Home Blog Page 5754

“பெரியவாளின் நுட்பமான வாதம்”

246400_479182102136836_1433845875_n

“பெரியவாளின் நுட்பமான வாதம்”

(சுதேசி மன்னர் பரம்பரையினருக்குக் கொடுக்கப்பட்டு வரும் உதவித் தொகை)


(
“பெரியவாளே பதில் சொல்லித் தெளியவைத்து விட்டார்கள்.இனிமேல் எந்தப் ப்ரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்ய!)


தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலம்.
கலை,சமயப் பற்று மிக்க அந்தப் பரம்பரையினர்,
கும்பகோணத்தில் ஸ்ரீமடம் நிரந்தரமாக இயங்குவதற்கு
தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார்கள்.
அதனால் ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகளுக்கு, தஞ்சை
மன்னரின் ராஜகுரு என்ற பதவியும் சிறப்பும் கிடைத்தன.
 
நாடு சுதந்திரமடைந்த பிறகு சுதேச மன்னர்களின்
நிலை தலைகீழாக மாறி விட்டது.
 
‘சுதேசி மன்னர் பரம்பரையினருக்குக் கொடுக்கப்பட்டு
வரும் உதவித் தொகை நிறுத்தப்படப் போகிறது’
என்ற தகவல், தஞ்சையின் மூத்த இளவரசர் ராஜாராம்
ராஜா அவர்களை எட்டியது.ஆடிப் போய்விட்டார் அவர்.
 
பரமாசாரியாளிடம் வந்து, தன் நிலைமையை
விண்ணப்பித்துக் கொண்டார்.
 
உடனே, அந்தக் காலத்தில் சட்டத்துறை மகா
மேதாவிகளான வழக்கறிஞர்கள் கே.எஸ்.வேங்கட-
ரமணியும்,டி.ஆர்.வேங்கடராம சாஸ்திரிகளும்
வரவழைக்கப்பட்டார்கள். அவர்களைக் கொண்டு
இந்திய அரசாங்கத்துக்கு ஒரு மனு தயாரிக்கப்பட்டது.
 
“பெரியவாளிடம் காட்டிவிட்டு அனுப்பலாமே?
என்றார்கள் சட்ட வல்லுநர்கள்.
 
பெரியவாள், அப்போது, கிழக்குக் கோதாவரிப்
பகுதியில் யாத்திரையில் இருந்தார்கள்.
 
படித்துப் பார்த்தார்கள், பெரியவாள்.
 
“ரொம்ப சரி,பக்குவமா,சட்டரீதியா எழுதியிருக்கேள்..”
 
சிறு இடைவெளி.
 
“வெங்கட்ராமா- ஒரு சின்ன பாரா சேர்க்கலாமோ?..
லண்டன் ப்ரிவி கவுன்சில்லே பிலிப்ஸ்-ங்கிறவர்
கொடுத்த தீர்ப்பிலே என்ன சொல்லியிருக்கு…?
 
…..இப்போது,சுதேச சமஸ்தானங்களை இந்திய அரசு
தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டாலும்,
பின்னர் ஒரு காலத்தில், அந்தந்த சமஸ்தானங்களை, அந்தந்த மன்னர் பரம்பரையினருக்கே வழங்கி விடலாம்
என்று தீர்மானம் செய்யுமேயானால், தஞ்சாவூர் மன்னர் பரம்பரையினருக்கே முன்னுரிமை வழங்கவேண்டும்.
 
“….சமஸ்தானத்தையே திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று ப்ரிவி கவுன்சில் தீர்ப்பு சொல்லியிருக்கும்போது இப்போதைய தஞ்சாவூர் மன்னர் பரம்பரையினருக்கு, போதுமான இடமும் வசதிகளும் செய்து கொடுப்பது நியாயமல்லவா? குறைந்த பட்சம், தற்போதுள்ள வசதிகள் ரத்தாகாமல் பார்த்துக் கொள்வது,
அரசாங்கத்தின் கடமை…”
 
சட்டங்களின் கரைகண்டவர் என்று போற்றப்பட்ட
வெங்கட்டராம சாஸ்திரி, அப்படியே பிரமித்துப்
போய்விட்டார். பெரியவாளின் நுட்பமான வாதம்
அவரை கட்டிப்போட்டுவிட்டது.
 
“பெரியவாளே பதில் சொல்லித் தெளியவைத்து
விட்டார்கள்.இனிமேல் எந்தப் ப்ரிவி கவுன்சிலுக்கு
அப்பீல் செய்ய!

“Red rose-பூஜைக்கு உகந்ததா?”

20fr_mahaperiyava10_634796g

“Red rose-பூஜைக்கு உகந்ததா?”

 
(வாசனை உள்ள ரோஸ் கலரில் உள்ள
 ரோஜாவையே மகான்கள் ஏற்பார்கள்)

சொன்னவர்-புதுக்கோட்டை மாமி
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள்
பெரியவாள்.அங்கே கோபுரத்தில் திருப்பணி
நடந்துகொண்டிருந்ததை மேற்பார்வையிட்டவாறுபலமணி நேரம் தங்கியிருந்தார்கள்.பலர் வந்தார்கள்; நமஸ்காரம் செய்தார்கள்; திரும்பிப் போனார்கள். ஆனால் நான் அவ்விடத்தைவிட்டு நகரவில்லை.

சற்று தூரத்தில் ஒரு பூக்காரி, கூடை நிறைய செக்கச் சிவந்த ரோஜாப் பூக்கள் விற்றுக்கொண்டிருந்தாள். பார்ப்பதற்கே அழகாக இருந்தன அந்தப் பூக்கள். ‘ஒரு தட்டு நிறைய வாங்கி, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கலாமே?’ என்று தோன்றியது.

உடனே சென்று வாங்கிக்கொண்டு வந்தேன். பூக்கள் அளவிலும் பெரிதாக இருந்ததால், இரட்டை மகிழ்ச்சி.

தட்டில் வைத்த பூக்களை பெரியவாள் பார்த்தார்கள்;

தொடக்கூட இல்லை. ஏன்,இப்படி?

பெரியவாளின் கவனத்தைத் திருப்புவதற்காக,
“புதுக்கோட்டை மாமி ரோஜாப்பு வெச்சிருக்கா..”
என்று சொன்னார்,அருகிலிருந்த சிஷ்யர்.

பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்;

“இது ரோஜாப்பூ இல்லை; ரோஜாப்பூ மாதிரியான
சிவப்புக் கலர் புஷ்பம். ரோஸ் கலரில் இருக்குமே,
அதுதான் நிஜமான ரோஜா.அதில் நல்ல வாசனை
இருக்கும்.

ஆமாம். இது Red rose அழகு இருந்தது;வாசனை

இல்லை மனிதர்கள் உப்யோகப்படுத்தலாம்; 
மகான்கள் தொடமாட்டார்கள் என்பதை புரிந்து
கொண்டேன். அதற்குப் பிறகு red rose-ஐ
பூஜைக்கு வாங்குவதைத் தவிர்த்தேன்.

கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த இந்து முன்னணி கோரிக்கை

இந்து முன்னணி மாநில அமைப்பாளர்  பக்தவத்ஸலன் வெளியிட்ட அறிக்கை:
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களின் அளவிற்கு மீறிய அடாவடித்தனம்..
எந்த நாட்டிலும் இல்லாத அதிசயம் இந்த நாட்டில் தான் நடக்கிறது. அதாவது, பெரும்பான்மையினருக்கு இல்லாத சலுகைகள் எல்லாம் சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிறது. ஓட்டு வங்கி அரசியலுக்கு வித்திடும் வேடிக்கை சட்டங்கள் உலகின் எந்த நாட்டிலும் கிடையாது. இது எப்படியிருக்கிறது என்றால், நாய் வாலை ஆட்டுவதற்கு பதிலாக, வால் நாயை ஆட்டுவிக்கிற மாதிரி.
மத்திய அரசு கடந்த பல மாதங்களாக கல்வி சீர்த்திருத்தம் குறித்த கருத்துக்களை பலதரப்பட்ட மக்களிடமிருந்தும், கல்வி நிறுவனங்கள், கல்வி நிபுணர்கள், சமூக அக்கரை கொண்டோர் முதலானவர்கள் முதல் பொது மக்கள் வரை எல்லோரிடமும் கருத்து கேட்டது. அதன் அடிப்படையில் ஒரு முன்வரைவு வடிவத்தை வெளியீட்டுள்ளது. இது குறித்தும் கருத்துக்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
ஆனால், சிறுபான்மையினர் எனப்படும், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் அரசிற்கு எதிராக வீதியில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியலாக்கவதும், அதற்கு திமுக, அதிமுக கட்சிகள் துணைபோவதும் வெட்கக்கேடானது.
இவர்களது கருத்தை மத்திய அரசிற்கு அனுப்புவதை விட்டு, மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி பிரச்னையை திசைத்திருப்ப இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுகின்றனர். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு அவரது பெற்றோரை மிரட்டி மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து வாங்குவதும் கண்டிக்கத்தக்கது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் படிப்போர் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இந்து மாணவர்களே. ஆனால், அதில் கிடைக்கும் சலுகைகளை கிறிஸ்தவ, முஸ்லீம் நிறுவனங்கள் திருடி பிழைப்பு நடத்துகின்றன என்று இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது.
சமீபத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பெத்தசெமினார் பள்ளி, ஆறாம் படிக்கும் மாணவனிடம் மத்திய அரசிற்கு எதிரான மனுவில் அவனது தந்தையிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறது. மாணவனின் தந்தை மகேந்திரபிரசாத் கையெழுதிடாமல் அதனை ஆசிரியரிடம் திருப்பி கொடுத்துவிட சொல்லி இருக்கிறார். அந்த மாணவனை மிரட்டி, அப்பாவை போனில் அழைக்க வைத்திருக்கிறது. பள்ளிக்கு வந்து விசாரித்த மகேந்திரபிரசாத்திடம் தகாத முறையில் நிர்வாகத்தினர் நடந்துகொண்டுள்ளனர். மகேந்திர பிரசாத், பதில் கூறியதுடன், பள்ளி நிர்வாகத்தின் அநாகரிக செயலை கண்டித்துள்ளார். இது விபரீதமாக போவதை உணர்ந்த பள்ளி நிர்வாகம், அந்த பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
அதுபோல ஆரப்பாக்கம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் முதல்வராக பணியாற்றிய சங்கரலிங்கம் முதல்வராக நியமித்ததை அங்கீகரிக்க பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. அதற்குக்கூறியுள்ள காரணம் ஒரு கத்தோலிக்கர் மட்டுமே கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில்  முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என்பது சி.எம்.ஈ.எஸ். பாலிஸி எனத் தெரிவித்து, அவரை பணி நீக்கம் செய்துள்ளார் ஆர்.சி. பள்ளிகளின் சூப்பரண்டன்ட் பாதிரி பாலுசாமி. இது மதவெறி பிடித்த செயல் இல்லையா?
இதுமட்டுமல்ல, திருவண்ணாமலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர்  மாவட்ட கலெக்டர் மிஸ்ரா நேரிடையாக மவுண்ட் செயிண்ட் ஜோசப் மேனிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது அங்கு மாஸ் காப்பிங் செய்வது தெரியவந்தது. தேர்வில் விடைகளை கொடுத்து எழுத அனுமதித்த தேர்வு கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அதற்கு துணையாக அலுவலகத்தை திறந்து, புத்தகத்தில் பதில்களை பிரதி எடுத்துக் கொடுத்து செயல்பட்ட கிறிஸ்தவ மிஷனரி நிர்வாகத்தை ஏன் தண்டிக்கவில்லை?
சேலம் மாவட்டம், ஓமலூர் பாத்திமா பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்ற சுகன்யா என்ற மாணவி முதல் பல பெண் குழந்தைகள் பாலியில் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்ட வழக்குகளில் பல ஆண்டுகள் ஆகியும் எந்த நீதியும் கிடைக்கவில்லை. காரணம் அவையெல்லாம் கிறிஸ்தவ மிஷனரிகள் எனும் அரக்கப் பிடியில் இருக்கிறது. இதனைக் கண்டு ஊடகங்களும், நீதித்துறையும், அரசுத் துறையும் வாய் மூடி நிற்பது வேதனையானது.
இதுபோல் பல விஷயங்களில் முரண்பாடான செயல்பாடுகளையும், முறையற்ற நிர்வாகத்தையும் கிறிஸ்தவ மிஷனரிகள் செய்து வருகின்றன. உண்மையில் கல்வி சேவை என்ற பெயரில் அரசின் சலுகைகளை கொள்ளையடித்து மதமாற்றம் செய்து வருகின்றன கிறிஸ்தவ, முஸ்லீம் நிறுவனங்கள். மாணவர்களுக்கு எந்தவித வசதிகளும் இல்லாமல், அரசின் நடைமுறை விதிகளுக்கு புறம்பாகப் பல பள்ளிகள், கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கிவருகின்றன. இவற்றை எந்த அதிகாரிகளும் தட்டிக்கேட்க முடியாது, காரணம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்பதுதான். இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக இந்து முன்னணி மக்கள் முன் வைக்கிறது.
மக்களை திசைத்திருப்ப மத்திய அரசுக்கு எதிராக வேண்டுமென்றே குற்றச்சாட்டை கிளம்பி போராட்டம் நடத்தி உள்ளதை இந்து முன்னணி கண்டிக்கிறது. மத்திய அரசின் வரைவு அறிக்கையில் என்ன குறைபாடு என்பதை விவாதிக்கலாம், கருத்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பலாம். ஆனால் போராட்டத்தின்போதும் கூட இவர்களின் ஆட்சேபம் என்ன என்பதை தெளிவாகத் தெரிவித்ததாக ஊடகங்களில் வரவில்லை.
திமுக, அதிமுக இரண்டு கட்சினரும் சாவு வீட்டில் கூட ஒன்று சேரதா அதிசய பிறவிகள். ஆனால், நெல்லையில் நடைபெற்ற சிறுபான்மையினர் போராட்டத்திற்கு சேர்ந்து போயிருப்பது வியப்பாக இருக்கிறது. அதில் பேசிய எம்.பி. கனிமொழி, பிரஞ்சு, ஜெர்மன் படித்தால் வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும் என வெளிநாட்டு மொழிக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். இவரது தந்தை திமுக தலைவர் கருணாநிதி, இவரை ராஜ்சய சபா உறுப்பினராக்கிய போது, எனது மகளுக்கு இந்தி தெரியும் என பெருமிதப்பட்டார். ஆனால் தமிழக மாணவர்களுக்கு அந்த வாய்ப்பை ஏன் மறுக்கிறார்கள்?
சம்ஸ்க்ருதமோ வேறு மொழிகளோ, எதுவானாலும் படிக்கும் மாணவரது விருப்பமாக இருக்க வேண்டும். மாணவரின் விருப்பத்திற்கு வழி செய்து தர வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. எல்லாவற்றிலும் அரசியல் பேசி மக்களை குழப்புவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசுக்கு எதிராக மாணவர்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்துவது, கருத்துருவை திணிப்பு போன்ற செயல்களில் ஈடுபடும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களை எச்சரிக்க வேண்டும். மீறி செயல்படும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்வதுடன், அந்த பள்ளிகளை அறக்கட்டளையாக மாற்றி, தகுந்த நபர்களைக் கொண்டு அரசே ஏற்று நடத்த முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

”கன்னா பின்னா” என அழகான பெண்களை தேடும் நாயகன்!

திருமணம் செய்ய அழகான பெண்ணை தேடும் இளைஞனின் கதை ”கன்னா பின்னா“!
மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ். P  மற்றும்  எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில்  E. சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ்  தயாரிப்பில் முழுக்க  முழுக்க  நகைச்சுவைக்கு முக்கியத்துவம்  கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம்  “கன்னா பின்னா”.
திருமணம் செய்தால் அது அழகான  பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில்  இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடிஅல்லோலப்படும் நாயகனின்  கதைதான்  “கன்னா பின்னா “. இந்தப்படத்தின் இயக்குநர் தியா கதையை எழுதி, இயக்குவதோடு  கதையின் நாயகனாகவும்  நடித்திருக்கிறார்.. நாயகியாக வன்மம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த ‘அஞ்சலி ராவ்’ நடித்திருக்கிறார்.

படம் பற்றி  இயக்குனர் தியா  சொல்லும்போது …

படம்  ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவையை மட்டும்  நம்பி இந்தப்படத்தை  எடுத்திருக்கிறோம். என் வாழ்க்கையில் என் நண்பர்கள் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை கற்பனை கலந்து கொடுத்து உள்ளோம். இதில் நிஜ பவுன்சர்கள் பலர் நடித்துள்ளனர். பார்ப்பதற்கு பிரமாண்டமான  உருவத்தில் இருக்கும் இவர்கள்  படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில்  நடித்திருப்பது  நகைச்சுவைக்கு  பெரும் பலமாக இருந்தது. இந்தப்படத்தின்  கதையை நான்  தயாரிப்பாளருக்கு  கடைசி வரை சொல்லவே இல்லை. தயாரிப்பாளர்கள்  எனக்கு நண்பர்களானதால்  எதுவும் கேட்கவில்லை. படப்பிடிப்பு முடிந்தபிறகு  தியேட்டரில்தான்  படத்தை பார்த்தார்கள் மிக அருமையாக  படம் வந்ததில்  அனைவருக்கும் மகிழ்ச்சி. உங்கள் சிரிப்புக்கு  நாங்கள்  உத்திரவாதம்  என்கிறார்  இயக்குனர் தியா .

நாளைய இயக்குனர் குறும்பட நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனராக விருது பெற்றவர் தியா என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு  இசையமைத்திருப்பவர் ரோஷன் சேதுராமன்,  ஒளிப்பதிவு  ஜெரால்டு ராஜமாணிக்கம், பாடல்கள் ஸ்ரீதர் ராமசாமி, படத்தொகுப்பு வெஸ்லி, நடனம்  நந்தா, சண்டைப்பயிற்ச்சி  ஜேசு, தயாரிப்பு நிர்வாகம்  நாகராஜன்.
கதை, திரைக்கதை,  வசனம் &  இயக்கம்  தியா(Thiya).

உங்கள் கவலைகள்  அனைத்தும் மறந்து  சிரித்து மகிழும்  இந்த படம் விரைவில்  திரைக்கு வர இருக்கிறது.

cleardot - 2026

“பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்; பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

77134_693849987312454_1034041963_n
.“பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்;
பகவான் எப்போதும் காப்பாற்றுவான்…”

(வேதத்தை நாடாப்பதிவு செய்வது குறித்து
பெரியவாளின் கருத்து)

சொன்னவர்-எம்.சுப்புராம சர்மா
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

வேதங்களில் பல சாகைகள் (கிளைகள்/பகுதிகள்)
இருக்கின்றன. சாமவேதத்தில், ஜைமினிய சாகை
என்றும்,தலவகார சாகை என்றும் அழைக்கப்படும்
பகுதிகள் முற்றிலும் மறைந்துவிடக்கூடிய
நிலையில் இருந்தன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரு பணியாளர்
இருந்தார். ராஜகோபால அய்யங்கார் என்று பெயர்.
கோயிலில் அவருடைய பணி – இரவில் ரங்கநாதப்
பெருமாள் பள்ளியறைக்குச் செல்லும்போது,
சாம வேதத்தின் இந்தப் பகுதிகளை ஓதுவதுதான்.

குடும்பம் நடத்துவதற்குப் போதிய வருமானம்

இல்லாததால், பகல் நேரத்தில், ஒரு விறகுக் கடையில் கணக்கு எழுதும் வேலையையும் செய்துவந்தார்.

ஜைமினிய சாகைக்கு உயிர் கொடுக்க வேண்டுமென்றால், ராஜகோபால அய்யங்காரைக் காப்பாற்றியாக வேண்டும்!


அவரையே ஆசிரியராக்கி, போதுமான சம்பளம்கொடுத்து, 1963-ல் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 

அவருக்குப் பின்னர் அவருடைய சிஷ்யர்
ஸ்ரீ மகரபூஷணம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு பாடசாலை நடந்து வருகிறது.இதுவரை (2007-கட்டுரை) மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட, இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், நல்ல முறையில் பயின்று தேர்ச்சி பெற்று வித்வான்களாகி இருக்கிறார்கள்.
ஸ்ரீமகரபூஷணத்துக்கு திருப்பதிதேவஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்தது. ஜைமினீய சாகையை நாடாப்பதிவுசெய்துகொள்ள வேண்டுமாம்.

ஸ்ரீ மகரபூஷணம், பெரியவாளிடம் வந்தார்.

“நான் என்ன செய்யணும்னு உத்தரவாகணும்….”

“உன் அபிப்ராயம் என்னன்னு சொல்லு….”-பெரியவா

“டேப் செய்வதில் எனக்கு சம்மதமில்லை. ஆனா திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறதாலே பெரியவாளிடம் தெரியப்படுத்தினேன்.

வேதத்தை நாடாப்பதிவு செய்வதை பெரியவாள்
ஏற்றுக்கொண்டதேயில்லை.நாடாப்பதிவு செய்வதால் ஏற்படும் தீமைகளை மகரபூஷணத்திடம் விளக்கினார்கள்.

மகரபூஷணத்துக்கு பெரியவாள் வாக்கு, பெருமாள் வாக்கு.

அவருடைய வேதக்குரல் நாடாவில் பதிவாகவில்லை.

‘அரங்கன் கேட்டு மகிழ்ந்தாலே போதும்’என்ற முதிர்ச்சி.

இதே மகரபூஷணத்துக்கு அமெரிக்காவிலிருந்தும்
அழைப்பு வந்தது. போனால் ‘சில லகாரங்களுடன்
வரலாம்; பல விகாரங்களுடனும் வரலாம்’.

“நான் போகப்போவதில்லை…” என்று சொல்லி
தெண்டன் சமர்ப்பித்தார் மகரபூஷணம்.

“ரொம்ப சரி, ‘பணம் கொஞ்ச காலம் காப்பாற்றும்;
…………………பகவான்எப்போதும்காப்பாற்றுவான்”

 

ஊருக்காக கிராம மக்கள் குளத்தில் குடியேறி போராட்டம்

1

பாவூர்சத்திரம் அருகே ஊர் பெயரை இருட்டடிப்பு செய்வதை கண்டித்து சந்தணக்குமார்பட்டி கிராம மக்கள் குளத்தில் குடியேறி சமைத்து போராட்டம் நடத்தினர்
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுர் பஞ்சாயத்திற்குட்பட்ட சந்தனக்குமார்பட்டி கிராமத்தின் பெயரை மறைத்து தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் குளத்தில் குடியேறினர்.
கீழப்பாவூர் ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தின் 2வது பிளாக் பகுதி சந்தணக்குமார்பட்டி கிராமம் ஆகும். ஆவுடையானூர் ஊராட்சியின் 4வது பிளாக் பகுதி மாடியனூர் கிராமம் ஆகும்.
சந்தணக்குமார்பட்டி கிராம மக்களின் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, வீட்டுத் தீர்வை ரசீது, குடிநீர் இணைப்பு ரசீது மற்றும் அரசு ஆவணங்களில் சந்தணக்குமார்பட்டி என்ற பெயர் உள்ளது.
தற்போது சந்தணக்குமார்பட்டி கிராமத்தின் பெயரை ஊராட்சி மன்றத்தின் புலப்படத்தில் இல்லாமல் செய்து மாடியனூர் கிராமத்தின் பெயராக மாற்றுவதற்கு ஊராட்சி மன்ற நிர்வாகம் முயற்சி செய்வதாக சந்தணக்குமார்பட்டி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தில் சந்தணக்குமார் பட்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ,அரசு பொது நூலகம், மேல் நிலை நீர்தேக்க தொட்டி ,நியாவிலைக்கடை ஆகியவற்றை மாடியனூர் பகுதிக்குட்டபட்டது என்று பெயரை வைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக ஏற்பட்ட தகவலையடுத்து சந்தனக்குமார்பட்டி கிராம பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு,ரேஷன்கார்டு,வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கபோவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த உள்ளாட்சி மன்ற கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஊரை பிரிக்கும் நோக்கம் எங்களுக்கில்லை தாங்கள் தற்போது மன்றக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை பத்து நாட்கள் தள்ளி வைக்கபடுகிறது என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.ஆனால் அதுதான் மன்றத்தின் கடைசி கூட்டம் என அறியாத மக்கள் கலைந்து சென்று விட மதியம் மன்றக் கூட்டம் நடைபெற்றது எந்த தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடாது என நினைத்து சந்தனக்குமார்பட்டி கிராம மக்களின் போராடினார்களோ அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த தகவலை தாமதமாக அறிந்த சந்தனக்குமார்பட்டி கிராம பொதுமக்கள் சனிக்கிழமை மாலை 3 மணிக்கே ஊருக்கு அருகேயுள்ள சிறிய குளத்தில் குடும்பத்தோடு குடியேற முடிவெடுத்து வந்தனர் , காவல்துறை பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லை ,மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பிளாக் 2 க்குரிய பகுதிகளை பிளாக் 4 க்கு மாற்றிய தீர்மானத்தை ரத்து செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் அதுவரை இப்பகுதியை விட்டு எங்கும் போக மாட்டோம் என அங்கே சமையல் செய்து இருக்க முடிவு செய்தனர் ஆவுடையானூர் ஊராட்சி மன்றத்தைக் கண்டித்தும், அந்த தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செய்தியை நாம் பதிவேற்றும் வரை போராட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை

“ஸ்வர்ணத்வீபம்தான் (லங்கை) ‘ஸெரென்டீப்’

20fr_mahaperiyava10_634796g

“ஸ்வர்ணத்வீபம்தான் (லங்கை) ‘ஸெரென்டீப்’ “
(உத்தேசிக்காமலே, ஃப்ளூக்’காக ஏதாவது கண்டுபிடிப்பதை
‘ஸெரென்டிபிடி’ (serendipity) என்று இங்கிலீஷில்சொலவது இந்த’ஸெரென்டீ’பிலிருந்துதான்.)
கட்டுரையாளர்-ரா.கணபதி.
கருணைக் காஞ்சி கனகதாரை-புத்தகம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(பொன் பற்றிய கட்டுரையில் ஒரு பகுதி)
அமரம் என்ற ஸம்ஸ்கிருத அகராதியில்
பொன்னுக்குச் சுமார் இருபது பெயர்கள்
இருப்பதைக் கடகடவென்று விரல்விட்டு
எண்ணியவாறு ஒப்பித்தார் பெரியவா.
ஸ்வர்ணம், ஸுவர்ணம், கனகம், ஹிரண்யம்,
ஹேமம், ஹாடகம், தபநீயம், சாதகும்பம்,
காங்கேயம், பர்மம், கர்புரம், சாமீகரம்,
ஜாதரூபம், மஹாரஜதம், காஞ்சனம், ருக்மம்,
கார்த்தஸ்வரம், ஜாம்பூநதம் என்று அஷ்டாதச
(பதினெட்டு) பெயர் இருப்பதைக் கூறி,
அடுத்தாற்போல ‘அஷ்டாபதம்’ என்றும்
பத்தொன்பதாவதாகப் பொன்னுக்கு ஒரு
பெயரிருப்பதைக் காட்டினார்.
‘பர்மம்’ என்ற பெயர் பற்றி தமது
ஆராய்ச்சியறிவின் அரிய சுவை காட்டினார்.
“வெளி தேசத்தவர் ‘எல் டொராடோ’ என்ற மாதிரியே
நாமும் ‘ஸ்வர்ண த்வீபம்’ (பொற் தீவு) என்று
சொன்னதுண்டு.அப்படிப் பொன் விளையும் பூமியாகச்
சொல்லப்பட்ட பர்ம தேசந்தான் பர்மா
என்றாகியிருக்கலாம். ஸாதரணமாகச் சொல்வது,
‘பிரஹ்ம தேசம் என்பதுதான் ‘பர்மா தேசம்’
என்றாயிற்று என்று, ஆனால் நான் வேற விதமாக
நினைக்கிறேன் என்றால்,பர்மா மாதிரியே அகண்ட
பாரதத்தில் அங்கமாக இருந்த லங்கைக்கு
ஸ்வர்ணத்வீபம் என்றும் ஒரு பேர் வழங்கியதால்தான்.
“வெள்ளைக்காரர்களுங்கூட லங்கையை ‘ஸெரென்டீப்’
‘ஸெரென்டீப்’ என்று சொல்லி வந்தார்கள்.
ஸ்வர்ணத்வீபம்தான் ‘ஸெரென்டீப்’
உத்தேசிக்காமலே, ஃப்ளூக்’காக ஏதாவது கண்டுபிடிப்பதை
‘ஸெரென்டிபிடி’ (serendipity) என்று இங்கிலீஷில்
சொலவது இந்த ‘ஸெரென்டீ’பிலிருந்துதான்.
“முதலில் நான் என்ன நினைத்தேன் என்றால்,
இந்தியாவைக் கண்டுபிடிக்கப்போன கொலம்பஸ்
ஃப்ளூக்காத்தானே அமெரிக்காவைக் கண்டுபிடித்தது.
அதுதான் இந்தியா என்று அவர் நினைத்ததால்தானே.
இன்றைக்கும் அந்தக் கண்டத்தின் ஆதி ப்ரஜைகளுக்கு
‘Red Indians’ என்றே பேர் இருப்பது? அந்த மாதிரிதான் வேற
யாரோ ‘ப்ளூக்’கா லங்கையை – ஸெரன்டீப்பை – டிஸ்கவர்
பண்ணி,அதிலிருந்தே ப்ளுக் டிஸ்கவரிக்கெல்லாமே
‘ஸெரென்டிபிடி’ என்று பேர் வந்ததாக்கும் என்று
நினைத்தேன் அப்புறந்தான் தெரிந்தது அப்படியில்லை;
யாரோ ஒரு நாவல் எழுதினான். (ஹொரேஸ் வால்போல்
எழுதிய The Three Princes of Serendip) அதிலே முக்ய கதா
பாத்திரங்கள் ஸெரென்டீப்பைச் சேர்ந்த மூன்று ராஜ
குமாரர்கள்; அவர்கள் உத்தேசிக்காமலே ஃப்ளூக்காக
அநேக டிஸ்கவரி செய்த்தாகக் கதை. அதை வைத்துத்தான்
serendipity என்ற வார்த்தை வந்தது என்று

 

குருவித்துறையில ஜூலை 31-ல் குருப்பெயர்ச்சி

சோழவந்தான், ஜøலை. 30,

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி ஜøலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லட்ச்சார்ச்சனை தொடங்குகிறது.
குருபகவான் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9-27 மணிக்கு சிம்மராசியிலிருந்து-கன்னியா ராசிக்கு பிரவேசிக்கிறார். இதைத் தொடர்ந்து இக் கோயிலில் அமைந்துள்ள குருபகவான் சன்னதி முன்பாக மகாயாகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத், கணக்கர் இரா. வெங்கசடேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதேபோல், சோழவந்தான் விசாக நட்சத்திரக் கோயிலான அருள்மிகு பிரளயநாதர் கோயிலில் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணிக்கு குருப்பெயர்ச்சி மகாயாகம் சிவாச்சாரியார்களால் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து மேசம், மிதுனம், கன்னி, துலாம், கும்பம் ராசிநேயர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுகிறது. இந்த அர்ச்சனையில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 8760919188, 7598428894 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப. லதா, தொழிலதிபர் எம். மணி, பள்ளித்தாளாளர் டாக்டர் எம். மருதுபாண்டியன், பிரதோச விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

“தேங்காய் பூ கிடைக்குமா?”-பெரியவா

1507603_10202994818654217_4035239553088867808_n

“தேங்காய் பூ கிடைக்குமா?”-பெரியவா

(வாய்ப்புண் மற்றும் மனப்புண்ணும் சரியாய்விட்டது-தொண்டர்கள்)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
ஒரு சுமங்கலி தன் மகனை
அழைத்துக்கொண்டு
வந்தாள்.

“இவனுடைய வாயில் புண் இருக்கு. ரொம்ப நாளா
இருக்கு.எத்தனையோ மருந்து கொடுத்துட்டேன்.
புண் போகவில்லை…..”

பெரியவாள் தொண்டர்களைப் பார்த்து,
“தேங்காய் பூ கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.

பல பேர்களுக்கு அந்தப் பெயரே புதிதாக இருந்தது.
தென்னை மரத்தில் மட்டை,பாளை,தென்னங்குலை
இருக்கும். அதில் பூவைப் பார்த்ததில்லையே?
குலையிலிருந்து தென்னம்பூ உதிர்ந்து விழும்.
தேங்காய்ப் பூ?

இந்தப் பேச்சு நடந்துகொண்டிருந்தபோது ஒரு
மகா பண்டிதர் வந்தார். காக்கினாடா சிந்தாமணி
கணபதி சாஸ்திரி, இருபது ஆந்திர பக்தர்களுடன்.
“சந்திரசேகர சந்திரசேகர பாஹிமாம்” என்று பக்தி
பரவசத்துடன் கோஷ்டிகானமாகப் பாடிக்கொண்டேவந்தார்.
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்கள்.

தங்களுடன் கொண்டு வந்திருந்த முப்பது தேங்காய்களை, பெரியவாள் முன்னிலையிலே உடைத்து, தட்டுகளில் வைத்து சமர்ப்பித்தார்கள்.

நாலு தேங்காய் மூடிகளில், நடுவில்,அரை
எலுமிச்சை அளவுக்கு ஒரு கட்டி காணப்பட்டது.

“பூ கிடைச்சுடுத்து!” என்று மனம் பூரிக்கக்
கூறினார்கள் பெரியவாள்.

கட்டி போன்றிருந்த அந்த பொருள்,தொட்டுப்
பார்த்தபோது மெத்தென்றிருந்தது.

அவைகளை அப்படியே பையனிடம் கொடுக்கச்
சொன்னார்கள்.

“வெயிலில் உலர்த்தி தினமும் கொஞ்சம்
கொஞ்சமாகச் சாப்பிடு…”

பையனுக்கு ஒரே அவசரம். ஒரு பூவை
அப்பொழுதே வாயில் போட்டுக் குதப்பினான்.
சுவையாக இருந்தது.

பெரியவாள் மற்ற பக்தர்களுக்கு தரிசனம்
கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஒரு மணி நேரம் சென்று வாய்ப்புண் பையன்
திரும்பி வந்தான். தொண்டர்களுக்கெல்லாம்
திகீரென்றது. என்ன ஆயிற்று இவனுக்கு?

“பாதிப் புண் சரியாயிடுத்து!”

தொண்டர்களின் மனப்புண் முற்றிலும்
சரியாகிவிட்டது.

“வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்”

 

“வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்”

(அவர் தவறு செய்தார்’ என்று சுட்டிக் காட்டாமலே இரும்புக் கட்டியை பூப்பந்தாக்குவதில் வல்லவர் பெரியவா.)
?ui=2&ik=b3e3dcecb5&view=fimg&th=1562cb0587285e0e&attid=0 - 2026

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நியமாத்யயன வித்யார்த்தி ஒருவன்.
(வேதம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின்வீட்டிலேயே

தங்கியிருந்து வேதம் கற்றுக்கொள்ளும் மாணவன்)

அவன் பயின்ற வேதத்தில் ஒரு பகுதியை சொல்லச்
சொன்னார்கள் பெரியவாள். ஒரு சிறு பகுதியை
மீண்டும் மீண்டும் சொல்லச் சொன்னார்கள்.
அருகிலிருந்தவர்களுக்கெல்லாம் விநோதமாக
இருந்தது.அந்த வேத வாக்கியங்களில் தனிச்சிறப்பாக
ஏதுமில்லை.பின், ஏன் திரும்பத் திரும்பச் சொல்லச்
சொல்கிறார்கள்?

அந்த பையனுடைய தகப்பனாரேதான் அவனுக்கு
ஆசிரியர். அந்த ஆசிரியரையும் அதே பகுதியை
சொல்லச் சொன்னார்கள் பெரியவா.

அவரையும்,பல தடவை,அந்தப் பகுதியை
சொல்லச் சொன்னார்கள்.

திகைப்பு.மௌனம்.

“அந்த மந்திரத்தில் (வாக்கியத்தில்) ‘த்’ என்று
ஒரு எழுத்து தொக்கி நிற்குமே? அதைப் பையன்
சொல்லவில்லையே? நீங்களும் கவனிக்கவில்லை
போலிருக்கு….”

ஆசிரியர் (கொஞ்சம் வெட்கத்துடன்) நெளிந்தார்.
ஏனென்றால்,அவருக்கும் அந்த ‘த்’ மனப்பாடம்
ஆகவில்லை!.

பெரியவாள், ‘அவர் தவறு செய்தார்’ என்று சுட்டிக்
காட்டி,அவர் மனத்தை புண்படுத்தவில்லை.

அத்துடன் ‘த்’ என்ற தொக்கி நிற்கும் சொல்
இல்லாமலே,பரம்பரையாக பாடம் ஏற்பட்டுவிட்டால்
பின்னால், கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.
மேலும்,வேத வாக்கியத்தை சரியாக உச்சரிக்காத
குற்றமும் (பாவமும்) வந்து சேரும்.

இரும்புக் கட்டியை பூப்பந்தாக்குவதில்
வல்லவர் பெரியவா.