
‘கொள்ளு யோகம்!’
(குதிரையின் மேல் கருணை)
ஒரு சிறு பதிவு
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகாராஷ்டிர மாநிலத்தில் யாத்திரை.
உடல் மெலிந்து முதுமையடைந்த ஒரு குதிரையும்
யாத்திரை கோஷ்டியுடன் வந்து கொண்டிருந்தது.
பெரியவாளுக்கு அந்தக் குதிரையின் மேல் கருணை
பிறந்தது.
மராத்திய செல்வந்தர் ஒருவர் பெரியவாளுடன்
வந்துகொண்டிருந்தார். பெரியவா அவரிடம்,
“இந்தக் குதிரைக்கு வயதாகிவிட்டது. இனிமேல்
உபயோகமில்லை என்றதும் அதன் சொந்தக்காரர்,
அதைத் துரத்திவிட்டார். பாவம், அது நடக்க
முடியாமல் தவிக்கிறது. இந்தக் குதிரையை
நீங்கள் வீட்டுக்குக் கொண்டுபோய்,புல்லு,கொள்ளு,
தண்ணீர் கொடுத்து கடைசிவரை ரட்சித்து வாருங்கள்”
முடியாமல் தவிக்கிறது. இந்தக் குதிரையை
நீங்கள் வீட்டுக்குக் கொண்டுபோய்,புல்லு,கொள்ளு,
தண்ணீர் கொடுத்து கடைசிவரை ரட்சித்து வாருங்கள்”
என்று உத்திரவிட்டார்கள்.
மராத்தியருக்கு ரொம்ப சந்தோஷம்.
“பெரியவா என்னை ஒரு பொருட்டாகக் கருதி என்னிடம்
ஒரு சேவையை ஒப்படைத்திருக்கிறாரே!” என்று
மறுநாள் முதல், குதிரைக்கு அடித்தது
‘கொள்ளு யோகம்!’



