திருநீற்றை அழிக்கச்சொன்ன பள்ளிவாசல் நிர்வாகிக்கு பாடம் புகட்டியுள்ளன இலங்கை மாணவர்கள்
அண்மையில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை ஒன்றின் மாணவர்கள் தமது சித்திர பாட ஆசிரியருடன் களப்பயணம் சென்றுள்ளனர். இதன்போது ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றை பார்வையிட்ட பின் பள்ளி வாசல் ஒன்றை பார்வையிட சென்றுள்ளனர். ஆனால் அங்கு நின்ற பள்ளி வாசல் நிர்வாகி ஒருவர் நீங்கள் உங்கள் நெற்றியில் உள்ள திருநீற்றினை அழித்து விட்டு உள்ளே செல்லுங்கள் என்று கூறியுள்ளார். சில மாணவர்கள் அதனை அழிக்க தயாரானதை கண்ட ஒரு மாணவன் “யாரும் விபூதியை அழிக்க வேண்டாம் எல்லோரும் வாகனத்தில் ஏறுங்கள். விபூதியை அழித்து அந்த இடத்தை பார்க்கும் அவசியமில்லை ” என்று உரக்கச் சொன்னதும் மாணவர்கள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் போல் வாகனம் நோக்கி திரும்பினார். நிலமை மீறிச் செல்வதை உணர்ந்த நிர்வாகி நீங்கள் அதனை அழிக்க வேண்டாம் உள்ளே சென்று பாருங்கள் என்று அனுமதித்துள்ளார். மாணவர்கள் மகிழ்வுடன் பார்வையிட்டு வந்துள்ளனர். அந்த மாணவர்களின் தைரியமும் தன்மானமும் வீர உணர்வும் சமயத்தில் சமரசமமில்லாத தன்மையும் தலவணங்கி வாழ்த்தப்பட வேண்டியது. தலை வணங்கி வாழ்த்துகிறோம் மாணவர்களே.



