Home Blog Page 5758

பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?”

arjun

பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?”

(பெரியவரின் நுணுக்கமான பார்வை)

சொன்னவர்-டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி?ui=2&ik=b3e3dcecb5&view=fimg&th=155ee47ec4ee4b72&attid=0 - 2026

–நன்றி தென்றல் மாத இதழ் 2013

சிறு வயதிலிருந்தே அவரை தரிசித்திருக்கிறேன். தொல்லியலாளரான பின்னர் அவரைப் பார்க்கப் போனபோது,

“நீ என்ன வேலை பார்க்கிறாய்?” என்று கேட்டார்.

அப்போது கோவில்கள் திட்டப்பணியில் தொல்லியல் துறையில் செய்யும் பணிபற்றிச் சொன்னேன்.

“நீ மகாபலிபுரம் போயிருக்கிறாயா? அங்கு என்ன பார்த்தாய்?” என்று கேட்டார்.

நான் பஞ்சபாண்டவர் ரதம், மகிஷாசுரமர்த்தினி என்றெல்லாம் சொன்னேன்.

“அங்கு பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்து, “பல்லவா காலத்தில் ஏது பெரியவா கடிகாரம்?” என்று கேட்டேன்

. “இருக்கு. இருக்கு. நீ அடுத்தவாட்டி போறப்போ நல்லா பார்த்துட்டு வா!” என்றார்.

மறுமுறை போனபோது, “கடிகாரம் பார்த்தாயா?” என்று கேட்டார்.

“இல்லை பெரியவா, எனக்குத் தெரியவில்லை” என்றேன்.

“அர்ஜுனன் தவம் பார்த்தியா?” என்று கேட்டார்.

“பார்த்தேன்” என்றேன்.

“அந்த அர்ஜுனன் தபஸ் சிற்பத்திற்குக் கீழே நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கும். சின்ன விஷ்ணு கோயில் ஒன்று இருக்கும். பக்கத்தில் ரிஷி ஒருவர் உட்காந்து கொண்டிருப்பார். கீழே அமர்ந்து சிலர் வேதம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் ஆற்றில் நனைத்த துணியைப் பிழிந்து கொண்டிருப்பார். மற்றொருவர் நின்று கொண்டு மாத்யான்னிஹ வந்தனை செய்து கொண்டிருப்பார். (அதில் ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார்) பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் ‘பல்லவ கடிகாரம்‘ என்று சொன்னேன்” என்று பெரியவர் சொன்னார். பெரியவரின் நுணுக்கமான பார்வையைக் கண்டு எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. இப்படிப் பல அனுபவங்கள்.

டாக்டர் தியாக. சத்தியமூர்த்தி, தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்களுள் ஒருவர். தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தானம் என இந்தியாவின் பல பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இந்தியத் தொல்பொருள் கள ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மூலம் இவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கன. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், மகாபலிபுரம் போன்ற இடங்களில் இவர் செய்த ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆய்வு, பயிற்றல், கருத்தரங்கு எனப் பல வேலைகளில் இடையின்றி ஈடுபட்டிருப்பவரைத் தென்றலுக்காக அரவிந்த் சுவாமிநாதன் சந்தித்தார். அந்தச் சந்திப்பிலிருந்து…

காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

காமராஜர் பிறந்தநாளையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,உடன் எஸ்.ஆர்.பால்துரை பாவூர்சத்திரம் நகர தலைவர் ஏசு ஜெகன் ,சுந்தர் சிங் ,சிவசுப்பிரமணியன் ,சிவன் பாண்டி ,உட்பட பலர் கலந்து கொண்டனர்

தமாகா சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

    0

    காமராஜர் பிறந்தநாளையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தமாகா சார்பில் மாநில செயலாளர் என்.டி.எஸ் சார்லஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் தமாகா நிர்வாகிகள்

    காமராஜர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

      0

      காமராஜர் பிறந்தநாளையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் நாராயணப்பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,உடன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் ,மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம் ,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சேர்மபாண்டியன் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்

      மகா பெரியவாளின் பிரஸாத மகிமை!

      04fr_periyava8_jpg_1319562g

      “எங் குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க. எங்குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க… ஒண்ணரை வருஷமா பேசாம இருந்த கொழந்தை இப்ப பேசுது. இவளோட மழலை மொழியை இப்பதான் கேக்கறேன்.’’பூரித்த தம்பதிகள்.
      (மகா பெரியவாளின் பிரஸாத மகிமை}?ui=2&ik=b3e3dcecb5&view=fimg&th=155e8f9ebdf5be01&attid=0 - 2026
      கட்டுரையாளர்-பி.ஸ்வாமிநாதன்.
      1991-ஆம் வருடம்… மகா பெரியவா முதுமைக் காலத்தில் இருந்தார். பக்தர்களுக்கு அதிக தரிசனம் அப்போது இல்லை.
      அன்றைய தினம் விசேஷமாக மகா பெரியவா பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். ரொம்ப நாள் கழித்துப் பெரியவா தரிசனம்தரப் போகிறார் என்பதற்காக அன்றைய தினம் மகா பெரியவாளைத் தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்தனர். குழந்தைகளில் இருந்துமுதியோர் வரை எல்லா தரப்பினரும்ஸ்ரீமடத்தில்திரண்டிருந்தனர் .
      அன்றைய தினமும் அப்படித்தான். மகா பெரியவாளைத் தரிசிக்கக் கூடி இருந்த பக்தர்களுள் பலரது முகத்தில் ஏதோ எதிர்பார்ப்புகள்.வேண்டுதல்கள்.
      அவரவர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளைக் குருவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள்.அவற்றில் பழங்கள், உலர்வகை பழங்கள், முந்திரி, வில்வ மற்றும் துளசி மாலைகளும் அடங்கும்.
      பக்தர்களோடு பக்தராக அங்கே கலந்து ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்தனர், நாராயணன் – வைதேகி தம்பதியர். சென்னையில்வசிப்பவர்கள். நாராயணன் உத்தியோகஸ்தர்.
      நாராயணனது இடுப்பில் அவர்களது ஒண்ணரை வயது பெண் குழந்தை நிதர்சனா அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தது.விழிகளை உருட்டி உருட்டி அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள். புதுப் புது மனிதர்களே எங்கும் தென்பட்டதால், குழந்தையின்முகத்தில் ஒரு மிரட்சி தெரிந்தது.
      ‘மகா பெரியவா அருகே செல்ல வேண்டும்… அந்த மகானிடம் தங்களது பிரார்த்தனையைச் சொல்ல வேண்டும்’ என்பது இந்தத்தம்பதியர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், அன்றைக்குக் கூடி இருந்த பக்தர்கள் கூட்டத்தில் இவர்களால் ஒரு இஞ்ச் கூட முன்னேறிச்செல்ல முடியாத சூழ்நிலை.
      எனவே, தாங்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே மகா பெரியவாளின் திருமுக தரிசனத்தை எம்பி எம்பிப் பார்த்து கன்னத்தில் போட்டபடிஇருந்தனர்.
      ‘‘ஏங்க, கூட்டம் இவ்ளோ இருக்கே… நிதர்சனாவைப் பெரியவாகிட்ட கூட்டிண்டு போய் காட்ட முடியுமாங்க? அந்த தெய்வத்தின்அனுக்ரஹப் பார்வை இவ மேல் திரும்புமாங்க?’’ என்று வைதேகி, நாராயணனைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டாள்.
      ‘‘இன்னிக்கு அந்த மகானோட அனுக்ரஹம் கிடைக்கணும்னு நமக்கு விதி இருந்தா கிடைக்கும். பார்ப்போம், குருவோட பார்வை நம்ம மேலதிரும்பறதானு…’’ என்று மகா பெரியவாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி உருக்கத்துடன் சொன்னார் நாராயணன்.
      வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களது பிரார்த்தனையை மகானிடம் சென்று சொல்ல வேண்டும்… இதற்கு சாதகமாகஒரு அருளாசி அவரிடம் இருந்து பெற வேண்டும் என்று இருந்ததே தவிர, தரிசனத்துக்காகக்காத்திருக்கும்குழந்தைகளுக்கோ, பெரியோர்களுக்கோ ஒரு முன்னுரிமை கொடுத்து அவர்களை முதலில் அனுப்ப வேண்டும் என்று யாருக்கும் கவலை இல்லை.அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை.
      மகானின் சந்நிதி முன்னாலும், எல்லோரும் சுய நலத்துடன் காணப்பட்டார்கள்.
      மகா பெரியவா அருகே வரும் பக்தகோடிகளை அவரது சிஷ்யர்கள் கட்டுப்படுத்தி, அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல் மகாபெரியவா அங்கே திரண்டிருந்த பக்தகோடிகளைத் தன் அனுக்ரஹப் பார்வையால் ஒரு முறை அலசினார்.
      தன்னைத் தரிசிக்க ஆத்மார்த்தமாக வந்திருக்கும் நாராயணன் – வைதேகி தம்பதியருக்கு அன்றைய தினம் யோகம் அடித்தது.
      அடுத்த விநாடி ஒரு சிப்பந்தியை ஜாடை காட்டித் தன் அருகே அழைத்தார் மகா பெரியவா. குழந்தை நிதர்சனாவை இடுப்பில் சுமந்துகொண்டிருக்கும் நாராயணனை அடையாளம் காண்பித்து, ‘அவாளைக் கொஞ்சம் கிட்டக்கக் கூட்டிண்டு வா’ என்று சைகை செய்தார்மகான்.
      அந்த சிப்பந்தி கூட்டத்தை விலக்கிக் கொண்டு நாலடி பாய்ச்சலில் ஓடிப் போய் நாராயணன் – வைதேகி தம்பதியரிடம் விஷயத்தைச்சொல்ல… அவர்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்த வாயை மூட மறந்தார்கள். ‘‘என்னது… மகா பெரியவா எங்களைக் கூப்பிடறாரா?’’
      ‘‘ஆமா… வாங்கோ, சீக்கிரம். உங்களுக்குத்தான் உத்தரவு ஆகி இருக்கு.’’
      கணவன், மனைவி இருவரின் விழியோரங்களும் நெகிழ்வின் காரணமாக கண்ணீர் சொரிந்தன.
      குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே இரு கரங்களையும் கூப்பிய வண்ணம் மகா பெரியவாளை வணங்கியபடியே நடந்தார்நாராயணன்.
      ‘‘வழி விடுங்கோ… வழி விடுங்கோ…’’ என்று உரக்கக் கூவிக் கொண்டே சிப்பந்தி முன்னால் செல்ல… பின்னால் நாராயணனும்வைதேகியும் நடந்தனர்.
      மகா பெரியவா அருகே இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து நிறுத்திய சிப்பந்தி, பெரியவாளுக்குத் தகவல் தெரிவித்தார்.
      கலியுக தெய்வத்தின் பார்வை தம்பதியின் மேல் விழுந்தது. ‘‘இடுப்புல வெச்சிண்டு இருக்காளே… அது அவாளோட குழந்தையானு கேளு…’’ – தன் பக்கத்தில் இருந்த சிப்பந்திக்கு பெரியவா உத்தரவு!
      இந்தக் கேள்வி அப்படியே ஓவர் டூ தம்பதியர்.
      வந்த பிரார்த்தனையே அதுதானே!
      குழந்தையை முன்னிறுத்தித்தானே இன்றைக்கு மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கிறார்கள் இவர்கள்!
      ‘‘இவ எங்க கொழந்தைதான் பெரியவா…’’ – நாராயணன் நெக்குருகச் சொன்னார். அதை ஆமோதிப்பதுபோல் வைதேகியும் கண்கள்கலங்க… பெரியவாளையும் நிதர்சனாவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
      குழந்தையைப் பார்த்துப் பெரியவா புன்னகைத்தார்.
      குழந்தையும் பதிலுக்குப் புன்னகைத்தது.
      அதன்பின் மகா பெரியவா தனக்கு அருகில் இருந்த ஒரு மூங்கில் தட்டில் இருந்து சிறிது உலர் திராட்சைகளை அள்ளி, சிப்பந்தியிடம்கொடுத்தார். ‘‘அந்தக் கொழந்தைகிட்ட கொடு.’’
      திராட்சை இடம் மாறியது.
      தன் பிஞ்சுக் கைகளை நீட்டியபடி அத்தனை திராட்சைகளையும் இரண்டு உள்ளங்கைகளுக்குள் அடக்க முற்பட்டது குழந்தை. அம்மாவும்இதற்கு உதவினார். மகா பெரியவா திருச்சந்நிதியிலேயே அந்த திராட்சைகளில் இருந்து இரண்டை எடுத்துத் தன் வாயில் போட்டுக்கொண்டது குழந்தை.
      நாராயணனுக்கும் வைதேகிக்கும் கண்கள் குளமாயின என்று சொன்னால், அது சாதாரணம்.
      இருவரும் குழந்தையை வைத்துக் கொண்டு தேம்புகிறார்கள்.
      வந்த கார்யம் முடிந்து விட்டது. அந்தப் பரப்பிரம்மம் தன் வலக் கையை உயர்த்தி, இவர்களுக்கு விடை கொடுத்தது.
      இத்தனை பக்தகோடிகள் கூடி இருக்கிற இடத்தில், மிகவும் ஆத்மார்த்தமாக வந்திருக்கிற ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுத்துத் தன் அருகேவரவழைத்து அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து விட்டார் மகா பெரியவா.
      அடுத்து, மகானது பார்வை கூட்டத்தைத் துழாவியது.
      அடுத்த அதிர்ஷ்டம் யாருக்கோ?!
      காஞ்சி ஸ்ரீமடத்தை விட்டு வெளியே வந்தார்கள் நாராயணனும் வைதேகியும்! இன்னமும் இடுப்பிலேயே இருந்தாள் நிதர்சனா! இதுவரைஅநேகமாக ஏழெட்டு திராட்சையை சாப்பிட்டிருப்பாள். மகா பெரியவா பிரசாதம் இன்னமும் அவள் கையில் இருந்தது.
      காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சென்னைக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள் மூவரும்.
      மிதமான கூட்டத்தோடு பஸ் புறப்பட்டது. மூவர் அமரக் கூடிய ஒரு இருக்கையில் ஜன்னல் ஓரமாக நிதர்சனாவும், அவளுக்கு அருகில்நாராயணனும் வைதேகியும் அமர்ந்தார்கள்.
      பஸ் புறப்பட்டு ஐந்து நிமிடம் ஆகி இருக்கும்.
      திடீரென நாராயணனின் கன்னத்தையும், சற்று எம்பி வைதேகியின் கன்னத்தையும் தடவி, ‘‘அம்மாமா… அப்பாபா…’’ என்று குரல் உயர்த்திக்குழந்தை பேச ஆரம்பித்தபோது, தாயும் தகப்பனும் போட்ட விநோதக் கூச்சலில் ஒரு விநாடி அதிர்ந்து சடன் பிரேக் போட்டு பேருந்தைநிறுத்தினார் டிரைவர்.
      ‘என்ன பிரச்னையோ?’ என்று டிரைவர், தன் இருக்கையில் இருந்தே திரும்பிப் பார்க்க… கண்டக்டர் ஓடி வந்து, ‘‘என்னம்மா…’’ என்று கரிசனத்துடன் விசாரிக்க…
      கண்களில் உடைப்பெடுத்துப் பெருகும் நீருடன் எல்லோரையும் பார்த்து வைதேகி சொன்னாள்: ‘‘எங் குழந்தை பேச . ஆரம்பிச்சிடுச்சுங்கஎங்குழந்தை பேச ஆரம்பிச்சிடுச்சுங்க… ஒண்ணரை வருஷமா பேசாம இருந்த கொழந்தை இப்ப பேசுது. இவளோட மழலை மொழியை இப்பதான் கேக்கறேன்.’’
      பஸ்ஸில் இருந்த அத்தனை பேரும் எழுந்து வந்து குழந்தையின் கன்னம் தொட்டுக் குதூகலித்தனர்.
      ஆம்! நிதர்சனா பிறந்தது முதல் தற்போது வரை (ஒண்ணரை வயது) எந்த ஒரு வார்த்தையும் பேசியதில்லை.
      வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோயில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. ஆனால், அத்தனையும் தாண்டி, ஒரு கலியுகதெய்வம் தனக்கு பிக்ஷையாக வந்த திராட்சையைக் கொண்டே இவர்களின் பிரச்னையைத் தீர்த்து விட்டது.
      குடும்பத்துக்கே பிரசாதமாக வந்த திராட்சை குழந்தை நிதர்சனாவுக்கு மட்டுமில்லை. நாராயணன் அவர் புரிந்து வரும் உத்தியோகத்தில்அடுத்தடுத்து நல்ல மாற்றங்கள். பிரமோஷன், சம்பள உயர்வு என்று எல்லாம் கிடைத்தன.
      மகா பெரியவாளுக்கு சுமார் 97 வயது இருக்கும்போது நடந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று

      “ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?”-பெரியவா

      13177252_1079776085415638_5725058455813835410_n
      “ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?”-பெரியவா

      “பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!”-வேதபுரி

      சொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
      தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

       தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
       
      ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன் பேசிக்கொண்டு
      மந்தஹாஸமாக தரிசனம் தந்து கொண்டு இருந்தார்.
      அவருக்கு முன்பு பலவிதமான பழங்கள் தட்டு தட்டாக
      வைத்திருந்தது.புரட்டாசி,ஐப்பசி மாதம் என்று நினைவு

      அப்போது கூட்டத்தில் ஒரு பெண் குழந்தை சுற்றி
      சுற்றி வந்தது.பெரியவா அந்த குழந்தையை அழைத்து
      “இதில் உனக்கு என்ன பழம் வேணுமோ, அதை
      எடுத்துக்கோ” என்றார்கள்.அங்கு அன்னாசி,ஆப்பிள்
      திராக்ஷை,கொய்யா,ஆரஞ்சு முதலிய எல்லாவிதப்
      பழங்களும் இருந்தன.

      ஆனால்,அக்குழந்தை “நேக்கு மாம்பழம் வேணும்”
      என்றது.அது மாம்பழ காலம் இல்லை. மாவடு கூட
      ஆரம்பிக்கவில்லை.பெரியவா யோசிக்கலானார்!.

      “வேதபுரி! உள்ளே மேட்டூர் ஸ்வாமிகிட்ட ஏதாவது
      மாம்பழ வத்தல் மாதிரி இருக்கா, பாரு” என்று
      சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு 

      தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

      அச்சமயம்  கூட்டத்தை விலக்கிகொண்டு
      ஆந்திராவிலிருந்து இருவர், பழத்தட்டுடன் வந்தார்கள். 

      அதில் பெரியதாக இரண்டு  மாம்பழங்கள். பெரியவா 
      கண்ணைத் திறந்தார். அக்குழந்தையை அழைத்து, 
      “எடுத்துக்கோ” என்றார். அது ஒரு பழத்தை 
      சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டது.

      “வேதபுரி திரும்பி வந்து,” அங்கு ஒன்றுமில்லை”
      என்று சொல்லிவிட்டு குழந்தை கையில் பழத்தைப்
      பார்த்து திகைத்தார்.

      “ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?”
      என்று பெரியவா.

      “பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!” என்று
      கண்களில் நீர் வழிய வேதபுரி உணர்ச்சிவசப்பட்டு
      கூறினார்.

      எதிரில் நின்றிருந்த நாங்களும் பெரியவாளின்
      சக்தியை கண்ணால் பார்த்து ஆனந்தமடைந்தோம்.

      மாம்பழத்தைக் கொண்டுவந்த ஆந்திரக்காரர்கள்

      அப்புறம், எங்கே தான் போனார்களோ?
      நம் கண்ணில் படாத ஊருக்கோ?

      தட்சிண அகோபிலத்தில் சுவாதி நட்சத்திர பூஜையும் தீர்த்தவலமும்

      கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம் நடைபெற்றது

      தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது
      மாலை 3 மணி முதல் 16 வகை மூலிகைகளால் மூலமந்திர ஹோமம்,விஷ்ணு சூக்தஹோமம்,மகாலட்சுமி ஹோமமும்,12 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேங்களும் நடைபெற்றன., பெருமாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஸ்ரீ நரஸிம்ஹ புஷ்கரணியையும் திருக்கோவிலையும் பக்கதர்கள் பஜனை பாடி தீர்த்தவலம் வந்தனர் விழாவில் ,கீழப்பாவூர் ,பாவூர்சத்திரம் ,சுரண்டை ,தென்காசி ,ஆவுடையானூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
      ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் ,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் ,பொதுமக்களும் செய்திருந்தனர்

      “வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் “

      “வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ”

      (கண் தெரியாத சங்கரனுக்காக காஷ்டமௌனம்
      கைவிட்ட பெரியவா)

      (சற்று விரிவான புதிய தட்டச்சு)?ui=2&ik=b3e3dcecb5&view=fimg&th=155dff30324eb749&attid=0 - 2026

      சொன்னவர்-திருவாடானை ‘வன்தொண்டர்’
      …………………….சங்கர அய்யர்.
      தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

       தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

      புதுக்கோட்டையில் ஆறாவது வகுப்பில் படித்துக்
      கொண்டிருந்த போது ‘வெள்ளையனே வெளியேறு’

      போராட்டத்தில் கலந்து கொண்டு துப்பாக்கிச்
      சூட்டினால் அவருடைய கண்கள் பாதிக்கப்பட்டன.
      முதுமலையில் தலைமறைவாக இரண்டு வருஷம்
      இருந்தார். இரண்டு கண்களும் முழுதும் குருடாய்
      விட்டன.சொல்ல முடியாத துக்கத்துடன்
       தேவகோட்டை ஜமீந்தார் என்று பிரசித்தி பெற்ற
       கொடை வள்ளலான நாட்டுக்கோட்டை 
      செட்டியாருடன் 1950-ல் முதல் முதலில்
       ஸ்ரீபெரியவாளை தரிசனம் செய்தார்.
      அதுவே அவர் வாழ்க்கையில் திருப்புமுனை.

      ஸ்ரீபெரியவாள், “சங்கரா, நீ தொண்டு 

      செய்வதற்காகவே உன்னைக் கடவுள் இப்படி
       சோதனைக்குட்படுத்தியிருக்கிறார். ஒரு குறைவும்
      வராது. தொண்டு செய்து கொண்டே இரு” என்று
      ஆசீர்வாதம் செய்த உடனேயே பல வருடங்களாக
      அனுபவித்த துக்கம் இருந்த இடம் தெரியாமல்
      மனது இலேசாகி விட்டது.

      பிறகு,தமிழை நன்றாகக் கற்று சைவ,வைணவ
      நூல்களை,முழுவதும் மனப்பாடம் செய்யும்

      அளவிற்குத் தேர்ச்சி பெற்று,குழந்தைகளுக்கு
      பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
      அருணகிரிநாதரின் கந்தரனுபூதி இவருக்குப்
      பிரியமான நூல். இவருடைய சொந்தக்காரப் பெண்
      ஒருத்தி தானாக முன் வந்து விவாஹம் செய்து
      கொண்டாள். சங்கர அய்யர் ஊர் ஊராகச் சென்று
      பையன்கள்,பெண்களுடன் பஜனை செய்வது
      வழக்கம்.நாடகமும் நடத்துவார். குழந்தைகளுக்கு
      பரீக்ஷை வைத்து பரிசுகள் கொடுப்பார். இதில்
      கிருஸ்தவ,முஸ்லீம் மாணவர்கள் கூட சேருவதுண்டு

      இவர் செய்யும் தமிழ் சேவையைப் பாராட்டி
      கிருபானந்தவாரியார் இவருக்கு ‘வன்தொண்டர்’

      என்று பட்டம் சூட்டினார்.

      ஸ்ரீபெரியவாளை தரிசனம் செய்யும் போதெல்லாம்
      தேவாரம்,திருவாசகம்,திருக்குறள் முதலியவைகளைப்
      பற்றித்தான் பேச்சு. ஸ்ரீபெரியவாளைப் பற்றிக்
      கூறினாலே கண்ணீர் பெருகும். ‘அவர்களைப் போல்
      தமிழறிந்தவர்கள் வேறு யார் உளர்?’ என்ற வியப்பு.

      இப்பொழுது அவருக்கு வயது எழுபத்தாறு.
      (கட்டுரை வெளியான ஆண்டு 2005) அவருடைய
      எழுபது வயதில், இப்போது முன்னேற்றமடைந்த கண்
      சிகிச்சையினால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும்
      என்று நண்பர்கள் விளக்கிய போது அவர் 

      “ஸ்ரீபெரியவாள் அனுக்ரஹத்தினால் கண் 
      தெரியாமலேயே சந்தோஷமாயிருக்கிறேன்.இனிமேல்
      கண் பார்வை பெற்று என்ன ஆக வேண்டியிருக்கிறது?”
      என்று மறுத்து விட்டார்.

      1958ம் வருஷம் ஸ்ரீபெரியவாள் சென்னை சம்ஸ்கிருத
      கலாசாலையில் முகாமிட்டிருந்த போது
      விடியற்காலையில் விஸ்வரூப தரிசனத்திற்காக
      தேவகோட்டை ஜமீந்தாருடன் சென்றிருந்தார்.
      அப்பொழுதெல்லாம் பெரியவாள் காலை வேளையில்
      காஷ்ட மௌனமாக இருப்பது வழக்கம். ஆனால்
      இவர்கள் இருவரும் வந்ததும் பெரியவாள்,
      “வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ” என்று
      சொன்னதும் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

      சாயங்காலம் தீப நமஸ்காரம் ஆன பின்பு
      ஸ்ரீபெரியவாள்,”இன்று காலையில் மௌனத்தை
      விட்டுப் பேசியது உங்கள் எல்லோருக்கும்
      ஆச்சர்யம். ஆனால் ஒருவருக்கும் காரணம்
      தெரியவில்லை. நீங்கள் எல்லோரும் விடியற்
      காலையில் என்னைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்கள்

      ஆனால் கண் தெரியாத சங்கரனுக்கு எப்படி
      சந்தோஷம் ஏற்படும்? அதனால்தான் என் குரலைக்
      கேட்டாவது சந்தோஷப்படட்டுமென்று பேசினேன்”
      என்றார்கள்.

      71 வயதில் 35 வயது பெண்ணை திருமணம் செய்த அதிமுக எம்பி!

      ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்வர் ராஜா. இவருக்கு வயது 71. தற்போது அவர் வட மாநிலத்தை சேர்ந்த குர்ஷித்பானு என்ற 35 வயது பெண்ணை இவர் திருமணம் செய்துள்ளார். இது அன்வர் ராஜாவுக்கு மூன்றாவது திருமணமாகும்.

      ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்தவர் அன்வர் ராஜா. முன்னாள் தமிழக அமைச்சராக இருந்த அவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளராகவும் உள்ளார்.

      இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தாஜிதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். கடந்த ஆண்டு தாஜிதா இறந்து போனார். இந்நிலையில் அன்வர் ராஜா நேற்று வடமாநிலத்தை சேர்ந்த குர்ஷித்பானு என்ற 35 வயது பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்தார்.

      அன்வர் ராஜாவுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். எளிமையாக நடைபெற்ற அவரின் மூன்றாவது திருமணத்திற்கு, மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      Margabandhu Stotram

      12009621_1021843331179783_3538653604316165671_n

      Margabandhu Stotram
      Shiva with the trident
      By Appayya Deekshithar
      Translated by P. R. Ramachander.
       
      This great Stotra Rathna was written by Appayya Deekshitha (1520-1593). He was the greatest interpreter of Advaita Siddhanta after Adi Sankara. This stotra is written in praise of the Lord Margabandhu of Virinchipuram, near Vellore of South Arcot district of Tamil Nadu. People who undertake any journey should recite it before traveling, on the days when they are traveling and after the completion of travel. Lord Shiva as Margabandhu would always be with them and protect them.
       
      Shambho Maha deva deva, Shiva
      Shambho Maha deva devesa Shambho,
      Shambho Mahadeva deva.
       
      Prostrations to He who blesses us with prosperity,
      Prostrations to the greatest God,
      Prostrations to the abode of peace,
      Prostrations to Him, who blesses us with riches,
      And Prostrations to him who is the God of Gods.
       
      (To make it readable I have added the word Prostrations which is a hidden word in the above sloka. This sloka has to be recited every time immediately after reciting the five verses given below)
       
      Phalavanamrath kireetam,
      Phala nethrachisha, Dagdha pancheshu Keetam,
      Soolahathaaraathikootam, Shudhamradhendu choodam,
      Bhaje Margabandhum 1 (Shambho Mahadeva deva…)
       
      I pray to that friend of the path,
      Who wears a crown on his head,
      Who kills his enemies by his trident,
      Who wears a crescent which showers nectar,
      And who burnt by the fire of his eyes,
      Which are on his forehead,
      Him who has the five arrows like an insect.
      (Prostrations to he who blesses….)
      (Manmatha, the lord of love has five flower arrows –lotus, Asoka, mango, jasmine and the blue lotus. Lord Shiva killed him by the fire generated by his third eye.)
       
      Ange virjangu jangam,
      Abhra Ganga tharangabhi Ramothamangam,
      Omkaravati kurangam, Sidha samsevathangrivyagram,
      Bhaje Margabandum (Shambho Mahadeva…) 2
       
      I pray to that friend of the path,
      Whose limbs are adorned by a snake,
      Who is a deer in the park of holy pranava,
      Whose feet is worshipped by great sages,
      And who looks charming with his head,
      Adorned by the Ganga of the sky,
      (Prostrations to he who blesses….)
      (Pranava is the holy letter “Om”. Akasa Ganga resides on the Head of Lord Shiva)
       
      Nithyam, Chidanada roopam,
      Ninhutha sesha lokesa vairi prathapam,
      Kartheswaragendrachapam, krithivasam,
      Bhaje divya sanmarga bandhum (Shambo mahadeva deva…) 3
       
      I pray to that friend of the good divine path,
      Who is perennial and of the form of,
      Truth, intelligence and bliss,
      Who destroyed without reminder,
      The glory of the fame of the enemy of Indra,
      Who used the golden Mount Meru,
      As his bow in the war against three asuras,
      And who dresses himself in hides of trees.
      (Prostrations to he who blesses….)
      (Shiva destroyed the pride of Ravana when he visited his abode. He used Mount Meru as his bow to win over the Tripuras)
       
      Kandarpa darpagna meesam,
      Kala kantam Mahesam Maha vyoma kesam,
      Kundabhadandam Suresam, Koti surya prakasam,
      Bhajhe Marga bandhum. (Shambho mahadeva deva…) 4
       
      I pray to that friend of the path,
      Who put an end to the pride of God of love,
      Who is the great Lord who has a deep blue throat,
      Who has the great sky as his matted lock,
      Whose teeth resemble the white jasmine flowers,
      And who has the shine of billions of Suns.
      (Prostrations to he who blesses….)
       
      Mandara Bhutherydaram, Mandaragendrasaaram, Mahagouryudooram,
      Sindhoora dhoora pracharam, Sindhoorajathi dheeram,
      Bhaje Margabandhum (Shambho Mahadeva deva…) 5
       
      I pray to that friend of the path,
      Who is more generous than the wish giving tree,
      Who is the strength behind the great Mandara Mountain,
      Who is very close to the great Goddess Gauri,
      Who has a red colour far intense than red lead,
      And who is more resolute than the God of the ocean.
      (Prostrations to he who blesses….)
      (Mandara Mountain was used to churn the ocean of milk.)
       
      Phala Sruthi.
       
      Appayyajjwendra Geetham stotra rajam,
      Patedhyasthu Bhakthya prayane,
      Thasyartha sidhim Vidathe , marga madhye
      Abhayam chaashuthosho Mahesa (Shambho Maha deva Shambho…)
       
      Narration of Benefit
      This king of stotras written by,
      Appayya who is the performer of sacrifices,
      If read with devotion during journey,
      Would ensure fulfillment of wishes,
      Protection during journey,
      And Lord Shiva would be easily pleased