
“நீ, எந்தக் கட்சி? கூப்பிடுகிற கட்சியா? கூப்பிடாத கட்சியா?…
“குழந்தை ஏன் அழுகிறது?”

“குழந்தை ஏன் அழுகிறது?”
(மகாஞானிக்கு,இதெல்லாம் வெறும் ‘பூச்சி’ விஷயம்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
ஒரு குழந்தை, தொடர்ந்து அழுதுகொண்டே
இருந்தது. பெரியவா தரிசனத்துக்காகக்
காத்துக்கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்
மிகவும் தொந்தரவாக இருந்தது. தாயார்
பலவிதமாக சமாதானப்படுத்தியும் கூட,
குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.
“குழந்தை ஏன் அழுகிறது?” என்று அருகிலிருந்த
சிஷ்யர் இந்துகுமாரைக் கேட்டார்கள்.
“பாத்ரூமுக்குப் போகணுமாம்.மடத்து
இரண்டு நிமிட மௌனத்துக்குப்பின், பெரியவாள்
சொன்னார்கள்;
“பாத்ரூமில் கரப்பான் பூச்சிகள் இருக்கும்.
அதனால்தான் குழந்தை பயப்படுகிறது.
நீ போய், அவைகளை ஹிம்ஸை செய்யாமல்,
அப்புறப்படுத்திவிட்டு வா…”
இந்துகுமார்,ஒரு துடைப்பத்தால்,கரப்பான்
பூச்சிகளை பெருக்கி அப்புறப்படுத்திவிட்டு வந்தான்
குழந்தை பயமில்லாமல், உள்ளே போய்விட்டு
வந்தது – சிரித்துக்கொண்டே!
பாத்ரூமில் கரப்பான் இருக்கிறது;
அதைக் கண்டுதான் குழந்தை பயப்படுகிறது –
என்று பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?
மகாஞானிக்கு,இதெல்லாம் வெறும் ‘பூச்சி’ விஷயம்.
“பெரியவாளின் ஞாபகசக்தி”

மறுபதிவு.
“கடனாளியாக வந்தவர். ஒரு பயனாளியாகத் திரும்பிச் சென்றார்.”

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தண்ணீர் கொடுக்கிறேன்” என்று சத்தமா சொல்லிண்டே – எல்லோருக்கும் தீர்த்தம் கொடு…உனக்கு நல்ல மனசு.. கடன்பட்ட பாவம் போயிடும்….”
திருநெல்வேலியில் மத்தியஅரசின் புற்றுநோய் மையம் அமைக்க கே.ஆர்.பி . பிரபாகரன் எம்.பி கோரிக்கை
திருநெல்வேலியில் புதிய மத்திய அரசின் புற்றுநோய் மையம் அமைக்க கே.ஆர்.பி . பிரபாகரன் எம்.பி கோரிக்கை
இதுகுறித்து பாராளுமன்றதில் கே.ஆர்.பி பிரபாகரன் எம்.பி பேசியதாவது
புற்றுநோய் தொற்று என்பது வளர்ந்து வரும் நமது நாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது., புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களாக உள்ளனர் மேலும் தனியார் மருத்துவமனைகளில் செலவு செய்து மருத்துவம் பார்க்க பொருளாதார வசதி இல்லை.
திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் வருடத்திற்கு 16,000 பதிய புற்றுநோயாளிகள் கண்டுபிடிக்கபட்டு சிகிச்சை எடுக்கிறார்கள். 50000க்கும் மேற்பட்ட பழைய நோயாளிகள் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகிறன்றனர் மேலும் வருடத்திற்கு 80,000க்கும் அதிகமானோர் புற்றுநோய் இருக்கிறதா என சந்தேகத்துடன் பாரிசோதனை செய்து வருகின்றனர்
கடந்த ஐந்து ஆண்டுகளில் புற்றுநோய் தொற்று 50 சதவிக அளவுக்கு அதிகப்பட்டுள்ளது. இது புற்றுநோய் முருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிக வேலைபளுவை ஏற்படுத்துகிறது. மேலும் புற்றுநோயாளிகளும் அதிக நேரம் காத்திருந்து சிகிச்சை எடுக்க கூடிய நிலை ஏற்படுகிறது.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள திருநெல்ல்வேலி தூத்துக்குடி மற்றும் தென்காசி பகுதி மக்கள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திற்கு சென்று பல நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே திருநெல்வேலியில் மத்திய அரசின் புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.என பேசினார்
சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மற்றும் எஸ்.ஆர் பள்ளி மாணவர்கள் களப்பயணம்
சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மற்றும் எஸ்.ஆர் பள்ளியிமாணவர்கள் களப்பயணம்
சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மற்றும் எஸ்.ஆர்மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் களப்பயணத்திற்காக வாட்டர் பார்க்கிற்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர் இக்களப்பயணத்தில் பள்ளி தாளாளர் சிவடிப்ஜினிஸ்ராம், குழல்வாய்மொழியம்மாள் சிவன் நாடார் அறக்கட்டளை தலைவர் சிவபபிஷ்ராம், பள்ளி முதல்வர் பொன்மனோனியா, மற்றும் புஷ்பா முதலியோர் கலந்து கொண்டனர் மாணவர்கள் கல்வி மட்டுமின்றி, செயல்திட்ட முறையில் அனுபவ அறிவு பெறுவதற்காகவே இக்களப்பயணம் திட்டம் துவங்கப்பட்டது
தண்ணீரில் ஒருவர் தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் கேட்டு தெரிந்துகொண்டனர் மிகுந்த பாதுகாப்பான முறையில் வாட்டர் பார்க்கில் விளையாடி மகிழ்ந்தனர் மேலும், சுற்றுப்புறத்தை எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ,தண்ணீரின் அவசியத்தையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர்
ஆளுநர் ரோசையா செங்கோட்டை வருகை
தென்காசி பகுதிகளில் பல்வேறு தனியார் நிகழச்சிகளில் கலந்து கொள்ள இரயில் மூலம் செங்கோட்டை வந்த ஆளுநர் ரோசையாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.கருணாகரன் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்
ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் நிர்வாகிகள் பதவியேற்ப்பு விழா
ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் நிர்வாகிகள் பதவியேற்ப்பு
ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் 2016-17ம் ஆண்டிற்கான தலைவர், செயலர் பதவியேற்ப்பு விழா எஸ்.எஸ் கிட்ஸ் பிளே ஸ்கூல் வளாகத்தில் நடைபெற்றது. இசக்கிமுத்து ரோட்டரி பிரேயர் வாசித்தார்.தலைவராக கார்த்திக், செயலராக இசக்கிமணி பொறுப்பேற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி முன்னாள் கவர்னர் ஷாஜகான் கலந்து கொண்டார். நல்லூர் கல்லூரி முதல்வர் ஜோயல் சிறப்புரை ஆற்றினார். துணை ஆளுநர் குமரகுருபரன் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்தார்.விழாவில் உதவி ஆளுநர்கள், முரளிதரன், டாக்டர் மாரிமுத்து முன்னாள் உதவி ஆளுநர்கள் முருகன்ராஜ், பிரகாஷ், செல்வநாயகம், வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. 10,12ம் வகுப்பு முதல், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கு நினைவுகேடயம் வழங்கப்பட்டது. 20முறை ரத்ததானம் செய்தமைக்கும் ,பொது இடங்களில் சுமார் 30 மரக்கன்றுகள் நட்டு 3 வருடங்களாக பராமரித்து வரும் சமூக ஆர்வலர் கோபால்சாமி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் குற்றாலம் மெட்ரோ, குற்றாலம், குற்றாலம் சாரல், கடையநல்லூர் சென்ட்ரல், கடையநல்லூர் ,கோல்டன் கடையநல்லூர், செங்கோட்டை, செங்கோட்டை சென்ட்ரல், சுரண்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாவூர்சத்திரம் ரோட்டரி உறுப்பினர்கள் கணபதி,கருணாகரன்,அரங்கநாதன்,அழகேசன்,இசக்கிமுத்து. ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சந்தானம் நன்றியுரை ஆற்றினார்.
“சட்டத்துக்கும் விலக்கு உண்டு.”

(
பெரியவாள் சட்ட – சம்பிரதாயங்கள் மீறாதவர்கள்.என்றாலும், எங்கே விலக்கு அளிக்கவேண்டும்
என்ற நுட்பமும் அறிந்தவர்கள்.)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
ஆறு கஜம் புடவை கட்டிக்கொண்டு ஓர் அம்மாள்
தரிசனத்துக்கு வந்தாள். மடத்துக்கு வருவது முதல்
தடவை போலும். ஒன்பது கஜம் புடைவை கட்டிக்
சம்பிரதாயம் என்பதை அறியவில்லை.
ஸ்ரீமடத்தின் மகாபக்தை என்று தன்னைப்பற்றிப்
பெருமைப்பட்டுக் கொண்டிருந்த ஓர் அம்மையார்
இந்த ‘ஆறு கஜ’த்தைப் பார்த்துவிட்டார். வந்ததே
கோபம்! “மடிசார் கட்டிக்கொள்ளாமல் பெரியவாளை
தரிசிக்கக்கூடாது” என்று உரத்த குரலில் உத்தரவே
போட்டுவிட்டார்!.
அந்த சமயம் பார்த்து (அம்மையாரின் துரதிருஷ்ட
“என்ன கூச்சல்? என்ன சண்டை?”
விவரம் பெரியவாளுக்கு தெரிவிக்கப்பட்டது.
நடுங்கிக் கொண்டிருந்த மடிசார் மாமியைக்
கூப்பிட்டார்கள் பெரியவா.
” அந்த அம்மாள் ரொம்ப ஏழை. அவளிடம் ஒன்பது
கஜம் புடவையே கிடையாது. வாங்க முடியல்லே!
நீ உடனே கடைக்குப் போய், ஒன்பது கஜம் புடவை
இரண்டும், ரவிக்கைத் துண்டும் வாங்கிக்கொண்டு
வந்து கொடு” என்று சற்றுக் கடுமையான குரலில்
கூறினார்கள்.
அந்தபடியே புடவைகள் வாங்கிக்கொண்டு வந்து,
ஏழை அம்மாளை மடிசார் கட்டிக்கச் சொல்லி
பெரியவாளிடம் அழைத்து வந்தார்.
“ரொம்ப சரி. ஆனாலும் நீ பண்ணினது தப்புதான்.
அந்த அம்மாகிட்டே மன்னிப்பு கேட்டுக்கோ…”
பெரியவாள் சட்ட – சம்பிரதாயங்கள் மீறாதவர்கள்.
என்றாலும், எங்கே விலக்கு அளிக்கவேண்டும்
என்ற நுட்பமும் அறிந்தவர்கள்.
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா
கீழப்பாவூர் ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா நடைபெற்றது
முன்னதாகபுண்யாகவாசனம், பகவத்ப்ரார்த்தனை,ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வேதபாராயணம், நாம சங்கீர்த்தனம்,விசேஷதிருமஞ்சனம் பவித்ரோத்ஸவ ஹோமம். பூர்ணாஹூதி, பெருமாள் மற்றும் விஷ்வக்சேனர் கருடாழ்வார் ஆகியோருக்கு பவித்ரமாலை சமர்ப்பணம், விசேஷ திருவாராதனம் உள்ளிட்டவகைளும் ஸ்வாமி திருவீதி உலாவருதல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன விழாவிற்கான ஏற்ப்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்

