ஓடும் ரயிலில் பயணிகள் மீது கோடரியால் தாக்குதல்: இளைஞர் சுட்டுக் கொலை

உலகம்

பெர்லின்:

ஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.15 மணி அளவில் உவர்ஸ்பர்க் நகரை நோக்கி ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

ஓச்ஸென்பர்ட் நிலையத்தை அந்த ரயில் நெருங்கியபோது சக பயணிகளை உள்ளே இருந்த ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டினான். இந்த தாக்குதலில் மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஓச்ஸென்பர்ட் நிலையத்தில் ரயில் நின்றதும் கீழே இறங்கி செல்ல முயன்றவனை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் ஓச்ஸென்பர்ட் நகரில் வாழ்ந்து வந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.