
“சாது மண்டலி கீ – ஜே!”
(நாமசங்கீர்த்தனம் செய்பவர்களிடம் சாட்சாத்
பகவானையே காண்கிறார்கள், பெரியவாள்.)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பாகவதர்கள் சிலர் திருவீதியில் பஜனை
பாடிக்கொண்டு சென்றார்கள்.
அதே வழியாகப் பெரியவாளும் போக நேரிட்டது.
பெரியவாளைக் கண்டதும், பாகவதர்கள் மேலே
நடந்து செல்லாமல்,குரு கீர்த்தனம் பாடினார்கள்.
பெரியவாள், பாகவத கோஷ்டியை வலமாக வந்து
அருகிலேயே நின்று சிறிது நேரம் நாம
சங்கீர்த்தனத்தை கேட்டு பரவசப்பட்டார்கள்.
பின் எங்களைப் பார்த்து, “சாது மண்டலி கீ – ஜே!”
என்று கோஷம் போடச் சொன்னார்கள்.
பாகவதர்களுக்கு பேரானந்தமாக இருந்தது.
உருவில் வந்த பகவானைத்தான் என்பது
அவர்களுக்குப் புரிந்தது.நாமசங்கீர்த்தனம் செய்பவர்களிடம் சாட்சாத்
பகவானையே காண்கிறார்கள், பெரியவாள்.
ஆனால்,நாமோ,ஈசுவரனே நேரில் வந்து
தரிசனம் கொடுத்தால்கூட, “யாரோ பகல்
வேஷக்காரன்!” என்று ஏளனமாக நகைப்போம்.
பெரியவாள் பாகவதர்களை வலம் வந்தது,
தனக்காக அல்ல; நம்முடைய மனத்தில்
பக்திபலம் வளரவேண்டும் என்பதற்காகத்தான்!
இன்னொரு தடவை சொல்லுவோமே –
“சாது மண்டலி கீ – ஜே!”



