
“குழந்தை ஏன் அழுகிறது?”
(மகாஞானிக்கு,இதெல்லாம் வெறும் ‘பூச்சி’ விஷயம்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
ஒரு குழந்தை, தொடர்ந்து அழுதுகொண்டே
இருந்தது. பெரியவா தரிசனத்துக்காகக்
காத்துக்கொண்டிருந்தவர்களுக்கெல்லாம்
மிகவும் தொந்தரவாக இருந்தது. தாயார்
பலவிதமாக சமாதானப்படுத்தியும் கூட,
குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.
“குழந்தை ஏன் அழுகிறது?” என்று அருகிலிருந்த
சிஷ்யர் இந்துகுமாரைக் கேட்டார்கள்.
“பாத்ரூமுக்குப் போகணுமாம்.மடத்து
இரண்டு நிமிட மௌனத்துக்குப்பின், பெரியவாள்
சொன்னார்கள்;
“பாத்ரூமில் கரப்பான் பூச்சிகள் இருக்கும்.
அதனால்தான் குழந்தை பயப்படுகிறது.
நீ போய், அவைகளை ஹிம்ஸை செய்யாமல்,
அப்புறப்படுத்திவிட்டு வா…”
இந்துகுமார்,ஒரு துடைப்பத்தால்,கரப்பான்
பூச்சிகளை பெருக்கி அப்புறப்படுத்திவிட்டு வந்தான்
குழந்தை பயமில்லாமல், உள்ளே போய்விட்டு
வந்தது – சிரித்துக்கொண்டே!
பாத்ரூமில் கரப்பான் இருக்கிறது;
அதைக் கண்டுதான் குழந்தை பயப்படுகிறது –
என்று பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?
மகாஞானிக்கு,இதெல்லாம் வெறும் ‘பூச்சி’ விஷயம்.



