ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் நிர்வாகிகள் பதவியேற்ப்பு
ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் 2016-17ம் ஆண்டிற்கான தலைவர், செயலர் பதவியேற்ப்பு விழா எஸ்.எஸ் கிட்ஸ் பிளே ஸ்கூல் வளாகத்தில் நடைபெற்றது. இசக்கிமுத்து ரோட்டரி பிரேயர் வாசித்தார்.தலைவராக கார்த்திக், செயலராக இசக்கிமணி பொறுப்பேற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி முன்னாள் கவர்னர் ஷாஜகான் கலந்து கொண்டார். நல்லூர் கல்லூரி முதல்வர் ஜோயல் சிறப்புரை ஆற்றினார். துணை ஆளுநர் குமரகுருபரன் புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்தார்.விழாவில் உதவி ஆளுநர்கள், முரளிதரன், டாக்டர் மாரிமுத்து முன்னாள் உதவி ஆளுநர்கள் முருகன்ராஜ், பிரகாஷ், செல்வநாயகம், வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவ மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. 10,12ம் வகுப்பு முதல், இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியருக்கு நினைவுகேடயம் வழங்கப்பட்டது. 20முறை ரத்ததானம் செய்தமைக்கும் ,பொது இடங்களில் சுமார் 30 மரக்கன்றுகள் நட்டு 3 வருடங்களாக பராமரித்து வரும் சமூக ஆர்வலர் கோபால்சாமி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் குற்றாலம் மெட்ரோ, குற்றாலம், குற்றாலம் சாரல், கடையநல்லூர் சென்ட்ரல், கடையநல்லூர் ,கோல்டன் கடையநல்லூர், செங்கோட்டை, செங்கோட்டை சென்ட்ரல், சுரண்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பாவூர்சத்திரம் ரோட்டரி உறுப்பினர்கள் கணபதி,கருணாகரன்,அரங்கநாதன்,அழகேசன்,இசக்கிமுத்து. ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சந்தானம் நன்றியுரை ஆற்றினார்.



