
“தேங்காய் பூ கிடைக்குமா?”-பெரியவா
(வாய்ப்புண் மற்றும் மனப்புண்ணும் சரியாய்விட்டது-தொண்டர்கள்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
வந்தாள். “இவனுடைய வாயில் புண் இருக்கு. ரொம்ப நாளா
இருக்கு.எத்தனையோ மருந்து கொடுத்துட்டேன்.
புண் போகவில்லை…..”
பெரியவாள் தொண்டர்களைப் பார்த்து,
“தேங்காய் பூ கிடைக்குமா?” என்று கேட்டார்கள்.
பல பேர்களுக்கு அந்தப் பெயரே புதிதாக இருந்தது.
தென்னை மரத்தில் மட்டை,பாளை,தென்னங்குலை
இருக்கும். அதில் பூவைப் பார்த்ததில்லையே?
குலையிலிருந்து தென்னம்பூ உதிர்ந்து விழும்.
தேங்காய்ப் பூ?
இந்தப் பேச்சு நடந்துகொண்டிருந்தபோது ஒரு
மகா பண்டிதர் வந்தார். காக்கினாடா சிந்தாமணி
கணபதி சாஸ்திரி, இருபது ஆந்திர பக்தர்களுடன்.
“சந்திரசேகர சந்திரசேகர பாஹிமாம்” என்று பக்தி
பரவசத்துடன் கோஷ்டிகானமாகப் பாடிக்கொண்டேவந்தார்.
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்கள்.
தங்களுடன் கொண்டு வந்திருந்த முப்பது தேங்காய்களை, பெரியவாள் முன்னிலையிலே உடைத்து, தட்டுகளில் வைத்து சமர்ப்பித்தார்கள்.
நாலு தேங்காய் மூடிகளில், நடுவில்,அரை
எலுமிச்சை அளவுக்கு ஒரு கட்டி காணப்பட்டது.
“பூ கிடைச்சுடுத்து!” என்று மனம் பூரிக்கக்
கூறினார்கள் பெரியவாள்.
கட்டி போன்றிருந்த அந்த பொருள்,தொட்டுப்
பார்த்தபோது மெத்தென்றிருந்தது.
அவைகளை அப்படியே பையனிடம் கொடுக்கச்
சொன்னார்கள்.
“வெயிலில் உலர்த்தி தினமும் கொஞ்சம்
கொஞ்சமாகச் சாப்பிடு…”
பையனுக்கு ஒரே அவசரம். ஒரு பூவை
அப்பொழுதே வாயில் போட்டுக் குதப்பினான்.
சுவையாக இருந்தது.
பெரியவாள் மற்ற பக்தர்களுக்கு தரிசனம்
கொடுக்க ஆரம்பித்தார்கள்.
ஒரு மணி நேரம் சென்று வாய்ப்புண் பையன்
திரும்பி வந்தான். தொண்டர்களுக்கெல்லாம்
திகீரென்றது. என்ன ஆயிற்று இவனுக்கு?
“பாதிப் புண் சரியாயிடுத்து!”
தொண்டர்களின் மனப்புண் முற்றிலும்
சரியாகிவிட்டது.



