சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சாங்சூ நகரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஷாங் வென்லியாங். இவருக்கு வயது 70 ஆகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டிருந்த ஷாங்கின் மனைவி, ஓராண்டிற்கு முன்பு புற்றுநோயால் மரணமடைந்தார். மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவித்து வந்த அவர், ஒரு மாதத்திற்கு பிறகு 16000 யுவான் ( சுமார் ரூ. 1 லட்சத்து 61 ஆயிரம் ) கொடுத்து செக்ஸ் பொம்மை ஒன்றை வாங்கி வந்தார்.
அந்த பொம்மையை தனது மனைவியாகவே பாவித்த ஷாங், அதற்கு தனது மனைவியின் உடையை போட்டு விட்டு, அதனுடன் கொஞ்சிப் பேசி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த பொம்மை சேதம் அடைந்துள்ளது. இதனால் கோபமடைந்த அவர், பொம்மையின் தயாரிப்பாளரிடம் இழப்பீடும் கோரியுள்ளார்.



