
“பெரியவாளின் நுட்பமான வாதம்”
(சுதேசி மன்னர் பரம்பரையினருக்குக் கொடுக்கப்பட்டு வரும் உதவித் தொகை)
(“பெரியவாளே பதில் சொல்லித் தெளியவைத்து விட்டார்கள்.இனிமேல் எந்தப் ப்ரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்ய!)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலம்.
கலை,சமயப் பற்று மிக்க அந்தப் பரம்பரையினர்,
கும்பகோணத்தில் ஸ்ரீமடம் நிரந்தரமாக இயங்குவதற்கு
தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார்கள்.
அதனால் ஸ்ரீகாமகோடி பீடாதிபதிகளுக்கு, தஞ்சை
மன்னரின் ராஜகுரு என்ற பதவியும் சிறப்பும் கிடைத்தன.
நாடு சுதந்திரமடைந்த பிறகு சுதேச மன்னர்களின்
நிலை தலைகீழாக மாறி விட்டது.
‘சுதேசி மன்னர் பரம்பரையினருக்குக் கொடுக்கப்பட்டு
வரும் உதவித் தொகை நிறுத்தப்படப் போகிறது’
என்ற தகவல், தஞ்சையின் மூத்த இளவரசர் ராஜாராம்
ராஜா அவர்களை எட்டியது.ஆடிப் போய்விட்டார் அவர்.
பரமாசாரியாளிடம் வந்து, தன் நிலைமையை
விண்ணப்பித்துக் கொண்டார்.
விண்ணப்பித்துக் கொண்டார்.
உடனே, அந்தக் காலத்தில் சட்டத்துறை மகா
மேதாவிகளான வழக்கறிஞர்கள் கே.எஸ்.வேங்கட-
மேதாவிகளான வழக்கறிஞர்கள் கே.எஸ்.வேங்கட-
ரமணியும்,டி.ஆர்.வேங்கடராம சாஸ்திரிகளும்
வரவழைக்கப்பட்டார்கள். அவர்களைக் கொண்டு
இந்திய அரசாங்கத்துக்கு ஒரு மனு தயாரிக்கப்பட்டது.
“பெரியவாளிடம் காட்டிவிட்டு அனுப்பலாமே?
என்றார்கள் சட்ட வல்லுநர்கள்.
பெரியவாள், அப்போது, கிழக்குக் கோதாவரிப்
பகுதியில் யாத்திரையில் இருந்தார்கள்.
படித்துப் பார்த்தார்கள், பெரியவாள்.
“ரொம்ப சரி,பக்குவமா,சட்டரீதியா எழுதியிருக்கேள்..”
சிறு இடைவெளி.
“வெங்கட்ராமா- ஒரு சின்ன பாரா சேர்க்கலாமோ?..
லண்டன் ப்ரிவி கவுன்சில்லே பிலிப்ஸ்-ங்கிறவர்
கொடுத்த தீர்ப்பிலே என்ன சொல்லியிருக்கு…?
…..இப்போது,சுதேச சமஸ்தானங்களை இந்திய அரசு
தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டாலும்,
பின்னர் ஒரு காலத்தில், அந்தந்த சமஸ்தானங்களை, அந்தந்த மன்னர் பரம்பரையினருக்கே வழங்கி விடலாம்
என்று தீர்மானம் செய்யுமேயானால், தஞ்சாவூர் மன்னர் பரம்பரையினருக்கே முன்னுரிமை வழங்கவேண்டும்.
“….சமஸ்தானத்தையே திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று ப்ரிவி கவுன்சில் தீர்ப்பு சொல்லியிருக்கும்போது இப்போதைய தஞ்சாவூர் மன்னர் பரம்பரையினருக்கு, போதுமான இடமும் வசதிகளும் செய்து கொடுப்பது நியாயமல்லவா? குறைந்த பட்சம், தற்போதுள்ள வசதிகள் ரத்தாகாமல் பார்த்துக் கொள்வது,
அரசாங்கத்தின் கடமை…”
சட்டங்களின் கரைகண்டவர் என்று போற்றப்பட்ட
வெங்கட்டராம சாஸ்திரி, அப்படியே பிரமித்துப்
போய்விட்டார். பெரியவாளின் நுட்பமான வாதம்
அவரை கட்டிப்போட்டுவிட்டது.
“பெரியவாளே பதில் சொல்லித் தெளியவைத்து
விட்டார்கள்.இனிமேல் எந்தப் ப்ரிவி கவுன்சிலுக்கு
அப்பீல் செய்ய!



