Home Blog Page 5757

திருவண்ணாமலையில் மண்டியிட்டு புகார் மனு அளித்த இந்து முன்னணி

திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கும் திட்டத்தில் மரங்களை வெட்டாமல் சாலை மற்றும் நடைபாதை அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் மற்றும் நகர வியாபார பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் முட்டி போட்டு அவர்களிடம் மனு அளித்தனர். இதில் இந்து முன்னனியினர் மண்டியிட்டு புகார் மனு அளித்தனர்.

ஓடும் ரயிலில் பயணிகள் மீது கோடரியால் தாக்குதல்: இளைஞர் சுட்டுக் கொலை

பெர்லின்:

ஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.15 மணி அளவில் உவர்ஸ்பர்க் நகரை நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

ஓச்ஸென்பர்ட் நிலையத்தை அந்த ரயில் நெருங்கியபோது சக பயணிகளை உள்ளே இருந்த ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டினான். இந்த தாக்குதலில் மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஓச்ஸென்பர்ட் நிலையத்தில் ரயில் நின்றதும் கீழே இறங்கி செல்ல முயன்றவனை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் ஓச்ஸென்பர்ட் நகரில் வாழ்ந்து வந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

கிழக்கு ஜப்பானில் நிலநடுக்கம்

கிழக்கு ஜப்பானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டோக்கியோ நகரில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமாவளவனை கைது செய்ய வேண்டும் : எச்.ராஜா

சென்னை:
மதக் கலவரத்தை தூண்டும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று பாஜக.,வின் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராம்குமார் என்ற இளைஞர். இந்த கொலை தொடர்பாக தினமும் ஒவ்வொரு தகவலும் சர்ச்சைகளும் வருகின்றன.
சுவாதி கொலை வழக்கை காவல்துறை ஒருபக்கம் விசாரிக்க, சில அரசியல் கட்சியின் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். சுவாதி கொலை வழக்கின் திடீர் விசாரணை அதிகாரிகள் ஆகிவிட்டார்கள் பாஜகவின் எச்.ராஜாவும், விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவனும்.

இருவரும் மாறி மாறி தங்கள் யூகங்களின் அடிப்படையில் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர். சுவாதி முஸ்லீம் ஒருவரால் தான் கொல்லப்பட்டார் என சிலர் முதலில் கூறினார்கள்.

சுவாதி முஸ்லீமாக மாற இருந்தார், அவர் ரமலான் நோன்பு இருந்தார், இது ஆர்.எஸ்.எஸ். தரப்பினருக்கும் தெரியும் என கூறி தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தினார் திருமாவளவன். திருமாவளவனின் இந்த கருத்துக்கு கடுமையான கண்டணங்களை தெரிவித்த எச்.ராஜா அவர் மீது வழக்கு தொடரப்படும் என கூறினார்.

இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு பற்றி தொடர்ந்து பல்வேறு தகவல்களைத் கூறி வரும் திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். சுவாதி முஸ்லிமாக மதம் மாற இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். அவருக்கு இந்த தகவலை சொன்னது யார்? சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறது.

சுவாதி கொலை வழக்கை திசை திருப்புவதற்காக திருமாவளவனை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு?. எனவே இந்த வழக்கில் பல உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.

தட்டிக் கேட்க யாருமில்லையா?

தமிழகத்தில் செய்தியாளர்களுக்கு நிகழும் மனித உரிமை மீறல்களை துணிந்து தட்டிக் கேட்க யாருமில்லையா..

நமது செய்தியாளர்கள் பலர் அரசியல்வாதிகள் , சமூக விரோதிகள், அதிகாரிகள் போன்ற பலரால் அவப்போது கடுமையாக தாக்கப்படுவதை செய்திகளின் வாயிலாக பார்க்கிறோம் , கேட்கிறோம்..தாக்கப்பட்ட செய்தியாளர்கள் எங்கள் சங்க உறுப்பினர் இல்லை.ஆதலால் எங்கள் ஆதரவு இல்லை….அவன் ஏதாவது செய்திருப்பான் யா…நாம எதுக்கு மூக்கை நுழைக்கனும்…சங்கத்துக்கு ஏதும் செய்வதில்லை அந்த செய்தியாளர் ,..கண்டுகாதையா…இதுபோன்ற பல காரணங்கள் கூறி செய்தியாளருக்கு ஆதரவாய் உதவ முன் வருவதில்லை..தனக்கு, தன் குடும்பத்திற்கு வருவாய் தேடவே பல செய்தியாளர்கள் போராடுவதை கண்கூடாக பார்க்கிறோம்..அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறார்கள் பல செய்தியாளர்கள்..

இங்கு நம்முடன் வாழும் சக செய்தியாளருக்கு கண்முன்னே நிகழும் மனித உரிமை மீறல்களை தட்டிக் கேட்க நம்மால் முடியாததை கண்டு வேதனை தான் மிஞ்சுகிறது…என்றைக்கு ஒற்றுமையோடு ஒன்று கூடி போராடி நம் உரிமைகளை நிலைநாட்ட நம்மால் முடிகிறதோ , அன்றுதான் உண்மையான பத்திரிக்கை சுதந்திரம் கிடைத்ததாக நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம்…..செல்வந்தர்கள் செய்தியாளர்கள் பத்திரிக்கை சங்க பதவிகளில் அமர்ந்து தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட அக்ரெடேஷன் அட்டை வைத்திருக்கும் நிலை மாற வேண்டும்…..

செய்தி:  விஸ்வரூபம்

திருப்பூர் டாக்டர் சரவணன் மரணம் தற்கொலை அல்ல: பிரேத பரிசோதனையில் தகவல்

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேற்படிப்பு படிக்க சென்ற திருப்பூர் டாக்டர் சரவணன் மரணம் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

திருப்பூர் டாக்டர் சரவணன் மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்காக சென்ற போது, கடந்த 10ம் தேதி சந்தேகத்திற்கு இடமான முறையில் தனது அறையில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடற்கூறு ஆய்வறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அதில் சரவணனின் உடலில் உள்காயமோ, வெளிக்காயமோ இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் அவரது மரணம் தற்கொலை இல்லை எனவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

“பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும் ஒரு ஆச்சர்யமும்”

12957391_1335113029837652_1819172567_n
“அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்”

(தன்னை முன்னிலைப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக
பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும் ஒரு ஆச்சர்யமும்)

சொன்னவர்-ஸ்ரீமடம் அணுக்கத் தொண்டர்.
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(சற்று நீண்ட கட்டுரை ஆனால் ஒவ்வொரு
பாராவும் இன்பம்,பழசு சின்னது இது விரிவாக
சற்று சுருக்கப்பட்டது)

 
ஒருநாள் மகான் காஞ்சியில் முகாமிட்டு இருந்தபோது
அவரை தரிசிக்க ஐந்தாறு வைணவர்கள் வந்தார்கள்.
பளிச்சென்று நெற்றியில் திருமண் வைணவர்களுக்கே
உரிய கரை போட்ட வேட்டி இடுப்பில்.துண்டு மார்பில்.

வந்தவர்களில் ஒருவர் மட்டும் சற்று வித்தியாசமாகக்
காணப்பட்டார்.மற்றவர்கள் யாவரும் ஸ்ரீபெரியவாளுக்கு
‘நமஸ்காரம்’செய்தபோது இந்த ஒருவர் மட்டும்
அசையாத சிலையாக, வெறித்த பார்வையுடன் அங்கே
நின்று கொண்டு இருந்தார்.முகத்தில் எந்த விதமான
உணர்ச்சியோ,சலனமோ இல்லை. அங்கே
வந்திருந்தவர்களில் ஒருவர் சொன்னார்.

“இவர் என்னோட மாமா. இருந்தாற்போலிருந்து
இவருக்கு ஏதுமே ஞாபகமில்லாமல் போய்விட்டது.
இரவு,பகல் தெரியல்லே.எல்லா டாக்டர் கிட்டேயும்
காண்பிச்சாச்சு.அவளாலே ஏதும் கண்டுபிடிக்கமுடியல்லே
அவர்களே குழம்பிப்போய் தூக்க மாத்திரையை கொடுத்து
அனுப்பிட்டாங்க. பல திவ்ய தேசங்களுக்கும் அழைச்சுட்டு
போய் வந்துவிட்டோம். குணசீலம்.சோளிங்கர் ஒரு ஊரை

பாக்கி விடல்லே.ஆனால் பலன் ஏதும் இல்லை.அதனால்
பெரியவாகிட்டே வந்திருக்கோம் நீங்கதான் அருள்
புரியணும்.

இவர்கள் கவலையோடு சொன்னதை எல்லாம் மிகவும்
பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் மகான்.
பின்னர் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணக்கிரமத்தில்
சொல்லப்படும் ஒரு சுலோகத்தை 108 முறை சொல்லச்
சொல்லி அவர்களிடம் கட்டளையிட்டார்கள்.

“அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்”

இதைத்தான் அவர்கள் 108 முறை ஜபித்து உச்சரிக்கச்
சொன்னார்கள்.அவர்கள் சொல்லி ஜபித்து முடித்ததும்

மனம் பேதலித்த அப்பெரியவருக்கு துளசி தீர்த்தம்
கொடுக்கச் சொன்னார்கள்.

அதற்கு அடுத்து ஸ்ரீபெரியவாளெனும் அந்த சாத்வீக
தெய்வத்தின் கட்டளைதான் அனைவரையும்
வியக்க வைத்தது. இதை அங்கிருந்தோர் யாரும்
எதிர்பார்க்கவில்லை.

ஸ்ரீமடத்திலிருந்து ஒரு முரட்டு ஆசாமியை ஸ்ரீபெரியவா
அங்கே அழைத்து வரச்சொன்னார்.அங்கே வந்த வஸ்தாத்
போன்ற மனிதரிடம்,கிழவர் தலையில் பலமாகக்
குட்டச் சொன்னார்.

அந்த மனிதரும் அப்படியே செய்தார். அடுத்த வினாடி
அங்கே ஒரு ஆச்சர்யம் எல்லோரும் வியக்கத்தக்க
வகையில் நிகழ்ந்தது. அந்த முதியவர் ஏதோ
தூக்கத்தில் இருந்து விழித்தவர் போல எழுந்து நின்றார்.

 
“ஏண்டா ரகு, நாம இங்கே எப்போ வந்தோம்?
இது ஏதோ மடம் மாதிரி இருக்கே? இது எந்த ஊரு?”

என்று சரமாரியாகக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.
இதன் மூலம் அவர் பூர்ணமாக சுய நினைவுக்கு
வந்துவிட்டது தெரிந்தது. கூட இருந்தவர்கள்
நடந்தவற்றை மெதுவாக அதே சமயத்தில்
விளக்கமாகவும் சொன்னார்கள். இதை கேட்ட அவர்
பயபக்தியுடன் ஸ்ரீபெரியவாளை வணங்கி எழுந்தார்.
அவருடன் வந்தவர்களுக்கெல்லாம் எல்லையில்லாத
மகிழ்ச்சி. எத்தனையோ நாட்களாகப் பட்ட கஷ்டமெல்லாம்
சற்று நேரத்தில் மாயமாய் போனது போல் தீர்ந்து விட்டதே!
அந்த மாயத்தை செய்த மாதவன் எதிரே நிற்கும்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவாளோ?

கண் எதிரில் நடந்த உண்மைதானே அது?

“எல்லாம் பெரியவாளோட அனுக்கிரகம்”
என்னும் நன்றிப்பெருக்கோடு மருமான் சொல்லி
ஸ்ரீபெரியவாளை வணங்கி எழுந்தார்.

பெரியவா,- “எல்லாம் அந்த பெருமாள் அனுக்கிரகம்னு
சொல்லுங்கோ. அத்தனை திவ்யதேசம் போய் பெருமாளை
தரிசனம் செஞ்சதோட பலன்தான் இப்போ கிடைச்சிருக்கு…
நீங்க எல்லாமா சேர்ந்து அச்சுதன்,ஆனந்தன்,கோவிந்தனை

வேண்டி இங்கே ஜபம் செஞ்சதிலே கைமேல் பலன்
கிடைச்சிருக்கு” என்று அவர்களிடம் சர்வ சாதாரணமாகச்
சொன்ன மகான் தன் மேன்மையை துளியேனும்
வெளிக்காட்டாமல் மிக சாதரணமாய் அது நடந்தது போன்ற
ஒரு உணர்வை அவர்களுக்கு உண்டாக்கியதோடு
விட்டுவிடாமல்,அதே சமயம் அவர்கள் சார்ந்த வைணவ
சம்பிரதாயப்படி பெருமாளை வேண்டியதன் பலனாக
மட்டும் அந்த அதிசயம் நடந்ததாக,தன்னை
முன்னிலைப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்ததை
அனைவரும் புரிந்து கொண்டனர்.

ஸ்ரீ பெரியவா பிரசாதமாக தந்த பழங்களையும்
துளசியையும் பெற்றுக்கொண்டு அவர்கள் ஆனந்தக்
கண்ணீரோடு அகன்றனர். ஏதும் அறியாதது போல் இந்த
அத்வைத சந்யாசிரூப ஈஸ்வரர் அங்கே நின்று கொண்டு
இருந்தார்.

“பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”

10406745_859208287442471_99817598003990377_n
பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”

(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக)
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனது
காரில் மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரது
முகத்தில் வேதனை.அது அவர் வளர்க்கும்
நாயின் மேல் கொண்ட கவலையால் ஏற்பட்டது.

சென்ற ஒரு வார காலமாக அவரது நாய் உணவு
உட்கொள்ளவில்லை.குரைக்கவும் இல்லை.
என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்ள
முடியாமல் எஜமானர் மிருக வைத்தியரிடம்
கொண்டு சென்றார்.வைத்தியருக்கும் அந்த
நாயின் போக்கு புதிராக இருந்தது. அதனால்
அவரால் அதைக் குணப்படுத்த இயலவில்லை.
உண்ணாமல் மெலிந்து சக்தியில்லாமல்
கிடக்கும் அந்த வாயில்லா ஜீவனின் அவஸ்தையை
தாங்க இயலாத செல்வந்தருக்கு மனதில் ஒரே வழி
தான் தோன்றியது.காஞ்சி மகானே கதி என்று
இருக்கும் அந்த பக்தர், மனதில் நம்பிக்கையுடன் தன்
செல்ல நாயுடன் காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தார்.

நாயை தனது காரிலேயே விட்டுவிட்டு உள்ளே போய்,
மகானிடம் சென்று நின்றார்.இப்படி தனது நாய்க்கு

ஒரு குறை என்று நிவர்த்தி தேடி வந்தது மடத்தில்
அபூர்வமாக எல்லோருக்கும் தோன்றியது.என்றாலும்
அவரது கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்தபோது
அதற்கு ஸ்ரீகாஞ்சிமகான் அருள வேண்டும் என்று
மடத்து அன்பர் ஸ்ரீபாலுவுக்கு மனதில் தோன்றியது.
அவருக்கு வந்திருந்தவரின் மனவேதனை நன்கு
புரிந்தது. ஆகவே ஸ்ரீபெரியவாளிடம் இந்த
செல்வந்தரின் முறையீட்டைப் பற்றி ஸ்ரீ பாலு
மெதுவாக எடுத்துரைத்து, அதற்குப் பிறகு பெரியவா
அருள வேண்டுமென விண்ணப்பித்தார்.கருணை
கரைந்தது.
“நாயை இங்கே கொண்டுவந்து சிரமப்படுத்த
 வேண்டாம் நானே அங்கே வர்ரேன்” என்று அந்த
ஜீவகாருண்ய மகான், மெதுவாய் ஸ்ரீமடத்தின்

 வாசலில் கார் கார் நிற்குமிடத்திற்கு வந்து நின்றார்.

“கார் கதவை திறந்து விடுங்கோ” என்று மகான் சொல்ல,
கதவு திறக்கப்பட்டதும் நாய் எதற்கோ கட்டுப்பட்டது போல் மெதுவாக காரை விட்டு இறங்கி நின்றது.

“செருப்பு இருக்கா?” என்று பெரியவர் கேட்டுவிட்டு
“நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”என்றார். தொடர்ந்து ஒரு சிப்பந்தி அணிந்திருந்த செருப்பை கொண்டு வருகின்றார். அந்த நாயின் ஒரு பக்கம் வைக்கச் சொல்கிறார். மகான் உடனே பாலுவைப் பார்த்து ” நீ போய் ஒரு கிண்ணம் நிறைய பால் கொண்டு வா!” என்று கூற, அவரும் மடத்தினுள் சென்று பாலைக் கொண்டு வந்து வைக்கிறார்.

ஸ்ரீபெரியவா தனது கமலங்களை மூடி தியானிப்பது
போல் சில நிமிடங்கள் செய்கிறார். அதுவரை
சக்தியில்லாமல் சோர்வாகக் கிடந்த நாய் ‘மட மட’
வென்று அருகே வைத்த பால் அத்தனையும் குடித்து
விடுகிறது. அதற்கு புது தெம்பு உண்டானது போல்
‘வள்வள்’ என்று விடாமல் சில நிமிடங்கள்
குரைத்தபின் சமாதானமாகிறது.இதைப் பார்த்த
செல்வந்தருக்கும்,அங்கே இருந்த அனைவருக்கும்
இந்த மகிமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

ஆனால் பெரியவாளோ,” இதில் அதிசயக்க ஒன்றுமே இல்லை” என்னும் அர்த்தத்தோடு தனது மேன்மையை மறைக்கும் அடக்கத்தோடும் சொல்கிறார்,

“திருடங்க வந்தா மந்திர சக்தியாலே நாயை கட்டிப்
போட்டுடுவா.தோல் செருப்பாலே அதை போக்கிடலாம்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீமடத்தில் நுழைந்தார்.

இந்த ஒரு மாபெரும் தெய்வத்திடம் நாம் கொள்ளும் சரணாகதி, நமக்கெல்லாம் நல்கதி நல்கி சகல ஐஸ்வர்யங்களையும், சர்வ மங்களங்களையும் அள்ளி வழங்குமென்பது சாத்யமல்லவா?.

ஐந்து நட்சத்திர ஓட்டல் தயிர் சாதம் செய்வது எப்படி?

curd-rice

ஐந்து நட்சத்திர ஓட்டல் தயிர் சாதம் செய்வது எப்படி?
(ஒரு லிட்டர் பால் + ஒரு ஸ்பூன் தயிர்)
தயிர் சாதத்திற்கு தயிர் வேண்டும் என்று பல இல்லத்தரசிகள் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அது மிக மிகத் தவறான கருத்தாகும். நான் இங்கு தயிரில்லாமல் தயிர் சாதம் செய்யும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நல்ல நைஸ் பச்சரிசி அல்லது புழுங்கரிசி, அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி சீக்கிரம் வெந்து விடும். புழுங்கரிசி பழைய அரிசியாக இருந்தால் அதிகம் தண்ணீரும் நேரமும் வேண்டும். புதிய அரிசியாக இருந்தால் தண்ணீர் குறைவாகவும் சீக்கிரமாகவும் வெந்து விடும்.
அரை லிட்டர் அரிசியை எடுத்து ஊறவைத்து களைந்து குக்கரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். சாதாரணமாக சாப்பாடு செய்யும் அளவிற்கு மேல் ஒரு அரை டம்ளர் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும். சாதம் நன்றாகக் குழையவேண்டும். அதற்காக ஓரிரண்டு விசில் அதிகமாக விடவும். பிறகு குக்கரை இறக்கி ஆற விடவும்.
ஓரளவு ஆறினதும் குக்கர் வெய்ட்டை எடுத்து விட்டு மூடியைத் திறக்கவும்.
சாதத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டவும்.
இப்போது ஒரு பருப்பு மத்தினால் சாதத்தை நன்கு மசிக்கவும். கொஞ்சம் வெண்ணையையும் போட்டுக்கொள்ளலாம். சாதம் எவ்வளவு குழைவாக ஆகிறதோ அந்த அளவிற்கு மசிக்கவும்.
கடைசியாக மசிக்கு முன் தேவையான பொடி உப்பைச் சேர்த்து மசிக்கவும். இப்போது சாதம் கை பொறுக்கும் அளவில் சூடாக இருக்கவேண்டும். இப்போது நன்கு காய்ச்சி ஓரளவிற்கு ஆறின ஒரு லிட்டர் பாலை இந்த மசித்த சாதத்தில் ஊற்றி நன்கு கலக்கவும். இப்போது சாதம் நன்கு இளகி இருக்கவேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் இன்னும் கொஞ்சம் பாலை ஊற்றவும்.
ஆச்சா, இப்போது ஒரு ஸ்பூன் தயிரை இதனுள் ஊற்றி கலக்கவும். அப்படியே ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.

ஒரு மூன்று மணி நேரம் கழித்து பாத்தாரத்தைத் திறந்து வைக்கவும். ஒரு சிறு வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை எடுத்துக்கொண்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்த பிறகு ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு போட்டு பொரிய விடவும். சூடவே இரண்டு பச்சை மிளகாய் பொடியாக அரிந்து வாணலியில் போட்டு வதக்கவும். கூட சிறிது பெருங்காயம் சேர்த்து, எல்லாவற்றையும் சாதத்திற்குள் கொட்டவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், துருவிய கேரட், விதையில்லா திராக்ஷைப் பழம், மாதுளை முத்துகள் ஆகியவைகளையும் சாதத்தினுள் போட்டு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.
இப்போது ஐந்து நட்சத்திர ஓட்டல் தரத்தில் தயிர் சாதம் ரெடி. நல்ல ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிட்டால் என்னைப் போன்ற பெரிய ஆட்களாக இருந்தால் இரண்டு பேர் சாப்பிடதாராளமாகப் போதும். சாதாரண ஆட்களாக இருந்தால் ஆறு பேர் சாப்பிடலாம்

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”

13606606_1279763892041220_5583996890754994650_n

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்?
தெரியுமோ?”

(அந்த ரகசியம் பெரியவாளுக்கு
எப்படித் தெரிந்தது?.அது பரம ரகசியம்!)


சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்கு
வந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது.

“கல்யாணமாகி பத்து வருஷமாச்சு…

சந்ததி இல்லை..”

‘மேலே சொல்லு’ என்று கேட்கிறமாதிரி
பெரியவாள் பார்த்தார்கள்.

 
“ராமேஸ்வரத்தில் நாகப் பிரதிஷ்டை..
பண்ணினேன். சந்தானகோபால மந்திரம்
ஆயிரக்கணக்காகப் பண்ணினேன்…”

பெரியவாள் கண்களை மூடிக்கொண்டு
மௌனமாக இருந்தார்கள்.

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்?
தெரியுமோ?”

வந்தவருக்கு, சாட்டையால் அடித்தாற்போல்
இருந்தது. ‘இத்தனை பேர்கள் எதிரில், அதை
எப்படிச் சொல்வது?’

பெரியவாள் சொன்னார்கள்.

“உன் தாத்தா ரொம்ப முன்கோபி.சதா காலமும்
பாட்டியைத் திட்டுவார்.அடிப்பார். அவர்
அட்டகாசம் பொறுக்கலே. ஒருநாள் உன் பாட்டி
கொல்லைக் கிணத்திலே விழுந்து தற்கொலை
பண்ணிண்டுட்டா…”

“உன் குடும்பத்துக்கு ஸ்திரீ சாபம் இருக்கு. நல்ல
ஜோஸ்யர் – உபாசகர்களிடம் கேட்டு பரிஹாரம் செய்.
அப்புறம் புத்திரப் பிராப்தி உண்டாகும்…”

தம்பதிகள் நெகிழ்ந்தே போனார்கள்.

பாட்டி கிணற்றில் விழுந்தது அந்த பையனுக்கு
தெரியும். (அவன் மனைவிக்குக்கூட அதுவரை
சொன்னதில்லை!) அந்த ரகசியம் பெரியவாளுக்கு
எப்படித் தெரிந்தது?.

அது பரம ரகசியம்!