ம்யை
லக்ஷ்ம்யை
நித்யபுஷ்டாயை
விபாவர்யை
அதித்யை
தித்யை
தீப்தாயை
வஸுதாயை
வஸுதாரிண்யை
கமலாயை
காந்தாயை
காமாக்ஷ்யை
க்ரோதஸம்பவாயை
அனுக்ரஹப்ரதாயை
புத்தயே
அநகாயை
ஹரிவல்லபாயை
அசோகாயை
அம்ருதாயை
தீப்தாயை
லோகசோக விநாசின்யை
தர்மநிலயாயை
கருணாயை
லோகமாத்ரே
பத்மப்ரியாயை
பத்மஹஸ்தாயை
பத்மாக்ஷ்யை
பத்மஸுந்தர்யை
பத்மோத்பவாயை
பத்மமுக்யை
பத்மநாபப்ரியாயை
ரமாயை
பத்மமாலாதராயை
தேவ்யை
பத்மகந்தின்யை
புண்யகந்தாயை
ஸுப்ரஸன்னாயை
ப்ரஸாதாபிமுக்யை
ப்ரபாயை
சந்த்ரவதனாயை
சந்த்ராயை
சந்த்ரஸஹோதர்யை
சதுர்ப்புஜாயை
சந்த்ரரூபாயை
இந்திராயை
இந்துசீதளாயை
ஆஹ்லாத ஜனன்யை
புஷ்ட்யை
சிவாயை
சிவகர்யை
ஸத்யை
விமலாயை
விச்வஜனன்யை
துஷ்ட்யை
தாரிர்ய நாசின்யை
ப்ரீதிபுஷ்கரிண்யை
சாந்தாயை
சுக்லமால்யாம்பராயை
ச்ரியை
பாஸ்கர்யை
பில்வநிலயாயை
வராரோஹாயை
யசஸ்வின்யை
வஸுந்தராயை
உதாராங்காயை
ஹரிண்யை
ஹேமமாலின்யை
தனதான்யகர்யை
ஸித்தயே
ஸ்ரைண ஸெளம்யாயை
சுபப்ரதாயை
ந்ருபவேச்ம கதானந்தாயை
வரலக்ஷ்ம்யை
வஸுப்ரதாயை
சுபாயை
ஹிரண்யப்ராகாராயை
ஸமுத்ரதனயாயை
ஜயாயை
மங்களாதேவ்யை
விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை
விஷ்ணுபத்ன்யை
ப்ரஸன்னாக்ஷ்யை
நாராயண ஸமாச்ரிதாயை
தாரிர்ய த்வம்ஸின்யை
தேவ்யை
ஸர்வோபத்ரவ வாரிண்யை
நவதுர்காயை
மஹாகாள்யை
ப்ரஹ்மவிஷ்ணு சிவாத்மிகாயை
ஸம்பன்னாயை
புவனேஸ்வர்யை
(108 அஷ்டோத்திர சத நாமாவளி முற்றும்

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம்

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம்
தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள்கலந்துகொண்டு வழிபாடு செய்தனர் சுவாதி ,மற்றும் திருவோண நட்சத்திர நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது மேலும் தடைபெற்ற காரியங்கள் நடைபெற பக்தர்கள் இங்குவந்து வழிபாடு செய்துவருகின்றனர்
மாலை16 வகைகயான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம்,விஷ்ணு சூக்தஹோமம்,மகாலட்சுமி ஹோமம் மற்றும் 1 2 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேங்களும் நடைபெற்றன தொடர்ந்து பெருமாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ புஷ்கரணியையும் ( திருக்கோவிலையும் தெப்பக் குளத்தையும்) திருக்கோவிலையும் ராம பஜனை பாடி தீர்த்தவலம் வந்தனர்
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் ,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் ,பொதுமக்களும் செய்திருந்தனர்

“சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்..”

12957391_1335113029837652_1819172567_n

“சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்..”
 
(கிராப்புத்தலை குடுமியான ஸ்வாரஸ்ய கதை)
 
(சற்று நீண்ட பதிவு-ஆனால் அதி ஸ்வாரஸ்யம்)
 
 
 
 
சொன்னவர்;ஸ்ரீமதி மைதலி,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
என் தகப்பனார் ஸ்ரீ சிவசுப்ரமண்ய சாஸ்திரிகள்
காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில், ஹிந்தி
விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
 
ஹிந்தி மொழிப் புலமை வயிற்றுப்பாட்டுக்கு
உதவிற்று. ஆனால் சிறு வயதில்,அவர் வேத
பாடசாலையில் அத்யயனம் செய்திருக்கிறார்.
சம்ஸ்கிருதம் பயின்று, தேர்வுகளில் நிறைய
மதிப்பெண் பெற்று தங்கமெடல் வாங்கியிருக்கிறார்.
 
சம்ஸ்கிருதம் படித்தவர்களிடம் மகாப்பெரியவாளுக்கு
அலாதிப் பிரியம் உண்டு. தரிசன காலங்களில்
சிறு சலுகைகளும் உண்டு.
 
1956ல்,அப்பா, கல்லூரி வேலையில் சேர்ந்தார்.
 
முதன்முதலாகப் பெரியவாள் தரிசனத்துக்கு
மடத்துக்குப் போனார். கூட்டம் அதிகமில்லை.
 
அப்பாவுக்கு அருமையான சந்தர்ப்பம். தன்னுடைய
வடமொழிப் புலமையை வெளிப்படுத்தி,பெரியவாளிடம்
அங்கீகாரம் பெறத்துடித்துக் கொண்டிருந்தார்.
பொன்னான வாய்ப்பை நழுவ விடுவாரா?
 
“அஹம் சிவசுப்ரமண்ய சாஸ்திரி,பச்சையப்பன்
மஹாவித்யாலயே..”
 
பெரியவாளின் பார்வை அவர் பேச்சுக்குத்
தடை போட்டாற் போலிருந்தது.
 
ஆமாம். தடைதான்.
 
“சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்..”
என்று, கடுமையான உத்திரவு.
 
அப்பா, ஸ்தம்பித்துப் போய்விட்டார்.
அவர் அப்போது,கிராப்புத் தலை.
கிராப்புத் தலைக்குள் வடமொழி வாடிப் போய்விடுமா?
 
அப்பாவுக்கு இளமை முறுக்கு.வந்ததே கோபம்!
 
“சுவாமிகள்,என்ன இப்படி, சொல்லிவிட்டார்கள்!
பெரியவாளுக்கு இவ்வளவு உஷ்ணமாகப் பேச
தெரியுமா என்ன?….சரி, தரிசனத்துக்குப் போனால்தானே
இந்த சிகைப் பிரச்சினை? வேண்டாம் இந்த ஊரில்
ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. தெய்வ தரிசனம்
செய்யவேண்டும் போலிருந்தால், கோவிலுக்குப்
போகிறேன்? மடத்துக்குப் போகணுமா,என்ன?”
 
பல வருஷங்கள்–மடத்துப் பக்கம் தலைவைத்துப்
படுக்கவில்லை,என் அப்பா!
 
அம்மாவினால் அவ்வளவு வைராக்கியமாக இருக்க
முடியவில்லை.’காஞ்சீபுரத்தில் இருப்பதே
மகாப்பெரியவாளைதினமும்தரிசனம்
பண்ணுவதற்காகத்தானே? என்பாள்.
.
 
 
ஒரு தடவை அம்மாவுக்குப் பிரசாதம் கொடுக்கும்போது,
“அவனுக்கு என்மேலே கோபம்; குடுமி வைத்துக்கொள்-
என்றேன். வீம்பு வேண்டாம் தரிசனத்துக்கு வரச்சொல்லு”
என்று உத்திரவாகியது.
 
அப்புறம்,அப்பாவும் தரிசனத்துக்குப் போகத் தொடங்கினார். ஆனால் ஒவ்வொரு தடவையும்,சிகை விஷயம் மட்டும்நினைவுக்கு வராமல் இருப்பதில்லை.
 
ஒரு நாள் பெரியவாளே சொல்லிவிட்டார்கள்;
“நீ சிகை வைத்துக் கொள்ளணும்னுதான் என் அபிப்ராயம்.
அதனாலே சங்கடப்பட்டுண்டே இருக்காதே. உனக்கு எப்போ சௌகரியப்படுகிறதோ, அப்போ சிகை வெச்சுக்கோ…”
 
அப்பாவுக்கும் சமாதானமாகிப் போய்விட்டது.
 
ஆனால், சிகை விஷயம் மறைந்து போய்விடவில்லை.
அவ்வப்போது புகைந்து கொண்டு தான் இருந்தது.
 
பெரியவாளுக்கு டிரிக்கெல்லாம் தெரியும்.
‘நேரில் பார்த்துக் கேட்டால் தானே,இந்த சாஸ்திரிக்கு
கோபம் வருகிறது. அவனை வேறு விதமாக மடக்கிப்
போடுகிறேன் பார்!’
 
கனவில் வந்து பேச ஆரம்பித்து விட்டார்கள் பெரியவாள்.
 
அப்பா என்ன செய்வார்,பாவம்!
 
கனவு வராமல் தடுக்க முடியுமா?
 
நாளடைவில், பெரியவாளின் சொற்களில் மிரட்டல்
அதிகமாகிவிட்டது – கனவில்தான்.
 
“நான் உயிரோடு இருக்கும் வரை, நீ சிகை
வெச்சுக்கமாட்டே? அப்படித்தானே? உன்னை, நான்,
சிகையோடு பார்க்கக் கூடாதுன்னு பிடிவாதமா இருக்கே?..”
 
அப்பா வெலவெலத்துப் போய்விட்டார்.
 
இந்தக் கனவு தோன்றி,பொழுதுவிடிந்த நாளே க்ஷவரம்
செய்து கொள்வதற்கு ஏற்ற நாளாக இருந்தது.
(நாள்,நட்சத்திரம் பார்த்துத்தான் அப்பா முடி நீக்கம்
செய்து கொள்வார்; அது அவர் காலம்)
அமாவாசை அன்றைக்குக்கூட கன்னம் முடி மழித்தல்
கனஜோராய் நடக்கிறது.பித்ருக்கள் கண்ணை மூடிக்கொண்டு சகித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மாதாந்திர தாகசாந்தி கூட கிடைக்காது,(இது our (நம்) காலம்)
 
சிகை வைத்துக்கொண்டாகிவிட்டது.- 1976ல்!
கல்லூரிக்குப் போகவேண்டுமே? அவமானம்,வெட்கம்–
என்று எத்தனையோ உணர்ச்சிகள்.
 
குனிந்த தலை நிமிராமல்,(ஆக்ஸிடென்ட் ஏற்படாமல்)
சைக்கிளில் ஏறிப்போனார், கல்லூரிக்கு.
 
“அட! என்னய்யா!….என்ன, ஆச்சு…?”
 
“பெரியவா ஆக்ஞை..”
 
கையெடுத்துக் கும்பிட்டார்கள்.கேலிக்கூத்தை எதிர்பார்த்துச்சென்றவருக்கு,ஏக மரியாதை;சென்றவிடமெல்லாம் சிறப்பு.
 
அப்பா,ரொம்ப நாள் கழித்துச் சொன்னார்;
 
“சிகை வைத்துக் கொண்டால் இவ்வளவு கௌரவம்
கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், நான் எப்போதோ
சிகை வைத்துக் கொண்டிருப்பேன்!”

“வ’னாவை அழிச்சுட்டாடா!”-பெரியவா

18698_10153209347029244_3030028360467212073_n

“வ’னாவை அழிச்சுட்டாடா!”-பெரியவா
 
(காமாட்சி தாயே, பக்தர்கள் உன்னை வணங்க வரும்போது ஏதேதோ கொண்டுவந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். நான் உனக்காகக் கொண்டு வந்திருப்பது என்ன தெரியுமா? இந்தச் சமூகத் தைப் பற்றிய, இந்த நாட்டைப் பற்றிய, இந்த உலகத்தைப் பற்றிய கவலைகளைத்தான். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உனது இடது கால் பெருவிரலுக்கு அபாரமான சக்தி உண்டு. உன்னுடைய அந்தக் கால் பெருவிரலால் நான் உன் காலடியில் வைத்த ‘கவலை’ என்பதன் இடையில் இருக்கும் ‘வ’னாவை மட்டும் அழித்துவிடு தாயே! அதை நீ அழித்தபின் படித்துப் பார்த்தேன். ‘கலை’ என்று வரும். அந்தக் கலைகள் மூலமாக இந்த உலகம் வளம் பெறட்டும்” சுப்பு ஆறுமுகம்)
 
 
 
.
 
 
எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி
 
.
 
நன்றி கல்கி & பால ஹனுமான்
 
 
.
 
 
 
 
 
காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்த ஆஹம, சிற்ப சதஸில், மேடையை நோக்கியபடி மஹா சுவாமிகள் அமர்ந்திருக்க, நான் மேடையில் இருந்தபடியே அவரை வணங்கியதற்கு ஒரு விளக்கம் கொடுத்தேன்.
 
“கோபுரத்தை நாம் தூரத்தில் இருந்துதான் கும்பிடுகிறோம். கிட்டே போய் தொட்டுக் கும்பிடுவதில்லை; அதே போலத்தான் இங்கிருந்தபடியே பெரியவாளை மனதார தொழுகிறேன்” என்று சொல்லி, அவர் அமர்ந்திருந்த திசை நோக்கி கைகளைக் கூப்பி வணங்கினேன். அடுத்த கணம், “தந்தனத்தோம் என்று சொல்லியே…” என்று ஆரம்பித்து வில்லில் நாவுக்கரசரது கதையைச் சொல்லத் தொடங்கினேன்.
 
கதை சொல்லும்போது ஒரு பக்கம் காமாட்சியும், மறுபக்கம் பெரியவாளும் இருப்பதாக நினைத்துக் கொண்டேன். அப்போது கடவுளிடம் வேண்டியதாக ஒரு சிந்தனை. “அன்பர்களே, கட வுளிடம் நாம் எதையும் கேட்கக்கூடாது. கடவுள் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். காமாட்சி தாயே, பக்தர்கள் உன்னை வணங்க வரும்போது ஏதேதோ கொண்டுவந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். நான் உனக்காகக் கொண்டு வந்திருப்பது என்ன தெரியுமா? இந்தச் சமூகத் தைப் பற்றிய, இந்த நாட்டைப் பற்றிய, இந்த உலகத்தைப் பற்றிய கவலைகளைத்தான். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் உனது இடது கால் பெருவிரலுக்கு அபாரமான சக்தி உண்டு. உன்னுடைய அந்தக் கால் பெருவிரலால் நான் உன் காலடியில் வைத்த ‘கவலை’ என்பதன் இடையில் இருக்கும் ‘வ’னாவை மட்டும் அழித்துவிடு தாயே! அதை நீ அழித்தபின் படித்துப் பார்த்தேன். ‘கலை’ என்று வரும். அந்தக் கலைகள் மூலமாக இந்த உலகம் வளம் பெறட்டும்” என்று குறிப்பிட்டேன். மொத்தத்தில் அன்றைய நிகழ்ச்சி மனத்துக்கு நிறைவாக அமைந்தது.
 
 
மறுநாள் சென்னைக்குப் புறப்படும் முன், மஹா சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றேன். வணங்கி எழுந்தபோது அந்த மஹான் சொன்ன வார்த்தைகள்: “வ’னாவை அழிச்சுட்டாடா!” அவர் சொன்னதை கற்பூரம் மாதிரி சட் டென புரிந்து கொள்ளாவிட்டாலும், ஒரு சில வினாடிகளில் புரிந்து கொண்டேன். வார்த்தைகள் ரத்தினச் சுருக்கமாக வந்தாலும், அவை என்னை மெய்சிலிர்க்க வைத்தன.
 
“லோகத்துல இருக்கிற எல்லார் கவலைகளிலும் உள்ள ‘வ’னாவை யும் அழிக்கணும்” என்று நான் சொல்ல, “லோகக்ஷேமம் பத்தி பேசறையா? கோவில் இருக்கிற எல்லா ஊர்லயும் உன்னைக் கூப்பிடுவா. நீ போய் பாடு! கோவில் இல்லாத ஊர்ல கூப்பிட்டாலும் அங்கேயும் நீ போய் பாடு! அங்கயும் கோவில் வந்துடும்டா!” என்று அருள் புரிந்தார். நெகிழ்ந்து போய் நின்றேன்.
 
ஒரு நாள், மஹா சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றிருந்தபோது, “நீ நெஜமா சிரிக்கறடா!” என்றார். நான் அப்பாவியாக, குழந்தைபோல “பொய்யா சிரிக்கிறவங்ககூட உலகத்துல இருப்பாங்களா சாமி?” என்று கேட்டுவிட்டேன்.
 
 
பெரியவாள் தொடர்ந்தார், “நேத்து வந்து பார்த்தப்போ என்ன சொன்னே? எதுக்கு காஞ்சிபுரத்துக்கு வந்தேன்னு சொன்னே?”
 
“என் டாக்டரோட கம்பவுண்டர் வீட்டுக் கல்யாணத்துக்கு வந்தேன்னு சொன்னேன்.”
 
“அப்புறம் என்ன சொன்னே? அப்படியே பெரியவாளைத் தரிசனம் பண்ண வந்தேன்னு சொன்னியோலியோ?” என்றார்.
 
“ஆமாம்.”
 
“எல்லாரும் அப்படி சொல்ல மாட்டா! பட்டுப்புடைவை வாங்க வந்தவா கூட பரமாச்சாரியாளைப் பார்க்கணும்னு வந்ததா சொல்லுவாடா. நீ நெஜத்தை பேசுவே! நெஜமா சிரிப்பே! உனக்கு ஒரு குறையும் வராது!” அந்தக் கணத்தில், இப்பிறவி எடுத்ததன் முழுப் பயனையும் பெற்றுவிட்டாற்போல உணர்ந்தேன்.
 
வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, அவரே கதையை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருள்மொழிந்தார். “காலடியில கதை ஆரம்பிக்குமே! அதை எப்படிச் சொல்லுவே?” என்று கேட்டார். “திருவனந்தபுரம்னு ஆரம்பிச்சா சரியா இருக்காது. திருவாங்கூர் சமஸ்தானம்னு ஆரம்பிக்கலாமா?” என்று நான் கேட்க, அவரிடம் அமைதி. அவருக்கு அதில் சம்மதமில்லை என்று புரிந்து கொண்டு, “சேரநாடுன்னு சொல்லலாமா?” அதற்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. அடுத்து என்ன சொல்வது என்ற குழப்பத்தோடு நிற்கிறேன். “பரசுராம க்ஷேத்திரம்னு ஆரம்பி” அவரது ஆழ்ந்த சிந்தனை என்னை ஆச்சரியப்படுத்தியது.
 
 
ஒரு நாள் மாலை வேளையில் பெரியவாளைத் தரிசிக்கச் சென்றேன். கிணற்றடியில், சிவஸ்தானம் என்று நினைவு. கிணற்றின் அந்தப் பக்கத்தில் அவர். இந்தப் பக்கம் நான். பக்கத்தில் இருப்பவரையே தெளிவாகக் காணமுடியாதபடி இருள். அவர் கேட்க, நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
 
திடீரென்று, “ஏண்டா! கச்சேரி பண்ணறா மாதிரி பேசிண்டே இருக்கியே! நான் இங்கே இருக்கறது நோக்குத் தெரியறதாடா?”
 
பெரியவாள் உருவம் தெளிவாகத் தெரியாத சூழ்நிலையில், “ஓ! நல்லா தெரியுதே!” என்று நான் பொய் சொல்லமுடியாது; அதே சமயம் இத்தனை நேரம் சரளமாக உரையாடியபின்பு, “தெரியவில்லை” என்றும் பதில் சொல்ல என் மனம் இடம் தரவில்லை.
 
“நான் சென்னைல இருந்தாலே என் கண்ணுக்குக் காட்சி தருவீங்களே!” என்றேன். அவர் கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பதை மானசீகமாக உணர்ந்தேன். “இங்க வா!” என்று அழைத்தார். கிணற்றைச் சுற்றிக் கொண்டு அந்தப் பக்கம் போனேன். பிரசாதம் கொடுத்துவிட்டு, அடுத்து இன்னும் எதையோ வழங்கினார். அது ஏதோ ஒரு படம் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
 
வெளிச்சமான இடத்துக்கு வந்ததும் அது என்ன படம் என்று ஆர்வத்துடன் பார்த்தேன். மஹா பெரியவாள் சாந்த ஸ்வரூபியாக பூஜை செய்துகொண்டிருக்கும் அற்புத படம். என் வீட்டுப் பூஜை அறையில் வைத்தேன். படத்தின் முன்னே அமர்ந்தேன். என்னையும் அறியாமல் என் உதடுகள் உச்சரித்தன “ஜெய ஜெய சங்கர.. ஹர ஹர சங்கர!”