
“Red rose-பூஜைக்கு உகந்ததா?”
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் அமர்ந்திருந்தார்கள்
பெரியவாள்.அங்கே கோபுரத்தில் திருப்பணி
நடந்துகொண்டிருந்ததை மேற்பார்வையிட்டவாறுபலமணி நேரம் தங்கியிருந்தார்கள்.பலர் வந்தார்கள்; நமஸ்காரம் செய்தார்கள்; திரும்பிப் போனார்கள். ஆனால் நான் அவ்விடத்தைவிட்டு நகரவில்லை.
சற்று தூரத்தில் ஒரு பூக்காரி, கூடை நிறைய செக்கச் சிவந்த ரோஜாப் பூக்கள் விற்றுக்கொண்டிருந்தாள். பார்ப்பதற்கே அழகாக இருந்தன அந்தப் பூக்கள். ‘ஒரு தட்டு நிறைய வாங்கி, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கலாமே?’ என்று தோன்றியது.
உடனே சென்று வாங்கிக்கொண்டு வந்தேன். பூக்கள் அளவிலும் பெரிதாக இருந்ததால், இரட்டை மகிழ்ச்சி.
தட்டில் வைத்த பூக்களை பெரியவாள் பார்த்தார்கள்;
தொடக்கூட இல்லை. ஏன்,இப்படி?
பெரியவாளின் கவனத்தைத் திருப்புவதற்காக,
“புதுக்கோட்டை மாமி ரோஜாப்பு வெச்சிருக்கா..”
என்று சொன்னார்,அருகிலிருந்த சிஷ்யர்.
பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள்;
“இது ரோஜாப்பூ இல்லை; ரோஜாப்பூ மாதிரியான
சிவப்புக் கலர் புஷ்பம். ரோஸ் கலரில் இருக்குமே,
அதுதான் நிஜமான ரோஜா.அதில் நல்ல வாசனை
இருக்கும்.
ஆமாம். இது Red rose அழகு இருந்தது;வாசனை
கொண்டேன். அதற்குப் பிறகு red rose-ஐ
பூஜைக்கு வாங்குவதைத் தவிர்த்தேன்.



