Home Blog Page 5756

திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் தலையிட பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்

திருவள்ளூவர் சிலை உரிய மரியாதையுடன் மீண்டும் கங்கை கரையில் நிறுவப்படுவதை உறுதி செய்யும் வகையில், உத்தரகண்ட் அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வடஇந்தியாவின் யாத்ரிகர் தலத்தில், திருவள்ளூவர் சிலையை நிறுவவேண்டும் என்ற நோக்கம் முற்றிலும் தோல்வியடைந்து விடும் என்றும், இந்தப் பிரச்னைக்கு உரிய முன்னுரிமை அளித்து, உத்தரகண்ட் அரசுக்கு உரிய அறிவுரை வழங்கி, விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர், பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நானே பத்ரி நாராயணன்”

p17new

நானே பத்ரி நாராயணன்”

(பெரியவாளின் விளையாட்டுப் புதிர்)


கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு தடவை இலந்தை மரத்தடியில் அமர்ந்து,தனது 

பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருந்தார்.
ஒவ்வொருவராக தன் குறை,நிறைகளை அவரிடம்
முறையிட்டு ஆறுதலடைந்தனர்.வரிசையின்
கடைசியில் ஒரு மூதாட்டி…பழுத்த பழம் என்பார்களே
அந்த மாதிரி, மகானின் தரிசனத்துக்கு வந்து
கொண்டு இருந்தார்.

அருகில் வந்ததும் வணங்கி எழுந்தார்.

“உனக்கென்ன வேண்டும் கேள்?”
அந்த  மாது பரமபக்தை என்பதை மகான் அறிவார்…

“இனிமேல் எனக்கென்ன தேவை பிரபு?
சதா சர்வகாலமும் உங்களை ஆராதித்துக்
கொண்டு இருந்தாலே போதும்.

“அதுதான் இருக்கே…குறையில்லாம செய்றியே?
இப்போது உனக்கு ஏதாவது ஆசை இருக்கா….
இருந்தா சொல்….?”

பெரியவா இப்படிக் கேட்டதும் மூதாட்டி மௌனம்
சாதித்தார் சில வினாடிகள்.

“சொல்…பரவாயில்லை..என்னால் முடிந்த அளவுக்கு
உதவி பண்றேன்..”

மூதாட்டியின் மௌனம் கலைந்தது.

“எனக்கு ஒரு ஆசை…இந்த உயிர் போறதுக்குள்ளே
ஒரு தடவை பத்ரி நாராயணனைப் பார்க்கணும்”
என்றார் தயங்கித் தயங்கி, மெதுவான குரலில்…

பெரியவா பலமாக சிரித்தார்.

மூதாட்டிக்குப் புரியவில்லை.

“நீதான் எதிரிலேயே பார்த்துண்டு இருக்கிறாயே”

எதிரில் மகான் அல்லவா இருக்கிறார்!

“சந்தேகமா…மேலே பாரு” என்றார்.

பின்னால் இருக்கும் மரம் இலந்தை மரமாக இருந்தது.

“இலந்தை மரத்திற்கு “பத்ரி” மரம் என்று பெயர்…
அதன்கீழ் அமர்ந்திருப்பவர் பத்ரி நாராயணன் தானே?”

மூதாட்டிக்கு அது புரிய நெடு நேரமாயிற்று.

புர்ஹான் வானி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி: ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் போலீசாரால் கொல்லப்பட்ட புர்ஹான் வானி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதி ஆவான் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் காஷ்மீரில் நடைபெறும் வன்முறை பற்றிய விவாதத்திற்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

காஷ்மீர் விவகாரத்தை பொறுத்த வரை கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏற்க்கனவே ஒரு ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார் நானும் காஷ்மீர் முதல்வர் மெஹபூபாவிடமும், ராணுவத் தளபதியுடனும் பேசியுள்ளேன். கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பொழுது குறைந்த அளவு பலப்பிரயோகம் செய்யுமாறு அவரிடம் அறிவுறுத்தியுள்ளேன். அதே போல் அபாயம் இல்லாத ஆயுதங்களை பயன்படுத்துமாறும் கூறியுள்ளேன்.

இதுவரை 566 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 1700 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 200 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதுகாப்பு படை வீரர்கள் 1740 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். பொதுமக்களில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்து போன பாதுகாப்பபு படைவீரர்களின் மரணத்தை சிலர் கொண்டாடுகிகின்றனர். இது ஒரு மனிதத் தன்மையற்ற செயல். புர்ஹான் வாணி உள்ளிட்ட மூன்று தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீர் போலீசாரால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள். அவர்களில் புர்ஹான் வானி தெற்கு காஷ்மீரின் ஹிஸ்புல் அமைப்பின் கமாண்டர். இளைஞர்கள் மத்தியில் மதப்பிரச்சாரம் செய்து வந்தவன். அவன் மீது கொலை உள்ளிட்ட 15 எப்.ஐ.,ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நானும் மெஹபூபாவும் தீவிரவாதம் தொடர்பாக பொதுமக்களுடன் எவ்வாறு பேச்சு வார்தையை தொடங்குவது என்பது பற்றி ஆலோசித்துள்ளோம். பாகிஸ்தானை பொறுத்த வரை மதத்தின் அடிப்படையில் உருவான ஒரு நாடு. தங்கள் நாட்டையே அதனால் பாதுகாக்க முடியவில்லை. அவர்கள் இந்திய முஸ்லீம்களை பற்றி பேசலாமா? இந்திய மக்களின் பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

சோலார் பேனல் மோசடி: பழனி மாணிக்கத்துக்கு தொடர்பு என சரிதா நாயர் குற்றச்சாட்டு

கோவை:

கேரளாவையே உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மீது சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை நீதிமன்றம் வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பழனிமாணிக்கத்துக்கு எதிரான ஆதாரத்தை சோலார் கமிஷனிடம் ஒப்படைத்துள்ளேன். முறைகேட்டில் சிக்கிய அரசியல்வாதிகள் 9 பேருக்கு எதிராக ஆதாரம் உள்ளது.

சோலார் பேனல் முறைகேட்டு வழக்கில் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி முக்கியக் குற்றவாளி என்று கூறினார்.

மகளுடன் கோயிலுக்கு வந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினி!

அமெரிக்க கோவிலில், மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று ரஜினிகாந்த் சாமி கும்பிட்டார். இதன் மூலம் அவரை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், ‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்ததும், ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருடைய உடல்நிலை பற்றி வதந்திகள் பரவின.

சென்னையில் நடந்த ‘கபாலி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ளாததால், கடந்த ஒரு மாத காலமாக அவரை பற்றிய வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன.

இந்த வதந்திகளை அவருடைய குடும்பத்தினர் மறுத்தார்கள். ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும், அவர் அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறினார்கள். இந்நிலையில், ரஜினிகாந்த் அமெரிக்காவில் உள்ள ஒரு கோவிலில் மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று சாமி கும்பிட்டு இருக்கிறார். அமெரிக்காவில் வெர்ஜினியா என்ற இடத்தில், ரஜினிகாந்தின் குரு சச்சிதானந்த சாமிகள் கோவில் உள்ளது. அங்கு ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுடன் சென்று சாமி கும்பிட்ட படத்தை ஐஸ்வர்யா வெளியிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் ரஜினிகாந்த் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. என்றாலும், ரஜினிகாந்த் எப்போது சென்னை திரும்புவார்? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

வலிமையான தலைமை என மோடியை புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு நேற்று டெல்லியில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் இந்தி நடிகர் சல்மான் கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவின் போது வீரர், வீராங்கணைகளை உற்சாகப்படுத்தும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலொன்றையும் பாடினார்.

இதனை அடுத்து, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான்  ”ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு” என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் தடுமாறி வருவதை சுட்டிக்காட்டியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், பிரதமர் மோடியை தீர்க்கமான தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் என்று அவரது பெயரை குறிப்பிடாமல் பாராட்டியுள்ளார்.

 

ஏ.ஆர்.ரஹ்மானின் முகநூல் பதிவின் தமிழாக்கம்:

”ரியோ ஒலிம்பிக் 2016இல் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருக்கு”

”உலகின் சக்திவாய்ந்த நாடுகளெல்லாம் தங்களது நாட்டை வழிநடத்த சிறந்த தலைவர் இல்லாமல் தடுமாறி வருவதுடன், தங்களது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற சூழலில் சிக்கியுள்ள நிலையில், ஒன்றுபட்டு, தனது சக்தியை வெளிப்படுத்த இந்தியாவுக்கு இதுவே உகந்த தருணமாகும். நாட்டை வழிநடத்த தீர்க்கமான பார்வை கொண்ட தலைவர் அமைந்துள்ளது இந்தியாவிற்கு கிடைத்த நற்பேறு. 60 விழுக்காடு இளைஞர்களை கொண்ட இளமையான நாடாக இந்தியா திகழும் நிலையில், பாராட்டத்தக்க அம்சமாக இளைஞர்கள் விளையாட்டை தங்களது வாழ்க்கையாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். தேசிய விளையாட்டு வீரர்கள் தேர்வு திட்டம் போன்ற முன்னெடுப்புகள் சரியான திசையை நோக்கி பயணித்து வருகின்றன.

நினைவில் கொள்ளுங்கள், உங்களது மனதையும், ஆற்றலையும் ஒருமுகப்படுத்தி செயல்பட்டால் உலகில் எதுவுமே சாத்தியமற்றது அல்ல. உறுதியாக, விடாப்படியாக முயற்சி செய்தலே முக்கியமானதாகும். சிறிய விடயங்களுக்காக உங்களது மனது பலவீனப்பட்டு போகும்படி விட்டுவிட வேண்டாம். சில சோதனைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம். அவை உங்களது உள்ளுக்குள் நிகழக்கூடியது. உங்களின் அகவயமாக நிகழக்கூடிய இந்த போராட்டமானது, தெய்வீக வெளிப்பாடு போன்று தன்னை புறநிலையில் வெளிப்படுத்திக் கொள்ளும்.

இந்தியர்கள் ஆஸ்கர் விருதையோ, கிராமி விருதையோ பெறுவது சாத்தியமற்றது என ஒரு காலத்தில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், உள்ளார்ந்த ஈடுபாடு மற்றும் மிகச்சிறந்த தரத்தினால் இது சாத்தியமாகியுள்ளதை காலம் நிருபித்துள்ளது. நமது திறமைகள் மூலம் நம்மைநாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் நேரம் இது. இப்போது நம்மை எதுவும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

கடவுளின் அருளாளும், இந்திய மக்களின் வேண்டுதல்கள் மற்றும் அன்பாலும், எப்படி சாதிப்பது என்று உலகிற்கு நாம் காட்டுவோம்.”

 

உத்தர்காண்டில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: தருண் விஜய் கண்டனம்

உத்தர்காண்டில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சி என பாஜக எம்.பி தருண் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  சாதுக்கள் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது.

ஆனால், திருவள்ளுவர் சிலையானது தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது.

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலைக்கு நேர்ந்த அவலம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தருண் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த செயல் சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் முயற்சி என்றும் திருவள்ளூவருக்கு மிகப் பெரிய அவமானம் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது என்று தருண் விஜய் கூறினார்.

சிலையை அகற்ற முயற்சித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஹரித்வார் மாவட்ட ஆட்சித் தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

சிலை மீண்டும் உரிய மரியாதையுடன் அதே இடத்தில் நிறுவப்பட உத்தரகாண்ட் ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளருக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளதாகவும் தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

ஈரடியால் உலகளந்த திருவள்ளுவருக்கு அவமரியாதை; மன்னிக்கக் கூடியது அல்ல!: வைகோ 

 

மனித குலத்துக்கு வழிகாட்டும் ஒளிச்சுடர் உலகப் பொதுமறை திருக்குறளைத் தந்த செந்நாபோதார் திருவள்ளுவர் சிலை நெகிழி தாளால் சுற்றப்பட்டு, கங்கைக் கரையில் கேட்பாரற்றுக் கிடக்கும் புகைப்படத்தை நாளேடுகளில் பார்த்து தமிழினம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில், கங்கைக் கரை ஹரித்துவார் டாம்கோதி பகுதியில் திருவள்ளுவர் சிலையை நிறுவிட பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். இதற்காக 12 அடி உயர திருவள்ளுவர் சிலை தமிழகத்திலிருந்து தயாரித்து கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், திருவள்ளுவர் சிலை அங்கு நிறுவப்படுவதை எதிர்த்து மதவெறியர்கள் கூக்குரல் எழுப்பினர். “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று மனிதருள் பிறப்பால் வேற்றுமை இல்லை என்று பாடிய திருவள்ளுவருக்கு சாதி சாயம் பூசும் அவலமும் நடந்தது. திருவள்ளுவர் சிலையை ஹரித்துவாரில் உள்ள சங்கராச்சாரியார் சவுக் என்ற பகுதியில் நிறுவலாம் என்று உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்தது. ஆனால். அங்கு வள்ளுவர் சிலையை அமைக்கக்கூடாது என்று இந்துத்துவா கூட்டம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

கங்கைக் கரையில் கம்பீரமாக நிற்கப் போகிறது என்று தமிழ் நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை, ஹரித்துவார் பூங்காவில் ஒரு மூலையில் கிடக்கிறது. ஈறடியால் உலகளந்த திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை மன்னிக்கக் கூடியது அல்ல. தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு. திருவள்ளுவர் சிலையை உரிய முறையில் கங்கைக் கரையில் நிறுவிட உத்தரகாண்ட் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தமிழக அரசும் தலையிட்டு திருவள்ளுவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
19.07.2016

நேர்மையான எஸ்பி அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்டாரா?- குமுறலில் விருதுநகர் போலீசார்

விருது நகர் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் பட்டியலை எடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த அடிப்படையில் விருது நகர் மாவட்டத்தில் தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் நேர்மையாக தனது பணியை செய்த எஸ்பி அரவிந்தன் முதல் எஸ்.ஐ வரை 12 காவல் அதிகாரிகள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.
ஏடிஎஸ்பி அருண்கோபாலன் உள்ளிட்ட 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐக்கள், பணியிடமாற்றம் என்ற பெயரில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விருது நகரில் நேர்மையாக செயல்பட்டு பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் இடையே நன்மதிப்பை பெற்ற இளம் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.பி அரவிந்தன் கட்டாயவிடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
யார் இந்த அரவிந்தன் ஐபிஎஸ்….

அரவிந்தன் IPS, இந்த பெயரை தெரியாதவர்களே திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்க முடியாது என்னுமளவிற்கு மிகச் சிறந்த அதிகாரியாக செயல்பட்டவர். முதல் தேர்விலேயே IPS தேர்வில் வெற்றி பெற்று தென்காசிக்கு பணிக்காக வந்தார். ஒரு அதிகாரியாக இல்லாமல் இங்குள்ள மனிதர்களில் ஒருவராக அனைவரையும் நேசித்த நேர்மை , இவரது கொள்கை அதனால் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தென்காசியில் முதன் முதலாக இவர் பொறுப்பேற்ற புதிதில் குற்றாலத்தின் நிலையை பார்த்து குற்றாலம் சுத்தமாக இருக்க மிகுந்த சிரமம் எடுத்து செயல்பட்டார். உயர் நீதி மன்ற கிளை உத்தரவை செயல்படுத்திட இரவு பகலாய் குற்றாலத்தில் நேரடி பணி செய்தார் ஏதாவது சம்பவத்தை கேள்விப்பட்டால் யாரிடமாவது சொல்லி போய் பாருங்கள் என்று சொல்வதைவிட இதோ வந்து கொண்டிருக்கிறேன் என்ற பதிலைத்தான் அதிகமாக இவரிடமிருந்து வருமாம்.
பள்ளி மாணவர்களை அதிகம் நேசித்த இவர் பள்ளி மாணவர்கள் , மாணவிகள் பலரை நல்வழிப்படுத்தி அவர்களை IAS ,IPS தேர்வை எழுத ஊக்கப்படுத்த வேண்டும் என அடிக்கடி பள்ளிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் உரையாடுவாராம். குடிமைப்பணித் தேர்வுகள் எப்படி எழுதுவது? படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, விளையாட்டும் நமக்கு தேவையான மிக முக்கியமான ஒன்று, என்னென்ன படிப்புகளுக்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது? போன்ற தலைப்புகள், கிராமத்து மாணவர்களின் கேள்விகள் என அனைத்துக்கும் சலிக்காமல் மாணவர்களுக்குப் புரியும்படி நகைச்சுவையுடன் எடுத்துரைப்பது இவருக்கு மட்டும் கைவந்த கலை என பள்ளியின் ஆசிரியர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.
எளிமையானவராக இருந்தாலும் தப்பு செய்பவர்களுக்கு இவர் தயவு காட்டியதில்லை. நல்ல மனிதர் என்று அறிந்து எனது பள்ளி ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக, ஒருநாள் அவரை அழைக்கச் சென்றிருந்தேன்.உடனே மறுக்காமல் சம்மதித்து விட்டார். அதோடு மட்டும் அல்லாமல் உங்கள் பள்ளிக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் எந்தப் பள்ளியாக இருந்தாலும் பரவாயில்லை மாணவர்களிடையே உரையாடுவதாக இருந்தால் போதும்,சிறப்பு விருந்தினராக எல்லாம் தேவையில்லை என்றும் கூறிவிட்டார்.
அதன் பிறகு, தென்காசி அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் சென்று மாணவ,மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

காவல்துறையில் இருப்பவர்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைதால் கூட, தலையை எங்கே சாய்க்கலாம் என்றுதான் தோன்றும்.ஆனால் இவர் தனது ஓய்வு நேரத்தையே மாணவர்களுக்காக ஒதுக்கிக் கொண்டார்.மிகவும் சிறிய வயதில் ஐ.பி.எஸ் தேர்வெழுதி முதல் முறையே தேர்வாகி கரூரில் பணியில் அமர்ந்து, பின் தென்காசிக்கு வந்து எங்கள் ஊர் மக்கள் மனதில் இடம் பிடித்தவரும் இவரே என பத்திரிக்கையாளர் அருள்மொழி செல்லையாவின் பதிவு செய்துள்ளார்.

இப்படி எல்லோர் மனதிலும் இடம் பிடித்த அரவிந்தன் ஏனோ மாவட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனதில் மட்டும் இடம் பிடிக்காமல் போய்விட்டார். காரணம் அவர் சராசரி ஐபிஎஸ் அதிகாரியாக இல்லாமல் இருந்தது தான். சட்ட மன்ற தேர்தலில் விருது நகர் மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடக்கவேண்டும் என மிகுந்த சிரத்தை எடுத்து செயல்பட்டார் அரவிந்தன். விளைவு தேர்தல் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாக போனது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தொகுதியில் மட்டுமே 27 வழக்குகள் பதிவு செய்தார். விடுவாரா அமைச்சர் நேரம் பார்த்துகொண்டிருந்தார்.

மீண்டும் ஆட்சியமைந்தவுடன் முதலில் விருதுநகரில் களையெடுப்பு துவங்கியது. அதன் விளைவுதான் கட்டாயவிடுப்பில் செல்ல அரவிந்தன் நிர்பந்திக்கப்பட்டது.
இரண்டுவார விடுப்பு முடிந்தவுடன் மீண்டும் பணிக்கு வந்த எஸ்.பி. அரவிந்தனை அவரது அலுவலகத்துக்குள் நுழைந்த அமைச்சர் வெளியே அழைத்து வந்து நீங்கள் இருக்க தேவை இல்லை என திருப்பி அனுப்பியதாகவும் மீண்டும் எஸ்.பி விடுப்பில் சென்றதாகவும் அங்குள்ள போலீசார் குமுறுகின்றனர்.

நேர்மையாக கடமையை செய்த அதிகாரிக்கு இதுதான் பரிசு என்றால் அப்புறம் எங்கே நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்கள் மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர். சட்டம் ஒழுங்கு எல்லாம் வெளியில் தான் , கட்சிக்கு அப்பாற்பட்டுத்தான் எல்லாம் என அரசியல் கட்சிகள் பார்ப்பதால் தான் அதிகாரிகள் பந்தாடப்படுகின்றனர்.

நேர்மையாக தனது ஐபிஎஸ் வாழ்க்கையை துவக்கி ஏழை மாணவர்களை நேசித்த ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனுக்கு கசப்பான அனுபவமே. ஆனால் அவர் போல் பல அதிகாரிகள் உள்ளனர் எனபதை மனதில் கொண்டு அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கணும் என்று அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள், தமிழக மக்களும் தான்.

செய்தியாளர்

கபாலி படத்திற்கு தடை விதிக்க மறுப்பு

ரஜினி நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள கபாலி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் இன்று(ஜூலை 19ம் தேதி) வழக்கு தொடர்ந்தார். கபாலி படத்தின் டிக்கெட் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பலமடங்கு அதிகமாக சட்டத்திற்கு முன்விரோதமாக விற்கப்படுவதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனு செய்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.