திருநெல்வேலியில் புதிய மத்திய அரசின் புற்றுநோய் மையம் அமைக்க கே.ஆர்.பி . பிரபாகரன் எம்.பி கோரிக்கை
இதுகுறித்து பாராளுமன்றதில் கே.ஆர்.பி பிரபாகரன் எம்.பி பேசியதாவது
புற்றுநோய் தொற்று என்பது வளர்ந்து வரும் நமது நாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது., புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களாக உள்ளனர் மேலும் தனியார் மருத்துவமனைகளில் செலவு செய்து மருத்துவம் பார்க்க பொருளாதார வசதி இல்லை.
திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் வருடத்திற்கு 16,000 பதிய புற்றுநோயாளிகள் கண்டுபிடிக்கபட்டு சிகிச்சை எடுக்கிறார்கள். 50000க்கும் மேற்பட்ட பழைய நோயாளிகள் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகிறன்றனர் மேலும் வருடத்திற்கு 80,000க்கும் அதிகமானோர் புற்றுநோய் இருக்கிறதா என சந்தேகத்துடன் பாரிசோதனை செய்து வருகின்றனர்
கடந்த ஐந்து ஆண்டுகளில் புற்றுநோய் தொற்று 50 சதவிக அளவுக்கு அதிகப்பட்டுள்ளது. இது புற்றுநோய் முருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிக வேலைபளுவை ஏற்படுத்துகிறது. மேலும் புற்றுநோயாளிகளும் அதிக நேரம் காத்திருந்து சிகிச்சை எடுக்க கூடிய நிலை ஏற்படுகிறது.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள திருநெல்ல்வேலி தூத்துக்குடி மற்றும் தென்காசி பகுதி மக்கள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திற்கு சென்று பல நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே திருநெல்வேலியில் மத்திய அரசின் புதிய புற்றுநோய் சிகிச்சை மையம் அமைய நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.என பேசினார்
திருநெல்வேலியில் மத்தியஅரசின் புற்றுநோய் மையம் அமைக்க கே.ஆர்.பி . பிரபாகரன் எம்.பி கோரிக்கை
Popular Categories



