
“ஸ்வரம் தப்பாமல் அழுகை”-வித்யார்த்தி
(“அவன் அழறதைக் கேளு…..ஸ்வரம் தப்பாமல் –
உதாத்தம்,அனுதாத்தத்துடன் அழறான்..”.)
(பெரியவாளின் சங்கீத ஸ்வர ரசனை)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
வேதாத்யயனம் நிறைவு பெற்று,இறுதித் தேர்வில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை
வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில்
ஸ்ரீமகாசுவாமிகள் முன்னிலையில் நடந்தது.
ஒவ்வொரு மாணவனும்,வேதத்தின் சிற்சில
பகுதிகளைக் கூறும்படி ஆக்ஞாபித்து,
கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஒரு வித்யார்த்தி (மாணவன்), செவிக்கு
தேர்வு நடத்திய விற்பன்னர்களைக் கேட்டார்கள்.“இரண்டாம் கிளாஸ்” என்று பதில் வந்தது.
பெரியவா, சில விநாடிகளுக்குப் பின்,
“மார்க் லிஸ்டை சரியாகப் பார்” என்றார்கள்.
தேர்வு செய்த பண்டிதர்கள் கொடுத்த
அதிக மார்க் வாங்கியிருந்தான்.!
“க்ஷமிக்கணும்” என்று பணிவுடன் கூறி,பெரியவாளிடம்
மன்னிப்பு கேட்டார் தேர்வுக் குழுவின் தலைவர்.
முதல் மார்க் பெற்ற மாணவனுக்கு,சந்தோஷம்
தாங்காமல் அழுகையே வந்துவிட்டது!
பெரியவாளுக்கு உள்ளூர ஒரு நிறைவு.
“அவன் அழறதைக் கேளு…..ஸ்வரம் தப்பாமல் –
உதாத்தம்,அனுதாத்தத்துடன் அழறான்..”
(ஸ்வரம் வகை)
கடல் இரைச்சல்போல் சிரிப்பொலி எழுந்தது.



