Home Blog Page 5755

“சாது மண்டலி கீ – ஜே!”

10482143_599228513527816_46027082804070919_n

“சாது மண்டலி கீ – ஜே!”

(நாமசங்கீர்த்தனம் செய்பவர்களிடம் சாட்சாத்

பகவானையே காண்கிறார்கள், பெரியவாள்.)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பாகவதர்கள் சிலர் திருவீதியில் பஜனை
பாடிக்கொண்டு சென்றார்கள்.

அதே வழியாகப் பெரியவாளும் போக நேரிட்டது.
பெரியவாளைக் கண்டதும், பாகவதர்கள் மேலே
நடந்து செல்லாமல்,குரு கீர்த்தனம் பாடினார்கள்.

பெரியவாள், பாகவத கோஷ்டியை வலமாக வந்து
அருகிலேயே நின்று சிறிது நேரம் நாம
சங்கீர்த்தனத்தை கேட்டு பரவசப்பட்டார்கள்.
பின் எங்களைப் பார்த்து, “சாது மண்டலி கீ – ஜே!”
என்று கோஷம் போடச் சொன்னார்கள்.

பாகவதர்களுக்கு பேரானந்தமாக இருந்தது.

பெரியவாள் வலம் வந்தது,பாகவதர்கள்
உருவில் வந்த பகவானைத்தான் என்பது
அவர்களுக்குப் புரிந்தது.
நாமசங்கீர்த்தனம் செய்பவர்களிடம் சாட்சாத்
பகவானையே காண்கிறார்கள், பெரியவாள்.

ஆனால்,நாமோ,ஈசுவரனே நேரில் வந்து
தரிசனம் கொடுத்தால்கூட, “யாரோ பகல்
வேஷக்காரன்!” என்று ஏளனமாக நகைப்போம்.

பெரியவாள் பாகவதர்களை வலம் வந்தது,
தனக்காக அல்ல; நம்முடைய மனத்தில்
பக்திபலம் வளரவேண்டும் என்பதற்காகத்தான்!

இன்னொரு தடவை சொல்லுவோமே –
“சாது மண்டலி கீ – ஜே!”

“அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்.. ஒரே ஒருதடவை…”-வயோதிகர்.

12957391_1335113029837652_1819172567_n

“அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்..

ஒரே ஒருதடவை…”-வயோதிகர்.

(‘யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.’

அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை)

2014-போஸ்ட் மறுபதிவு


சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
 
முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே
போகமுடியாது. ஆட்டோ,டாக்ஸியில் போகலாமே
என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.
 
நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது –
‘அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்..
ஒரே ஒருதடவை…”
 
வெறும் பகற்கனவு என்பது அவருக்கே புரிகிறது.
ஆனால், நாள் ஆக ஆக, தவிப்பும் வளர்ந்துகொண்டே
போயிற்று.
 
வாசற்படியிலே, காலடிச் சத்தம் கேட்டாலே,

‘அவன் தானோ?’ என்ற திகில்.

‘போகவேண்டியிருக்கிறதே?’ என்ற அச்சம் இல்லை; ‘தரிசிக்காமல் போகிறோமே!’ என்ற ஏக்கம்.

 
ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம்.
 
ஆமாம், காலடிச் சத்தம்.
 
“உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி
பெரியவா உத்திரவு…” என்றார் வந்தவர்.
 
வயோதிகரின் ஆத்மா சிலிர்த்தது.
‘நான் எனக்குள்தானே பேசிக்கொண்டேன்?
அதெப்படி பெரிவாளுக்குக் கேட்டிருக்கும்.?’
 
‘நான் என்ன பண்டிதனா? அக்னிஹோத்ரியா?
இல்லை, அமைச்சரா? அரசியல் தலைவனா?
எப்போதோ ஒரு தேங்காயைச் சமர்ப்பித்து,
நமஸ்காரம் செய்த நினைவு. நெஞ்சில் பதிந்த
திருவுருவம், காலத்தால் மறைந்துவிடவில்லை.’
 
மடத்துப் பணியாளர், ” என் தோளைப் புடிச்சிண்டு
நடந்துவந்து கார்லே ஏறிக்கிறேளா?” என்றார்.
 
“கார்! ‘விமானத்தையல்லவா எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேன்!’
 
இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சென்றடைந்த
சமயத்தில், பெரியவா அன்னை காமாக்ஷி கோயிலில்
இருந்தார்கள்.
 
“அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாமா?”
என்றார் சிப்பந்தி.
 
“முதல்லே, பெரியவா தரிசனம்….அப்புறமா…”
 
பெரியவாள் திருமுன்னிலையில் போய் நின்றார்.
பேச்சு வரவில்லை. கண்கள் பேசிக்கொண்டன.
ஒரு வழியாகச் சமாளித்துக்கொண்டு, பெரியவாளுக்கு
நமஸ்காரம் செய்தார்.
 
ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை.
 
பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக்
கொடுத்து,அந்தச் சரீரத்தின்மேல் போர்த்தச் சொன்னார்கள்.
 
மடத்துப் பணியாளர்களே இறுதிச் சடங்குகளை
செய்யும்படி உத்திரவாயிற்று.
 
“முதல்லே, பெரியவா தரிசனம்; அப்புறமா…”
 
அப்புறமா அம்பாளை தரிசித்துக் கொள்ளலாம்-
என்று சொல்லத்தானே விரும்பினார்.
 
அவர் விருப்பம் நிறைவேறிவிட்டது.
 
அரைமணி கழித்து, அவர் ‘விமான’த்தில் பயணித்துக்
கொண்டிருந்தார் – அம்பாளை தரிசிக்க.
 
இனி, எந்த ஒரு தாயின் ‘கர்ப’மும் அவருக்குக்
‘கிருஹம்’ ஆக முடியாது!
 
‘யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.’
 
அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை

 

“ஒரிஜனல் ஹிந்து கல்ச்சர்”

20fr_mahaperiyava10_634796g

ஒரிஜனல் ஹிந்து கல்ச்சர்”

(நரிக்குறவர்கள் பண்புகள் பற்றி பெரியவாள்
நீண்ட விளக்கம்)

 
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

போலகம் கோபால அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின்
தொண்டர்; பெரியவாளிடம் அதீதமான பக்தியுடையவர்.

திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலையில் ஸ்ரீமடத்துக்கு
சொந்தமான தோட்டம் இருக்கிறது.ஒரு தடவை,

எஸ்டேட் மேற்பார்வைக்காக, சிறுமலை சென்று.
திரும்பி வரும்போது சுமார் ஐந்நூறு மலை வாழைப்
பழங்கள் கொண்டுவந்து பெரியவாளிடம்
சமர்ப்பித்தார்.
“மடத்து எஸ்டேட்டில் விளைந்த பழம்,
பெரியவாளுக்காகக் கொண்டு வந்திருக்கேன்…”

ஒரு சீப்பிலிருந்து ஒரு பழத்தை மட்டும் எடுத்துத்

 தன் மடியில் வைத்துக்கொண்டார்கள் பெரியவாள்.

பெரியவாளுக்கு நேர் எதிரில் முந்நூறு அடிக்கு

 அப்பால் நரிக்குறவர்கள் கூட்டம் தங்கியிருந்தது. 
சமையல்,சாப்பாடு, தூக்கம் – எல்லாம் 

மரத்தடியில்தான்!

கார்வாரைக் கூப்பிட்டார்கள் பெரியவாள்.

“இதோ,பாரு… எல்லா மலைப்பழம்,பக்தர்கள்
கொண்டுவந்த, கல்கண்டு,திராட்சை,தேங்காய்,

மாம்பழம் சாத்துக்குடி, கமலா – எல்லாத்தையும் 
மூட்டையாகக்கட்டி நரிக்குறவர்களிடம் 

கொடுத்துட்டு வா…”

ஸ்ரீமடத்தில் தங்கியிருந்த அனந்தானந்த ஸ்வாமிகள்
என்ற துறவி அப்போது அங்கு இருந்தார்.அவருக்கு
இப்படி எல்லாவற்றையும் மொத்தமாக நரிக்குறவர்-
-களுக்குக் கொடுப்பது நியாயமாகப் படவில்லை.
“இது என்ன புதுப் பழக்கம்? இவ்வளவு பழங்களையும்
குறவர்களுக்குக் கொடுக்கணுமா?”

பெரியவாள் நிதானமாகப் பதில் சொன்னார்கள்.

“நாம் எல்லோரும் நமது கலாசாரத்தை மாற்றிக்
கொண்டுவிட்டோம் – கிராப்பு,டிராயர், ஷர்ட், மீசை
ஹோட்டல்,டீக்கடை,சீமைக்குப் போவது – எல்லாம்
வந்துவிட்டது. பாரத கலாசாரமே போயிடுத்து.

“ஆனா,ஏழைகளான இந்த நரிக்குறவர்களை பாருங்கோ

அவாளோட சிகை,டிரஸ்,பழக்கவழக்கம்,பரம்பரையா
வந்த பாசிமணி மாலை,ஊசி விற்பது -இவைகளை
விட்டுவிடல்லே.
“கூடியமட்டும் திருடமாட்டா.குறத்திகள் கற்பைக்
காக்கிறவர்கள்.அந்த ஜாதிக்குள்ளேயே கல்யாணம்.
மறுநாளைப் பற்றிக் கவலைப்படறதில்லை.
வெட்டவெளியில் சமையல்,சாப்பாடு,தூக்கம்.
இதுவரை அரசியலில் ஈடுபடவில்லை. அதனாலே,
சுயநலம் – கெட்ட புத்தி வரல்லே.குடும்ப கட்டுப்பாடு –
(மகாபாபம்) – அதை செய்து கொள்றதில்லே.

நாடோடிகள். அன்றன்று சாமான் வாங்கி சமையல்.

 

இவர்கள் தான் ‘ஒரிஜனல் ஹிந்து கல்சரை’
 இன்னிக்கு வரை கடைப்பிடித்து வருகிறார்கள்.
பழங்கால ரிஷிகள் போல, கவலையில்லாமல்
வாழ்கிறார்கள்…..”
அந்த கிராமத்திலிருந்து பெரியவாள் புறப்பட்டபோது,
நூற்றுக்கணக்கில் நரிக்குறவர்கள் வழியனுப்ப
வந்தார்கள். அரை கிலோமீட்டர் தூரத்தில்,
அவர்களை ஆசீர்வதித்து,திரும்பிப் போகச்
சொன்னார்கள் பெரியவாள்.

பதினெட்டாம் பேரு 02-08-2016 கலந்த சாதம்-

1914843_1149315091752824_8573352737394903724_n

ஆடிப் பெருக்கு -ஆடி-18 பதினெட்டாம் பேரு|02-08-2016
கலந்த சாதம்-நன்றி மங்கையர் மலர்.
ஆடிமாதம் பிறந்ததும் ஆனந்தம் பிறக்கும். அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்ப மாதம். அம்மனுக்கு பூஜைகள் விழாக்கள் நடக்கும் மாதம். விவசாயிகள் அறுவடை முடிந்து நடவு வேலைகள் தொடங்கும் காலம். விவசாயிகளுக்க நீர் ஜீவநாடி. எனவே ஆற்றில் புது நீர் வருவதைக் கொண்டாடுவது ஆடிபெருக்கு. அன்று பெண்கள் எண்ணெய் ஸ்நானம் செய்து, புத்தாடைகள் உடுத்தி காவிரித் தாயாருக்கு பூஜைகள் செய்வார்கள். பலவித சித்ரான்னங்கள் செய்து உண்டு மகிழ்வார்கள். அதில் முக்கிய இடம்பெறும் சித்ரான்னங்களில் இதோ சில
வெல்லசாதம்

தேவை: அரிசி – 1 கப், பெரிய தேங்காய் – 1 மூடி, வெல்லம் – 250 கிராம், ஏலக்காய்த்தூள், முந்திரி – 5, திராட்சி – 10, பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை, நெய் – சிறிது.

 

செய்முறை: அரிசியைச் சாதமாக வடிக்கவும், தேங்காயைத் துருவிக் கொள்ளவும். வெல்லத்தைப் பாகு வைத்த தேங்காயுடன் கலந்து கெட்டிப் பூரணமாகச் சுருளக் கிளறி இறக்கவும். அதில் ஏலத்தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை போடவும். சாதத்தை தாம்பாளத்தில் போட்டு பூரண கலவையைக் கலக்கவும். சிறிது நெய்விட்டு, பச்சைக் கற்பூரம் பொடித்துப் போட்டுக் கிளறிப் பரிமாறவும்.
புளிசாதம்

தேவை: அரிசி – 1 கப், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி – தலா அரை டீஸ்பூன், வெல்லம் – 1 துண்டு, வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு – தேவைக்கு.

 

வறுத்துப் பொடிக்க: மிளகாய் வற்றல் – 4, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம், எள் – தலா 1 டீஸ்பூன், மிளகு – 5, தனியா – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து தட்டில் கொட்டிஆறவைக்கவும். வறுக்க வேண்டிய பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், அரைத்த பொடியைப் போட்டுக் கிளறி, மஞ்சள் தூள், புளிக்கரைசல், உப்பு போடவும். கொதி வந்ததும் வெல்லம் சேர்க்கவும். எண்ணெய்ப் பிரிந்து வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கவும். ஆறவைத்த சாதத்தை புளிக்காய்ச்சலில் கலந்து, வறுத்த வேர்க்கடலை போட்டுப் பரிமாறவும்.
தேங்காய் சாதம்
தேவை: அரிசி – 1 கப், தேங்காய்த் துருவல் – அரை மூடி, மிளகாய் வற்றல் – 2, பெருங்காயம் – அரை டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு – தலா 2 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 5, கறிவேப்பிலை, நெய், எண்ணெய், உப்பு – தேவைக்கு.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து தாம்பாளத்தில் கொட்டி ஆற வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெயும், நெய்யும் ஒன்றாக வைத்து காய்ந்ததும் அதில் கிள்ளிய மிளகாய் வற்றல், கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயம் போட்டுச் சிவந்ததும் முந்திரி போட்டு வறுக்கவும். அத்துடன் கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் போட்டு சிறிது வாசனை வரும்வரை வதக்கவும், உப்பு போட்டு சாதத்தில் கலந்து பரிமாறவும்.
எலுமிச்சைப் பொடி சாதம்

தேவை – பச்சரிசை – 1 கப், எலுமிச்சைச் சாறு – 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (சிறியது), இஞ்சி – 1 துண்டு (துருவியது) கறிவேப்பிலை, உப்பு – தேவைக்கு.

 

வறுத்துப் பொடிக்க: மிளகாய் வற்றல் – 4, கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன்.

 

தாளிக்க: கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய் தேவைக்கு.

 

செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்து ஆறவிடவும். வெறும் வாணலியில் பொடிக்க வேண்டிய பொருட்களைச் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டு பொரிந்ததும் இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும், பருப்புகளைப் போட்டு சிவக்க வறுபட்டதும், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி சாதத்தில் கலந்து, பொடித்த, பொடியையும் கலந்து வைக்கவும், வேர்க்கடலை அல்லது முந்திரி வறுத்துப் போடவும்.

“குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம”

20fr_mahaperiyava10_634796g

“குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம”

(“குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும்
பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது,
ஸ்ரீருத்ரம்!”)

 
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 

ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.பக்தர்கள் பலவிதமான – தேங்காய்,பழம்,கற்கண்டு
மலர்கள்,காய்கறிகள் என்று காணிக்கை செலுத்தினார்கள்.

ஒரு குயவன் சில மண்பாண்டங்களைக் கொண்டு
வந்து பெரியவாள் முன்பாக வைத்துவிட்டு வணங்கினான்.

அவன் கொண்டுவந்திருந்த மண்சட்டி,பானை,
அகல் விளக்கு போன்றவைகளை ஒவ்வொன்றாகக்
கையில் எடுத்து, தடவிப் பார்த்து குழந்தைபோல்
மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அருகிலிருந்த தொண்டரைப் பார்த்து,
“உனக்கு ஸ்ரீருத்ரம் தெரியுமோ?” என்று கேட்டார்கள்.

“தெரியும்”

“நாலாவது அனுவாகம் சொல்லு..”

தொண்டர், ” நம ஆவ்யாதினீப்யோ…” என்று
தொடங்கி சொல்லிக்கொண்டேபோனார்.இடையில்
“குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம”
என்ற வாக்கியம் வந்ததும், பெரியவாள் ஜாடை
காட்டி நிறுத்தச் சொன்னார்கள்.

“குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும்
பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது,
ஸ்ரீருத்ரம்!” என்று உணர்ச்சியோடு மொழிந்தார்கள்
பெரியவாள்.

மண்பாண்டங்கள் கொண்டுவந்த குயவனுக்கு
வேஷ்டி – புடவை கொடுக்கச் சொன்னார்கள்.

“மவனுக்கு படிப்பு வரலீங்க,சாமி”
என்று முறையிட்டான் குயவன்.

“உனக்கு படிக்க தெரியுமா?”

“தெரியாதுங்க…”

“பையன் படித்தால் நல்லது.டியூஷன் வைத்தாவது
சொல்லிக் கொடு. படிக்காவிட்டாலும் பரவாயில்லை.உன் தொழிலைக் கற்றுக்கொடு. உன்னைக் (படிப்பறிவில் வராமல், ஒரு தொழில் மட்டும் தெரிந்த உன்னை) காப்பாற்றும் கடவுள் அவனையும் காப்பாற்றுவார்…”

குயவன் பிரசாதம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாகப் போனான்.

பெரியவாளின் சொற்களுக்கு அழிவு கிடையாது.
கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!

“நான் சட்டை – கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே,

947129_585338794830241_865216797_n“நான் சட்டை – கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே,
தையலே இல்லாத ஒத்தைத் துணி!”
(முஸ்லிம் தையற்காரரின் வேண்டுகோளுக்கு)

(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத்
தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை
ஏதோ ஒரு பத்திரிகையில் பார்த்தாராம்.அதுமுதல்,சகலமும் பெரியவாள்தான் அவருக்கு.அவரோ திருச்சியில் இருந்தார். பெரியவாளோஊர் சுற்றிக்கொண்டிருந்தார்.எங்கே சந்திப்பது?அத்துடன் ஸ்ரீமடம் சிப்பந்திகள் பெரியவாளைத் தரிசனம் செய்வதற்கு அனுமதிப்பார்களோ, மாட்டார்களோ?

தையற்காரருக்கு அதிர்ஷ்டம்! பெரியவாள் திருச்சி
மலைக்கோட்டையில் முகாம்!

“நான், டெய்லர், சட்டை, கோட்டு எல்லாம் நல்லா
தைப்பேன். சாமிக்கு சட்டை – கோட்டு தெச்சுக்
கொடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டுக்கிட்டிருக்கிறேன். சாமி அளவு கொடுத்தால்-பழைய சட்டைகூடப் போதும் – நாளைக்கே புது சட்டை கொண்டாந்துடுவேன்.கோட்டு தைக்க,ரெண்டு மூணுநாள் ஆகும்…..”

பெரியவாள்,பரிவுடன், அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் ஸ்ரீமடத்துக்கு ஏதாவதுகைங்கர்யம் செய்ய ஆசைப்படுகிறார் என்பது,பக்தி பூர்வமான அவர் பேச்சிலேயே தெரிந்தது.

“நான் சட்டை – கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே,தையலே இல்லாத ஒத்தைத் துணி! மடத்து யானை மேலே அலங்காரமாகப் போடுகிற மாதிரி,

பெரிய துப்பட்டா – நெறைய வேலைப்பாடுகளோட செய்து கொடு…”டெய்லருக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.
பெரியவாள் அவரை மதித்து,பொருட்படுத்தி,
அவர் காணிக்கையை (கொஞ்சம் மாறுதலுடன்)
ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்து
புளகாங்கிதம் அடைந்தார்.

நான்கு நாள்கள் கழித்து ஸ்ரீமடத்து யானையின்
அளவுக்கேற்ப – இரண்டு பக்கங்களிலும் நன்றாகத்
தொங்கும்படி வண்ண வண்ண வேலைப்பாடுகளுடன் ஒரு துப்பட்டா கொண்டு வந்து சமர்ப்பித்தார். அதைப் பிரித்து காட்டச் சொல்லி, நுணுக்கமாக பார்த்துவிட்டு,கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.

“பட்டையன் (யானைப் பாகன்) கிட்டே கொடுத்து
இன்னிக்கே போடச் சொல்லு….”

பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத்
தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்

 

கீழப்பாவூரில் சிவாஜிகணேசன் நினைவுதினம் அனுசரிப்பு

கீழப்பாவூரில் சிவாஜிகணேசன் நினைவுதினம் அனுசரிப்பு

கீழப்பாவூரில் நகர சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜிகணேசன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி என்ற குமரேசன் தலைமை தாங்கினார் காவை மாடசாமி ,காளி தேவர் ராஜா ,பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகர சிவாஜி மன்ற தலைவர் சுப்பிரமணிய பிரபு வரவேற்றார் ,மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் செல்வன் படத்திற்கு மாலை அணிவித்தார் ,மாவட்ட காங்கிரஸ் கலை இலக்கிய அணித்தலைவர் பொன்கணேசன்,மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் ,மற்றும் சிவசுப்பிரமணிய முதலியார் ,மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் வெற்றிவேல் முருகன் நன்றி கூறினார்

கத்தரிக்காய் ‘அசடு’ என்ற கூட்டு

1914843_1149315091752824_8573352737394903724_n

கத்தரிக்காய் ‘அசடு’ என்ற கூட்டு.
 
தேவையான சாமான்கள்.
 
பிஞ்சுக் கத்தரிக்காய்-350 கிராம்.
பச்சை மிளகாய் 5 அல்லது 6
புளி ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவு
உப்பு-1 1/4 டீஸ்பூன்
துவரம் பருப்பு அரை கப்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-1 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம்,கறிவேப்பிலை மஞ்சள் பொடி
இரண்டு சிமிட்டாக்கள்.
எண்ணெய் 2 அல்லது 3 டீஸ்பூன்.
 
கத்தரிக்காயை நீளவாட்டத்தில் மெல்லியதாக
நறுக்கவும்.. பச்சை மிளகாயையும் இரண்டாக
நறுக்கிக் கொள்ளவும்.துவரம் பருப்பை வேகவிட்டுக்
கொள்ளவும்.கற்சட்டியில் அல்லது பாத்திரத்தில்
2 டீஸ்பூன்கள் எண்ணெயை விட்டு, நறுக்கி
வைத்துள்ள காயையும், பச்சை மிளகாயையும் போட்டு
வதக்கிக் கொள்ளவும்.புளியைக் கரைத்துவிட்டு,
உப்பைப் போட்டு, மஞ்சள் பொடியையும் போடவும்.
 
“தான்” நன்றாக வெந்ததும் வெந்த துவரம் பருப்பைக்
கொட்டி, சேர்த்து கொதிக்கவிடவும். சேர்ந்து
கொள்ளாமலிருந்தால் அரை டீஸ்பூன் அரிசிமாவைக்
கரைத்துவிட்டு, கொதிக்கவிடவும். சேர்ந்து
கொதித்ததும் பெருங்காயத்தைக் கரைத்துவிட்டு,
கறிவேப்பிலையைக் கிள்ளி போடவும்.எண்ணெயில்,
கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல் இவற்றைத்
தாளித்து போடவும்.
 
[ஒரு பழைய புத்தகத்தில் இருந்து தட்டச்சு செய்யப்பட்டது]

“ஸ்வாமிகள் எங்கே?”-தம்பதிகள்.

20fr_mahaperiyava10_634796g

“ஸ்வாமிகள் எங்கே?”-தம்பதிகள்.

“சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன்.இருக்கும் இடம் தெரியவில்லை”-பெரியவா(பெரியவாளின் விளையாட்டு)

 

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பஞ்சாங்கத்தில் ‘வபன பௌர்ணமி’ என்று சில
பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் அன்றைய தினம்தான்
க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது
சம்பிரதாயம்.

ஒரு வபன பௌர்ணமியன்று மகா பெரியவாளுக்கு
கடுமையான காய்ச்சல்.அதனால் வபனம் செய்து
கொள்ளவில்லை.ஒரு வபன பௌர்ணமி தவறினால்,

அடுத்த வபன பௌர்ணமி வரை காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.காய்ச்சல் காரணமாக முடி மழித்துக் கொள்ளாததால்,பெரியவாளுக்கு தலைமுடியும், தாடியும் மிகவும் வளர்ந்துவிட்டன.அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில்,ஒரு மரத்தடியில்
அமர்ந்து பெரியவாள் ஜபம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது,ஒரு தம்பதிகள் அவசரமாக தரிசனத்துக்கு வந்தார்கள். ஏராளமான முடியுடனிருந்த பெரியவாளை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை

யாரோ ஒரு சந்நியாசி என்று நினைத்து அவர்களைப் பார்த்தே,”ஸ்வாமிகள் எங்கே?” என்று கேட்டார்கள்.

பெரியவாள் கொஞ்சமும் பதற்றப்படாமல்,
“சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை” என்று, இரு பொருள் தொனிக்கப் பதில் கூறினார்கள்.

வந்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
சுவாமிகளை தரிசிக்க வேண்டும் என்று ஆவலுடன் வந்தால், அவர் இருக்குமிடமே தெரியவில்லையாமே

எதிரே வந்த ஒரு தொண்டரிடம் விசாரித்தார்கள்.

 

அவர் மரத்தடியிலிருந்த பெரியவாளை சுட்டிக்காட்டி,
“அதோ இருக்காளே!” என்று கூறியதும்,தம்பதிகளுக்கு
உடல் வெலவெலத்து விட்டது.
“எவ்வளவு பெரிய அபசாரம் செய்துவிட்டோம்?”
என்று தவித்துக்கொண்டிருந்தபோது, பெரியவாளே
அவர்களை கூப்பிட்டு அருகில் உட்காரச் சொன்னார்கள்

“தாடி ரொம்பவும் வளர்ந்துபோச்சு! அதனாலே என்னை
அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லே! நான் தான்
உங்களை பயமுறுத்தியிருக்கேன்! பரவாயில்லை…”
என்று அவர்களுக்கு மனத்திருப்தி ஏற்படும் வரை
சமாதானமாகப் பேசி,பிரசாதம் கொடுத்தார்கள்.

பெரியவாளுக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம்
ரொம்ப பிடிக்கும்.

அவைகளைக் கண்டு ரசிக்க, அணுக்கத்

தொண்டர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!

நமக்கும்தான்.

திருநீற்றை அழிக்கச்சொன்ன பள்ளிவாசல் நிர்வாகிக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்

திருநீற்றை அழிக்கச்சொன்ன பள்ளிவாசல் நிர்வாகிக்கு பாடம் புகட்டியுள்ளன இலங்கை மாணவர்கள்

அண்மையில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் தமது சித்திர பாட ஆசிரியருடன் களப்பயணம் சென்றுள்ளனர். இதன்போது ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றை பார்வையிட்ட பின் பள்ளி வாசல் ஒன்றை பார்வையிட சென்றுள்ளனர். ஆனால் அங்கு நின்ற பள்ளி வாசல் நிர்வாகி ஒருவர் நீங்கள் உங்கள் நெற்றியில் உள்ள திருநீற்றினை அழித்து விட்டு உள்ளே செல்லுங்கள் என்று கூறியுள்ளார். சில மாணவர்கள் அதனை அழிக்க தயாரானதை கண்ட ஒரு மாணவன் “யாரும் விபூதியை அழிக்க வேண்டாம் எல்லோரும் வாகனத்தில் ஏறுங்கள். விபூதியை அழித்து அந்த இடத்தை பார்க்கும் அவசியமில்லை ” என்று உரக்கச் சொன்னதும் மாணவர்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் போல் வாகனம் நோக்கி திரும்பினார். நிலமை மீறிச் செல்வதை உணர்ந்த நிர்வாகி நீங்கள் அதனை அழிக்க வேண்டாம் உள்ளே சென்று பாருங்கள் என்று அனுமதித்துள்ளார். மாணவர்கள் மகிழ்வுடன் பார்வையிட்டு வந்துள்ளனர். அந்த மாணவர்களின் தைரியமும் தன்மானமும் வீர உணர்வும் சமயத்தில் சமரசமமில்லாத தன்மையும் தலவணங்கி வாழ்த்தப்பட வேண்டியது. தலை வணங்கி வாழ்த்துகிறோம் மாணவர்களே.