சோழவந்தான், ஜøலை. 30,
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி ஜøலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லட்ச்சார்ச்சனை தொடங்குகிறது.
குருபகவான் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9-27 மணிக்கு சிம்மராசியிலிருந்து-கன்னியா ராசிக்கு பிரவேசிக்கிறார். இதைத் தொடர்ந்து இக் கோயிலில் அமைந்துள்ள குருபகவான் சன்னதி முன்பாக மகாயாகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத், கணக்கர் இரா. வெங்கசடேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இதேபோல், சோழவந்தான் விசாக நட்சத்திரக் கோயிலான அருள்மிகு பிரளயநாதர் கோயிலில் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணிக்கு குருப்பெயர்ச்சி மகாயாகம் சிவாச்சாரியார்களால் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து மேசம், மிதுனம், கன்னி, துலாம், கும்பம் ராசிநேயர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுகிறது. இந்த அர்ச்சனையில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 8760919188, 7598428894 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப. லதா, தொழிலதிபர் எம். மணி, பள்ளித்தாளாளர் டாக்டர் எம். மருதுபாண்டியன், பிரதோச விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.



